ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142862 topics in this forum
-
வவுனியாவில்... தீப்பற்றி எரிந்த, சூரிய மின் உற்பத்தி நிலையம்! வவுனியா கள்ளிக்குளத்தில் அமைந்துள்ள சூரிய மின் உற்பத்தி நிலையத்தில் நேற்று இரவு தீப்பரவல் ஏற்பட்டது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10 மணியளவில் கள்ளிக்குளத்தில் அமைந்துள்ள சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்யும் நிலையத்திதிலேயே திடீரென இவ்வாறு தீப்பற்றியது இதன்போது அவ் நிலையத்தில் புதிதாக பொறுத்துவதற்கென வைக்கப்பட்டிருந்த சூரிய ஒளி மின்உற்பத்தி உபகரணங்கள் தீப்பற்றி எரிந்தன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினர் தீயிணை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். எனினும் புதிதாக பொறுத்துவதற்கென வைக்கப்பட்டிருந்த சூரிய மின்கலங்கள் அனைத்தும் சேதமடைந்துள்…
-
- 1 reply
- 270 views
- 1 follower
-
-
ஜூன் மாத நடுப்பகுதியில்... மீண்டும் எரிபொருள் விலை அதிகரிப்பு? உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு காரணமாக ஜூன் மாத நடுப்பகுதியில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் என ஐக்கிய தொழிற்சங்க அமைப்பின் ஊடகப் பேச்சாளர் (Samagi United Trade Union Force) ஆனந்த பாலித தெரிவித்துள்ளார். மே 24ஆம் திகதி மின்சக்தி அமைச்சர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் பின்னர் இரண்டு வாரங்களில் எரிபொருள் விலையேற்றம் இருக்கும் என அவர் ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். எனவே மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை அதிகரிக்கவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் “அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் கருத்தின் பிரகாரம், எரிபொருள் விலை…
-
- 0 replies
- 135 views
-
-
இன்றைய நாணய மாற்று விகிதம் (06.06.2022) ரூபாய்க்கு நிகரான வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதி உள்ளடக்கிய இன்றைய நாணய மாற்று விகிதத்தை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்விலை 355.29 ரூபாயாகவும் விற்பனை விலை 365.26 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது. இதேவேளை ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் கொள்விலை 442.16 ரூபாயாகவும் விற்பனை விலை 457.62 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது. மேலும் யூரோ ஒன்றின் கொள்விலை 381.85 ஆகவும் விற்பனை விலை 392.68 ஆகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. https://athavannews.com/2022/1285676
-
- 0 replies
- 241 views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு... 101 புதிய வீடுகள்: அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்தார் பிரசன்ன ! நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 101 புதிய வீடுகளை கட்டிக்கொடுப்பதற்கு அமைச்சரவைப் பத்திரத்தை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சமர்ப்பித்துள்ளார். பன்னிப்பிட்டியவிலுள்ள “வியத்புர” வீடமைப்புத் திட்டத்தில் இருந்து வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளஅதேவேளை அதன் மதிப்பு தோராயமாக 1795 மில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மடிவெல பிரதேசத்தில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீட்டுத் தொகுதி பாழடைந்து வரும் நிலையில், அந்த வீடுகளுக்கு போதிய இடவசதி இல்லையெனவும் அதற்கு மாற்றாக இந்த வீட்டுத் தொகுதிகளை வழங்க அமைச்சரவைப் பத…
-
- 1 reply
- 138 views
-
-
மக்கள் கஷ்டப்படும் போது... அரசாங்கம், வரப்பிரசாதங்களை பயன்படுத்துகின்றது – ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ அல்லது ஏனைய அதிகாரிகளினதோ சிறப்புரிமையை அரசாங்கம் குறைக்கவில்லை என மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. மக்கள் கடும் இன்னல்களுக்கு உள்ளாகி வரும் வேளையில் கூட இவற்றை செய்யவில்லை என அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி குற்றம் சாட்டினார். அமைச்சர்கள் உத்தியோகபூர்வ வாகனங்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், உத்தியோகபூர்வ இல்லங்கள், சம்பளம் அல்லது ஏனைய சலுகைகளை குறைக்கடவில்லை என சுட்டிக்காட்டினார். தற்போதைய அரசாங்கம் மீது பொதுமக்கள் அதிருப்தி கொண்டுள்ள நிலையில், தேர்தலின் மூலம் மட்டுமே அதனை சரிசெய்ய ம…
-
- 0 replies
- 87 views
-
-
"இரண்டு வேளை... சாப்பிட பழகிக் கொள்ளுங்கள்", எனக் கூற... ஒரு பிரதமர் தேவையா? – அனுர கேள்வி. மக்களிடம் இரண்டுவேளை மட்டும் சாப்பிட பழகிக்கொள்ளுங்கள் எனக் கூறும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்த நெருக்கடியை உருவாக்கியவர் யார் என்பதை நாட்டுக்கு வெளிப்படுத்த மாட்டார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். நெருக்கடியை உருவாக்கியவர்களை ரணில் விக்ரமசிங்க மறைத்து வருவதாகவும் இரண்டு வேளை சாப்பிட பழகிக்கொள்ளுங்கள் எனக் கூற ஒரு பிரதமர் தேவையா என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். அநுர திஸாநாயக்க மேலும் தெரிவிக்கையில், ‘இளைஞர்கள் ராஜபக்ஷக்களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தார்கள். மஹிந…
-
- 1 reply
- 220 views
-
-
டீசல் தட்டுப்பாடு- பேருந்து சேவை, நாளை இடம்பெறுவதில் சிக்கல்! நாடாளாவிய ரீதியாக இன்று மூன்றில் ஒரு பங்கு பேருந்துகளே சேவையில் ஈடுபட்டதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ள நிலையில், நாளைய தினம் பேருந்து சேவை இடம்பெறுவதில் நிச்சமயமற்ற தன்மை நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாகத் தெரிவித்த அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, டீசல் தட்டுப்பாடு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். நாடாவிய ரீதியாவுள்ள அரச மற்றும் அரச அனுசரனையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், மட்டுப்படுத்தப்பட்ட பேருந்து சேவை காரணமாக கொழும்பு உள…
-
- 0 replies
- 147 views
-
-
2,000 மெற்றிக் தொன், எரிவாயு ஏற்றிய கப்பல்... நாட்டை வந்தடைந்தது 2,000 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்றிய கப்பலொன்று இன்று (திங்கட்கிழமை) காலை இலங்கையை வந்தடைந்துள்ளது. லிட்ரோ எரிவாயு நிறுவனம் இதனை அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், இன்று எரிவாயு விநியோகிக்கப்படாது என அந்த நிறுவனம் முன்னதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1285605
-
- 0 replies
- 454 views
-
-
இலங்கை நெருக்கடி: 'மனித பேரழிவை ஏற்படுத்த முயற்சி' - விமல் வீரவங்ச குற்றச்சாட்டு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES (இலங்கை நாளிதழ்கள் மற்றும் இணையதளங்கள் சிலவற்றில் இன்று (06/06/2022) வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.) இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சிலர் மனித பேரழிவாக மாற்றுவதற்கு முயற்சிப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச குற்றம் சுமத்தியுளதாக, 'தமிழ் மிரர்' இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. கொழும்பில், நேற்று (மே 05) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்க…
-
- 0 replies
- 276 views
- 1 follower
-
-
சிறுவர்களிடையே பரவும்.... வைரஸ், காய்ச்சலுக்கான அறிகுறிகள்! கொழும்பு உட்பட பல பிரதேசங்களில் சிறுவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வைரஸினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் உடலில் சிவப்புக் கொப்புளங்கள் தோன்றுவதாக குழந்தை நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இந்நோய் இலகுவாகப் பரவும் என்றும் ஒரு தடவை தொற்றுக்கு உள்ளான சிறுவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது கொடிய நோயல்ல என்றும் 6 மாதம் முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு இந்நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்தோடு, பாதிக்கப்பட்ட சிறுவர்களு…
-
- 0 replies
- 117 views
-
-
இலங்கை தமிழர்களை... விடுதலை செய்ய வேண்டும் – தமிழக முதல்வரிடம், கோரிக்கை ! இந்தியாவின் சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கோரியுள்ளார். இதற்கான நடவடிக்கையை தமிழக முதலமைச்சர் எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழக சிறப்பு முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்கள் தங்களது விடுதலையை வலியுறுத்தி நேற்று 17ஆவது நாளாகவும் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். இந்நிலையில், அவர்களது உடல் நிலையை கருத்திற்கொண்டு தமிழக முதலமைச்சர் உடனடியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என …
-
- 0 replies
- 159 views
-
-
ஒரு கிலோ... அரிசியின் விலை, 500 ரூபாய்? நாட்டில் எதிர்வரும் சில வாரங்களில் ஒரு கிலோ அரிசியின் விலை 500 ரூபாயாக உயரும் நிலை காணப்படுவதாக அனுராதபுரம் மாவட்ட சிறிய மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். உணவுப் பற்றாக்குறை, நெல் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு போன்றவற்றால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் தமது தொழில்துறையும் பாரிய ஆபத்தில் உள்ளதாக சங்கத்தின் தலைவர் யு.கே.சேமசிங்க தெரிவித்துள்ளார். நடுத்தர மக்கள் தற்போது கிராமங்களில் இருந்து பத்து முதல் பதினைந்து மூட்டை நெல் கொள்வனவு செய்வதாகவும் சிறிய நெல் ஆலை …
-
- 0 replies
- 144 views
-
-
யாழில்.... அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின், கூட்டமைப்பு அங்குரார்ப்பணம்! அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பு யாழில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) யாழில் நடைபெற்றது. சமாதானம் சகவாழ்வு மற்றும் சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதற்கான பயணம் எனும் தொனிப்பொருளில்அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது வடக்கு, தெற்கு கிழக்கு, மலையகம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்க உள்ளனர். https://athavannews.com/2022/1285576
-
- 0 replies
- 153 views
-
-
சீமெந்து மூட்டை ஒன்றின் விலை... 4000 ரூபாயாக அதிகரிக்கும் ! எதிர்காலத்தில் சீமெந்து மூட்டை ஒன்றின் விலை 4000 ரூபாயை தாண்டும் என தேசிய கட்டுமான சங்கம் தெரிவித்துள்ளது. வரி அதிகரிப்புடன் சீமெந்து விலையும் அதிகரிக்கும் என அச்சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்துள்ளார். ஏற்கனவே சீமெந்து மூட்டை ஒன்றின் விலை 3000 ரூபாயை அண்மித்துள்ளதாகவும் தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டினார். இந்நிலையில் வரி அதிகரிப்பினால் சீமெந்து விலையில் மாற்றம் ஏற்படலாம் எனவும் அவர் கூறியுள்ளார். https://athavannews.com/2022/1285531
-
- 0 replies
- 124 views
-
-
நாட்டின்.. சமகால பொருளாதார நிலைமை, 21 ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்து... நாளை பிரதமர் விசேட உரை! பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளைய தினம் நாடாளுமன்றில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். நாட்டின் சமகால பொருளாதார நிலைமை மற்றும் அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பாகவே அவர் இந்த உரையின்போது விசேடமாக கருத்து வெளியிடவுள்ளார். பிரதமரின் உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதமும் நாளை மாலை வரை நடைபெறவுள்ளது. மேலும், நாளை கூடயுவுள்ள நாடாளுமன்றில் 695 பில்லியன் ரூபா குறைநிரப்பு பிரேரணையையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் சமர்ப்பிக்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளார். அத்தியாவசிய அரச சேவைகளைத் தடையின்றி தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்வதற்க…
-
- 0 replies
- 118 views
-
-
அமைச்சரவைக் கூட்டம் இன்று – 21வது திருத்தம் உட்பட பல விசேட பிரேரணைகள் முன்வைப்பு! அமைச்சரவைக் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது. இன்று அமைச்சரவையில் அரசியலமைப்பின் 21வது திருத்தம் உட்பட பல விசேட பிரேரணைகள் முன்வைக்கப்படவுள்ளன. நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இந்த பிரேரணையை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளார். மேலும் மின்சாரக் கட்டணத்தை திருத்துவதற்கான முன்மொழிவு மற்றும் விவசாயம் செய்யாமல் விடப்பட்டுள்ள தனியார் காணிகளை விவசாயிகளுக்கு கையளிப்பது தொடர்பான அமைச்சரவைப் பத்திரமும் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. விவசாய அமைச்சகம் இந்த திட்டத்தை செயற்படுத்தவுள்ளது. https://athavan…
-
- 0 replies
- 100 views
-
-
டீசல் தட்டுப்பாடு காரணமாக... 20% தனியார் பேருந்துகளே, இன்று இயங்கும்: கெமுனு விஜேரத்ன டீசல் தட்டுப்பாடு காரணமாக மொத்த தனியார் பேருந்துகளில் குறைந்தது இருபது வீதமான (5,000) பேருந்துகளே நாட்டில் இன்று இயங்கும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, இந்த இக்கட்டான நேரத்தில் மொத்த பேருந்துகளில் 50வீதம் (18,000) மட்டுமே சேவையில் உள்ளதாக குறிப்பிட்டார். மேலும் டீசலைப் பெற்றுக்கொள்வதற்கு பேருந்துகளை நீண்ட வரிசையில் நிறுத்த வேண்டியுள்ளதெனவும் இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்கள் தனியார் பேருந்துகளுக்கு எரிபொருளை விநியோகித்த போதிலும் இன்…
-
- 0 replies
- 150 views
-
-
அரச ஊழியர்களுக்கும் வெளிநாடு செல்லும் வாய்ப்பு - அமைச்சர் தினேஷ் குணவர்தன தொழில் அல்லது வேறு எந்த நோக்கத்திற்காகவும் வெளிநாடு செல்ல விரும்பும் அரச உத்தியோகத்தர்களுக்கு ஐந்தாண்டு கால சம்பளமில்லாத விடுமுறை திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இது குறித்து ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செய்தியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அரச ஊழியர்கள் ஐந்தாண்டுகளின் முடிவில் சம்பளம் இல்லாத விடுமுறை காலத்தை பூர்த்தி செய்ததன் பின்னர் சகல சலுகைகளுடனும் அவர்களின் பதவியுயர்வு மற்றும் தர…
-
- 8 replies
- 383 views
- 1 follower
-
-
லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலைகள் அதிகரித்தன !! லாஃப்ஸ் உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி 12.5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 6,850 ரூபாய் என்றும் 5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 2740 ரூபாய் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் முதல் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க எதிர்பார்ப்பதாக லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. https://athavannews.com/2022/1285491
-
- 12 replies
- 1k views
-
-
கனடாவில் உள்ள தமிழ் அன்பர்கள் இருவரால், யாழ். போதனா வைத்தியசாலைக்கு... மருந்துப் பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது! யாழ் போதனா வைத்தியசாலையில் தற்போது நிலவும் மருந்துகளின் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் முகமாக மருந்துப் பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. வைத்தியசாலையில் தற்போது நிலவும் மருந்துகளின் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் முகமாக கனடாவில் உள்ள தமிழ் அன்பர்கள் இருவரால் 260 போத்தல் பெட்டடீன் மருந்தும், குழந்தைகளுக்கான பரசிற்றமோல் சிறப் 360 போத்தல்களும் நன் கொடையாக இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கப்பட்டது. இந் நன்கொடையினைத் தக்க தருணத்தில் மனமுவந்து தந்தமைக்கு வைத்தியசாலைச் சமூகம் சார்பாக நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் ச…
-
- 23 replies
- 1.1k views
- 1 follower
-
-
இவ்வாண்டு நடந்து முடிந்த காபொத பரீட்சை வரலாறில் இல்லாத அளவுக்கு கடுமையானது என்பதனை ஏற்றுக் கொள்வதாக பரீட்சை ஆணையர் தெரிவித்தார். மேலும், கொடுப்பனவுகள் குறைவானது என, மேல்பார்வையாளர்கள் வர மறுத்ததாகவும் பின்னர் அதனை சமாளித்தாகவும் தெரிவித்தார். பரீட்சை காலத்தில், மாணவர்கள் குடை பிடித்த வண்ணம் பரீட்சை எழுதிய படங்கள் சமூக வலைத்தளங்களில் வந்தது குறிப்பிடத்தக்கது.
-
- 6 replies
- 633 views
-
-
21 ஆவது திருத்த வரைவு இன்று இறுதியாகிறது : நாளை அமைச்சரவையில் : இரட்டைக்குடியுரிமை நீக்கத்தில் மாற்றமில்லை - நீதி அமைச்சர் விஜயதாச (ஆர்.ராம்) நிறைவேற்று அதிகாரமுறைமையை பகுதியளவில் குறைப்பதற்கான 21ஆவது திருத்தச்சட்ட மூலத்திற்கான வரைவு இன்றையதினம் இறுதி செய்யப்படவுள்ளதாக நீதி, சிறைச்சாலை நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ வீரகேசரிக்குத் தெரிவித்தார். அத்துடன் இவ்வாறு செய்யப்படும் வரைவானது நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவை அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிட்ட அவர் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்துவதை தடுக்கும் ஏற்பாடு உள்வாங்கப்படும் என்றும் உறுதிபடத் தெரிவித்தார். …
-
- 1 reply
- 479 views
-
-
தமிழ் கட்சிகள்... ஒருமித்த முடிவை, எட்டுவதற்காக.... நாளை ஒன்றிணைகின்றன. அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் குறித்து ஒருமித்த முடிவை எட்டுவதற்காக தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றுகூடி கலந்துரையாடவுள்ளன. நாளை திங்கட்கிழமை இடம்பெறவுள்ள குறித்த கலந்துரையாடல் இணைய வழி ஊடாக இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இலங்கை தமிழரசு கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப்., புளொட், டெலோ, தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் தமிழ்த் தேசியக் கட்சி என்பன கூடி இது குறித்து கலந்துரையாடியிருந்தன. இருப்பினும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறும் கூட்டத்தில் எட்டப்படும் முடிவுகளை வைத்து தாம் ஒரு இணைக்கப்பட்டிருக்கு வர அன்றைய தினம் முடிவு செய்தனர். அதன்படி பிரதமர் தலைமைய…
-
- 0 replies
- 311 views
-
-
புதிய நியமனங்கள் வழங்கப்பட்ட போதிலும்... நாட்டின் நிலைமை, மோசமடைந்து வருகின்றது – சஜித் குற்றச்சாட்டு. ஜனாதிபதியை பதவி விலகுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் பிரதமர் பதவியை ஏற்று நாட்டை ஆட்சி செய்ய விரும்பவில்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பதவியை இராஜினாமா செய்த பின்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இரத்து செய்தால் பிரதமர் பதவியை ஏற்கத் தயார் என்றும் அவர் கூறியுள்ளார். அம்பலாங்கொடையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய சஜித் பிரேமதாச, மக்களின் விருப்பத்திற்கு மாறாக நடக்கத் தயாராக இல்லை என்றும் தெரிவித்துள்ளார். புதிய நியமனங்கள் வழங்கப்பட்ட போதிலும்…
-
- 0 replies
- 160 views
-
-
இந்த வருடத்தில்... கடனை திருப்பிச் செலுத்த, "5 பில்லியன் டொலர்கள்" வேண்டும் என்கின்றார் ரணில் ! இவ்வருடத்தில் கடன் மீள் செலுத்துகைக்காக அரசாங்கம் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை எதிர்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்தோடு வெளிநாட்டுக் கையிருப்பை வலுப்படுத்துவதற்காக மேலும் ஒரு பில்லியன் டொலர்களை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார். வர்த்தக சம்மேளனங்களின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதேவேளை சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னெடுக்கப்பட்டுவரும் கலந்துரையாடல்கள் இம்மாத இறுதியில் முடிவிற்குக் கொண்டுவரப்படும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். அத்தோடு நி…
-
- 0 replies
- 221 views
-