ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142612 topics in this forum
-
ஆயுதக் கிடங்கு வெடித்ததில் பல ஆட்லறிகள் நாசம்: அங்கிருந்த 150 படையினரின் நிலை என்ன? அல்லைக் கந்தளாய்ப் பகுதியில் அமைந்துள்ள சோமபுர ஆட்டறித் தள ஆயுதக் கிடங்கு வெடித்துச் சிதறியதில் சிறீலங்காப் படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. ஆயுதக் கிடங்கு வெடித்துச் சிதறியதில் சிறீலங்கா படையினரின் ஐந்துக்கு மேற்பட்ட 130 மில்லிமீற்றர் ஆட்லறிகள் வெடித்து நாசமாகியுள்ளதாக இராணுவ தரப்பின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆட்லறிகளுக்கு காப்பாக எறிகணைச் சூட்டுவலுவை வழங்கிய 20 மேற்பட்ட மோட்டார்களும் ஆயுதக் கிடங்கு வெடித்ததில் எரிந்து நாசமாகியுள்ளன. ஆட்லறி தளத்திற்கு பாதுகாப்பு வழங்கிய 150 இராணுவத்தினரின் நிலை என்னவென்று தெரியாத நிலையில் எழுந்துள்ளது. பாது…
-
- 3 replies
- 1.5k views
-
-
மட்டகளப்பில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தினை இலங்கை இராணுவம் ஆரம்பித்தது. மேலதிக தகவல் தொடரும்... http://www.nitharsanam.com/?art=20068
-
- 1 reply
- 998 views
-
-
எறி கணைகளின் வலிகளை இனி சிங்கள தேசமும் புரிய வேண்டும். ஆசிரியர் தலைப்பு. Friday, 11 August 2006 போர்நிறுத்த உடன்படிக்கையை முழுமையாக சீர்குலைத்திருக்கும் சிறிலங்கா அரசு இப்போது முழு அளவிலான யுத்தவெறித்தனத்தை தமிழர் தாயகம் மீது அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றது. அதன் உச்சக்கட்டமாக அண்மைக்காலமாக சிறிலங்காவின் முப்படைகளும் தமிழர் தாயகம் மீதான திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டிருக்கின்றனர். போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட காலத்திலிருந்து போர்நிறுத்த மீறல்கள் இடம்பெற்று அதற்கடுத்ததாக மறைமுக நிழல்யுத்த மொன்றை ஒட்டுக் குழுக்களின் உடவியுடன் அரசு மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து. வலிந்த தாக்குதல், ஆழ ஊடுருவும் தாக்குதல் எனத் தொடராக இடம…
-
- 65 replies
- 6.4k views
-
-
இந்தியத் தலைநகர் புதுடில்லியில் ஈழத் தமிழர் ஆதரவு மாநாடு எதிர்வரும் ஓகஸ்ட் 30 ஆம் நாள் நடைபெற உள்ளது. அனைத்திந்திய ஈழத் தமிழர் ஆதரவு அமைப்பின் கௌரவ தலைவரான ஜோர்ஜ் பெர்னாண்டசு இம்மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளார். இம்மாநாட்டில் உத்திரப்பிரதேச மாநில முதல்வர் முலாயம் சிங் யாதவ், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், அரியானா மாநில முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா, ஜம்மு காசுமீர மாநில முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லா ஆகியோர் பங்கேற்கக் கூடும் என்று தெரிகிறது. தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதியையும் இம்மாநாட்டுக்கு அழைத்துள்ளனர். ஜோர்ஜ் பெர்னாண்டசின் புதுடில்லி இல்லத்தில் இம்மாநாடு நடைபெற உள்ளது. மேலும் இந்திய நாடாளுமன்றம் அமைந்துள்ள வீதியில் ஜந்தர்…
-
- 0 replies
- 828 views
-
-
வியாழன் இரவு புனாணை கரடிக்குளம் இராணுவ முகாமில் இருந்து வாகரை பகுதியை நோக்கி இன்று அதிகாலை வரை செல் தாக்குதல்களை மேற்கொண்டுவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றார்கள். எறிகணை வீச்சியில் காயமடைந்த மக்களுக்கு எந்தவிதமான மருந்துவமின்றியும் பட்டினி பசியால் வாடும் மக்களுக்கு தொண்டர் நிறுவனங்களினால் கொண்டு செல்லப்படும் பாரஊர்திகளை இன்று இரண்டாவது நாளாகவும் மாங்கேணி படையினர் தடுத்து நிறுத்தியுள்ளார்கள். இன்று காலை எஸ்க்கோ நிறுவனத்தினால் கொண்டு செல்லப்பட்ட காலை உணவான பாண் கூட கொண்டு செல்ல தடை ஏற்படுத்தியுள்ளார்கள். சிறிலங்கா இராணுவத்தினர் செல் வீசியும் போக்குவரத்தினை தடைசெய்தும் இரண்டு வழியில் மக்களை இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வரவிடாது தடுத்து நிறுத்…
-
- 0 replies
- 806 views
-
-
தமிழகத்துக்கு சிங்கள போலீஸ் அதிகாரிகளை மத்திய அரசு அனுப்பியது அதிர்ச்சிக்குரியது: "ஆனந்த விகடன்" தலையங்கம் [வெள்ளிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2006, 15:44 ஈழம்] [புதினம் நிருபர்] தமிழகத்துக்கு சிங்கள போலீஸ் அதிகாரிகளை அனுப்பிய இந்திய மத்திய அரசின் அணுகுமுறை ரொம்பவே அதிர்ச்சி அளிக்கிறது என்று தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் "ஆனந்த விகடன்" வார ஏடு தலையங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனந்த விகடன் தலையங்கம் வருமாறு: சிங்கள போலீஸ் அதிகாரிகளுக்கு தமிழகத்தில் அளித்து வந்த பயிற்சியை பாதியிலேயே நிறுத்தி, அவர்களை வேறு மாநிலத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறது மத்திய அரசு. தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் காட்டிய பலமான எதிர்ப்பின் விளைவே இந்த இடமாறுதல். …
-
- 0 replies
- 731 views
-
-
கந்தளாயில் ஆயுதக்களஞ்சியம் பற்றி எரிகிறது கந்தளாய்க்கு அருகேயுள்ள அல்லைப்பகுதியில் அமைந்திருக்கும் சிங்களப் படையினருக்குச் சொந்தமான ஆயுதக்களஞ்சியம் ஒன்று வெடித்துச்சிதறி தற்போதுவரை எரிந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆயுதக்களஞ்சியத்தில் ஏற்பட்ட வெடிப்பையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் தொடர்ச்சியாக வெடித்துச்சிதறி பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. தமது ஆயுதக்களஞ்சியம் வெடித்துச் சிதறிக் கொண்டிருப்பதை சிறீலங்கா படைத்தரப்பு உறுதிப் படுத்தியுள்ளது. இது குறித்த மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
-
- 17 replies
- 3.8k views
-
-
தென் தமிழீழத்தில் ஏற்ப்பட்டுள்ள, யுத்த சூழலினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்துள்ள மக்கள் அடிப்படை வசதிகள் எதுகுமற்ற நிலையில் தவிக்கின்றனர். எந்த தொண்டர் நிறுவனத்தினது உதவியும் இல்லாது தமிழீழ போராளிகள், மற்றும் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் சிறு வளங்களை கொண்ட உதவியுடன் அவர்கள் உரிய உணவு, குடி நீர் வசதியின்றி தவிக்கின்றனர். சிறு குழந்தைகள் முதல் வயோதிபர் வரை இவ் துன்பகரமான சூழலுக்குள் அகப்பட்டு அவஸ்தைப்படுகின்றனர் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. தென் தமிழீழத்தில் விடுவிக்கப்பட்ட பகுதிக்குள் சிங்கள ஆக்கிரமிப்பு படைகளாலும் அதன் அரசினாலும், எந்த சர்வதேச தொண்டு நிறுவனங்களும் அனுமதிக்கப்படவில்லை. அது மட்டுமன்றி தமது உயிர் மீது கொண்ட பயத்தினால் த…
-
- 0 replies
- 1k views
-
-
இந்தியாவிடம் போராயுத உதவி கோருகின்றது இலங்கை பட்டியலைச் சமர்ப்பித்துவிட்டு பதிலுக்காகக் காத்திருப்பு! விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்காக அவசர போராயுத உதவிகளை இந்தியாவிடம் இலங்கை கோரியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் பொதுமக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படமாட்டா என்ற உறுதிமொழியுடன், போராயுதங்களின் பட்டியல் ஒன்றைச் சமர்ப்பித்துள்ள இலங்கை அரசு, அது தொடர்பில் புதுடில்லியின் பதிலுக்காகக் காத்திருக்கின்றது என்று "டைம்ஸ் ஒவ் இந்தியா' தகவல் வெளியிட்டிருக்கிறது. விடுதலைப் புலிகளை ஒடுக்கும் விடயத்தில் மேற்கு நாடுகள் மேலதிகமாக எதனையும் செய்யப்போவதில்லை என்பதை உணர்ந்து செய்வதறியாது குழம்பிப்போயிருக்கும் இலங்கை அரசு, தனது படைகளுக்கு அவசரமாகத் தேவைப்படும் போராயுதங்களையும…
-
- 2 replies
- 1.1k views
-
-
யாழ் வவுனியா வீதி முகமாலை சோதனைச் சாவடி சிறீலங்கா படையினரால் மூடப்பட்டு பொதுமக்களின் பயணம் மேற்கொள்ளது தடுக்கப்பட்டுள்ளார்கள். இன்று காலை யாழ்பாணத்தில் இருந்து வன்னிநோக்கி பயணித்த மக்கள் முகமாலை சோதனைச் சாவடியில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டார்கள்.சோதனைச் சாவடி மூடியதற்கான காரணம் படையினரால் தெரிவிக்கப்படவில்லை
-
- 0 replies
- 929 views
-
-
எட்டு மணி நேரத்தில் புலிகள் வசமான மூதூர்! பிரவீனா Friday, 11 August 2006 மாவிலாறு அணைக்கட்டை திறந்து விடப் போவதாக சூளுரைத்து சிறிலங்கா அரசு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி மீது மேற்கொண்ட படை நடவடிக்கையை முறியடித்து படைத்தரப்புக்கு பெரும் உயிரிழப்பையும் பின்னடைவையும் ஏற்படுத்திய விடுதலைப் புலிகள் திருமலை மூதூர் கிழக்குப் பகுதி மீது சிறிலங்கா அரசு நடத்தவிருந்த பாரிய படை நடவடிக் கை மற்றும் தமிழர் தாயகப் பகுதி மீதான கண்மூடித்தனமான எறிகணை வீச்சு, தாக்குதலுக்கு பதிலடியாக சிறிலங்கா படையினருக்கு எதிரான மட்டு ப்படுத்தப்பட்ட படைநடவடிக்கை ஒன்றை ஆரம்பித்தனர். கடந்த 2ம் திகதி அதிகாலை மூதூர் நோக்கி விடுதலைப் புலிகள் மேற்கொண்ட படை நடவடிக்கையின் போது விடு…
-
- 0 replies
- 1.6k views
-
-
தமிழீழத்தை ஏதாவது ஒருநாடு அங்கீகரிக்கும்: ஜே.வி.பி. 2002 ஆம் ஆண்டு கைச்சாத்திட்ட யுத்தநிறுத்த ஒப்பந்தம் தொடர்ந்து 5 வருடங்கள் நடைமுறையில் இருந்தால், அதை ஒரு பிரதான இணக்கப்பாடாகக் கருதி ஏதாவது ஒருநாடு தமிழீழப் பிரதேசத்தை அங்கீகரிக்க வாய்ப்பிருக்கிறது என்று ஜே.வி.பி. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். தங்களது 20 அம்சக் கோரிக்கையை ஏற்பதற்கு சிறிலங்கா அரசதரப்பு தயாராக இல்லாவிடினும், யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை நிராகரிக்கும் கோரிக்கையை மட்டுமாவது உடன் அமுல்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்தார். சட்டவாளர்களிடமிருந்து தமக்குக் கிடைத்த ஆதாரபூர்வமான தகவலின்படி, யுத்தநிறுத்த ஒப்பந்தத்தில் விடுதலைப் புலிகளுக்கு சமதரப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு…
-
- 5 replies
- 1.5k views
-
-
படையினர் சடலங்களை ஏற்க மறுத்த சிறிலங்கா paran Friday, 11 August 2006 மூதூர் பிரதேசம் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தற்காப்பு இராணுவ நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகளின் உக்கிர தாக்குதலுக்கு எதிர் நிற்க முடியாது சிறிலங்கா படையினர் உயிர்தப்பி ஓடினர். இதேவேளை மோதலில் சுமார் நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறிலங்கா படையினர் பலியாகினர். இவர்களின் உடற் பாகங்கள் சிதறுண்டது போக நல்ல நிலையில் இருந்த நாற்பது சடலங்களை விடுதலைப் புலிகள் ஐ.சி.ஆர்.சி ஊடாக கையளிக்க இருந்த போது ப டைத்தரப்பு சடலங்களைப் பொறுப்பே ற்க மறுத்தார்களாம். காரணம் மூதூர் எங்கள் கட் டுப்பாட்டில் இருக்கிறது எனக் கூறிக் கொண்டிருந்த அரசாங்கத்திற்குப் படையினரின் சடலங்களைப் பொறுப் பெடு…
-
- 0 replies
- 973 views
-
-
திருமலையில் இலங்கை இராணுவம் கெமிக்கல் தாக்குதல். ஜ வியாழக்கிழமைஇ 10 ஆகஸ்ட் 2006 ஸ ஜ யோகராஜன் ஸ திருமலையில் இலங்கை இராணுவம் கெமிக்கல் தாக்குதல் நடாத்துவதாக பிரபல மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த 30 வருடங்களாக இலங்கை இராணுவம் பயன்படுத்திய எறிகனைகள் விழுந்து வெடித்து சேதத்தை ஏற்படும்தும் ஆனால் தற்போது பாவிக்படும் எறிகனைகள் இரசாயன எறிகனைகள் இவை விழுந்து வெடிக்கும் இடத்தில் தீபற்றி எரிகிறது மூதூரிலும் சம்பூரிலும் காடுகள் திபற்றி எரிகிறது. எறிகனை விழும் இடங்களில் எல்லாம் தீ பிடித்து எரிகிறது பச்சை மரங்கள் அனைத்தும் உடனடியாக தீபிடித்து எரிகிறது. காயம் ஏற்பட்டவர்களுக்கு மருத்துவம் செய்ய முடியாத கெமிக்கல் இராசயணம் இந்த குண்டுகளில் பயன்படுத்தப்படுகிண்றது எண்று …
-
- 21 replies
- 4.3k views
-
-
இன்றைய முடியடிப்புச் சமரில் 5 போராளிகள் வீரச்சாவு 12 போராளிகள் காயம். இன்று மாவிலாற்றைக் கைப்பற்றும் இராணுவ நடவடிக்கையில் விடுதலைப் புலிகள் தரப்பில் 5 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளதாகவும் 12 போராளிகள் காயமடைதுள்ளதாகவும் விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
-
- 5 replies
- 1.6k views
-
-
மாவிலாறு அணைக்கட்டை விடுதலைப் புலிகள் தடுத்து நிறுத்தியதன் மூலம், படைகளின் கவனத்தைத் திசை திருப்பி, திருகோணமலை கடற்படைத் தளத்தைக் கைப்பற்றுவதே விடுதலைப் புலிகளின் உண்மையான நோக்கமாக இருந்ததாகவும், அவர்களது திட்டம் வெற்றிபெறவில்லை என்றும் ஜே.வி.பி. கட்சியின் உறுப்பினர் விமல் வீரவன்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். சம்பூர் பகுதியில் அமைக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் கனரக ஆயுதத் தளத்தைப் பாவித்து, திருகோணமலை முகாம்கள் மீதும், கடற்படைத் தளம் மீதும் தாக்குதல் நடத்தி, திருகோணமலை தளத்தைக் கைப்பற்றுவதுடன், அதன் மூலம், யாழ். பகுதியில் நிலைகொண்டுள்ள படைகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதையும் தடுத்து நிறுத்துவதே விடுதலைப் புலிகளின் நோக்கமாக இருந்ததென்றும் கூறின…
-
- 0 replies
- 725 views
-
-
வாட்டர் ஷெட் இராணுவ நடவடிக்கையும் பின்னணியும் கே.பி. அறிவன்- "எல்லா சண்டைகளும் நிலத்திற்காக பிடிக்கும் சண்டைகளாகவே இருக்கின்றன. இந்த சிங்கள குடியேற்றங்களான யான் ஓயா, மல்வத்து ஓயா, மதுரு ஓயா ஆகியன நிலத்தினை பிடிப்பதற்காகவே பொலநறுவை மாவட்டத்தில் 45,000 குடும்பங்களை குடியேற்றியுள்ளோம். அதேபோல் யான் ஓயாவிலும் குடியேற்றியுள்ளோம். மூன்றாவதாக மல்வத்து ஓயவில் குடியேற்றம் செய்து கொண்டிருக்கின்றோம். இது ஈழத்தினை எதிர்ப்பதற்காக அந்தத் தாயக கோட்பாட்டிற்கு எதிராக செய்கின்றோம். யான் ஓயாவில் சிங்கள மக்களை குடியேற்றுகின்றோம். அத்துடன் மேலும் 50000 மக்களை குடியேற்றுவதன் மூலம் சிங்கள மக்களின் சனத்தொகையினை அதிகரித்து திருகோணமலையினை தமிழர்களிடம் இருந்து காப்பாற்றமுடியும்" - இது 1990 …
-
- 4 replies
- 1.5k views
-
-
இஸ்ரெல் ஸ்டைல் .. இலங்கை நிலை http://www.tamilnaatham.com/pdf_files/nakh..._2006_08_11.pdf
-
- 0 replies
- 1.2k views
-
-
Fighting kills 41 SLA troops, wounds 130 [TamilNet, August 10, 2006 13:54 GMT] Sri Lankan Army advancing into LTTE-controlled areas have lost 41 soldiers killed in Thursday’s heavy fighting around the Maavil Aru sluice gates, military sources said. 22 soldiers have been seriously wounded and 98 others wounded, military officials in Colombo said speaking on condition of anonymity. Meanwhile AP quoted the LTTE military spokesman, Rasiah Ilanthirayan, as saying seven Tigers had died and 15 were wounded. Many of the SLA casualties were amongst elite troops deployed to wrest control of the contested water channel at Maavil Aru, the Colombo military sources said. Mi…
-
- 2 replies
- 1.7k views
-
-
மாவிலாறு நோக்கி சிங்களப் படைகள் பாரிய படை நகர்வு - பாண்டியன் வுhரசளனயலஇ 10 யுரபரளவ 2006 11:59 மாவிலாறு அணைப்பகுதியை ஆக்கிரமிக்கும் நோக்குடன் கல்லாறு படைத்தளத்திலிருந்து ஆயிரக்கணக்கான சிங்கள இராணுவத்தினர் பாரிய ஆக்கிரமிப்பு முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆட்டிலறி மற்றும் பல்குழல் பீரங்களின் செறிவான சூட்டாதரவோடும் வான்படை வானூர்திகளின் குண்டு வீச்சுக்களோடும் இன்று அதிகாலை 4.00 மணியளவில் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் பாரிய நகர்வை ஆரம்பித்தனர். இவர்களின் நகர்வு முயற்சிக்கு எதிராக போராளிகள் தீவிர தாக்குதலை ஆரம்பித்தனர். இதனையடுத்து இரு தரப்பிற்கும் இடையே உக்கிர மோதல்கள் தொடர்ந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ர…
-
- 7 replies
- 2.2k views
-
-
50 பொதுமக்கள் படுகொலை 200 பேர் காயம். திருமலை நிருபர் Thursday, 10 August 2006 சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலிலும், விமானக் குண்டுத் தாக்குதலிலும் 50 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 200 க்கு மேற்பட்டோர் காயம். இருமுனைகளால் ஆரம்பிக்கப்பட்ட முன்னேற்ற முயற்சி விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியை நோக்கி விமானப் படைகளின் போர் விமானங்கள், ஆட்லறிகள் மேற்கொண்ட தாக்குதலில் 50 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 200க்கு மேற்பட்டடோர் காயம டைந்துள்ளார்கள். மேலதிக விபரம் கிடைக்கவில்லை http://www.battieelanatham.com/newsite/ind...=1129&Itemid=37 45 civilians killed in bombardment, SLA re-launches troop movement …
-
- 26 replies
- 5.1k views
-
-
திருமலையின் வெற்றியிலேயே தமிழீழத்தின் வெற்றி: பொட்டம்மான் [வியாழக்கிழமை, 10 ஓகஸ்ட் 2006, 15:14 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்] திருகோணமலையை வெற்றி கொள்வதிலேயே தமிழீழத்தின் வெற்றி தங்கியுள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் தெரிவித்துள்ளார். லெப். கேணல் குஞ்சனின் வீரவணக்க நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: தமிழீழத்தின் விடுதலைக்காக 18 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாவீரர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் உயர்நிலை வளர்ச்சிக்கும், உலகத் தமிழர்களின் வீரத்தின் வெளிப்பாட்டிற்கும் தம்மை ஆகுதியாக்கியுள்ளனர். மாவீரர்களின் பொதுப்ப…
-
- 1 reply
- 1.4k views
-
-
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் சிறிலங்கா படைத்தரப்பினரின் வாகனம் மீது நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இரண்டு படையினர் படுகாயமடைந்துள்ளனர். கொக்குவில் சந்திக்கும் நாச்சிமார் கோவிலடிக்கும் இடையில் காங்கேசன்துறை வீதியில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. படுகாயமடைந்த படையினர் உடனடியாக பலாலி இராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சம்பவத்தை அடுத்து நாச்சிமார் கோவிலை அண்டிய பகுதிக்கு கனரக வாகனங்களில் வந்த பல நூற்றுக்கணக்கான படையினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். எவரும் கைது செய்யப்பட்டதாக தெரியவரவில்லை.
-
- 0 replies
- 919 views
-
-
தமிழர்களை அல்ல விடுதலைப் புலிகளை அழிக்க இந்தியாவிடம் ஆயுதங்களுக்கு விண்ணப்பித்துள்ள சிறிலங்கா [வியாழக்கிழமை, 10 ஓகஸ்ட் 2006, 18:28 ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] விடுதலைப் புலிகளை அழித்தொழிப்பதற்கு தமக்கு தேவையான ஆயுதங்களை தந்துதவுமாறு இந்தியாவிடம் ஆயுதத் தளவாடப் பட்டியலொன்றை சிறிலங்கா அரசு சமர்ப்பித்துள்ளதாக இந்திய அரசியல் உயர்வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. இந்தியா தரும் ஆயுதங்கள் தமிழ் மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட மாட்டாது. விடுதலைப் புலிகளுக்கு எதிராக மாத்திரமே பயன்படுத்தப்பபடும் என்றும் சிறிலங்கா அரசு இந்தியாவிடம் உறுதியளித்திருப்பதாகவும் ஆனால் இந்தியாவிடமிருந்து சிறிலங்காவின் இந்தக் கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை என்றும் அண்மையில் இந்த…
-
- 0 replies
- 1k views
-
-
மெளலவி சாகீல் படைப் புலனாய்வாளர்களால் கடத்தல். தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் நல்லுறவைக் கட்டியெழுப்புவதற்காக பாடுபட்ட முஸ்லிம் மெளலவி சாகீல் சிறீலங்காப் படைப் புலனாய்வாளர்களால் கடத்தப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 2 மணிக்கு புத்தளம் பகுதியில் அமைந்துள்ள மெளலவியின் வீட்டுக்குச் சென்ற படைப்புலனாய்வாளர்கள் மெளலவியை கடுமையாகக் தாக்கிவிட்டு கடத்திச் சென்றுள்ளனர். மெளலவி சாகீல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் யாழ் மாவட்ட உள்ளுராட்சித் தேர்த்தலி்ல் வேட்பாளராக நியமிக்கப்பட்டிருந்தமை என்பது குறிப்பிடத்தக்கது. http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
-
- 0 replies
- 835 views
-