ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142851 topics in this forum
-
ஆசியாவின் சிறந்த 3 சுற்றுலா ஓய்வு விடுதிகளில் “ கேப் வெலிகம” By T. SARANYA 08 OCT, 2022 | 01:11 PM 2022 ஆம் ஆண்டில் ஆசியாவின் மூன்று சிறந்த சுற்றுலா ஓய்வு விடுதிகளின் பட்டியலில் இலங்கையிலுள்ள கேப் வெலிகம சுற்றுலா ஓய்வு விடுதியும் இடம்பிடித்துள்ளது. “கான்டே நாஸ்ட் டிராவலர் ” என்ற சுற்றுலா துறை தொடர்பிலான தகவல்களை வௌியிடும் இதழ் இதனை வௌியிட்டுள்ளது. ஒக்டோபர் மாதம் வௌியிடப்பட்ட குறித்த பத்திரிக்கையின் வாசகர்களினால் தெரிவு செய்யப்படும் “வாசகர்கள் தெரிவு விருதுகள்” இல் இலங்கைக்கு 99.05 புள்ளிகள் கிடைக்கப்பெற்ற நிலையில் 3 ஆவது இடத்தை பெற்றுக்கொண்டது. இதில் 99.69 புள்ளிகளை பெற்று முதலாவது இடத்தை சிக்ஸ் சென்ஸ் ந…
-
- 88 replies
- 5.3k views
- 1 follower
-
-
உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களும் இடம்பிடிப்பு களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தைச் சேர்ந்த நான்கு பேராசிரியர்கள் உலகின் முதல் 2 சதவீத விஞ்ஞானிகள் பட்டியலில் உள்ளனர். மருத்துவ பீடத்தின் பேராசிரியர் ஜானக டி சில்வா, களனி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் சித்த மருத்துவ பிரிவின் சிரேஷ்ட பேராசிரியருமான நிலாந்தி டி சில்வா, பொது சுகாதார பீடத்தின் பேராசிரியை அனுராதனி கஸ்தூரிரத்ன, பேராசிரியர் அசித டி சில்வா ஆகியோர் இப்பட்டியலில் உள்ளடங்குகின்றனர். எல்சேவியர் வழங்கிய ஸ்கோபஸ் தரவைப் பயன்படுத்தி, அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு குழு இந்த பகுப்பாய்…
-
- 1 reply
- 265 views
-
-
வவுனியாவில் குளவி கொட்டுக்கு இலக்காகி மாணவர்கள் உட்பட 40 பேர் பாதிப்பு By T. SARANYA 17 OCT, 2022 | 02:43 PM (கே.பி.சதீஸ்) வவுனியா போகஸ்வெவ மகா வித்தியாலய பாடசாலையில் குளவி கொட்டுக்கு இலக்காகி மாணவர்கள் உட்பட 40 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா தெற்கு சிங்கள கோட்ட பிரிவுக்குட்பட்ட போகஸ்வேவ மகா வித்தியாலயத்தில் இன்று (17) காலை பிரார்த்தனையின் போது காற்றின் காரணமாக மரம் ஒன்றில் காணப்பட்ட குளவிக்கூடு கலைந்து பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர் மீது தாக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் 32 மாணவர்களும், 8 ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டனர். இதனால் பாதிப்படைந்தவர்களில் 12 மாணவர்கள் …
-
- 0 replies
- 175 views
- 1 follower
-
-
எரிபொருள் விலைகள் குறைப்பு ! By DIGITAL DESK 5 17 OCT, 2022 | 02:55 PM எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. குறித்த விலை திருத்தங்கள் இன்று திங்கட்கிழமை (17) இரவு 9 மணி முதல் அமுலாகும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். அதன்படி, 92 ஒக்டெய்ன் ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 40 ரூபாவாலும் ஓட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 15 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 92 ஒக்டெய்ன் ரக பெற்றோல் ஒரு லீற்றரின் புதிய விலை 370 ரூபாவாகவும், ஓட்டோ டீசல் ஒரு லீற்றரின் புதிய விலை 415 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட…
-
- 0 replies
- 163 views
- 1 follower
-
-
இந்த ஆண்டு ஆடம்பரமான கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை நடத்தாதீர்கள் – கார்டினல் கோரிக்கை இந்த வருடத்தில் நத்தார் பண்டிகையை எளிமையாக கொண்டாடுமாறும், அலங்காரங்களுக்காக ஆடம்பரமாகச் செலவு செய்வதைத் தவிர்க்குமாறும் கத்தோலிக்கர்களுக்கு கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் இன்று அழைப்பு விடுத்துள்ளார். நீர்கொழும்பு, படபத்தல புனித தெரேசா தேவாலயத்தின் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற சமய ஆராதனையின் போது உரையாற்றிய கர்தினால் ரஞ்சித், இவ்வருட கிறிஸ்துமஸ் பண்டிகை பசித்திருப்பவர்களுக்கு உணவளிப்பதாக மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றார். “நாட்டின் நிலைமையைக் கருத்தில் கொண்டு இந்த கிறிஸ்துமஸில் தேவாலயங்கள் மற்றும் பிற இடங்கள…
-
- 0 replies
- 153 views
-
-
ராஜபக்ஷர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய நேரத்தில் மொட்டு கட்சியை கட்டியெழுப்ப தட்டு தடுமாறுகின்றனர் என புசல்லாவ நகரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், எமது நாட்டின் இன்றைய நெருக்கடி நிலைமை இயற்கையாக ஏற்பட்டதல்ல. நாட்டிற்கு தலைமை தாங்கியவர்களால் எடுக்கப்பட்ட தவறான முடிவுகளாலும் தவறான வழிமுறைகளாலும் ஏற்பட்டதாகும். இந்நிலைமையில் இருந்து மீண்டு வருவதற்கு இன்னும் பல வருடங்கள் எடுக்கும் என கூறப்படுகின்றது. அதற்கும் நாம் பல தியாகங்களோடு செயற்பட வேண்டியுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் நாட்டை கட்டியெழுப்புவதற்கு பதி…
-
- 0 replies
- 261 views
-
-
லெபனானில் ஏற்பட்டுள்ள நிலைமை இலங்கையிலும் ஏற்பட வாய்ப்புள்ளது என எச்சரிக்கை! பொருளாதார நெருக்கடியை போக்க அரசாங்கம் உடனடியாக செயற்படாவிட்டால் லெபனானில் ஏற்பட்டுள்ள நிலைமை இலங்கையிலும் ஏற்பட வாய்ப்புள்ளதாக பிரித்தானிய ரீடிங் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் சாந்த ஜயரத்ன தெரிவித்துள்ளார். லெபனான் மற்றும் இலங்கையின் நிலைமையை ஒப்பிட்டு அவர் எழுதிய நீண்ட கட்டுரையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த கட்டுரையில், ”லெபனானின் வங்கி அமைப்பு காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. காரணம், வங்கிகள் வாடிக்கையாளர்களின் சேமிப்புத் தொகையை செலுத்த முடியாமல் திணறுகின்றன. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் வங்கிகளை கொள்ளையடிக்கவும், வங்கி ஊழியர்களை …
-
- 0 replies
- 235 views
-
-
ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கு எரிபொருள்? ரஷ்யா - இலங்கைக்கு நீண்டகாலமாக வழங்கி வரும் ஒத்துழைப்பிற்கு அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அந்நாட்டின் பிரதிப் பிரதமர் அலெக்ஸான்டர் நொவெக்கிற்கு நன்றி தெரிவித்துள்ளார். அமைச்சருக்கும் பிரதிப் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு தலைநகர் மொஸ்கோவில் சமீபத்தில் இடம்பெற்றுள்ளது. அந்நாட்டிலிருந்து நேரடியாக எரிபொருளைப் பெற்றுக் கொள்வது தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. ரஷ்யாவில் உயர் கல்வியைத் தொடரும் மாணவர்களின் சேம நலன்கள் குறித்தும் அமைச்சர் இதன் போது பிரதிப் பிரதமருடன் கலந்துரையாடியுள்ளார். (அரசாங்க தகவல் திணைக்களம்) https://tamil.adaderana.lk/news.php?nid=166714
-
- 0 replies
- 83 views
-
-
சிறந்த இளம் புத்தாக்குனராக வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி தெரிவு By T. SARANYA 17 OCT, 2022 | 12:05 PM வளர்முக நாடுகளின் பெண்களுக்கான விஞ்ஞான அமைப்பின் இலங்கைக் கிளையும் ஸ்ரீ ஜெவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் பிறப்புரிமையியல் மற்றும் மூலக்கூற்று உயிரியல்த்துறையும் இணைந்து தேசிய ரீதியில் மாணவருக்கான புத்தாக்கப் போட்டி ஒன்றை நடத்தியிருந்தது. இதில் 2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த பெண் பாடசாலை மாணவ இளம் புத்தாக்குனராக வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி மதுரா அருந்தவம் தெரிவு செய்யப்பட்டார். சிறந்த பெண் புத்தாக்குனருக்கான பதக்கத்தை ஸ்ரீ ஜெயவர்த்தனப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் பேராசிரியர் சித்தானந்த லியனகே அணிவித்ததோ…
-
- 1 reply
- 224 views
- 1 follower
-
-
வைத்தியர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு By T. SARANYA 17 OCT, 2022 | 11:44 AM (எம்.செல்வராஜா) சீரற்ற காலநிலையினால் பதுளை மாவட்டத்தில் பெய்துவரும் கடும்மழை மற்றும் கடுங்காற்று ஆகியவற்றினால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றும் முழுதாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வைத்தியர் ஒருவர் நீரில் மூழ்கி மரணமாவதுடன், அம்மன் ஆலயம் ஒன்றும் பெரும் சேதத்திற்குள்ளாகியுள்ளது. அத்துடன் விவசாய நிலங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியதுடன், பகுதியளவில் வீடுகளும், சேதமடைந்துள்ளன. பாதிப்புக்குள்ளானவர்களுக்கு பதுளை மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்தினால் உலர் உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மாவட்டத்தின்…
-
- 0 replies
- 183 views
- 1 follower
-
-
தனியாக வசித்து வந்த பெண்ணை கொலைசெய்து பொருட்கள் கொள்ளை : கண்டியில் பதிவாகிய 3 ஆவது கொள்ளைச் சம்பவம் By DIGITAL DESK 5 17 OCT, 2022 | 12:34 PM (எம்.வை.எம்.சியாம்) பேராதனை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்த பெண் ஒருவரை கூரிய ஆயுதங்களால் தாக்கி அங்கிருந்து நகைகள் உட்பட பெறுமதியான பொருட்களை கொள்ளையர்கள் கொள்ளையிட்டு சென்றுள்ளனர். கடந்த சனிக்கிழமை நண்பகல் வீட்டில் தனித்து வந்த பெண் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பேராதனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்துள்ளனர் பேராதெனிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட யஹலதென்ன பிரதேசத்தி…
-
- 0 replies
- 309 views
- 1 follower
-
-
புனர்வாழ்வு பணியக சட்டமூலம் மனித உரிமை மீறல்களை அதிகரிக்கும் - மனித உரிமை கண்காணிப்பகம் By Rajeeban 17 Oct, 2022 | 10:15 AM அரசாங்கத்தின் புனர்வாழ்வு சட்டமூலம் மனித உரிமை மீறல்களை அதிகரிக்கும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இராணுவத்தினரால் நிர்வகிக்கப்படும் புனர்வாழ்;வு முகாம்களில் பொதுமக்களை தடுத்துவைப்பதற்கான பரந்துபட்ட அதிகாரத்தை வழங்கும் நகல்சட்டமூலத்தை இலங்கை அரசாங்கம் விலக்கிக்கொள்ளவேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணி;ப்பகம் தெரிவித்துள்ளது. இலங்கை நாடாளுமன்றத்திற்கு செப்டம்பர் 23 ம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட புனர்வாழ்வு பணியக சட்டமூலம் போதைப்ப…
-
- 0 replies
- 283 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் By T. Saranya 17 Oct, 2022 | 10:56 AM வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (17) ஐ.நா அலுவலகத்தின் முன்பு பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பு அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இறுதி யுத்தத்தின் போது, இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்றைய தினம் ஐ.நா அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 150 views
-
-
உயர் பாதுகாப்பு வலயத்துக்காக யாழில் 1,614.11 ஏக்கர் நிலத்தை சுவீகரிக்க முயற்சி : விவசாயத்தில் ஈடுபடும் இராணுவம் யாழ்.குடாநாட்டில் 1,614.11 ஏக்கர் நிலத்தை உயர் பாதுகாப்பு வலயத்துக்காக சுவீகரிக்கும் பணியை அரசாங்கம் தொடங்கியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. கொழும்பில் சில இடங்களை உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்து கடந்த மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானியை இம்மாதம் ஜனாதிபதி ரணில் இரத்து செய்திருந்தார். இந்நிலையில் யாழில் உயர் பாதுகாப்பு வலயத்துக்காக மக்களின் காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இதற்காக சுற்றுலா மற்றும் காணி அமைச்சு வெளியிட்ட அறிவித்தலை சுட்டிக்காட்டி, தமிழ்த் தேசியக்…
-
- 0 replies
- 173 views
-
-
யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு மஹிந்தவிற்கு இயலுமை காணப்பட்டதை போன்று, வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வரும் இயலுமை ஜனாதிபதியிடம் உள்ளது – நாமல். யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு மஹிந்த ராஜபக்ஷவிற்கு இயலுமை காணப்பட்டதை போன்று, வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வந்தமைக்கான இயலுமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதனடிப்படையிலேயே காலிமுகத்திடல் போராட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முடிவுக்குக் கொண்டு வந்ததாகவும் நாமல் தெரிவித்தார். இதேவேளை மனித உரிமைகள்…
-
- 4 replies
- 273 views
-
-
மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவற்றை அடகு பிடித்து, போதைப்பொருள் விற்பனை – யாழில் மூவர் கைது மோட்டார் சைக்கிள்கள், கையடக்க தொலைபேசிகள் என்பவற்றை அடகாக எடுத்துக்கொண்டு போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேகத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பொம்மை வெளிப்பகுதியில் போதை வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 கிராம் 270 மில்லி கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். போதைப்பொருள் வாங்குவதற்காக சந்தேக நபர்களிடம் அடகாக ஒப்படைக்கப்பட்ட 07 கையடக் தொலைபேசிகள் மற்றும் சுமார் 08 இலட்ச ரூபாய் பெறுமதி…
-
- 0 replies
- 114 views
-
-
அரசாங்கத்தின் சுமார் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் SLPP இல் சுயாதீனமாக புதிய அமைப்பை உருவாக்கவுள்ளதாக தகவல். அரசாங்கத்தின் சுமார் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் சுயாதீனமாக ஒரு புதிய அமைப்பை உருவாக்கவுள்ளதாக உயர்மட்ட வட்டாரம் ஒன்றை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க போன்ற சில அமைச்சரவை அமைச்சர்களும் அடங்குவர் என தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து அரசாங்கத்தில் இணைந்த டயனா கமகே மற்றும் அரவிந்த் குமார போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய உருவாக்கத்துடன் இணைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடா…
-
- 0 replies
- 130 views
-
-
“சுபீட்சமான நாட்டிற்கான பாதை நல்லிணக்கமே” எனும் தொனிப்பொருளில் யாழில் கலந்துரையாடல் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் மற்றும் இன மத நல்லிணக்கத்திற்கான கூட்டமைப்பின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்டத்திற்கான மக்கள் கலந்துரையாடல் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது. “சுபீட்சமான நாட்டிற்கான பாதை நல்லிணக்கமே” எனும் தொனிப்பொருளில் யாழிலுள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் சமூக நீதிக்கான தேசிய இயக்கத் தலைவர் கரு ஜயசூரிய, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா , விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட அர…
-
- 4 replies
- 389 views
-
-
மகிந்தவின் வருகையால் நாவலப்பிட்டியில் பதற்றம்! ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று நாவலப்பிட்டியவுக்கு வருகை தந்த நிலையில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் எதிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கூட்டம் மஹிந்த ராஜபக்ச தலைமையில் ஆரம்பமாகி, மொட்டு கட்சியின் முக்கியஸ்தர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற தருவாயிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டிய தொகுதி அமைப்பாளரான சசங்க சம்பத் சஞ்சீவ தலைமையில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு விரைந்த பொலிஸார் போராட்டத்துக்கு அனுமதி பெறப்பட…
-
- 5 replies
- 816 views
-
-
விடுதலைப் புலிகளை நான் அழிக்கவில்லை – எரிக்சொல்ஹெய்ம் விடுதலைப் புலிகளை தான் அழித்ததாக சொல்வதில் எவ்வித உண்மையும் இல்லை என முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். தீவிரவாத போக்குடைய தமிழ் மற்றும் சிங்களவர்களே இவ்வாறான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேநேரம் மாகாணங்களிற்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது குறித்து இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஆயுதமோதலின் போது உயிரிழப்பு என்பது சாத்தியமே என்றாலும் காணாமல் போனவர்கள் குறித்து மேலதிக தகவல்களை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த விரும்பிய தாம் அதன் …
-
- 23 replies
- 1.4k views
- 2 followers
-
-
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இருதரப்பு கலந்துரையாடல் By DIGITAL DESK 5 16 OCT, 2022 | 07:17 PM (எம்.மனோசித்ரா) நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க உள்ளிட்ட இலங்கையின் பிரதிநிதிகள் குழு, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கெஞ்சி ஒகாமுராவை சந்தித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த மாநாடு அமெரிக்காவில் நடைபெறுகின்றது. உத்தேச விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கான சர்வதேச நாணய நிதிய நிறைவேற்றுக் குழுவின் ஒப்புதலை பெறுவதற்குத் தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கையின் அண்மைக்கால…
-
- 0 replies
- 163 views
- 1 follower
-
-
ராஜபக்ஷவிடம் கறுப்புப் பணம் உள்ளது என்றவர்கள் இன்று அக்காவுக்கு பணம் கொடுத்துள்ளனர் - நாமல் By NANTHINI 16 OCT, 2022 | 06:39 PM (க.கிஷாந்தன்) பயங்கரவாத செயற்பாடுகள் ஊடாக அல்லாமல் ஜனநாயக வழியிலேயே ஆட்சி மாற்றம் இடம்பெற வேண்டும். எந்தவொரு தேர்தலையும் சந்திக்க நாம் தயார். அதற்காகவே தொகுதி மட்டத்திலான கூட்டங்களும் இடம்பெறுகின்றன என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதில் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாவலப்பிட்டி தொகுதி கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஒக் 16) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே நாமல் இவ்வாறு கூறினார். …
-
- 0 replies
- 188 views
- 1 follower
-
-
கஜூமாவத்த தீ விபத்து : 214 பேருக்கு புதிய வீடுகள் வழங்குவதில் சிக்கல் -நகர அபிவிருத்தி அதிகார சபை By DIGITAL DESK 5 16 OCT, 2022 | 09:39 PM (இராஜதுரை ஹஷான்) தீ விபத்துக்கு உள்ளான கஜூமாவத்த பகுதியின் குடியிருப்பாளர்களில் 214 பேர் புதிய குடியிருப்பை பெற்றுக்கொள்ள அடிப்படை குறைந்தப்பட்ச தகைமைகளை கூட கொண்டிருக்கவில்லை ஆகவே நகர அபிவிருத்தி மானிய கொள்கையின் பிரகாரம் அவர்களுக்கு புதிய வீடுகள் வழங்குவது சிக்கலானது.என நகர அபிவிருத்தி அபிவிருத்தி அதிகாரசபை வீடமைப்பு அமைச்சின் செயலாளருக்கு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. 2016 ஆம் ஆண்டுக்கு பின்னர் சட்டவிரோத குடியிருப்பாளர்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட போதும் அரசியல…
-
- 0 replies
- 118 views
- 1 follower
-
-
அரசாங்கத்தின் அழிவிற்கான அழைப்பாணையே வரி அதிகரிப்பு - கபிர் ஹசீம் By DIGITAL DESK 5 13 OCT, 2022 | 07:09 AM (எம்.மனோசித்ரா) வருமான வரியை அதிகரிப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் அரசாங்கத்தின் அழிவிற்கான அழைப்பாணையாகவே அமையும். உள்நாட்டு தொழிற்துறையினர் மீது பாரிய வரி சுமையை சுமத்தி , வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வரி சலுகையை வழங்குவது நியாயமற்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபிர் ஹசீம் தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் புதன்கிழமை (12) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , இது அரசாங்கத்தின் அழிவிற்கான அழை…
-
- 1 reply
- 281 views
- 1 follower
-
-
யாழில் அப்துல் கலாமின் 91ஆவது பிறந்த தின நிகழ்வு முன்னெடுப்பு இந்தியாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் 91ஆவது பிறந்த தின நிகழ்வு யாழில் நடைபெற்றது. யாழிற்கான இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இன்று (சனிக்கிழமை) யாழ்.பொதுசன நூலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், பொதுசன நூலக பிரதம நூலகர் மற்றும் இந்திய துணை தூதரக அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2022/1305076
-
- 7 replies
- 795 views
- 1 follower
-