ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142757 topics in this forum
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நெருக்கடிகளைக் கொடுப்பதற்கு அமைச்சர்கள் தீர்மானம். அமைச்சசரவை மாற்றத்தால் அதிருப்தியடைந்திருக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் 20 பேர் கூட்டாக இணைந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நெருக்கடிகளைக் கொடுப்பதற்கு தீர்மானித்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் அதிருப்தியாளர்களை அரசாங்கத்துடன் இணைத்துக்கொண்ட ஜனாதிபதி, அவர்களுக்கு முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களையும் வழங்கினார். இதனால் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நீண்டகால உறுப்பினர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இதன் பின்னணியிலேயே புதிய அமைச்சரவையில் அமைச்சர்களாக இருப்பதில் தாம் வெட்கமடைவதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான …
-
- 0 replies
- 878 views
-
-
நேபாள அரசு போன்ற ஒர்அதிகார பகிர்வுக்கு தாம் தயார் - ரோஹித போகொல்லாகம. நேபாள அரசாங்கத்திற்கும் மாவோ போராளிகளுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட அதிகார பரவலாக்கல் போன்று சிறீலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் அதிகாரங்களை பகிர்வதற்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது ஜேர்மனிக்கு விஜயம் செய்துள்ள சிறீலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம இதனை தெரிவித்துள்ளார் நேபாளத்தில் நிலவிய பிரச்சினைக்கு காணப்பட்ட தீர்வினை போன்று இலங்கையின் இனப்பிரச்சினைக்கும் தீர்வு காண்பதற்கு சிறீலங்கா அரசாங்கம் விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார் நேபான மாவோ போராளிகள் வன்முறைகளை கைவிட்டு நேபாள அரசாங்கத்துடன் இணைந்து பிரச்சினைக்கு தீர்வு காண முன்வந்தமை போல் தமி…
-
- 0 replies
- 959 views
-
-
. யாழ் மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சட்ட ஆலோசகர் எம். ரிமீடியஸ் இராணுவத்தினரால் தாக்கப்பட்டுள்ளதுடன், யாழ் மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் எஸ். சுவேந்திரராஜாவுக்கு தொடர்ச்சியாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. யாழ் மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சட்ட ஆலோசகர் எம். ரிமீடியஸ் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் இராணுவத்தினரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். இன்று முற்பகல் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதிக்கு அண்மையாக கடமையில் இருந்தவேளை அங்கு ரோந்தில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் அவரைத் தாக்கியுள்ளனர். தான் ஒரு மனித உரிமை ஆணைக்குழுவின் அதிகாரியொனக் கூறியபோதும் இராணுவத்தினர் தன்னைப் பலமாகத் தாக்கியதாக அவர் கூறியுள…
-
- 0 replies
- 692 views
-
-
இன்று நாட்டில் உள்ள யுத்த சூழல் பற்றி எந்த ஒரு திருப்தியான முடிவும் தெரியவில்லை. யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரப்போவதாக அரசு கூறிக்கொண்டு வருகிறது. ஆனால், முடிவுக்கு வந்தபாடில்லை. வார்த்தைகளால்தான் யுத்தத்துக்கு முடிவு வருகிறது. இந்த யுத்தம் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். இதற்கான அணுகுமுறைகள் கையாளப்படவேண்டும். இலங்கையில் உள்ள ஜேர்மன் தூதுவர் ஜேர்கன் வேர்த் பெந்தோட்டையில் மொறகொட என்ற இடத்தில் இடம்பெற்ற சர்வதேச பாடசாலை திறப்பு விழாவில் உரையாற்றும்போது இவ்வாறு கூறினார். ஜேர்மன் தூதுவர் தமது உரையில் கூறியதாவது; யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் சகல நடவடிக்கைகளுக்கும் ஜேர்மன் எப்போதுமே ஆதரவு அளிக்கும். இந்த யுத்தத்தினால் வடக்கில் அப்பாவி மக்கள் அல்லல்படுவ…
-
- 0 replies
- 993 views
-
-
தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் ரணிலிடம் வாஜ்பாய் தெரிவிப்பு. தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் பட்சத்திலேயே இலங்கையின் ஒற்றுமை பாதுகாக்கப்படும் என முன்னாள் இந்தியப் பிரதமர் வாஜ்பாய் கருத்துக்கூறியுள்ளார். உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றிருந்த எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க, புதுடில்லியில் வைத்து வாஜ்பாயை சந்தித்தபோதே மேற்கண்ட கருத்தை அவர் வெளியிட்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் ஒற்றுமையைப் பாதுகாக்கவேண்டும் எனில் ஈழத்தமிழர்கள் உட்பட அனைத்துத் தரப்பு மக்களதும் சட்டபூர்வ உரிமைகளைப் பாதுகாக்கவேண்டும் என வாஜ்பாய், ரணிலிடம் வலியுறுத்தினார் என செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்பின்போது வாஜ்பாயுடன்…
-
- 2 replies
- 1k views
-
-
மட்டக்களப்பில் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 74305 பேராக அதிகரிப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 72086 இல் இருந்து 74305 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 30 ஆம் திகதிக்கும் 1 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்திலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெயர்ந்தோர் தொடர்பான கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு கச்சேரியில் அரச அதிபர் சுந்தரம் அருமை நாயகம் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் மேலதிக அரச அதிபர் க.மகேசன், புனர்வாழ்வு திட்டப் பணிப்பாளர் க.சிவநாதன் உள்ளிட்ட செயலக அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்கள், யூ.என்.எச்.சி.ஆர்., யுனிöசப் உட்பட்ட சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநித…
-
- 2 replies
- 1k views
-
-
பாக்கு நீரிணையில் கூட்டுரோந்து நடவடிக்கை நேற்று முன்தினம் பாரதப்பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கும் சிறீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் றோகித பொகொல்லாகம அவர்களுக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பை தொடர்ந்து இந்திய பி்.ரி.ஐ செய்தி சேவைக்கு கருத்துரைத்த சிறீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் தமிழீழ விடுதலைப்புலிகளின் கடல்நடமாட்டத்தை கண்காணிப்பதற்கு ஏதுவாக கூட்டு கடல் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இந்தியா இணக்கம் தெரிவித்திருப்பதாக கூறியுள்ளார். கடற்பரப்பை பகிர்ந்து கொள்ளும் அண்டை நாடு என்ற வகையில் சிறீலங்கா கடற்படையினருடன் சேர்ந்து கூட்டு கடல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவது இன்றியமையாதது என அவர் மேலும் தெரிவித்தார்
-
- 2 replies
- 1.4k views
-
-
வாகரை பயணத்திற்காக கண்காணிப்புக்குழு காத்திருக்கின்றது அமைதிமுயற்சிகளை மீண்டும் ஆரம்பிக்கும் முயற்சியாக நோர்வே அனுசரனையாளர்களும், கண்காணிப்புக் குழுவினரும் நேற்று தனித்தனியாக அரசின் சமாதானப் பணிப்பாளரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். கடந்த வாரம் இதே போன்றதொரு கலந்துரையாடலை விடுதலைப்புலிகளுடனும் இவர்கள் மேற்கொண்டிருந்தனர். கடந்த வியாழக்கிழமை கிளிநொச்சிக்கு சென்று விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளார் சு. ப. தமிழ்ச்செல்வனை சந்தித்த சிறீலங்காவிற்கான நோர்வேயின் தூதுவர் ஹன்ஸ் பிறட்ஸ்கர் நேற்று கொழும்பு திரும்பியுள்ளார். அவரின் இந்த விஜயத்தின் போது போர்நிறுத்த கண்காணிப்புகுழு மற்றும் யுனிசெப்ஃ அகியவற்றின் பிரதிநிதிகளையும் சந்தித்து உரையாடியுள்ளார். …
-
- 0 replies
- 735 views
-
-
18 பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசின் பக்கம் தாவியது கட்சிக்கு பெரும் பின்னடைவல்ல - தொடர்ந்து போராடுவோம்: ரணில். மில்லியன் கணக்கான வாக்காளர்கள் ஐ.தே.காவின் பின்னால் நிற்கிறார்கள் எனவே கட்சியின் 18 பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசின் பக்கம் தாவியது கட்சிக்கு பெரும் பின்னடைவல்ல என நேபாளம் மற்றும் இந்தியாவிற்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கா நேற்று நாடு திரும்பியதும் பண்டாரநாயக்கா சர்வதேச விமானநிலையத்தில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்தாவது: எமது கட்சி பல நெருக்கடிகளை முன்னைய காலங்களில் சந்தித்துள்ளது. கட்சியின் 18 மூத்த உறுப்பினர்கள் அரசின் பக்கம் தாவினாலும் ஆதரவாளர்கள் எமது பக்கமே உள்ளனர். கட்…
-
- 1 reply
- 954 views
-
-
சிங்களநாட்டு தயாரிப்பு... மகிந்த வெள்ளோட்டம்... http://www.colombopage.com/archive_07/January31151410CH.html http://www.microcars.lk/
-
- 24 replies
- 4.9k views
-
-
ஆயுதங்களைக் கைவிட்டுப் பேச்சுக்கு வர புலிகளை அமெரிக்கா வற்புறுத்த வேண்டும் அந்நாட்டுத் தூதரிடம் ஹெல உறுமய கோரிக்கை. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைதிப் பேச்சுக்கு வருவதாகவிருந்தால் வன்முறைகளைக் கைவிட்டு அவர்கள் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டே வரவேண்டும் என்ற அழுத்தத்தை அமெரிக்கா புலிகளுக்கு வழங்கவேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமய வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜாதிக ஹெல உறுமயவின் எம்.பிக்கள் நேற்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட் ஓ பிளேக்கை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் சந்தித்து உரையாடினர். அப்போதே இவர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர். அச்சந்திப்பின்போது அமெரிக்கத் தூதரிடம் அவர்கள் மேலும் கூறியதாவது: தமிழீழ விடுதலைப்புலிகள் வடக்கு கிழக்கில் மாத்திரமி…
-
- 1 reply
- 671 views
-
-
ஐரோப்பிய நாடுகளில் நாளை துக்கம் அனுஷ்டிக்க ஏற்பாடு சுதந்திரதினமான நாளை கறுப்பு உடையணிந்து எதிர்ப்பு தெரிவிக்க ஐரோப்பிய நாடுகளிலுள்ள தமிழர்கள் தீர்மானித்துள்ளனர். பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் துக்கதினம் அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாகவும் அன்றைய தினம் பொதுக்கூட்டம் ஒன்று இடம்பெறும் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். விமான குண்டு வீச்சு, ஷெல் தாக்குதல்கள் மற்றும் கிழக்கு மாகாணத்தில் புலிகளின் நிர்வாக பிரதேசங்களை இராணுவம் கைப்பற்றியமை ஆகியவற்றை கண்டித்தே கறுப்பு உடையணிந்து துக்கம் அனுஷ்டிக்கப்படவுள்ளது http://www.tamilwin.com
-
- 3 replies
- 1.1k views
-
-
"வெற்றி உறுதி" படை நடவடிக்கை கிழக்கில் தொடர்வதாக அறிவிப்பு கஞ்சிகுடிச்சாறில் புலிகளின் முகாம் மீட்பு. கிழக்கில் விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து மக்களை விடுவிப்பதற்கான படை நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசு தெரிவிக்கிறது. "வெற்றி உறுதி" (நியத்த ஜய) எனப்பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படை நடவடிக்கையில் கடைசியாக அம்பாறையில் கஞ்சிகுடிச்சாறு பகுதியில் புலிகளின் முகாம் ஒன்றைப் படையினர் கைப்பற்றியிருக்கின்றனர் என்று தேசிய பாதுகாப்பு ஊடகத் தகவல் நிலையம் தெரிவித்திருக்கிறது. கஞ்சிகுடிச்சாறில் அமைந்திருந்த புலிகளின் "ஜீவானந்தா முகாமை" படைகள் கைப்பற்றி அங்கிருந்து ஆயுதங்கள் மற்றும் உணவுப் பொருட்களை மீட்டிருக்கின்றனர் எனவும் தகவல் நிலையம் தெரிவித்…
-
- 0 replies
- 973 views
-
-
சுதந்திர தின நிகழ்வுகளை ஒட்டி கொழும்பில் தீவிர பாதுகாப்பு முப்படையினரும் பொலிஸாரும் பெரும் எண்ணிக்கையில் குவிப்பு. நாட்டின் 59ஆவது சுதந்திரதினம் நாளை இடம்பெறுவதையொட்டி தலைநகர் கொழும்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வெளிமாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கில் பொலிஸாரும், முப்படையினரும் தருவிக்கப்பட்டு தலைநகரில் குவிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் உச்சப்பாதுகாப்பு உஷார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும், வெளிமாவட்டங்களில் இருந்து தருவிக்கப்பட்ட பொலிஸாரும் துருப்பினரும் தலைநகர வீதிகளில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர் எனவும் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். தலைநகரில் முக்கிய பிரமுகர்களின் இல்லங்கள் மற்றும் கேந்திர மையங்களின் பாதுகாப்ப…
-
- 0 replies
- 656 views
-
-
கடந்த ஆண்டு சிறீலங்காவில் 7 ஊடகவியலாளர்கள் படுகொலை. சிறீலங்காவில் கடந்த ஆண்டு 3 பத்திரிளையாளர்கள் உட்பட 7 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக எல்லைகள் அற்ற பத்திரிகையாளர் அமைப்பு தனது வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. கொல்லப்பட்டவர்களில் கொழும்பில் இருந்து வெளிவரும் சுடரொளி பத்திரிகையின் செய்தியாளர் எஸ். சுகிர்தராஜான், யாழ் உதயன் பத்திரிகையின் ஆசிரியர் சிவமகராஜா, யாழ் உதயன் பத்திரிகையின் 3 பணியாளர்களும் அடங்குவார்கள். சிங்கள இனத்தை சேர்ந்த றொய்டர் செய்தி நிறுவனத்தின் படப்பிடிப்பாளர் உட்பட இருவர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். அரசுக்கு சார்பான துணை இராணுவக் குழுவினரே தமிழ் தேசியத்திற்கு சார்பான பத்திரிகைகள் மீது தாக்குதல்களை ந…
-
- 0 replies
- 717 views
-
-
கடந்த சனிக்கிழமை மீனவர்களின் படகுகள் மீதே கொழும்பு துறைமுகக் கடற்பரப்பில் தாக்குதல்! கடற்றொழில் சங்கப் பிரதிநிதி தகவல். கொழும்பு துறைமுகக் கடற்பரப்பில் கடந்த சனிக்கிழமை தொழிலுக்குச் சென்ற மீனவர்களின் படகுகள் மீதே கடற்படையினர் தாக்குதல் நடத்தினர் என நீர்கொழும்பு மீனவர் சங்கப் பிரதிநிதியான ரொட்னி பெர்னாண்டோ என்பவர் தெரிவித்திருக்கிறார். கடந்த சனிக்கிழமை கொழும்பு துறைமுகப் பகுதிக்குள் நுழைந்த புலிகளின் மூன்று படகுகளில் ஒன்றை கடற்படையினர் தாக்கி மூழ்கடித்தனர் என்றும் அவ்வாறு படகுகளில் வந்தோரில் மூவர் கைதுசெய்யப்பட்டனர் எனவும் படைத்தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இதனை மறுத்துள்ள மீனவர் சங்கப் பிரதிநிதி ஆழ்கடல் மீன்பிடித் தொழிலுக்காகச் சென்ற தமது மீன…
-
- 17 replies
- 4k views
-
-
கடற்சமரில் வீரச்சாவடைந்த புலிகளின் விபரம் வெளியிடப்பட்டுள்ளன. வெள்ளி 02-02-2007 22:06 மணி தமிழீழம் [சிறீதரன்] கடந்த நவம்பர் மாதம் 27ம் நாள் கடற்பரப்பில் இடம்பெற்ற சமரில் களப்பலியாகிய போராளிகளின் விபரங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளால் வெளியிடப்பட்டுள்ளன. லெப்.கேணல் மான்பாலன் என்றழைக்கப்படும் திருமலைமாவட்டத்தை சொந்த இடமாகவும், கிளிநொச்சி விசுவமடுவை பிந்திய முகவரியாகவும் கொண்ட வடிவேல் nஐயகீர்த்தன், கடற்புலிகளின் கப்டன் தாய்மொழியன் என்றழைக்கப்படும் யாழ் மாவட்டத்தை சொந்த இடமாக கொண்ட கோபாலப்பிள்ளை சதீஸ்வரன் ஆகிய இருபோராளிகளுமே வீரச்சாவை அணைத்துக் கொண்டுள்ளனர். இந்த மாவீரர்களின் நடுகல் இன்று மாலை 6 மணிக்கு முல்லைத்தீவு மாவீரர் துயிலும் இல்லத்தில் முழுமையான படைய …
-
- 6 replies
- 2k views
-
-
மருந்துப் பொருள் விநியோகம் சிறீலங்கா படையினரால் முடக்கம். வெள்ளி 02-02-2007 23:31 மணி தமிழீழம் [சிறீதரன்] வன்னிப் பெருநிலப்பரப்பிற்கான மருந்துப் பொருள் விநியோகங்களை கடந்த சிலமாதங்களாக சிறீலங்கா அரசாங்கம் முடக்கியிருப்பதாக விடுதலைப்புலிகள் குற்றம் சுமத்தியுள்ளார்கள். குறிப்பாக சிறுவர்களை பாதிக்கும் தொய்வுநோய், வலிப்பு ஆகியவற்றிற்கான மருந்து வகைகளின் கையிருப்பு, அபாயகரமான அளவிற்கு வீழ்ச்சி கண்டிருப்பதாகவும் தற்போது நோய்வாய்படும் சிறுவர்களுக்கு வழமையைவிட அரைவாசி அளவிலான மருந்துப் பொருட்களே மருத்துவர்களால் வழங்கப்படுகின்றன. வன்னிப் பெருநிலப்பரப்பிற்கு அனுப்பிவைக்கப்படும் மருந்து வகைகள் சிறீலங்கா பாதுகாப்புத்துறை அமைச்சின் உயர் அதிகாரிகளால் தடுத்து நிறுத்த…
-
- 1 reply
- 958 views
-
-
Jumbo cabinet pushed for space The 53-member Sri Lankan cabinet is reported to have postponed its first meeting because there is nowhere big or secure enough for so many dignitaries. The official reason for the postponement was "logistical difficulties". But press reports almost unanimously conclude that the real reason is because there is no room big enough for the country's super-sized cabinet. The cabinet is proportionately one of the largest in the world. 'Costly' "The first meeting of the cabinet scheduled for today has been postponed indefinitely due to the non-availability of a place to accommodate the jumbo cabinet," the Sri Lankan …
-
- 0 replies
- 739 views
-
-
சிறீலங்காவில் வாழ்க்ககைச்செலவு 20.5 விகிதமாக உயர்ந்துள்ளது. [வெள்ளிக்கிழமை, 2 பெப்ரவரி 2007, 04:01 ஈழம்] [க.திருக்குமார்] சிறீலங்காவில் வாழ்க்கைச் செலவு இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் 20.5 விகிதமாக உயர்வடைந்துள்ளது. கடந்த 10 வருடங்கங்களின் பின்னர் சிறீலங்காவில் ஏற்பட்ட அதிக உயர்வு இதுவாகும் என கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக வர்த்தக மற்றும் நுகர்வோர் சேவைகள் அமைச்சர் பந்துல குணவர்த்தனா தகவல் தருகையில்: இந்த நிலைமைகளை நாம் சீர்செய்ய வேண்டும், அரசின் நிதிக் கொள்கைகள் இதற்கு காரணமாகலாம். யாரும் இந்த நிலைமைகளை ஒரு கிழமையிலோ அல்லது ஒரு மாதத்திலோ சீர்செய்ய முடியாது. எனவே எமக்கு இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு சிறித…
-
- 1 reply
- 911 views
-
-
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மட்டக்களப்பின் மேற்கு மற்றும் வடமேற்குப்பகுதிகளில் இருந்து 3,000 மேற்பட்ட மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி கடந்த சில தினங்களில் இடம்பெயர்ந்துள்ளதாக மட்டக்களப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. அவை மேலும் தெரிவித்ததாவது: கடந்த சில தினங்களாக சிறீலங்காபடையினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் பீரங்கி மற்றும் மோட்டார் எறிகணை வீச்சுக்களினாலும், விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி இராணுவநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சம் காரணமாகவும் அதிகளவான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இடம்பெயர்ந்த மக்கள் தற்காலிக தங்குமிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் பலர் தமது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கி…
-
- 0 replies
- 734 views
-
-
நோர்வே தூதுவர் கிளிநொச்சி பயணம் [வியாழக்கிழமை, 1 பெப்ரவரி 2007, 02:57 ஈழம்] [து.சங்கீத்] தமிழீழ விடுதலைப் புலிகளின் உயர்மட்ட தலைவர்களுடன் அவசர பேச்சுக்களை மேற்கொள்ளும் முகமாக, இன்று வியாழக்கிழமை இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்கர் கிளிநொச்சி பயணமாகியுள்ளார். சிறீலங்கா அரசைப் பொறுத்தவரை தற்போது எழுத்தில் மட்டும் நடைமுறையிலுள்ள யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை, ஒருதலைப்பட்சமாக விடுதலைப் புலிகள் கடைப்பிடித்து வரும் நிலையில், யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் எதிர்காலம், சமாதானப் பேச்சுக்கள் போன்றவை தொடர்பாக பிரதானமாக ஆராயப்படுமென நம்பப்படுகிறது. நேற்றைய தினம், சர்வதேச போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர், சமாதான செயலகப் பணிப்பாளர் எஸ்.புலித்தேவனை, கண்காணிப்ப…
-
- 14 replies
- 2.9k views
-
-
சிறீலங்கா அரசாங்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மற்றுமொரு பாரிய இராணு நடவடிக்கைக்கு தயராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏனைய பிரதேசங்களையும் கைப்பற்றுவதே அந்த படை நடவடிக்கையின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது இதற்கான ஆயத்தங்கள் இடம்பெற்று வருவதாகவும் மேலதிகள படையினரும் யுத்த தளபாடங்களும் மட்டக்களப்பு நோக்கி நகர்த்தப்படுவதாகவும் தெரியவந்துள்ளது வவுணதீவு கிரான் புலிபாய்ந்த கல் மற்றும் செங்கலடி போன்ற பிரதேசங்களில் படையினர் முன்னெற்ற முயற்ச்சிகளில் ஈடுபடுவதற்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளன thanks: www.pathivu.com
-
- 0 replies
- 855 views
-
-
வெள்ளைவான் ஆயுதக்கும்பலால் கொழும்பில் இருவர் கடத்தல். வெள்ளை வானில் ஆயுதங்களுடன் வந்த இனந்தெரியாத நபர்களினால் கொழும்பு நகரின் இரு வேறு இடங்களில் கடந்த புதன்கிழமை இரவு இருவர் கடத்திச்செல்லப்பட்டுள்ளனர் என கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன. வெளிநாட்டு பணமாற்றீடு மற்றும் கொடுக்கல் வாங்கல் வர்த்தகம் செய்யும் வெள்ளவத்தை பெரேரா வீதியை சேர்ந்த விஜயகுமார் (55) என்பவர் புதன்கிழமை இரவு தனது வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த வேளை பெரேரா வீதிக்கு அருகாமையில் வைத்து வெள்ளை வானில் வந்தோரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர் பேராசிரியர் கே. சிவத்தம்பியின் மைத்துனராவார். அதேசமயம் யாழ்பாணத்தில் இருந்து கொழும்புக்கு …
-
- 1 reply
- 1.1k views
-
-
மக்கள் விரோதிகளும் தேசவிரோதிகளுமே இன்று அரசாங்கத்துடன் இணைந்துள்ளனர் - சோமவன்ச அமரசிங்க [Friday February 02 2007 12:03:16 AM GMT] [யாழ் வாணன்] நாட்டில் பயங்கரவாதத்தை தோற்கடித்து ஜனநாயகத்தை நிலை நாட்டுவதற்காகவே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு மக்கள் ஆணை வழங்கினர். அரசாங்கம் பயங்கரவாதத்துக்கு ஆதரவாகவும் மஹிந்த சிந்தனைக்கு விரோதமாகவும் செயற்பட்டால் அதற்கெதிராக ஜே.வி.பி. போராடும் என்று அக்கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார். மக்கள் விரோதிகளும் தேசவிரோதிகளுமே இன்றுஅரசாங்கத்துடன் இணைந்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலர் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு இணைந்தால் ஜே.வி.பி. நியாயமான எதிர்க்கட்சியாக…
-
- 3 replies
- 1.3k views
-