ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142583 topics in this forum
-
இன்று மாலையுடன் திருகோணமலையில் கண்காணிப்புப் பணிகளில் இருந்து யுத்த நிறுத்த கண்காணிப்புக்குழு விலகல்! Written by Paandiyan Tuesday, 17 January 2006 இன்று செவ்வாய்க்கிழமை மாலை நான்கு மணியுடன் திருகோணமலையில் கண்காணிப்புப் பணிகளில் இருந்து தாம் விலகிக்கொள்வதாக திருகோணமலை யுத்த நிறுத்தக் கண் காணிப்புக்குழுவினர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அறிவித்துள்ளதாக பிந்திக்கிடைத்த செய்தி ஒன்று தெரிவித்துள்ளது. நாளுக்கு நாள் அதிகாரித்துவரும். வன்முறைச் சம்பவங்களும், கொலைகளும் இங்கு யுத்தநிறுத்தம் நடைமுறையில் உள்ளதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், கண்காணிப்புக்குழுவினரும் பாரிய அச்சுறத்தல்களை சந்திக்க வேண்டியுள்ளதாகவும் இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அத்தக…
-
- 0 replies
- 1.1k views
-
-
தென்மராட்சியில் கிளைமோர் தாக்குதல் - இரு படையினர் பலி யாழ். தென்மராட்சியின் சரசாலைப் பகுதியில் இன்று பகல் 1.00 மணியளவில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் இரு படையினர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஒருவர் படுகாய மடைந்துள்ளார். உழவூர்தி ஒன்றில் பருத்தித்துறை - கனகம்புளியடி வீதியால் சென்ற படையினர் மீதே சரசாலைப் பகுதியில் வைத்து இத்தாக்குதல் நடத்ப்பட்டுள்ளது. இதனால் அந்த உழவூர்தியில் சென்ற மூன்று படையினரில் இருவர் கொல்லப்பட்டதுடன், மற்றயவர் படுகாயமடைந்து உயிராபத்தான நிலையில் பலாலி இராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் தகவல் மூலம்- சங்கதி
-
- 1 reply
- 1.2k views
-
-
இராணுவக் காடைத்தனங்களை கட்டுப்படுத்தாவிட்டால் மக்களின் கொந்தளிப்பும் மாறாது: சு.ப.தமிழ்ச்செல்வன் தமிழர் தாயகத்தில் சிறிலங்கா இராணுவக் காடைத்தனங்களை கட்டுப்படுத்தா விட்டால் மக்களின் கொந்தளிப்பை மாற்றுவது கடினம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் எச்சரித்துள்ளார். கிளிநொச்சியில் சு.ப.தமிழ்ச்செல்வனை இன்று செவ்வாய்க்கிழமை சிறிலங்காவிற்கான நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கர் மற்றும் இலங்கைப் போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவின் தலைவர் ஹக்ருப் ஹொக்லண்ட் ஆகியோர் சந்தித்துப் பேசினர். இச்சந்திப்புக்களுக்குப் பின்னர் ஊடகவியலாளர்களிடம் சு.ப.தமிழ்ச்செல்வன் கூறியதாவது: நோர்வே தூதுவரை முதலில் சந்தித்தோம். தற்போதுள்ள மோசமான…
-
- 0 replies
- 1k views
-
-
விடுதலைப் புலிகள் அமைப்பு தயாரித்த அம்மா என்ற திரைப்படத்தில் நடித்த நடிகையும், அவரது தாயாரும் அடையாளம் தெரியாதவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இலங்கையில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் ¬முறிந்துள்ள நிலையில் ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஆங்காங்கே மோதல் நடந்து வருகிறது. இரு தரப்பிலும் உயிர்ப் பலிகள் ஏற்பட்டுள்ள நிலையில் ராணுவத்தின் தரப்பில் தான் அதிக அளவில் இதுவரை சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தெற்கு யாழ்ப்பாணம் பகுதியில் மணிபாய் நகர் என்ற இடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும், அவரது இரு மகள்களும் சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் ஒருவர் விடுதலைப் புலிகளின் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான நிதர்சனம் சார்பில் தயாரிக்கப்பட்ட…
-
- 0 replies
- 1k views
-
-
அமெரிக்க புலனாய்வுத்துறையின் உயர்மட்டக் குழு கொழும்பு வருகை! [ஞாயிற்றுக்கிழமை, 15 சனவரி 2006, 16:06 ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] அமெரிக்க புலனாய்வுத்துறையான எஃப்.பி.ஐ அதிகாரிகள் குழு ஒன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (24.01.06) கொழும்பு வரவுள்ளது. இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறைகள், யுத்த நிறுத்த ஒப்பந்தம் முறிவடையும் அபாயம் ஆகியவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு நடடிவடிக்கை எடுக்கக்கோரி அண்மையில் அமெரிக்காவுக்கு நேரடியாக சென்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர விடுத்த வேண்டுகோளுக்கு அமையவே இக்குழுவினரின் வருகை அமையவுள்ளது என்று கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேற்படிக்குழுவில் அமெரிக்க இராஜாங்க அமைச்சு அதிகாரிகள் சிலரும் இடம்ப…
-
- 5 replies
- 1.5k views
-
-
விரைவில் தமிழீழமக்களுக்கு வெற்றிச்செய்தி கிட்டும், அது தமிழீழ விடுதலைப்புலிகளின் படையணிகளால்த்தான் கிடைக்கும் எனவும், அதற்காக தமிழீழமக்களுடன், தமிழிழ விடுதலைப்புலிகளின் படையணிகளும் முழு மூச்சில் ஈடுபட்டுக்கொண்டு இருப்பதாகவும் தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர் கா.வே.பாலகுமார் அவர்கள் இன்று மேஜர் குட்டிசிறி நினைவு தினத்தில் இவ்வாறு கூறியுள்ளார். தகவல் ஐபிசி.. :idea:
-
- 11 replies
- 2.4k views
-
-
மன்னாரில் கைக்குண்டுத் தாக்குதல்: சிப்பாய் பலி- பொதுமகன் காயம் மன்னார் பொது மருத்துவமனைக்கு அருகில் உள்ள சிறிலங்கா இராணுவ காவலரண் மீது நேற்று திங்கட்கிழமை இரவு 8:50 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய கைக்குண்டுத் தாக்குதலில் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மருத்துவமனை எல்லைக்குள் உள்ள பாலமுருகன் ஆலயத்திற்கு அருகே, சிறிலங்கா கடற்படையும் இராணுவப்படையும் இணைந்து, காவலரண் அமைத்துள்ளனர். கைக்குண்டு வெடித்ததும், அவ்விடத்திற்கு விரைந்த படையினர், கோபவெறியுடன் தாறுமாறாகச் சுட்டதில், பாலமுருகன் ஆலய முன்விறாந்தையில் தூங்கிக்கொண்டிருந்த அப்பாவியொருவர் படுகாயமடைந்துள்ளார். அப்பகுதியில் காண்போரையெல்லாம் அடித்து விரட்டிய படையினர், தொடர்ந்து தேடுதல்…
-
- 0 replies
- 1.1k views
-
-
சிங்கள ஊடகங்களில் பொய்யான செய்தி அம்பாறை அரசியல்துறை குற்றச்சாட்டு! அம்பாறை மாவட்ட கஞ்சிக்குடியாற்றுப் பகுதியில் இராணுவத்தினரும், தேசவிரோதக் குழுவினரும் இணைந்து நேற்று முன்தினம் ஆறு தமிழீழ விடுதலைப் புலிகளை சுட்டுக்கொலை செய்துள்ளதாக சிங்கள ஊடகங்களில் வெளியான செய்தியை அம்பாறை மாவட்ட அரசியல்துறையினர் மறுத்துள்ளனர். இது தொடர்பாக அறிக்கை ஒன்றினையும் அரசியல்துறை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- சிறிலங்கா இராணுவத்தினரும், அவர்களுடன் சேர்ந்தியங்கும் தேசவிரோதச் சக்திகளும் தமிழ் மக்களை திசை திருப்பும் வகையில் பலதரப்பட்ட பொய்யான வதந்திகளைப் பரப்பி மக்களைத் துன்புறுத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த வகையில்தான் நேற்று முன்தினம் சிங்கள ஊ…
-
- 3 replies
- 1.7k views
-
-
தட்டிக் கேட்க ஆள் இல்லாட்டில் அமெரிக்கன் தம்பி தண்ட பிரதண்டம் - கவுன்சிலர் தயா இடைக்காடர் பகிரங்க சவால். ஜ செவ்வாய்கிழமைஇ 17 சனவரி 2006 ஸ ஜ யோககுமார் ஸ இலங்கையின் அமெரிக்கத் தூதுவர் அண்மையில் தமிழர் தொடர்பாக தெரிவித்த கருத்துக்கு பிரித்தானிய கவுன்சிலர் தயா இடைக்காடர் பகிரங்க சவால் விடுத்துள்ளார். புங்குடுதீவு நலன்புரிச் சங்கத்தின் பிரித்தானியக் கிளையின் ஏற்பாட்டில் சிங்கள படையினராலும் ஈ.பி.டி.பி துரோக கும்பலினாலும் கூட்டாக இனைந்து கோரமான முறையில் கொல்லப்பட்ட தர்சினியின் இரங்கல் நிகழ்வில் உரையாற்றிய கரோ பிரதேச கவுன்சிலர் தயா இடைக்காடர் பகிரங்க விவாதத்திற்கு கொழும்பின் அமெரிக்க தூதுவரை அழைத்துள்ளார். அமெரிக்கா இன்று பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்று கூறிக்…
-
- 0 replies
- 1.1k views
-
-
நாடாளுமன்றம் கூட்டத்தொடரில் தமிழ் கட்சிகள் ஒன்றுபட்டு செயற்பட இணக்கம். தற்போதைய அரசியல் சூழ் நிலை குறித்து ஆராயும் முகமாக இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பும் மேலக மக்கள் முன்னணியும் கலந்துரையாடல் ஒன்றை நடத்தின. நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இல்லத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில் மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், உப தலைவர் ந குமரகுருபரன், தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழத்தலைவர் சம்பந்தன், உட்பட்ட குழுவினர் பங்கேற்றனர். இதன் போது வடக்குகிழக்கில் தமிழ்ர்களுக்கு எதிராக பாரிய வன்முறைகள் இடம்பெற்றுள்ளமை அடுத்து முதன்முறையாக நாடாளுமன்றம் கூடவுள்ளமையால் அதில் ஒன்றுபட்டு செயற்படுவது குறித்தும். தமிழர்களுக்கு எதிர…
-
- 0 replies
- 1.1k views
-
-
மட்டு. மாவட்டத்தில் வெள்ளம் மக்கள் இடம்பெயர்வு! மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக வயல்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஈரளக்குளம், பெருமாள்வெளி, இலுக்கு, பெரியவட்டவான், குருகனாமடு போன்ற வயல் வெளிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் பாடசாலை, கோயில்கள் போன்ற பொதுக் கட்டடங்களில் இடம் பெயர்ந்துள்ளார்கள். அத்துடன் நகர்ப்பகுதிக்கான போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சித்தாண்டி நான்காம் குறிச்சியும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்ததில் உள்ளது. மேலும் வந்தாறுமூலை, கொம்மாதுறை, மாவடிவேம்பு போன்ற பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள…
-
- 4 replies
- 1.3k views
-
-
நாட்டில் இருவாரம் விடுமுறை வழங்கி புலிகளின் அடாவடித்தனங்களுக்கு யுத்தம் மூலம் தீர்வு காண்க இனப்பற்றுக்கொண்ட பல்கலைக்கழக மாணவர்கள் அமைப்பு கோரிக்கை நாட்டில் இருவார கால கட்டாய விடுமுறையை அமுல்படுத்தி புலிகளின் அடாவடித்தனத்திற்கு யுத்தத்தின் மூலம் முடிவு கட்டுங்கள் என்று இனப்பற்றுக் கொண்ட பல்கலைக்கழக மாணவர்கள் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.மேற்கத்தேய ஊடகங்களும் சமாதான வியாபாரிகளும் எவ்வளவுதான் ஊதிப் பெரிதுபடுத்தினாலும் பிரபாகரன் தோற்கடிக்க முடியாத அசகாய சூரனல்ல. எனவே நாம் அனைவரும் தமிழ் இனவாதத்தை யுத்த ரீதியில் தோற்கடிக்க எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் என்றும் அந்த கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. புலிகளின் அடாவடித்தன…
-
- 0 replies
- 966 views
-
-
ஞாயிறு 15-01-2006 20:32 மணி தமிழீழம் [நிருபர் சிறீதரன்] கருணாவின் மறைவிடத்தை படையினர் அடையாளம் காட்டியுள்ளனர் – கண்காணிப்புக் குழு. கருணாவின் ஆயுததாரிகளை நிராயுதபாணிகளாக்குவதற்கு இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எவற்றையும் சிறீலங்கா அரசாங்கம் மேற்கொள்ளாததால் கண்காணிப்புக் குழு நடவடிக்கைகள் நெருக்கடிக்குள் உள்ளாகி இருப்பதாக கண்காணிப்புக் குழு குற்றம் சுமத்தியுள்ளது. தென்னிலங்கையில் இருந்து வெளியாகும் சண்டே லீடர் செய்தி ஏட்டுக்கு வழங்கிய செவ்வியில் இந்தக் குற்றச்சாட்டை கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர் ஹெலன் ஒல்ப்ஸ்டோட்டியர் முன்வைத்துள்ளார். கருணாவின் ஆயுததாரிகளுக்கு சிறீலங்கா அரசாங்கம் நேரடியாக ஆதரவையோ அன்றிப் பாதுகாப்பையோ வழங்கி வருவதை உறுதி செய்வதற்கான…
-
- 3 replies
- 1.7k views
-
-
உண்மையா அது? :shock: குருவாயூரப்பன் கோவிலுக்குள் 'கதலிக்' மதத்தவர்களுக்கு அனுமதி இல்லையாம். ஆனால் மகிந்த தன் மனைவி 'சிராந்தி'யை கொண்டு போய் இருக்கிறார். இதனால் பெரிய அமளி துமளியே நடக்கிறதாமே? கோயிலே 3 கிழமைகள் பூட்டி, நல்லா தேச்சு கழுவோணுமாம். அதோட அன்றைக்கு செய்த பூஜை ஒன்றும் செல்லுபடியாகாதாம். கோயில் மகிந்தவை 'sue' பண்ண போதாமே? :shock: ஆங்கில பத்திரிகையாசிரியர் ஒருவர் இது பற்றி பத்த வைக்க கோபம் கொண்ட மகிந்த "அடோ, என்னை பத்தி எழுதின விட்டுவைச்சன்...என்ர மனிசிய பத்தி எழுதிட்ட, உன்ன கொல்றனா இல்லயா எண்டு பார்" எண்டு பாய, பத்திரிகையாளர் அதற்காக தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று சிங்கள காவல்துறைய நாட....மேலும் பத்திரிகைகள் கன்னா பின்னா எண்டு நாக்க புடிங்கிறமாரி கே…
-
- 18 replies
- 3k views
-
-
செஞ்சோலையின் புதிய வளாகம் தேசியத் தலைவர் அவர்களால் திறந்து வைப்பு செஞ்சோலையின் புதிய இல்லவளாகத்தைத் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் திறந்து வைத்து சிறப்பித்துள்ளார். இந்நிகழ்வில் தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதன்போது பொதுச்சுடரினை ஏற்றிவைத்த தேசியத் தலைவர் அவர்கள் வளாகத்தின் பெயர் பலகையினைத் திரை நீக்கம் செய்து வைத்தார். தொடர்ந்து செஞ்சோலை மாணவர்களின் கண்காட்சியும் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.
-
- 1 reply
- 1.4k views
-
-
தமிழர்களுடைய தேசிய விடுதலைப் போராட்டத்தை வேரோடு சாய்க சிறீலங்கா அரசும், சிங்கள பேரினவாத சக்திகளும் சமாதானத்திற்கா போர் எனக் கூறிக்கொண்டு இருவரை காலமும் முன்னெடுக்கப்பட்ட யுத்தம் இனிவரும் காலத்தில் பயங்கவாதத்திற்கான ஒழிப்புப் போர் என்ற தலைப்பில் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்கு சிறீலங்கா ஐனாதிபதி மகிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளார். இதன் அடிப்படையிலேயே சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெற்று தமிழீழ விடுதலைப் புலிகளை மீது யுத்தம் ஒன்றை வலிந்து முன்னெடுக்க ஐனாதிபதி மகிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாக ஜேபிவி கட்சியின் பொறுப்பு வாய்ந்த நபர் கொழும்பு ஊடகவிலாளர் ஒருவருடன் உரையாடியுள்ளார். குறித்த நபர் ஊடகவியாளருக்கு மேலும் தெரிவிக்கையில்… ஐனாதிபதி மகிந்த ராஜபக்ச பட…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஞாயிறு 15-01-2006 19:44 மணி தமிழீழம் [நிருபர் சிறீதரன்] ஊர்காவற்துறையில் ஈ.பி.டி.பி யினால் இளைஞர் படுகொலை. ஊர்சாவற்துறையில் இன்று அதிகாலையில் ஐந்து பிள்ளைகளின் தந்தை ஈ.பி.டி.பி மற்றும் கடற்படையினரால் இனைந்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். இன்று அதி காலை 12.30 மணியளவில் நண்பர் வீட்டில் இருக்கும் போது இவரை கடற்படையினரும் மற்றும் ஈ.பி.டி.பி யினரும் ஆகாயத்ததை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்து விட்டு இவரைப் பிடித்துச் சென்றுள்ளார்கள். இரவு நேரத்தில் பொலிஸ் நிலையத்திற்கு செல்ல முடியாத நிலையில் காலையில் வீட்டார் நண்பரின் வீட்டுக்காரர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஊர்காவற்துறைப் பொலிசில் முறைப்பாட்டைச் செய்துள்ளார்கள் …
-
- 0 replies
- 1k views
-
-
ஞாயிறு 15-01-2006 20:31 மணி தமிழீழம் [நிருபர் சிறீதரன்] பயங்கவாதத்திற்கான ஒழிப்புப் போர் என்ற தலைப்பில் போரை முன்னெடுக்க மகிந்தராஜபக்ச திட்டம். தமிழர்களுடைய தேசிய விடுதலைப் போராட்டத்தை வேரோடு சாய்க சிறீலங்கா அரசும், சிங்கள பேரினவாத சக்திகளும் சமாதானத்திற்கா போர் எனக் கூறிக்கொண்டு இருவரை காலமும் முன்னெடுக்கப்பட்ட யுத்தம் இனிவரும் காலத்தில் பயங்கவாதத்திற்கான ஒழிப்புப் போர் என்ற தலைப்பில் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்கு சிறீலங்கா ஐனாதிபதி மகிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளார். இதன் அடிப்படையிலேயே சர்சதேச நாடுகளின் ஆதரவைப் பெற்று தமிழீழ விடுதலைப் புலிகளை மீது யுத்தம் ஒன்றை வலிந்து முன்னெடுக்க ஐனாதிபதி மகிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாக ஜேபிவி கட்சியின் பொறு…
-
- 0 replies
- 1.2k views
-
-
மகளுடன் மனம்விட்டு பேசத்துடிக்கும் நளினி! அரித்திராவுக்கு சீ.பி.ஐ. விடுத்துள்ள எச்சரிக்கை! * ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் நளினி, முருகன் தமது மகளை நீண்ட நாட்களின் பின் சந்தித்தனர் -எஸ்.ஜே.எம்.- இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் ஆயுள்தண்டனைக் கைதியான நளினி, மரணதண்டனைக் கைதியான முருகன் தம்பதியின் மகள் அரித்திரா, போராட்டங்களின் பின் தனது பெற்றோரை கடந்த செவ்வாய்க்கிழமை வேலூர் சிறையில் சந்தித்தார். 14 வயதுடைய அரித்திரா தனது பெற்றோரை கடைசியாக 2002 ஆம் ஆண்டில் சந்தித்திருந்தார். நீண்ட நாட்களின் பின் பெற்றோரை பார்க்க விரும்பிய அரித்திரா, தமிழ் நாடு செல்ல இலங்கையிலுள்ள இந்திய தூதரகத்துக்கு விண்ணப்பித்தார். `விசா' அனுமதியை தூதரகம்…
-
- 6 replies
- 2k views
-
-
விடுதலைப் புலிகளின் விசேட பயிற்சிக் கல்லூரியில் தைத்திருநாள் விழா (படங்கள் உள்ளே) உழவர் திருநாளாம் தைத்திரு நாளை முன்னிட்டு இன்று சனிக்கிழமை காலை 6.00 மணி தொடக்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் பல படைகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்காண போராளிகள் ஒன்றுகூடி தைத்திருநாளை மகிழ்ச்சிகரமாக கொண்டாடினார்கள். சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியைச் சேர்ந்த மித்திரன் தலைமையில், மாதிரியாக வடிவமைக்கப்பட்ட தமிழீழத்தின் மாவட்டங்களின் பிரதேசங்களில் பல பொங்கல் பானைகளை வைத்து பொங்கி தமிழீழத்தின் தலைநகரான திருகோணமலையில் எற்றப்பட்ட தேசியக் கொடியின் முன்னால் பொங்கலைப் படைத்த தைத்திருநாள் நடைபெற்றது. தமிழீழ தேசியக் கொடியினை படைப்பயிற்சி ஆசிரியர்களின் ஒருங்கிணைப்பாளர் லெப். கேணல் வீரப்பன் ஏற…
-
- 7 replies
- 1.8k views
-
-
மலையகத்தில் புலிகளின் ஊடுருவல்? * சிங்கள ஊடகங்கள் கிளப்பும் புரளி சந்தேகத்துடன் பார்க்கும் பொலிஸார் எஸ்.நயனகணேசன் இன்று இலங்கையில் வாழும் அனைத்து தமிழர்களும் புலிகளாவார்கள். தென்னிலங்கையில் வாழும் மக்கள் பொலிஸாரால் தாக்குதலுக்கிலக்காகும் பொழுது பொலிஸார் குண்டர்களாவார்கள். அதேவேளை வடக்கு, கிழக்கு மக்கள் தாக்கப்படும் பொழுது அப்பொலிஸார் தேசாபிமானிகளாவார்கள். தெற்கில் மக்கள் கொல்லப்படும் பொழுது அம் மக்கள் சாதாரண பொதுமக்களாவார்கள். வடக்கில் கொல்லப்படும் பொழுது அம் மக்கள் புலிகளாவார்கள். இதுதான் இன்றைய சிங்கள நாளேடுகளின் ஊடக ஒழுக்கநெறியாக அமைந்துள்ளது. கடந்த 2 ஆம் திகதி திங்கட்கிழமை திருகோணமலை பீச் ரோட்டில் இடம்பெற்ற படுகொலையின்போது கொல்லப்பட்ட ஐந்து மாணவர்க…
-
- 3 replies
- 1.4k views
-
-
சொல்ஹெய்மின் வருகை யுத்தத்தை தடுக்குமா? * தினமும் நடைபெறும் சம்பவங்களானது முழு அளவிலான போரை நோக்கியே செல்கின்றது நாட்டில் முழு அளவிலான போர் இதுவரை வெடிக்காத போதிலும், பாரிய மோதலைத் தோன்றுவிப்பதற்கான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. தினமும் நடைபெறும் சம்பவங்கள் முழு அளவிலான போரை நோக்கியே செல்கின்றன. புதிய ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ஷவும், புதிய இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சரத் பொன்சேகாவும் பதவியேற்றது முதல் நிலைமை தலைகீழாகிவிட்டது. நிழல் யுத்தம் உச்சமடைந்து நிஜயுத்தமாகிக் கொண்டிருக்கிறது. இதனைத் தடுக்க நோர்வே அமைச்சரும் இலங்கைக்கான விசேட பிரதிநிதியுமான எரிக் சொல்ஹெய்மின் வருகை உதவுமா என்பதுதான் மிகப்பெரும் கேள்வியாகும். தற்போதைய சூழ்நிலையில் தினமும் …
-
- 1 reply
- 1.2k views
-
-
வடபோர்முனை போராளிகளுக்கு இடையில் சூட்டுப் போட்டி [ஞாயிற்றுக்கிழமை, 15 சனவரி 2006, 04:40 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்] தைத் திருநாளான நேற்று சனிக்கிழமை வடபோர்முனை முன்னரங்க நிலைகளில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளுக்கு இடையிலான சூட்டுப் போட்டியும் பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. இந்நிகழ்வில் வடபோர் முனை கட்டளைத் தளபதி கேணல் தீபன் சூட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களை வழங்கி கௌரவித்தார். நிகழ்வில் களமுனைத் தளபதிகளும் , போராளிகளும் பங்குபற்றினர். Puthinam
-
- 0 replies
- 1.1k views
-
-
பாதுகாப்பில் விழிப்புடன் இருக்குமாறு விடுதலைப் புலிகள் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் கெடுபிடிகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதையடுத்து தமிழ் மக்களையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரையும் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள், எந்நிலையிலும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை தோன்றியிருப்பதால் பாதுகாப்பில் கவனம் செலுத்தும்படியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கோரியுள்ளனர். பளையிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ். மாவட்ட நிர்வாக சேவை அலுவலகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற சந்திப்பின் போதே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினருக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அ…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கைக்கு இராணுவத்தை அனுப்ப இந்திய பிரதமர் விரும்பவில்லை குமுதம் ரிப்போட்டரில் இந்திய இராணுவத்தை ஈழத்து மண்ணில் இறங்க வைப்பதற்கு இலங்கை அரசு பெரும் பாடுபடுகிறது. அதற்காக கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் என்று கூறுகிறது. நியாயமாக நடந்து கொள்ளும் நோர்வேயை புறந்தள்ளிவிட்டு இந்தியாவை மோதவிடப் பார்க்கிறது. இலங்கையின் இந்த யோசனைகளை இந்திய பிரதமர் மன் மோகன்சிங் புறந்தள்ளியிருக்கிறார். இதனை ஈழத்த தமிழர்களோடு இரத்த உறவுள்ள இந்தியாவில் உள்ள தமிழர்களும் வரவேற்கிறார்கள், பாராட்டுகிறார்கள்'' என இந்தியாவிலிருந்து வெளிவரும் "குமுதம் ரிப்போட்டரில்' சோலை எழுதிய கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷ இந்தியத் தலைநகருக்…
-
- 1 reply
- 1.1k views
-