Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இனப் பதட்டத்தின் மூலம் வவுனியாவில் இருந்து தமிழர்களை வெளியேற்றி இனச் சுத்திகரிப்பு நடத்துவது திட்டமா? வடமாகாணத்தின் தலைநகராமாக மாற்றப்பட்டுள்ள வவுனியாவில் தமிழர் விகிதாசாரம் குறைக்கப்பட்டு ஒரு பொம்மை மாகாணசபை ஆட்சி?

  2. வாழைச்சேனை ஓட்டமாவடியில் நான்கு முஸ்லிம்களைக் காணோம்! வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஒமடியாமடு பகுதியில் விறகு வெட்டுவதற்காகச் சென்ற நான்கு பேர் காணாமல் போயுள்ளனர் என வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை பிறைந்துறைச்சேனைப் பகுதியைச் சேர்ந்த எம்.ஐ. தாஜுதீன் (வயது32), என்.எம். சுபைர் (வயது35), ஏ.எல். ஹலால்தீன் (வயது27), யூ.எல். முஹைதீன் (வயது32) ஆகிய நால்வருமே காணாமல் போயுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. கடந்த 15 ஆம் திகதி ஓட்டமாவடியில் இருந்து 11 பேர் விறகு வெட்டுவதற்காக ஒமடியாமடுப் பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதி ஒன்றுக்குச் சென்றுள்ளனர். மூன்று குழுக்களாகப் பிரிந்து சென்ற இவர்களில் இரண்டு குழுவினர் வீடு வந்து சேர்ந்துள்ளனர். ஏனைய குழுவை…

  3. இரட்டை வேட அணுகுமுறையால் அமைதி முயற்சிகளுக்கு ஆப்பு. "சுகம் வரும் ஆனால் ஆள் தப்பாது'' இப்படி ஒரு பேச்சு மொழி வழக்கு, நம் மத்தியில் உள்ளது. அமைதி முயற்சிகளை அரசு கையா ளும் விடயத்தைப் பார்க்கும்போது இந்த மொழித் தொடர்தான் நினை வுக்கு வருகின்றது. ஒரு புறம் இராணுவப் போர்வெறித் திட்டம். மறு பக்கத்தில் அமைதி முயற்சிகள் குறித்து சர்வதேச மட்டத்தில் ஆரவாரப் பிரசாரம். இந்த இரட்டைவேட அணுகுமுறை, நாட்டை எங்கே கொண்டுபோய் நிறுத் தப் போகின்றது? மட்டக்களப்பு, வாகரையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட் டில் உள்ள பிரதேசங்களைக் கைப்பற்றும் இறுதித் தாக்குதலை இலங்கை அரசின் இராணுவம் முடுக்கி விட்டுள்ளது என்று கொழும் பில் அறிவிக்கப்படுகின்றது. அதாவது, யுத்த நிறுத்தம் நடைமுறையில் இருப்ப…

  4. யாரும் சிறீலங்கா சுதந்திரக்கட்சியில் இணையலாம் - விலகலாம்: மகிந்த ராஐபக்ஸ. ஒவ்வொருவருக்கும் சிறீலங்கா சுதந்திரக்கட்சியில் இணையவும், விலகவும் உரிமையுண்டு. யாரும் கட்சியில் இணைவதையும் விலகுவதையும் நான் எதிர்க்கமாட்டேன் என மகிந்த ராஐபக்ஸ சிறீலங்கா சுதந்திரக்கட்சி உயர் குழு கூட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். தனது அரசு தமிழ் மக்களை விடுதலைப்புலிகளிடம் இருந்து விடுதலையடையச் செய்யும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலராக மைத்திரிபால சிறீசேன மீள தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதேவேளை மங்கள சமரவீர பொருளாளராகவும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் அநுரத்தை ரத்வத்தை தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். -Pathi…

  5. யாழில் மாவீரர், போராளி குடும்பங்களின் விபரங்களை திரட்டும் படையினர். யாழ்ப்பாணம் வடமராட்சி கொற்றவத்தை நவிண்டில் பகுதியில் சிறிலங்காப் படையினராலும் அவர்ளுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினராலும் அப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்குச் சென்று சோதனை என்ற பெயரில் கெடுபிடிகளை மேற்கொள்வதுடன் அங்கு உள்ள மாவீரர், போராளி குடும்பங்களின் பெயர் விபரங்களையும் தருமாறு மக்களை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி வருவதாக அங்கிருந்துகிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. -Sankathi-

  6. ஈச்சிலம்பற்று பகுதியில் எறிகணை வீச்சில் நான்கு படையினர் பலி. ஈச்சிலம்பற்று பகுதியில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட மோட்டார் தாக்குதலில் நான்கு படையினர் கொல்லப்பட்டு மூவர் படுகாயமடைந்துள்ளதாக சிங்கள அரச தரப்பு அறிவித்துள்ளது. இச்சம்பவம் நேற்று பகல் 1.30 மணியளவில் நடைபெற்றுள்ளது. இதன்போது காயமடைந்த படையினர் அனைவரும் கந்தளாய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். -Sankathi-

  7. மன நோயாளியை தாக்கிய துணைஇராணுவக்குழுவினர். - பண்டார வன்னியன் Friday, 19 January 2007 12:31 {சங்கதி} சாவகச்சேரிச் சந்தையில் நின்ற மன நோயாளியை கடத்திச் சென்ற சிறிலங்காப் படையினரின் துணைஇராணுவக்குழுவினர் நான்கு நாட்களின் பின்னர் ஆட்கள் இல்லாத வீட்டில்கடும் சித்திரவதையின் பின்னர் வீசிவிட்டுச் சென்றுள்ளனர். கடந்த நான்காம் திகதி சாவகச்சேரி சந்தைப் பகுதியில் நின்ற இவரை ஆயுதங்களுடன் வந்த பத்துக்கும் மேற்பட்ட சிறிலங்காப்படையினரின் துணைஇராணுவக்குழுவினர் பொதுமக்கள் முன்னிலையில் பார்த்து நிற்க்கக் கூடியதாக வாகனத்தில் கடத்தப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக உறவினர்கள் பொலிசில் முறையிட்ட போதிலும் எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை கடந்த இரண்டு நாட…

  8. வெள்ளி 19-01-2007 23:46 மணி தமிழீழம் [நிலாமகன்] வடமராச்சியில் நவிண்டில் முகாம்மீது தாக்குதல் 6 படையினர் காயம் யாழ்ப்பாணம் வடமராச்சி நவிண்டில் பகுதயில் இன்று காலை 7 மணியளவில் இனம் தெரியாதவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 6 சிறீலங்கா படையினர் காயமடைந்துள்ளனர். இம் மோதல் சம்பவமானது 15 நிமிட நேரம் நீடித்துள்ளதாக இதனைத் தொடர்ந்து அப்பிரதேச மக்கள் அவ்விடத்தை விட்டு வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறீலங்கா இராணுவத்தினர் உடனடியாக தேடுதல் நடவடிக்கை ஒன்றையும் இப்பிரதேச மக்கள் மேற் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை காயமடைந்த இராணுவத்தினரை பலாலி இராணுவ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். http://www.pathivu.com/

  9. சிறிலங்காவின் அக்கிரமச் செயற்பாடுகளிற்கு பொறுப்பானவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கவேண்டும்: அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர். சிறிலங்காவின் அக்கிரமச் செயற்பாடுகள் அண்மைக்காலமாக தீவிரமடைந்துவருகின்றது. இதற்குப் பொறுப்பானவர்கள் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென அவுஸ்ரேலிய நாட்டின் வெளிவிவகார அமைச்சர் அலெக்சாண்டர் டவுணர் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரசதலைவர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் தீவிரமடைந்துள்ள இராணுவ வாதத்தினால் வடக்குக் கிழக்கில் வாழ்கின்ற தமிழ்மக்கள் நாளாந்தம் படுகொலை செய்யப்படுவதும் குறிப்பாக பாடசாலைகள், மக்கள் குடியிருப்புக்கள், வைத்தியசாலைகள் மீது எறிகணை மற்றும் விமானத்தாக்குதல்களை சிறிலங்காவின் முப்படைகளும் மேற்கொண்டு மனிதப்படுகொலைக…

  10. கணவரிடம் சென்ற மனைவியைக் காணவில்லை. கடந்த ஒகஸ்ட் மாதம் தொண்டமானாறு செலவச்சந்நிதி பகுதியிலிருந்து கணவரின் வீட்டிற்கு செல்வதாக கூறிச்சென்ற மனைவி கடந்த ஐந்து மாதங்களாகிய நிலையிலும் கணவரிடம் செல்லவில்லையென யாழ் மனித உரிமைகள் ஆனைக்குழுவில் உறவினர்களால் முறையிடப்பட்டுள்ளது. உசன் மிருசுவிலில் இருந்து இடம் பெயர்ந்து தற்போது தொண்டமானாற்றில் வசித்து வருபவரான வசந்தன் அனிற்றா (23) என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். இவரின் தாயார் பல இடங்கிளலும் தேடியும இவரைக் காணவில்லையெனவும் தெரிவித்துள்ளார். -Sankathi-

    • 2 replies
    • 1.8k views
  11. காட்டுப் பகுதியில் பயிற்சியிலீடுபட்டுக் கொண்டிருந்தபோது காணாமல் போன இரண்டு கொமாண்டோ வீரர்களினதும் சடலங்களை பொலிஸார் அம்பேகமுவ காட்டுப் பகுதியில் வெவ்வேறு இடங்களிலிருந்து மீட்டுள்ளனர். தனமல்வில குடாஓய இராணுவப் பயிற்சி முகாமில் பயிற்சி பெற்று வந்த இவர்கள், கடந்த வெள்ளிக்கிழமை காட்டுப் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது காணாமல் போயுள்ளனர். 57 வீரர்கள் கலந்து கொண்ட இப்பயிற்சியில் இவ்விருவராக பயிற்சிக்காக காட்டுப் பகுதிக்குள் அனுப்பப்பட்டுள்ளதுடன் பயிற்சி முடிவில் கொழும்பு - வெலிவாய வீதிக்கு வந்து நிற்குமாறு பணிக்கப்பட்டிருந்தனர். எனினும், பயிற்சியின் முடிவில் 55 வீரர்களே உரிய இடங்களுக்கு வந்திருந்தனர். இதனையடுத்து, இராணுவமும் பொலிஸாரும் பல தினங்களாக தேடுதல் நடத்…

  12. மட்டக்களப்பு மாவட்டம் திகிலிவெட்டைப் பிரதேசத்துக்குள் நுழைய முற்பட்ட சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவான கருணா குழுவினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இருவர் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளனர். குடும்பிமலை கோட்டத்திற்கு உட்பட்ட திகிலிவெட்டைப் பிரதேசத்துக்குள் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் திகிலிவெட்டை ஆற்றுப்பகுதியினூடாக இரு படகுகளில் துணை இராணுவக்குழுவைச் சேர்ந்த நால்வர் நுழைய முற்பட்டனர். இவர்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குலின் போதே இருவர் கொல்லப்பட்டும் இருவர் உயிருடனும் பிடிக்கப்பட்டனர். கொல்லப்பட்ட இருவரின் சடலங்கள் ஆற்றில் வீழ்ந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்க…

  13. ஈழத்தமிழர் துயர் துடைக்க உதவிப் பொருட்கள் வழங்கும் மாநாடுகள் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : யாழ் தமிழர்களைப் பட்டினி போட்டுப் பணியவைக்க சிங்கள அரசு முயலுகிறது. நமது சகோதரத் தமிழர்களைக் காப்பாற்றுவதற்காக உணவு மற்றும் மருந்துப் பொருட்களைத் திரட்டும் வேலை தமிழகமெங்கும் துரிதமாக நடைபெற்று வருகிறது. பொருட்களை வழங்குவதில் போட்டி போட்டுக்கொண்டு மக்கள் காட்டும் உற்சாகம் நம்மை நெகிழ வைக்கிறது. மக்கள் மனமுவந்து அளிக்கும் இப்பொருட்களைப் பெற்றுக்கொள்ளும் விழாக்கள் கீழ்க்கண்ட விவரப்படி நடைபெற உள்ளன. சனவரி - 24 மதுரை சனவரி - 28 விழுப்புரம் சனவரி - 30 ஈரோடு சனவரி - 31 வேலூர் பொருட்களைச் சே…

  14. அம்பாறையில் கஞ்சிக்குடிச்சாறை ஆக்கிரமித்துள்ள சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் 'நியத்த ஜய' ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் வழங்கல் செயற்பாட்டு முகாம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 10 சிறப்பு அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 10-க்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளனர். நகர்வை மேற்கொண்டுள்ள படையினருக்கு வழங்கலை மேற்கொள்வதற்காக கஞ்சிகுடிச்சாறு வக்கிமுட்டியா பகுதியில் அதிரடிப்படையினர் அமைத்துள்ள முகாம் மீது இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10.45 மணிக்கு விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குகுதலில் 10 சிறப்பு அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 10-க்கும் மேற்பட்ட சிறப்பு அதிரடிப்படையினர் காயமடைந்துள்ளனர். சிறப்பு அதிரடிப்பட…

  15. இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சு இணையத்தில் ஒரு கட்டுரை செஞ்சோலை சிறுமிகள் படுகொலையை நியாயப்படுத்தி வெளிவந்திருகிறது.முகமாலையில

  16. டென்மார்க் கத்தோலிக்க திருச்சபையின் அத்துமீறல்! கடந்த 09.01.07 அன்று டென்மார்க்கில் உள்ள கிரின்ஸ்ரட் நகரத்தில் கத்தோலிக்க தமிழர்களால் நடத்தப்படுகின்ற "டென்மார்க் கத்தோலிக்க திருச்சபை" என்கின்ற அமைப்பு ஒரு ஒளிவிழாவை நடத்தியது. அந்த விழாவில் கத்தோலிக்க திருச்சபையை சேர்ந்த பலர் கௌரவிக்கப்பட்டார்கள். கௌரவிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு பட்டங்களும் வழங்கப்பட்டன. அவர்கள் கத்தோலிக்க திருச்சபைக்கும் சமூகத்திற்கும் ஆற்றிய சேவைகளுக்காக அவர்களுக்கு அந்தப் பட்டங்கள் வழங்கப்பட்டன. பட்டங்கள் பெற்றவர்கள் மேடைக்கு அழைக்கப்பட்ட பொழுது, அவர்கள் பெற்ற பட்டங்களை அடைமொழியாகக் கொண்டே அழைக்கப்பட்டார்கள். அதன்படி திரு. ராசா மரியா பெர்னாண்டா என்பவர் ஒளிவிளக்கை ஏற்றுவதற்காக மேடைக்கு…

  17. HOT NEWS நாகர்கோவில் மோதலில் இராணுவ வீரர் பலி****இலங்கையில் அக்கிரமத்துக்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம்-அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் அலெக்சாண்டர் டவுணர்****சூடுபட்ட இளைஞன் உதவி கோரி அவலக்குரல் எழுப்பியபோதும் ஒருவரும் உதவ முன்வரவில்லை-வவுனியா மாவட்ட நீதிபதி விசனம்***வவுனியாவில் ஒருவர் சுட்டுக் கொலை****முகத்துவாரம் எலி ஹவுஸ் வீதியில் ஆட்டோ சாரதி சுட்டுக்கொலை* `புதிய அரசியல் கலாசாரம்' வெறும் பசப்பு வார்த்தை [19 - January - 2007] [Font Size - A - A - A] ஆளும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் இன நெருக்கடிக்கு அரசியல் இணக்கத் தீர்வு காண்பதற்கான முயற்சிகள்…

  18. சங்கதி இணையம் தெரிவித்துள்ளது. http://sankathi.org/news/index.php?option=...97&Itemid=1

  19. வியாழன் 18-01-2007 23:46 மணி தமிழீழம் [சிறீதரன்] வாகரை வைத்தியசாலையை இலக்கு வைத்து எறிகணைத் தாக்குதல் 5 பொதுமக்கள் காயம் மட்டக்களப்பு மாங்கேணி மற்றும் கஐவத்தை இராணுவ முகாம்மில் இருந்து சிறீலங்கா படையினர் தொடர்ச்சியாக கடும் எறிகணைத்தாக்குதல்களை இன்று வியாழக்கிழமை காலை மற்றும் மாலை மேற்கொண்டுள்ளதாகவும் இவ் எறிகணைகள் வாகரை வைத்தியசாலையை அண்டிய பகுதிகளில் வீழ்ந்து வெடித்ததாகவும். இதன்போது 5 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும் மேலும் அறியமுடிகிறது. இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில் காலை 6 மணிமுதல் 10 மணிவரையும் மேற்கொண்ட எறிகணைத்தாக்குதலில் 8 எறிகணைகள் வைத்தியசாலையை அண்டியபகுதிகளில் வீழ்ந்து வெடித்ததாகவும் இதன் போது ஒருவர் காயமடைந்ததாகவும் பின் மாலை 5.15 மணியளவில் …

  20. விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட மாட்டாது: ஜேர்மன் தூதுவர். தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை ஜேர்மனி நீக்காது என்று சிறிலங்காவுக்கான ஜேர்மனிய தூதுவரிடம் ஜேர்கன் வீத் தெரிவித்துள்ளார். தென்னிலங்கையின் பௌத்த துறவிகளைக்கொண்ட அரசியல் கட்சியான ஜாதிக கெல உறுமயவுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே வீத் இவ்வாறு தெரிவித்தார். கெல உறுமயவின் அணிக்கு அதன் நாடாளுமன்றத் தலைவர் அத்துரலிய ரத்ன தேரர் தலைமை தாங்கினார். இந்த கலந்துரையாடலில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஐரோப்பிய ஒன்றிய விதிகளின் பிரகாரம் விடுதலைப் புலிகள் மீதான தடை, ஒன்றியத்தின் பிரதிநிதிகள் சேர்ந்து எடுத்த முடிவாகும். அந்த முடிவை தனி ஒரு நாட்டினால் மாற்ற முடியாது. ஊடகங்கள் தெரிவித்தது போன்று ஜேர…

  21. தரம் 1, தரம் 2 வகுப்புகளில் இத்தவணையில் தமிழும் சிங்களமும் போதிக்கப்படும் பாடசாலைகளில் தரம் 1, தரம் 2 கற்றலுக்கான பாடவிதானம் இந்த வருடத்திலிருந்து மறுசீரமைப்பு செய் யப்பட்டுள்ளது. இவ்வருடத்தின் முதலாம் தவ ணையிலிருந்து புதிய பாட விதானம் நடைமுறைக்கு வரும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மறு சீரமைப்புச் செய்யப்பட்ட பாடவிதானத்தின் பிரகாரம் * இரண்டாவது தேசிய மொழியாக சிங்கள மாணவர்கள் தமிழையும் தமிழ் மாணவர்கள் சிங்களத்தையும் கற்றல். * நாளாந்தம் 20 நிமிடங்கள் உடற் பயிற்சி வேலைத் திட்டத்தை மேற் கொள்ளல். * வாய்மொழி மூல ஆங்கில வேலைத் திட்டத்தை கணித பாடத்து டன் அமுல்படுத்தல். * பகல் உணவு வழங்கும் திட்டத் துக்கு நேரம் ஒதுக்குதல். *ஆசிரியர் வழிகாட்டல் கோவையை அறிம…

  22. வாகரை ஆஸ்பத்திரிப் பகுதி மீது தாக்குதல் நடத்தப்படுவதற்குக் கண்டனம் செஞ்சிலுவை சர்வதேசக் குழு தலைமையகம் அறிக்கை வாகரைப் பிரதேசத்தில் ஆயிரக் கணக் கான பொது மக்கள் தங்கியுள்ள ஆஸ்பத்தி ரிப் பகுதி மீது நடத்தப்படும் எறிகணைத் தாக்குதல்கள் மற்றும் மோதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு கண்டனமும் அதிர்ச்சியும் வெளியிட்டுள்ளது. ஆஸ்பத்திரி பாதுகாப்புப் பிரதேசம் என்ற அந்தஸ்துக் கொண்டது என்பதையும் அதனை அண்டிய பகுதிகளில் தஞ்சம் அடைந்துள்ள பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட நிய தியையும் மீறக் கூடாது என்று இரண்டு தரப்புகளையும் செஞ்சிலுவைக்குழு கேட்டுள்ளது. * சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் பிரகாரம் ஆஸ்பத்திரியும…

  23. நானூறுக்கும் அதிகமான தமிழர் பூசா முகாமுக்கு அனுப்பி வைப்பு [15 - January - 2007] [Font Size - A - A - A] ( தினக்குரல்) கொழும்பு மாநகர் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த பத்து நாட்களில் கைது செய்யப்பட்ட எழுநூறுக்கும் மேற்பட்ட தமிழர்களில் நானூறுக்கும் மேற்பட்டோர் `பூசா' உட்பட பல்வேறு சிறைச்சாலைகளிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். தெற்கில் நித்தம்புவ மற்றும் ஹிக்கடுவ பகுதிகளில் தனியார் பயணிகள் பஸ்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளையடுத்து நாடு முழுவதும் ஆரம்பமான பாரிய சுற்றிவளைப்புகளும் தேடுதல்களும் தினமும் நடைபெற்று வருகின்றன. இந்த சுற்றிவளைப்புகளில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்படுகின்றனர். முன்னைய காலங்களைப் போலன்றி இவர்கள் உடனடியா…

  24. வவுனியாவில் குழுமோதலில் சிங்களவர் பலி, தமிழர்கள் இராணுவத்தால் அச்சுறுத்தல். வவுனியா நகரத்தில் இருந்து 3 கிலோமீற்றர் தூரம் தெற்காக அமைந்தள்ள மதவடிக்குளம் பகுதிவாழ் தமிழ்மக்களை இன்று வியாழக்கிழமை காலை சிறீலங்கா காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் அப்பகுதியில் நேற்று புதன்கிழமை ஏற்பட்ட குழுமோதலில் சிங்களவர் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து அவ்இடத்தை விட்டு விரட்டுவோம் என பயமுறுத்தியுள்ளார்கள். இக்கொலையானது முன்னர் 6 பொதுமக்கள் கடந்த செவ்வாய் கிழமை மதவடிக்குளம், மற்றும் மூன்றுமுறிப்பு பகுதியில் கொல்லப்பட்டதை தொடர்ந்து இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கொல்லப்பட்ட சிங்களவர் பி.எம். நிசங்க என இனம் காணப்பட்டுள்ளார். இதேவேளை வவுனியாவில் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்ப…

  25. தற்போது இடம்பெற்று வரும் வன்முறைகள், மோதல்களினால் புதிதாக 2 இலட்சத்து 13 ஆயிரம் பேர் அகதிகளாகியிருப்பதாகவும், இவர்களுக்கு அடுத்து வரும் மாதங்களில் உதவுவதற்காக 66 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான அலுவலகம் உதவி வழங்கும் நாடுகள் அமைப்புக்களிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றது. வடக்கு - கிழக்கு மோதல்களினால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு 2006 ஏப்ரலின் பின்னர் மீண்டும் வெடித்த வன்செயல்களும், மோதல்களும் மனிதாபிமான ரீதியாக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் சபையின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.