Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்திய அமைதிப்படை இருந்திருந்தால் இனப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டிருக்கும்: ரணில் விக்கிரமசிங்க [திங்கட்கிழமை, 18 செப்ரெம்பர் 2006, 05:20 ஈழம்] [ம.சேரமான்] இந்திய அமைதிப்படை இருந்திருந்தால் இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டிருக்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் 100 ஆவது பிறந்த நாள் நிகழ்வில் நேற்று பங்கேற்ற ரணில் விக்கிரமசிங்க பேசியதாவது: இந்திய-இலங்கை ஒப்பந்தத்துக்குப் பின்னர் பல்வேறு தமிழ் ஆயுதக் குழுக்கள் ஜனநாயகப் பாதைக்குத் திரும்பின. இந்திய அமைதிப் படையின் நடவடிக்கையானது விடுதலைப் புலிகளையும் ஜனநாயகப் பாதைக்கு கொண்டு வரும் வகையில் இருந்தது. ஜே.வி.பி.யின் அழுத்தத்தால் இந்திய…

  2. பேச்சுவார்த்தையில் துணை இராணுவக்குழுவை சேர்க்க அரசாங்கம் முயற்சி: அனுரா பண்டாரநாயக்க தகவல் [திங்கட்கிழமை, 18 செப்ரெம்பர் 2006, 04:47 ஈழம்] [ச.விமலராஜா] இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தையில் முஸ்லிம்களை விலக்கி விட்டு சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவை சேர்க்க அரசாங்கம் முயற்சிப்பதாக சிறிலங்கா சுற்றுலாத்துறை அமைச்சர் அனுரா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எம்.எச்.எம்.அஸ்ரப் நினைவு நிகழ்வில் அனுரா பண்டாரநாயக்க பேசியதாவது: ஒரு சிறந்த பயங்கரவாத இயக்கம் ஆயுதங்களைக் கீழே போட்டு விடுமா? அறிவீனமான நிபந்தனைகள் ஏதும் விதிக்காமல் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சு நடத்த வேண்டும். கருணா…

  3. தமிழர்களின் வடக்கு - கிழக்குத் தாயகப் பிரதேசங்களை அந்நிய நாடாக சிறிலங்கா ஏற்றுக்கொண்டுள்ளதாகவே நடக்கும் நிகழ்வுகள் புலப்படுத்துகின்றன. பால் வேறுபாடின்றி இனப்படுகொலைகள், மூடிய எல்லைகளுக்கப்பால் பொருளாதாரத் தடை, பெரும் படை நகர்வை மேற்கொண்டு சிறு துரும்பை ஆக்கிரமித்தவுடன் ஆனந்தப் பெருங்களிப்பு முதலியன இப்படித்தான் கருத வைக்கின்றன. புலிகளின் ஆட்லறி நிலைகளைத் தகர்க்கவே படை நடவடிக்கை மேற்கொள்வதாக சர்வதேசத்திற்கு கண்துடைப்புக் காரணங்கள். அத்துடன் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் வரையறுக்கப்படாத புதிய சரத்துக்களை தாமாகவே பின்னிணைப்பாக அரசு சேர்த்துக் கொண்டிருக்கிறது. இப்புதிய சரத்துக்களில் ஆட்லறி நிலைகளை அகற்றுதல், பொங்கு தமிழ் ஏற்பாட்டாளர்களை புகைப்படம் மூலம் இனங்கண்டு கொலை…

  4. [திங்கட்கிழமை, 18 செப்ரெம்பர் 2006, 04:11 ஈழம்] [ம.சேரமான்] மன்னாரில் சிறிலங்கா இராணுவத்தினரால் சோதனைச் சாவடிகள் மூடப்பட்டதையடுத்து மாணவர்களின் தேர்வுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஓகஸ்ட் மாதம் அனைத்து மாவட்டங்களிலும் 2 ஆம் பகுதி தேர்வு ஓகஸ்ட் மாதம் நடத்தப்படும். ஆனால் ஓகஸ்ட் மாதம் திடீரென பாடசாலைகளை சிறிலங்கா அரசாங்கம் மூடிவிட்டது. தற்போது பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் சில இடங்களில் தேர்வுகள் நடைபெற்றுள்ளன. மன்னாரில் உயிலங்குளம் மற்றும் மடு சோதனைச் சாவடிகள் மூடப்பட்டுவிட்ட்டதால் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதி மடு மற்றும் அடம்பன் கல்வி வலய பிரதேசங்களுக்கு வினாத் தாள்களை கல்வி திணைக்களத்தினர் எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்…

    • 0 replies
    • 691 views
  5. மன்மோகன், கொபி அனானுடன் மகிந்த சந்திப்பு [திங்கட்கிழமை, 18 செப்ரெம்பர் 2006, 04:55 ஈழம்] [தெ.சந்திரநாதன்] கியூபாவில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் கொபி அனானை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, மகிந்தவின் செயலாளர் லலித் வீரதுங்க, சமதான செயலகப் பணிப்பாளர் பாலித கோகென்ன ஆகியோர் உடனிருந்தனர். இலங்கை அமைதி முயற்சிகளுக்கு உதவுவதாக கொபி அனான் தெரிவித்தார். சிறிலங்கா இராணுவத்தின் நடவடிக்கைகளை கொபி அனானிடம் மகிந்த நியாப்படுத்தினார். நீதிக்குப் புறம்பான படுகொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல் ஆகியவை தொடர்பில் விசாரணைகளை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கொபி அனானிடம் மகிந்த விளக்கின…

    • 0 replies
    • 822 views
  6. இருண்டு கிடக்கிறது ஈழத்தமிழர் வாழ்க்கை - ஆனந்த விகடன் http://www.tamilnaatham.com/pdf_files/av_2..._2006_09_15.pdf

  7. :arrow: [url=http://www.eelampage.com/?cn=28806]ஈழத் தமிழர் ஆதரவை சீர்குலைக்க சென்னை துணைத் தூதுவர் ஹம்சா சதி: "நக்கீரன்" அம்பலம் [ஞாயிற்றுக்கிழமை, 17 செப்ரெம்பர் 2006, 16:08 ஈழம்] [புதினம் நிருபர்] தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம்கள் மூலம் ஈழத் தமிழர் ஆதரவை சீர்குலைக்க சிறிலங்காவுக்கான சென்னை துணைத் தூதுவராக உள்ள ஹம்சா சதித்திட்டம் தீட்டுவதாக தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் "நக்கீரன்" ஏடு அம்பலப்படுத்தியுள்ளது. நக்கீரன் வாரமிருறை ஏட்டில் வெளியாகி உள்ள கட்டுரை விவரம்: "இப்போதுள்ள சூழலை அதிபர் ராஜபக்ச பயன்படுத்தி அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கவேண்டும்'' என அதிபரிடமே நேரில் வலியுறுத்தியிருக்கிறார். இலங்கைக்கு வந்த இந்திய நிதியமைச்சர் ப.…

    • 7 replies
    • 1.9k views
  8. [ஞாயிற்றுக்கிழமை, 17 செப்ரெம்பர் 2006, 17:03 ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு பயங்கரவாதச் செயல் என்றும் பாலஸ்தீனத்தின் விடுதலைப் போராட்டம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் கியூபா அணிசேரா நாடுகள் கூட்டத்தில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கியூபாவில் மகிந்த பேசியதாவது: பாலஸ்தீன மக்களின் அரசியல் உரிமைகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட வேண்டியுள்ளது. மனித உரிமைகள், சமூக, பொருளாதார உரிமைகளை வென்றெடுக்க வேண்டியிருக்கிறது. உலக ஆட்சி முறையை ஜனநாயகப்படுத்துவதில் நாம் வெற்றி பெற வேண்டியுள்ளது. சட்டவிரோத ஆயுதங்கள், பயங்கரவாதம், போதைப்பொருட்கள், சட்டவிரோதப் பணப்பரிமாற்றம், குற்றச் செயல்களால் நாட்டின் இறைமைக்கும் சிவ…

  9. [ஞாயிற்றுக்கிழமை, 17 செப்ரெம்பர் 2006, 18:04 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா தலைநகர் கொழும்பில் கடந்த 2 மாதங்களில் இந்திய வர்த்தகர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டுள்ளனர் என்று சிறிலங்கா நகைக்கடை வர்த்தகர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த அமைப்பினர் கூறியுள்ளதாவது: கடந்த இரண்டு, மூன்று மாதங்களில் கொழும்பில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் கடத்தப்பட்டுள்ளனர். கப்பப் பணம் கொடுத்தவுடன் சிலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். பணம் கொடுத்த பின்னரும் விடுவிக்கப்படாதோர் எண்ணிக்கை அதிகம். இரு மாதங்களுக்கு முன்னர் கொழும்பில் கடத்தப்பட்ட ஒரு வர்த்தகர் கப்பப் பணமாக ரூ. 6 மில்லியன் செலுத்தினார். ஆனால் அவர் விடுவிக்கப்படவில்லை. இந்திய வர்த்தகர்கள…

  10. யாழ்ப்பாணத்துக்கான கப்பல் மூலமான விநியோகப் பணி நிறுத்தம்: செஞ்சிலுவைச் சங்கம் [ஞாயிற்றுக்கிழமை, 17 செப்ரெம்பர் 2006, 18:10 ஈழம்] [கொழும்பு நிருபர்] யாழ்ப்பாணத்துக்கான அத்தியாவசியப் பொருட்களை கப்பல் மூலம் கொண்டு செல்லும் பணிகளை நிறுத்துவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் டேவிட் விக்னதி கூறியதாவது: கப்பல் போக்குவரவு தொடர்பில் சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் பொதுநிலைப்பாட்டுக்கு வரும் வரை அனைத்து கடல்சார் பணிகளும் இடை நிறுத்தப்படும். நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களின் பாதுகாப்பு கருதி இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்களை பட்டினியால் சாகவிடமுடியாது. …

    • 0 replies
    • 880 views
  11. [ஞாயிற்றுக்கிழமை, 17 செப்ரெம்பர் 2006, 18:25 ஈழம்] [ம.சேரமான்] யாழ். தீவகத்துக்கான தரை வழிப்பாதையை சிறிலங்கா கடற்படையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் திடீரென மூடியுள்ளனர். அல்லைப்பிட்டியூடான இந்தப் பாதை மூடப்பட்டமையால் இரு புறமும் மக்கள் சிக்கியுள்ளனர். எரிபொருள், தகவல் தொடர்பு உள்ளிட்டவைகளை ஏற்கனவே தீவகப் பிரதேசத்தில் சிறிலங்கா இராணுவம் முடக்கி உள்ள நிலையில் தரவழிப்பாதையையும் மூடியிருப்பதால் அங்கு நிலைமை மோசமடையும் என்று அஞ்சப்படுகிறது. http://www.eelampage.com/?cn=28815

    • 0 replies
    • 794 views
  12. வட, கிழக்கில் தமிழ் குழுக்களுக்கு ஆயுதங்களுடன் இராணுவ பாதுகாப்பு? [17 - September - 2006] [Font Size - A - A - A] வடக்கு, கிழக்கில் தமிழ் குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஈ.பி.டி.பி., புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். (வரதர் அணி) போன்றவற்றுக்கே இவ்வாறு ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்புகள் தெரிவிக்கின்றன. இதுவரை இந்தக் குழுக்களுக்கு 168 ரி. 56 ரக துப்பாக்கிகளும் கைத்துப்பாக்கிகளும் வழங்கப்பட்டுள்ளன. இதைவிட, இவற்றின் உறுப்பினர்களுக்கு பொலிஸ் மற்றும் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலையடுத்தே, இவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. நிலைமைக்கேற்ப மேலும…

    • 0 replies
    • 1.2k views
  13. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் நாளைய தினம் நியூயோர் பயணமாக உள்ளனர். இக்குழுவினர் ஐக்கிய நாடுகள் சபையின் 61வது வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். ஜனாதிபதி அமெரிக்க ஜனாதிபதி உட்பட 12 நாடுகளின் தலைவர்களை சந்திக்க உள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. http://pathivu.com/index.php?subaction=sho...t_from=&ucat=1&

  14. தொண்டமான் தமிழரின் தலைவனா எட்டப்பனா...??? மலையாக மக்களின் ஏக பிரதி நிதி என்று தன்னை கூறிக் கொள்ளும் ஆறுமுகம் தொண்டமான் அந்த மக்களின் வாழ்வுரிமையை காற்ப்தற்க்கவே தான் அரசோடு கூட்டு வைத்து அந்த மக்களின் அவல வாழ்வை துடைத்து வருவதாகவும் கூறிய அவர் ஏன் இந்த அவசர கால சட்டத்திற்க்கு ஆதரவாக வாக்களித்தார்...?? கண்மூடித்தனமாக சிங்க படைகளால் ஈவ் இரக்கமின்றி புலிகள் என்று குற்றம் சாட்டப் பட்டு எத்தனை மக்கள் பரிதபகரமாக இன்று சிறையில் வாழ்கிறார்கள். எத்தனையோ குடும்பங்கள் தமது அன்றாட கடமைகளை கூட சரியான முறையில் செய்ய முடியாத துப்பாக்கிய நிலையில் வாழ்க்கை நடாத்தி கொண்டு இருக்கின்றார்கள் . வறுமையின் விழிம்பில் அந்த மக்கள் ஊசுலாடிக் கொண்டு இருக்கை…

    • 63 replies
    • 9.9k views
  15. ஞாயிறு 17-09-2006 02:03 மணி தமிழீழம் [மயூரன்] கடத்தல், கைது தொடர்பாக கோதபாய ராஜபக்ஷவுடன் தமிழ் எம்.பி.க்கள் சந்திப்பு. தலைநகர் கொழும்பில் தமிழர்கள் கடத்தப்படுவது, காணாமல்போவது, கப்பம் பெறுவது, சந்தேகத்தின் பேரில் நூற்றுக்கணக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுவது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவுடன் நடைபெற்ற சந்திப்பு எந்தவொரு திருப்தியையும் அளிக்கவில்லை என்று அச்சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை காலை 11 மணி தொடக்கம் 12 மணிவரை இந்த விசேட கூட்டம் நடைபெற்றது. மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், அமைச்சருமான பெ. சந்திரசேகரன், மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ …

    • 2 replies
    • 1.1k views
  16. இரண்டு தசாப்த காலமாக இலங் கையில் நடைபெற்றுவரும் இன மோதல் யுத்தத்துக்கு மத்தியில் காணாமற் போவோர் தொகையும் அதிகரித்து வருகிறது என்று தெரிவித்துள்ள சர்வ தேச மனித உரிமைகள் அமைப்பு ஒன்று இலக்கத்தகடு இல்லாத வெள்ளை "வான்' வாகனங்களில் வரும் படை யினரே ஒன்றுமறியாத அப்பாவி சிவிலி யன்களின் கடத்தல்களுக்குப் பின்னா லிருந்து செயற்படுகிறார்கள் என்று குற்றஞ்சாட்டியுள்ளது. கொங்கொங்கை தலைமையமாக கொண்டு இயங்கும் "ஏசியன் கியூமன் றைட்ஸ் கமிஷன்' என்ற ஆசிய மனித உரிமைகள் அமையம் இவ்வாறு ஆட் கடத்தல், காணாமற்போதல் போன்ற வற்றுக்கு படையினர் மீது பழியைப் போடுகிற அதேவேளை, ஆட்கடத்தல் மற்றும் சிவிலியன் கொலைகளுக்கும் இளம் பராயத்தினரை வலுக்கட்டாய மாக தமது இயக்கத்தில் சேர்ப்பதற்காக வும் விடுதலைப் புலிகள்…

  17. ஆள்கடத்தல்கள், கொலைகள் பற்றி விசாரிக்க தனிநபர் ஆணைக்குழு. கொழும்பு மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் இடம்பெறும் மனிதப் படுகொலை கள், கடத்தல்கள் ஆள்கள் காணாமற்போகும் சம்பவங்கள் பற்றி விசாரிக்கவென ஓய்வு பெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி மகாநாம தில கரட்ணவை தனிநபர் ஆணைக்குழுவாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளார் என நேற்று ஜனாதிபதி செயலகம் அறி வித்துள்ளது. கடத்தல்கள், காணாமற்போதல் போன்ற சம்பவங்கள் தொடர்பாக ஜனாதிபதிக்கு மக் கள் கொடுத்த முறைப்பாட்டை அடுத்தே இந் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன. இந்த ஆணைக்குழுவில் பொதுமக்கள் தமது முறைப்பாட்டைத் தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. முறைப்பாடு செய்வதற்கான தொலைபேசி இலக்கங்கள் மற்றும…

  18. வடக்கு கிழக்கைப் பிரிக்கக் கோரும் மனுக்கள் விசாரணையின் தீர்ப்பு ஒத்திவைப்பு. வடக்குகிழக்கு மாகாணங்களைப் பிரிக் கும்படி உத்தரவிடக்கோரி கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப் படை உரிமைமீறல் மனுக்கள் மூன்றின் மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தில் ஐந்து நீதிய ரசர்கள் ஆயத்தின் முன்னால் நேற்று ஒரே நாளில் முடிவுற்றது. தீர்ப்பு வழங்குவது ஒத்தி வைக்கப்பட்டது. இந்த அடிப்படை உரிமைமீறல் மனுக்கள் மீதான விசாரணையின்போது தங்களை இடை யீட்டு மனுதாரர்களாகச் சேர்த் துக்கொள்ளும் படி கோரி அந்த அடிப்படை உரிமைமீறல் மனுக்களுக்கு எதிரான வாதங்களுடன் மூன்று தமிழர்கள் உட்பட நான்கு பேரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த நான்கு இடை யீட்டு மனுக்களையும் உயர் நீதிமன்றம் விசா ரணைக்கு ஏற்காமல்…

    • 0 replies
    • 861 views
  19. ஞாயிறு 17-09-2006 02:06 மணி தமிழீழம் [மகான்] வாளைச்சேனை குடும்பஸ்தர் சிறீலங்காப் படையினரால் சுட்டுக்கொலை. வாழைச்சேனை காவல்துறைக்குட்பட்ட நாசிவன்தீவு பகுதியில் குடும்பஸ்த்தர் ஒருவர் சிறிலங்கா படையினரால் நேற்று சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் நான்கு பிள்ளைகளின் தந்தையான முருகேஸ் சிவராஜா வயது 34 என அடையாளம் காணப்பட்டுள்ளது. சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையில் இராணுவத்தினால் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதேவேளை மட்டக்களப்பு ஏறாவூர் காவல்துறை பகுதிக்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனை பகுதியில் அமெரிக்கன் மிசன் வாகன சாரதி ஒருவர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணியளவில் ஆயுததாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ப…

    • 0 replies
    • 826 views
  20. ''உணவு போர்வைக்குள் ஆயுத கடத்தல்..பயணிகள் பணயம்...'' இராணுவத்தினரின் வலிந்து தாக்குதலையடுத்து மூண்ட விடுதலைப் புலிகளின் பதில் தாக்குதலால் மக்கள் போக்குவரத்து பாதைகள் மூடப் பட்டன . அவர்களுடைய தொடர்பாடல்கள் தடுக்கப் பட்டன . ஊரடங்கை பிறப்பித்து அந்த மக்கள் தமது இருப்பிடங்களிற்க்குள் முடக்கப் பட்டன . மக்கள் மீது கெடு பிடிகள் அவிழ்த்து விடப்பட்டன அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப் பட்டன பலர் காணமல் போயினர் . உணவு தட்டுப் பாடு தலை தூக்கியது புழக்கத்தில் இருந்த உணவுகள் பதுக்கப் பட்டன . உணவின்றி மக்கள் தவித்தனர் பால் மா இல்லாது பிள்ளைகள் கதறினர் . இத்தனைக்கும் காரணமாய் இருந்தது தரை கடல் விநியோகம் தடைப் பட்டதே . அதன் ஒரு பகுதியாக இராணுவத்தினர…

  21. ''காயப் பட்ட செஞ்சோலை மாணவிகளை மிரட்டி ருபவாகினி பேட்டி....ஆத்திரத்தில் மக்கள் ...'' அன்மையில் செஞ்சோலை மீதான கொடிய சிங்கள விமானப் படையின் காட்டு மிரண்டித்தனமான தாக்குதலில் பலர் கொல்லப் பட்டும் பலர் படும் காயம் அடைந்திருந்தார்கள் . ஈவ் இரக்கமற்று சிங்கள படைகளால் செய்யப்பட்ட இந்த கொலையை கண்டித்து உலகம் புராவும் வாழும் தமிழர்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களை நடாத்தினர்கள் . சிங்கள படைகளின் இந்த கொடுரத்தை உலகிற்க்கு வெளிப் படுத்தினார்கள் தமிழர் தரப்பின் நியாய பாடுகளை கேட்டு வீதியில் இறங்கினார்கள். அதில் கொல்லப்பட்டோர் அப்பாவி சிறார்கள் என்பதை உலிகிற்க்கு நிருபித்ததர்கள் கொதித்தெழுந்த மக்கள் வீதியில் இறங்கினார்கள். அந்த தாக்குதலில் காயப் பாட்ட சிலர்…

  22. புலியை சாட்டி அகதி பிச்சை கேட்கிறார் இலங்கை சுதந்திர கட்சி முக்கியஸ்தர் - திருட்டு வேலைக்கு 10 மாத சிறை. (சனிக்கிழமை, 16 செப்ரெம்பர் 2006 )(ஜோசெப்) புலிகளை சாட்டி அகதி அந்தஸ்து கோரியுள்ளார் இலங்கை சுதந்திர கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான மூத்த குமார் கிரிஸ்ணசாமி. சுமார் 47 வயதுடைய இவர் சுதந்திர கட்சியின் முக்கியஸ்தராவார். குடந்த வாரம் பிரித்தானியாவின் லூட்டன் விமான நிலையத்தில் இவர் பிறான்ஸ் நாட்டில் இருந்த போலிக் கடவுச் சீட்டுடன் லண்டன் வந்தார். புலிகள் தன்னை கொல்லப் போவதாகவும் அதனால் லண்டனுக்கு ஓடி வந்ததாகவும் போலியான வாக்கு மூலத்தை பிரித்தானிய குடிவரவு திணைக்களத்திற்கு கொடுத்திருந்தார். தன் போலியான கடவுச் சீட்டுக்காக 10ஆயிரம் பவுண்களை செலுத்தியதாகவும் ச…

  23. யாழில் 24 மணிநேரத்தில் ஆறு பேர் சுட்டுக்கொலை [வெள்ளிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2006, 19:22 ஈழம்] [யாழ். நிருபர்] யாழ். நகர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் கடந்த 24 மணிநேரத்தில் ஆறு பேர் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். யாழ். மானிப்பாய் வீதியில் உள்ள மதுபானக் கடையில் தூங்கிக்கொண்டிருந்த ஊழியர்கள் மூவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இலக்கத்தகடு அல்லாத வெள்ளை வானில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் வலிகாமம் கிழக்கு ஆவரங்கால் பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலமொன்றை வீசிவிட்டுச் சென்றுள்ளனர். கண்களும் கைகளும் கட்டப்பட்ட நிலையில் வீசப்பட்ட இந்த இளைஞரின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை…

  24. உலக பயங்கரவாதத்திற்கு எதிரான நாடுகள் ஒன்றிணைண வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபச்ச கோரியுள்ளார். அணிசேரா மாநாட்டில் பங்கேற்ற அவர் நேற்று மாலை ஆற்றிய உரையின் போது இலங்கையில் பயங்கவாதத்தினால் மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்தார். அத்துடன் பொருளாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். சிறுவர்களை படைகளில் சேர்ப்பது பாரிய உரிமை மீறல் சம்பவம் என்றும் அவர் தெரிவித்தார் http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&

  25. படையினருடன் கடல்வழிப் போக்குவரத்து எதனையும் மேற்கொள்ள வேண்டாம்: விடுதலைப் புலிகள் வேண்டுகோள் சிறிலங்காப் படையினர் மக்களை கேடயமாகப் பயன்படுத்தி தமது கடல் போக்குவரத்தினை மேற்கொள்வதால் யாழ். குடாநாட்டு மக்கள் கடல்வழிப் போக்குவரத்து எதனையும் மேற்கொள்ள வேண்டாம். இந்த வேண்டுகோளை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை விடுத்துள்ளது. சிறிலங்கா கடற்படை யாழ்ப்பாண மக்களை கேடயமாகப் பயன்படுத்தி தங்களுடைய கடல்வழிப் போக்குவரத்து மற்றும் அதனூடான வளங்களை செய்து வருகின்றது. எந்த வகையிலும் பாதுகாப்பு உறுதிப்பாடு வழங்கப்படாததாகவே கடல்வழிப் போக்குவரத்து உள்ளது. தரைவழிப் பாதையைத் திறந்து மக்களுடைய போக்குவரத்துக்கு வழி செய்யப்பட வேண்டும் என்று விடுதலைப் புலிகள் வ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.