ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
“அவசரகால சட்டம்... நாட்டின் பொருளாதாரத்திற்கு, மேலும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்”. -தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.- அவசரகால சட்டம் மீண்டும் பிரகடனப்படுத்தபட்டுள்ளதால் நாட்டின் பொருளாதாரத்திற்கு மேலும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. அத்தோடு அரசாங்கம் மக்களின் அமைதியான போராட்டங்களை நசுக்கும் முயற்சியினையே தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், அரசாங்கம் ஸ்திரத்தன்மையுடன் இருக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருந்தமையையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்…
-
- 0 replies
- 213 views
-
-
இன்றும்... மூன்று மணி நேரம், மின் துண்டிப்பு. நாடளாவிய ரீதியில் இன்று ( ஞாயிற்றுக்கிழமை ) மூன்று மணித்தியாலத்திற்கு அதிகளவான நேரம் மின் விநியோகத்தடையினை அமுல்படுத்துவதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, ‘ஏ’ முதல் ‘டபிள்யூ’ வரையான 20 வலயங்களில் முற்பகல் 9 மணி முதல் மாலை 5 வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலம் மின்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. அத்துடன், குறித்த வலயங்களில் மாலை 5மணி முதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் விநியோகத்தடையினை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1280653
-
- 0 replies
- 183 views
-
-
நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து தீர்மானிக்கவில்லை.. ஜனாதிபதிக்கு எதிரானதற்கு நிபந்தனையற்ற ஆதரவு. -தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.- அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிப்பது குறித்து இன்னும் முடிவு எட்டவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், இராசமாணிக்கம் சாணக்கியன் இதனை தெரிவித்துள்ளார். அதேநேரம், ஜனாதிபதிக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கும் என அவர் குறிப்பிட்டார். https://athavannews.com/2022/1280643
-
- 0 replies
- 211 views
-
-
காலிமுகத்திடலில்... 30ஆவது நாளாகவும், தொடரும்... எழுச்சிப் போராட்டம் கொழும்பு காலிமுகத்திடலில் அரசாங்கத்துக்கு எதிராக கடந்த 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று ( ஞாயிற்க்கிழமை ) 30 ஆவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் ‘கோட்டா கோ கம’ என்ற பெயர்ப்பலகையைக் காட்சிப்படுத்தியுள்ள போராட்டக்காரர்கள் அங்கு கூடாரங்களை அமைதது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலிமுகத்திடலில் ஜனாதிபதி கோட்டாபய மற்றும் அரசாங்கம் மொத்தமாக வெளியேற வேண்டி மக்கள் சிறப்பு பரிகாரங்களில் ஈடுபட்டனர் . மேலும் காளி அம்பாள் பூஜையின் சிறப்புப்…
-
- 0 replies
- 175 views
-
-
இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு... ஆதரவு – ஐக்கிய மக்கள் சக்தி ! இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான ஆதரவை வழங்க பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள யோசனைகளை நிறைவேற்றும் பட்சத்தில் அதற்கு ஆதரவை வழங்குவோம் என அக்கட்சி அறிவித்துள்ளது. நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியைத் தீர்க்க நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்ய வேண்டும் என சட்டத்தரணிகள் சங்கம் கூறியது. ஆகவே சட்டத்தரணிகள் சங்கம் சமர்ப்பித்த முன்மொழிவுகளின் அடிப்படையில் தற்போதைய நெருக்கடியைத் தீர்க்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க தயார் என ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. https://athav…
-
- 0 replies
- 116 views
-
-
அரசாங்கத்திற்கு எதிரான... நம்பிக்கையில்லா பிரேரணைக்கு, சுயாதீன குழு ஆதரவு அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க அரசாங்கத்தில் இருந்து விலகி தம்மை சுயாதீனமாக அறிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணை கடந்த வாரம் சபாநாயகரிடம் ஐக்கிய மக்கள் சக்தியினால் கையளிக்கப்பட்டது. இந்நிலையில் பிரேரணைக்கு ஆதரவளிக்க சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களும் முடிவு செய்துள்ளதால் அரசாங்கம் 109 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே காணப்படுகின்றது. இதேவேளை குறித்த 109 பேரில் பொதுஜன பெரமுனவின் மேலும் 10 உறுப்பினர்களும், இடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். h…
-
- 0 replies
- 106 views
-
-
‘இது, மட்டுமே... மிஞ்சியுள்ளது’ நாடாளுமன்ற வளாகத்தில்... "உள்ளாடைப்" போராட்டம்! ‘இதுமட்டுமே மிஞ்சியுள்ளது’ எனக் கூறி ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக உள்ளாடைப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள ‘ஹொரா கோ கம’ அருகே ஆர்ப்பாட்டக்காரர்கள் குழு இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ‘இதுமட்டுமே மிஞ்சியுள்ளது’ என்ற கோஷங்களோடும் பதாதைகளோடும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. குறித்த பகுதியில் ஆண்கள், பெண்களது உள்ளாடைகள்... தொங்கவிடப்பட்டு, மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2022/1280464
-
- 17 replies
- 1.3k views
-
-
சஜித் பிரதமராக பதவியேற்க அழைப்பு விடுக்கப்படலாம் -சி.எல்.சிசில்- மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை அரசாங்கத்தை அமைக்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை அமைக்குமாறு அனைத்துக் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுப்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமயத் தலைவர்கள், மல்வத்தை, அஸ்கிரிய பீடாதிபதிகள் உள்ளிட்ட சிவில் அமைப்புகள் இணைந்து நாட்டை மீட்பதற்காக சர்வ கட்சி இடைக்கால அரசாங் கத்தை அமைக்குமாறு விடுத்த கோரிக்கையை கருத்திற் கொண்ட…
-
- 8 replies
- 586 views
-
-
அவசரகால நிலையில்.... அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள்... பாதிக்கப்படாது என நம்புகின்றோம் – மனித உரிமைகள் ஆணைக்குழு நாடுமுழுவதும் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டமை குறித்து கவலையடைவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. போராட்டங்கள் அமைதியானதாகவும், சாதாரண பொலிஸ் நடவடிக்கைகளின் வரம்பிற்குள்ளும் இருந்ததால் ஏன் அவசரகால சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும் என்றும் கேள்வியெழுப்பியுள்ளது. எனவே அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டமைக்கான காரணங்களை பொதுமக்களுக்கு விளக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. அத்தோடு அவசரகால நிலையில் கருத்துச் சுதந்திரம் ஒன்று கூடல், கைது உள்ளிட்ட விடயங்களில் அடிப்படை …
-
- 2 replies
- 254 views
-
-
சஜித் முன்வராவிடின் நாம் பொறுப்பேற்போம் பிரதமர் மற்றும் அமைச்சரவை இராஜினாமா செய்த பின்னர் ஆட்சி அமைக்க ஐக்கிய மக்கள் சக்தி முன்வராவிட்டால் இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் பொறுப்பை ஏற்க அரசாங்கத்தில் இருந்து விலகிய சுயேச்சை குழு எம்.பிக்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (07) பிற்பகல் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சுயேச்சைக் குழு ஒன்று கூடி இவ்விடயம் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடியதாக தெரியவருகிறது. ஐக்கிய மக்கள் சக்தி, ஆட்சியைக் கைப்பற்றும் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டால், நாட்டை அராஜகமாக்க விடமாட்டோம் என்றும், மேலும் பல கட்சிகளுடன் இணைந்து இடைக்கால அரசாங்கத்தை அமைக்கு…
-
- 2 replies
- 420 views
-
-
அவசரகாலச் சட்டம் ஏன்? அரசாங்கம் விளக்கம் இலங்கை மக்களின் வாழ்க்கையை பாதுகாத்து அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை முன்னெடுக்கவே அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை தவிர்ப்பதற்கு குறுகிய காலத்திற்கு இந்த அவசர கால நிலை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இயல்பு நிலை திரும்பியதன் பின்னர் அவசர கால நிலை மீளப்பெற்றுக் கொள்ளப்படும் என குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://www.tamilmirror.lk/செய்திகள்/அவசரகா…
-
- 4 replies
- 412 views
- 1 follower
-
-
இன்று நள்ளிரவு முதல் அவசரகாலச் சட்டம் - ஆணையை பிறப்பித்தார் ஜனாதிபதி நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆணையை பிறப்பித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு பகுதிகளிலும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறித்த அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியுள்ளார். ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர் தற்போது அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/127053
-
- 13 replies
- 834 views
-
-
மக்கள் கொடுக்கும் அதிகாரம், தற்காலிகமானது – சந்திரிக்கா பண்டாரநாயக்க. இடைக்கால அரசாங்கத்திற்கு இடமளித்து அரசாங்கம் பதவி விலக வேண்டும் அல்லது அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இடைக்கால அரசாங்கத்திற்கு தயாராக இல்லை என்றால் பாராளுமன்ற தேர்தலுக்கு செல்ல வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இன்று ( சனிக்கிழமை ) தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் “மக்கள் தங்கள் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக மக்கள் பிரதிநிதிகளுக்கு அதிகாரம் வழங்குகிறார்கள். மக்கள் கொடுக்கும் அதிகாரம் வாழ்நாள் முழுவதும் அல்ல தற்காலிகமானது என்பதை அவர்கள் …
-
- 4 replies
- 277 views
-
-
மகிந்தவை பதவிவிலகுமாறு கோட்டா கோாிக்கை May 6, 2022 பிரதமர் மகிந்த ராஜபக்ஸவை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போதே ஜனாதிபதி இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஜனாதிபதியின் கோரிக்கைக்கு பல அமைச்சரவை அமைச்சர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் குறித்த தகவல்கள் தொிவிக்கின்றன . எனினும் சில அமைச்சரவை அமைச்சர்கள் ஜனாதிபதியின் இந்த தீர்மானத்திற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது https://globaltamilnews.net/2022/176256 பதவி விலகுமாறு ஜனாதிபதி…
-
- 5 replies
- 521 views
-
-
யாழ்.பல்கலைக்கு... இந்தியத்துணை தூதுவர், விஜயம்! யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவராலயத்தின் துணைத் தூதுவர் ஜே. ராகேஷ் நட்ராஜ் நேற்று(புதன்கிழமை) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு மரியாதை நிமித்தமான விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவை சந்தித்து நிலைமைகளைக் கேட்டறிந்ததுடன் இந்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மற்றும் இந்திய அரசாங்கத்தின் புலமைப்பரிசில்கள் தொடர்பிலும் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1280170
-
- 6 replies
- 540 views
-
-
இலங்கையில் மீண்டும் அவசரநிலை: மக்களுக்கு என்னென்ன பாதிப்புகள்? 7 மே 2022, 04:58 GMT பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையில் மே 6ஆம் தேதி நள்ளிரவு முதல் ஜனாதிபதியின் அதிகாரத்தின் கீழ் அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்த சட்டத்தை பிரகடனப்படுத்துவதற்கான காரணங்களை உடனடியாக மக்களுக்கு விளக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக வெள்ளிக்கிழமை மாலையில் அவசரநிலை பிரகடன முடிவு குறித்து அமைச்சரவையின் சிறப்பு அமர்வு கூடி ஆலோசனை நடத்தியது. இத்தகைய ஒரு அவசரநிலை ஏற்கெனவே கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி ஜனாதிபதியால் அமல்படுத்தப்பட்டது. எனினும் ஏப்ரல் 5ஆம் தேத…
-
- 0 replies
- 258 views
- 1 follower
-
-
சிங்கப்பூர் பறந்தார்... துமிந்த சில்வா ! வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா சிங்கப்பூர் சென்றுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி இன்று அதிகாலை 12.50 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானம் மூலம் சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டுள்ளார். SQ-469 என்ற குறித்த சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பை வழங்கியிருந்தமை குறிப்பிட்டத்தக்கது. https://athavannews.com/2022/1280563
-
- 2 replies
- 502 views
- 1 follower
-
-
சபையில் பல தடவைகள் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளேன் தற்போதைய நிலைமைக்கு ரணிலும் பொறுப்புக் கூற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று (06) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ‘கொலைகாரர்களின் ஆதரவுடன் 2013ஆம் ஆண்டு தொகுதி அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்டமை தொடர்பில் சபையில் பல தடவைகள் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளேன். பிள்ளையான் 600 பேரை கொலை செய்ததாக குறிப்பிடப்படும் விடயத்தில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எனது பெயரையும் குறிப்பிட்டுள்ளமை பொறுத்தமற்றது. ஏனெனில் நான் 1990 ஆம் ஆண்டே பிறந்தேன். அத்துடன் ராஜபக்ஷர்களுக்கு ஒருபோதும் சரணம் கச்சாமி …
-
- 1 reply
- 315 views
-
-
நாட்டின் அந்நிய செலாவணிக் கையிருப்பின் தற்போதைய நிலை -மத்திய வங்கி ஏப்ரல் மாத இறுதியில் இலங்கையிடம் உத்தியோகபூர்வ கையிருப்பு 1,827 மில்லியன் அமெரிக்க டொலர் இருந்ததாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ஈட்டிய அந்நியச் செலாவணித் தொகை 1,618 மில்லியன் அமெரிக்க டொலர் எனவும் அது தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ கையிருப்பு மார்ச் மாதத்தில் 1,917 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது. அந்நிய செலாவணிக் கையிருப்பில் 1,702 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது. எனினும், சீன மக்கள் வங்கியிலிருந்து பெறப்பட்ட 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் நாணய மாற்று வீத வசதியை உள்ளடக்கிய போதிலும், அதனைப் பயன்படுத்…
-
- 0 replies
- 239 views
-
-
PreviousNext பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மஹேலவிடம் இருந்து அதிரடி அறிவிப்பு..! தயவுசெய்து அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்து விட்டு வீட்டிலேயே இருக்கவும் என இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் வாக்கெடுப்பின் மூலம் மீணடும் பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்ட ரஞ்சில் சியம்பலாப்பிட்டிய மீண்டும் பதவி விலகுவதாக நேற்றைய தினம் அறிவித்திருந்தார். இந்நிலையில், இது குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர…
-
- 0 replies
- 239 views
-
-
எரிபொருளின், தரம் குறித்து சோதனை… மீறினால் உரிமம் இரத்து! நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் எரிபொருளின் தரம் குறித்து சோதனைகளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஆரம்பித்துள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வழிகாட்டுதல்களை மீறினால் உரிமம் இரத்து செய்யப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எரிபொருளின் தரம் மற்றும் பெட்ரோலிய பொருட்களை கலப்பது குறித்து முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1280612
-
- 0 replies
- 151 views
-
-
ரணில் விக்ரமசிங்கவின், இல்லத்தை... முற்றுகையிட்ட மக்கள்… ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு அருகில் தற்போது போராட்டம் இடம்பெற்று வருகின்றது. தற்போது இடம்பெற்றுவரும் இந்த ஆர்ப்பாட்ட இடத்திற்கு கலகத் தடுப்புப் பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை போராட்டக்காரர்களை சந்திக்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மறுத்துள்ளார். https://athavannews.com/2022/1280589
-
- 3 replies
- 393 views
-
-
சர்வதேச நாணய நிதிய குழு, இலங்கை குழுவுக்கு இடையில்... இணையவழி பேச்சு!! சர்வதேச நாணய நிதிய குழு, இலங்கை குழுவுடன் எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதிவரை இணையவழி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. இலங்கை தொடர்பான தமது புதுப்பிக்கப்பட்ட அறிவித்தலை வெளியிட்டு, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை பிரதானி மசாயிரோ நொஸாகி இதனை அறிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம், தமது கொள்கை எல்லைக்குள், இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1280596
-
- 0 replies
- 125 views
-
-
இலங்கைக்கு... அத்தியாவசிய மருந்துகளை வழங்கும், பங்களாதேஷ்! இலங்கைக்கு 2.3 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருந்துகளை வழங்கவுள்ளதாக பங்களாதேஷ் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த மருந்துகள் கையிருப்பு இலங்கை நாணயத்தில் சுமார் 830 மில்லியன் ரூபாய் பெறுமதியானது. அதன்படி, பங்களாதேஷிடமிருந்து சுமார் 56 வகையான அத்தியாவசிய மருந்துகள் இவ்வாறு நன்கொடையாக வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1280422
-
- 2 replies
- 235 views
-
-
நாடாளுமன்றத்தில்... பைத்தியக்காரர்கள் போல், நடந்துகொள்ள வேண்டாம் – சபாநாயகர் நாடாளுமன்றத்தில் பைத்தியக்காரர்கள்போல் நடந்துகொள்ள வேண்டாம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் பூர்வாங்க நடவடிக்கைகள் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாகவே அவைத் தலைவரின் உத்தரவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கத் தொடங்கியபோதே சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் பைத்தியக்காரத்தனமாக நடந்துகொண்டால் சபை ஒத்திவைக்கப்படும் என்றும் சபாநாயகர் கூறினார். https://athavannews.com/2022/1280438
-
- 1 reply
- 129 views
-