ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142853 topics in this forum
-
பசிலின் தலையீடே 22 ஆவது திருத்தம் பிற்போடப்பட்டுள்ளமைக்கு முக்கிய காரணம் - ஐக்கிய மக்கள் சக்தி By VISHNU 09 OCT, 2022 | 01:32 PM (எம்.மனோசித்ரா) அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம், முன்னாள் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் தலையீட்டின் காரணமாகவே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாமல் பிற்போடப்பட்டுள்ளது. எனவே இந்த பாராளுமன்றத்திடமிருந்து இனியும் எந்த நன்மையான விடயங்களையும் எதிர்பார்க்க முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார். ருவன்வெல்ல தொகுதியில் 08 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறி…
-
- 0 replies
- 244 views
- 1 follower
-
-
தீவிரமடையும் தான்தோன்றித்தனம் By DIGITAL DESK 5 09 OCT, 2022 | 03:31 PM என்.கண்ணன் பொருளாதார நெருக்கடியும், அரசியல் உறுதியின்மையும், நாட்டின் நிர்வாக கட்டமைப்பில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. அரசாங்கத்தினால் சட்டத்தின் அடிப்படையில் நாட்டை நிர்வகிக்கும் திறன் குறைந்து போயிருக்கிறது. தன்னிச்சைப்படி வர்த்தகர்களும், நிறுவனங்களும், தீர்மானங்களை எடுக்கின்ற நிலை தோன்றியிருக்கிறது. சிறப்பு மருத்துவ நிபுணர் ஒருவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்து ஒன்றைப் பயன்படுத்திய ஒருவர், தாம் பயன்படுத்திய இரு வேறு நிறுவனங்களின் மருந்துகளுக்கிடையில் வித்தியாசம் இருப்பதை உணர்ந்தார். இதனை அந்த மருத்துவ நிபுணரிடம்…
-
- 0 replies
- 516 views
- 1 follower
-
-
கொழும்பில் வீடுகளில் பதிவுகளை முன்னெடுப்பதற்கான காரணத்தை விளக்குகிறார் பொலிஸ் பேச்சாளர் By DIGITAL DESK 5 09 OCT, 2022 | 03:46 PM (எம்.வை.எம்.சியாம்) கொழும்பில் பல பகுதிகளில் வீடுகளில் மேலதிகமாக தங்கியிருக்கும் வெளிநபர்கள் பற்றிய தகவல்களை பெற்றுக் கொள்வதற்கான பதிவுகளே மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது : கொழும்பில் பல பகுதிகளில் வீடுகளில் மேலதிகமாக தங்கியிருக்கும் வெளிநபர்கள் பற்றிய தகவல்களை பெற்றுக் கொள்வதற்கான பதிவுகள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன. வீடுகளில் வெளி நபர்கள் தங்கியிருந்தா…
-
- 1 reply
- 321 views
- 1 follower
-
-
பதவியை துறந்தார் பரஞ்சோதி எம். றொசாந்த் தமிழரசு கட்சியின் தலைவர் என்ற ரீதியில் மாவை சேனாதிராஜா கட்சியினை வினைத்திறனாக கொண்டு செல்ல முடியாத ஓர் இயலாமையான நிலையில் காணப்படுகின்றார் அதனால், கட்சியின் சகல பதவிகளில் இருந்தும் தான் விலகுவதாக தமிழரசு கட்சியின் மூத்த உறுப்பினரும், வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான அரியகுட்டி பரஞ்சோதி தெரிவித்துள்ளார். தனது விலகல் கடிதம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், கோப்பாய் தொகுதி சம்பந்தமான விடயங்கள் தொடர்பில் ஏற்கெனவே கட்சி தலைமை பீடத்திற்கு பல கடிதங்கள் எழுதி பல விடயங்கள் தொடர்பில் தெரியப்படுத்தி இருந்தேன். அதேவேளை கட்சியில…
-
- 1 reply
- 310 views
-
-
சர்வதேச நாணய நிதியத்துடனான அடுத்த சுற்றுப்பேச்சுக்கு தயாராகிறது இலங்கை By VISHNU 09 OCT, 2022 | 09:43 AM (நா.தனுஜா) சர்வதேச நாணய நிதியத்துடனான அடுத்த சுற்றுப்பேச்சுவார்த்தைகளை எதிர்வரும் வாரம் முன்னெடுப்பதற்கு இலங்கை திட்டமிட்டிருக்கின்றது. அதன்படி நிதி இராஜாங்க அமைச்சரும், திறைசேரியின் செயலாளரும் மத்திய வங்கி அதிகாரிகளும் அடுத்த வாரம் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளைச் சந்திக்கவிருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். 'சர்வதேச நாணய நிதியத்துடன் உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டதைத்தொடர்ந்து, நாம் கடன்மறுசீரமைப்பை மேற்கொள்வதை இலக்காகக்கொண்டு இருதரப்பு மற்று…
-
- 0 replies
- 180 views
- 1 follower
-
-
யாழில் சுவாமி விபுலானந்தர் மற்றும் பாரதியாரின் திருவுருவச்சிலைகள் திறந்து வைப்பு யாழில் புதிதாக அமைக்கப்பட்ட சுவாமி விபுலானந்தர் மற்றும் பாரதியாரின் திருவுருவச்சிலைகள் இன்று (ஞாயிற்க்கிழமை) வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது. இதற்கமைய அகில இலங்கை சைவமா சபையினால் உருவாக்கப்பெற்ற விபுலானந்தரின் திருவுருவச்சிலையினை தென் கையிலை ஆதின குருமுதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார் மற்றும் யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் திறந்து வைத்தனர். அதேபோல் மகாகவி சுப்பிரமணிய பாரதியாருடைய திருவுருவ சிலையினை யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறி சற்குணராஜா மற்றும் யாழ் மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி றெமிடியசினால் திறந்து வைத்தனர். இந்நிகழ்வில் தெ…
-
- 0 replies
- 640 views
-
-
'பட்டினி வலயங்களாக' பெயரிடப்பட்டுள்ள 48 நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கம் By VISHNU 09 OCT, 2022 | 10:43 AM (நா.தனுஜா) உலகளாவிய ரீதியில் 'பட்டினி வலயங்கள்' என உலக உணவுத்திட்டத்தினால் பெயரிடப்பட்டுள்ள 48 நாடுகளில் இலங்கையும் உள்ளடங்கியிருக்கின்றது. சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையொன்றின் ஊடாக இவ்விடயம் வெளிப்படுத்தப்பட்டிருப்பதுடன் கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து உலகளாவிய ரீதியில் உணவுப்பாதுகாப்பின்மை நிலை உயர்வடைந்துவருவதாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 'உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு முன்னதாகவே தொடர்ச்சியான காலநிலை மாற்றம் மற்றும் அனர்த்தங்கள், பிராந்திய ரீதியான முரண்பாடுகள், கொரோனா வைரஸ…
-
- 1 reply
- 503 views
-
-
எங்களது தமிழ் உறவுகள் கைதுசெய்யப்பட்டு 5000 நாட்களுக்கு மேலாக தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் – சாணக்கியன்! எங்களது தமிழ் உறவுகள் கைதுசெய்யப்பட்டு இதே சட்டத்தின் கீழ் 5000 நாட்களுக்கு மேலாக தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். புனர்வாழ்வு சட்டம் ஊடாக இந்த நாட்டை சீரழித்த மகிந்த ராஜபக்ஷ குடும்பம் உட்பட இந்த அரசாங்கத்துடன் இணைந்த அனைவரும் புனர்வாழ்வளிக்கப்படவேண்டியவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு கோரி போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் நிலையில் அதனைவிட மோசமான புனர்வாழ்வளித்தல் சட்டத்தினை கொண்டுவர அரசாங்கம் முற்படு…
-
- 1 reply
- 661 views
-
-
தொல்பொருள் பாதுகாப்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்! இரசாயன தட்டுப்பாடு காரணமாக தொல்பொருள் பாதுகாப்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் அனுர மனதுங்க இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். டொலர் பிரச்சினை காரணமாக இரசாயன பொருட்களை இறக்குமதி செய்வதில் தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பல்வேறு பொருளாதார பிரச்சனைகள் காரணமாக தொல்பொருள் ஆய்வு பணிகளும் தடைபட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை தொல்லியல் திணைக்களத்தில் காகித பிரச்சனையால் பல்வேறு அறிக்கைகள் தயாரிப்பதிலும் இடையூறு ஏற்படுவதாகவும் கூறப்படுகின்றது. மேலத…
-
- 2 replies
- 628 views
-
-
இராணுவத்தினரிடம் இருந்து எமது காணிகளை மீட்பதற்கு உதவி புரியுங்கள் – மக்கள் கோரிக்கை மன்னார் மெசிடோ நிறுவனத்தால் யாழ்.பருத்தித்துறை பொலிகண்டி நலன்புரி நிலையங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கான உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. பொலிகண்டி கிராம சேவையாளர் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் வசிக்கும் வருமானத்தை இழந்த 75 குடும்பங்களுக்கான உலருணவுப் பொருட்கள் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் யாட்சன் பிராடோவினால் வழங்கி வைக்கப்பட்டது. இதேவேளை, அகதிகள் முகாமில் வசிக்கும் மக்கள் தெரிவிக்கையில் காணி உரிமையாளர்கள் தங்களது காணிகளை விட்டு விலகுமாறு வற்புறுத்துவதோடு எங்களது சொ…
-
- 0 replies
- 147 views
-
-
மத வழிபாட்டுத் தலங்களுக்கான மின் கட்டணத்தில் சலுகை மத வழிபாட்டுத் தலங்களுக்கான மின் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய, 180 அலகுக்கும் அதிக மின் பாவனையைக் கொண்ட வழிபாட்டுத் தலங்களில் அலகொன்றுக்கு 32 ரூபா அறவிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2022/1303671
-
- 0 replies
- 341 views
-
-
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் தகவல்களை வெளியிடுமாறு உத்தரவு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்களை வெளியிடுமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த தகவல்களை எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுமாறு பொலிஸாருக்கு தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த தகவல்கள் வழங்கப்படாவிட்டால், இலங்கை பொலிஸார் மற்றும் தகவல் அதிகாரிக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளதாகவும் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. 2019 முதல் நவம்பர் 2021 வரை பயங்கரவாதத் தடுப்…
-
- 0 replies
- 157 views
-
-
முறைகேடு தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு நாடாளுமன்ற ஊழியர்கள் பணியிடை நீக்கம் முறைகேடு தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு நாடாளுமன்ற ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தலைமையில் முன்னெடுக்கப்பட்டிருந்த முதல் கட்ட விசாரணை மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவிடம் வழங்கப்பட்ட அறிக்கையை அடுத்து குறித்த இரண்டு ஊழியர்களும் பணியிடை நீக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், குறித்த இரண்டு ஊழியர்கள் தொடர்பிலும் ஒழுக்காற்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. உணவுப் பொருட்களை வெளியே கொண்டு சென்றதாக கூற…
-
- 0 replies
- 129 views
-
-
ஐ.நா. வழங்கிய வாக்குறுதிகளை நாடு கடைப்பிடிக்காத காரணத்தினாலேயே இலங்கை ஏனைய நாடுகளின் ஆதரவை இழந்துள்ளது – ஜி.எல்.பீரிஸ் இலங்கைக்கு முன்னைய அமர்வுகளில் வழங்கிய வாக்குறுதிகளை நாடு கடைப்பிடிக்காத காரணத்தினாலேயே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கை தனது ஆதரவை இழந்தது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார். கட்டார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய இரண்டு நாடுகளும் கணிசமான அந்நிய செலாவணியில் பங்களிக்கும் நேரத்தில், குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகம் அனுப்பும் சூழலில் இலங்கைக்கு ஆதரவை காட்டவில்லை எ…
-
- 9 replies
- 415 views
-
-
உத்தரதேவி தடம்புரண்டது By DIGITAL DESK 5 08 OCT, 2022 | 01:36 PM காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த உத்தரதேவி ரயில் இன்று காலை தம்புத்தேகம மற்றும் செனரத்கம ரயில் நிலையத்துக்கு இடையே தடம்புரண்டுள்ளது. இதனால் தண்டவாளத்தின் 150 மீற்றர் நீளத்திற்கு கொங்கிறீட் சிலிப்பர் கட்டைகள் சேதமடைந்துள்ளன. ரயிலின் முன்பக்க இயந்திரப் பெட்டியும் மற்றுமொரு பெட்டியும் தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாக வடக்குப் புகையிரத பாதையில் புகையிரதத்தின் இயக்கம் தடைப்பட்டுள்ளது. தண்டவாள பராமரிப்புப் பொருட்கள் இன்மையால் புகையிரதங்கள் தடம்புரளும் சம்பவங்கள் அதிகரிக்குமென துறைசார் அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில் சில …
-
- 8 replies
- 514 views
- 1 follower
-
-
மோதவிட்டு குளிர் காய வேண்டாம் என சீன அரசாங்கத்தை வேண்டுகிறோம் – யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம். வடபகுதி மீனவ சமூகங்களிடையே அட்டைப் பண்ணை என்ற போர்வையில் பிரிவுகளை ஏற்படுத்தி மோதவிடும் செயற்பாட்டை சீனா மேற்கொள்வதாக அறியக் கிடைக்கும் நிலையில் அதனை நிறுத்த வேண்டும் என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “வடபகுதியில் சீனா ஆதிக்கத்தை பலப்படுத்துவதற்காக சீனா பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டு வரும் நிலையில் அதில் ஒரு வடிவமாக யாழ் மற்றும் கிளிநொச்சி பகுதிக் கடல்களில் சீனா முதலீட்டுடன் அட்டைப்…
-
- 9 replies
- 664 views
-
-
மஹிந்தவின் புதிய ஆரம்பம் "ஒன்றாக எழுவோம்" – பிரதமர் தினேஷும் பங்கேற்பு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ‘ஒன்றாக எழுவோம் – களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம்’ என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டம் இடம்பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் களுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்புக் காரியாலயத்தில் இன்று (சனிக்கிழமை) காலை இந்தக் கூட்டம் இடம்பெற்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்கிய இந்தக் கூட்டத்தில், பிரதமர் தினேஷ் குணவர்தனவும் கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, தற்போதுள்ள அமைப்பில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்றுக…
-
- 7 replies
- 795 views
-
-
கணவனுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து ஆபத்தான முறையில் தீக்காயங்களை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் முற்படுத்தப்பட்ட குடும்பப் பெண்ணை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புறநகர் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குடும்பத்தலைவர் மீது பெட்ரோல் ஊற்றப்பட்டு தீ வைக்கப்பட்டதால் ஆபத்தான வகையில் தீக்காயங்களுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் பொலிஸார், படுகாயங்களுக்கு உள்ளாகிய குடும்பத்தலைவரின் மனைவியை கைது செய்து நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தியுள்ளார். https://…
-
- 0 replies
- 889 views
-
-
இலங்கைக்கு எதிரான ஐ.நா தீர்மானம்: இந்தியா புறக்கணித்தது சீன செல்வாக்கை குறைக்கவா? நந்தினி வெள்ளைச்சாமி பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@INDIAUNGENEVA படக்குறிப்பு, இந்திரா மணி பாண்டே இலங்கையில் அரசுக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் 2009இல் நடைபெற்ற இறுதிகட்ட போரின்போது மனித உரிமை மீறல்கள் நடந்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில், ஜெனிவாவில் உள்ள ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக நேற்று (அக்டோபர் 06) வரைவுத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்ததாக, ஏஎன்ஐ செய்தி மு…
-
- 10 replies
- 711 views
- 1 follower
-
-
சர்வதேச அமைப்புக்களின் ஒத்துழைப்புக்களின்றி எம்மால் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது - எஸ்.எம். மரிக்கார் By NANTHINI 08 OCT, 2022 | 06:41 PM (எம்.மனோசித்ரா) ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களின் ஒத்துழைப்புக்களின்றி எம்மால் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது. எனினும், ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணை சர்வதேசத்திடமிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய உதவிகளில் பாதகமான தாக்கத்தை செலுத்தும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அ…
-
- 0 replies
- 382 views
- 1 follower
-
-
யாழில் ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது By NANTHINI 08 OCT, 2022 | 12:01 PM யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொக்குவில் பகுதியைச் சேர்ந்த குறித்த பெண் 3 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயினுடன் வெள்ளிக்கிழமை (ஒக் 7) கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் உறவினரொருவர் கடந்த திங்கட்கிழமை (ஒக் 3) ஒரு தொகை ஹெரோயினுடன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதேவேளை யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வார காலப்பகுதியில் 6 பேர் ஹெரோயின் போதைப்பொருளோடு கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. …
-
- 6 replies
- 755 views
- 1 follower
-
-
மோட்டார் சைக்கிளைத் திருடி பெண்ணிடம் தங்க நகை வழிப்பறி - யாழில் சம்பவம் By DIGITAL DESK 5 08 OCT, 2022 | 10:36 AM யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் திருடிய மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி பருத்தித்துறையில் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை வழிப்பறிக் கொள்ளையிட்ட சம்பவம் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (07) மாலை இடம்பெற்றுள்ளது. வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவில் வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான என்எஸ் பல்சர் ரக மோட்டார் சைக்கிள் நேற்று மாலை திருடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதே மோட்டார் சைக்கிளினை …
-
- 0 replies
- 593 views
- 1 follower
-
-
மின்னல் தாக்கி பெண் ஒருவர் பலி By T. SARANYA 08 OCT, 2022 | 09:19 AM (K.B.சதீஸ்) வவுனியா மாமடுப்பகுதியில் மின்னல் தாக்குதலிற்கு இலக்காகி பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார். இன்று (7) மாலை குறித்த பெண் வீட்டிலிருந்து தாமரை இலை பறிப்பதற்காக குளத்துபகுதிக்கு சென்றுள்ளார். இதன்போது மின்னல் தாக்குதலிற்குள்ளாகி மரணமடைந்துள்ளார். குறித்த பகுதியில் பெண்ணின் சடலம் ஒன்று இருப்பதை அவாதனித்த சிலர் சம்பவம் தொடர்பாக மாமடு பொலிஸாருக்கு தகவல் தெரிவித்திருந்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டதுடன் உடற் கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர். சம்பவத்தில் அட்டமஸ்கட பகுதியை சேர்ந்…
-
- 0 replies
- 163 views
- 1 follower
-
-
யாழில் திருட்டில் ஈடுபட்டவர் கைது By NANTHINI 08 OCT, 2022 | 01:48 PM (எம்.நியூட்டன்) யாழ்ப்பாணம், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸ் பிரிவுகளில் துவிச்சக்கர வண்டிகள் மற்றும் எரிவாயு சிலிண்டர்களை திருடிய நபரொருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கோண்டாவில் பகுதியில் வைத்து சந்தேக நபர் சனிக்கிழமை (ஒக் 😎 கைதுசெய்யப்பட்டார். குறித்த நபர் வவுனியா செட்டிக்குளத்தை சேர்ந்த 26 வயதுடையவர் ஆவார். கோப்பாய் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சந்தேக நபரிடமிருந்து 10 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் ம…
-
- 0 replies
- 146 views
- 1 follower
-
-
தாமரைக் கோபுரத்தில் இருந்து Bungee jumping விளையாட்டை தொடங்க ஒப்பந்தம் கையெழுத்து! தாமரைக் கோபுரத்தில் இருந்து பங்கி ஜம்பிங் (Bungee jumping) என்ற கயிறுகட்டி குதிக்கும் விளையாட்டை தொடங்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனத்திற்கும் சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்ட ‘கோ பங்கி’ என்ற நிறுவனத்திற்கும் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி, தாமரை கோபுரத்தில் இருந்து பங்கி ஜம்பிங் அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வருகைத் தரும் சுற்றுலாப் பயணிகளை கவர இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனத்…
-
- 2 replies
- 257 views
- 1 follower
-