Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழீழ விடுதலைக்காக தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை ஒன்று சேரப்போற்றும் மாவீரர் நாள் உரையை தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் நாளை திங்கட்கிழமை மாலை 5.30 மணிக்கு உரை நிகழ்த்தவுள்ளார். தமிழீழ தேசிய மாவீரர் நாள் நாளை திங்கட்கிழமை தமிழ் மக்களால் உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட உள்ளது. மாவீரர்கள் அனைவரையும் ஒன்று சேரப்போற்றும் புனித வேளை தொடங்குவதற்கு முன்பாக மாலை 5.30 மணிக்கு தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் மாவீரர் நாள் உரை நிகழ்த்துவார். தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் உரையைத்தொடர்ந்து மாலை 6.05 மணிக்கு ஒரு மணித்துளி நேரம் மணியொலி எழுப்பப்படும். தொடர்ந்து 6.06 மணிக்கு மாவீரர்களுக்காக அகவணக்கம் செலுத்தப்படும். அதனைத்தொடர்ந்து 6.07 மணி…

    • 0 replies
    • 1.4k views
  2. http://karthikai27.com/ இத் தளத்தில் மாவீரருக்கு ஒளிவிளக்கேற்றுவோம். ஈழத்திலிருந்து ஜானா

  3. சிறிலங்காவில் ஐ.நா. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தை அமைக்க வலியுறுத்தல். சிறிலங்காவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தை ஏற்படுத்த வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. நியூயோர்க்கை தலைமையிடமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சார்பில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் எதிர்வரும் திங்கட்கிழமை கூடும் ஐ.நா. கூட்டத்தில் சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விவாதம் நடத்த வேண்டும், சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபை செயற்பட வேண்டும், சிறிலங்காவில் மனித உரிமைகள் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது இராணுவத்துக்கும் விடுதலைப் புலிப் போராளிகளுக்…

  4. வாகரையில் இராணுவத்தினரின் நகர்வு முயற்சி முறியடிப்பு. மட்டக்களப்பு வாகரையில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட நகர்வு முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு மாங்கேணி இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினர் எறிகணைத் தாக்குதலை நடத்தியவாறு நகர்வு நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்த நகர்வு நடவடிக்கையை விடுதலைப் புலிகள் முறியடித்ததுடன் படைத்தரப்பினருக்கு இழப்புக்களை ஏற்படுத்தியிருந்தனர். இழப்புக்களோடு இராணுவத்தினர் பின்வாங்கிச் சென்றனர். இழப்பு விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இராணுவத்தினரின் நகர்வு நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்பில் விடுதலைப் புலிகள் தரப்பில் போராளி ஒருவர் வீரச்சாவடைந்தார். …

  5. Started by BLUE BIRD,

    somebody missing from your family or friends in srilanka or tamileelam,please contact to this address.but foto is very use full missingtamil@yahoo.co.uk or more information go to www.nitharsanam.com

  6. இஸ்ரேல்- அமெரிக்காவுக்கு ஆதரவாக ஐ.நா. வாக்கெடுப்பில் சிறிலங்கா பங்கேற்கவில்லை [ஞாயிற்றுக்கிழமை, 26 நவம்பர் 2006, 14:31 ஈழம்] [ம.சேரமான்] பலஸ்தீனத்தின் காசாப் பகுதியில் இஸ்ரேலிய இரானுவ நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் நிறைவேற்ற தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் சிறிலங்கா குழுவினர் பங்கேற்கவில்லை. இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைக்கு எதிரான வாக்கெடுப்பானது கடந்த நவம்பர் 17 ஆம் நாள் நடைபெற்றது. காசாப் பகுதியில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்ற தீர்மானத்துக்கு ஆதரவாக 156 பேர் வாக்களித்தனர். அமெரிக்கா, இஸ்ரேல், அவுஸ்திரேலியா எதிராக வாக்களித்தன. 6 நாடுகள் பங்கேற்கவில்லை. அணிசேரா நாடுகள் ம…

    • 0 replies
    • 851 views
  7. தமிழர் தாயகத்திலிருந்து சிங்களப் படைகளை விலக்கிக் கொள்ள அமெரிக்கா உதவ வேண்டும் : பாஸ்டன் குளோப் இதழ் எச்சரிக்கை தமிழர் தாயகத்திலிருந்து சிறிலங்காப் படைகள் விலக்கிக்கொள்ள அமெரிக்கா உதவ வேண்டும் என்று அமெரிக்காவின் பாஸ்டன் குளோப் ஏட்டின் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலையங்கத்தின் தமிழாக்கம் வருமாறு: இலங்கையில் தொடர்ந்து வரும் அரசாங்கங்களுக்கும் தமிழ் புலிகளுக்கும் இடையே விட்டுவிட்டு நடைபெறும் யுத்தமானது கால் நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக நீடித்து 65 ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர். உலகின் கொடூரமான யுத்தமாக இது இருப்பினும் அமெரிக்கா நேரடியாக தலையிடுகிற மற்ற யுத்தங்களைக் காட்டிலும் குறைவான கவனத்தையே ஈர்த்துள்ளது. இருதரப்பிலும் இரத்தகளறிய…

  8. ஏ-9 மூடப்பட்டதற்கு முன்னரும் அதன் பின்னருமான யாழ். விலைகள் [ஞாயிற்றுக்கிழமை, 26 நவம்பர் 2006, 08:35 ஈழம்] [ம.சேரமான்] யாழ்ப்பாணத்தில் ஏ-9 பாதையை சிறிலங்கா இராணுவம் மூடியதற்கும் அதன் பின்னருமான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை விவரம்: (இரண்டாவதாக தரப்பட்டுள்ள விலை முன்னையது- மூன்றாவதாக உள்ளவை தற்போதைய விலை) அரிசி 1 கிலோ- ரூ. 35 - ரூ. 180 மா 1 கிலோ - ரூ. 40 - ரூ. 150 சீனி 1 கிலோ - ரூ. 60 - ரூ. 400 பால் மா 400 கிராம் ரூ. 145- ரூ. 400 1 தேங்காய் - ரூ. 15- ரூ. 90 தேங்காய் எண்ணெய் 1 லிற்றர்- ரூ. 75- ரூ. 450 செத்தல் மிளகாய் 1 கிலோ - ரூ. 160 - ரூ. 480 புளி 1 கிலோ - ரூ. 60- ரூ. 150 வெள்ளைப்பூடு 1 கிலோ - ரூ. 60-…

  9. இன்று பிரபாகரனின் 52 ஆவது பிறந்ததினம் நாளைய உரையில் அனைவரது கவனமும் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்று தனது 52 ஆவது வயதில் காலடி பதிக்கிறார். 1954 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் பிறந்த இவர்இ இன்று உலகின் கவனத்தை மிகவும் கவர்ந்த விடுதலை அமைப்பொன்றின் தலைவராகத் திகழ்கிறார். கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் போராட்ட களத்தில் குதித்த இவரை இலங்கையில் போரென்றாலும் சரி சமாதானமென்றாலும் சரி அதில் மிகவும் முக்கியமாயிருப்பவர் என்று பெரும் எண்ணிக்கையானோர் கூறுகின்றனர். மிகவும் கட்டுக்கோப்பானதும் ஒழுக்கமுடையதுமான பெயர் பெற்ற விடுதலைப் புலிகள் அமைப்பு இன்று உலகில் விடுதலை அமைப்புகளில் தரைப்படையுடன் கடற்படை மற்றும் விமா…

  10. ஏ-9 திறக்காவிட்டால் நடவடிக்கை எடுக்க புலிகள் முடிவு: இளந்திரையன் [ஞாயிற்றுக்கிழமை, 26 நவம்பர் 2006, 06:24 ஈழம்] [கொழும்பு நிருபர்] ஏ-9 பாதையை சிறிலங்கா அரசாங்கம் எதிர்வரும் வாரங்களில் திறக்காவிட்டால் நடவடிக்கை எடுப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில வார ஏட்டுக்கு இளந்திரையன் தெரிவித்துள்ள கருத்து: நீண்டகாலமாக ஏ-9 பாதை மூடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் பட்டினிச் சாவை நோக்கி உள்ளனர். ஏ-9 பாதை மூடப்பட்டமையானது யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாகும். எதிர்வரும் வாரங்களில் அரசாங்கம் இதுவிடயத்தில் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளாவிட்டால் நடவடிக…

  11. தமிழர் தாயகம் ஆக்கிரமிப்பாளரிடமிருந்து விரைவில் மீட்டெடுக்கப்படும்:-கேணல் தீபன் தமிழர் தாயகம் விரைவில் ஆக்கிரமிப்புக்களிடமிருந்து இருந்து மீட்டெடுக்கப்படும் கட்டளைத் தளபதி கேணல் தீபன் தெரிவித்துள்ளார் கிளிநொச்சி அக்கராயன் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் மதிப்பளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்ததாவது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வென்றெடுப்பதற்கு அகிம்;சை வழி உரிய வழியல்ல ஆயுத வழிமூலம்தான் வென்றெடுக்க முடியும் என்ற நிலைப்பாட்டை உணர்ந்த எமது தேசியத் தலைவர் அவர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பாக ஆயுதத்தால் நசிக்கப்பட்ட தமிழர்களின் அகிம்சைப் போராட்டத்தை ஆயுதத்தாலேயே வெல்லப்படவேண…

    • 12 replies
    • 2.7k views
  12. ராஜ பக்ஷே இந்தியா வருகை: தமிழ் நாட்டில் பலத்த எதிர்ப்பு....!!! ------------------------------------------------------------ இலங்கை அதிபர் மஹிந்த ராஜ பக்ஷே யின் இந்திய வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தமிழ் நாட்டு அரசியல் கட்சிகள் எதிர்ப் புப் போராட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளன. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இலங்கை ராணுவம் நடத்திவரும் தாக்குதல்களைக் கண்டித்து, திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறது என்று கட்சி உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு ரவிக்குமார் கூறினார். நாளை இலக்கியம், கலை மற்றும் திரைப்படத்துறையினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றனர். கவிஞர் வைரமுத்து தொடங்கி வைக்கும் இந்தப் போராட்டத்தி…

  13. இராமநாதபுரம் முகாமில் ஈழமக்களின் பிள்ளைகள் 10 ம் வகுப்பு தேர்வு எழுத வசதியாக இலங்கையில் இருந்து ஆசிரியர்கள் வந்து பாடம் பயிற்று வைக்கிறார்கள. இது ஒரு நல்ல முயற்சி என தோன்றுகிறதுஃ

  14. தமிழர் பிரச்சினைக்கு தீர்வு இல்லையேல் அடுத்தவருட மாவீரர் உரை யாழ்ப்பாணத்தில் நாடாளுமன்றத்தில் கஜேந்திரன் எம்.பி. உரை ""வடக்கு கிழக்கில் அரச படையினர் மேற்கொண்டு வரும் அடாவடித்தனம் தொடர்ந்தால் அடுத்த வருடம் நவம் பர் மாதம் 27ஆம் திகதி எமது தலைவர் யாழ்ப்பாணத்திலி ருந்து மாவீரர் தின உரையை நிகழ்த்துவார். ""எமது மக்களுக்குப் பொருத்தமான அரசியல் தீர்வை முன்வைக்காவிட்டால் விரைவில் நாம் தமிழீழத்தை அமைப் போம். எமது கொடி ஐ.நாவில் பறக்கும். படையினர் உடனடி யாக வடக்கு கிழக்கை விட்டு வெளியேற வேண்டும். இல்லையேல் நாம் வெளியேற்றுவோம்''. இவ்வாறு நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்ற அமைச்சு களுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரை யாற்றிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்…

  15. ஏ-9 மூடப்பட்டதற்கு முன்னரும் அதன் பின்னருமான யாழ். விலைகள் யாழ்ப்பாணத்தில் ஏ-9 பாதையை சிறிலங்கா இராணுவம் மூடியதற்கும் அதன் பின்னருமான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை விவரம்: (இரண்டாவதாக தரப்பட்டுள்ள விலை முன்னையது- மூன்றாவதாக உள்ளவை தற்போதைய விலை) அரிசி 1 கிலோ- ரூ. 35 - ரூ. 180 மா 1 கிலோ - ரூ. 40 - ரூ. 150 சீனி 1 கிலோ - ரூ. 60 - ரூ. 400 பால் மா 400 கிராம் ரூ. 145- ரூ. 400 1 தேங்காய் - ரூ. 15- ரூ. 90 தேங்காய் எண்ணெய் 1 லிற்றர்- ரூ. 75- ரூ. 450 செத்தல் மிளகாய் 1 கிலோ - ரூ. 160 - ரூ. 480 புளி 1 கிலோ - ரூ. 60- ரூ. 150 வெள்ளைப்பூடு 1 கிலோ - ரூ. 60- ரூ. 2,000 கொத்தமல்லி 1 கிலோ- ரூ. 180 - ரூ. 600 த…

  16. த.தே.கூ உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு: சிறிலங்கா நாடாளுமன்றம் உறுதி [ஞாயிற்றுக்கிழமை, 26 நவம்பர் 2006, 08:10 ஈழம்] [கொழும்பு நிருபர்] தென் தமிழீழ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று சிறிலங்கா நாடாளுமன்றம் உறுதியளித்துள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தங்கேஸ்வரி கதிர்காமர் இது தொடர்பிலான பிரச்சனையை முன்வைத்தார். இதனையடுத்து பிரதி சபாநாயர் கீதாஞ்சன குணவர்த்தன, அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார். சிறிலங்கா நாடாளுமன்…

    • 0 replies
    • 746 views
  17. உணவுப் பொருட்கள் செல்லாவிட்டால் வாகரையில் பாரிய மனித அவலம் ஏற்படும்: ஐ.நா. எச்சரிக்கை [ஞாயிற்றுக்கிழமை, 26 நவம்பர் 2006, 08:23 ஈழம்] [ச.விமலராஜா] வாகரையில் இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கான உணவுப் பொருட்கள் செல்லாது போனால் பாரிய மனித அவலங்கள் ஏற்பட்டுவிடும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐ.நா. பேச்சாளர் ஓர்லா கிளிண்டன் இது தொடர்பில் கூறியுள்ளதாவது: வாகரையில் இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கான உணவுப் பொருட்கள் அவசியத் தேவையாக உள்ளது. ஒக்ரோபர் 31 ஆம் நாளுக்குப் பின்னர் எதுவித உணவுப் பொருட்களும் அங்கு சென்றடையவில்லை. ஏற்கனவே வாகரை நிலைமை மிகவும் மோசமடைந்திருப்பதை நாம் அறிவோம். பாரிய மனித அவலம் ஏற்படுவதைத் தடுக்க வாகரைக்கு ஐ.நா. மற்றும் இத…

    • 0 replies
    • 704 views
  18. ஏ-9 பாதையை திறக்க 4 நிபந்தனைகள்: கேகலிய ரம்புக்வெல அறிவிப்பு [ஞாயிற்றுக்கிழமை, 26 நவம்பர் 2006, 07:46 ஈழம்] [கொழும்பு நிருபர்] ஏ-9 பாதையை திறக்க வேண்டுமானால் அரசாங்கத்தின் 4 நிபந்தனைகளை தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்க வேண்டும் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளாரான அமைச்சர் கேகலிய ரம்புக்வெல அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது: ஏ-9 பாதையை நிரந்தரமாக திறக்க வேண்டுமானால் தேசப் பாதுகாப்பு தொடர்பிலான 4 நிபந்தனைகளை விடுதலைப் புலிகள் ஏற்க வேண்டும். - முகமாலை மீது தாக்குதல் நடத்தக்கூடாது - பொதுமக்களை கேடயமாக பயன்படுத்தக்கூடாது - இளைஞர்களை சேர்ப்பதை நிறுத்த வேண்டும் - வரி அறவிடுதலை நிறுத்த வேண்டும் ஆகிய நிபந்தன…

    • 0 replies
    • 731 views
  19. யாழ். பல்கலைக்கழகத்தை திறக்க முடியாத நிலை நீடிக்கிறது [ஞாயிற்றுக்கிழமை, 26 நவம்பர் 2006, 08:15 ஈழம்] [கொழும்பு நிருபர்] யாழ். பல்கலைக்கழகத்தை திறக்க முடியாத நிலை நீடிக்கிறது என்று பல்கலைக்கழகப் பதிவாளர் ஆர்.கந்தசாமி தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக நிலைமைகள் குறித்து கந்தசாமி தெரிவித்துள்ளதாவது: யாழ். பல்கலைக்கழகம் விரைவில் திறக்கப்பட வேண்டுமாயின் பல விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியுள்ளது. வெளியிடங்களில் உள்ள மாணவர்கள் இன்னமும் யாழ்ப்பாணத்துக்குத் திரும்ப முடியவில்லை. அவர்கள் தங்களது படிப்பைத் தொடர வேண்டுமாயின் யாழ்ப்பாணத்துக்கு திரும்ப வேண்டும். மாணவர்களுக்கான தங்குமிட வசதியும் பிரச்சனையாக உள்ளது. பல்கலைக்கழகத்துக்கு அருகாமையில் உள்ள வீடுகளில் உள்ளோர்…

    • 2 replies
    • 1.1k views
  20. மாவீரர் நாள் ஆரம்ப நிகழ்வில் தமிழீழத் தேசியத் தலைவர் பங்கேற்பு. மாவீரர் வாரத்தின் முதல் நாள் நிகழ்வில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்கள் பங்கேற்று வணக்கம் செலுத்தியுள்ளார். இதற்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடத்தில் பொதுச் சுடரேற்றி முதல் மாவீரன் லெப்.சங்கரின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து வணக்கம் செலுத்தியுள்ளார். இந்நிகழ்வில் தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள் என பலரும் கலந்துகொண்டனர். www.pathivu.com

  21. பிளவர் வீதியின் எல்லா குறுக்கு வீதிகளும் திடீரென முடப்பட்டன. போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பல இடங்களில் மக்கள் சிறு கூட்டங்களாக்கப்பட்டு நகர முடியாதவண்ணம் சுற்றிவளைக்கப்பட்டனர். கடைகளுக்கு எதிரே சென்று கொண்டிருந்த பொதுமக்களை இராணுவத்தினர் அந்த அந்த கடைகளுக்கு உள்ளே தள்ளி உரிமையாளரைக் கொண்டு கதவுகளை முடினர். வீதியால் சென்றவர்களும் கடைக்கு பொருட்களை வாங்க வந்தவர்களும் சுமார் அரை மணித்தியாலம் கடைகளுக்குள்ளேயே அடைபட்டுக்கிடந்தனர். ஏனெனில் சற்று நேரத்தில் மகிந்தவின் வாகனத் தொடரணி அவ்வீதி வழியே செல்லவுள்ளதால் எனக்கூறப்பட்டது. (சிறிது நேரத்தில் சிப்பாய்கள் அனைவரும் வானத்தை நோக்கி சல்யூட் அடித்தனர்)** பின்னர் மகிந்த அவ்வழியே போகவில்லை என…

  22. தமிழீழத் தேசியத் தலைவருக்கு புலிகள் குரல் ஊடாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க தொடர்பு எண்கள் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் 52 ஆவது பிறந்த நாளையொட்டி அவருக்கு விடுதலைப் புலிகளின் உத்தியோகப்பூர்வ வானொலியான "புலிகளின் குரல்" மூலம் வாழ்த்துக்களை தெரிவிப்பதற்கான எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: 0094 21 222 42 60 0094 21 222 42 61 www.puthinam.com

  23. புலம்பெயர் நாடுகளில் நடைபெறும் மாவீரர் நாளில் பங்கேற்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வருகை. எதிர்வரும் 27ம் நாள் புலம்பெயர் நாடுகளில் நடைபெறவிருக்கும் மாவீரர் நாளில் பங்கேற்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐரோப்பா மற்றும் அவுஸ்ரேலியா நாடுகளுக்கான பயணங்களை மேற்கொண்டுள்ளனர். மாவீரர் நாளில் சிற்புரையாற்றுவதற்கா வருகை தரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சிலர் இன்று ஐரோப்பிய நாடுகளுக்கு வருகை தந்துள்ளனர். 1. சுவிஸ்லாந்து - திருமதி.பத்மினி சிதம்பரநாதன். 2. டென்மார்க் - திரு.அரியநேந்திரன் 3. நோர்வே - திரு.பத்மநாதன் 4. பிரான்ஸ் - திரு.கஜேந்திரன் 5. கனடா - திரு.ஜெயானந்தமூர்த்தி 6. அவுஸ்ரேலியா - திரு.ஈழவேந்தன் 8.ஜேர்மன…

  24. இப்போது நிலவும் போர்ச்சூழல் குறித்த விவரமான அறிவிப்புக்கள் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரையில் இடம்பெறும்: சு.ப.தமிழ்ச்செல்வன் இலங்கையில் இப்போது நிலவும் போர்ச்சூழல் குறித்த விவரமான அறிவிப்புக்கள் தமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரையில் இடம்பெறும் என்பதை மட்டும்தான் இப்போதைக்கு என்னால் சொல்ல முடியும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் வாரம் இருமுறை ஏடான ஜுனியர் விகடனுக்கு சு.ப.தமிழ்ச்செல்வன் அளித்த நேர்காணல்: கேள்வி: நீங்கள் நடத்தப்போகிற மாவீரர் தினத்தில் சிறிலங்கா அரசுக்கெதிரான உச்சகட்டப் போர் அறிவிப்பு இருக்கும் என்பதை மனதில் கொண்டு தான் சிறிலங்கா அரசு ஏ…

  25. மனித உரிமை மீறல்களில் ஈடுபடுமாறு புலிகள் இராணுவத்தை தூண்டுகின்றனர்: சரத் பொன்சேகா [சனிக்கிழமை, 25 நவம்பர் 2006, 18:08 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா இராணுவத்தினரை மனித உரிமை மீறல்களில் ஈடுபடச் செய்யுமாறு விடுதலைப் புலிகள் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர் என்று சிறிலங்கா இராணுவ தளபதி சரத் பொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார். சிறிலங்கா இராணுவ தலைமையகத்தில் படையணிகளின் தளபதிகளுக்கான மூன்று நாள் பயிலரங்கை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது: இராணுவத்தினரின் நன்மதிப்பை சீர்குலைக்கும் வகையில் ஆத்திரமூட்டும் மீறல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு உத்தியாக செயற்படுத்துகின்றனர். இந்த வலையை நாம் தவிர்க்க வேண்டும். தனிநாட்டு கோரிக்கைக்காக மனித உரிமை மீறல்களி…

    • 2 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.