Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. உதவி வழங்கும் சமூகத்தின் மாநாடு காலியில் நடைபெறவுள்ள நிலையில் தென்பகுதியில் கடும் பாதுகாப்பு. சிறிலங்காவுக்கு உதவி வழங்கும் சமூகத்தின் மாநாடு எதிர்வரும் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் காலியில் நடைபெறவுள்ள நிலையில் தென்பகுதியின் பாதுகாப்பு மிகப் பெருமளவில் பலப்படுத்தப்படவுள்ளது. தென்பிராந்திரயத்தில் குறிப்பாக காலி, மாத்தறை, அம்பாந்தோட்டைப் பகுதிகளில் முற்றுமுழுதாக அதிஉயர் பாதுகாப்புக்குள் கொண்டுவரப்பட்டு, முப்படையினரும் 24 மணி நேரமும் முழு விழிப்பு நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றனர். காலி நகரில் 29 ஆம் நாள் ஆரம்பமாகும் இந்த இருநாள் மாநாட்டுக்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமை தாங்குவார். இந்த மாநாட்டில் இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வு முயற்சிக்கான …

  2. கிழக்கு நிலை தொடர்பாக கண்காணிப்புக் குழு சிறப்பு அறிக்கை வெளியிடுகிறது [சனிக்கிழமை, 27 சனவரி 2007, 08:43 ஈழம்] [அ.அருணாசலம்] "கிழக்கு மாகாணத்தில் தற்போது தோன்றியுள்ள மிகவும் வன்முறையான சூழ்நிலை மற்றும் கடந்த சில மாதங்களாக இடம்பெற்று வரும் கடுமையான மோதல்கள் குறித்து விரைவில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட உள்ளதாக" இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர் தோபினூர் ஓமர்சன் தெரிவித்துளதாவது: "கடந்த சில மாதங்களாக சிறிலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கிழக்கு மாகாணத்தில் பெரும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இம்மோதல்களினால் கிழக்கு மாகாணத்தில் தோன்றியுள்ள வன்முறை தொடர்பாக நாங்…

    • 4 replies
    • 1.2k views
  3. கொழும்புத்துறை முகத்தில் தாக்குதல் முயற்சி ஒன்றைத் தாம் முறியடித்துள்ளதாக ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த இணையத்தில் முழுமையான செய்தி இணைக்கப்படவில்லை. ஒரு வரியில் (ஓட விடப்பட்டுள்ள) செய்தியில் அதிகாலை ஐந்து மணியளவில் புலிகள் மேற்கொண்ட தாக்குதல் முயற்சியை கடற்படையினர் முறியத்துள்ளதாகவும், புலிகளின் படகு ஒன்று அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபரம் தெரிந்தவர்கள், வேறு செய்திகள் மூலம் இதனை அறிந்தவர்கள் இங்கே வந்து விபரங்களைக் கொட்டுங்கள்

  4. வெடிபொருட்களுடன் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் நுழைந்தது எப்படி? ஜெயலலிதா கேள்வி [Friday January 26 2007 01:44:52 PM GMT] [pathma] அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டு அறிக்கையில் கூறி இருப்பதாவது: இலங்கை தமிழர்கள் உள்பட 9பேர் கைது. 100 மூட்டை வெடிகுண்டு பொருட்கள் இலங்கைக்கு கடத்த முயற்சி. கைதான 9 பேரில் 6 பேர் விடுதலைப்புலிகளாம். நிறையவெடி பொருட்களை அவர்களிடம் இருந்து கைப் பற்றியிருக்கிறார்கள். இது ஒருவரிச் செய்தி போல தோன்றும். உண்மையில் இந்த ஒருவரிச் செய்திக்குள் ஓராயிரம் செய்திகள் புதைந்திருக்கின்றன. வெடி பொருட்கள் கிடைக்குமிடம் எதுப அதன் விற்பனை எப்படி? அதனை யார் விற்றது? யார் வாங்கினார்கள்? அதன் நடமாட்டம் எவ்வாறு? இதனை எப்படி …

    • 16 replies
    • 4.3k views
  5. தினக்குரலுக்கு வலை வீசும் அமெரிக்கா ...தினக்குரல் நிறுவுனர் எஸ்.பி.சாமி விழுவாரா ? Friday, 26 January 2007 இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் அமெரிக்கத் தூதரகத்தின் பத்திரிகைத் தொடர்பு, கலாசார விவகார கவுன்சிலர் ரெறி ஜே.வைற் சகிதம் தினக்குரல் தலைமையகத்துக்கு நேற்று புதன்கிழமை விஜயம் செய்தார். அவர் தினக்குரல் நிறுவுனர் எஸ்.பி.சாமி, நிருவாக இயக்குநர் எஸ்.பி.கணேசராஜா, இயக்குநர் எஸ்.பி.கேசவராஜா, பிரதம ஆசிரியர் வீ.தனபாலசிங்கம் மற்றும் ஊடக ஆலோசகர் ஈ.வீ.டேவிட் ராஜூ ஆகியோருடன் அளவளாவுவதைக் காண்கிறீர்கள். ... தினக்குரலுக்கு வலை வீசும் அமெரிக்கா ...தினக்குரல் நிறுவுனர் எஸ்.பி.சாமி விழுவாரா ? http://www.sooriyan.com/index.php?opt…

  6. புலிகளுக்காக இராணுவ சீருடைகளை பாகிஸ்தானியர் கொண்டுவந்ததாக சந்தேகம் [26 - January - 2007] [Font Size - A - A - A] பாகிஸ்தான் நாட்டின் இராணுவத்தினர் அணிவது போன்ற இராணுவச் சீருடைகளுடன் பாகிஸ்தானியர் ஒருவரை புறக்கோட்டையிலுள்ள விடுதியொன்றில் வைத்து புறக்கோட்டைப் பொலிஸார் பிரிவினர் கைது செய்துள்ளனர். இவ்வாறு குறித்த பாகிஸ்தானியர் விடுதலைப்புலிகள் இயக்கத்தினருக்கு கொடுப்பதற்காக அந்த இராணுவச் சீருடைகளை எடுத்து வந்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் பொலிஸ் தரப்பில் கிளப்பப்பட்டிருப்பதைத் தொடர்ந்து அவ்வாறு அவர் அந்தப் பெருந்தொகையான இராணுவச் சீருடைகளையும் புலிகளுக்காகத்தான் பாகிஸ்தானிலிருந்து கொண்டு வந்தாரா என்பது பற்றி புலன் விசாரணைகள் செய்யப்பட்டு வருவதாக புறக்கோட்டை பொலிஸ…

  7. எதிர்வரும் ஞாயிறு அரங்கேறும் ஐ.தே.கவின் கட்சி தாவும் நாடகம் [வெள்ளிக்கிழமை, 26 சனவரி 2007, 16:31 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியின் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சி தாவும் படலம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நிகழவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை தடுப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி, இறுதிக்கட்ட முயற்சிகளை மேற்கோண்டுள்ள போதிலும் அதன் உறுப்பினர்கள் அரசு பக்கம் தாவ உள்ளனர். இது தொடர்பில் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கையில்: 15-க்கும் மேற்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் அதன் முன்னாள் பிரதித்தலைவர் கரு ஜெயசூர்ய தலைமையில் அரசில் இணைய உள்ளனர். அரசினால் புதிதாக உருவாக்கப்பட்ட பொருளாதார அபிவிருத்தி தொடர்ப…

  8. மட்டக்களப்பில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமான படுவான் கரை நோக்கி சிறீலங்கா படைகள் எறிகணை மற்றும் பல்குழல் வீச்சுக்களை நடத்தியுள்ளனர் குடும்பி மறை வவுணதீவு போன்ற பிரதேசங்களில் இருந்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதேவேளை திகிலிவெட்டை பெண்டுகள் சேனை பிரதேசங்களை நோக்கியும் நேற்றைய தினம் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த தாக்குதல்கள் காரணமாக மக்கள் குடியிருப்புகள் பல அழிவடைந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது thanks: www.pathivu.com

    • 0 replies
    • 835 views
  9. வெள்ளி 26-01-2007 16:34 மணி தமிழீழம் [சிறீதரன்] சிறீலங்காவிற்கு மியன்மார் அரசாங்கம் ஆயுத உதவி சிறீலங்கா அரசாங்கத்திற்கு தேவையான ஆயுத தளபாடங்களை வழங்குவதற்கு மியன்மார் அரசாங்கம் உறுதியளித்துள்ளது சிறீலங்காவிற்கு விஜயம் செய்துள்ள மியன்மார் வெளிவிவகார அமைச்சர் நையான் வின் இதனை தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளுடனான யுத்தத்திற்கு தேவைப்படும் சிறிய ரக ஆயுதங்களை தயாரித்து அவற்றை ஸ்ரீலங்காவிற்கு அனுப்பி வைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார் நேற்று சிறீலங்கா வெளிவிவகர அமைச்சர் மங்கள சமரவிரை சந்தித்து பேசிய போதே மியன்மாரின் வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார் இரு நாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு ம…

  10. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கும் பணியாளர்களின்; செயற்திறன்மிக்கப் பணிகளைப் பாராட்டிக் கௌரவித்த நிகழ்வு ஒன்று நேற்று தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நடுவப்பணியகத்தில் இடம்பெற்றுள்ளது. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நடுவப்பணியகத்தின் நிர்வாக அலுவலர் திரு.மா.ஜெராட் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதையடுத்து தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முன்பள்ளிக் கல்வி மேம்பாட்டுக் கட்டமைப்புப் பிரிவின் திட்ட இணைப்பாளர் திரு.இராஜன் அவர்களின் வரவேற்புரையைடுத்து தலைமையுரை இடம்பெற்றது. இதனதை; தொடர்ந்து வாழ்த்துரை, பாராட்டுரைகள், சிறப்புரைகள் என்பன இடம்பெற்றன. வாழ்த்துரையை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சிறுவர் நலன் திட்டப…

  11. மகிந்தவுடன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு [வெள்ளிக்கிழமை, 26 சனவரி 2007, 15:23 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இக்கூட்டம் நேற்று வியாழக்கிழமை இரவு 9 மணிக்கு நடைபெற்றது. கூட்டத்தில் அரசாங்கத்துக்கும் முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையில் செய்யப்படவுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம், முஸ்லிம் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் அமைச்சுப் பொறுப்புக்கள் என்பன தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டன. இரு கட்சிகளும் சேர்ந்து ஒரு செயற்திட்டத்தை உருவாக்குவதற்காக அரச தலைவரின் ஆலோசகர் பசில் ராஜபக்சவிற்கும் ஹக்கீமுக்கும் இடையில் நடைபெற்று வந்த பல…

  12. கிண்ணியா நகரசபை தமிழ் உறுப்பினர் சுட்டுக்கொலை [வெள்ளிக்கிழமை, 26 சனவரி 2007, 15:45 ஈழம்] [கி.தவசீலன்] திருகோணமலை மாவட்டம் கிண்ணியா நகர சபையின் ஒரேயொரு தமிழ் உறுப்பினரான தங்கராஜா இதயராஜா இன்று வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார

    • 3 replies
    • 1.2k views
  13. இரு அமெரிக்க பிரஜைகளால் இந்த விண்ணப்பம் உருவாக்கப்பட்டுள்ளது இதில் கையொப்பமிட்டு ஜநா பொது செயலாளருக்கு அனுப்புங்கள் கையொப்பம் இட இங்கே கிளிக் செய்யுங்கள் குறிப்பு-இதைல் கையொப்பமிட நீங்கள் பணம் செலுத்த வேண்டியது இல்லை This petition has been created by two concerned U.S. citizens, Ellyn Shander, MD and Lisa Hanson. Sign the petition and add your voice: http://www.ipetitions.com/petition/srilankaunappeal/. (Please note that you do not have to make a donation to sign this petition). Copy of the petition is given below. [அவ்விண்ணப்பதின் பிரதி] Humanitarian Petition to the UN Secretary-General Ban Ki-moon United Nations Headquarters U…

    • 3 replies
    • 1.8k views
  14. பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கான சக்தி படையினரிடமுள்ளது. கிழக்கில் இது நிரூபணம்: ஜனாதிபதி. பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கான ஆற்றல், தேவைப்பாடு மற்றும் சக்தி என்பன எமது படையினரிடம் உள்ளன. கிழக்கில் அதனை படையினர் நிரூபித்துக் காட்டியுள்ளனர். நாட்டு மக்கள் முப்படையினர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அப்பாவி தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்க வழி செய்வதே இனவாதத்தை ஒழிப்பதற்கான வழியாகும். இல்லையேல் கொடிய இனவாதம் இலங்கையில் உன்னதமான பாரம்பரியத்தை சிதைத்து சின்னாபின்னாமாக்கிவிடும். இதனை நாம் அனைவரும் உணர வேண்டும் என்றும் அவர் கூறினார் மொரகஹகந்த நீர்தேக்கத் திட்டத்தை நேற்று முற்பகல் ஆரம்பித்து வைத்த பின்னர் உரையாற்றுகையிலேயே…

    • 6 replies
    • 1.8k views
  15. ரம்புக்வெலவின் கருத்து பக்கச்சார்பானது: பிரித்தானியா, கனடா, சுவிற்சர்லாந்து, சுவீடன், அவுஸ்திரேலியா, யு.எஸ்.எ, ஐ-ஒ தூதரக பிரதிநிதிகள். இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் தூதுவர்கள் அண்மையில் வடக்கு கிழக்கிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட பின்னர் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக அரசாங்க பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் திட்டமிடல் அமுலாக்கல் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்த கருத்துகள் பக்கச் சார்பானதென அந்நாடுகளின் தூதுவர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இலங்கையில் உள்ள பிரித்தானியா, கனடா, சுவிற்சர்லாந்து, சுவீடன், அவுஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றிய தூதரக பிரதிநிதி மற்றும் யு.எஸ்.எயிட் பிரதிநிதிகள் உட்பட உதவி வழங்க…

  16. 'இராணுவத் தீர்வுக்கே அரசு திட்டம்' : இந்திய- கனடா தூதுவர்களிடம் கூட்டமைப்பு [வெள்ளிக்கிழமை, 26 சனவரி 2007, 09:40 ஈழம்] [கொழும்பு நிருபர்] இராணுவ நிகழ்ச்சித் திட்டம் ஒன்றின் ஊடாக இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தடுக்க முற்படும் சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக தொடர்ந்தும் மௌனம் சாதிக்கக்கூடாது எனவும், சமாதான முயற்சிகளினுடாக இனநெருக்கடித் தீர்வு முயற்சிகளுக்கு அழுத்தத்தைக் கொடுக்க முன்வர வேண்டும் எனவும் இந்தியா மற்றும் கனடாவுக்கான தூதுவர்களிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்திருக்கின்றது. இலங்கைக்கான இந்திய தூதுவர் அலோக் பிரசாத், பிரதித் தூதுவர் ஏ.மாணிக்கம் ஆகியோருடனான சந்திப்பு நேற்று வியாழக்கிழமை காலையும், கனடியத் தூதுவருனான …

  17. பயங்கரவாதத்தை தோற்கடிக்க வலுவான ஆயுதம் `அரசியல் தீர்வே' [26 - January - 2007] [Font Size - A - A - A] * மொரகஹகந்த நீர்த்தேக்க அங்குரார்ப்பண வைபவத்தில் ஜனாதிபதி தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காண்பதன் மூலமாகவே பயங்கரவாதத்தையும், கொடிய இனவாதத்தையும் வெற்றி கொள்ள முடியுமெனவும் வலுவுள்ளதான அரசியல் தீர்வே இதற்கு சிறந்த ஆயுதமெனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சுட்டிக் காட்டி இருக்கின்றார். பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கான ஆற்றல், தேவைப்பாடு சக்தி என்பன எமது படையினரிடம் காணப்படுவதாகவும் இதனை கிழக்கு மாகாணத்தில் நிரூபித்துக் காட்டப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கடந்து இருபது, முப்பது வருடங்களுக்கு முன்னர் கொழும்பிலிருந்து யாழ்ப்ப…

  18. முல்லைத்தீவில் விமானத்தாக்குதல். - பண்டார வன்னியன் Friday, 26 January 2007 09:29 முல்லைத்தீவு பகுதி வான்பரப்பில் நேற்று காலை 7.45மணிக்கு நுழைந்த சிறிலங்கா விமானப்படையின் கிபீர் குண்டு வீச்சு விமானங்கள் கடலிலும் தரையிலுமாக தாக்குதலினை மேற்கொண்டன. இதன்போது கடலில் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மீனவர்களை நோக்கியும் சுனாமி மக்கள் குடியிருப்புகளை அண்டிய பகுதிகளிலும் குண்டுகள் வீழ்ந்து வெடித்தன. இதன்போது கடலில் வீழ்ந்த குண்டுகள் மீனவர்களுக்கு அருகாமையிலும் பழுதடைந்த நிலையில் நங்கூரமிடப்பட்டிக்கும் ஜோர்தான் கப்பலுக்கு அருகாமையிலும் வீழ்ந்து வெடித்தன. இதனால் மீனவர்கள் தொழில் ஈடுபடாது உபகரணங்களை கைவிட்டு உடன் கரைதிரும்பினர். இத் தாக்குலில் மக்கள் பாதுகாப்பான…

  19. வவுனியா - மன்னார் வீதியில் பயணிகள் பேரூந்து மீது படையினர் சூடு - ஒருவர் பலி, இருவர் படுகாயம் - பாண்டியன் Friday, 26 January 2007 10:25 வவுனியா - மன்னார் வீதியில் கண்டுவெட்டுவான் பகுதியில் வைத்து படையினர் மீது இன்று காலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையடுத்து அவ்வழியால் வந்த பயணிகள் பேரூந்து மீது படையினரால் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த பேரூந்து மீதே படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர். இதன்போது பயணி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் இரு பயணிகள் படுகாயமடைந்துள்ளதாகவும் அத்தகவல் மேலும் தெரிவிக்கின்றது. இதேவேளை குறித்த பகுதியில் உள்ள காவல்துறை நில…

  20. [25 - January - 2007] [Font Size - A - A - A] வாழ்க்கைச் செலவு அதிகரிப்பையும் பணவீக்கத்தையும் கட்டுப்படுத்துவதற்கான கொள்கைத்திட்டமொன்றை தயாரிப்பதற்கும் அதனை முன்னெடுப்பதற்குமான வழிவகைகளை உடனடியாக காணுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ பொருளாதாரக் கவுன்சில் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியிருக்கின்றார். இவ்விடயத்தில் தீவிர ஈடுபாடு காட்ட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தி இருக்கின்றார். பொருளாதார நெருக்கடிமிக்க இன்றைய காலகட்டத்தில் ஜனாதிபதியின் இக்கருத்துக்கள் வரவேற்கப்பட வேண்டியவை. ஆனால், ஜனாதிபதியின் இந்த முயற்சி வெற்றியளிக்கக் கூடியதாக அமையுமா என்பதையிட்டு சற்றுச் சிந்திக்க வேண்டியுள்ளது. அதிகாரிகளை அழைத்து வட்ட மேசை மகாநாடுகளை நடத்தி ஆராய்வதாலோ, திட்டங்கள் வகு…

  21. போர் நிறுத்த உடன்படிக்கைக்கு எதிராக பிக்குமார் நேற்று பேரணி, ஜனாதிபதிக்கு மகஜர் கையளிப்பு. யுத்த நிறுத்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டு அடுத்த மாதம் 22ஆம் திகதியுடன் ஐந்து வருடங்கள் நிறைவடைகின்ற நிலையில் அந்த ஒப்பந்தத்தை அரசு உடனடி யாகக் கிழித்தெறிய வேண்டும் எனக்கோரி தேசிய பிக்குகள் முன்னணியினர் நேற்று கொழும்பில் பாதயாத்திரை ஒன்றை நடத்தினர், ஜனாதிபதி செயலகத்தில் மகஜர் ஒன் றையும் கையளித்தனர். தேசிய பிக்குகள் முன்னணியின் தலைவர் வண. தம்பர அமில தேரரின் தலைமையிலான இந்தப் பாதயாத்திரை பிற்பகல் இரண்டு மணிக்கு புறக்கோட்டை போதி மரத்தடிச் சந்தியில் ஆரம்பமாகி ஒல்கோட் மாவத்தையின் ஊடாக ஜனாதிபதிச் செய லகம் நோக்கிச் சென்றது. இருப்பினும் இவர்களை ஜனாதிபதி செயலகம் வரை செல்லவிடாது ப…

  22. விடுதலைப் புலிகளின் ஆயுத தளபாடங்களை அழித்தொழிக்க அரசு உறுதிபூண்டுள்ளது: கோத்தபாய. விடுதலைப் புலிகளின் கோட்டையான வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள அவர் களின் இராணுவ உடைமைகள் ஆயுத தள பாடங்கள் அழித்து ஒழிக்கப்படும். அவற்றை விட்டுவைத்தால் போர் இன்னும் பல வருடங்களுக்கு நீண்டு செல்லும். இவ்வாறு கடும் தொனியில் கூறியிருக்கிறார் பாதுகாப்பு அமைச்சின் செயலாள ரும் ஜனாதிபதியின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ஷ. விடுதலைப் புலிகளின் இராணுவ உடைமைகள் அவை எங்கிருந்தாலும் வடக்கில் என்ன, கிழக்கில் என்ன தெற்கில் என்ன நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவற்றை நாம் அழித்தே தீருவோம் கடற் புலிகளின் தளங்கள் இருக்கும் வரை, அவர்களிடம் ஆட்லறி தளங்கள் இருக்கும் வரை, விடுதலைப் புலிகள் எங்கு அழி…

  23. விடுதலைப் புலிகளை முறியடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் வாகரைப் படை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பின் அது வரவேற்கத்தக்கது. ஆனால் அந்த நடவடிக்கை மூலம் சனாதிபதி அரசியல் இலாபம் தேட முயன்றால் அது மிகவும் கண்டனத்திற்குரியதென்ற ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் கூற்றுக்கள் அரசியலில் அவர் இன்னமும் கற்றுக்குட்டி என்பதையே காட்டுகின்றது. 1971, 1988, 1989 காலப்பகுதியில் ஆயுதக்கிளர்ச்சிகளை நடத்தித் தமது கற்றுக்குட்டித்தனத்தால் தோல்வி கண்ட ஜே.வி.பி.யினர் அரசியலில் இன்னமும் அதே நிலையிலேயே உள்ளனர் என்பதையே ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் இக்கூற்றுக்கள் வெளிப்படுத்துபவையாகவுள்ளன. அவ்வாறு இல்லாதுவிடில் இராணுவ நடவடிக்கைகளை மகிந்த ராஜபக்ச அரசியல் அனுகூலத்திற்காகப…

  24. யாழ் நாவலர் வீதி பகுதியில் ஒரே இரவில் 8 வீடுகளில் ஆயுததாரிகள் கொள்ளை. யாழ்ப்பாணம் நாவலர் வீதிப்பகுதியில் ஒரே இரவில் 8 வீடுகளுக்குள் புகுந்த கொள்ளையர்கள் பல இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள், பணம் மற்றும் பொருட்களை கொள்ளையிட்டுள்ளனர். நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு 3 மணிநேரத்துக்குள் 8 வீடுகளிலும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. இரவு 8 மணியளவில் கைத்துப்பாக்கிகள், வாள்கள், கத்திகள் சகிதம் வீட்டு வளவுகளுக்குள் புகுந்த கோஷ்டியொன்று தாங்கள் இராணுவத்தினர் என்றும் சோதனையிட அனுமதிக்குமாறும் கோரியுள்ளனர். எனினும் வீட்டு உரிமையாளர்கள் கதவுகளை திறப்பதற்கு மறுப்புதெரிவித்துளளனர். -Tamilwin-

  25. யாழில் கடத்தப்பட்டவர் சடலமாக மீட்பு. நேற்று வியாழக்கிழமை காலை கோப்பாய் காவல்துறையினரால் புதன்கிழமை இணுவில் கிழக்கு பகுதியில் இனம்தெரியாத ஆயுததாரிகளால் கடத்தப்பட்டவர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். குடும்பஸ்தரான இவர் வலிகாம் இணுவில் கிழக்கு இணுவில் அம்மன் கோவிலைச்சேர்ந்தவர் எனவும் இவரது உடலம் உரும்பிராய் கோவில் பகுதியில் கடத்தப்பட்ட பகுதியில் இருந்து 4 கிலோமீற்றர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடத்தி கொல்லப்பட்டவர் 32 அகவையுடைய நாகேந்திரம் ஆறுமுகதாசன் எனவும் இவர் உந்துருளி தரகர் வேலை செய்பவர் எனவும் அறியப்பட்டுள்ளது. இவரது உடலத்தை அவரது மனைவி இனம் காட்டியுள்ளதாகவும் அவர் திருமணமாகி ஒரு வருடமே பூர்த்தியாகியுள்ளதாகவும் குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.