ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
இன்று முதல்... சமையல் எரிவாயு சிலிண்டர்களை, சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை! நாடளாவிய ரீதியில் இன்று(புதன்கிழமை) முதல் சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் நாட்டை வந்தடைந்த கப்பலிலிருந்து 3 ஆயிரத்து 900 மெட்ரிக் தொன் எரிவாயுவை இறக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, நாளாந்தம் ஒரு இலட்சம் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதேவேளை மேலும் 3 ஆயிரத்து 600 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாளை நாட்டை வந்தடையவுள்ளது. https://athavannews.com/2022/1278728
-
- 0 replies
- 100 views
-
-
நாளை முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்கப் போராட்டத்திற்கு வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் ஆதரவு நாடுதழுவிய ரீதியில் நாளை வியாழக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்கப் போராட்டத்திற்கு வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் ஆதரவைத் தெரிவித்துள்ளது.நாடுதழுவிய ரீதியில் 2022.04.28 வியாழக்கிழமை பல்வேறு தொழிற்சங்கங்களால், பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி முன்னெடுக்கப்படவிருக்கும் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கமாகிய நாம் கீழ் வரும் விடயங்களை முன்னிறுத்திய வகையில் கலந்து கொள்ளத் தீர்மானித்துள்ளோம். மிக நீண்டகாலமாக சம்பள உயர்வின்மை, பதவி உயர்வு ,பதவி நிலை தொடர்பான முற…
-
- 0 replies
- 156 views
-
-
மக்கள் எழுச்சிப் போராட்டம்.. 19ஆவது நாளாகவும், தொடர்கிறது ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு வலியுறுத்தி காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று (புதன்கிழமை) 19ஆவது நாளாகவும் தொடர்கிறது. இந்த போராட்டத்தில் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு தமது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் நாட்டின் பல பிரதேசங்களிலிருந்தும் வருகை தந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். கோட்டாகோகம என பெயரிடப்பட்டுள்ள பகுதியிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் மக்கள் போராட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இதனிடையே, மக்கள் தமது எதிர்ப்பு நடவடிக்கையின் மற்றுமொரு கட்டத்தை அலரி மாளிகைக்கு முன்பாக மைனாகோக…
-
- 0 replies
- 125 views
-
-
கட்டிட நிர்மானப் பணிகளை இடைநிறுத்துமாறு கோரிக்கை! இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு அனைத்து நிர்மாணப் பணிகளையும் இடைநிறுத்துமாறு இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். உற்பத்திகள் விற்பனை செய்யப்படாத நிலை ஏற்படும் போது, இறக்குமதியாளர்கள் விலையை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என இலங்கை தேசிய நிர்மாண சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார். தற்போதைய நிலைமையில், 10 மில்லியனில் வீடு கட்ட திட்டமிட்டிருந்தால் 25 மில்லியனில் கூட கட்டி முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 242 views
-
-
அரச செலவினங்களை... குறைப்பதற்கு, நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல்! அரச செலவினங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசேட சுற்றறிக்கை நிதி அமைச்சின் செயலாளரினால் அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஆரம்பிக்கப்படவிருந்த அனைத்து திட்டங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், இதுவரை நிரப்பப்படாத வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு ஒத்திவைப்பு, அமைச்சரவையால் அங்கீகரிக்கப்படாத கொடுப்பனவுகள், உதவித்தொகை வழங்குவதை நிறுத்துதல், அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் கடன் வசதிகளை இந்த வருட இறுதி வ…
-
- 2 replies
- 213 views
-
-
இலங்கையின் 12 வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் Fitch Ratings வீழ்ச்சி! April 27, 2022 Fitch Ratings ஆனது இலங்கையின் 12 வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் (NBFIs) தேசிய நீண்ட கால தரவரிசைகளை மேலும் கீழிறக்கியுள்ளது. அதன்படி, குறித்த தரப்படுத்தல் மதிப்பீடு கண்காணிப்பு எதிர்மறை (Rating Watch Negative (RWN) கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. குறித்த வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் பின்வருமாறு… Bimputh Finance PLC (Bimputh) CBC Finance LTD (CBCF) Central Finance Company PLC (CF) Fintrex Finance Limited (Fintrex) HNB Finance PLC (HNBF) LB Finance PLC (LB) …
-
- 0 replies
- 215 views
-
-
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3.6 சதவீதத்தில் இருந்து 2.6 சதவீதமாக குறையும்! April 27, 2022 இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 3.6 சதவீதத்தில் இருந்து 2.6 சதவீதமாக குறையும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கையின் பொருளாதார வளர்ச்சி குறித்து அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. இதேவேளை, தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உலக வங்கி 600 மில்லியன் டொலர்கள் நிதி உதவியை இலங்கைக்கு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஸவிற்கும் இடையில் நேற்று (26.04.22) பிற்பகல் கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சந்த…
-
- 0 replies
- 88 views
-
-
4,860 ரூபாவாக... அதிகரிக்கப்பட்டது, லிட்ரோ எரிவாயு. இன்று (செவ்வாய்கிழமை) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் (12.5kg) விலை 4 ஆயிரத்து 860 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக லிட்ரோ 12.5 கிலோகிராம் எரிவாயுவின் புதிய விலை 2,675 ரூபாவாகவும், 5 கிலோ லிட்ரோ எரிவாயுவின் விலை 1,071 ரூபாவாகவும், 2.3 கிலோ எரிவாயு கொள்கலனின் விலை 506 ரூபாவாகவும் காணப்பட்டது. இதேவேளை, கடந்த 22 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 12.5 கிலோ எரிவாயு கொள்கலன் விலையை 5175 ரூபாவாக அதிகரிக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்திருந்தது. எனினும், பின்னர் அதற்கு அனுமதி வழங்கமுடியாது எனத்தெரிவித்து குறித்த விலை அதிகரிப்பை நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை …
-
- 0 replies
- 139 views
-
-
இலங்கை பொருளாதார நெருக்கடி: "நான் பதவி விலக மாட்டேன்" - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 40 நிமிடங்களுக்கு முன்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பதவி விலக மாட்டேன் என இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்களின் சங்கம் ஆகியோருடன் அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவோ அல்லது அரசாங்கமோ பதவி விலகக் கூடாது என மாகாண சபை உறுப்பினர்கள் சங்கத்தினர் ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம…
-
- 1 reply
- 275 views
- 1 follower
-
-
ஒரு இலட்சம் டொலர்களை... வைப்பிலிடும், வெளிநாட்டவர்களுக்கு.... வதிவிட வீசா வழங்க அமைச்சரவை அனுமதி மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கியில் குறைந்தபட்சம் 100,000 டொலர்களை வைப்பிலிடும் வெளிநாட்டவர்களுக்கு, வதிவிட வீசா வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய 10 ஆண்டுகளுக்கு வதிவிட வீசா வழங்கும் Golden Paradise Visa Program என்ற திட்டத்தை செயற்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. குறிப்பிட்ட நீண்டகால வதிவிட வீசா வழங்குதல் தொடர்பாக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, • கூட்டு ஆதனங்களின் பெறுமதி குறைந்தபட்சம் 75,000 அமெரிக்க டொலர்கள் அல்லது அதற்கு மேலதிகமாக முதலீடு ச…
-
- 8 replies
- 739 views
- 1 follower
-
-
பசில் ராஜபக்ஷவுடன்... சஜித் அணி, ஒப்பந்தம் செய்துள்ளது – வாசுதேவ நாணயக்கார அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதில் ஏற்பட்டுள்ள தாமதம், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அரசாங்கத்திற்கு இடையிலான ஒப்பந்தமாக இருக்கலாம் என முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சுமத்தினார். எதிர்க்கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணையை கையளிப்பதற்குத் தயாராகி பல வாரங்கள் கடந்துவிட்டதாகவும் இப்போது அதைச் செய்வதற்கான உற்சாகம் அவர்களிடம் இல்லை என்றும் அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “பசில் ராஜபக்ஷவுடன் ஐக்கிய மக்கள் சக்தி ஒப்பந்தம் செய்துள்ளதா என நாங்கள் சந்தேகிக்கிறோம்…
-
- 1 reply
- 287 views
-
-
நாடாளுமன்றத்தில்... பெரும்பான்மையை, இழந்ததா அரசாங்கம் ? நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை அரசாங்கம் இழந்துவிட்டதாக வெளியாகும் செய்திகளை அரசாங்கம் மறுத்துள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்தப்படும் போதே இரு தரப்பினரினதும் பலம் குறித்து தெரியவரும் என அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்தார். தமக்குத் தெரிந்தவரை 39 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தவிர வேறு யாரும் அரசாங்கத்தில் இருந்து சுயாதீனமாக செய்யப்படுவதாக அறிவிக்கவில்லை என கூறினார். அரசாங்கம் பெரும்பான்மையை இழந்தமை தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சரவை பேச்சாளர் இதனை தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில,…
-
- 0 replies
- 349 views
-
-
அனைத்துக் கட்சிகளையும்... இணைத்து, அமைச்சரவை வேண்டும் – தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை நாடாளுமன்றில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் இணைந்தது அமைச்சரவை அமைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது. இதனை அடுத்து நாட்டில் காணப்படும் தற்போதைய பொருளாதார நிலையைத் தீர்ப்பதற்கு இடைக்காலத் திட்டத்தைச் செயற்படுத்தவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1278702
-
- 0 replies
- 159 views
-
-
சீனாவிடமிருந்து... மற்றுமொரு கடனுதவியைப் பெற, திட்டம் – நாலக கொடஹேவா சீனாவினால் மற்றுமொரு கடனுதவி வழங்க முன்மொழியப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து மேலும் தெரிவித்த அமைச்சர், இலங்கையில் தற்போது நிலவும் கடன் நெருக்கடிக்கு தீர்வாக கடனை மறுசீரமைப்பது சிக்கலாக இருப்பதால் சீனா இந்த முடிவை எடுக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சீனா ஏற்கனவே உலகின் பல்வேறு நாடுகளுக்கு கடனை வழங்கியுள்ள நிலையில், ஒரு நாட்டிற்கு மட்டும் கடனை மறுசீரமைப்பது நெருக்கடியை ஏற்படுத்தும் என்று சீனா கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1278654
-
- 0 replies
- 151 views
-
-
தமிழ் அரசியல் வாதிகளிடம்... ஒற்றுமை இல்லை – யாழ். மறைமாவட்ட ஆயர் எமது அரசியல்வாதிகளிடம் ஒற்றுமை என்பது கிஞ்சித்தும் கிடையாது என தான் அமெரிக்க தூதுவரிடம் தெரிவித்ததாக யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டீன் பேர்னாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்தார். இலங்கைக்கான அமொிக்க தூதுவர் ஐீலி சுங் யாழ் மறைமாவட்ட ஆயரை நேற்றைய தினம் (திங்கட்கிழமை) சந்தித்து கலந்துரையாடினர். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஆயர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், ”நாட்டின் நிலைமை பற்றியும் விசேடமாக வடக்கிலே என்ன மாதிரியான நிலைமை காணப்படுகின்றது என்பதை அமெரிக்க தூதுவர் கேட்டறிந்து கொண்டார். முப்பது வருடங்களாக இந்த சூழ்நிலையில் வாழ்ந்து வந்த பழக்கப்பட்…
-
- 1 reply
- 452 views
-
-
பயங்கரவாத தாக்குதல் குறித்த, உண்மைகளை மறைக்க... அரசாங்கம் விரும்பவில்லை – நாலக கொடஹேவா 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மைகளை மறைக்க அரசாங்கம் விரும்பவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் பேசிய அவர், உண்மைகளை மறைப்பதன் மூலம் தாம் நமையடைய போவதில்லை என கூறினார். இந்த விடயம் தொடர்பாக அண்மையில் ஜனாதிபதியுடன் தனிப்பட்ட முறையில் பேசியதாகவும் அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகள் குறித்த தற்போதைய அரசாங்கத்தின் ஒரே குறைபாடு தொடர்பாடல் இல்லாததுதான் என்றும் அமைச்சர் கூறினார். எதிர்காலத்தில் பொதும…
-
- 0 replies
- 231 views
-
-
விலையை அதிகரிக்காமல்... சமையல் எரிவாயுவை, விநியோகிக்க முடியாது – லிட்ரோ நிறுவனம் சமையல் எரிவாயு விலைகளை அதிகரிக்காமல் எரிவாயுவை விநியோகிக்க முடியாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே, விலை அதிகரிப்பு தொடர்பாக அரசாங்கம் முடிவெடுக்க வேண்டுமென அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பாக இன்றைய தினம் தீர்மானம் எட்டப்படும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். 12.5 கிலோ கிராம் நிறைக் கொண்ட சமையல் எரிவாயுவின் விலையை 2 ஆயிரத்து 500 ரூபாவால் அதிகரிக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்திருந்தது. எனினும்இ அந்த விலை அதிகரிப்பை நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கவில்லை என அரசாங்கம் அறிவித்த…
-
- 0 replies
- 123 views
-
-
வெளிநாட்டு கடன் மதிப்பீடு மட்டத்தில் இருந்து... இலங்கை தரமிறக்கம்! ஸ்டேன்டர்ட் என்ட் புவர் க்ளோபல் ரேட்டிங் நிறுவனத்தினால் இலங்கையின் வெளிநாட்டு கடன் மதிப்பீடு மேலும் குறைக்கப்பட்டுள்ளது. இறையாண்மை முறிகளுக்கான வட்டியை செலுத்தாமையால் இவ்வாறு இலங்கையின் வெளிநாட்டு கடன் மதிப்பீடு குறைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மைய தரவுகளின் அடிப்படையில் இலங்கை சிசி மட்டத்தில் இருந்து எஸ்.டி நிலைக்கு தரமிறக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1278671
-
- 0 replies
- 99 views
-
-
இடைக்கால அரசாங்கத்தில்... பங்கேற்பதைவிட, அரசியலில் இருந்து... ஓய்வு பெறுவதே சிறந்தது – சஜித் இடைக்கால அரசாங்கத்தை அமைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளில் பங்கேற்பதை விட அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதே சிறந்தது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் கண்டியில் இருந்து கொழும்பு வரையிலான பேரணியில் கலந்துகொள்வதற்கு முன்னர் அஸ்கிரிய மகாநாயக்கர் வரகாகொட ஞானரதன தேரரை இன்று (செவ்வாய்க்கிழமை) பார்வையிட்டதன் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “தற்போதைய பாராளுமன்றத்தின் அமைப்பு எப்படி உருவானது என்பதை நாம் பார்க்க வேண்…
-
- 0 replies
- 112 views
-
-
இலங்கை மத்திய வங்கி, வெளியிட்டுள்ள... நாணய மாற்று விகிதம் ! இலங்கை மத்திய வங்கி இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் பின்வருமாறு, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வில்லை 333.88 ரூபாயாகவும் விற்பனை விலை 346.49 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் கொள்வில்லை 428.58 ரூபாயாகவும் விற்பனை விலை 445.81 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. இதேவேளை யூரோ ஒன்றின் கொள்வில்லை 362.94 ரூபாயாகவும் விற்பனை விலை 374.92 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இதேவேளை ஜப்பானின் யென் ஒன்றின் கொள்வில்லை 2.63 ரூபாயாகவும் விற்பனை விலை 2.73 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. https://athavannews.com/2022/1278680
-
- 0 replies
- 267 views
-
-
உறவுகளை இழந்த மக்களின்.... அவலங்களை, இன்று நேரடியாக... அறிந்துகொண்டேன் – அமெரிக்க தூதுவர் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் இரண்டினதும் அவசியத்தை அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர் இன்று செவ்வாய்க்கிழமை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்தித்து கலந்துரையாடினார். தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்வதற்கு அனைவரும் உரிமை உண்டு என்றும் அமெரிக்கத் தூதுவர் தெரிவித்தார். போரின் போது குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களின் இதயத்தை உடைக்கும் கதைகளை இன்று நேரடியாக கேட்டு அறிந்துகொண்டதாகவும் அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1278688
-
- 12 replies
- 637 views
-
-
இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக... பதவியேற்க, தயாரில்லை – மைத்திரி இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக பதவியேற்க தாம் தயாரில்லை என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசாங்கம் தற்போது பெரும்பான்மையை இழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் சம்மதத்துடன் புதிய பிரதமரை நியமிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1278678
-
- 0 replies
- 109 views
-
-
இடைக்கால... அரசாங்கம் குறித்து, ஜே.வி.பி.இன் அறிவிப்பு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான எந்தவொரு யோசனையையும் நிராகரிப்பதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. அத்தகைய பிரேரணைகளுக்கு ஜே.வி.பி ஒருபோதும் உடன்படாது என ஜே.வி.பியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டுமென்பது பொதுமக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளான போதிலும், ஜனாதிபதி அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார். நாட்டின் ஸ்திரத்தன்மை மேலும் சீர்குலைந்தாலும், பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு …
-
- 0 replies
- 97 views
-
-
அலரி மாளிகைக்கு... முன்பாக, அமைக்கப்பட்டுள்ள... ‘மைனா கோ கம’ – 2ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம்! கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகைக்கு முன்னாள் ‘மைனா கோ கம’ உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு நேற்று ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) 2ஆவது நாளாகவும் தொடர்கிறது. கொள்ளுப்பிட்டி – அலரி மாளிகைக்கு முன்னால் ‘ மைனா கோ கம ‘ எனும் பெயரில் நேற்று இரவிரவாக போராட்டம் இடம்பெற்றது. இதையடுத்து அலரிமாளிகைக்கு முன்னால் பொலிஸ் வாகனங்கள் நடைபாதையில் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் இன்று அதிகாலையில் குறித்த பகுதியில் சற்று பதற்றமான நிலை காணப்பட்டதுடன், ஆர்ப்பாட்டத்தில் ஈ…
-
- 0 replies
- 169 views
-
-
அமெரிக்க தூதுவர்... ஜீலி சுங் முகமாலை பகுதிக்கு விஜயம்! அமெரிக்க தூதுவர் ஜீலி சுங் முகமாலை பகுதிக்கு விஜயம்; கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை பார்வையிட்டார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க தூதுவர் இன்று காலை 7.45 மணியளவில் முகமாலை பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அமெரிக்க கொடையாளர்களின் நிதி உதவியில் முகாமாலை பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை நேரில் பார்வையிட்டுள்ளார். டாஸ் நிறுவனத்தினால் குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவருக்கு குறித்த மனிதநேய பணி தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது. தொடர்ந்து குறித்த பகுதியில் மேற்கொள்ளப்ப…
-
- 0 replies
- 92 views
-