Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நத்தார் தினத்தினை முன்னிட்டு யாழில் இன்றும் நாளையும் ஊரடங்கு முற்றாக நீக்கம். நத்தார் தினத்தை ஒட்டி இன்றும் நாளையும் ஊரடங்குச் சட்டம் முழுமையாக நீக்கப்படுவதாக யாழ்ப்பாணம் சிவில் நிர்வாக அலுவலகம் நேற்றிரவு அறிவித்துள்ளது. நள்ளிரவு ஆராதனைகளில் மக்கள் ஈடுபட்டுக்கொள்ள வசதியாகவும், நத்தார் தினத்தைக் கொண்டாட உதவும் வகையிலும் ஊரடங்கு முழுமையாக நீக்கப்படுவதாக மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.sankathi.com

  2. இலங்கைத் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க இந்தியா தேவையான நடவடிக்கை எடுக்கும்:- பிரதமர் மன்மோகன் சிங். பிரதமர் மன்மோகன் சிங்கை தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் டிசம்பர் 22இல் சந்தித்துச் சுமார் 45 நிமிடங்கள் தங்கள் வேண்டுகோளை முன் வைத்தனர். இலங்கைத் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க இந்தியா தேவையான நடவடிக்கை எடுக்கும் என அப்பொழுது பிரதமர் அவர்களுக்கு உறுதி கூறினார். பேச்சு வார்த்தை வெற்றிகரமாகவும், சுமூகமாகவும் நடைபெற்றதெனவும், தங்கள் கருத்துக்களைப் பிரதமர் கவனமாகக் கேட்டுக் கொண்டதாகவும் தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறினர். இலங்கைப் பிரச்சினையில் தேவையான நடவடிக்கை எடுப்பதாக அப்பொழுது பிரதமர் உறுதியளித்தார். பிரதமரிடம் சொல்லப்பட்ட செய்திகள் …

  3. லண்டனில் கண்கலங்கிய திருமா - ஜுனியர் விகடன் http://www.tamilnaatham.com/pdf_files/jv20061223.pdf

    • 2 replies
    • 1.9k views
  4. காசி ஆனந்தன் ஆனந்த விகடனுக்கு எழுதிய பாலா அண்ணா http://www.tamilnaatham.com/pdf_files/vikatan_2006_12_23.pdf

  5. இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் வி.நவரத்தினம் காலமானார் இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரான வி.நவரத்தினம் (வயது 97) காலமானார். கனடாவின் கியூபெக் மாகாணத்தில் உள்ள மொன்றியல் நகரில் வெள்ளிக்கிழமை மாலை 4.10 மணி அளவில் அவர் காலமானார். யாழ். கரம்பனில் கடந்த 1910 ஒக்ரோபர் 18 ஆம் நாள் பிறந்த நவரத்தினம், இலங்கை சட்டக் கல்லூரியில் பயின்றார். 58 ஆண்டுகாலம் சட்டத்தரணியாக அவர் பணியாற்றினார். இலங்கைப் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கிறது என்ற நூலை 1956 ஆம் ஆண்டு அவர் எழுதினார். தமிழ்த் தேசியத்தின் எழுச்சி தொடர்பாக கடந்த 1995 ஆம் ஆண்டு மற்றொரு நூலை அவர் எழுதியிருந்தார். யாழ். ஊர்காவற்றுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் அவர் பதவி வகித்தார். பண்ட…

  6. ரவிராஜ் படுகொலை விசாரணை:- ஸ்கொட்லன்ட்யார்ட் அடுத்த மாதம் வருகிறது. பிரித்தானிய குற்றப்புலனாய்வுத் துறையான ஸ்கொட்லன்யாட்டைச் சேர்ந்த ஐந்து குற்றப்புலனாய்வு அதிகாரிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் சிறிலங்காவிற்கு செல்லவுள்ளதாக தெரிகின்றது. அண்மையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரான மாமனிதர் நடராஜா ரவிராஜின் விசாரணைகளில் இவர்கள் சிறிலங்காவின் காவல்துறையினருக்கு உதவுவார்கள் என அறியப்படுகின்றது. எனினும் பிரித்தானிய அதிகாரிகள், அவுஸ்திரேலிய அதிகாரிகளின் ஆலோசனைகளையும் இந்த விடயத்தில் பெற்றிருப்பதாகவும் அறிய முடிகின்றது. ஏனெனில் மூதூரில் இடம்பெற்ற பிரான்ஸ் தொண்டர் நிறுவனப் பணியாளர்களின் படுகொலை தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள அழை…

  7. புதிய வெளிவிவாகரத்துறைச் செயலாளர் நியமனம்:- மகிந்த - மங்கள முறுகல். புதிய வெளிவிவகாரத்துறைச் செயலாளரை நியமிப்பது தொடர்பில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியுள்ளது. வெளிவிவகாரத்துறைச் செயலாளர் பதவிக்கு இந்தியாவுக்கான சிறிலங்கா தூதுவரான ரொமேஷ் ஜயசிங்கவின் பெயரை மங்கள சமரவீர கடந்த வாரம் மகிந்தவிடம் பரிந்துரை செய்திருந்தார். எனினும் ஜயசிங்கவை அப்பதவிக்கு நியமிக்கப்போவதில்லை என தனக்கு நெருக்கமானவர்களிடம் மகிந்த தெரிவித்ததே முறுகலுக்கான காரணம் என தெரியவருகிறது. தற்போது வெளிவிவகாரத்துறைச் செயலாளராக பணியாற்றும் பாலிகக்ஹாரவின் பதவிக்காலம் எதிர்வரும் 31 ஆம் நாளுடன் முடிவடைக…

  8. யாழ்குடாநாட்டில் ஆயுதமுனையில் கொள்ளை. யாழ்ப்பாண குடநாட்டில் பொது மக்களுக்கான உப உணவு பொருட்களை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் யாழ் நகரின் பிரதான வீதியின் மடத்தடி யாழ் மாவட்ட விவசாய நுகர்ச்சி கூட்டுறவு சமாசத்தின் அலுவலகம் மற்றும் களஞ்சிய திறப்புகள் பொது முகாமையாளரிடம் இருந்து ஆயுத முனையில் நேற்று பறிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்த முகாமையாளரை நல்லூர் பகுதியில் வைத்து இடைமறித்த ஆயதபாணிகள் திறப்புகளை பறித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்திற்கான தரைவழி பாதை துண்டிக்கப்பட்ட பின்னர் ஒரு பகுதி உப உணவுப் பொருட்கள் இந்த அமைப்பின் ஊடாகவே விநியோகம் செய்யப்பட்டது. எனினும் இந்த அமைப்பினால் போதிய அளவில் சீராக உப உணவுப் பொர…

  9. 400 மில்லியன் ரூபாய் செலவில் மகிந்த அமைக்கும் பதுங்கு குழி சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினதும் அவரது குடும்ப உறுப்பினர்களினதும் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக கொழும்பில் பெயர் குறிப்பிடப்படாத உயர்பாதுகாப்பு வலயப் பகுதியில் பதுங்கு குழி அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. 400 மில்லியன் ரூபாய்கள் செலவில் மிக நவீன வசதிகளை கொண்டதாக இந்த பதுங்கு குழி அமைக்கப்படுகின்றது. பாதுகாப்பு காரணங்களுக்காக பெயர் மறைக்கப்பட்ட பொறியியல் நிறுவனம் ஒன்று இதை வடிவமைத்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த யூலை மாதம் ஆரம்பிக்கப்பட்ட பதுங்கு குழி அமைக்கும் பணியில் பல மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான வேலைகள் ஏற்கனவே முடிவடைந்து விட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. சமை…

  10. இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் இலங்கை அரசையும், விடுதலைப்புலிகளையும் சர்வதேச சமூகம் கடுமையாகக் கையாள வேண்டும் என்று யாழ் ஆயர் தோமஸ் சௌந்திரநாயகம் தனது நத்தார் செய்தியில் வலியுறுத்தியுள்ளார். யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை அவர்கள் இன்று வெளியிட்டுள்ள கிறிஸ்மஸ் தின செய்தியில் மக்கள் அனைவருக்கும் அமைதியையும் சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் பாதுகாப்பையும் கொண்டுவரும் விழாவாக இந்த கிறிஸ்மஸ் விழா அமைய வேண்டும் என வாழ்த்தியுள்ளார். அதேவேளை, சமாதான முயற்சிகளின் அனுசரணையாளர்களான நோர்வேயும் மற்றும் இணைத்தலைமை நாடுகளும் போரில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரையும் கடின போக்குடன் கையாள வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார். சுனாமி பேரலைகளினால் உயிரிழந்தவர்கள் மற்றும் துன்ப…

  11. ஜேர்மன் அபிவிருத்தி அமைச்சர் ஜேர்மன் பத்திரிகை ஒன்றிற்கு வழங்கி இருக்கும் பேட்டியில் பின் வருமாறு தெருவித்து உள்ளார். சிறிலங்கா அரசு சமாதான நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்காதவிடத்து சர்வதேச நாடுகள் சிறிலங்காவிற்கான உதவிகள் அனைத்தையும் நிறுத்த வேண்டும் .ஜேர்மன் அரசங்காம் சிறிலங்காவிற்கென ஒதுக்கிய இருப்பத்தைந்து மில்லியன் டொலர்களை இந்தோனேசியாவின் அச்சே மானிலத்திற்கு வழங்கி உள்ளது. இந்தச் செய்தியை அனைத்து ஊடகங்களும் அனைத்து மொழிகளைலும் வெளியிட வேண்டும்.இன்னும் இந்தச் செய்தி தமிழ் ஊடகங்கள் எதிலும் வந்ததாகத் தெரியவில்லை.முக்கியமாக தமிழ் நெற்றில் வர வேண்டிய செய்தி. Sri Lankan aid depends on peace moves 23 December 2006 | 21:54 | FOCUS News Agency Ber…

    • 46 replies
    • 6.6k views
  12. இலங்கை பிரச்னையில் நேரடியாக இந்தியா தலையிட மறுப்பு சென்னை: "இலங்கை பிரச்சனையில் இந்தியா நேரடியாக தலையிடாது. இது தான் இந்தியாவின் நிலைப்பாடு. அதே நேரத்தில் அங்கு அமைதி நிலவ வேண்டும்; தமிழர்கள் நிம்மதியுடன் வாழ தீர்வு காணப்பட வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது,"என்று வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி திட்டவட்டமாக அறிவித்தார். நாடு முழுவதும் உள்ள பாஸ்போர்ட் அதிகாரிகளின் ஆண்டு மாநாடு சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இலங்கை பிரச்னை குறித்த இந்தியாவின் நிலைப்பாடு குறித்து திட்டவட்ட பதில் அளித்தார். அவர் அளித்த பேட்டி; போலீஸ் விசாரணையின்றி பாஸ்போர்ட் வழங்குவதால் பாதுகாப்புத் தன்மை இருக்காதே? 'தட்கல்' திட்டத்தின் கீழ் …

  13. சிறிலங்கா இராணுவ பயிற்சி நிறைவு விழாவில் மகிந்த. தியத்தலாவை இராணுவப் பயிற்சிக்கல்லூரியிலிருந்து 60 சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் இன்றையதினம் பயிற்சிகளை நிறைவு செய்து வெளியேறியுள்ளனர். இந்நிகழ்விற்கு சிறிலங்காவின் ஜனாதிபதியும் முப்படைகளின் பிரதம தளகர்த்தருமாகிய மகிந்த ராஜபக்ச பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், இராணுவத்தளபதி உட்பட பெருமளவு உயர்நிலை அதிகாரிகளும் தளபதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டதாக சிறிலங்கா இராணுவத்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. www.sankathi.com

  14. தமிழர் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் - ஜோர்ஜ் பெனான்டஸ். முன்னாள் மத்தியில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜோர்ஜ் பெனான்டஸ் அவர்கள் மத்தியில் சிறீலங்காவில், சிறீலங்கா அரசாங்கத்தால் தமிழர்கள் மீது தாக்குதல் நிகழ்த்தப்படுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். ஜோர்ஜ் பெனான்டஸ் அவர்கள் மேலும் தெரிவிக்கையில் தான் முன்னரும் தமிழர்களுக்கு ஆதரவாக செயற்பட்டதாகவும் இனிமேலும் அவ்வாறு செயற்படுவேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இதே வேளை இந்தியாவின் பிரதமமந்திரி மன்மோகன் சிங் அவர்கள் தமிழ் கூட்டமைப்பினரை சந்தித்தபோது இறையாண்மையுள்ள இலங்கையில் தமிழர்கள் பாதுகாப்பாகவும் கண்ணியமாக வாழ உதவிசெய்வதாக உறுதியளித்தமை தெ…

  15. யாழ்ப்பாணத்தில் கைத்தொலைபேசிகள் இயங்கின? யாழ்குடா நாட்டின் சிலபகுதிகளில் நேற்றுமுன்தினம் கைத்தொலைபேசிகள் அச்சுவேலி, புத்தூர், ஆவரங்கால், இடைக்காடு, பத்தமேனி, வளளாய், நவக்கிரி போன்ற பகுதிகளில் நேற்று முன்தினம் நண்பகலுக்கு பின் இயங்கியதாக குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றன. www.pathivu.com

  16. கிழக்கு மாகாண ஆளுநராக ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரம நியமனம்.கிழக்கு மாகாணத்திற்கான ஆளுநராக ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கரம நேற்று ஜனாதிபதியின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். மொஹான் விஜயவிக்கிரம வடக்குகிழக்கு மாகாண ஆளநராக இதுவரை பதவி வகித்து வந்தார். இந்தநிலையில் உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு இணங்க வடக்குகிழக்கு மாகாணங்களை தனித்தனியாக பிரிக்கும் நடவடிக்கைகளின் அடிப்படையிலேயே கிழக்கு மாகாணத்திற்கான ஆளநர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் வடக்கு மாகாணத்திற்கான பதில் ஆளநராகவும் விஜயவிக்கிரம நியமிக்கப்பட்டுள்ளார் இதற்கிடையில் உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி வடக்கு கிழக்கில் மூன்று நிர்வாக அலகுகளை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள…

    • 0 replies
    • 621 views
  17. வாகரையில் இடம்பெயர்ந்த மக்கள் சென்ற வாகனம் விபத்து 7 பேர் காயம்வாகரையில் இடம்பெயர்ந்த மக்கள் பிரயாணம் செய்த வாகனம் காத்தான்குடியில் விபத்துக்குள்ளானதில் 7 பேர் படுகாயம். வாகரையில் இடம்பெற்றுவரும் கடுமையான தாக்குதல்கள் காரணமாக அங்கிருந்து பெருவாரியான மக்கள் இடம் பெயர்ந்துவரும் நிலையில், மட்டக்களப்பு நகரில் பல்வேறு பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள இடைத்தங்கல் நலன்புரி நிலையங்களில் அவர்கள் தங்கிவருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை வாகரைப்பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்து வாழைச்சேனைக்கு வந்து பின்னர் அங்கிருந்து ஆரயம்பதியில் உள்ள முகாமொன்றுக்கு சிற்றூர்தி ஒன்றில் செல்லும்போது காலை 9.30 மணியளவில் காத்தான்குடி மத்திய பிரதேச பிரதான வீதியில் அவ்வாகனம் விபத்துக்குள்ளானதாக …

    • 0 replies
    • 734 views
  18. தென்னாசிய நாடுகள் வரிசையில் மனித உரிமையை மீறும் நாடுகளில் இலங்கை 6வது இடம் தெற்காசிய நாடுகளிடையே மனி உரிமைமீறல்கள் விடயத்தில் இலங்கை 6 வது இடத்தை பெற்றுள்ளதாக தெற்காசிய மனித உரிமைகள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்காசிய அமைப்பில் 7 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இதில் மனித உரிமை மீறல் விடயத்தில் 6 இடத்தை இலங்கை வகிப்பதாக அந்த அறிக்கையில் குறி;ப்பிடப்பட்டுள்ளது. புதுடில்லியில் நேற்று நடைபெற்ற இந்த அறிக்கையை வெளியிடும் நிகழ்வில் உரையாற்றிய மனித உரிமைகள் ஆசிய நிலையத்தின் தலைவர் சுஹாஸ் சக்மா, இலங்கையில் 2002 ஆம் செய்துக்கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கை மீறப்படுதல் காரணமாக தமிழர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள் அப்பாவி மக்கள் ஆகியோர் காணாமல் போகும் சம…

    • 0 replies
    • 3.3k views
  19. யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் புதிய மருத்துவர்களுக்கு இரண்டு வருடங்களுக்கு கட்டாய சேவை - பண்டார வன்னியன் ளுயவரசனயலஇ 23 னுநஉநஅடிநச 2006 11:16 யாழ்ப்பாணத்தில் புதிதாக நியமனம் பெறும் வைத்தியர்கள் அங்கு 2 வருடங்கள் பணியாற்றவேண்டுமென்பது கட்டாயமென சுகாதார அமைச்சு தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக சுகாதார பிரதியமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் மேலும் தெரிவிக்கையில்; பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் சுகாதார அமைச்சு குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திலேயே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலிருந்து வைத்தியர்களாக பட்டம் பெற்று வெளியேறுபவர்களில் அநேகர் அங்கு பணியாற்ற விரும்புவதில்லை. இதனால் யாழ…

    • 0 replies
    • 605 views
  20. யாழ் வடமராட்சியில் படைமுகாம் மீது துப்பாக்கிப் பிரயோகம். - அச்சத்தில் மக்கள் இடப்பெயர்வு. - பண்டார வன்னியன் ளுயவரசனயலஇ 23 னுநஉநஅடிநச 2006 17:49 யாழ்ப்பாணம் வடமராட்சி திக்கம் மானாண்டிப் பகுதியில் அமைந்துள்ள சிறிலங்கா படையினரின் முகாம் மீது இனம்தெரியாத ஆயுததாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் 10நிமிடங்கள் வரைநீடித்துள்ளது. இத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஓரு படைச்சிப்பாய் கொல்லப்பட்டதுடன் மேலும் இருவர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ள

    • 0 replies
    • 746 views
  21. கல்லாறு, கரடிக்குளம், மாங்கேணி முகாம்களில் இருந்து ஒரேதடவையில் வாகரைக்கிராமங்களை நோக்கி சிறீலங்கா படையினர் பாரிய ஆட்டிலறி தாக்குதலை 8 மணிநேரத்திற்கு மேலாக மேற்கொண்டுள்ளனர். வாகரை வைத்தியசாலைக்கு மிக அண்மையாகவும் எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன. வாகரையை சிறீலங்கா படையினர் கிறீஸ்மஸ் பண்டிகைக்கு முன்னதாக இருநாட்களுக்குள் கைப்பற்றிவிடுவோம் என்று ஊடகத்தினர் மத்தியில் சிறீலங்கா இராணுவத்தளபதி லெப்.nஐனரல் சரத்பொன்சேகா சூளுரைத்திருந்தமை தெரிந்ததே.

  22. விடுதலைப் புலிகளினால் சரக்குக் கப்பல் காப்பற்றப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைத்தீவு கடற்பரப்பில் கடல் கொந்தளிப்பினால் சிக்கிய சரக்குக் கப்பல் ஒன்றை விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் காப்பாற்றியுள்ளனர். முல்லைத்தீவு கடற்பரப்பில் கடல் கொந்தளிப்பினால் சிக்கிய அந்தக் கப்பலில் இருந்த மாலுமிகளையும் கடற்புலிகள் காப்பாற்றியுள்ளனர் என்று விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். இதேவேளையில் இந்தியாவிலிருந்து தென்னாபிரிக்காவுக்கு 14,000 மெற்றிக் தொன் அரிசியை ஏற்றிச் சென்ற ஜோர்தானிய வர்த்தகக் கப்பலான FARHA III என்ற அந்தக் கப்பலில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே கப்பல் முல்லைத்தீவு பக்கம் திசை திரு…

  23. வடக்கு கிழக்கை பிரித்து திருகோணமலையினை மேலும் தனியாக பிரிக்கவும் நடவடிக்கை! வடக்கு, கிழக்கை பிரிக்குமாறு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் வடக்கு, கிழக்கை மூன்று நிர்வாக அலகாக பிரிக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. தற்போது இந்த நடவடிக்கையில் வடக்கு, கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரம ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கமைய வடக்கு, கிழக்கு மற்றும் திருகோணமலையென நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டு வட மாகாணத்துக்கான நிர்வாக மையம் வவுனியாவிலும் கிழக்கு மாகாணத்துக்கான நிர்வாக மையம் கல்முனையிலும் திருகோணமலை தனியொரு நிர்வாக மையமாகவும் செயற்படவுள்ளதாகவும் தெரியவருகிறது. திருகோணமலையின் நிர்வாகச் செயற்பாடுகளை ஓய்வு…

  24. ஈழத்தமிழர்களுக்கு நிம்மதி வாழ்வு ஏற்படுகிறவரை இந்த போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கும் - திராவிடர் கழகத் தலைவர் அறிவிப்பு. ஈழத் தமிழர்கள் நிம்மதியாக வாழுகிற நிலை ஏற்படுகின்றவரை இந்தப் போராட்டம் ஓயாது, தொடரும் என்று திராவிடர் கழகத் தலைவர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சென்னையில் நேற்று நடைபெற்ற “மனித சங்கிலி’’ போராட்டத்தின் போது ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார். ஈழத்திலே நடக்கும் கொடுமைகள் மிக அநாகரிகமான கொடுமைகளாகும். சொந்த நாட்டு மக்கள் மீதே குண்டு வீச்சு. சொந்த நாட்டு மக்கள் பட்டினியால் சாகவேண்டும் என்பதற்காக உணவுப் பொருட்களைக் கொண்டு செல்லாமல் தடுப்பதற்காக அங்குள்ள முக்கிய சாலைகளை சிங்கள இனவெறி அரசு மூடிவைத்துள்ளது. தொடர்ந்து குண்டுமழை அங்கு முகாம்களி…

  25. அடுத்த வருட ஆரம்பத்தில் இனப்பிரச்சினைக்கு தீர்வு - மகிந்த ராஜபக்ஷ இனப்பிரச்சினைக்கு அடுத்த வருட ஆரம்பத்தில் தீர்வு காணமுடியுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நம்பிக்கை தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற பொது வைபவம் ஒன்றில் பேசும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்வருட முற்பகுதியில் நியமிக்கப்பட்ட சர்வகட்சி பிரதிநிதிகள் குழு அடுத்த வருட முற்பகுதியில் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான ஆலோசனையைச் சமர்ப்பிக்கும். ஜனவரி அல்லது பெப்ரவரியில் இத்தீர்வு ஆலோசனை வரைவை சர்வகட்சி மாநாடு முன்வைக்கும். எப்படியிருந்தும் அரசு புலிகளுக்கு எதிரான பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கும். நாங்கள் சமாதானத்தை ஏற்படுத்த விரும்புகிறோம். எனினும், ஆயுத வன்முறையி…

    • 2 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.