ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
பேக்கரி பொருட்களுக்குப்.. பயன் படுத்தப்படும், கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு! பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களுக்குப் பயன்படுத்தப்படும் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் நெருக்கடியால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். திருகோணமலையிலிருந்து கொழும்புக்கு 50 கிலோகிராம் கோதுமை மா மூடையை கொண்டு செல்லும் போது ஒரு மூடைக்கு 300 ரூபாய் மேலதிகமாக அறவிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். திருகோணமலையில் இருந்து மருதானைக்கு கடந்த காலங்களில் ரயிலில் கோதுமை மா கொண்டு செல்லப்பட்டதாகவும், தற்போது ரயிலில் கோதுமை மா கொ…
-
- 1 reply
- 225 views
- 1 follower
-
-
ரணிலின் அழைப்பை ஈ.பி.டி.பி வரவேற்றது எம்.றொசாந்த் இலங்கை மக்கள் அனைவரும் பெரும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துள்ள சவாலான சூழலிருந்து மீள்வதற்கு கட்சிகள் அனைத்தும் தமக்கிடையேயான அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை கடந்து ஓரணியாகச் செயலாற்ற முன்வர வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சரும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். சக தமிழ் அரசியல் கட்சிகளுக்கு அவர் விடுத்துள்ள செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது, நாடு எதிர்கொண்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள சர்வ கட்சி அரசொன்றை அமைத்து முன்னோக்கி செல்வதன் ஊடாகவே சிறந்த பெறுபேற்றை பெற்றுக் கொள்ள முடியும் என்று கூறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள்…
-
- 13 replies
- 803 views
-
-
விக்னேஸ்வரன் அமைச்சாரானால்... “விக்கி கோ கொழும்பு” என, கோஷம் எழுப்புவேன் – அருந்தவபாலன். ரணில் விக்ரமசிங்க தலைமையிலான சர்வகட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையில் விக்னேஸ்வரன் அங்கம் வகித்தால் “விக்கி கோ கொழும்பு” என்கிற கோஷத்தை எழுப்பும் முதல் ஆளாக நானே இருப்பேன் என தமிழ் மக்கள் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் க.அருந்தவபாலன் தெரிவித்துள்ளார். தென்மராட்சியில் உள்ள அவரது இல்லத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து, கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், ”கடந்த காலங்களில் எழுத்து மூலம் செய்யப்பட்ட உறுதிப்பாடுகள் மனதால் இணைந்த உறுதிப்பாடுகளுக்கு என்ன நடந்தது என்பதை நாம் பார்த்தோம். தற்போதைய அரசோ நிலையற்ற அரசு. இந்த அரசால் எந்த ஒரு பிரச்ச…
-
- 1 reply
- 335 views
-
-
அதிகாரங்களைப் பயன்படுத்தி விமர்சகர்களைப் பழிவாங்குவதில் ஜனாதிபதி கவனம் செலுத்தக்கூடாது - மனித உரிமைகள் கண்காணிப்பகம் (நா.தனுஜா) மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யுமாறு வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களே ராஜபக்ஷவின் இராஜினாமாவிற்கு வழிவகுத்தது. எனவே புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தவேண்டுமே தவிர, அவசரகாலநிலையின் மூலமான அதிகாரங்களைப் பயன்படுத்தி விமர்சகர்களைப் பழிவாங்குவதில் கவனம் செலுத்தக்கூடாது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப்பிராந்தியப் பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி வலியுறுத்தியுள்ளார். நாட்டில் தீவிரமடைந்த பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து அதற்கு உரியவாறான தீர்வை வழங்கவேண…
-
- 0 replies
- 249 views
-
-
நல்லூர் ஆலயத்திற்கு... வரும் பக்தர்களுக்கு, யாழ்ப்பாண பொலிஸாரின்... விசேட அறிவிப்பு! வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்று (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. மகோற்சவத்தின் போது பெருமளவில் பக்தர்கள் ஒன்று கூடுவது வழமை எனவே நல்லூர் ஆலயவளாகத்தில் திருடர்கள் தமது கைவரிசியினை காட்டக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகளவில் காணப்படுகின்றது. அதனை தடுக்க கூடியவாறு யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பணிபுரையின் கீழ் விசேட பொலிஸ் அணிகள் சிவில் மற்றும் சீருடையில் களமிறக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் நல்லூர் முருகனை தரிசிக்க வரும் பக்தர்கள் பெறுமதியான நகைகளை அணிந்து வருவதை தவிர்ப்பத…
-
- 0 replies
- 291 views
-
-
கைது செய்யப்படுவதை தடுக்க... உத்தரவிடுமாறு கோரி, அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் மனு தாக்கல். தான் கைது செய்யப்படுவதை தடுக்க உத்தரவிடுமாறு கோரி அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், பொலிஸ்மா அதிபர், இராணுவத் தளபதி, விமானப்படைத் தளபதி, கடற்படைத் தளபதி, சட்டமா அதிபர் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளனர். எவ்வித நியாயமான அடிப்படையும் இன்றி தம்மை கைது செய்ய பிரதிவாதிகள் தயாராகி வருவதாகவும் குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தனது அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக தீர்ப்பு வழங்குமாறும், …
-
- 4 replies
- 367 views
-
-
இந்நாட்டை... பிளவுபடுத்த பாடுபட்ட குழுக்கள், இதற்காக... தற்போது பணங்களை வாரி வழங்கி வருகின்றன – மொட்டு கட்சி! போரால் அடைய முடியாத இலக்கை வேறு வழிகளில் அடைவதற்கான சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே டுவருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எனவே, தமது உரிமைகளுக்காக போராடும் மக்கள், இந்த சூழ்ச்சி நிகழ்ச்சி நிரல் குறித்தும் விழிப்பாகவே இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இலங்கையை தோல்வி கண்ட நாடாக மாற்றுவதற்கு சூழ்ச்சி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் சாகர காரியவசம் தெரி…
-
- 6 replies
- 570 views
-
-
கோட்டாபய நாடு திரும்புவதற்கு உகந்த நேரமல்ல: ரணில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்புவதற்கு இது சரியான தருணம் அல்ல என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாகவும், இது அரசியல் பதட்டங்களை தூண்டும் எனவும் வோல் ஸ்ட்ரீட் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. "அவர் திரும்பி வருவதற்கான நேரம் இது என்று நான் நம்பவில்லை," என்று விக்கிரமசிங்க அந்த ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறினார். "அவர் விரைவில் திரும்பி வருவதற்கான எந்த அறிகுறியும் தன்னிடம் இல்லை." என்றார் கோட்டாபய ராஜபக்ஷ, ஜூலை 13 அன்று தப்பியோடி தனது பதவியில் இருந்து விலகினார். https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/கோட்டாபய-நாடு-திரும்புவதற்கு-உகந்த-நேரமல்ல-ரணில்/150-301454
-
- 10 replies
- 968 views
-
-
இலங்கையில் மோசமடையும் வானிலை: மூவர் பலி, நால்வரை காணவில்லை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையில் திடீரென ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது. நான்கு பேரின் நிலை தெரியவில்லை. இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் கடும் மழை மற்றும் கடும் காற்றுடனான வானிலை நிலவி வருகின்றது. இவ்வாறு ஏற்பட்ட சீரற்ற வானிலையினால், 2,911 குடும்பங்களைச் சேர்ந்த 11,821 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. யாழ்ப்பாணம், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்கள் சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்டுள்ளன. இரத்தினபுரி மாவட்டத்…
-
- 0 replies
- 279 views
- 1 follower
-
-
கோட்டாவுக்கு சிறப்பு சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை – சிங்கப்பூர் அரசாங்கம். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எந்தவித சலுகைகளோ இராஜதந்திர சலுகைகளையோ வழங்கப்படவில்லை என சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அந்நாட்டு எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெரால்ட் கியாமின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அரசியல் தஞ்சம் கோருபவர்களின் இலக்காக சிங்கப்பூர் மாறும் என்ற கவலைகள் குறித்து ஆளும் மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் யிப் ஹான் வெங்கின் கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் கே.சண்முகம், சரியான ஆவணம் மற்றும் நுழைவுக்கான …
-
- 0 replies
- 218 views
-
-
ஆடை தொழிற்சாலைகளை, மூடவேண்டிய நிலை! பொருளாதார நெருக்கடிகாரணமாக ஆடை உற்பத்தி துறை வீழ்ச்சியடைந்துள்ளதோடு, ஆடை தொழிற்சாலைகளை மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வர்த்தக வலய சேவையாளர்களின், தேசிய மத்திய நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் காமினி ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார். எரிபொருள் நெருக்கடி, மின்சார நெருக்கடி, போன்றவற்றினால் ஆடை உற்பத்தி துறையானது பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் மற்றும் மின்சார நெருடிக்கடியினால் உரிய நேரத்தில் தங்களது உற்பத்திகளை வழங்க முடியாது போயுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் சர்வதேசத்திடமிருந்து இலங்கை பொருட்களுக்கான கேள்வி குறைவடைந்துள்ளதாகவும் வர்த்தக வலய சேவையாளர்களின், த…
-
- 4 replies
- 447 views
-
-
சீன கப்பல், இலங்கைக்கு: தீவிர கண்காணிப்பில்... இந்திய கடற்படை! ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை எதிர்வரும் 11ஆம் திகதி வந்தடையவுள்ள சீன ஆராய்ச்சிக் கப்பலை இந்திய கடற்படை கண்காணித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. செயற்கைக் கோள்கள், ரொக்கெட்டுகள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் போன்றவற்றை கண்காணிக்கும் நவீன கருவிகளைக் கொண்ட இந்தக் கப்பல் இலங்கைக்கு வருவது குறித்து இந்தியா தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. வடமேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் விண்வெளி செயற்கைக்கோள் நடவடிக்கைகளை கண்காணிக்க வரும் கப்பல் (யுவான் வாங் – 5) இம்மாதம் 11 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைய உள்ளது. இதன்படி, எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 17ஆம் த…
-
- 9 replies
- 1k views
-
-
20 இற்கும் மேற்பட்ட... நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி தாவ உள்ளதாக... தகவல்? புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை(புதன்கிழமை) ஆரம்பமாகவுள்ள நிலையில், 20 இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சிதாவ உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிரணியில் இருந்து ஒரு குழு ஆளுங்கட்சி பக்கம் தாவவுள்ளது. அத்துடன், ஆளுங்கட்சி பக்கம் உள்ள ஒரு குழு எதிரணியில் இணையவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம, கபீர் ஹாசிம், மயந்த திஸாநாயக்க, அலவத்துவல, அஜித் மன்னப்பெரும மற்றும் கிங்ஸ் நெல்சன் ஆகியோர் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோன்று ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பேராசிரியர் ஜி.எல…
-
- 0 replies
- 249 views
-
-
ரணில் விக்கிரமசிங்கவுடன்... பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு, தயார் – தமிழ்த் தேசிய கூட்டமைப்பு. தமிழ் தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி, இராமநாதபுரத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த மண்ணிலே புரையோடிப்போயிருக்கிற இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு இந்த நாட்டின் ஜனாதிபதியாக யார் இருந்தாலும் பேசுவதற்கு தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அந்த வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்…
-
- 1 reply
- 190 views
-
-
வெள்ளிக்கிழமை விடுமுறை... என்ற, சுற்றறிக்கை இரத்து. விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக... அரசாங்க ஊழியர்களுக்கு, வெள்ளிக்கிழமை விடுமுறை என்ற சுற்றறிக்கையை... உடனடியாக இரத்துச் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://athavannews.com/2022/1293246
-
- 0 replies
- 534 views
-
-
ஊழல் குற்றச்சாட்டில் இருந்து, விடுதலை: இன்று பதவியேற்கின்றார் நிமல் ! மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சருக்கு அமைச்சுப் பதவி கிடைக்கவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சராக முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று (02) மீண்டும் பதவியேற்கவுள்ளார். சமீபத்தில் ஜப்பானில் உள்ள தாய்ஸ் நிறுவனத்திடம் அவர், லஞ்சம் வாங்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரி நிமல் சிறிபால டி சில்வா தனது அமைச்சுப் பதவியை கடந்த 6ஆம் திகதி இராஜினாமா செய்தார். இந்த குற்றச்சாட்…
-
- 0 replies
- 210 views
-
-
22ஆவது திருத்த சட்டமூலத்திற்கு, அமைச்சரவை அனுமதி. உத்தேச 22 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதிக்கான அதிகாரங்களைக் குறைத்து, நாடாளுமன்றத்திற்கு அதிக பலத்தினை வழங்கும் வகையில் குறித்த அரசியலமைப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1293203
-
- 0 replies
- 125 views
-
-
இலங்கைக்கு வருகைத் தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மீண்டும் படிப்படியாக அதிகரிப்பு http://www.samakalam.com/wp-content/uploads/2022/08/tourist-e1659345573273.jpg நாட்டுக்கு வருகைத் தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.அத்துடன் இம்மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஜூலை மாதத்தில் கிட்டத்தட்ட 43,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேச…
-
- 8 replies
- 726 views
-
-
இலங்கை வரும்... சீன இராணுவ கண்காணிப்பு கப்பலால், கடும் அதிருப்தியில்... இந்தியா. சீன இராணுவத்தின் கண்காணிப்பு கப்பலான யுவான் வோங் – 5 இன் இலங்கை விஜயம் தொடர்பில் இந்தியா கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. குறித்த கப்பலின் வருகை மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டு அந்த காலப்பகுதியில் மேற்கொள்ளவுள்ள செயற்பாடுகள் என்ன என்பன குறித்து முழுமையான தெளிவுப்படுத்தலை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரியுள்ளது. சீன இராணுவ கண்காணிப்பு மற்றும் ஆய்வு கப்பலின் வருகையானது இந்தியாவின் தேசிய பாதுகாப்பு விடயங்களில் நேரடியாகவே தாக்கம் செலுத்துகின்றமையால் இந்த விடயத்தில் முழுமையான அவதானத்துடன் இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. யுவான் வோங் – 5 இராணுவ …
-
- 14 replies
- 946 views
- 1 follower
-
-
இலங்கைக்கு கஞ்சாவைக் கடத்திய படகு நடுக்கடலில் மூழ்கியதா ?: தொடர்ச்சியாக கரையொதுங்கும் கஞ்சா மூடைகள்: (லெம்பேட்) பாக்ஜலசந்தி கடல் பகுதியில் அடுத்தடுத்து கஞ்சா மூட்டைகள் கரை ஒதுங்குவது குறித்து உளவுத்துறை அதிகாரிகள் நடத்திய ரகசிய விசாரணையில் தமிழக கடலோரப் பகுதியில் இருந்து இலங்கைக்கு படகில் கஞ்சா கடத்தி சென்ற போது நடுக்கடலில் படகு மூழ்கியதில் படகில் இருந்த கஞ்சா மூட்டைகள் கடலில் விழுந்து கரை ஒதுங்கி வருவதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இன்று முதலாம் திகதி திங்கட்கிழமை தனுஷ்கோடி அருகே கரை ஒதுங்கிய 96 கிலோ கஞ்சாவை இந்திய கடலோர பொலிஸார் பறிமுதல் செய்து போதை பொருள் தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இலங்கைக்கு மிக அருகாமையில…
-
- 0 replies
- 239 views
-
-
எரிபொருள் பெறும் அனைவருக்கும் வலுச்சக்தி அமைச்சின் விசேட அறிவித்தல் வாகன இலக்க தகட்டின் கடைசி இலக்கம் மற்றும் டோக்கன் முறை போன்றவை ஓகஸ்ட் 1ஆம் திகதி முதல் செல்லுபடியாகாது என்றும் அன்றையதினம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தேவையற்ற நெரிசல் ஏற்படக்கூடிய வகையில் ஒன்று கூட வேண்டாம் என்றும் வலுச்சக்தி அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அன்றைய தினம் முதல் தேசிய எரிபொருள் அனுமதிப் பத்திர கியூஆர் முறைமை அமுல்படுத்தப்படும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் குறிப்பிடப்பட்டிருந்ததாவது, சட்ட விரோதமாக எரிபொருளை பதுக்கி வைத்திருப்பவர்கள் தொடர்பான ஆதாரங்கள் மற்றும் தகவல்களை 0742…
-
- 4 replies
- 401 views
- 1 follower
-
-
அனைத்து மக்களையும்... பாதுகாப்பதே, எங்கள் நோக்கம் – பிரதமர் நாடு எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்வதற்கு அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார். சகல பிரஜைகளையும் பாதுகாப்பதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் எனவும் பிரதமர் தினேஷ் குணவர்தன சுட்டிக்காட்டினார். சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்கான கலந்துரையாடல்களை நடாத்துவதற்கு அனைத்துக் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுப்பர் என தெரிவித்தார். பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்படும் முடிவுக்கு தாங்களும் கொள்கையளவில் உடன்பட்டுள்ளதாக அவர் கூறினார். நாடு எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்வதற்கு அனைத்து முயற்சிகள…
-
- 2 replies
- 234 views
-
-
அவசரகால சட்டம்... வேறு நோக்கங்களுக்காக, பயன்படுத்தப்படலாம் – ஜி.எல். பீரிஸ் தற்போதைய சூழ்நிலையில் அவசரகால சட்டம் அவசியமில்லை என்பதாலேயே அதற்கு எதிராக வாக்களித்திருந்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் சட்டத்துறை பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(28) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவசரகால சட்டமென்பது நாட்டுக்கு அவசியமானது எனவும், அதனை அமுல்படுத்துபோது தூரநோக்கு சிந்தனை இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், தற்போதைய சூழ்நிலையில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாத செயல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அவசரகால சட…
-
- 8 replies
- 493 views
-
-
இளைஞர்களை உசுப்பேற்றி அம்பாறையில் வாக்குகளை பிரித்தவரை இப்போது காணவில்லை ? கூட்டமைப்பு எப்போதும் மக்களுடன் பயணிக்கும் : கலையரசன் MP By Sayanolipavan ஜனநாயகத்தின் பால் தமிழ் தேசிய கூட்டமைப்பானது பயணித்து கொண்டிருக்கின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார். பொருளாதார நெருக்கடியும் சமகால அரசியலும் எனும் கருப் பொருளில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் மக்கள் தெளிவு படுத்தும் கலந்துரையாடல்கள் வட கிழக்கு உட்பட பல இடங்களில் இடம்பெற்று வருகின்றன. அதனடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை(31) அம்பாறை மாவட்டம் காரைதீவு கலாச்சார மண்டபத்தில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் இடம்பெ…
-
- 0 replies
- 679 views
-
-
தேசிய ஒருமித்த அரசாங்கம், அமைக்கப்பட வேண்டுமானால்... எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் இருக்கக்கூடாது – முன்னாள் சபாநாயகர். குறுகிய காலத்திற்கு நாடாளுமன்றத்தில் தேசிய இணக்கப்பாட்டுடன் கூடிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டுமாயின் எதிர்க்கட்சிகள் இருக்கக் கூடாது என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். மேலும், நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பின்வரிசை உறுப்பினர்களை ஈடுபடுத்துமாறு பொறுப்பானவர்களுக்கு பரிந்துரைத்துள்ளதாகவும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் நிகழ்வொன்றில் பேசிய அவர், நாடாளுமன்றத்தில் அனைவரும் சகோதரத்துவத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என கூறியுள்ளார். முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய க…
-
- 0 replies
- 212 views
-