Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய... சுமார் 500 கொள்கலன்கள், கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ளன. அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய சுமார் 500 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ளன. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். அத்தியாவசியப் பொருட்களை திறந்த கணக்கு முறையின் ஊடாக இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உணவுப் பாதுகாப்பு தொடர்பான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் இது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளதாகவும் அவர் கூற…

  2. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபையின் தலைவர்... இராஜினாமா இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபையின் தலைவர் கிர்மாலி பெர்னாண்டோ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும் கலந்துரையாடுவதற்கும் அமைச்சரை சந்திக்க முடியவில்லை எனக் கூறி, அவர் இன்று தனது இராஜினாமா கடிதத்தை சுற்றுலாத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவிடம் கையளித்துள்ளார். புதிய தலைவர் மற்றும் பணிப்பாளர் சபையை நியமிக்க அமைச்சர் உத்தேசித்துள்ள நிலையில், அபிவிருத்திகளை மீளாய்வு செய்வதற்கும், பின்பற்றப்பட்ட சிறந்த நடைமுறைகளுக்கு வழிகாட்டுவதற்கும் அமைச்சரை சந்திக்க முடியாமல் போனது வருத்தமளிக்கிறது என அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார். மே 21 மற்றும் 23…

  3. (அஷ்ரப் ஏ சமத்) சுற்றாடல்த்துறை அமைச்சா் பொறியியலாளா் நசீர் அஹமட் இன்று (24) பத்தரமுல்லையில் உள்ள சுற்றாடல் அமைச்சில் வைத்து தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டாா். இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளா் வைத்தியா் அனில் ஜெயசிஙக், மற்றும் பாராளுமன்ற உறுப்பிணர்களான அலிசப்றி ரஹீம், காதா் மஸ்தான், முஸாரப் ஆகியோறும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனா. இங்கு கருத்து தெரிவித்த அமைச்சா். தனக்கு இந்த அமைச்சு ஏறகனவே 20 நாட்களுக்கு முன்பு தரப்பட்டது. தற்போதைய அமைசச்சரவையில் இளம் அமைச்சா்கள், பல கட்சி சாா்ந்தவா்கள் உள்ளனா். இந்த நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைக்கு தன்னால் எடுக்கக வேண்டிய சகல உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்குவேன்.…

    • 5 replies
    • 464 views
  4. இலங்கையில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு: ஆட்டோ கட்டணம் 1 கி.மீ.க்கு ரூ.100 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பெட்ரோல் டீசல் விலை (இன்று இலங்கையில் வெளியான நாளிதழ்கள், இணைய தளங்களில் வெளியான செய்திகளில் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்). இலங்கையில் பெட்ரோல் டீசல் விலையை மறுபரிசீலனை செய்து உயர்த்தியுள்ளதாக இலங்கை ஆற்றல்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளதாக நியூஸ்ஃபர்ஸ்ட் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அமைச்சரவை ஒப்புதலுக்கு பிறகு மறுசீரமைக்கப்பட்ட விலைப்பட்டியலை அமைச்சர் வெளியிட்டார். அதன்படி, பெட்ரோல் விலை ரூபாய் 450 ஆகவும…

  5. இந்திய நிவாரணப் பொதியில்... 20,000 பொதிகளை, கிளிநொச்சி மக்களுக்கு... வழங்க, அரசாங்கம் தீர்மானம்! இலங்கையில் உள்ள குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இந்தியா வழங்கும் நிவாரணப் பொதியில் இருந்து 20,000 பொதிகளை கிளிநொச்சி பிரதேச மக்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். தமிழ்நாட்டு மக்களால் வழங்கப்படும் இந்த நிவாரணப் பொதியில் சுமார் 40 மில்லியன் பெறுமதியான உணவுப் பொட்டலங்கள் அடங்கியுள்ளதுடன், கிளிநொச்சி மக்களின் பொருளாதார வறுமை குறித்து அரசாங்கம் முன்னரே உணர்ந்துகொண்டதன் விளைவாக 20,000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொதி வழங்கப்படவுள்ளதாக அரசாங்க அதிபர் கூறினார். இந்த நிவாரணப் பொதிகளை வழங்குவதற்க…

  6. நிதி அமைச்சராக கோட்டாபய ராஜபக்ஷ செயற்படுவார் - அமைச்சரவைப் பேச்சாளர் நிதி அமைச்சர் பதவிக்கு அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படும் வரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிதி அமைச்சராக செயற்படுவார் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி அமைச்சரவை கலைக்கப்பட்ட பின்னர் இலங்கையில் இதுவரை நிதியமைச்சர் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில், முன்னாள் நிதியமைச்சர் அலி சப்ரி மீண்டும் நிதியமைச்சராக நியமிக்கப்படுவதற்கான அழைப்பை அவர் நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவின் பதவி இன்னும் வெற்றிடமாகவே இருப்பதாக தாம் நம்புவதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ …

    • 3 replies
    • 393 views
  7. புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் உதவிகளை எதிர்பார்ப்பதாக பிரதமர் தெரிவிப்பு SayanolipavanMay 24, 2022 நாட்டின் தற்போதைய பொருளாதாரம், குறிப்பாக உணவு நெருக்கடியைப் போக்குவதற்கு புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் உதவிகளையும் நாம் எதிர்பார்க்கின்றோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். ‘நாடு தற்போதைய நிலைமையில் மிகப் பெரிய உணவு நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. இந்த நிலையில் வெளிநாடுகள், சர்வதேச அமைப்புக்களின் உதவிகளை மட்டுமன்றி புலம் பெயர் தமிழ் மக்களின் உதவிகளையும் எதிர்பார்க்கின்றோம். மக்களுக்கு உதவுவதற்காகச் சில குழுக்களை நியமித்துள்ளோம். அந்தக் குழு…

    • 5 replies
    • 619 views
  8. மட்டக்களப்பில் எரிவாயு கோரி மக்கள் போராட்டம் ShanaMay 24, 2022 மட்டக்களப்பு நகரில் பயினியர் வீதியில் எரிவாயு கோரி நேற்று (23) பிறபகல் லொறியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த வெள்ளிக்கிழமை எரிவாயுவை பெறுவதற்காக சுமார் 800 பேர் பயினியர் வீதியில் வரிசையில் காத்திருந்தனர். அவர்களில் 400 பேருக்கு அன்றைய தினம் எரிவாயுக்கள் வழங்கப்பட்டன. வரிசையில் காத்திருந்த ஏனையவர்கள், எரிவாயுவை பெறாது தொடர்ந்து மாலை வரை காத்திருந்து வீடுகளுக்குச் சென்றனர். மறுநாள் சனிக்கிழமை எரிவாயு வழங்கப்படுமென அதிகாலை 3 மணி தொடக்கம் வீதியில் வெற்றுச் சிலிண்டர்களுடன் மக்கள் காத்திருந்தனர். ஆனால், அன்றும் எரிவாயு வழ…

  9. தானியங்களுக்கு, தட்டுப்பாடு: மூடப்பட்டது ‘திரிபோஷா’ தொழிற்சாலை ! தானியங்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக அரசாங்கத்திற்கு சொந்தமான ‘திரிபோஷா’ தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவே திரிபோஷா ஆகும். சோளம் மற்றும் சோயா விநியோகம் முற்றிலும் தடைபட்டுள்ள நிலையில் திரிபோஷவை உற்பத்தி செய்வதில் பிரச்சினை எழுந்துள்ளது. இருப்பினும் இந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்குள் சோளம் அறுவடை செய்யப்பட்டவுடன் புதிய இருப்புகளை பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளனர். இதேவேளை நாடு முழுவதும் உள்ள கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளை ஊட்டச்சத்…

  10. குறைந்த வருமானம் பெறும்... 33 இலட்சம் பேருக்கு, நிவாரணம் – அரசாங்கம்! அதிகரிக்கின்ற பொருள் விலையேற்றம் மற்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள சமூர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் 33 இலட்சம் பேருக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தின் கீழ், இம்மாதம் முதல் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு மாதாந்தம் 5000 ரூபாய் முதல் 7500 ரூபாய் வரையிலான நிதியுதவியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 17 இலட்சத்து 65 ஆயிரம் சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்கள், 7 இலட்சத்து 30 ஆயிரம் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மற்றும் முப்பத்து மூன்று இலட்சம் (3300000) முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோயாளர்களும் இந்த பலனை அனுபவிக்கும் வகையில்…

  11. கடல் வழியாக... தப்பி செல்ல முயன்ற, 67 பேர் திருகோணமலையில் கைது! சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக தப்பிச் செல்ல முயன்ற 67 பேர் திருகோணமலையில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சாம்பல்தீவு மற்றும் திருகோணமலை கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 30 முதல் 40 வயதுடைய 12 ஆண்களுடன் கைது செய்யப்பட்டதோடு அவர்களிடம் இருந்து இரண்டு முச்சக்கர வண்டிகள், ஒரு கெப் மற்றும் ஒரு வேன் கைப்பற்றப்பட்டுள்ளது இதனை அடுத்து சந்தேகத்திற்கிடமான முறையில் பல நாட்களாக இருந்த மீன்பிடி இழுவை படகு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 45 ஆண்கள், 07 பெண்கள் மற்றும் 03 குழந்தைகள் உட்பட 03 …

  12. கோட்டா கோ கம... தாக்குதல் சம்பவம் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ CIDயில் முன்னிலை! வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்று முன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 09ஆம் திகதி கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கமவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, கடந்த மே மாதம் 09ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக இதுவரையில், ஆயிரத்து 591 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு, கைது செய்யப்பட்டவர்களில் 719 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் …

  13. எரிசக்தி நெருக்கடியை... சமாளிக்க, வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு ஊக்குவிப்பு! எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க வீட்டிலிருந்து வேலை செய்வது ஊக்குவிக்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எரிபொருளின் பயன்பாட்டைக் குறைக்கவும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வீட்டிலிருந்து வேலை செய்வது ஊக்குவிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்தியாவசியமற்ற ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்குமாறு அரச நிறுவனங்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1283539

  14. 21வது திருத்தத்தை... தாம் விரும்பியவாறு, கொண்டுவர அரசாங்கம் முயற்சி – சஜித் கடுமையான குற்றச்சாட்டு. சர்வஜன வாக்கெடுப்புக்கு மாறாக அரசியலமைப்பின் 21வது திருத்தத்தை தாம் விரும்பியவாறு கொண்டுவர இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது என சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கவும், 19 ஆவது திருத்தத்தை வலுப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தோடு 20 ஆவது திருத்தத்தை இரத்து செய்யவும், ஆணைக்குழுக்களை சுயாதீனமாக்கும் முயற்சிகளையும் அரசாங்கம் கைவிட கூடாது என எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார். நேற்று சமூக வலைதளத்தில் காணொளி ஒன்றினை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ள அவர், அரசாங்கத்தின் மோசடி நடவடிக்கைகள் நி…

  15. அரசாங்க ஊழியர்களுக்கு... புதிய சுற்றறிக்கை! அத்தியாவசியமான ஊழியர்களை மாத்திரம் பணிக்கு அழைக்கும் அதிகாரத்தை திணைக்களத் தலைவர்களுக்கு வழங்கி புதிய புதிய சுற்றறிக்கை வெளியிடப்படும் என பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை (24) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த சுற்றறிக்கை வெளியிடப்படும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இந்த சுற்றறிக்கை பரீட்சைகள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு பொருந்தாது என்றும் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1283526

  16. 21ஆவது திருத்தச் சட்டத்தை... அனைவரது ஒத்துழைப்போடும், நிறைவேற்ற எதிர்பார்ப்பு – ரணில் அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டத்தை முன்வைத்து அனைவரது ஒத்துழைப்போடும் அதனை நிறைவேற்றுவதற்கு எதிர்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள அவர், “அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பான குழு கூடியது. அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் வரைபு குறித்து கலந்துரையாடி அமைச்சரவையில் முன்வைக்க தீர்மானிக்கப்பட்டது. மாலையில் இந்த வரைபு அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களிடமும் இ…

  17. முச்சக்கர வண்டி, கட்டணத்திலும்... அதிகரிப்பு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலை இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை முதல் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், முச்சக்கர வண்டி கட்டணத்தில் அதிகரிப்பு ஏற்படவுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் விசனம் வெளியிட்டுள்ளது. இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த அந்த சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர, கடந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் எரிபொருள் விலைகள் அதிகரித்தபோது முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். அதன்போது பயணிகளுடன் கலந்துரையாடி கட்டணத்தை தீர்மானிக்குமாறு முச்சக்கரவண்டி நடத்துனர்களிடம் கோரிக்கை விடுத்ததாகவும் தற்போது அந்த பேச்சுவார்த்…

  18. எரிபொருள் விலை அதிகரிப்பின் எதிரொலி – பேருந்து கட்டணங்களும் அதிகரிப்பு! எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய பேருந்து போக்குவரத்து கட்டணம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கான கட்டணங்களில் திருத்தத்தை ஏற்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) நண்பகல் 12.00 மணிக்குப் பின்னர் பேருந்து கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் (LPBOA) தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்த அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 5 ரூபாயால் அதிகரிக்கப்படுமென குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2…

  19. சமையல் எரிவாயு விநியோகம், இடம் பெறமாட்டாது: வரிசையில் காத்திருக்க வேண்டாம் – லிட்ரோ நாட்டில் இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) சமையல் எரிவாயு விநியோம் இடம்பெறமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்காரணமாக விற்பனை நிலையங்களில் எரிவாயுவுக்காக காத்திருப்பதை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் அந்த நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை, இரண்டு எரிவாயு கப்பல்களுக்கான 6.5 மில்லியன் அமெரிக்க டொலர் கொடுப்பனவு நேற்று செலுத்தப்பட்டுதாக அந்த நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். குறித்த கப்பல்கள் மூலம் 7 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் எரிவாயு நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளது. இதன் முதலாவது கப்பல் 3 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் எரிவாயுடன் எதிர்வர…

  20. வடக்கிலும்... 4ஆம் கட்ட தடுப்பூசி, செலுத்தும் பணிகள் முன்னெடுப்பு! வடக்கிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில், 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு 4ஆம் கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் வடக்கிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மூன்றாம் தடுப்பூசியைப் பெற்றவர்கள், 3 மாதங்களுக்குப் பின்னர் நான்காம் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1283503

  21. டக்ளஸ் தேவானந்தா, உட்பட... மேலும் 08 அமைச்சர்கள், பதவியேற்பு. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் புதிய அரசாங்கத்தின் மிகுதி அமைச்சர்கள் இன்று திங்கட்கிழமை பதவியேற்றுள்ளனர். ஏற்கனவே 13 அமைச்சரவை அமைச்சர்கள் இருவேறு தினங்களில் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். இந்நிலையில் இன்று புதிதாக 10 அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். அதன்படி சுதந்திரக் கட்சியின் நாடளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர விவசாயம், வனவிலங்கு மற்றும் வனத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். கெஹலிய ரம்புக்வெல்ல நீர் வழங்கல், ரொஷான் ரணசிங்க – நீர்ப்பாசனம், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சராகவும் விதுர விக்ரமநாயக்க பௌத…

    • 14 replies
    • 1.1k views
  22. ரணில் தலைமையிலான... அரசாங்கம், பொருளாதார பிரச்சினைக்கு... தீர்வு காணும் – அசாத் சாலி. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம், நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காணும் என்ற நம்பிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், புலம்பெயர் இலங்கையர்களும் உதவ முன்வர வேண்டுமென தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல்மாகாண முன்னாள் ஆளுநருமான அசாத் சாலி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,“அந்நியச்செலாவணி வருமானத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியை சரிசெய்வதற்கு, நாட்டிற்குள் அதிகளவு டொலர் வரவேண்டும். புலம்பெயர் இலங்கையர்கள், வௌிநாடுகளில் இதைச் சேகரித்து இலங்கை மத்திய வங்கிக்கு அனுப்பும் முயற்சிகளில் இறங்குவது அவசியம். இவ்விடயத்தில், குறுகிய மனநிலையில் செயற்படக்…

    • 1 reply
    • 213 views
  23. மருந்துகள் பற்றாக்குறையால்... மரணங்கள், நிகழலாம் – மருத்துவர்கள் எச்சரிக்கை! இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மருந்து தட்டுப்பாட்டால் விரைவில் மரணங்கள் நிகழலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். அத்தியாவசிய மருந்துகள் இல்லாததால் மருத்துவர்கள் உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகளை ஒத்திவைக்க வேண்டியிருந்தது என்று மருத்துவர்களை மேற்கோள்காட்டி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 80 வீதமான மருந்துகள் இலங்கையினால் இறக்குமதி செய்யப்படுகின்றன. எனினும், அந்நியச் செலாவணி தட்டுப்பாடு காரணமாக, மருந்து இறக்குமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல மருந்துகளுக்கு சந்தையில் தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மஹரகம வைத்தியசாலையில…

    • 1 reply
    • 201 views
  24. எரிபொருள் விலைகள்... இன்று நள்ளிரவு முதல், அதிகரிப்பு? வெளியாகிறது... அறிவிப்பு? எரிபொருள் விலைகள் இன்று(திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய ஒக்டென் 92 ரக பெற்றோல் லீட்டர் ஒன்றின் புதிய விற்பனை விலை 420 ரூபாய் என கூறப்படுகின்றது. அத்துடன், ஒக்டென் 95 ரக பெற்றோல் லீட்டர் ஒன்றின் புதிய விற்பனை விலை 450 ரூபாய் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விற்பனை விலை 400 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறே, சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விற்பனை விலை 445 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த உத்தியோகப்பூர்வ அறிவித்தல் இன்னும் சற்று நேரத்தில் வெளியிட…

  25. மக்கள் ஆதரவளிக்கா விட்டால்... எரிபொருள் விநியோகம், இடைநிறுத்தப்படும் என எச்சரிக்கை! மக்கள் ஆதரவளிக்காவிட்டால் எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் உப தலைவர் குசும் சந்தநாயக்க இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று இரவு 10 மணிக்கு மூடப்படவிருந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 2 மணி வரை எரிபொருள் விநியோகம் செய்யப்பட்ட நிலையில், வரிசையில் நின்றவர்கள் பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் கீழ்ப்படியாமல் 3.30 மணி வரை எரிபொருளை விநியோகிக்குமாறு பலவந்தமாக கேட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேநிலை நீடித்தா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.