Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஒருவருட காலத்திற்குள் புதிய அரசியலமைப்பு : ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளார் என்கிறார் வீரசிங்க வீரசுமன By DIGITAL DESK 5 22 OCT, 2022 | 01:28 PM (இராஜதுரை ஹஷான்) புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையிலான குழுவினர் சமர்ப்பித்துள்ள அறிக்கை குறித்து விசேட கவனம் செலுத்தி, ஒருவருட காலத்திற்குள் புதிய அரசியலமைப்பை உருவாக்க ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாக்குறுதி வழங்கியுள்ளார் என இலங்கை கம்யூனிச கட்சியின் பதில் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான வீரசிங்க வீரசுமன தெரிவித்தார். புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாற…

  2. மக்கள் நீதிமன்றம் செல்லலாம் - பைசர் முஸ்தபா By DIGITAL DESK 5 22 OCT, 2022 | 01:29 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) மாகாண சபைத் தேர்தல்களை அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் நடத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். குறித்த காலத்திற்குள் தேர்தலை தேர்தல்கள் ஆணைக்கழு நடத்தாது போனால் நீதிமன்றத்தை நாடும் உரிமை பொது மக்களுக்கு உண்டு என முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பைசர் முஸ்தபா தெரிவித்தார். மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சராக நான் இருந்த காலத்தில் என்னால் தான் மாகாண சபை தேர்தல்கள் நடத்த முடியாது போனதாக என் மீது குற்றம் சுமத்த வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட…

  3. சிறுமியின் சங்கிலியை அபகரித்தவர் பொதுமக்களால் மடக்கிப்பிடிப்பு - யாழில் சம்பவம் By VISHNU 22 OCT, 2022 | 07:30 PM (எம்.நியூட்டன்) பலாலி வள்ளுவர் புரத்தில் வீதியில் சென்ற சிறுமியின் சங்கிலியை அபகரித்துத் தப்பித்தவர் பொதுமக்களினால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார். இராணுவத்தில் பணியாற்றுபவரே இவ்வாறு வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று (22) சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றது. 15 வயதுச் சிறுமி தனியார் கல்வி நிலையத்துக்கு சென்றுவிட்டு வீடுதிரும்ப வீதியில் நடந்து சென்றுள்ளார். மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்தவர் சங்கிலியை அபகரித்துவிட்டு சிறுமியை கீ…

  4. மத வழிபாட்டுத் தலங்களை மையமாகக்கொண்டு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்புத் திட்டம் By VISHNU 22 OCT, 2022 | 01:53 PM உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும், மக்களின் போஷணை மட்டத்தை மேம்படுத்தவும் மத வழிபாட்டுத் தலங்களை மையமாகக் கொண்ட உணவு வங்கிகள் மற்றும் உணவுப் பரிமாற்ற மையங்களை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது. உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் மக்களின் போஷணை மட்டத்தை மேம்படுத்துதல் திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல், (21) வெள்ளிக்கிழமை (ஒக்.21) உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் கலாநிதி சுரேன் படகொட தலைமையில் நடைபெற்றது. புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சினால், சமய ஸ்தலங்களை மையமாக…

  5. அரச நிறுவனத் தலைவர்களுக்கு உணவுகளை பெற்றுக்கொள்வது குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு By DIGITAL DESK 5 22 OCT, 2022 | 01:37 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) அரச நிறுவனங்களில் நடைபெறும் கூட்டங்கள் மற்றும் விழாக்களுக்கு நட்சத்திர ஹோட்டல்களிலிருந்து உணவுகளை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நீண்ட காலமாகவே பல்வேறு அரச நிறுவனங்களில் குறிப்பாக பணிப்பாளர் சபை கூட்டங்களுக்கு நட்சத்திர ஹோட்டல்களிலிருந்து உணவுகள் பெற்றுக்கொள்ளப்படுகின்றன. தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற் கொண்டு இவ்வாறான செலவுகளை மேற்கொள்வது பொருத்தமானதல்ல எனவும், செலவு…

  6. ஐஸ் போதைப்பொருள் வர்த்தகம் : பிரதான போதைப்பொருள் வர்த்தகர் உள்ளிட்ட நால்வர் கைது By DIGITAL DESK 5 22 OCT, 2022 | 01:20 PM (எம்.வை.எம்.சியாம்) நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த பிரதான போதைப்பொருள் வர்த்தகர் உள்ளிட்ட நால்வர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சந்தேக நபர்கள் நேற்று குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொருள் வர்த்தகத்தில் தொடர்ச்ச…

  7. ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கை முன்கொண்டுசெல்ல முடியாதாம் ! By DIGITAL DESK 5 22 OCT, 2022 | 10:37 AM (எம்.எப்.எம்.பஸீர்) ச.தொ.ச. ஊழியர்களை கடமைகளிலிருந்து விலக்கி, அரசியல் நடவடிக்கைகளில் இணைத்தமையினூடாக அரசுக்கு 4 கோடி ரூபா நட்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உள்ளிட்ட மூவருக்கு, எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை முன்கொண்டு செல்ல முடியாது என அடிப்படை ஆட்சேபனம் முன் வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று வெள்ளிக்கிழமை (21) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ன மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது முன்வைக்கப்பட்ட அடிப்படை ஆட்சேபனையை பரிசீ…

  8. இராணுவ ஜீப் விபத்து : கப்டன் தர அதிகாரி பலி, 3 பேர் காயம் By DIGITAL DESK 5 22 OCT, 2022 | 11:43 AM வெலிக்கந்த பகுதியில் இராணுவ ஜீப் வண்டியொன்று விபத்திற்குள்ளானதில் இராணுவ விசேட அதிரடிப்படையின் கப்டன் தர அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர். இன்று சனிக்கிழமை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இலங்கை இராணுவத்தின் 8806 இலக்கம் கொண்ட டிஃபென்டர் ரக ஜீப் கட்டுப்பாட்டை இழந்து முத்துவெல்ல பகுதியில் உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த டிஃபென்டர் வண்டி திருகோணமலையில் இருந்து மதுரு ஓயா நோக்கி பயணித்துள்ளது. இதன் போதே குறித்த விபத்து…

  9. முதியவருக்கு உதவச் சென்றவர் மதில் இடிந்து விழுந்து உயிரிழப்பு - கொழும்பில் சம்பவம் By DIGITAL DESK 5 22 OCT, 2022 | 12:12 PM (எம்.வை.எம்.சியாம்) கொழும்பு- கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் உள்ள வீட்டின் பாதுகாப்பு கருதி அமைக்கப்பட்டிருந்த மதில் நேற்று இரவு இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஜோசப் வீதியில் அமைந்துள்ள வீட்டின் மதில் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது வீட்டின் அயல் வீட்டில் உள்ள முதியவருக்கு உதவி செய்யும் நோக்கில் குறித்த வீட்டிற்கு வருகை தந்துள்ளதோடு குறித்த முதியவரை வீட்டின் பின்புறத்தில் உ…

  10. யாழ். புங்குடுதீவில் தென்னிலங்கையை சேர்ந்தவருக்கு கடல்பண்ணை அமைக்க அனுமதி : எதிர்ப்பில் மீனவர்கள் புங்குடுதீவு மடத்துவெளி பகுதியில் கடற்றொழில் அமைச்சினால் தென்னிலங்கையைச் சேர்ந்த நபருக்கு முப்பது ஏக்கரில் கடலட்டை பண்ணை அமைப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியிலுள்ள சிறீமுருகன் கடற்றொழிலாளர் சங்கத்தின் முக்கியஸ்தர்களை ஏமாற்றியே இச்செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதன் பின்னணியில் வேலணை பிரதேச சபை உறுப்பினரொருவர் இருப்பதாகவும் அப்பகுதி மீனவர்கள் கூறுகின்றனர். மேற்படி கடலட்டை பண்ணை அமைக்கப்படுமானால் இப்பகுதியிலுள்ள கடல் வளங்கள் முழுமையாக அழிக்கப்படலாமென்றும் குடும்பத்தோடு தற்கொலை செய்வதனை தவிர வேறு வழியில்லையென்றும் அம்மீனவர்கள் அச்ச…

  11. PTAயின் கீழ் கைதாகியுள்ள யாழ்.போதனாவின் முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி எஸ். சிவரூபனுக்கு அச்சுறுத்தல் October 22, 2022 பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 3 வருடங்களுக்கு மேலாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பளை வைத்தியசாலை மருத்துவ அத்தியட்சகர் வைத்தியர் எஸ். சிவரூபனுக்கு கொலை அச்சுறுத்தல் உள்ளதாக நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. குறித்த வைத்தியர் யாழ்.போதனா வைத்திய சாலையில் சட்ட வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய கால பகுதியில் சுமார் 300 வரையிலான கொலை , பாலியல் வன்புணர்வு , சித்திரவதைகள் உள்ளிட்ட வழக்குகளில் சட்ட வைத்திய அதிகாரியாக முக்கிய சாட்சியமாக உள்ளார். குறித்த வழக்குகளில் எதி…

  12. போதைப்பாக்குடன் பாடசாலை சென்ற மாணவன் -விசாரணையில் கையை அறுத்துக்கொண்டாா் October 22, 2022 போதைப்பாக்குடன் பாடசாலைக்கு வந்த மாணவன் , தனது கையினை பிளேட்டால் அறுத்து காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தெல்லிப்பளை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த மாணவன் போதை ஊட்டிய பாக்குடன் பாடசாலைக்கு வருகை தந்துள்ளார். அது தொடர்பில் அறிந்து கொண்ட ஆசிரியர்கள் மாணவனிடம் விசாரணைகளை முன்னெடுத்து பாக்கினையும் மீட்டு இருந்தனர். அதனை அடுத்து அதிபர் ஊடாக அப்பகுதி சுகாதார பரிசோதகருக்கு சம்பவம் …

  13. காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை ஒருபோதும் தமிழர்களுக்கு வழங்க கூடாது – சரத் வீரசேகர. இலங்கை பௌத்த நாடாக இருந்தால் மாத்திரமே ஏனைய இனத்தவர்கள் தமது மதங்களை கடைபிடித்து சுதந்திரமாக வாழ முடியும் என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாட்டின் ஒருமித்த தன்மையை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்றும் 13ஆவது திருத்தம் முழுமையாக இரத்து செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் நோக்கம் பிரிவினைவாதிகளுக்கு உண்டு என குற்றம் சாட்டியுள்ளார். 13ஆவது திருத்தம் நடைமுறையில் இருக்கும் வரை, ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்த ஆதரவு வழங்கப்போவதில்லை என சரத் வீரசேகர தெர…

  14. ரணில் ஜனாதிபதி ஆவார் என ஜே.ஆர்.ஜயவர்தன கூட எதிர்பார்த்திருக்க மாட்டார் – டலஸ் தேர்தலில் தோற்றாலும் அரசியலமைப்பின் பிரகாரம் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக வருவார் என ஜே.ஆர்.ஜயவர்தன கூட நினைத்திருக்க மாட்டார் என டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர், 44 வருடங்களுக்கு முன்னர் அரசியலமைப்பை உருவாக்கிய போது, இவ்வாறான சம்பவம் நிகழும் என ஜே.ஆர்.ஜயவர்தன எண்ணியிருக்க மாட்டார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 44 வருடங்களின் பின்னர் தேர்தலில் தோல்வியடைந்து தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் சென்ற ஜே.ஆரின் மருமகன், பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் பதவியேற்க அரசியலமைப்பே காரணம் என குறிப்பிட்டு…

  15. 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்: எதிர்வரும் 8ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்பிப்பு! அடுத்த ஆண்டுக்கான (2023) வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 8ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. பின்னர் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி வரை வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1306417

  16. உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான நடவடிக்கை தீவிரம்! உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான பிரேரணை உடனடியாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். தற்போதுள்ள 8,719 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 4000ஆக குறைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். உறுப்பினர்களைக் குறைத்து, அதன் மூலம் மீதமாகும் நிதியை நாட்டின் அபிவிருத்தி திட்டங்களுக்கு பயன்படுத்த முடியும…

  17. வாகரையில் கட்டுத்துவக்கு மீட்பு By DIGITAL DESK 5 21 OCT, 2022 | 07:39 PM மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள 5 ஆம் வட்டார கிராமத்தில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கட்டுத்துவக்கொன்றினை விசேட அதிரடிப் படையினர் மீட்டுள்ளனர். வாகரை பிரதேச இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து விசேட அதிரடிப்படையினரின் கவனத்திற்கு தெரியப்படுத்தியதனை அடுத்து குறித்த வீட்டிற்கு சென்ற அதிரப்படையினர் அதனை மீட்டுள்ளதுடன் சந்தேக நபரை கைதுசெய்து வாகரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சந்தேக நபர் மற்றும் கட்டுத்துவக்கினை வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில்…

  18. திரவியங்கள் நிறைந்த மெலிஞ்சிமுனை கடலுக்கு ஆபத்து - நேரடி ரிப்போர்ட் By NANTHINI 19 OCT, 2022 | 01:31 PM (லியோ நிரோஷ தர்ஷன்) ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட மெலிஞ்சிமுனை கடல், அங்கு வாழும் மீனவர்களினதும், அவரது குடும்பங்களினதும் பசியாற்றும் தாயாகவே உள்ளது. இயற்கையின் சீற்றங்கள் எந்தளவு காணப்பட்டாலும், எந்தவொரு மீனவரையும் வெறுங்கையுடன் கரைக்கு அனுப்பாத கருணை நிறைந்த சிறு கடலாகவே மெலிஞ்சிமுனை கடலை அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். பல்லின மீன் இனங்கள், நண்டு மற்றும் இறால் என பல கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்துக்கான கருக்களை சுமக்கும் அரிய வகை பவளப்பாறைகள் மற்றும் கடல் தாவரங்கள் நிறைந்…

  19. இலங்கையில் முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்கி, பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த துரித முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன - ஜனாதிபதி By T. SARANYA 21 OCT, 2022 | 11:50 AM இலங்கையில் முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்கி பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த துரித முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை முற்பகல் ஹெவ்லொக் சிட்டி, மிரேகா டவர் வர்த்தக மற்றும் அலுவலக கட்டிடத் தொகுதி (Mireka Tower) திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். முதலீட்டுக்காக பாரிய கொழும்பு பொருளாதார ஆணைக்குழுவினால் அறிமுகப்படுத்தப்பட்ட சட்ட கட்டமைப்புக…

  20. யாழ். போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின் 35வது நினைவு தினம்! இந்திய இராணுவத்தினரால் யாழ் போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டோரின் 35வது நினைவு தினம் இன்று (வெள்ளிக்கிழமை) அனுஸ்டிக்கப்பட்டது. 1987 ஆம் ஆண்டு யாழ் போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த இந்திய இராணுவத்தினரால் யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையில் இருந்த 21பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். அந்த கொடூர சம்பவத்தின் 35ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ் போதனா வைத்தியசாலை ஊழியர்களின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றது. இந்திய இராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டோரின் நினைவாக உயிரிழந்தோரின் உறவுகளால் பொது சுடர் ஏற்றப்பட்டு ப…

  21. சர்வதேசம் இலங்கைக்கு உதவுவதற்கான சாதக நிலை 22ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதிலேயே தங்கியுள்ளது-விஜயதாச ராஜபக்ஷ சர்வதேசம் எதிர்காலத்தில் இலங்கைக்கு உதவுவதற்கான சாதக நிலை 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்படுவதிலேயே தங்கியிருப்பதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றிய அவர், சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றமை தொடர்பாக வாதப்பிரதிவாதங்கள் நிலவுகின்றன என தெரிவித்துள்ளார். எனினும் தற்போதைய நிலையில், சர்வதேச நாணய நிதியத்தை தவிர இலங்கையில் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேறு வழியில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சர்வதேச நாணய நிதி…

  22. அரச அதிகாரிகளுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்குவதில் சிக்கல் பல மாகாண சபைகளில் அரச அதிகாரிகளுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு மாதந்தோறும் 25ஆம் திகதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும் என்பதுடன், 24ஆம் திகதி சம்பளம் வங்கியில் வைப்பிலிடப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு 24ஆம் திகதி தீபாவளி பண்டிகைக்கு அரசு விடுமுறை என்பதாலும், வார இறுதி நாள் என்பதாலும் இன்றைக்குள் சம்பளம் வைப்பிலிடப்பட வேண்டும். ஆனால் நாட்டில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு திறைசேரியில் இருந்து பணம் பெறப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலைமையை கருத்திற்கொண்டு, நிதியமைச்சின் ஒதுக்கீட்டைப் பெற்…

  23. மே மாதம் 9ஆம் திகதி கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் குடும்பத்திற்கு 10 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்க அனுமதி! படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவிற்கு 10 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றிய பிரதமர் தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். மே மாதம் 9ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தரும் நிட்டம்புவில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். இந்த நிலையில், கொல்லப்பட்ட பாதுகாப்பு அதிகாரிக்கும் இழப்பீடு வழங்கப்படும் என்று பிரதமர் கூறியுள்ளார். …

  24. வாகன உதிரிப் பாகங்கள், அழகுசாதனப் பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்படும் By T. SARANYA 21 OCT, 2022 | 04:17 PM வாகன உதிரிப்பாகங்கள், அழகுசாதனப் பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் இன்னும் இரண்டு வாரங்களில் தளர்த்தப்படும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட துறைகளில் ஈடுபட்டுள்ளவர்களால் முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டு மனுக்களை பரிசீலித்து பொருளாதார ஆராய்ச்சி திணைக்களம் கட்டுப்பாடுகளை தளர்த்தும் பணியை மேற்கொள்ளும் என இராஜாங்க நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று (21) தெரிவித்தார். நிலவும் பொருளாதார நெருக்கடி ஆகஸ்ட் 23 அன்று 1,465 பொருட்களின் இறக்குமதியை இடை நிறுத்துவது…

  25. உயர்தரம், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு 21 OCT, 2022 | 03:54 PM 2022 ஆம் ஆண்டுக்குரிய ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமை பரிசில் பரீட்சை மற்றும் கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சைக்கான திகதியை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் டிசெம்பர் மாதம் 18 ஆம் திகதியும், கல்வி பொது தராதர பத்திர உயர்த்தர பரீட்சை எதிர்வரும் ஜனவரி மாதம் 23 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி வரையிலும் நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/138157

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.