Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கருணா குழுவை அடக்கினால் தாக்குதல்களை நிறுத்துவீர்களா?: மகிந்த இரகசிய ஒப்பந்தம்!! இரு வாரங்களுக்கான தற்காலிக பயிற்சித் திட்டமாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முன்னெடுத்துள்ள அந்தரங்க முன்னெடுப்புக்கள், சிறிலங்கா அரசியல் உலகை அதிர வைத்துள்ளன. சண்டே லீடர் வெளியிட்டுள்ள அதிர்ச்சிதரும் செய்தியின் படி, துணை இராணுவக்குழுவான கருணா குழுவின் தாக்குதல்களை முற்றுமுழுதாக நிறுத்திக் கொண்டால், விடுதலைப் புலிகளும் இராணுவத்தின் மீதான தாக்குதல்களை முற்றாக நிறுத்த முன்வருவார்களா என்று இரகசிய ஒப்பந்த ரீதியாக வினவியுள்ளார் என்று தகவல் வெளியிட்டுள்ளது. யாழிலிருந்து வெளிவரும் உதயன் நாளேட்டின் ஆசிரியர் என்.வித்யாதரன் மற்றும் அதன் வெளியீட்டாளர் ஈ.சரவணபவன் ஆகியோரிடம், கட…

  2. விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக 28 இராணுவத்தினரின் விவரங்கள் கண்டுபிடிப்பு வெலி ஓயா கல்யாணபுர சிறிலங்கா இராணுவ முகாமுடன் இணைந்து பணியாற்றிக் கொண்டு விடுதலைப் புலிகளுக்கு உளவுப் பார்த்ததாக கூறப்படும் இராணுவச் சிப்பாய் ஒருவர் அந்த முகாம் அதிகாரிகளினால் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவரைப் போன்று விடுதலைப் புலிகளுக்கு உளவு பார்த்த மேலும் இராணுவத்தினர் மற்றும் அதிகாரிகள் என 28 பேரின் விவரங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உடனடியாக செயற்பட்ட இராணுவ காவல்துறையினர், மேலும் 5 பேரை கைது செய்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். முதலில் கைது செய்யப்பட்டவர் திருகோணமலை கோமரன்கடவெல பிரதேசத…

    • 1 reply
    • 1.2k views
  3. கண்காணிப்புக்குழுவை மீளமைக்க செப். 1 வரையிலும் காலக்கெடு நீடிப்பு நோர்வேயின் வேண்டுகோளை ஏற்று தமிழீழ விடுதலைப் புலிகள் தீர்மானம் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளைச் சேர்ந்தவர்களை இலங்கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் இருந்து அகற்றி புதியவர்களை நியமிப்பதற்கான காலக்கெடுவை தமிழீழ விடுதலைப் புலிகள் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் முதலாம் திகதிவரை நீடித்துள்ளனர். நோர்வேயின் வேண்டுகோளை ஏற்றே விடுதலைப் புலிகள் இந்த முடிவை எடுத்துள்ளனர் என்று கூறப்படுகிறது. இலங்கை இனப்பிரச்சினைக்கு அனு சரணை வகிக்கின்ற நோர்வே மற்றும் ஐஸ் லாந்து, டென்மார்க், சுவீடன், பின்லாந்து ஆகிய ஐந்து நோர்ட்டிக் நாடுகளின் பிரதிநிதிகள் யுத்த நிறுத்தக் கண்காணிப்புப் பணியில் தற் …

  4. கெப்பிற்றிக்கொல்லாவில் நடந்தது என்ன? அம்பலமாகி வரும் கொடூர சதிச்செயல்கள் http://www.tamilnaatham.com/articles/2006_...lan20060624.htm

  5. அல்லைப்பிட்டி மக்களை நிவாரணத்தின் பெயரால் ஏமாற்றிய இராணுவம் யாழ்ப்பாணம் தீவகத்தில் உள்ள அல்லைப்பிட்டி பகுதியில் கட்டாயப்படுத்தி மீளக் குடியேற்றிய மக்களை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சிறிலங்கா இராணுவத்தினர் நிவாரணம் தருவதாகக் கூறி ஏமாற்றியுள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தை இராணுவத்தினர் தமது முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக தென்னிலங்கை மக்களுக்கு காட்டும் முயற்சியாக தென்னிலங்கை ஊடகவியலாளர்கள் விமானம் மூலம் யாழ். குடாநாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அல்லைப்பிட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது மக்கள் இருப்பதாக காட்ட முற்பட்ட இராணுவத்தினர் நிவாரணம் தருவதாக அமைச்சர் மற்றும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தமைக்கு இண…

  6. துணை இராணுவக் குழுவினரின் சிறார் கடத்தலைத் தடுக்க யூனிசெஃப் வலியுறுத்தல் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் சிறார் கடத்திச் செல்லப்படுதலைத் தடுக்க வேண்டும் என்று யூனிசெஃப் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. யூனிசெஃப் அமைப்பு இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரான கருணா குழுவினர் சிறார்களை கடத்திச் சென்று தங்களது குழுக்களில் கட்டாயமாக இணைத்துக் கொள்வதை தடுத்து நிறுத்த வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒருவார காலத்தில் இது தொடர்பில் 30-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளது. கடந்த மார்ச் மாதத்திலிருந்து 18 வயதுக்குறைவானோர் கடத்தப்படுவதும் கட்டாயமாக குழ…

  7. ¿£Ã¡Å¢ÂÊ¢ø ¨Åò¾¢Â÷ Å£ðÊø ¦¸¡û¨Ç. ¡úôÀ¡½õ ¿£Ã¡Å¢ÂÊ¢ø À¢ÃÀÄ ¨Åò¾¢Â÷ ´ÕÅ¡¢ý ţΠ§¿üÚ ¿ûÇ¢Ã× ¬Ô¾À¡½¢¸Ç¡ø ¦¸¡û¨Ç¢¼ôÀðÎûÇÐ. ÐôÀ¡ì¸¢, ¸ò¾¢¸Ù¼ý ÒÌó¾ ¦¸¡û¨ÇÂ÷¸û ÐôÀ¡ì¸¢ôÀ¢Ã§Â¡¸ò¨¾ §Áü¦¸¡ñ¼Ð¼ý ÍÁ¡÷ ãýÚ Á½¢§¿Ãõ Å£ðÊÛû ¾¡¢ò¾¢ÕóÐ ¦ÀÕ󦾡¨¸ôÀ½ò¨¾Ôõ ¿¨¸¸¨ÇÔõ «À¸¡¢òÐî ¦ºýÚûÇÉ÷. þÅÃРţðÊø þÕóÐ áÚ Á¢üÈ÷ àÃò¾¢ø þáÏÅì ¸¡ÅÄÃñ þÕó¾§À¡Ðõ þÅÃРţðÊø ÐôÀ¡ì¸¢î ºò¾õ §¸ð¼ ¿¢¨Ä¢Öõ ¦¸¡û¨ÇÂ÷¸û «í¸¢ÕóÐ ¦ÅÇ¢§ÂÈ¢ ãýÚ Á½¢§¿Ãò¾¢ý À¢ýɧà À¨¼Â¢É÷ «íÌ ¦ºýÈ¢Õó¾É÷ ±ýÀÐ ÌÈ¢ôÀ¢¼ò¾ì¸Ð.

    • 2 replies
    • 1.3k views
  8. கொழும்பில் சற்றுமுன் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளதாக செய்திகள் கூறுகின்றது...! மேலதிக தகவல் தொடர்ந்து வரும்..

  9. கீழ்காணும் கையெழுத்து சேகரிப்பு புலம்பெயர்ந்த நோர்வே வாழ் தமிழீழமக்களிடம் மட்டுமே எதிர்பார்க்கப்படுகின்றது http://www.opprop.no/opprop.php?id=ermedltte கீழ்காணும் கையெழுத்து சேகரிப்பு புலம்பெயர்ந்த டென்மார்க் வாழ் தமிழீழமக்களிடம் மட்டுமே எதிர்பார்க்கப்படுகின்றது http://www.tamilernessag.underskrifter.dk/

    • 5 replies
    • 1.9k views
  10. அஞ்சலி அரசியல் இவ்வாரம் பாராளுமன்றம் கூடிய முதல் இரு நாட்களிலும் அண்மைய வன்முறைகளின் போது படுகொலையுண்ட அப்பாவிக் குடிமக்களுக்கு அஞ்சலி செலுத்துமுகமாக ஒவ்வொரு நிமிடம் மௌனம் அனுஷ்டிக்கப்பட்டது. முதல்நாளான கடந்த செவ்வாய்க்கிழமை சபை கூடிய போது கடந்த வாரம் அநுராதபுரம் மாவட்டத்தின் ஹெப்பித்திக்கொல்லாவையில் பயணிகள் பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட கிளேமோர் குண்டுத்தாக்குதலைக் கண்டனம் செய்து விசேட அறிக்கையொன்றை விடுத்து உரையாற்றிய ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.) யின் பாராளுமன்றக் குழுத்தலைவர் விமல் வீரவன்ச, அச்சம்பவத்தில் பலியான அப்பாவிக் குடிமக்களுக்கு அஞ்சலி செலுத்த சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் எழுந்து நின்று ஒரு நிமிட நேரம் மௌனம் அனுஷ்டிக்குமாறு கேட்டுக் கொண்டார். …

  11. தமிழகத்தின் அக்கறை இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் அக்கறை காட்டுவதில் ஒரு தணிவு நிலையைக் கடைப்பிடித்து வந்த தமிழக அரசியல் கட்சிகள் மீண்டும் துடிப்புடன் குரல் கொடுக்கும் சூழ்நிலையொன்று உருவாகியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இலங்கையில் அண்மைக் காலமாகத் தீவிரமடைந்திருக்கும் வன்முறை நிகழ்வுப் போக்குகள் காரணமாக தமிழகத்தில் தோன்றியிருக்கும் உணர்வலைகளை அவதானித்த இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் , மாநில முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியுடன் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைவரங்கள் குறித்து ஆராய்வதற்காக தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை சென்னைக்கு அனுப்புவதாக அறிவித்திருக்கிறார். இன்று புதுடில்லி செல்லும் இ…

  12. தந்திரோபாய நகர்வுகளுக்கான மிக முக்கிய காலம் நெருங்குகிறது அமைதி முயற்சிகள் தோற்று செயலிழந்து போய், நாட்டில் மீண்டும் ஒரு பயங்கர யுத்தம் வெடிக்கும் ஆபத்து ஏது நிலை உருவாகி வருவதை இந்த நாட்டின் சாதாரண பிரஜை வரை ஒவ்வொருவரும் உணர்ந்து கொண்டிருக்கின்றார்கள். விரும்பியோ, விரும்பாமலோ இந்த இலங்கைத்தீவு ஒரு கொடூர யுத்தத்துக்கு முகம் கொடுக்கும் அவலம் தவிர்க்க முடியாததாகி வருகிறது. அத்தகைய நிலைமை ஏற்பட்டால் அடுத்தது என்ன என்ற கேள்வி எழுகிறது. இலங்கைத் தீவில் அகோர யுத்தம் நிலவும்போது முன்னரைப் போல சர்வதேச சமூகம் வெறும் கண்டன அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டு அதனைக் கைகட்டிப் பார்த்திருக்குமா என்ற வினாவும் எழுகின்றது. விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலி…

  13. சிந்தனையையும், யதார்த்தத்தையும் கொண்ட தமிழீழ அரசை புலிகள் இயங்குகின்றனர் - AP செய்தி நிறுவனம். சிந்தனையையும், யதார்த்தத்தையும் அடிப்படையாகக் கொண்ட தமிழீழ அரசை, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கி வருவதாக AP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அண்மையில் வன்னிப் பெருநிலப்பரப்பில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட செய்தியாளர் ஒருவரின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, சிறப்புக் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கும் யுP செய்தி நிறுவனம், தென்னிலங்கையில் பயன்படுத்தப்படும் சிறீலங்காவின் வரைபடம், உண்மை நிலையை பிரதிபலிபக்கவில்லை என குறிப்பிட்டுள்ளது. தமிழீழ நடைமுறை அரசு என்பது வெறும் கற்பனை என சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ள போதும், கள யதார்த்தம் வடக்குக் கிழக்கில் தமிழீழ தனியரச…

  14. தமிழ்க் குடிமக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதிலுள்ள கடப்பாட்டை நிறைவேற்றும்படி இலங்கை அரசை சர்வதேச சமூகம் நிர்ப்பந்திக்க வேண்டும்' * வடக்கு, கிழக்கில் அப்பாவிக் குடிமக்கள் எதிர்நோக்கும் அவலங்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று புதன்கிழமை காலை சபையில் விடுத்த விசேட அறிக்கை கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலான கொடூரமான யுத்தத்தினால் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ்ப் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பல இலட்சக் கணக்கான தமிழ் மக்கள் இடம்பெயர்ந்துள்ளார்கள். அவர்களில் பெரும்பாலானோர் உள்ளூரில் இடம்பெயர்ந்துள்ளார்கள்; கணிசமான எண்ணிக்கையானவர்கள் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்கள். டிசம்பர்௨004 கடல்கோளினாலும் வடக்கு, கிழக்கு தம…

  15. சுயமாகத் தீர்மானிக்கக் கூடிய ஆளுமை ஏதுமற்றவர் ராஜபக்ச: ஆய்வாளர் திருநாவுக்கரசு சாடல் எந்த ஒரு பிரச்சனையிலும் சுயமாகத் தீர்மானிக்கக் கூடிய ஆளுமை ஏதுமற்றவர் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச என்று தமிழீழத்தின் மூத்த அரசியல் ஆய்வாளர் மு. திருநாவுக்கரசு சாடியுள்ளார். விடுதலைப் புலிகளின் உத்தியோகப்பூர்வ வானொலியான புலிகளின் குரலில் ஒலிபரப்பாகிய கருத்துப் பகிர்வு நிகழ்ச்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (18.06.06) அவர் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்: ராஜ்பக்சவின் கதிரை இப்போது ஆடத் தொடங்கிவிட்டது. யார் ராஜபக்சவை கதிரையில் உட்கார வைத்தார்களோ அவர்களே கதிரையை ஆட்டவும் தொடங்கிவிட்டனர். உண்மையான செயல்பூர்வ அர்த்தத்தில் ராஜபக்சவை கதிரையில் அமர்த்திய முதலாவது அணியின…

  16. ஜேவிபி யுடனான வரதர் அணியினரின் நெருங்கிய தொடர்பு அம்பலம். மட்டக்களப்பில் இயங்கி வரும் சிறீலங்கா துணை இராணுவக்குழுவான ஈ.பி.ஆர்.எல்.எவ் வரதர் அணியினர் ஜேவிபி நெருங்கிய தொடர்புகளை பேணிவருவது அம்பலமாகியுள்ளது. அண்மையில் கொழும்பு சென்ற வரதர் அணியைச் சேர்ந்த ஆயுததாரிகள் சிலர் ஜேவிபி தலைவர் சோமவன்சவையும், கட்சியின் பரப்புரைச் செயலாளர் விமல் வீரவன்சவையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டதில் விடுதலைப் புலிளுக்கு எதிராக ஈ.பி.ஆர்.எல்.எவ் வரதர் அணியினர் பரப்புரைகளை மேற்கொள்வதற்கு தேவையான நிதியுதவினை வழங்குவதற்கு சோமவன்ச இணங்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது. -பதிவு

  17. சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கான தமிழர் பிரதிநித்துவத்தை குறைக்க கோரிக்கை சிறிலங்கா நாடளுமன்றத்துக்கான தமிழர் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து சிங்களவர் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றில் ஜாதிக ஹெல உறுமய உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் கூறியதாவது: நாட்டின் சட்டப்படி வடபகுதிக்கு 10 நாடாளுமன்ற ஆசனங்களே ஒதுக்கப்பட வேண்டும். ஆனால் 15 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையைக் குறைத்து இதர பகுதிகளினது எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். யாழ். மாவட்டத்தில் மொத்தல் 6,44,279 வாக்களர்கள் இருப்பதாக தேர்தல் திணைக்களம் கூறுகிறது. இந்த வாக்களர்களுக்கு 9 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. வன்னி மாவட்டத்தில் 2,26,604…

  18. ஐரோப்பியத் தடையால் பேச்சுக்களுக்கு இடையூறு: சிறிலங்கா அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையினால் அமைதிப் பேச்சுக்களுக்கு இடையூறு ஏற்பட்டிருக்கிறது என்று சிறிலங்கா அரசாங்கப் பேச்சாளரான அமைச்சர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்தார். சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேர்காணல் அளித்திருந்த கேகலிய ரம்புக்வெல, ஜே.வி.பி.யினர் கூறுவது போல் சிறிலங்காவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தடை விதிக்க முடியாது. நாட்டினது பாரிய இனப்பிரச்சனைக்கு இடையூறு விளைவிக்கக் கூடிய எதனையும் நாம் செய்ய மாட்டோம் என்றார் அவர். தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பியத் தடையானது அமைதிப் பேச்சுக்களுக்கு இடையூறாக உள்ளதா என்ற கேள்விக்குப் பதிலளித்த கேகலிய ரம…

  19. யாழ் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் சிறீலங்கா புலனாய்வுத் துறையினரால் எரியூட்டு. சிறிலங்கா புலனாய்வுத் துறையிரால் யாழ் கோப்பாய்த் மாவீரர் துயிலுமில்லம் எரியூட்டப்பட்டுள்ளதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று செவ்வாய்கிழமை நள்ளிரவு சிறீலங்கா புலனாய்வுத் துறையினரால் மாவீரர் துயிலுமில்லைத்தை எரியூட்டியிருந்தனர். இது குறித்து மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. http://www.pathivu.com/

  20. யாழ் வட்டுக்கோட்டையில் தாக்குதல் படைச் சிப்பாய் இருவர் பலி! மேலும் இருவர் படுகாயம். யாழ்ப்பாணம் வட்டுக் கோட்டையில் இன்று காலை இடம் பெற்ற துப்பாக்கிச் சூடு கைக்குண்ட வீச்சு சம்பவத்தில் இரண்டு இராணுவத்தினர் பலியாகியுள்ளதுடன் இரண்டு இராணுவத்தினர் படு காயங்களுக்கு உள்ளாகி பலாலி இராணுவ வையித்திய சாலைக்கு எடுத்தச் செல்லப்பட்டுள்ளார்கள். இன்று காலை 8.45 மணியளவில் வீதிக்கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் மீ;து இனம் தெரியாதவர்கள் மறைந்திருந்து கைக்குண்டுத் தாக்குதலை மேற்கொண்டார்கள.; இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட இடத்தில் ஒரு இராணுவம் பலியானதுடன் மற்றொரு இராணுவத்தினர் ஒருவர் பலத்த காயத்திற்கு உள்ளாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட இடத்திற்கு வட்டுக் கோட்டை …

  21. 'பேசாலை கொலைகள்; கடற்படை, போலிசார் மீது நேரில் பார்த்தவர்கள் குற்றச்சாட்டு'-- போர் நிறுத்தக்கண்காணிப்புக் குழு இலங்கையில் மன்னார் மாவட்டம் பேசாலையில் கடந்த வாரம் நடந்த சம்பவங்களில் இலங்கை கடற்படையினர் மற்றும் போலிஸார் பொதுமக்களை சுட்டுக்கொன்றதாக நேரில் பார்த்தவர்கள் கூறுவதாக இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் கூறுகின்றனர். இது குறித்து தமிழோசையிடம் பேட்டியளித்த போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிற்காகப் பேசவல்ல அதிகாரி, தோர்ஃபினூர் ஒமார்சன் , மன்னார் அருகே பேசாலை தேவாலயத்தில் கையெறிகுண்டை வீசியவர்கள் ராணுவத்தை சேர்ந்தவர்கள் போலத்தான் தெரிகிறது என்றும் இது ஒரு கவலையளிக்கும் சம்பவம் என்றும் கூறினார் ராணுவத்தின் மீது எந்த அடிப்படையில் நீங்கள் குற்றம…

  22. ஐரோப்பிய கண்காணிப்புக் குழுவினரை வெளியேற்ற சிறிலங்கா எதிர்ப்பு [வியாழக்கிழமை, 22 யூன் 2006, 17:00 ஈழம்] [ம.சேரமான்] இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவில் இடம்பெற்றுள்ள ஐரோப்பிய நாடுகளின் உறுப்பினர்களை வெளியேற்ற வேண்டும் என்ற விடுதலைப் புலிகளின் கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தடையை விதித்திருப்பதன் மூலம் ஐரோப்பிய நாடுகளின் உறுப்பினர்கள் நடுநிலையோடு செயற்பட மாட்டார்கள் என்பதால் அவர்கள் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் வலியுறுத்தினர். கிளிநொச்சியில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற நோர்வேத் தூதுவருடனான சந்திப்பின் போதும் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்…

  23. மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் வெற்றிடத்திற்கு சந்திரகாந்தன் தெரிவு. மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் வெற்றிடத்திற்கு மாமனிதர் சந்திரநேருவின் மகன் சந்திரகாந்தன் அவர்களை நியமிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளருடன் தமிழத் தேசியக் கூட்டமைப்பினர் கலந்துரையாடிதாவும் இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சந்திரகாந்தன் ஒப்புக்கொண்டுள்ளார் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. லண்டலின் வசிக்கும் சந்திரகாந்தனை ஐரோப்பிய நாடுகளுக்கான பரப்புரைகளை மேற்கொள் வரவிருக்கும் தமிழத்தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின…

  24. பேசாலை தேவாலயம் மீதான சிறிலங்கா கடற்படையின் அட்டூழியத் தாக்குதல: வத்திக்கானுக்கு மன்னார் ஆயர் கடிதம் மன்னார் பேசாலை தேவாலயம் மீதான சிறிலங்கா கடற்படையின் அட்டூழியத் தாக்குதல் குறித்து வத்திக்கானுக்கு மன்னார் ஆயர் இராயப்பு யோசப் அடிகளார் கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இலங்கையின் மிகப் பெரிய தேவாலயங்களில் ஒன்றான மன்னார் விக்டோரி தேவாலயத்தில் சிறிலங்கா கடற்படையினரது தாக்குதலில் அப்பாவி மக்கள் இரத்தம் சிந்தியுள்ளமையால் தேவாலயத்தின் புனிதம் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் கொல்லப்பட்ட ஆறு பொதுமக்களின் சடலங்களை எரியூட்டிவிட்டு வந்திருகிறேன். உள்ளுர் மக்கள் சிறிலங்கா கடற்படையினரால் அச்சமடைந்த நிலையில் உள்ளனர். பேசால…

    • 4 replies
    • 1.4k views
  25. யுத்த நிறுத்தத்தைக் கடைப்பிடிக்க புலிகள் திட்டவட்டமான நிபந்தனை அரசுப் படைகள் செம்மையாகப் பின்பற்றினால் தாங்களும் அதே மாதிரிச் செயற்படுவார்களாம் நோர்வேக்கு எழுதிய கடிதத்தில் தெரிவிப்பு யுத்த நிறுத்தத்தைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் திட்டவட்டமான நிபந்தனை ஒன்றை விதித்திருக்கின்றார்கள். யுத்த நிறுத்த ஏற்பாடுகளை அரசுப் படைகள் செம்øமாயாக முழுமையாக கடைப்பிடித்தால் மட்டுமே தாங்களும் யுத்த நிறுத்தத்தைக் கடைப்பிடிப்பார்கள் என்பதை எழுத்து மூலம் அனுசரணைத் தரப்பான நோர்வேக்கு விடுதலைப் புலிகள் தெரியப்படுத்தியிருக்கின்றன

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.