ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142722 topics in this forum
-
. போர்நிறுத்த உடன்படிக்கையை ஒரு தரப்பினர் மீறும் போது, அதனை மறு தரப்பினர் மட்டும் பேணுவது சாத்தியமற்ற விடயம் என, தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். . தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளருக்கும், நோர்வேயின் சிறப்பு சமாதான தூதுவருக்கும் மத்தியிலான சந்திப்பு, இன்று முற்பகல் 11:00 மணிக்கு, கிளிநொச்சியில் அமைந்திருக்கும் தமிழீழ அரசியல்துறை நடுவப் பணியகத்தில் இடம்பெற்றது. . பயங்கரவாத தடைச் சட்டத்தை சிறீலங்கா அரசாங்கம் மீளவும் நடைமுறைக்கு கொண்டு வந்து, போர்நிறுத்த உடன்படிக்கையை மீறவில்லை என, நோர்வேயின் சிறப்பு சமாதான தூதுவர் ஜோன் ஹன்சன் போவர் தெரிவித்திருப்பதாக, தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். . திருமலை கல…
-
- 0 replies
- 877 views
-
-
லண்டன் குறைடன் பகுதியில் அமைந்துள்ள தமிழ் பாடசாலையின் நத்தார் விழா நடை பெற்றது. பாடசாலை விழாத்தானே என்று போனால் அங்கு எல்லாவிதமான குடிவகைகளும் அளந்து அளந்து விற்கப்பட்டன. முன்னுக்கு பிள்ளைகளின் நிகழ்ச்சிகள் பின்னுக்கு அமோக மதுபான விற்பனை கடைசியாக டிஸ்கோ லயிற் போட்டு இருட்டுக்குள் ஒரே ஆட்டம் தான். சேலைகளும் சேர்ந்து ஆட்டம்தான். நிகழ்ச்சியின் இறுதியில் அறிவிப்பாளர் மேடைக்கு வந்தார். சொன்னார் மட்டக்களப்பு மக்களின் நல்வாழ்வுக்காக ஒரு சேலை ஏலம் போடப்படும் என்று அதில் வரும் பணம் அவர்களின் நல்வாழ்வுக்காக பயன்படுத்தப்படும் என்று. நல்ல மது ஏற்றிவிட்டு நின்ற ஒருவர் 5 பவுனில் ஆரம்பித்த ஏலத்தை 40 பவுன் வரை கொண்டு சென்று தானே வாங்கினார். மற்றவர்கள் பலத்த கைதட்டல் மட்ட…
-
- 3 replies
- 1.6k views
-
-
ஞாயிறு 10-12-2006 05:46 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] கோணாவிலில் 29 மாவீரர்கள் நினைவாக நினைவுத் தூபி திறப்பு. கிளிநொச்சி கோணாவில் வித்தியாலயத்தில் இதுவரை வீரச்சாவடைந்த 29 மாவீரர்களின் நினைவாக நினைவுத் தூபி நேற்று சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/files/video/silai.wmv -VIDEO-
-
- 0 replies
- 827 views
-
-
பயங்கரவாத தடைச்சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் முடிவெடுத்த 24 மணிநேரத்துக்குள் யாழ் குடாநாட்டில் மட்டும் 13 பொதுமக்கள் கடத்தப்பட்டுள்ளனர். வலிகாமம் கிழக்கில் உள்ள கல்வியங்காடு கட்டப்பிராய் டச் வீதி ஆகிய பகுதிகளைச்சேர்ந்த 9பேர் கடத்தப்பட்டுள்ளனர். கடத்திச்சென்றவர்கள் இராணுவத்தினரும் ஈபிடிபியினரும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அதேஇரவில் வலிகாமம் வடக்கிலிருந்து மேலும் நால்வரை படையினர் கடத்திச்சென்றுள்ளனர். இதுகுறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கடத்தப்பட்டவர்களது உறவினர்கள் முறையிட்டுள்ளனர். இதேவேளை தெல்லிப்பளை அம்பனை பகுதியைச்சேர்ந்த தியாகலிங்கம் சுந்தரலிங்கம் (வயது48) என்ற வர்த்தகரை படையினரின் பாதுகாப்பில் வந்த ஈபிடிபியினர் இந்த மாதம் 3ஆம் திகதி இ ர…
-
- 0 replies
- 759 views
-
-
ஜந்து நாட்களுக்குப்பின் அழுகியநிலையில் சடலம் மீட்பு! மட்டக்களப்பு- ஏறாவ+ர், சேனைக்காட்டுப் பிரதேசத்தில் உருக்குலைந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை மீட்கப்பட்ட இந்தச் சடலம் கிரு~;ணபிள்ளை சகாதேவன் (வயது 58) என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த 29ஆம் திகதி மட்டக்களப்பு வைத்தியசாலைக்குச் செல்வதாகக் கூறி; வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்ற இவர் இதுவரை வீடு திரும்பவில்லை. தற்போது சடலமாகக் மீட்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு பஸ்நிலையத்தில் வந்து இறங்கிய இவர் போதனாவைத்தியசாலையை நோக்கி நடந்தேசென்றார் எனவும் வைத்தியசாலைக்கு செல்லும் வழியிலே கோவிந்தன் வீதியில் கருணாகுழுவினரின் அரசியல்துறை அலுவலகம் இருக்கிறது. அவர்…
-
- 0 replies
- 812 views
-
-
பயங்கரவாதத் தடைச் சட்ட அமுல் குறித்த கண்காணிப்புக் குழுவின் கோரிக்கை நிராகரிப்பு! பயங்கரவாதத் தடைச்சட்டத்தை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவந்திருப்பது குறித்த, தெளிவுபடுத்துமாறு போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு கேட்டிருந்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துவிட்டது. எங்களிடம் விளக்கம் கேட்பதற்கு போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிற்கு எந்தவித உரிமையும் இல்லை. பயங்கரவாதத்தை மறுப்பதற்காக அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. கண்காணிப்புக் குழுவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு விடயங்கள் தொடர்பான அமைச்சர் ஹெக லிய ரம்புக்வெல நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட் டில் தெரிவித்தார். யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் கேள்விகளுக்கும் விசாரணைகளுக்கும் …
-
- 1 reply
- 1k views
-
-
சென்னை: இலங்கை ராணுவத்துக்கு இந்தியாவில் இருந்து வெடி மருந்துகள் அனுப்பப்பட்டது குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி, வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கை கடற்படைக்கு, மகாராஷ்டிர மாநிலம் நாக்பரிலிருந்து வெடிபொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த லாரியை மதுரை அருகே போலீஸார் மடக்கினர். ஆனால் உரிய ஆவணங்களுடன் அந்த வெடிபொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டதால், போலீஸார் அதை அனுமதித்தனர். தூத்துக்குடியிலிருந்து கடல் மார்க்கமாக இந்த வெடிபொருட்கள் இலங்கைக்கு எடுத்துச் செல்லப்படுவதாகவும் போலீஸாரிடம் தெரிவிக்கப்பட்டது. இலங்கையில் உள்ள ரக்சமாவல்சாரா கடற்படை வெடிபொருள் கிடங்கின் முகவரிக்கு இந்த வெடிபொருட்கள் அனுப்பப்பட்டுள்ள…
-
- 1 reply
- 1.6k views
-
-
வாகரையில் புலிகள் படையினர் மீண்டும் கடும் மோதல் இடம்பெற்றுவருகின்றன [Friday December 08 2006 09:57:55 AM GMT] [யாழ் வாணன்] மட்டக்களப்பு வாகரைப்பகுதியில் விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் இடையில் மீண்டும் நேற்றிரவு முதல் கடும் மோதல் இடம்பெற்றுவருகின்றன விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியான வாகரையின் தென்மேற்க்கு பகுதியில் உள்ள கட்டு முறிப்பு பகுதியில் 5கிலோமீற்றர் தூரம் முன்னேறியுள்ளதாக புலிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் தாம் பதில் தாக்குதல் நடத்திவருவதாக இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர் . இன்று காலையில் அந்த பகுதியில் ஷெல் தாக்குதல் சத்தங்கள் கேட்டுகொண்டிருப்பதாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன
-
- 12 replies
- 4.2k views
-
-
இந்தியாவில் இருந்து யாழ்குடாநாட்டுக்கு அத்தியாவசிய பொருட்கள். யாழ் குடாநாட்டிற்கான அத்தியாவசிய உணவுப் பொருட்களை இந்தியாவில் இருந்து தருவிப்பதற்கான ஏற்பாடுகள் பூர்தி அடைந்துள்ளதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது தற்போது தமிழ் நாட்டில் உள்ள துறை முகத்தில் தரித்துள்ள கப்பலில் 10 000 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் ஏற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அடுத்த வாரம் இந்த கப்பல் காங்கேசந்துறை துறைமுகத்தை சென்றடையும் என ஸ்ரீலங்கா அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. www.pathivu.com
-
- 1 reply
- 1.2k views
-
-
கருணா ஒட்டுக் கூலிக்குழுவின் சிறுவர் துஷ்பிரயோகம் அம்பலம். சிறீலங்க அரச படைகளின் ஆதரவுடன் கருணா குழு எனப்படும் துணை ஆயுதக் குழு கிழக்கு மாகாணத்தில் நூற்றுக்கணக்கான சிறுவர்களை படையணியில் சேர்த்த வரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்காவை தளமாக கொண்டுள்ள சர்வதேச உறவுகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது சர்வதேச உறவுகள் நிலையத்தின் வெளிநாட்டு கொள்கைகள் தொடர்பான ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது கிழக்கு மாகாணத்தில் சிறுவர்களை படையணியில் சேர்க்கும் கருணா குழுவின் செயல்பாடுகளுக்கு ஸ்ரீலங்கா அரச படைகள் துணை புரிவதாகவும் சில சந்தர்ப்பங்களில் நேரடியாக சிறுவர்களை கடத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகமும் அந்த அறிகையில் சுட்…
-
- 0 replies
- 1.2k views
-
-
விடுதலைப் புலிகள் மட்டுமே ஈழத் தமிழர்களுக்குப் பாதுகாப்பு" - கனிமொழி இலங்கையில் போர் மேகங்கள் மீண்டும் சூழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அப்பாவி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதப் பந்தலில் உட்கார்ந்தார் கனிமொழி. தமிழக அரசியலில் மீண்டும் ஓர் பரபரப்பு. முதல்வர் கலைஞரின் மகளை, அவரது சி.ஐ.டி. காலனி வீட்டில் சந்தித்தோம். ஈழப் பிரச்னை தொடர்பாக பல விஷயங்களை நுனிப்புல் மேயாமல் அழகாகவும் அதேசமயம் ஆழமாகவும் அலசினார். எதையும் தெளிவாகப் பேசுகிறார். சற்று ஆத்திரமூட்டும் கேள்விகளுக்கும் அமைதியாகப் பதில் தந்தது, கனிமொழியின் பக்குவத்தைக் காட்டியது. ராஜிவ் படுகொலைக்குப் பிறகு, இலங்கைப் பிரச்னையில் இருந்த அனுதாபம் போய், அங்கே பிரச்னை தலைதூக்கும்போத…
-
- 1 reply
- 1.8k views
-
-
(வியாழக்கிழமை, 7 டிசெம்பர் 2006) ஜனனி இலங்கைக்கான வத்திக்கானின் பிரதிநிதி அருட்தந்தை மாரியோ சானாரி நேற்று புதன்கிழமை யாழ். சென்று, அங்கு தற்போதுள்ள நிலைமையையும் ஏ-9 வீதி மூடப்பட்ட பின்னர் மக்கள் அனுபவிக்கும் இன்னல்களையும் அவர் நேரில் கண்டறிந்தார். அமெரிக்கத் தூதரகத்தைச் சேர்ந்த நான்கு அதிகாரிகளும் நிலைமையை ஆய்வு செய்ய யாழ்ப்பாணம் சென்றனர். போப் ஆண்டவரின் சிறப்புத் தூதுவருமான அருட்தந்தை மாரியோ சானாரி, யு.என்.எச்.சி.ஆர் ஏற்பாடு செய்த சிறப்பு விமானம் மூலம் யாழ்ப்பாணம் சென்றார். அங்கு அவர் யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகத்தை சந்தித்து பேசினார். சிறிலங்கா கடற்படையினரின் விசாரணைக்குப் பின்னர் காணாமல் போன அருட்திரு ஜிம் பிறவுன் மற்றும் அவரது உதவியாளர் குறித்து அவர் விசாரித்தார் எ…
-
- 10 replies
- 3k views
-
-
பிரித்தானியாவில் அண்மையில் உள்ளுர் அமைச்சு விடுத்த அறிவிப்பில் சிறீலங்காவை ஆபதில்லாத நாடுகள் பட்டியலில் இருந்து நீக்க முடிவுசெய்துள்ளதாக அறியமுடிகிறது. எதிர்வரும் 12ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் இவ்விடயம் 13ம் திகதி முதல் நடைமுறையில் வரலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.ஆபத்தில் இல்லாத பட்டியலில் நாடுகளில் இருந்து சிறீலங்காவை நீக்குவதானது அரசியல் தஞ்கம் கோரும், அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்களின் எதிர்காலத்தை; தீர்மானிக்கும் என நம்பப்படுகிறது http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 1.1k views
-
-
4 மிக ரக விமானங்கள் இலங்கை அரசு கொள்வனவு செய்ய இருக்கிறது இலங்கை அரசு எதிர்கால தேவைக்கு 4 MIG-27 ரக யுத்த விமானங்கள் உக்ரேயன நாட்டில் இருந்து வாங்க இருப்பதாக அரசாங்கள் பாதுகாப்பு குறித்து பேசவல்ல அமைச்சர் ஷெகலிய தெரிவித்தார். இலங்கையில் வடகிழக்கு பயங்கரவாத நடவெடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் விமானங்கள் அவசிமாகின்றன ஏற்கனவே நான்கு விமானங்கள் தற்போது இந்நடவெடிக்கையில் ஈடுபடுத்தபடடுவருகிறது.இந்த வருட 2007 க்குரிய செலவு திட்டத்தில் 45% சதவீதம் 139 பில்லியன் ரூபாய்கள் பாதுகாப்பு செலவினங்களுக்கு பயன்படுத்தபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது -வீரகேசரி
-
- 0 replies
- 872 views
-
-
உலக நாடுகளின் படைப்பலப்படுத்தல்களை முக்கியமாக அதன் புவியியல் சார்புநிலைகள் தான் தீர்மானிக்கின்றன. பின்னர் புவியியல் அமைப்பு மற்றும் களத்தின் தன்மை கொண்டு வடிவமைக்கப்படும் படைக் கட்டமைப்புக்களே போரில் முன்னிலை வகிக்கின்றன. அதாவது சில நாடுகளில் தரைப்படை வலிமையுள்ளதாகவும், சிலவற்றில் கடற்படை வலுவுள்ளதாகவும், மேலும் சிலவற்றில் விமானப்படை வலுவுள்ளதாகவும் பேணப்படுகின்றன. பெரும்பகுதியான எல்லைகள் நிலப்பரப்பினால் சூழப்பட்ட ஜேர்மன் இரண்டாம் உலகப்போரின் போது தனது தரைப்படையையும், விமானப்படையையும் தான் அதிகளவில் பலப்படுத்தியது. கடற்படையை பதுங்கித்தாக்குதல் நடவடிக்கைக்கே பெருமளவில் பயன்படுத்தியது. இறுதியில் ஜேர்மனியின் தோல்விக்கான காரணிகளில் பலவீனமான அதன் கடற்படையும் சேர்ந்து கொண்…
-
- 0 replies
- 1.3k views
-
-
கடந்த சில வாரங்களாக சிறிலங்கா படையினர் வாகைரையை ஆக்கிரமிக்கும் முயற்சியை தீவிரப்படுத்தி உள்ளனர். ஏ15 பாதையை மூடி வாகரைப் பிரதேசத்தில் வாழும் மக்களை பட்டினி போட்டும், தொடர்ச்சியான எறிகணை, விமானக் குண்டு வீச்சுக்களில் ஈடுபட்டும், அதே நேரம் மெதுமெதுமாகவ ஊடுருவுவதுமாக சிறிலங்கா படையினர் தமது ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். முகமாலை, கிளாலி போன்ற இடங்களில் சிறிலங்கா படையினருக்கு ஏற்பட்ட பேரழிவை அடுத்து, வட போர்முனையில் தன்னுடைய போர்திட்டத்தை சிறிலங்கா அரசு ஒத்தி வைத்துள்ளது. ஆயினும் வட போர்முனையில் ஏற்பட்ட தோல்வியை சமன் செய்யும் விதமாக, தனக்கு சாதகம் என்று கருதும் கிழக்குப் போர்முனையில் வெற்றி ஒன்றை பெறுவதற்கு சிறிலங்கா அரசு பெரும் ஆவலாக உள்ளது. இதன் மூலம…
-
- 2 replies
- 1.8k views
-
-
இராமாயண இதிகாசம் - ஆரிய, திராவிடப் போராட்டத்தின் வெளிப்பாடு என்று, தந்தை பெரியார் கூறி வந்தார். அதே கருத்தை தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கமும், ஈழத் தமிழர்களிடையே பரப்பி வருகிறது. இக்கருத்தை மய்யமாகக் கொண்டு தமிழ் ஈழத்தில் விடுதலைப்புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான ‘புலிகளின் குரல்’, ‘இலங்கை மண்’ என்ற தொடர் நாடகத்தை - 53 வாரங்கள் ஞாயிற்றுக் கிழமை தோறும் ஒலிபரப்பியது. கலை இலக்கியவாதியும், பகுத்தறிவாளருமான பொன்.கணேசமூர்த்தி எழுதி இயக்கிய இந்த நாடகத் தொடர், ஈழத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. சில பழமை விரும்பிகள், ராமாயணத்தின் பாதுகாவலர்கள் - இதற்கு எதிர்ப்புக் காட்டவும் தயங்கவில்லை. ஆனாலும், தமிழர் பண்பாட்டை சிதைத்த ஆரியத்தை அம்பலப்படுத்திய இந்த நாடகத்தைத் தொடர்ந்து பா…
-
- 0 replies
- 1k views
-
-
விடுதலைப்புலிகளுக்கும் அரசிற்கும் இணைத்தலைமை நாடுகள் அழுத்தம் கொடுக்கவேண்டும் என யாழ் ஆயர் வேண்டுகோள். அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இணைத்தலைமை நாடுகள் அழுத்தங்களை பிரயொகிக்கவேண்டும் என யாழ்ப்பாண ஆயர் அதிவணக்கத்துக்குரிய தோமஸ் சௌந்தரநாயகம் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் செய்த அமெரிக்கதூதர் ரொபட் ஓ பிளெக்கிடம் இந்த கோரிக்கையை அவர் விடுத்தார். தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் இதுவரைக்காலமும் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளி;ல் இணங்கிக்கொள்ளப்பட்ட விடயங்களை அரசாங்கம் உரிய முறையில் செயற்படுத்தவேண்டும். இந்தவிடயத்தில் இணைத்தலைமை நாடுகள் மென்மைப்போக்கை கலைத்து இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தத்தை கொடுக்கவேண…
-
- 0 replies
- 971 views
-
-
உக்ரேனிடமிருந்து நான்கு மிக் 27 தாக்குதல் விமானங்கள் கொள்வனவு. ஸ்ரீலங்கா அரசாங்கம் உக்ரேய் நாட்டில் இருந்து மிக் 27 ரக மிகை ஒலி தாக்குதல் விமானங்கள் நான்கை கொள்வனவு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான அமைச்சரவை பேச்சாளர் ஹெகலிய ரம்புகவெல இந்த தகவலை வெளியிட்டுள்ளார். 9.8 மில்லியன் டொலர் பெறுமதியான விமானங்களை தமது அரசாங்கம் கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாக ஹெகலிய ரம்புவெல தெரிவித்துள்ளார். ஊக்ரெய் நாட்டில் இருந்து இந்த விமானங்கள் விரைவில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அந்த விமானங்களை இலங்கையை வந்தடைந்தவுடன் விடுதலைப்புலிகள் மீ…
-
- 1 reply
- 777 views
-
-
கொழும்பு புறநகர் பகுதியில் மர்ம வாயு கசிவு. கொழும்பு புறநகர் பகுதியில் அமைந்துள்ள மஞ்சி பிஸ்கட் - றிற்ஸ்பரி சொக்லட் தொழிற்சாலைகளில் இன்று திடிரென ஏற்பட்ட எரிவாயு கசிவை தொடர்ந்து பாதுகாப்பு முன்னேற்பாடாக அப்பிரதேச மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக அங்கிருந்த கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை சிறீலங்கா காவல்துறையினர் இவ் வாயுகசிவு ஏற்பட்ட காரணத்தை கண்டறிய ஈடுபட்டுள்ளதாக அறியமுடிகிறது. www.pathivu.com
-
- 0 replies
- 954 views
-
-
சிங்கள காடையர்களால் தமிழ் - முஸ்லீம் சமூகங்களின் நிலங்கள் அபகரிப்பு பாலாவிப் பகுதியில், தமிழ் பேசும் முஸ்லீம் மக்களுக்கு சொந்தமான காணிகளை சிங்கள காடையர்கள் ஆக்கிரமித்து தற்போது குடியேற்றங்களை அமைத்து வருகின்றனர். இதற்கு சிறீலங்கா காவல்துறையினர் முழு அளவில் ஒத்துழைப்பு வழங்கிவருவதாக முஸ்லீம் சமூக தலைவர்கள் குற்றம் சுமத்தியுள்ளார்கள். இதேவேளை இவ் ஆக்கிரமிப்புக்கெதிராக இன்று புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக, ஜும்மா தொழுகையை தொடர்ந்து முஸ்லீம் மக்களால் பெரும் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. இவ் ஆர்ப்பாட்டத்தில் பெருமளவிலான முஸ்லீம் மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. நன்றி: பதிவு.கொம் (http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&)
-
- 0 replies
- 839 views
-
-
ரவிராஜ் கொலையை கண்டித்த யுத்த விரோதிகள் கோதாபய மீதான கொலைமுயற்சியை ஏன் கண்டிக்கவில்லை அளுத்கமகே கேள்வி ரவிராஜின் படுகொலையை `வெட்கம் வெட்கமென' கண்டித்த யுத்த விரோதிகள், கோதாபய ராஜபக்ஷ மீதான கொலை முயற்சியை ஏன் கண்டிக்கவில்லையென பிரதியமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பாதுகாப்பு மற்றும் உட்துறை அமைச்சு மீதான நிதியொதுக்கீட்டு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறிய அவர் மேலும் தெரிவித்ததாவது; "தமிழ் மக்களுக்கு இந்த நாட்டில் எந்த பிரச்சினையும் இல்லையென யாராவது கூறுவார்களானால் அதனை நான் ஏற்க மாட்டேன். தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் உண்டு ஆனால், அதற்கு யுத்தம் தான் தீர்வில்லை. எனவே, புலிகள் சமாதான…
-
- 9 replies
- 2k views
-
-
இலங்கைக்கு உணவுப்பொருட்கள் அனுப்புவதற்காக இந்தியக் கப்பல்களை வழங்கவேண்டுமென்று பலஅறிஞர்களும் புத்திஜீவிகளும் வெளிநாட்டு ராஜதந்திரிகளும் கோரிக்கை விடுத்தவையலல்லோ. தன்ர பங்குக்கும் ஏதாவது செய்யவேண்டுமென்று நினைச்ச அமைச்சரும் ஈபிடிபி செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவா(ங்கு)னந்தா இந்தியாவுக்கு ஓடிப்போய் சாமான்களோட பெரிய கப்பலை என்னட்ட ஒப்படையுங்கோ நான்பத்திரமா கொண்டுபோய் குடாநாட்டு மக்களிட்ட சேர்க்கிறன் எண்டு கெஞ்சிக்கூத்தாடியிருக்கிறா
-
- 4 replies
- 2.3k views
-
-
நிபந்தனைகளில்லாமல் ஏ-9, ஏ-15 பாதைகளைத் திறக்க விடுதலைப் புலிகள் வேண்டுகோள். மனிதாபிமான அடிப்படையில் யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் ஏ-9 பாதையையும் வாகரைக்குச் செல்லும் ஏ-15 பாதையையும் நிபந்தனைகளின்றித் திறக்க வேண்டும் என தமிழீழ விடுதலைப் புலிகள் நோர்வேயிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சி சென்றுள்ள இலங்கைக்கான நோர்வேயின் சிறப்பு சமாதானத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயரிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமாதானத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றிப் பேசவும் நடைமுறையில் உள்ள போர்நிறுத்த உடன்படிக்கையில் சிறிலங்கா அரசும் விடுதலைப் புலிகளும் எத்தகைய கடப்பாட்டைக் கொண்டுள்ளன என்பதை அறிந்து கொள்ளவும் ஜோன் ஹன்சன் பௌயர் இலங்கைக்குப் பயணம் …
-
- 1 reply
- 1k views
-
-
தலைவர் பிரபாகரன் 27112006"போர்நிறுத்த ஒப்பந்தம் செத்துச் செயலிழந்துபோய்க் கிடக்கிறது. ஒப்பந்தம் கிழிக்கப்படாமலேயே உக்கிப்போன தாளாகி உருக்குலைந்து கிடக்கிறது" இதற்கு பிறகு போர்நிறுத்த உடன்படிக்கையை பற்றி கதைப்பது நல்லதுக்கல்ல தமிழ் மக்களையும் முட்டால் ஆக்கிறது மாதிரியிருக்கு இளந்திரையன் 26112006ஏ-9 பாதையை சிறிலங்கா அரசாங்கம் எதிர்வரும் வாரங்களில் திறக்காவிட்டால் நடவடிக்கை எடுப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். சு.ப.தமிழ்ச்செல்வன் 08122006போர்நிறுத்த உடன்படிக்கையை முற்றாக மீறி நடக்கும் சிறிலங்கா அரசின் செயற்பாட்டை போர்நிறுத்த உடன்படிக்கைக்கு ஆதரவான நோர்வேக் குழுவினர்இ இலங்க…
-
- 0 replies
- 783 views
-