Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புதிய பயணத்தை ஆரம்பித்துள்ள அமைச்சர்கள் குழு: ஆளும்கட்சிக்குள் மேலும் பிளவு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மற்றுமொரு அமைச்சர்கள் கட்சியில் இருந்து பிரிந்து தனி குழுவை அமைப்பதற்கு தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவிகளை வகிக்கும் பலர் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பதவிகள் இல்லாமல் இருக்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவும் இதில் இணைவதற்கு தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அடுத்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் நேரடியாக தொடர்பு கொள்ளாமல் தனியான குழுவாக கூட்டணி அமைக்கும் நோக்கில் அவர்க…

  2. கோட்டாவை போன்றே காணாமல்போனோர் அலுவலக தவிசாளரின் கருத்தும் உள்ளது – சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர், கோட்டாபய ராஜபக்ஷவை போன்று கருத்து வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. படையினரிடம் சரணடைந்தவர்கள் காணாமல்போனமைக்கான ஆதாரங்கள் இல்லை என்றும், காணாமல் போனோரில் பெரும்பாலானோர் விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டார்கள் என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் குறித்த அலுவலகத்தின் தவிசாளர் மகேஷ் கட்டுலந்த வெளியிட்ட இந்த கருத்து தொடர்பாக தாம் கரிசனையடைவதாகவும் சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. போரின்போது படையினரிடம் கையளித்த தமது உ…

  3. மாத்தறை துப்பாக்கி பிரயோகம்: பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல் ! மாத்தறையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 15 வயது சிறுவன் மீதான துப்பாக்கி பிரயோகம் குறித்து மாத்தறை பிரதான நீதவான் முன்னிலையில் இன்று விசாரணை இடம்பெற்ற போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக அவர் மீதான குற்றச்சாட்டை சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் ஏற்றுக்கொண்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1307755

  4. ஜனாதிபதி பொதுஜன பெரமுன கட்சியின் அழுத்தங்களால் சரியாகச் பயணிக்க முடியாத நிலையில் உள்ளார்-மைத்ரிபால சிறிசேன எதிர்வரும் தேர்தலில் பரந்த கூட்டணியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கை மகளிர் சங்கம் மற்றும் இலங்கை இளைஞர் சங்கம் ஆகியவற்றின் பொதுச் சபைக் கூட்டங்களின் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் பொதுஜன பெரமுன கட்சியின் அழுத்தங்களுக்கு ஜனாதிபதி உள்ளாகி சரியாகச் பயணிக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் மைத்ரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1307769

  5. தொடர் மழைக்கான சாத்தியம் By NANTHINI 30 OCT, 2022 | 10:55 AM இலங்கையை சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டல எல்லையில் ஒரு தளம்பல் நிலை காணப்படுவதால், இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும் மழை சற்று அதிகமாக பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று (ஒக் 30) வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும். வடக்கு, கிழக்கு, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி காணப்படலாம். ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவில…

  6. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடாதிபதிக்குப் பேராசிரியராகப் பதவி உயர்வு By T. SARANYA 29 OCT, 2022 | 03:35 PM (எம்.நியூட்டன்) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் பீடாதிபதி கலாநிதி சீவரட்ணம் வசந்தரூபா பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை பல்கலைக்கழகப் பேரவை இன்று சனிக்கிழமை வழங்கியது. பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் இன்று சனிக்கிழமை துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவி உயர்வுக்காக விண்ணப்பித்த கலாநிதி சீவரட்ணம் வசந்தரூபாவின் விண்ணப்ப…

  7. 9 மாதங்களில் 1,400 வாகனக் கொள்ளைச் சம்பவங்கள் பதிவு By DIGITAL DESK 5 29 OCT, 2022 | 03:58 PM (எம்.வை.எம்.சியாம்) நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வாகன கொள்ளைச் சம்பவங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது. இந்த நிலையில் இவ் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 1,406 வாகன கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பான இடங்களில் வாகனங்களை நிறுத்துமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இலங்கை முழுவதும் வாகன கொள்ளைச் சம்பவங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது. 2022 ஆ…

  8. 10 லீற்றராக பெற்றோலை அதிகரித்தால் 20 ரூபாய் குறைப்போம் - முச்சக்கரவண்டி சங்கம் By DIGITAL DESK 5 29 OCT, 2022 | 02:33 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) தற்போதைய 5 லீற்றர் 'பெற்றோல் கோட்டா' வை 10 லீற்றராக அதிகரிப்பதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றினால் பயணிகள் போக்குவரத்தின்போது ,முச்சக்கர வண்டிகளில் முதல் கிலோ மீற்றருக்கு அறவிடப்படும் கட்டணத்தில் 20 ரூபாவை குறைக்கப்பதற்கு தயார் என இலங்கை சுயதொழில் வேலைவாய்ப்பு தேசிய முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் மஹிந்த குமார தெரிவித்தார். முச்சக்கர வண்டி டயர்கள், டியூப்கள், பெற்றி மற்றும் உதிரி பாகங்களின் அதிக விலையேற்றம் காரணமாக முச்சக்கர போக்குவரத்து தொழிலில் ஈடுபடும் …

  9. பாடசாலைக்கு முன்பு கழிவுகளை வீசியவருக்கு எதிராக நடவடிக்கை By T. SARANYA 29 OCT, 2022 | 12:48 PM யாழ்ப்பாணத்தில் பாடசாலை ஒன்றிற்கு முன்பாக மனித மலக்கழிவு உள்ளிட்டவற்றை வீசியவர் தொடர்பில் பல்வேறு தரப்பிடமும் முறையிடப்பட்டுள்ளது. பாடசாலை முன்பாக இன்றைய தினம் பம்பஸ் உள்ளிட்ட கழிவுகள் வீசப்பட்டிருந்தன. அதனால் பாடசாலைக்கு அருகில் வசிப்பவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்திருந்தனர். அது தொடர்பில் மாநகர சபைக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் மாநகர சபை சுகாதார ஊழியர்கள் அவற்றை அகற்றும் போது, அதனுள் மோட்டார் சைக்கிள் காப்புறுதி அட்டை ஒன்று மீட்கப்பட்டது. அதன் அடிப்படையில் கழிவுகளை அவரே வீசி இருக்கலாம் என சந்தேகிப…

  10. நகர அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள் துவிச்சக்கர வண்டியில் வேலைக்கு சமூகமளிக்கும் திட்டம் By T. SARANYA 29 OCT, 2022 | 12:10 PM நகர அபிவிருத்தி அதிகாரசபை (UDA) ஊழியர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் சைக்கிளில் வேலைக்குச் சமூகமளிக்கும் சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளது. உலக நகரங்கள் தினத்தை முன்னிட்டு அக்டோபர் 31 திங்கட்கிழமை முதல் வாரத்தில் ஒரு நாள் சைக்கிள் வேலை திட்டத்தை நகர அபிவிருத்தி அதிகாரசபை ஏற்பாடு செய்கிறது இதன்படி, , நகர அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சைக்கிள்களைப் பயன்படுத்தி வேலைக்குச் சமூகமளிக்க வேண்டும். இந்நிலையில், சைக்கிள் வாங்குவதற்கான நிதி மற்றும்…

  11. வடக்கு அபிவிருத்தி தொடர்பில் வடக்கு ஆளுநர் ஜப்பான் தூதரகம் இணைந்து கலந்துரையாடல் 29 Oct, 2022 | 09:31 AM வட மாகாணத்தில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் பாங்கெடுப்புகள் தொடர்பில் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் ஹிடோக்கி மிசுகோஷி இணைந்து கொழும்பில் நேற்று (28) கலந்துரையாடலை ஏற்பாடு செய்தனர். குறித்த கலந்துரையாடலில் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் ஹிடேக்கி மிசுகோஷி, மாற்றுக் கொள்கைக்கான மையம் (CPA ) - கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க இந்தியாவில் உள்ள இலங்கை தூதுவர் மிலிந்த மொரகொட,வடக்கு ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் தன்யா ரத்னாவல், கொரிய தூதுவர் ச…

  12. முப்படையினருக்கான பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு By T. SARANYA 29 OCT, 2022 | 11:08 AM (எம்.மனோசித்ரா) சட்டரீதியில் விலகமால் படையிலிருந்து சென்ற முப்படை வீரர்கள் சட்ட ரீதியில் சேவையிலிருந்து விலகிக் கொள்வதற்கான பொது மன்னிப்பு காலத்தை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய நவம்பர் 15 ஆம் திகதி முதல் , டிசம்பர் 31 ஆம் திகதி வரையான காலத்தையே பொது மன்னிப்பு காலமாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை கடந்த 25 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சேவையிலிருந்து சட்டரீதியில் விலகமால் படையிலிருந்து சென்ற முப்படை வீரர்கள் சேவையிலிருந்து உத்தியோகப்பூர்வமாக விலகிக் கொள்ள முடியும் என்றும் மேலும் ஏதேனும் செலுத்…

  13. மாகாண சபைகள் தேர்தல் தொடர்பில் தமிழ் தரப்பினருக்கு டக்ளஸ் விடுக்கும் அழைப்பு! மாகாண சபை தேர்தலை விரைவுபடுத்த தமிழ் தரப்புகள் ஒன்றிணைய வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதை விரைவுபடுத்தும் நோக்கில், தமிழ் தரப்புகள் ஒன்றிணைய வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார். இதன் மூலம் மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவுபடுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்த்தன ஆகியோர் அனைத்து தரப்புகளையும் ஒன்றிணைக்க மேற்கொண்டு வரும் அரசியல் சூழலை த…

  14. யாழ். மாணவர்களுக்கான தேசிய ரீதியான வழிகாட்டல்- போதைப்பொருள் விழிப்புணர்வுசார் செயற்றிட்டம்! பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ரீதியான வழிகாட்டல் மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வுசார் செயற்றிட்டம் யாழ்ப்பாணம் அராலி சரஸ்வதி மகாவித்தியாலயத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த நிகழ்வு இடம்பெற்றது. நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை மற்றும் அதிகரித்து வரும் பாடசாலை மாணவர்களின் இடை விலகலை தவிர்ப்பதற்கும் மாணவர்களிடையே விழிப்புணர்வூட்டு முகமாக குறித்த செயற்றிட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த செயற்றிட்டமானது வடக்கு கிழக்கு மல…

  15. அச்சுவேலியில் சித்த விஷேட சிகிச்சை கட்டண பிரிவு- மருந்து விற்பனை நிலையம் திறந்து வைப்பு! அச்சுவேலி செல்வநாயகபுரம் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட சித்த வைத்திய சாலையில், சித்த விசேட சிகிச்சை கட்டண பிரிவும் மருந்து விற்பனை நிலையமும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் அவர்களின் வழிநடத்தலின் உருவாக்கப்பட்ட இவை, இன்று (வெள்ளிக்கிழமை) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்த சிகிச்சை நிலையத்தில் நோயாளர்கள் கட்டணம் செலுத்தி தங்களுடைய சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன் ஆயுர்வேத மருந்துகளையும் வாங்கிச் செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக வடமாகாண பிரதம செயலாளர் எஸ். எம். சமன் பந…

  16. பகிடிவதையால் மாணவன் உயிரிழப்பு : சக மாணவருக்கு மரணதண்டனை – நீதிமன்றம் உத்தரவு 1997 இல் பேராதனை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீட மாணவராக இருந்த செல்வநாயகம் வரபிரகாஷை கொலை செய்த குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. எவ்வாறாயினும், பிரதான சந்தேகநபரான பாலேந்திரன் பிரசாத் சதீஸ்கரனின் இருப்பிடம் தெரியாததால், அவரை கைது செய்ய பிடியாணை உத்தரவை பிறப்பித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட செல்வநாயகம் வரபிரகாஷ் அப்போது முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர், என்றும் அவர் மீது மனிதாபிமானமற்ற முறையில் பகிடிவதை மேற்கொள்ளப்பட்டதால் அவர் மரணித்தார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை…

  17. போதைப்பொருள் கடத்தல் : 12 பேருக்கு எதிராக சிவப்பு பிடியாணை! வெளிநாடுகளில் இருந்து இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் 12 பேருக்கு சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்களில் சிலர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என மேல் மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பிரேமரத்ன தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்டக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ரொஷான் பிரேமரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் நெருக்கமாக செயற்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதன்போது தெரிவித்தார். https://athavannews.com/2022/1307…

  18. இந்தியப் பெருங்கடல் உலக இராணுவ சக்திகளின் விளையாட்டு மைதானமாக இருக்கக்கூடாது – அரசாங்கம் இந்தியப் பெருங்கடல் உலக இராணுவ சக்திகளின் மோதலுக்குரிய பகுதியாகவோ அல்லது விளையாட்டு மைதானமாகவோ இருக்கக் கூடாது என இலங்கை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வது, நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு என்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். இந்தியப் பெருங்கடல் முழுவதும் உள்ள கடல்சார் இராஜதந்திரத்தை மற்ற பெருங்கடல்களுடன் இணைவதற்கு மேலும் வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இதேவேளை இலங்கை எந்தவொரு இராணுவக் கூட்டணியிலும் பங்கேற்காது என்றும், பசுபிக் பிராந்தியத்தி…

  19. தமிழ் அரசியல் கைதி ஒருவருக்கு உயர் விருது ஒன்று வழங்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று அரச இலக்கிய விருது வழங்கும் நிகழ்வில் விருதொன்றை அவர் தன்வசப்படுத்திக் கொண்டார். ஆதுரசாலைக்கு விருது சிவலிங்கம் ஆருரன் என்ற தமிழ் அரசியல் கைதி ஒருவரே தான் எழுதிய நூலுக்காக இந்த விருதினைப் பெற்றுக் கொண்டுள்ளார் . ஆரூரன் எழுதிய “ஆதுரசாலை” என்ற தமிழ் நாவலுக்கு சிறந்த நாவலாக விருது வழங்கப்பட்டது. கொழும்பு – பித்தலை சந்தியில் 2006ம் ஆண்டு நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, அவர் தற்போது சிறைவாசம் அனுபவித்து வருகின்றார். சிறையில் இருந்தவாறே, புத்தகமொன்றை எழுதியமைக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. சிறை…

  20. பொலிஸ் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக இயங்கியதில் 15 சிறுவன் காயம் By RAJEEBAN 28 OCT, 2022 | 08:56 PM மாத்தறை, திஹகொட பகுதியில் நபர் ஒருவர் வாக்குவாத்தில் ஈடுபட்ட நிலையில் பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கி இயங்கியதில் அப்பகுதியில் நின்ற 15 வயதுடைய சிறுவன் மீது துப்பாக்கி சன்னம் பட்டு காயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகத்திற்கிடமான வகையில் பயணித்த முச்சக்கர வண்டியொன்றை சோதனையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போது மூன்று பேர் தப்பியோடிய நிலையில் மேலும் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போதே நபர் ஒருவர் பொலிஸ் அதிகாரி ஒருவருடன் கைகலப்பில் ஈடுபட்டுள்ளார். அப்போது துப்பாக்கிச்சூடு நடந்ததாக பொலிச…

  21. இலங்கை மனித உரிமைகள் ஆணையாளருடன் ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை By T. SARANYA 28 OCT, 2022 | 04:25 PM (நா.தனுஜா) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் நீதியரசர் ரோஹினி மாரசிங்கவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ள ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள் குழு, நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நிலைவரம் குறித்தும் அது மனித உரிமை ஆணைக்குழுவின்மீது ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் குறித்தும் தமது கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார சேவைப்பிரிவின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களப் பணிப்பாளர் பயோலா பம்பலொனி உள்ளடங்கலாக இலங்கையிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய இராஜதந்திரிகள் குழு நேற்று முன்தின…

  22. சிறுவர்களுக்கு ஏற்படும் இன்புளுவன்சா நோய் குறித்து எச்சரிக்கை ! By T. SARANYA 28 OCT, 2022 | 02:55 PM (எம்.ஆர்.எம்.வசீம்) சிறுவர்கள் மத்தியில் இன்புலுவன்சா நோய் அதிகளவில் பரவும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அதனால் நோய் அறிகுறி உள்ள பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதை தவிர்த்துக்கொள்ளுமாறு கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலை சிறுவர் நோய் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். காய்ச்சல், இருமல், வாந்தி மற்றும் தடிமல் இன்புளுவன்சா நாேயின் பிரதான அறிகுறிகளாகும். மழையுடனான காலநிலை மற்றும் குளிர் காரணமாக இந்த நோய் பரவுவதற்கு பிரதான காரணமாகும். அதனால் இவ்வாறான நோய் அறிகுறிகள் உள்ள சிறுவர்களை பாடச…

  23. ஆசிய கிளியர் சங்கத்தின் ஊடாக இலங்கையுடன் வர்த்தகம் செய்வதை தவிர்க்குமாறு பங்களாதேஷ் வங்கி அறிவுறுத்து பங்களாதேஷின் மத்திய வங்கியான பங்களாதேஷ் வங்கி, ஆசிய கிளியர் சங்கத்தின் ஊடாக இலங்கையுடன் வர்த்தகம் செய்வதை தவிர்க்குமாறு அந்தநாட்டு வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2022 ஒக்டோபர் 14ஆம் திகதி முதல் ஆசிய கிளியரிங் யூனியன் பொறிமுறையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்தது. இதனையடுத்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட பங்குதாரர்களும் வர்த்தகம் மற்றும் எந்தவொரு வியாபாரத்தையும் அந்த பொறிமுறையின் ஊடாக மேற்கொள்ள வேண்டாம் என்று பங்களாதேஷ் வங்கியால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆசிய க…

  24. முன்னாள் போராளிகளின் விபரம் திடீரென சேகரிப்பு செ.கீதாஞ்சன் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் முன்னாள் போராளிகளின் முழுமையான விபரங்களை திரட்டும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது. புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர் யுவதிகள் தொடர்பிலான அடிப்படை தகவல்களை சேகரித்தல் என்ற தகவலுக்கு அமைய நீதி அமைச்சின் கீழ் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள முன்னாள் போராளிகளின் விபரங்கள் திரட்டப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. வாழ்வாதார உதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தினால் இந்த விபரங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது. https…

  25. கோட்டாவுக்காக ஆஜராவதில்லை - உயர் நீதிமன்றுக்கு அறிவித்தார் சட்ட மா அதிபர் By T. SARANYA 28 OCT, 2022 | 10:15 AM (எம்.எப்.எம்.பஸீர்) காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கங்களை இழிவளவாக்கி கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்காமை ஊடாக அரசு அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவின் பிரதிவாதிகளில் ஒருவரான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் இனிமேல் ஆஜராக போவதில்லை என சட்டமாதிபர் உயர் நீதிமன்றுக்கு நேற்று (27) அறிவித்தார். சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் தாக்கல் செய்துள்ள குறித்த அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று வியாழக்கிழமை பரிசீலனைக்கு எடுக்கப்பட்ட போது சட்டமாதிபர் சார்பில்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.