Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்கா வெளிவிவகாரச் செயலாளர் எச்.எம்.ஜி.எஸ்.பாலிஹாக்கர விலகியுள்ளார். எதிர்வரும் டிசம்பர் மாதம் ஓய்வு பெற உள்ள அவர் ஒரு மாதம் காலம் முன்பாகவே தனது விலகல் கடிதத்தை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ளார். தற்போது அமெரிக்காவில் உள்ள அவர் நாளை புதன்கிழமை சிறிலங்காவுக்கு திரும்ப உள்ளார். இதனிடையே தற்போது வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளராக உள்ள கீதா டி சில்வா புதிய வெளிவிவகார செயலாளராக அல்லது பதில் வெளிவிவகார செயலாளராக நியமிக்கப்பட உள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.eelampage.com/?cn=29845

  2. ஸ்கொட்லன்ட் பொலிஸ் வியாழனன்று வருகிறது வீரகேசரி வாரவெளியீடு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலை சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டு ஸ்கொட்லான்ட் பொலிஸ் குழு எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இக் கொலைச் சம்பவம் தொடர்பாக பொலிஸார், இரகசிய பொலிஸார், புலனாய்வு விசாரணைகளை மேற்கொண்டு பலரை விசாரணைக்குட்படுத்தியும் வருகின்றனர். எனினும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின்பேரில் நவீன தொழில்நுட்பரீதியான விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டு ஸ்கொட்லான்ட் பொலிஸார் எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கை வரவுள்ளனர். ஒரு மனிதனுக்கு சாவிலே தான் நிம்மதி என்பார்கள் ஆனால் புதைக்கப்பட்ட திருகோணமலை …

  3. மகிந்தவின் நடவடிக்கை சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் ஒரு நடவடிக்கையே - சு.ப. தமிழ்ச்செல்வன். தமிழர்களின் மனித அவலங்களை புறக்கணித்து சிறிலங்கா அரசாங்கம்: செயற்படுவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்க தலைநகர் வோசிங்ரனில் இணைத் தலைமை நாடுகள் கூட்டம் நடைபெறும் நிலையில் சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கான கடைசி நிமிட முயற்சியாகத்தான் ஏ-9 பாதையை சிறிலங்கா அரசாங்கம் திறப்பதாகக் கூறியுள்ளது. இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது: ஏ-9 பாதையை மீளத் திறப்பது குறித்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடமோ அல்லது இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினரிடமோ எதுவித தகவலும் தெரிவிக்கவில்லை. …

  4. ஐ.நா தூதுவர் அலன் ரொக்கின் குற்றச்சாட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம். சிறுவர் மற்றும் ஆயுத மோதல் தொடர்பான ஐ.நா வின் சிறப்பு பிரதிநிதி அலன் ரொக் இலங்கையில் சிறுவர் படைகளில் பலவந்தமாக இராணுவத்தினரால் சேர்க்கப்படுகிறார்கள் என வெளியிட்டிருந்த அறிக்கையினை கண்டித்து இன்று திங்கள் கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்தின் முன்னால் ஆர்பாட்டம் இடம்பெற்றது.இவ் ஆர்ப்பாட்டத்தில் பௌத்தமத குருக்களும் ஜேவிபி பாரளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். இது தான் முதல் முறை பாதுகாப்பு படையினர் மீது சிறுவர்களை கருணா அணியுடன் இணைந்து பலவந்த்மாக் படையில் இணைக்கின்றனர் என குற்றம் சாட்டப்பட்டுள்ளமை என ஜேவிபியின் பாரளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.இவ் ஆர்…

  5. யாழ். குடாநாட்டு மக்களின் அடிமனதில் உறவாடும் பல ஆத்மார்த்தமான வினாக்களையும், ஐயங்களையும் துப்பாக்கி முனைகளும் குண்டுகளும், காக்கிச் சட்டைகளும் காற்றில் வராது தடுத்து வருவது பல ஆண்டுகாலமாக நிகழ்கின்ற ஒன்று. இன்று யாழ்ப்பாண குடாநாட்டில் 1,85,619 குடும்பங்கள் உள்ளன. இவர்கள் 6,35,300 மக்கள் தொகையினராவர். இவர்கள் அனைவரையும் பிற சிறிலங்காப் பகுதிகளுடனும் குறிப்பாக ஏனைய தமிழ்ப் பகுதிகளுடனும் இணைக்கும் முக்கிய தரைவழி, ஏ-9 எனப் பிரபலம் பெற்ற யாழ். - கண்டி நெடுஞ்சாலையாகும். இது யாழ். டீயளவலையn சந்தியில் ஆரம்பித்து கண்டிவரை நீள்கின்றது. இதில் யாழ்ப்பாணம் தொடக்கம் முகமாலை முன்னரங்க இராணுவ மையம் வரையான பகுதிகள் இராணுவத்தினதும், அடுத்து முகமாலை சூனியப் பிரதேசம் தாண்டி ஒமந்தை…

  6. அண்மையில் அமெரிக்காவில் நடைபெற்ற பிரதிநிதிகள் சபைக்குரிய (ர்ழரளந ழக சுநிசநளநவெயவiஎநள) தேர்தலில் அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ்ஷின் குடியரசுக்கட்சி (சுநிரடிடiஉ) பலத்த தோல்வியைத் தழுவியுள்ளது. எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி (னுநஅழஉசயவ) பிரதிநிதிகள் சபையின் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியுள்ளமையால், நாட்டின் சட்டவியல் அதிகாரங்களையும் தம் கைவசப்படுத்தியுள்ளது. ஈராக்மீது அமெரிக்கா தொடுத்துள்ள போரை அமெரிக்கப் பொதுமக்கள் ஏற்றுக் கொள்ளாததன் எதிரொலியாகத்தான், இத்தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. இதன் காரணமாகத்தான் அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் என்ற உயர் பதவியை வகித்த டொனால்ட் ரம்ஸ்வெஸ்ட் (னுழயெடன சுரஅளகநடன) என்பவரை அப்பதவியில் இருந்து புஷ் விலகச் செய்துள்ளார். வேற்று நாடொன…

  7. சிறிலங்காவின் ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்சபதவியேற்று ஒருவருட காலப் பகுதியில் சிறிலங்காப் படையினராலும் துணை இராணுவக்குழுவினராலும் 1154பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சிறிலங்கா ஜனாதிபதியாக பதவியேற்று ஒருவருடத்தை பூர்த்தி செய்துள்ள இதுவரையான காலப் பகுதியில் 1154பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 210,000பேர் தமது சொந்த வாழ்விடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். 484பேர் காணமல் போயுள்ளனர். பொதுமக்களின் பெறுமதி மதிப்பிட முடியாத கோடிக் கணக்கான சொத்துக்கள் சிறிலங்கா அரச படைகளினால் அழிக்கப்பட்டுள்ளனர் இக்காலப் பகுதிக்கு வணக்கத் தலங்கள் மருத்துவ மனைகள் படையினரால் அழிக்கப்பட்டுள்ளன. மகிந்த ராஜபக்ச பதிவியேற்ற ஒரு வருடத்தில் நடந்தேறிய சம்பவங்களை தமிழீழ வ…

  8. யாழ்ப்பாண மனித அவலம் குறித்து சிறிலங்காவுக்கான வெளிநாட்டுத் தூதுவர்கள் நேரில் சென்று பார்வையிட உள்ளனர். அவுஸ்திரேலிய தூதுவர் கிரேக் பிரெஞ்ச், சுவிஸ் தூதுவர் ருத் பிளிண்ட், இங்கிலாந்து பிரதி தூதுவர் லெஸ்லி கிரெய்க் மற்றும் ஐரோப்பிய ஆணைய மனிதாபிமான உதவிகளுக்கான அமைப்பு, சுவிஸ் சர்வதேச அபிவிருத்தி அமைப்பு, சுவிஸ் அபிவிருத்திக்கான அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகளும் நாளை செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை யாழ்ப்பாணத்துக்கு நேரில் சென்று நிலைமைகளை பார்வையிட உள்ளனர். யாழ். ஆயர் தோமஸ் சௌந்திரநாயகம் அடிகளார், யாழ். அரச அதிபர் கே. கணேஸ், யாழில் உள்ள இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு அதிகாரிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்பான யு.என்.எச்.சி.ஆ…

  9. சிறிலங்கா கடற்படையினரால் யாழ். பல்கலைக்கழக மாணவர் கடத்தல் சிறிலங்கா கடற்படையினரால் வேலணை வங்களாவடியில் யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவரான மார்க்கண்டு சசிக்குமார் கடத்தப்பட்டுள்ளார். கொழும்பு செல்வதற்கான அனுமதியைப் பெற கடந்த சனிக்கழமை காலை வேலணை வங்களாவடியில் அமைந்துள்ள கடற்படையினரின் பொதுசனத் தொடர்பு அலவலகத்துக்கு சசிக்குமார் சென்ற போது சிறிலங்கா கடற்படையினரால் வெள்ளை வானில் அவர் கடத்தப்பட்டார். நெடுந்தீவு மேற்கைச் சேர்ந்தவர் சசிக்குமார். அவர் யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மூன்றாம் ஆண்டு மாணவர். சசிகுமார் கடத்தப்பட்டமை குறித்து யாழ். பல்கலைக்கழக துணைவேந்தருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமும் முறைப்பாடு செய…

  10. ஏ9 வீதி திறப்புக் குறித்து ஜே.வி.பி அரசிடம் வினா எழுப்பியுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள் ஏ9 வீதியை போர் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த மாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளதா? உறுதி மொழி பெறப்பட்டதா? இவ்வாறாக ஏ9 திறப்புக்கு குறித்த ஜேவிபியின் அதிருப்தியை அரசுக்கு தெரிவிக்கும் முகமாக அக்கட்சியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...rom=&ucat=1&

  11. யாழ்ப்பாணத்துக்கான அத்தியாவசியப் பொருட்களை ஒரே முறையில் முகமாலை ஊடாக ஏ-9 பாதையில் கொண்டு செல்வதாக மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளது சாத்தியமற்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் தெரிவித்துள்ள கருத்து: ஏ-9 பாதை நிரந்தரமாக மீளத் திறக்கப்பட வேண்டும். யாழ்ப்பாணத்துக்கு ஒரே முறையில் அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் கொண்டு செல்வது சாத்தியமில்லை என்றார். முன்னதாக ஞாயிற்றுக்கிழமை இரவு மகிந்த ராஜபக்ச அலுவலகம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பு: பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளுக்கமைய ஏ-9 பாதையூடாக ஒரே முறையில் அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லப்படும். இந்தப் பண…

  12. வவுனியா தாண்டிக்குளத்தில் சிறிலங்காப் படையினரால் மாணவர்கள் நால்வர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்று சனிக்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் நடைபெற்றது. வவுனியா விவசாயக் கல்லூரிக்குள் நுழைந்த சிறிலங்காப் படையினர் மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூட்டினை நடத்தியுள்ளனர். இத்துப்பாக்கிச் சூட்டிலேயே மாணவர்கள் நால்வரும் சம்பவ இடத்தில் கொல்லப்பட்டுள்ளனர். ஏனைய ஆறு பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. -புதினம்-

  13. ரவிராஜின் கொலையுடன் அரசாங்க அமைச்சர் ஒருவருக்கு தொடர்புள்ளது - மகேஸ்வரன் மாமனிதர் நடராஜா ரவிராஜின் கொலை தொடர்பாக இன்று ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரி.மகேஸ்வரன் பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கையில்இ நடராஜா ரவிராஜின் கொலையுடன் அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவருக்கு தொடர்புள்ளதாக கூறினார். மேலும் பல தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலைகள் தொடர்பான விசாரணைகள் இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை எனவும் மகேஸ்வரன் குற்றம் சுமத்தினார். இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா நடராஜா ரவிராஜின் கொலை பற்றிய விசாரணைகள் குறித்து தகவல்களை வெளியிட கூடிய தருணம் இதுவல்ல என குறிப்பிட்டார். …

  14. வீரவிலாவில் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தினை மகிந்தா தனது ஒரு வருடப்பூர்த்தியின் போது ஆரம்பிக்கிறார். வீரவிலா மகிந்தாவின் சொந்த மாவட்டமான அம்பந்தோட்டையில் அமைந்துள்ளது. Rajapakse starts work on Intl airport to mark 1st anniversary Colombo, Nov 19: Sri Lankan President Mahinda Rajapakse today marked his first year in office by launching work on a second international airport in the island nation. Rajapakse inaugurated construction work on a 4,000-metre runway at the domestic weerawila airstrip to upgrade it as the country's second international airport and an alternate landing venue to Colombo airport. "I will not say that development is not poss…

  15. ஐ.நா தூதுவர் அலன் ரொக்கின் குற்றச்சாட்டை கண்டித்து பௌத்தமத குருக்களும் ஜேவிபி கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் [Monday November 20 2006 02:18:30 PM GMT] [யாழ் வாணன்] சிறுவர் மற்றும் ஆயுத மோதல் தொடர்பான ஐ.நா வின் சிறப்பு பிரதிநிதி அலன் ரொக் இலங்கையில் சிறுவர் படைகளில் பலவந்தமாக இராணுவத்தினரால் சேர்க்கப்படுகிறார்கள் என வெளியிட்டிருந்த அறிக்கையினை கண்டித்து இன்று திங்கள் கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்தின் முன்னால் ஆர்பாட்டம் இடம்பெற்றது.இவ் ஆர்ப்பாட்டத்தில் பௌத்தமத குருக்களும் ஜேவிபி பாரளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். இது தான் முதல் முறை பாதுகாப்பு படையினர் மீது சிறுவர்களை கருணா அணியுடன் இணைந்த…

  16. When Sri Lanka chose a new president and a new administration a year ago, some hoped that the change could bring new thinking and a new approach in solving the ethnic conflict. Though considered a hardliner, President Mahinda Rajapakse was viewed by moderate Tamils as a pragmatist who had the potential to evolve a consensus by convincing the majority Sinhalese community to find a political solution to the ethnic conflict. But many of his supporters argued that while the president - elected on 18 November 2005 - would pursue the peace process, he would also adopt a hard-line approach towards Tamil Tiger rebels. The dramatic escalation of violence in the p…

  17. Started by நேசன்,

    தைப்பொங்கல் வருடப்பிறப்பு போல் கார்த்திகை 27 தமிழர்களுக்கு விசேட நாளாகும். தமிழர்களின் சுதந்திரவீரர் தினம். ஆனால் புலம்பெயர் மக்கள் அந்நாளை தாமாகவே உணர்ந்து மற்றைய பெருநாட்கள் போல் கொண்டாடுவதற்கு இன்னும் தாயாரகவில்லை. அதுவும் இங்கிலாந்தில் உள்ள தமிழர்பாடசாலைகளில் அந்நாள் பற்றி தகவல் கொடுப்பதற்கு முன்வருவதில்லை. குறிப்பாக இங்கு வளரும் எம் இளம் சமுதாயம் அது பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பே இல்லாமல் போய் விடுகிறது... மற்றைய புலம் பெயர் நாடுகளில் தகவல் பரிமாற்ற இடமாக தமிழ்பாடசலைகளே விளங்குகின்றன. அதனால் அங்கு வளரும் எமது பிள்ளைகளும் ஈழத்தமிழர் பற்றிய பல தகவல்களை அறிந்து கொள்கிறார்கள். அன்பான பெற்றோர்களே தங்கள் பிள்ளைகள் செல்லும் தமிழ்பாடசாலைகளின் நிர்வாகத…

  18. யாழ். வடமராட்சியில் இன்று நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 6 சிறிலங்கா இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர். வடமராட்சி புறாப்பொறுக்கியில் பருத்தித்துறை - யாழ். வீதியில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. படுகாயமடைந்த சிறிலங்கா இராணுவத்தினர் பலாலி சிறிலங்கா இராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். நெல்லியடி சந்தியிலிருந்து வடக்கில் 2 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள புறாப்பொறுக்கி கிராமம் அதிஉயர் பாதுகாப்பு வலயத்துக்குள் அமைந்துள்ளது. கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் மேலதிக இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வடமராட்சிக்கு செல்லக்கூடிய நுழைவுப் பகுதி…

  19. உறவுகளுக்கு உணவு கிடைக்கும்வரை உண்ணாவிரதம் யாழ்கள உறவுகளே, எங்கள் தமிழ் மக்களை சிங்கள இனவாத அரசாங்கம் திட்டமிட்டு பட்டினி போட்டு அழித்து வருகின்றது. இதற்கு இந்தியாவும் மேற்கு நாடுகளும் நேரடி மற்றும் மறைமுக ஆதரவை வழங்கி வருகின்றன. போர்க்களத்தில் புலிகள் வீறு கொண்டு போராடுகின்றனர். அரசியலில் கூட்டமைப்பினர் உயிரை பணயம் வைத்து போராடுகின்றனர். ஈழத்திலும் சரி புலத்திலும் சரி தமிழர்கள் நாம் என்ன செய்கிறோம். எமக்கு துன்பம் ஏற்படும் போது எப்போதும் மாற்றனை குறை கூறுகின்றோம். எதிரி என்றுமில்லாதவாறு பாரிய அளவில் தமிழின அழிப்பை ஆரம்பித்துள்ளான். "எனக்கு பாதுகாப்பில்லை", "குடும்பச் சூழ்நிலை", "பண உதவி செய்தோம்" என்று கூறி …

  20. நாட்டில் பாரிய யுத்தத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. வரவு - செலவுத் திட்டம் மூலம் பாதுகாப்புக்கு மிகப் பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ள அதேநேரம் போர்த் தளபாடங்களை வாங்கிக் குவிப்பதில் அரசு தீவிர ஆர்வம் காட்டுகிறது. உயர் நீதிமன்றத் தீர்ப்பு மூலம் வடக்கு - கிழக்கைப் பிரித்த அரசு, அரசியல் ரீதியாக வடக்கு - கிழக்குப் பிரிப்புக்கு எதிரான செயற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ள அதேநேரம், இராணுவ ரீதியிலும் வடக்கு - கிழக்கைத் துண்டாடுவதில் தீவிர அக்கறை காட்டுகிறது. கிழக்கில் துணைப் படைகளை வளர்ப்பதன் மூலம், கிழக்கில் தான் மேற்கொள்ளவுள்ள படை நடவடிக்கைகளை இவர்களே மேற்கொள்வதாக வெளியுலகுக்குக் காட்டும் முயற்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதேநேரம், வடக்கு - கிழக்கில் இன்…

    • 0 replies
    • 893 views
  21. ஈ.ழத்தில் தமிழர் தாயகங்களில் இருந்து சிங்கள இராணுவத்தை வாபஸ்பெற சிங்கள அரசை இந்தியா வற்புறுத்த வேண்டும் - விஜயகாந் தமிழர் பகுதிகளிலிருந்து இராணுவத்தைத் திரும்பப்பெற சிங்கள அரசை நிர்ப்பந்திக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு; சிங்கள அரசு தமிழர்கள் வாழும் பகுதிகளில் பொருளாதாரத் தடையை செயல்படுத்தி வருகிறது. இதனால், தமிழ் மக்கள் வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கப்பெறாமல் அவதிப்படுகின்றனர். இது எந்த அளவுக்கு மோசமான நிலையை எட்டியுள்ளது என்றால் அங்குள்ள தமிழர்கள் சிலர் பட்டினியால் இ…

    • 0 replies
    • 1.4k views
  22. பாவனையாளர் பாதுகாப்புச் சபைகள்; அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை யாழ்ப்பாணம், நவ.19 குடாநாட்டில் பொருள் விநியோகத்தை சீர்செய்யும் நோக்கில் பாவனையாளர் பாது காப்புச் சபைகளை அமைக்க சமூக சேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவ டிக்கை எடுத்துள்ளார். சமூக சேவைகள் மற்றும் சமூகநலத் துறை அமைச்சு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட் டுள்ளது. அச்செய்திக்குறிப்பில் மேலும் கூறப் பட்டுள்ளதாவது: குடநாட்டு மக்களுக்கான உணவு மற் றும் அத்தியாவசிய பொருள்களுக்கான விநியோகத்தின் போது பொருள்களின் பாது காப்பு, உரிய நிறை, நியாயவிலை என்பவற் றுடன் அப்பொருள்கள் சரியான முறையில் மக்களைச் சென்றடைகின்ற னவா என்பவற்றை உறுதிப்படுத்தும் முக மாகவும் அதன் மூலம்…

  23. கிழக்கில் வாகரைப் பகுதியில் விடுதலைப் புலிகள் மீதான படை நடவடிக்கைகளை நிறுத்தியதன் விளைவே முகமாலை மற்றும் ஹபரண பகுதிகளில் படையினருக்கு பெரும் அழிவுகளை ஏற்படுத்தியதாக ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்றக் குழுத் தலைவர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வரவு- செலவுத் திட்டம் மீதான விவாத்தில் பேசும்போதே அத்துரலிய ரத்ன தேரர் எம்.பி. இவ்வாறு கூறினார். அவர் இங்கு மேலும் பேசுகையில்; எமது நாடு பாரிய வளமிக்க நாடு. எம்மைச் சுற்றி எண்ணெய் வளம், சமுத்திர வளம், பசளை வளம் என பல உள்ளன. கடந்த காலங்களில் நிபுணர்கள் சுட்டிக்காட்டியது போல வளமில்லாத வறிய நாடல்ல. பல அழிவுகளுக்கு மத்தியிலும் இன்னும் வளங்கள் எஞ்சியிருக்கும் வளமிக்க நாட…

  24. இலங்கை செல்கிறார் இந்தியப் பேராளர்....!!!! --------------------------------------- இலங்கையில் வடக்கு கிழக்கில் உணவு உள் ளிட்ட அடிப்படைப் பொருட்கள் எதுவுமின்றி மக்கள் அவதிப்படும் பிரச்சினைக்கு இலங்கை உடனடித் தீர்வு காணவேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் இந்தச் செய்தியை இலங்கை அதிபர் ராஜபக்சேயிடம் நேரடியாக வலியுறுத்துவதற்காகப் புதன்கிழமை யன்று இந்திய வெளியுறவு செயலாளர் சிவ சங்கர் மேனன் கொழும்பு செல்கிறார். இலங்கையில் இம்மாதம் 22-24 வரை தங்கி இருக்கும் திரு மேனன் 23ம் தேதி கொழும்பில் அதிபர் ராஜபக்சேயைச் சந்திப்பார். இலங்கை அதிபர் ராஜபக்சே இம்மாதம் 28ம்தேதி இந்தியாவுக்குச் செல்ல திட்டமிடப் பட்டுள்ளது. இதற்கு முன்னோடிப் பயணமாக இந்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.