ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142712 topics in this forum
-
புலிகளின் தலைவர்களுக்காக வாகனம் கடத்திய வைத்திய கலாநிதி [05 - December - 2006] [Font Size - A - A - A]சிங்கள இனத்தவரான வைத்தியக் கலாநிதி ஒருவரையும் மற்றும் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரையும் விடுதலைப் புலிகள் அமைப்பின் உயர் மட்டத் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஜா-எல பிரதேசத்தில் வைத்து விசேட பொலிஸ் குழுவைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் கைது செய்துள்ளனர். புலிகள் இயக்கத்துக்கு பாதுகாப்புத் துறை சம்பந்தப்பட்ட உளவுத் தகவல்களை வழங்கியவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள இராணுவ மேஜர் ஒருவரிடம் விசேட புலனாய்வு விசாரணைக் குழுவினர் மேற்கொண்டு வந்த தீவிர விசாரணைகளின் போது அவரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களி…
-
- 0 replies
- 1.6k views
-
-
கொழும்பில் புதிய வீதி விதிமுறைகள் [செவ்வாய்க்கிழமை, 5 டிசெம்பர் 2006, 16:27 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா தலைநகர் கொழும்பில் வீதி விதிமுறைகள் மாற்றப்பட்டு, புதிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. புதிய விதிமுறையின் கீழ் பல வீதிகள் ஒருவழிப் பாதையாகக்கப்பட்டுள்ளன. கொழும்பில் அண்மையில் நடந்த குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முதற்கட்டமாக 10 வீதிகள் ஒரு வழிப்பாதையாகின்றன. இதன் மூலம் பாதுகாப்புச் சோதனைகள் இலகுவாகும். வாகனங்களையும் பயணிகளையும் எளிதாகச் சோதனையிட முடியும் என்று காவல்துறை தெரிவித்தது. கோத்தபாய ராஜபக்சவைக் குறித்து நடந்த குண்டுத் தாக்குதலுக்கு கொழும்பு நகர பாதுகாப்பின…
-
- 0 replies
- 1.3k views
-
-
கையடக்க தொலைபேசி இணைப்புகள் வழங்கப்படுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல். இலகுவாக கையடக்க தொலைபேசி இணைப்புகள் வழங்கப்படுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். பணத்தை செலுத்துவதன் மூலம் எவரும் கையடக்க தொலைபேசி இணைப்புகளை பெற்றுக் கொள்ள முடியும். இவ்வாறான இணைப்புகளின் ஊடாக தீவிரவாதிகள் இலகுவாக தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதன் காரணமாக கையடக்க தொலைபேசி இணைப்புகளை பெறுவோரின் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டியது கட்டாயமாக்கப்பட வேண்டியது அவசியம் என கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் சரத் லூகொட தெரிவித்தார். அண்மையில் பாதுகாப்புச் செயலாளர் இலக்கு வைத்த…
-
- 6 replies
- 2k views
-
-
வாகரையை நோக்கி சிறிலங்காப் படையினர் முன்னேற முயற்சி [திங்கட்கிழமை, 4 டிசெம்பர் 2006, 17:27 ஈழம்] [மட்டக்களப்பு நிருபர்] மட்டக்களப்பு வாகரைப் பகுதியை நோக்கி டாங்கிகள், கவச வாகனங்கள் சகிதமாக சிறிலங்காப் படையினர் மேற்கொண்டுள்ள படை நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர தாக்குதலை நடத்தி வருகின்றனர். வாகரைப் பிரதேசத்தின் மேற்கே உள்ள காட்டுப்பகுதியை அண்டிய கட்டுமுறிவுக்கு ஊடாக வாகரையை ஆக்கிரமிக்கும் நோக்கில் படையினர் இன்று திங்கட்கிழமை காலை முதல் டாங்கிகள், கவச வாகனங்கள் சகிதமாக நகர்வை மேற்கொண்டனர். இந்நகர்வு முயற்சி செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருகோணமடு, கரடிக்குளம் படை முகாம்களிலிருந்து படையினர் இந்நகர்வை ஆரம்பி…
-
- 9 replies
- 3.2k views
-
-
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி புலிகளைத் தவறாக வழிநடத்தினார் புதுடில்லியில் வைகோ. குற்றச்சாட்டு` இலங்கையில் சமாதானத்தை உருவாக்கும் தமது பணியில், அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி விடுதலைப் புலிகள் இயக் கத்தை தவறான பாதை யில் வழிநடத்தினார். இவ்வாறு கூறியுள்ளார் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகச் செயலாளர் வைகோ. புதுடில்லி வந்துள்ள வைகோ. அங்குள்ள செய்தி ஏஜென்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். ராஜீவ் காந்தி தவறிழைத்தார் என்பதனை நான் உறுதியாகக் கூறுகிறேன். அதனை நான் மாற்றுவதற்கில்லை. 1987ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு முன்னர், பிரதமர் ராஜீவ் காந்தி வேண்டுமென்றே விடுதலைப் புலிகளைத் தவறாக வழிநடத்தினார். இதில…
-
- 6 replies
- 2k views
-
-
யாழ்ப்பாணம் குடாக்கடலில் மட்டுப்படுத்தப்பட்ட நேரத்தில் மீன்பிடிப்பதற்கு மீனவர்களுக்கு அனுமதி - பண்டார வன்னியன் - யாழ்.குடாக்கடலில் மீன்பிடிப்பதற்கான அனுமதி நேற்றுத் தொடக்கம் படையினரால் வழங்கப்பட்டுள்ளது. மட்டுப்படுத்தப்பட்ட நேரத்தில் மட்டும் மீன்பிடிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குருநகர் கடற்றொழிலாளர்கள் சங்கங்களின் இணையத்தினர் குருநகர் இறங்குதுறைப் படை அதிகாரியுடன் நடத்திய கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த அனுமதி மீனவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த அனுமதியைத் தொடர்ந்து நேற்று குருநகரைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் நூறு பேர் 25 வள்ளங்களில் மீன்பிடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். நேற்றுக்காலை 8.00மணி தொடக்கம் முற்பகல் 11.00மணிவரை மட்டுமே மட்டுப்ப…
-
- 0 replies
- 709 views
-
-
இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொடரும் மனிதவதை ................................................................................ ......... 2005-2006 கல்வியாண்டுக்கான புதுமுக மாணவர்களினை சிரேஸ்ர மாணவர்கள் ராக்கிங் என்ற பேரில் மனித வதைக்கு உட்படுத்துகின்ற செயற்பாடு இடம் பெற்றுக் கொண்டு இருக்கின்றது. இதனைத் தடுப்பதற்கு கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகம் எந்த விதத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என புதுமுக மாணவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
-
- 0 replies
- 1k views
-
-
'மாவீரர் தின உரை - 2006 - ஒரு பார்வை" -சபேசன் (அவுஸ்திரேலியா)- தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில், ஒரு முக்கிய திருப்புமுனையில் தமிழினம் நிற்கின்ற இவ்வேளையில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் மாவீரர் தினப்பேருரை வழங்கவிருந்த செய்தியை ஈழத்தமிழினம் மட்டுமல்லாது, சர்வதேசமும் ஆர்வத்தோடு எதிர்நோக்கியிருந்தது. தேசியத் தலைவரின் மாவீரர் தினப்பேருரை வெளிவந்ததையடுத்து, அது குறித்துப் பல தரப்பினர்களிடமிருந்து பலவிதமான கருத்துக்கள் இப்போது வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. நாமும் எமது வழமையைப் பேணி, தேசியத் தலைவரின் மாவீரர் தின உரை குறித்த எமது- பார்வையைத் தர விழைகின்றோம். இந்த உலகத்தைத் துறந்து, இளமையின் இனிமையான உணர்வுகளைத் துறந்து, சாதாரண வாழ்…
-
- 1 reply
- 1k views
-
-
கொழும்பு – வெள்ளவத்தையில் கடந்தவாரம் இரவு தமிழ் பெண் பத்திரிகையாளர் ஒருவரும் அவருடன் தங்கியிருந்த வேறொரு பெண்ணும் விடுதலைப்புலி உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பத்திரிகையாளராகச்செயற்பட்ட
-
- 0 replies
- 1.1k views
-
-
ராமநாதபுரம்: இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு 6 மாதத்தில் தீர்வு காண வேண்டும் என அந்நாட்டு அரசுக்கு இந்தியா கெடு விதிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழர்களின் பிரச்சினை குறித்து சட்டசபையில் விவாதம் நடைபெற வேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்தும் பேச வேண்டும். இங்கு விவாதிக்காமல் அப்பிரச்சிøயை வேறு எங்குமே விவாதிக்க முடியாது. சமீபத்தில் கடலூருக்கு வந்த அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டன் கூட, அயர்லாந்து, போஸ்னியா பிரச்சினைகளுக்கு அமைதித் தீர்வு காணப்பட்டது போல இலங்கைப் பிரச்சினைக்கும் அமைதியான, சுமூக தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவித்தார். இதை…
-
- 8 replies
- 1.9k views
-
-
இனப்பிரச்சினை விவகாரத்தில், சமாதானத்திற்கான கதவை இறுக்கிப் பூட்டிவிடுவதற்கு அரசாங்கம் தன்னாலான சகல முயற்சிகளையும் மிக வேகமாக மேற்கொண்டு வருகிறது. அது விடயத்தில் அரசிடம் வேகம் மட்டுமின்றி தீவிரமும் அளவு மீறிய ஆவேசமும் காணப்படுகின்றன. சமாதானப் பேச்சுகளின் அனுசரணையாளரான நோர்வேயின் விசேட பிரதிநிதி ஹன்சன் போவரின் உத்தேச கிளிநொச்சி விஜயத்தைத் தடுத்து வைத்திருக்கின்றது அரசு. அனுசரணைப் பணிக்கு நோர்வேயை அழைத்தது அரசுதான். விடுதலைப்புலிகள் அல்லர்; உண்மையே. அந்த அதிகாரத்தனத்துடன், இறுமாப்புடன் அனுசரணையாளர் விடயத்தில் அரசாங்கம் தலையிட்டிருக்கின்றது. இது எந்த வகையிலும், என்ன காரணம் கொண்டும் ஏற்புடையதல்ல. அரசுக்கு விருப்பமானால் மட்டும் வருவதற்கும் போ என்றால் போவதற்கும் அனுசரணைய…
-
- 0 replies
- 1.3k views
-
-
யாழில் உயர்பாதுகாப்பு வலயம் எக்காரணம் கொண்டு நீக்கப்பட மாட்டாது:- கட்டளை தளபதி சந்திரசிறீ. பலாலி கூட்டுப்படை தளத்தில், நேற்று முன்தினம் படை உயர்அதிகாரிகளுடனான உள்ளக சந்திப்பில் குடாநாட்டில் உள்ள அதியுயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுவது நாட்டின் இறைமைக்கும் தேசிய பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே நேற்று யாழ்நகர் குருநகர் படை முகாமில், பிரதேச கடற்தொழிலாளர் சங்க உறுப்பினரகளுடன் மேற்கொண்ட சந்திப்பில் கரையோர காவல்பணிகளில் பொதுமக்களை ஈடுபட வேண்டும் என வற்புறுத்தியுள்ளனர். எனினும் அம்மக்கள் எக்காரணம் கொண்டும் சிறீலங்கா படையினருடன் இணைந்து காவல்கடமையில் ஈடுபடபோவதில்லை என தெரிவித்துள்ளார்கள். www.pathivu.com
-
- 1 reply
- 869 views
-
-
சிறீலங்கா அரச ஆங்கில பத்திரிகையாகிய டெயிலி நியூஸ்க்கு அமெரிக்க தூதுவரிடம் பெற்ற நேர்காணலில் அமெரிக்காவில் நடமுறையில் உள்ள பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதற்கான நாட்டுப்பற்றாளர் (Patriot Act) சட்டம் போன்ற ஒன்றை சிறீலங்காவில் கொண்டுவருவதை பற்றிக்கேட்ட போது பதிலளித்த அமெரிக்க தூதுவர் அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக தாங்கள் இச்சட்டத்தை பாவிப்பதை ஏற்றுக்கொண்ட அவர் அதேசமயம் மானிட சுதந்திரம் எனும் மகத்தான விடயத்தை தாங்கள் போற்றிப்பாதுகாப்பதாக கூறினார். இலங்கையில் ஏற்கனவே மானிட சுதந்திரம், சிக்கலுக்குள்ளாகியிருக்கிற
-
- 0 replies
- 889 views
-
-
விடுதலைப் புலிகளை தடை செய்தால் முழுமையான போர் வெடிக்கும்: த.தே.கூ. எச்சரிக்கை. தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்தால் முழுமையான போர் வெடிக்கும் என்று சிறிலங்கா அரசுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. விடுதலைப் புலிகளை தடை செய்வது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவது தொடர்பாக வெளிவந்த செய்திகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் கருத்து கேட்கப்பட்டபோது அவர் கூறியதாவது: விடுதலைப் புலிகளை அரசாங்கம் தடை செய்யுமானால் பேச்சுவார்த்தை மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் சந்தர்ப்பம் இல்லாது போய்விடும். எதிர்காலத்தில் முழுமையான யுத்தம் ஏற்பட்டு நாடு அழிவுப்பாதைக்கே செல்லும். …
-
- 0 replies
- 733 views
-
-
விடுதலைப்புலிகளுக்கு நாம் உதவுவது என்பது அப்பட்டமான பொய் - நோர்வே வெளிவிவகார அமைச்சு அறிக்கை. http://www.aftenposten.no/english/local/article1550551.ece
-
- 6 replies
- 2.1k views
-
-
நாட்டை இரண்டாகப் பிளவுபடுத்த சர்வதேசம் முயற்சி - தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் நாட்டை இரண்டாக பிளவுப்படுத்தும் சர்வதேச முயற்சிகள் காணப்படுவதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவிக்கின்றது. போர் நிறுத்த உடன்படிக்கையை கடைபிடித்தல், அதி உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுதல், ஏ9 வீதியை திறத்தல் போன்ற சர்வதேச அழுத்தங்கள் மூலம் இது தெளிவாக தெரிவதாக அதன் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். இந்தியா ஊடாக இதனை மேற்கொள்ள சர்வதேச சமூகம் முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் குணதாச அமரசேகர இந்த கருத்துக்களை கூறினார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 2 replies
- 1.3k views
-
-
இலங்கை தமிழர்களின் பிரச்சினைகு ஒரே தீர்வு தமிழீழம் - வை.கோபாலசாமி இலங்கை தமிழர்களின் பிரச்சினைகு ஒரே தீர்வு தமிழீழம் என தாம் பல வருடங்களாக தொடர்ந்து கூறிவருவதாக இந்தியாவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின பொதுச் செயலாளர் வை.கோபாலசாமி தெரிவித்துள்ளார். இதன் மூலமே இலங்கை தமிழ் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்படும் என்ற நிலைப்பாட்டில் தாம் உறுதியாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் இந்திய தொலைக்காட்சி ஒன்றிக்கு வழங்கிய விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இதனை கூறியுள்ளார். இந்தியாவை தவிர ஏனைய சர்வதேச நாடுகள் பலவற்றில் ஆயுத போராட்டங்கள் மூலமே விடுதலையை அவர்கள் பெற்றுள்ளனர். கியூபா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் இவ்வாறே ஆயுதப்போராட்டம் மூலமே தமது …
-
- 1 reply
- 1.1k views
-
-
ஓமந்தையில் படையினரின் நகர்வு முயற்சி முறியடிப்பு. வவுனியா ஓமந்தைப் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட நகர்வு முயற்சியை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்தனர். ஓமந்தை போக்குவரத்துப் பாதையை இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2 மணியளவில் மூடிய படையினர், இந்நகர்வு முயற்சியினை மேற்கொண்டனர். விடுதலைப் புலிகளின் தீவிர எதிர்த்தாக்குதலை அடுத்து படையினர் தமது முயற்சியினை கைவிட்டு பின்வாங்கிச் சென்றனர். www.puthinam.com
-
- 0 replies
- 962 views
-
-
அம்பாறையில் சிறப்பு அதிரடிப்படையினரின் முன்னேற்ற முயற்சி முறியடிப்பு: 4 அதிரடிப்படையினர் பலி- 8 பேர் காயம். அம்பாறையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்ட முன்னேற்ற முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டதில் சிறப்பு அதிரடிப்படையினர் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். எட்டுப் பேர் படுகாயமடைந்துள்ளனர். கஞ்சிக்குடிச்சாறு பிரதேசம் நோக்கி இன்று திங்கட்கிழமை காலை 7.30 மணியளவில் காஞ்சிரங்குடா, தாண்டியடி சிறப்பு அதிரடிப்படையினர் பாரிய அளவிலான முன்னேற்ற முயற்சியினை மேற்கொண்டனர். எறிகணைச் சூட்டாதரவுடன் முன்னேற முற்பட்ட சிறப்பு அதிரடிப்படையினரின் நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகள் பதில் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் சிறப்பு அதிரடி…
-
- 3 replies
- 2k views
-
-
இந்தியாவின் உதவியுடன் காங்கேசன்துறை துறைமுகம் புனரமைப்பு - பண்டார வன்னியன் ளுரனெயலஇ 03 னுநஉநஅடிநச 2006 10:51 காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைக்க இந்திய அரசு சுமார் 230 கோடி ரூபாவை சிறிலங்கா அரசுக்கு வழங்கவுள்ளது. இந்திய அரசின் உதவியுடன் காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைக்க சிறிலங்கா அரசு தீர்மானித்துள்ளது. இதற்கு சுமார் 236 கோடி ரூபா செலவாகும் எனவும் மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. இதற்கமைய இந்திய அரசு 230 கோடி ரூபாவை வழங்க முன்வந்துள்ளது. மிகுதியான 6 கோடி ரூபாவை சிறிலங்கா அரசு ஒதுக்கீடு செய்யவுள்ளது. இத்துறை முகத்தை மூன்று கட்டங்களாக அபிவிருத்தி செய்யவுள்ளதுடன் இதன் அபிவிருத்தி புனரமைப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் 2008 ஆம் வருடத்தில் பூர்த்தி ச…
-
- 1 reply
- 1.1k views
-
-
யாழ். நகரை முடக்குதல்! யாழ். நகரப் பேரூந்து நிலையத்தரிப்பிடத்தை திடீரென மூடி நகரின் ஒதுக்குப்புறத்திற்கு அதனைச் சிறிலங்கா இராணுவம் இடம் மாற்றியுள்ளது. இம்மாற்றம் குறித்து இதனுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கோ அன்றி இதனால் பாதிப்புக்குள்ளாகக் கூடியவர்களுக்குக்; கூட எந்தவித முன்னறிவித்தலும் இன்றி இராணுவத் தலைமை இம்முடிவைத் தன்னிச்சையாக எடுத்துள்ளது. யாழ். நகரை முடக்கும் நடவடிக்கையைச் சிறிலங்காப் படைத்தரப்பு ஏற்கனவே படிப்படியாக ஆரம்பித்திருந்தது என்பதே உண்மையாகும். குறிப்பாகப் பல பாதைகளை மூடிப் போக்குவரத்துத்தடை விதித்திருந்தமையும் சோதனைக் கெடுபிடிகளை அதிகரித்திருந்தமையும் இதன் பாற்பட்டதே. இதன் தொடராகவே நகரின் மையப்பகுதியில் அமைந்திருந்த பேருந்துத் தரிப்பு நி…
-
- 0 replies
- 994 views
-
-
அயல்நாடுகள் இந்தியாவுக்கு எதிராக திரும்பும் என்கிறார் கடற்படை தளபதி "இந்தியாவின் அண்டை நாடுகளுடன் சீனா கடல் சார்ந்த ஒத்துழைப்பை ஏற்படுத்தி வருகிறது. இது வருங்காலத்தில் இந்தியாவுக்கு எதிராக அமையலாம்" என்று இந்திய கடற்படை தளபதி சுரேஷ் மேத்தா எச்சரித்துள்ளார். கடற்படை தினத்தையொட்டி, இந்திய கடற்படை தளபதி சுரேஷ் மேத்தா சனிக்கிழமை பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது; இந்தியாவின் அருகில் உள்ள மியான்மர் போன்ற நாடுகள் சீனாவுக்கு மிக நெருக்கமாக உள்ளன. மியான்மருடன் உள்ள உறவை பல வருடங்களாக சீனா பலப்படுத்தி வருகிறது. அதேபோல், இலங்கை கடற்படையுடனும் சீனாவுக்கு தொடர்பு உள்ளது. பாகிஸ்தானுடன் ஏற்கனவே சீனாவுக்கு நல்ல உறவு உள்ளது. தற்போது, ஆபிரிக்க கடற்பகுதியில் …
-
- 0 replies
- 1.1k views
-
-
போரில் எவரும் வெற்றி பெறப்போவதில்லை - ரணில் விக்கிரமசிங்கதமிழீழ விடுதலைப் புலிகளும் படையினருக்கும் இடையிலான போரில் எவரும் வெற்றி பெறபோவதில்லை என எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். மகாத்மா காந்தி இந்திய சுதந்திர போராட்டத்தை ஊன்றுகோல் ஒன்றுடனே ஆரம்பித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். மோதல் ஒன்றில் ஈடுபடாது பெறும் வெற்றியே சிறந்த வெற்றியாகும் என அவர் கூறியுள்ளார். அறிவு. பொறுமை மற்றும் தூரநோக்கான சிந்தனை மூலமே அவ்வாறான வெற்றியினை பெற முடியும். இந்தியாவில் இன்று இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றும் போதே எதிர்கட்சி தலைவர் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார் http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 2 replies
- 1.2k views
-
-
விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தல் - அமைச்சரவை தீர்மானம் தமிழீழ விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது குறித்த அமைச்ரவை தீர்மானம் ஒன்று எதிர்வரும் புதன் கிழமை வெளியிடப்பட்டவுள்ளது இத் தீர்மானத்தின் மூலம் விடுதலைப்புலிகளை தடை செய்வதற்கு பதிலாக அவர்களுடன் சர்வதேச சமூகம் கொண்டிருக்கும் தொடர்புகளை முற்றாக தடுப்பதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சமாதான செயலக பணிப்பாளர் பாலித கோகன் தெரிவித்துள்ளார் இதன் மூலம் வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் உள் நாட்டு வெளிநாட்டு தொண்டர் அமைப்புகளின் பிரதிநிதிகள் விடுதலைப்புலிகளை சந்திப்பதையும் அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தவதையும் ஸ்ரீலங்கா அரசாங்கம் தடை செய்யவுள்ளது இதன் ஒரு கட்டமாக நோர்வ…
-
- 2 replies
- 1k views
-
-
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜனவரியில் சிறிலங்கா விஜயம்! - பண்டார வன்னியன் ஆழனெயலஇ 04 னுநஉநஅடிநச 2006 09:29 இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முஹர்ஜி, அடுத்த ஆண்டு; ஜனவரி மாதமளவில் சிறிலங்கா வரவுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் நடைபெற்ற ‘சார்க்’ மாநாட்டின்போது விடுக்கப்பட்ட அழைப்பின் நிமித்தம் அவரது கொழும்புப் பயணம் அமைகிறது என்றாலும் தனது வருகையின் போது சிறிலங்கா தேசியஇனப்பிரச்சினை குறித்த உயர் மட்டப் பேச்சுக்களை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அமைச்சரின் வருகைக்கு முன்பாக, இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணக் கூடிய விவரமான தீர்மானத் திட்டங்களை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு தயாரித்து விடும் என ஜனாதிபதி மகிந்த…
-
- 0 replies
- 683 views
-