Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பிரிவினை காட்டாது... அனைவருக்கும், ரணில் விக்கிரமசிங்க.. சிறந்த சேவை புரிவார் – விஜயகலா ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்த வாக்களிக்காத மக்கள்என்ற பிரிவினை காட்டாது அனைவருக்கும் நாட்டின் பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க சிறந்த சேவை புரிவார் என முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் யாழ் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் புதிதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி ஏற்றமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது நாடுபூராகவும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்த வாக்களிக்காத மூவின மக்களுக…

    • 4 replies
    • 315 views
  2. ஆரியகுளத்தில்... வெசாக் கூடு : இராணுவத்தின் கோரிக்கை... நிராகரிப்பு. ஆளுநர்... எச்சரிக்கை ! ஆரியகுளத்தில் வெசாக் கூடு கட்டுவதற்கு இராணுவத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கை யாழ்ப்பாணம் மாநகர சபையால் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து, ஆரியகுளத்தில் வெசாக் கூடு கட்டுவதற்கு அனுமதிக்காவிட்டால் யாழ் மாநகர சபையை கலைக்க நேரிடும் என வடக்கு மாகாண ஆளுநரால் எச்சரிக்கப்பட்டது. அத்தோடு ஆரியகுளத்தில் வெசாக் கூடு கட்டுவதற்கு இராணுவத்தின் கோரிக்கைக்கு உடனடியாக அனுமதியை வழங்குமாறும் வடக்கு மாகாண ஆளுநர் கட்டளையிட்டார். எனினும் நேற்றைய தினம் அவசர அவசரமாக மாநகர சபை உறுப்பினர்கள் இணைய வழி ஊடாக சந்தித்து இந்த விடயம் குறித்து கலந்துரையாடினர். இதன்போது சபை கலைக்கப்பட்ட…

  3. புதுக்குடியிருப்பை சென்றடைந்த தமிழினப்படுகொலைக்கு நீதிகோரிய ஊர்தி ! முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலைக்கு நீதிகோரிய ஊர்தி பவனி புதுக்குடியிருப்பு நகரை சென்றடைந்துள்ளது. முன்னதாக இன்று காலை கிளிநொச்சியிலிருந்து ஆரம்பமான ஊர்தி பரந்தன் முல்லைத்தீவு வீதி வழியாக சென்று புதுக்குடியிருப்பு நகரை அடைந்து அங்கிருந்து 2009 ஆம் ஆண்டு இனப்படுகொலை உச்சம் பெற்ற புதுமாத்தளன் ,அம்பலவன் பொக்கணை , இரட்டைவாய்க்கால் சென்று அங்கிருந்து தற்போது கேப்பாபுலவு ஊடாக முள்ளியவளை சென்று முல்லைத்தீவு நகரை அடையவுள்ளது . https://www.virakesari.lk/article/127666

  4. யாழ். பல்கலையில் அஞ்சலி May 17, 2022 யாழ்ப்பாண பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில் யாழ். பல்கலைகழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாணவர்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினர். https://globaltamilnews.net/2022/176829

    • 2 replies
    • 526 views
  5. ‘கோட்டா கோ கம’ மீதான தாக்குதல் – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின், நாடாளுமன்ற உறுப்பினர்கள்... இருவர் கைது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக ஆகியோர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாகவே இவர்கள் இருவரும் செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள இருவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2022/1282355

  6. இலங்கையில்... "விடுதலைப் புலிகள்" தாக்குதல் நடத்தவிருப்பதாக, இந்திய புலனாய்வு பிரிவு தகவல்! தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் ஒன்றிணைந்து இலங்கையில் தாக்குதல்களை நடத்த தயாராகி வருவதாக... இந்திய புலனாய்வு பிரிவுகள், எச்சரிக்கை விடுத்துள்ளதாக தி இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. தீவிரமான வன்முறைப் போராட்டங்களுக்கு மத்தியில் இலங்கை இரண்டு முறை அவசரகால நிலைமையை அறிவித்துள்ளன. இந்தநிலையில் சர்வதேச தொடர்புகளைக் கொண்ட புலம்பெயர் தமிழர்களின் ஒரு பிரிவினர், போராட்டக் காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்து வரும் மோதல்களில் தங்கள் இருப்பை உறுதிப்படுத்த முயல்வதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிப்பதாக குறித்த செ…

  7. எஞ்சியுள்ள அமைச்சர்கள்... இன்று மாலை, ஜனாதிபதி முன்னிலையில்... பதவிப் பிரமாணம்? எஞ்சியுள்ள அமைச்சரவை அமைச்சர்கள் இன்று மாலை ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட பல சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவை 18 உறுப்பினர்களுடன் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், 18 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், தினேஷ் குணவர்தன, பிரசன்ன ரணதுங்க மற்றும் காஞ்சன…

  8. அஜித் ராஜபக்ச... பிரதி சபாநாயகராக, தெரிவு இரகசிய வாக்கெடுப்பில் 31 வாக்குகள் வித்தியாசத்தில் அஜித் ராஜபக்ஷ பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார். நாடளுமன்றில் இன்று இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் அஜித் ராஜபக்ஷவிற்கு 109 வாக்குகளும் ரோஹினி கவிரத்னவிற்கு 78 வாக்குகளும் கிடைத்தன. இதேவேளை செல்லுபடியற்ற வாக்குகள் 25 பதிவாகியதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். வாக்கெடுப்பு இடம்பெற்றால் சுதந்திரக் கட்சியினர் வாக்கு சீட்டில் குறுக்கு கோடிட்டு பதிவு செய்வார்கள் என மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1282289

  9. முன்னாள் பிரதமர் மஹிந்த, மற்றும் நாமல்... நாடாளுமன்றத்திற்கு, சமூகமளிக்கவில்லை. முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்திற்கு சமூகமளிக்கவில்லை. பிரதி சபாநாயகர் தெரிவிற்கான இரகசிய வாக்கெடுப்பு தற்போது இடம்பெற்றுவருகின்ற நிலையில் அவர்கள் சமூகமளிக்கவில்லை என அறிவிக்கப்பட்டது. கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற பதற்றநிலையை அடுத்து மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலை கடற்படை தளத்தில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1282278

  10. ஏழு, நாடாளுமன்ற உறுப்பினர்களை... விசாரிக்க, பொலிஸார் திட்டம் காலி முகத்திடல் அமைதியின்மை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 07 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட வேண்டியுள்ளதாக சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சபாநாயகருக்கு இது தொடர்பில் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். காலி முகத்திடல் அமைதியின்மை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 07 பேர் உள்ளிட்ட 25 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு சட்டமா அதிபரினால் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு நேற்று பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது. இதற்கமைய குறித்த 7 நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் கட்டாயமாக வாக்குமூலம் பதிவு செ…

  11. யாழில்... முள்ளிவாய்க்கால் கஞ்சி, வழங்கும் நிகழ்வு! தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் அலுவலகத்துக்கு முன்பாக காலை 9 மணியளவில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது அவ்வமைப்பின் தலைவர் பொ.ஐங்கரநேசன் மற்றும் சக உறுப்பினர்களால் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்தவர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்துடன் தயாரிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வீதியால் பயணித்த பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. https://athavannews.com/2022/1282301

  12. கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்திடல் கலவரம் – இதுவரையில் 664 பேர் கைது! கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்திடல் பகுதிகளில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற கலவரம் தொடர்பாக இதுவரையில் 664 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் இது தொடர்பாக 258 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 67 பேர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 43 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்ட மற்றுமொரு குழுவினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்ப…

  13. பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையான... மக்கள் பேரணி திருகோணமலையில், ஆரம்பம்! இன விடுதலையை வேண்டி பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையான மக்கள் பேரணி ஒன்று கடந்த 15ஆம் திகதி பொத்துவிலில் இருந்து ஆரம்பமாகி நேற்று (திங்கட்கிழமை) திருகோணமலையை வந்தடைந்தது. அதனைந்தொடர்ந்து இன்றைய தினம் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் ஏற்பாடு செய்த குறித்த பேரணி திருகோணமலை சிவன் கோவிலுக்கு முன்பாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது குறித்த பேரணி திருகோணமலையிலிருந்து ஆரம்பமாகி நிலாவெளி,குச்சவெளி, புல்மோட்டை ஊடாக தென்னமரவாடியை சென்றடைந்து அங்கிருந்து வவுனியா ஊடாக முள்ளிவாய்க்காலை சென்றடையவுள்ளது. அத்துடன் போரணியின் ஆரம்பத…

  14. பொதுஜன பெரமுன – பிரதமர் ரணிலுக்கு, இடையில்... வெடித்தது மோதல் ! பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் முதலாவது பனிப்போர் தற்போது ஆரம்பித்துள்ளது. ஒரு நாளை வீணடிப்பதைத் தவிர்க்க, ஒரு பெண் நாடாளுமன்ற உறுப்பினரை பிரதி சபாநாயகராக ஏகமனதாக நியமிக்குமாறு ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டார். இருப்பினும் ஆண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை குறித்த பதவிக்காக பொதுஜன பெரமுன மும்மொழிந்துள்ள நிலையில் தற்போது இரகசிய வாக்கெடுப்பு இடம்பெற்றுவருகின்றது. இதேவேளை நாடாளுமன்றில் இன்று பலரும் வாக்கெடுப்பை நடத்தாமல் கட்சித் தலைவர்கள் கூடி ஏகமனதாக ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் என கோரியிருந்தனர். இருப்பினும் பிரதமர் ரணில் விக்ரமசிங்…

  15. நாடாளுமன்ற வளாகத்திற்குள்... அந்நியர்கள் குழுவொன்று, பிரவேசித்துள்ளது – சன்ன ஜயசுமன நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் அல்லாத அந்நியர்கள் குழுவொன்று நாடாளுமன்ற வளாகத்திற்குள் பிரவேசித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் அல்லாத அந்நியர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்து தொலைபேசியில் புகைப்படங்களையும் காணொளிகளையும் எடுப்பதாக அவர் தெரிவித்தார். இதனால் சிலர் நாடாளுமன்றுக்குள் வருவதற்கு பயப்படுவதாகவும் எனவே, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை கவனத்திற்கொண்டு அவர்கள் குறித்து விசாரணைகளை …

    • 2 replies
    • 231 views
  16. வடக்கு , கிழக்கில் இருந்து... முள்ளிவாய்க்கால் நோக்கி பேரணி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு இம்முறை வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து பேரணி ஒன்றை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ”இன விடுதலையை தேடி முள்ளிவாய்க்காலை நோக்கி ” என்ற கருப்பொருளில் இடம்பெறும் இப்பேரணிகள் கிழக்கு மாகாணத்தில் இருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்படும். அத்தோடு வடக்கு மாகாணத்தில் இருந்து நாளை திங்கட்கிழமையும் ஆரம்பிக்கப்பட்டு மே 18 ஆம் திகதி இரண்டு பேரணிகளும் முள்ளிவாய்க்காலை சென்றடைந்து நினைவேந்தலில் பங்கேற்கவுள்ளது. யாழ் ஊடக மையத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்ப…

  17. பிரதி சபாநாயகர் பதவிக்கான... வாக்கெடுப்புக்கு, "9 மில்லியன் ரூபாய்" செலவாகும் – விமல் பிரதி சபாநாயகர் பதவிக்கான தேர்தலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எதிர்ப்பு தெரிவித்ததுடன், பணத்தை வீண் விரயம் செய்யாமல் இணக்கப்பாட்டுக்கு வருமாறு கேட்டுக்கொண்டார். தேர்தலை நடத்துவதற்கு சுமார் 9 மில்லியன் ரூபாய் செலவாகும் என்றும் அவர் கூறினார். நாடாளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் பதவிக்கு இருவரின் பெயர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்மொழியப்பட்டன. அதன்படி, ரோஹினி கவிரத்னவின் பெயரை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிந்ததோடு, அஜித் ராஜபக்ஷவின் பெயரை ஜி.எல்.பீரிஸ் முன்மொழிந்தார். இதனையடுத்து, பணம் மற்றும் நேரத்தை வீணடிப்பதை விடுத்த…

  18. ஜனாதிபதிக்கு... எதிரான, பிரேரணை: அவசரமாக... விவாதத்திற்கு, எடுத்துக் கொள்ள தீர்மானம் ! ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணையை அவசரமாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1282223

  19. தற்போதைய ஆட்சியில்... ஐக்கிய மக்கள் சக்தி, எந்தப் பதவியையும்... ஏற்காது – சஜித் பிரேமதாச ராஜபக்ஷ ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டம் தொடரும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப எடுக்க வேண்டிய முதல் நடவடிக்கை இதுவாகும் என அவர் தெரிவித்துள்ளார். ருவிட்டரில் இன்று (செவ்வாய்க்கிழமை) பதிவிட்டுள்ள அவர், தற்போதைய ஆட்சியில் ஐக்கிய மக்கள் சக்தியில் எவரும் எந்தப் பதவியையும் ஏற்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், ஸ்திரத்தன்மைக்காக அரசாங்கம் எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் தான் ஆதரிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்…

  20. பிரதி சபாநாயகர் பதவிக்கு... இருவரின் பெயர்கள், முன்மொழிவு! நாடாளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் பதவிக்கு இருவரின் பெயர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்மொழியப்பட்டுள்ளன. பிரதி சபாநாயகர் பதவிக்கு ரோஹினி கவிரத்னவின் பெயரை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிந்ததோடு, அதே கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இந்த யோசனையை ஆதரித்தார். இதேவேளை, அஜித் ராஜபக்ஷவின் பெயரை ஜி.எல்.பீரிஸ் முன்மொழிந்ததுடன், பண்டார பிரேரணையை உறுதிப்படுத்தினார். இதனையடுத்து, தற்போது வாக்கெடுப்பு ஆரம்பமாகவுள்ளது. https://athavannews.com/2022/1282230

  21. ரஞ்சித் சியம்பலபிட்டியவின்... இராஜினாமா, ஏற்றுக் கொள்ளப்பட்டது – சபாநாயகர் பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலபிட்டியவின் இராஜினாமாவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வு இன்று ஆரமபமாகிய நிலையிலேயே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை தெரிவித்தார். https://athavannews.com/2022/1282226

  22. வடக்கு, கிழக்கு... இணைந்த தாயகத்திலே, தமிழ் மக்களுக்கான உரிமையை... வழங்க வேண்டும் – அரியநேத்திரன் வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்திலே தமிழ் மக்களுக்கான உரிமையை வழங்க வேண்டும் என்ற அழுத்தத்தை இந்தியா உட்பட சர்வதேசம் இலங்கை அரசாங்கத்திற்கும் புதிய பிரதமருக்கும் கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் எற்பாட்டில் இடம்பெறும் பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையான பேரணியின் இரண்டாம் நாள் மட்டக்களப்பில் ஆரம்பித்த வேளையில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரர் நடத்திய இனப்படுகொலைக்க…

  23. புதிய அரசாங்கத்திற்கு... ஆதரவில்லை என்ற நிலைப்பாட்டில், மாற்றமில்லை – தேசிய மக்கள் சக்தி பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்ற நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. பல டீல்களுடன் அரசாங்கத்தை அமைக்கும் இந்த செயற்பாட்டை எதிர்ப்பதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார். எனவே அரசாங்கத்திலோ அல்லது அதன் வேலைத்திட்டங்களிலோ தாங்கள் ஒரு தரப்பினராக இருக்க மாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் அமரசூரிய தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், 21 வது திருத்தம் போன்ற முற்போக்கான நடவடிக்கைகளுக்கு தேசிய மக்கள் சக்தி ஆதரவினை வழங்கும் என்றும் அவர் கூறியுள்ளார். …

  24. கல்முனை நகரில்... முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி, வழங்கும் நிகழ்வு! முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் நான்காம் நாள் அனுஷ்டிப்பினை மேற்கொள்ளும் முகமாக கல்முனை நகரில் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜனின் ஏற்பாட்டில் முள்ளவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நேற்று (திங்கட்கிழமை) மேற்கொள்ளப்பட்டது. கல்முனை மாநகரசபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், க.கோடீஸ்வரன், முன்னாள் மாகாணசபை…

  25. புதிய அரசாங்கத்தில், அமைச்சுப் பதவி : மைத்திரியை சந்திக்கின்றார்... பிரதமர் ரணில் ! பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது மற்றும் அமைச்சுப் பதவிகளை ஒதுக்கீடு செய்வது குறித்து பிரதமரும் முன்னாள் ஜனாதிபதியும் கலந்துரையாடவுள்ளனர். இதேவேளை, சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட பல உறுப்பினர்கள் நேற்று பிரதமருடன் கலந்துரையாடியுள்ளனர். பிரதமருக்கும், மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பை தொடர்ந்து புதிய அரசாங்கத்தில் பதவிகளை வகிப்பது குறித்து முடி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.