ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142631 topics in this forum
-
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அளித்த நள்ளிரவு யோசனையை ஏற்று நோர்வே மற்றும் இணைத் தலைமை நாடுகளுக்கு எதிராக ஜே.வி.பி. களமிறங்கியுள்ளது. கொழும்பு ஊடகவியலாளர்களிடம் ஜே.வி.பி.யின் விமல் வீரவன்ச கூறியதாவது: சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக செயற்படும் நோர்வேயின் எரிக் சொல்ஹெய்ம் இங்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.அவர் சிறிலங்காவின் ஆளுநர் போன்று செயற்படுகிறார். சிறிலங்காவின் எதிரியாக எரிக் சொல்ஹெய்மை பிரகடனப்படுத்த வேண்டும். எரிக் சொல்ஹெய்ம் இங்கு வந்தாலும் கிளிநொச்சி செல்ல அனுமதிக்கக்கூடாது. இணைத் தலைமை நாடுகளின் அறிக்கைக்கு சிறிலங்கா அரசாங்கம் மறுப்பு கூறியும் இணைத் தலைமை நாடுகள் ஏன் பதில் தரவில்லை? தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும் அல்லது ச…
-
- 1 reply
- 1.3k views
-
-
யுனெஸ்கோவிருதிர்க்கு எதிரான இலத்திரனியல் கையெழுத்து சேகரிப்பு http://www.youtounesco.underskrifter.dk/ இங்கே கையொப்பம் இடுவதன் ழூலம் வீரசிங்கம் ஆனந்தசங்கரிக்கு யுனெஸ்கோவின் மதன் ஜீத் சிங் விருது வழங்கப்படுதற்கு எமது எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறோம். உலகத்தமிழ்மக்கள் http://www.youtounesco.underskrifter.dk/ http://www.youtounesco.underskrifter.dk/
-
- 34 replies
- 7.4k views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்திலிருந்து சிறிலங்கா வெளியேற்றம்? ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்திலிருந்து சிறிலங்கா அரசாங்கம் வெளியேற்றப்படக் கூடும் என்று தெரிகிறது. ஆசிய மனித உரிமைகள் ஆணையம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மாநாட்டுத் தீர்மானங்களில் சிறிலங்கா கைச்சாத்திடவில்லை என்றும் அந்த அமைப்புக்களால் சிறிலங்காவை கட்டுப்படுத்த முடியாது என்றும் கடந்த வாரம் சிறிலங்கா தலைமை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆகையால் சர்வதேச மனித உரிமைகள் சமூகத்திலிருந்து சிறிலங்காவை வெளியேற்ற வேண்டும். சிறிலங்கா உச்சநீதிமன்றத்தின் ஒப்புதலின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் மேற்…
-
- 1 reply
- 1.1k views
-
-
கொழும்பில் கடத்தப்பட்ட கணவனுக்காக போராடும் தமிழ்ப் பெண் சிறிலங்கா தலைநகர் கொழும்பில் தமிழர்களை அடையாளம் தெரியாத குழுவினர் கடத்தி பணம் பறிப்பதும் கொலை செய்வதுமான சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் கடத்தப்பட்ட புதிதாக திருமணமான கணவனை மீட்க கிளிநொச்சியைச் சேர்ந்த பெண் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார். கடந்த மே 26 ஆம் நாளன்று புதிதாக திருமணமான கிளிநொச்சியைச் சேர்ந்த இருதயசாமி பிரான்சிஸ் (வயது 34) என்பவரை அடையாளம் தெரியாத குழு கடத்திச் சென்றுள்ளனர். அவருக்கு பெப்ரவரியில் திருமணம் நடந்ததாகவும் கனடா செல்ல இருந்த நிலையில் கடத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. கனடா செல்வதற்கு சில நாட்கள் முன்பாக தனது மனைவியுடன் கொட்டாஞ்சேனை பகுதியில் விடுதி ஒன்றில் அவர் …
-
- 0 replies
- 1.3k views
-
-
உலகிலேயே மிக மோசமான மத சுதந்திர மீறல்கள் உள்ள நாடுகளின் பட்டியலில் சிறிலங்கா: அமெரிக்கா அறிவிப்பு உலகின் மிக மோசமான மத சுதந்திர மீறல்கள் உள்ள நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவை அமெரிக்கா இணைத்துள்ளது. இதற்கு ஜாதிக ஹெல உறுமய எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. ஜாதிக ஹெல உறுமயவின் பேச்சாளர் கூறியதாவது: சிறிலங்காவை தோல்வியடைந்த நாடு என்று முன்னர் அமெரிக்கா அறிவித்தது. ஜாதிக ஹெல உறுமயவை பயங்கரவாத அமைப்பாகவும் அறிவித்தது. மரபுகளுக்கு மாறாக மக்களை நாங்கள் மதம் மாற்றுவதில்லை. தன்னை ஜனநாயக நாடாக வெளிப்படுத்த முயற்சிக்கும் அமெரிக்காவில் பாரிய மனித உரிமை மற்றும் மத சுதந்திர மீறல்கள் உள்ளன. அமெரிக்க மக்கள் தொகையில் 37 விழுக்காடு உள்ள ஸ்பானிஸ் மக்களுக்கு அமெர…
-
- 0 replies
- 865 views
-
-
[செவ்வாய்க்கிழமை, 19 செப்ரெம்பர் 2006, 02:30 ஈழம்] [ம.சேரமான்] மட்டக்களப்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் பிரதேசத்தை நோக்கி சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட முனநகர்வு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு செங்கலடி கறுத்தபாலம் பகுதியிலிருந்து பதுள்ள வீதியூடாக நேற்று திங்கட்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் இம்முன்நகர்வு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து தமிழீழ விடுதலைப் புலிகள் தற்காப்புத் தாக்குதலை மேற்கொண்டனர். இருதரப்பினரிடையே ரொக்கெட் வீச்சு அதிகாலை 4.30 மணிவரை நீடித்தது. இதையடுத்து சிறிலங்கா இராணுவத்தினர் தமது நிலைகளுக்குப் பின்வாங்கினர். சிறிலங்கா இராணுவத்தினர் ரொக்கெட் தாக்குதல்களினால் விடுதலைப் புலிகளின் பிரதேச கிராமங்களான கரடியனாறு, இலுப்ப…
-
- 0 replies
- 914 views
-
-
மக்களைப் பாதுகாப்பதில் தோல்வியடைந்த நாடு சிறிலங்கா: ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் சாடல் சட்டத்தின் ஆட்சியை நடைமுறைப்படுத்தவும் மக்களைப் பாதுகாக்கவும் சிறிலங்கா அரசாங்கம் தவறிவிட்டது என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பொறுப்பாளர் லூயிஸ் ஆர்பௌர் குற்றம்சாட்டியுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத்தை இன்று திங்கட்கிழமை தொடங்கி வைத்து லூயிஸ் ஆர்பௌர் பேசியதாவது: சிறிலங்காவில் நாளாந்தம் காணாமல் போவதும் கொல்லப்படுவதும் நடைபெற்று வருகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கம் 2 இலட்சத்துக்கு 40 ஆயிரம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இனப்பிரச்சனையில் பொதுமக்கள்தான் சிக்கியுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய அளவில் மனித உரிமைகளை மீறியிருப்பினும் சிறிலங்கா…
-
- 1 reply
- 1.1k views
-
-
பேச்சுகள் என்ற போர்வையில் பாரிய படை நடவடிக்கைகளை நகர்த்தும் சிறிலங்கா அரசு - விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுகளை ஆரம்பிக்கத் தயாரென அரசு கூறியுள்ள அதேநேரம் புலிகளுக்கெதிராக பாரிய தாக்குதலை நடத்துவதற்கான முனைப்பிலும் அரசு மிகத் தீவிரம் காட்டுவதாக தெரியவருகின்றது. இதற்காக படையினரை சகல வழிகளிலும் அரசு தயார்படுத்தி வருவதாகவும் அரச வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. தேசிய பிரச்சினைக்கு தீர்வொன்றைக் காணும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் அரசு பேச்சுகளை நடத்தி வரும் அதேநேரம், விடுதலைப் புலிகளுடன் அடுத்த மாத முற்பகுதியில் ஒஸ்லோவில் சமாதானப் பேச்சுகளை நடத்தவும் அரசு நோர்வே அனுசரணையாளர்களிடம் சம்மதம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சமாதானப் பேச்சுகளை ஆரம்பிப்…
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழில் 7 தாக்குதல்கள்: 3 இராணுவத்தினர் பலி- 8 பேர் காயம் யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டும் நடத்தப்பட்ட 7 தாக்குதல்களில் 3 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். யாழ். அளவெட்டியில் நேற்று இரவு 7.30 மணியளவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஆர்.எம். சந்திரசிறி என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றொருவர் படுகாயமடைந்தார். தௌ;ளிப்பளையில் நேற்று மாலை 5.30 மணியளவில் வீதி சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா இராணுவத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் படுகாயமடைந்த கோர்பரல் ஐ.எம்.ஏ.ஐ. வீரசிங்க சிகிச்சை பலனின்றி பலாலி மருத்துவமனையில் உயிரிழந்தார். இத்தாக்குதலில் இராணுவத்தைச…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஜே.என்.டிக்சிட் போல் செயற்பட்டால் மீண்டும் பிரச்சனை ஏற்படும்: இந்தியாவுக்கு அனுரா எச்சரிக்கை [திங்கட்கிழமை, 18 செப்ரெம்பர் 2006, 05:36 ஈழம்] [ம.சேரமான்] ராஜீவ் ஆட்சிக்காலத்தில் சிறிலங்காவுக்கான முன்னால் இந்தியத் தூதுவராக இருந்த ஜே.என்.டிக்சிட் போல் இந்தியத் தூதுவர்கள் செயற்பட்டால் சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே மீண்டும் பிரச்சனை ஏற்படும் என்று சிறிலங்கா சுற்றுலாத்துறை அமைச்சர் அனுரா பண்டாரநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் கூறியுள்ளதாவது: தேசிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்று 1980-களிலிருந்தே குரல் கொடுத்து வருகிறேன். தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் போது இனப்பிரச்சனை, வாழ்க்கைச் செலவீனப் …
-
- 1 reply
- 1.1k views
-
-
இந்திய அமைதிப்படை இருந்திருந்தால் இனப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டிருக்கும்: ரணில் விக்கிரமசிங்க [திங்கட்கிழமை, 18 செப்ரெம்பர் 2006, 05:20 ஈழம்] [ம.சேரமான்] இந்திய அமைதிப்படை இருந்திருந்தால் இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டிருக்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் 100 ஆவது பிறந்த நாள் நிகழ்வில் நேற்று பங்கேற்ற ரணில் விக்கிரமசிங்க பேசியதாவது: இந்திய-இலங்கை ஒப்பந்தத்துக்குப் பின்னர் பல்வேறு தமிழ் ஆயுதக் குழுக்கள் ஜனநாயகப் பாதைக்குத் திரும்பின. இந்திய அமைதிப் படையின் நடவடிக்கையானது விடுதலைப் புலிகளையும் ஜனநாயகப் பாதைக்கு கொண்டு வரும் வகையில் இருந்தது. ஜே.வி.பி.யின் அழுத்தத்தால் இந்திய…
-
- 1 reply
- 1.1k views
-
-
பேச்சுவார்த்தையில் துணை இராணுவக்குழுவை சேர்க்க அரசாங்கம் முயற்சி: அனுரா பண்டாரநாயக்க தகவல் [திங்கட்கிழமை, 18 செப்ரெம்பர் 2006, 04:47 ஈழம்] [ச.விமலராஜா] இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தையில் முஸ்லிம்களை விலக்கி விட்டு சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவை சேர்க்க அரசாங்கம் முயற்சிப்பதாக சிறிலங்கா சுற்றுலாத்துறை அமைச்சர் அனுரா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எம்.எச்.எம்.அஸ்ரப் நினைவு நிகழ்வில் அனுரா பண்டாரநாயக்க பேசியதாவது: ஒரு சிறந்த பயங்கரவாத இயக்கம் ஆயுதங்களைக் கீழே போட்டு விடுமா? அறிவீனமான நிபந்தனைகள் ஏதும் விதிக்காமல் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சு நடத்த வேண்டும். கருணா…
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழர்களின் வடக்கு - கிழக்குத் தாயகப் பிரதேசங்களை அந்நிய நாடாக சிறிலங்கா ஏற்றுக்கொண்டுள்ளதாகவே நடக்கும் நிகழ்வுகள் புலப்படுத்துகின்றன. பால் வேறுபாடின்றி இனப்படுகொலைகள், மூடிய எல்லைகளுக்கப்பால் பொருளாதாரத் தடை, பெரும் படை நகர்வை மேற்கொண்டு சிறு துரும்பை ஆக்கிரமித்தவுடன் ஆனந்தப் பெருங்களிப்பு முதலியன இப்படித்தான் கருத வைக்கின்றன. புலிகளின் ஆட்லறி நிலைகளைத் தகர்க்கவே படை நடவடிக்கை மேற்கொள்வதாக சர்வதேசத்திற்கு கண்துடைப்புக் காரணங்கள். அத்துடன் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் வரையறுக்கப்படாத புதிய சரத்துக்களை தாமாகவே பின்னிணைப்பாக அரசு சேர்த்துக் கொண்டிருக்கிறது. இப்புதிய சரத்துக்களில் ஆட்லறி நிலைகளை அகற்றுதல், பொங்கு தமிழ் ஏற்பாட்டாளர்களை புகைப்படம் மூலம் இனங்கண்டு கொலை…
-
- 0 replies
- 1.2k views
-
-
[திங்கட்கிழமை, 18 செப்ரெம்பர் 2006, 04:11 ஈழம்] [ம.சேரமான்] மன்னாரில் சிறிலங்கா இராணுவத்தினரால் சோதனைச் சாவடிகள் மூடப்பட்டதையடுத்து மாணவர்களின் தேர்வுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஓகஸ்ட் மாதம் அனைத்து மாவட்டங்களிலும் 2 ஆம் பகுதி தேர்வு ஓகஸ்ட் மாதம் நடத்தப்படும். ஆனால் ஓகஸ்ட் மாதம் திடீரென பாடசாலைகளை சிறிலங்கா அரசாங்கம் மூடிவிட்டது. தற்போது பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் சில இடங்களில் தேர்வுகள் நடைபெற்றுள்ளன. மன்னாரில் உயிலங்குளம் மற்றும் மடு சோதனைச் சாவடிகள் மூடப்பட்டுவிட்ட்டதால் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதி மடு மற்றும் அடம்பன் கல்வி வலய பிரதேசங்களுக்கு வினாத் தாள்களை கல்வி திணைக்களத்தினர் எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்…
-
- 0 replies
- 680 views
-
-
மன்மோகன், கொபி அனானுடன் மகிந்த சந்திப்பு [திங்கட்கிழமை, 18 செப்ரெம்பர் 2006, 04:55 ஈழம்] [தெ.சந்திரநாதன்] கியூபாவில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் கொபி அனானை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, மகிந்தவின் செயலாளர் லலித் வீரதுங்க, சமதான செயலகப் பணிப்பாளர் பாலித கோகென்ன ஆகியோர் உடனிருந்தனர். இலங்கை அமைதி முயற்சிகளுக்கு உதவுவதாக கொபி அனான் தெரிவித்தார். சிறிலங்கா இராணுவத்தின் நடவடிக்கைகளை கொபி அனானிடம் மகிந்த நியாப்படுத்தினார். நீதிக்குப் புறம்பான படுகொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல் ஆகியவை தொடர்பில் விசாரணைகளை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கொபி அனானிடம் மகிந்த விளக்கின…
-
- 0 replies
- 814 views
-
-
இருண்டு கிடக்கிறது ஈழத்தமிழர் வாழ்க்கை - ஆனந்த விகடன் http://www.tamilnaatham.com/pdf_files/av_2..._2006_09_15.pdf
-
- 0 replies
- 1.1k views
-
-
:arrow: [url=http://www.eelampage.com/?cn=28806]ஈழத் தமிழர் ஆதரவை சீர்குலைக்க சென்னை துணைத் தூதுவர் ஹம்சா சதி: "நக்கீரன்" அம்பலம் [ஞாயிற்றுக்கிழமை, 17 செப்ரெம்பர் 2006, 16:08 ஈழம்] [புதினம் நிருபர்] தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம்கள் மூலம் ஈழத் தமிழர் ஆதரவை சீர்குலைக்க சிறிலங்காவுக்கான சென்னை துணைத் தூதுவராக உள்ள ஹம்சா சதித்திட்டம் தீட்டுவதாக தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் "நக்கீரன்" ஏடு அம்பலப்படுத்தியுள்ளது. நக்கீரன் வாரமிருறை ஏட்டில் வெளியாகி உள்ள கட்டுரை விவரம்: "இப்போதுள்ள சூழலை அதிபர் ராஜபக்ச பயன்படுத்தி அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கவேண்டும்'' என அதிபரிடமே நேரில் வலியுறுத்தியிருக்கிறார். இலங்கைக்கு வந்த இந்திய நிதியமைச்சர் ப.…
-
- 7 replies
- 1.9k views
-
-
[ஞாயிற்றுக்கிழமை, 17 செப்ரெம்பர் 2006, 17:03 ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு பயங்கரவாதச் செயல் என்றும் பாலஸ்தீனத்தின் விடுதலைப் போராட்டம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் கியூபா அணிசேரா நாடுகள் கூட்டத்தில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கியூபாவில் மகிந்த பேசியதாவது: பாலஸ்தீன மக்களின் அரசியல் உரிமைகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட வேண்டியுள்ளது. மனித உரிமைகள், சமூக, பொருளாதார உரிமைகளை வென்றெடுக்க வேண்டியிருக்கிறது. உலக ஆட்சி முறையை ஜனநாயகப்படுத்துவதில் நாம் வெற்றி பெற வேண்டியுள்ளது. சட்டவிரோத ஆயுதங்கள், பயங்கரவாதம், போதைப்பொருட்கள், சட்டவிரோதப் பணப்பரிமாற்றம், குற்றச் செயல்களால் நாட்டின் இறைமைக்கும் சிவ…
-
- 2 replies
- 1.4k views
-
-
[ஞாயிற்றுக்கிழமை, 17 செப்ரெம்பர் 2006, 18:04 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா தலைநகர் கொழும்பில் கடந்த 2 மாதங்களில் இந்திய வர்த்தகர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டுள்ளனர் என்று சிறிலங்கா நகைக்கடை வர்த்தகர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த அமைப்பினர் கூறியுள்ளதாவது: கடந்த இரண்டு, மூன்று மாதங்களில் கொழும்பில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் கடத்தப்பட்டுள்ளனர். கப்பப் பணம் கொடுத்தவுடன் சிலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். பணம் கொடுத்த பின்னரும் விடுவிக்கப்படாதோர் எண்ணிக்கை அதிகம். இரு மாதங்களுக்கு முன்னர் கொழும்பில் கடத்தப்பட்ட ஒரு வர்த்தகர் கப்பப் பணமாக ரூ. 6 மில்லியன் செலுத்தினார். ஆனால் அவர் விடுவிக்கப்படவில்லை. இந்திய வர்த்தகர்கள…
-
- 0 replies
- 1k views
-
-
யாழ்ப்பாணத்துக்கான கப்பல் மூலமான விநியோகப் பணி நிறுத்தம்: செஞ்சிலுவைச் சங்கம் [ஞாயிற்றுக்கிழமை, 17 செப்ரெம்பர் 2006, 18:10 ஈழம்] [கொழும்பு நிருபர்] யாழ்ப்பாணத்துக்கான அத்தியாவசியப் பொருட்களை கப்பல் மூலம் கொண்டு செல்லும் பணிகளை நிறுத்துவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் டேவிட் விக்னதி கூறியதாவது: கப்பல் போக்குவரவு தொடர்பில் சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் பொதுநிலைப்பாட்டுக்கு வரும் வரை அனைத்து கடல்சார் பணிகளும் இடை நிறுத்தப்படும். நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களின் பாதுகாப்பு கருதி இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்களை பட்டினியால் சாகவிடமுடியாது. …
-
- 0 replies
- 868 views
-
-
[ஞாயிற்றுக்கிழமை, 17 செப்ரெம்பர் 2006, 18:25 ஈழம்] [ம.சேரமான்] யாழ். தீவகத்துக்கான தரை வழிப்பாதையை சிறிலங்கா கடற்படையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் திடீரென மூடியுள்ளனர். அல்லைப்பிட்டியூடான இந்தப் பாதை மூடப்பட்டமையால் இரு புறமும் மக்கள் சிக்கியுள்ளனர். எரிபொருள், தகவல் தொடர்பு உள்ளிட்டவைகளை ஏற்கனவே தீவகப் பிரதேசத்தில் சிறிலங்கா இராணுவம் முடக்கி உள்ள நிலையில் தரவழிப்பாதையையும் மூடியிருப்பதால் அங்கு நிலைமை மோசமடையும் என்று அஞ்சப்படுகிறது. http://www.eelampage.com/?cn=28815
-
- 0 replies
- 788 views
-
-
வட, கிழக்கில் தமிழ் குழுக்களுக்கு ஆயுதங்களுடன் இராணுவ பாதுகாப்பு? [17 - September - 2006] [Font Size - A - A - A] வடக்கு, கிழக்கில் தமிழ் குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஈ.பி.டி.பி., புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். (வரதர் அணி) போன்றவற்றுக்கே இவ்வாறு ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்புகள் தெரிவிக்கின்றன. இதுவரை இந்தக் குழுக்களுக்கு 168 ரி. 56 ரக துப்பாக்கிகளும் கைத்துப்பாக்கிகளும் வழங்கப்பட்டுள்ளன. இதைவிட, இவற்றின் உறுப்பினர்களுக்கு பொலிஸ் மற்றும் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலையடுத்தே, இவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. நிலைமைக்கேற்ப மேலும…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் நாளைய தினம் நியூயோர் பயணமாக உள்ளனர். இக்குழுவினர் ஐக்கிய நாடுகள் சபையின் 61வது வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். ஜனாதிபதி அமெரிக்க ஜனாதிபதி உட்பட 12 நாடுகளின் தலைவர்களை சந்திக்க உள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. http://pathivu.com/index.php?subaction=sho...t_from=&ucat=1&
-
- 0 replies
- 928 views
-
-
தொண்டமான் தமிழரின் தலைவனா எட்டப்பனா...??? மலையாக மக்களின் ஏக பிரதி நிதி என்று தன்னை கூறிக் கொள்ளும் ஆறுமுகம் தொண்டமான் அந்த மக்களின் வாழ்வுரிமையை காற்ப்தற்க்கவே தான் அரசோடு கூட்டு வைத்து அந்த மக்களின் அவல வாழ்வை துடைத்து வருவதாகவும் கூறிய அவர் ஏன் இந்த அவசர கால சட்டத்திற்க்கு ஆதரவாக வாக்களித்தார்...?? கண்மூடித்தனமாக சிங்க படைகளால் ஈவ் இரக்கமின்றி புலிகள் என்று குற்றம் சாட்டப் பட்டு எத்தனை மக்கள் பரிதபகரமாக இன்று சிறையில் வாழ்கிறார்கள். எத்தனையோ குடும்பங்கள் தமது அன்றாட கடமைகளை கூட சரியான முறையில் செய்ய முடியாத துப்பாக்கிய நிலையில் வாழ்க்கை நடாத்தி கொண்டு இருக்கின்றார்கள் . வறுமையின் விழிம்பில் அந்த மக்கள் ஊசுலாடிக் கொண்டு இருக்கை…
-
- 63 replies
- 9.8k views
-
-
ஞாயிறு 17-09-2006 02:03 மணி தமிழீழம் [மயூரன்] கடத்தல், கைது தொடர்பாக கோதபாய ராஜபக்ஷவுடன் தமிழ் எம்.பி.க்கள் சந்திப்பு. தலைநகர் கொழும்பில் தமிழர்கள் கடத்தப்படுவது, காணாமல்போவது, கப்பம் பெறுவது, சந்தேகத்தின் பேரில் நூற்றுக்கணக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுவது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவுடன் நடைபெற்ற சந்திப்பு எந்தவொரு திருப்தியையும் அளிக்கவில்லை என்று அச்சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை காலை 11 மணி தொடக்கம் 12 மணிவரை இந்த விசேட கூட்டம் நடைபெற்றது. மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், அமைச்சருமான பெ. சந்திரசேகரன், மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ …
-
- 2 replies
- 1.1k views
-