ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142729 topics in this forum
-
வெள்ளை நிற வேட்டி, ஷேர்ட்டுடன் பாலாவின் உடல் மலர்ச்சாலையில்!லண்டனிலிருந்து ந.வித்தியாதரன் "தேசத்தின் குரல்' மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கத்தின் உடல் நேற்று லண்டனில் உள்ள மலர்ச்சாலை ஒன்றில் வைக்கப்பட்டிருந்தது. பாலாவுக்கு மிகவும் விருப்பமான, வெள்ளைநிற வேட்டியும், வெள்ளை நிற ஷேர்ட்டும் அவருக்கு அணிவிக்கப்பட்டிருந்தது. பாலா தம்பதியினருக்கு மிகவும் நெருக்க மானவர்கள் மாத்திரமே குறித்த மலர்ச்சாலையில் நேற்று மதியுரைஞரின் உடலைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். திருமதி அடேல் பாலசிங்கம் மலர்ச்சாலையில் நின்று, தமக்கும் தமது கணவருக்கும் நெருங் கிய உறவுடையவர்கள், நண்பர்கள் சிலரைக் கூட்டிச் சென்று தமது கணவரின் உடலைக் காண்பித்தார். பாலாவுக்கு மிகவும் பிடித்தமான தமி ழர்களின் …
-
- 1 reply
- 1.6k views
-
-
சிறிலங்கா வான் படையினருக்கு இந்தியாவில் பயிற்சி . [திங்கட்கிழமை, 18 டிசெம்பர் 2006, 14:53 ஈழம்] [தெ.சந்திரநாதன்] சிறிலங்கா வான் படையைச் சேர்ந்த ஆறு அதிகாரிகளுக்கு அரசின் அண்மைய கொள்முதலான மிக்-27 ரக ஜெட் போர் விமானங்களை ஓட்டுவதற்கு இந்தியாவின் வான் படைப் பயிற்சி நிலையமான சண்டிகாரில் பயற்சி அளிக்கப்படுகிறது. கடந்த ஒக்ரோபரில் தொடங்கிய இந்தப் பயிற்சி எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் குழு பயிற்சி முடிந்து வந்ததும் மூன்றாவது குழு பயிற்சி பெறச் செல்லும் என இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன. சிறிலங்கா வான் படை 1999 முதல் 2000 ஆம் ஆண்டு வரை பாகிஸ்தானில் பயிற்சி பெற்றது. தற்போது இந்தியாவில் பயிற்சி பெற…
-
- 1 reply
- 1.2k views
-
-
கிழக்கிலிருந்து வெளியேற்றப்படப் போவது விடுதலைப் புலிகள் அல்ல: இளந்திரையன் [திங்கட்கிழமை, 18 டிசெம்பர் 2006, 15:39 ஈழம்] [பூ.சிவமலர்] கிழக்கில் எமது பகுதியிலிருந்து எங்களை வெளியேற்ற சிறிலங்கா இராணுவம் திட்டத்தை அறிவித்தால், விடுதலைப் புலிகள் முன்தாக்குதலைத் தொடங்குவர் என தமிழீழ விடுதலைப் புலிகள் சிறிலங்கா இராணுவத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். விடுதலைப் புலிகள், பொதுமக்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள் என குற்றம் சாட்டிய இராணுவம், இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் போர்நிறுத்த உடன்பாட்டுக்கு எதிராக கிழக்கிலிருந்து விடுதலைப் புலிகளை விரட்டுவோம் என தெரிவித்துள்ளது. இராணுவத்தினரின் மோட்டார் மற்றும் எறிகணைத…
-
- 0 replies
- 1.2k views
-
-
மட்டக்களப்பில் துணை இராணுவக் குழுவைச் சேர்ந்த மூவர் சுட்டுக்கொலை [திங்கட்கிழமை, 18 டிசெம்பர் 2006, 14:22 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவைச் சேர்ந்த மூவர் அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர
-
- 1 reply
- 991 views
-
-
"தேசத்தின் குரல்' அன்டன் பாலசிங்கம், தேசியத் தலைவர் வே. பிரபாகரன் மீதும் போராளிகள் மீதும் கொண்டிருந்த பற்றை வார்த்தைகளுக்குள் அடக்கமுடியாது என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தான் படித்த விடுதலைத்தத்துவம், அதனூடாகதான் பார்க்கின்ற தமிழீழத்தை தேசியத் தலைவரின் சொல்லிலும் செயலும் தான் காண்கிறார் என்றும், அதனால் தான் தலைவரின்பால் கவரப்பட்டு விடுதலைப் போராட்டத்தில் ஆரம்ப காலத்திலேயே தன்னை இணைத்துக்கொண்டார் என்றும் அன்டன் பாலசிங்கம் தெரிவித்து வந்தார். "எமது போராட்டச் செயற்பாடுகளுடன் இணைவதற்கு முன்பாக இங்கிலாந்தில் ஒரு உளவியல் நிபுணராக உளவளத்துணை ஆலோசகராக இருந்து செயற்பட்ட அவர், ஆரம்பத்தில் சாதாரண பத்திரிக…
-
- 0 replies
- 682 views
-
-
டிராக்டரில் தப்பி ஓடியபோது சிங்கள ராணுவம் ராக்கெட் வீச்சு: 7 தமிழர்கள் பலி கொழும்பு, டிச. 18- இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் இடையே மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், திரிகோணமலை பகுதிகளில் தமிழர்கள் வீடுகளையும் விடுதலைப்புலிகளின் முகாம்களையும் ராணுவம் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. ராணுவ தாக்குதலுக்கு பயந்து பொதுமக்கள் வீடுகளை காலி செய்து காடுகளிலும், அகதிகள் முகாம்களிலும் தஞ்சம் புகுந்துஉள்ளனர். இதுவரை 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வீடுவாசல்களை இழந்து தவிக்கிறார்கள். மட்டக்களப்பு மாகாணத்தில் இதர வெளியில் இருந்து வாகரைக்கு தமிழர்கள் குடும்பத்துடன் டிராக்டரில் சென்று கொண்டிருந்…
-
- 0 replies
- 809 views
-
-
வாகரையில் இருந்து இதுவரை 13ஆயிரம் பேர் இடம்பெயர்வு கடந்த 3 தினங்களில் மட்டும் ஆயிரம் பேர் அரச பகுதிக்கு கொழும்பு,டிசெ.18 வாகரையில் இருந்து கடந்த ஒரு மாத காலத்திற்குள் 13 ஆயிரத்து 220 பேர் மட்டக்களப்பு அரச கட்டுப்பாட் டுப் பிரதேசத்திற்கு இடம்பெயர்ந்துள் ளனர் என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சி.புண்ணியமூர்த்தி நேற்று தெரிவித்தார். கடந்த 3 தினங்களில் மாத்திரம் 3 ஆயிரத்து 446பேர் இவ்வாறு இடம் பெயர்ந்துள்ளனர் என்று அவர் குறிப் பிட்டிருக்கின்றார். இவர்கள் செங்கலடி, வாழைச்சேனை, கிரான், மட்டக்களப்பு, ஆரை யம்பதி மற்றும் களுவாஞ்சிக்குடி ஆகிய இடங்களிலுள்ள பாடசாலைகளிலும் பொது இடங்களிலும் தங்கவைக்கப் பட்டிருக்கின்றனர் என்றும் அரச அதி பர் தெரிவித்தார். இடம்பெயர்ந்…
-
- 1 reply
- 755 views
-
-
இனக்குழும பிரச்சினைத் தீர்வு புதிய பாணி பீஷ்மர் தேசிய பாதுகாப்பு விடயங்கள் பற்றிப் பேசுவதற்கான புதிய உத்தியோகத்தரான ஹுலுகெல்ல என்பவர் ஜனாதிபதி இன்னும் இரண்டு வருடங்களுக்குள் இனக்குழுமப் பிரச்சினைக்கான ஒரு நல்ல தீர்வினை கொண்டு வந்து விடுவாரென தெரிவித்ததாக அரச ஊடகங்கள் சில கூறுகின்றன. இனக்குழும பிரச்சினைக்கான தீர்வினை அரசாங்கமே முன்வைக்க வேண்டும்- இந்தக் கட்டத்தில் அது அரசாங்கத்தின் பணி என்பது தென்னாசிய, சர்வதேசிய நிலைப்பாடாகும். கடந்த மாதம் இந்த நிலைப்பாடு மிக வன்மையாகவே பேசப்பட்டு வந்தது. ஜனாதிபதியும் தனக்கு சற்று அவகாசம் வேண்டுமென்றும் இந்த விடயங்களிலே தனது நிர்வாகம் புதிதாக பலவற்றை செய்யப்பார்க்கிறது என்கின்ற முறையிலே பதில்களை கூறி வந்துள்ளார். …
-
- 0 replies
- 1k views
-
-
வாகரையில் மனிதப் பேரவலம் சமாதானத்தின் மீதான நம்பிக்கைகள்அடியோடு அற்றுப் போன நிலையில், இலங்கையின் வடக்கு, கிழக்குப் பிரதேசங் களில் மக்கள் போர்க்கால அவலங்களுக்கும் அழிவுகளுக்கும் முகம்கொடுக்கத் தொடங்கிவிட்டனர். புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் இரு வாரங்களே இருக்கின்றன. உலகிற்கு சமாதானத் தைப் போதிக்க வந்த யேசுபிரானின் அவதார தினத்தைக் கொண்டாடி மகிழ உலகம் தயாராகிருவருகிறது. ஆனால், இலங் கையில் தமிழர்களையும் ஏனைய இனத்தவர்களையும் போர் பற்றிய பயமே மீண்டும் கௌவத் தொடங்கி உள்ளது. சமாதா னம் தூர விலகிச் செல்கிறதே என்ற ஏக்கத்துடனேயே அவர்கள் புத்தாண்டை எதிர்கொள்கின்றனர். நாட்டின் வடக்கிலும், கிழக்கிலும் போக்குவரத்து மார்க் கங்கள் துண்டித்த நிலையில் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் ச…
-
- 1 reply
- 802 views
-
-
யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் உள்ள இராணுவத்தினர் பொது மக்களை திருக்கை வால் கொண்டு தாக்கி வருகின்றார்கள். குறிப்பாக இளைஞர்கள் உட்பட ஆட்டோச்சாரதிகள் மற்றும் வழிப்போக்கர்களும் இத்தகைய தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். யாழ்ப்பாணத்தில் படைத்தரப்பினர் தமது பாதுகாப்புக் காரணங்களுக்காக நகரப் பகுதியில் வாகணங்கள் நிறுத்தப்படுவதை கட்டுப்படுத்தியுள்ளார்கள் அதனைத் தொடர்ந்து வர்த்தக நிலையங்கள் மற்றும் வீதியோரங்களில் வாகணங்கள் உந்துருளிகள் ஈருருளிகள் போன்றவற்றை நிரிபவர்கள் தரித்து நிற்பவர்கள் மீது படையினர் கண்மூடித்தனமாக திருக்கை வால் கொண்டு தாக்குவதுடன் வர்தகர்களையும் தாக்கியும் மற்றும் கடுமையாக எச்சரித்தும் வருகின்றார்கள். உந்துருளிளியல் இராணுவத…
-
- 1 reply
- 2.3k views
-
-
ஈழப்பிரச்சினைக்கு சமாதான தீர்வுகாண தவறினால் தமிழீழத்தை இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும் - தொல்.திருமாவளவன் வீரகேசரி நாளேடு ஈழத்தில் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக மனிதாபிமானப் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். ஈழத்தமிழர்களின் பிரச்சினை எந்த வகையிலும் தீர்ந்தபாடில்லை. எனவே, தமிழீழத்தை இந்திய அரசு அங்கீகரித்து அங்கு வாழும் தமிழர்களின் அடிப்படை பிரச்சினையை தீர்க்க முன்வர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித் தார். இலங்கை விவகாரத்தில் தமிழகம் வெகுவாக விழித்தெழுந்துள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று அனைத்து தமிழகத் தலைவர்களும் ஒருமித்து குரல் கொடுத்து வருகின்றனர். எனவே, இதனை மத்திய அரசு …
-
- 0 replies
- 749 views
-
-
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் கடும் மழை வெள்ளத்தினால் 6000 குடும்பங்கள் இடம்பெயர்வு [sunday December 17 2006 08:21:24 PM GMT] [virakesari.lk] நாட்டில் சில பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக அம்பாந்தோட்டை மாவட்டத்தில் சில பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் சுமார் 6000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் இவர்கள் அம்பாந்தோட்டை பிரதேசத்தில் 8 முகாம்களில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, யோக கண்டிய குளம் பெருக்கெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திஸ்ஸமஹாராம பிரதேசத்திலேயே அதிகமான குடும்பங்கள் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. கிரிந்தி ஓயா பிரதேசத்திலுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களை நோ…
-
- 0 replies
- 824 views
-
-
அநுரா பண்டாரநாயக்கவுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபுர்வ வாசஸ்தலமான விசும்பாயவில் இருந்து வெளியேறுமாறு -மகிந்த உத்தரவு [sunday December 17 2006 06:01:13 PM GMT] [tharan] உல்லாசப் பயணத்துறை அமைச்சர் அநுரா பண்டாரநாயக்கவுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபுர்வ வாசஸ்தலமான விசும்பாயவில் இருந்து வெளியேறுமாறு மகிந்த உத்தரவு: தனக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளதாக முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க கொழும்பு ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார். அமைச்சர் அநுரா பண்டாரநாயக்கவுடன் தொடர்பை ஏற்படுத்திய அரச தலைவரின் செயலாளர் லலித் வீரதுங்க, அநுராவை விசும்பாயவில் இருந்து வெளியேறுமாறு தெரிவித்தார். எனினும் அநுரா இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். அரச தலைவராக மகிந்த பதவி…
-
- 0 replies
- 868 views
-
-
குடாநாட்டில் வெள்ளைக் கிறிஸ்துமஸ் [ஞாயிற்றுக்கிழமை, 17 டிசெம்பர் 2006, 19:07 ஈழம்] [க.நித்தியா] யாழ். குடாநாட்டில் அதிகரித்துள்ள பாதுகாப்பு கெடுபிடிகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக இம்முறை வெள்ளை நிற உடைகளை மட்டும் அணிந்து கிறிஸ்துமஸ் கொண்டாடப்படவுள்ளது. ஒவ்வொரு நாளும் மக்கள் செத்துக் கொண்டிருக்கின்றார்கள். எமது அன்பிற்குரியவர்கள் பலர் காணாமல் போயுள்ளார்கள். நாங்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டிருக்கி
-
- 0 replies
- 829 views
-
-
மக்கள் பயக்கெடுதியில் இராணுவத்தின் அடாவடித்தனம். நேற்று முன்தினம் வல்வையில் 40 வயது மதிக்கத்தக்க இரண்டு பிள்ளைகளின் தாய் இராணுவத்தின் சுற்றி வளைப்பில் நிர்வாணமாக்கி ஓட விரட்டப்பட்டு வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார் என்று வல்வையில் இருந்து நமது நிருபர் அறிவித்துள்ளார். கொலை செய்யப்பட்ட பெண்மணி வல்வையின் பழம் பெரும் நாடக நடிகர் திரு பெரியதம்பி அவர்களின் மகள் என்றும் கடற்கரும்புலி சிதம்பரத்தின் சகோதரியார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது மரண விசாரணைகள் நடைபெறுவதாகவும், உடலம் கணவன் பிள்ளைகளிடம் இதுவரை கையளிக்கப்படவில்லை என்றும் அச்செய்தி தெரிவிக்கிறது. நேற்று முன்தினம் வல்வை நடராஜா வீதி இராணுவத்தின் முற்றுகைக்கு உட்படுத்தப்ப…
-
- 0 replies
- 1.5k views
-
-
நியூயோக்கில் ரணில்- ராதிகா- நிருபம்சென் சந்திப்பு [ஞாயிற்றுக்கிழமை, 17 டிசெம்பர் 2006, 18:32 ஈழம்] [க.நித்தியா] சிறுவர்களும் ஆயுத முரண்பாட்டிற்குமான ஜக்கிய நாடுகள் சபையின் சிறப்பு பிரதிநிதி ராதிகா குமாரசுவாமியை மீண்டும் நியமிப்பது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சிறப்பு சந்திப்பொன்றை அமொரிக்காவின் நியூயோக்கில் நடத்தியுள்ளதாக தெரியவருகின்றது. நியூயோர்க் சென்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு இலங்கைக்கான ஜ.நாவின் பிரதிநிதி பிரசாத் காரியவாசம் சிறப்பு விருந்துபசாரம் ஒன்றை வழங்கியுள்ளார். அவரது இல்லத்தில் நடைபெற்ற இந்த விருந்துபசாரத்திற்கு ராதிகா குமாரசுவாமி மற்றும் முன்னாள் இந்திய தூதுவர் நிருபம் சென் ஆகியோர் கலந்து கொண்டனர…
-
- 0 replies
- 1.3k views
-
-
வாகரையில் சூனியப் பிரதேசம் நிறுவப் புலிகள் சர்வதேச அமைப்புகளிடம் யோசனை முன்வைப்பு [sunday December 17 2006 06:45:48 AM GMT] [uthayan.com] வாகரை ஆஸ்பத்திரி மற்றும் பாட சாலையை அண்டிய பகுதிகளை பாது காப்புப் பிரதேசமாக பிரகடனப்படுத்த வேண்டும் என்று விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு, அகதி களுக்கான ஐ.நா. தூதரகம், போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு ஆகியவற்றின் பிரதி நிதிகளைச் சந்தித்துப் பேசிய போதே மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் இந்தக் கோரிக் கையைத் தாம் கொழும் புக்கு எடுத்துச் சென்று அரசாங்கத் தரப்புடன் பேசி பதிலை அறிவிப்பதாக மூன்று அமைப்புகளின் பிரதிநிதிகளும் வாக்குறுதி அளித்தனர். ச…
-
- 0 replies
- 900 views
-
-
விடுதலைப் புலிகளுடன் கண்காணிப்புக்குழு, செஞ்சிலுவை சங்கம் மற்றும் யு.என்.எச்.சி.ஆர் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துராயாடல். தமிழர் தாயகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. சந்திப்பானது விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகத்தில் நேற்றும் நேற்று முன்தினமும் இடம்பெற்றன. நேற்று முன்தினமிரவு விடுதலைப் புலிகளுக்கும் வன்னி மாவட்ட சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது. விடுதலைப் புலிகள் தரப்பில் விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன்…
-
- 0 replies
- 822 views
-
-
இராணுவம் எறிகணைவீச்சு - கதிரவெளியில் 7பொதுமக்கள் பலி. மட்டக்களப்பு கதிரவெளியில் இரண்டு சக்கர உழவு இயந்திரத்தில் பயணம் செய்த 7 பொதுமக்கள் சிறிலங்கா இராணுவத்தினரின் எறிகணைவீச்சிற்கு இலக்காகி உடல்சிதறி பலியாகியுள்ளனர். இந்தக் கோரச்சம்பவம் நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக வாகரை வைத்தியசாலையில் வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி எம்.வரதராஜன் தெரிவிக்கையில் இவர்கள் கொல்லப்பட்ட விடயம் சம்பவம் நடைபெற்ற தினத்தின் போது வெளியான போதிலும் அது உறுதிப்படுத்தவில்லை. இச்சடலங்கள் நேற்றைய தினம் அடக்கம் செய்யப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்துள்ளார். www.sankathi.com
-
- 0 replies
- 736 views
-
-
(ஞாயிற்றுக்கிழமை, 17 டிசெம்பர் 2006, 07:03 ஈழம்) (வவுனியாவிலிருந்து த.சுகுணன்) "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம், தேசியத் தலைவர் வே.பிரபாகரன் மீதும் போராளிகள் மீதும் கொண்டிருந்த பற்றை வார்த்தைகளுக்குள் அடக்கமுடியாது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தான் படித்த விடுதலைத் தத்துவம் அதனூடாக தான் பார்க்கின்ற தமிழீழத்தை தேசியத் தலைவரின் சொல்லிலும் செயலிலும் தான் காண்பதாகவும் அதனால்தான் தலைவரின் பால் கவரப்பட்டு விடுதலைப் போராட்டத்தில் ஆரம்ப காலத்திலேயே தன்னை இணைத்துக் கொண்டதாகவும் அன்ரன் பாலசிங்கம் தெரிவித்து வந்ததாக நடேசன் குறிப்பிட்டார். "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்தை நினைவு கூர்ந்து கருத்து வெளியிட்ட …
-
- 0 replies
- 835 views
-
-
அனைத்து கட்சி பிரதிநிதிகள் சபைக்கு ஆலோசனை வழங்குவதற்கு நியமிக்கப்பட்ட புத்திஜீவிகள் குழு கலைக்கப்படால் மாத்திரமே அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவில் தாங்கள் மீண்டும் இணைந்து கொள்ள முடியம் என ஜே.வி.பி அறிவித்துள்ளது கடந்த பொது தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட சக்திகளின் அபிலாசைகளை பூர்த்தி செய்கின்ற குழுவாக அனைத்து கட்சி பிரதிநிதிகள் சபை அமைந்துள்ளது என ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார் நன்றி : பதிவு
-
- 0 replies
- 792 views
-
-
இலங்கைக்கு மீள அழைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதி ஜானக பெரோவிற்கு பாதுகாப்பு அமைச்சின் துணை செயலளார் பதவி அல்லது அதற்கு இணையான பதவி நிலை ஒன்று வழங்கப்படலாம் என தெரியவந்துள்ளது சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகரான கோட்பாய ராஜபக்ச நீண்டகாலம் இலங்கையில் இல்லாமை மற்றும் விடுதலைப்புலிகளின் தாக்குதல் நுட்பங்கள் குறித்து போதிய அனுபங்களை பெற்றிராமை ஆகியவற்றால் அவருயைட செயல்பாடுகள் வினைத்திறன் மிக்கதாக இல்லை என்று சுட்டிக்காட்டப்ட்டுள்ளது இதனை அடுத்து விடுதலைப்புலிகளின் தாக்குதல் தந்திரோபாயங்கள் குறித்து விசாலாமான அறிவு மற்றும் அனுபவம் கொண்ட ஜானக பெரோரவை வரவழைத்து அவருடைய ஆலோசனைகளை பெறுவதற்கு கோட்டபாய ராஜபக்சவும் மகிந்த ராஜபக்சவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப…
-
- 0 replies
- 891 views
-
-
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் புகைப்பட தொகுப்பு http://www.alaikal.com/index.php?option=co...=92&catid=3
-
- 6 replies
- 3.2k views
-
-
பொதுமக்களை கொலை செய்யும் ஒரு நாட்டிற்கு தமது அரசாங்கம் எந்த விதமான வெடிமருந்துகளையும் வழங்காது என இந்தியாவின் ஆளும் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி தெரிவித்துள்ளார். அண்மையில் சிறீலங்கா கடற்படைக்கு முகவரியிடப்பட்ட வெடிபொருட்கள் சிலவற்றை இந்திய காவல் துறையினர் கைப்பற்றியிருந்தனர் சிறீலங்கா அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக இந்திய நிறுவனம் ஒன்று இந்திய மத்திய அரசாங்கத்தின் அனுமதியுடன் இந்த வெடிமருந்துகளை அனுப்பி வைத்திருந்தமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது நன்றி : பதிவு
-
- 1 reply
- 1.1k views
-
-
மக்களுக்கு விநியோகிப்பதற்காக யாழ்குடாநாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்ட அரிசிவகைகள் பறிமுதல் செய்யப்ட்டு படைமுகாம்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதற்கு பதிலாக காங்கேசன் படைத்தளத்தில் வைக்கப்பட்டிருந்த பழுதடைந்த அரிசி வகைகள் கூட்டுறவுச் சங்கத்தினருக்கு படையினர் வழங்கியுள்ளனர். ஏ-9 பாதை மூடப்பட்டபின் கடல்மார்க்கமாக கொண்டு செல்லப்பட்ட பொருட்கள் பலவற்றையே படையினர் இவ்வாறு பறிமுதல் செய்து பதுக்கி வைத்துள்ளனர். நன்றி : பதிவு
-
- 0 replies
- 983 views
-