ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
ஜனாதிபதியை... வீட்டுக்கு அனுப்ப, வீதியில் இறங்கும் எதிர்க்கட்சி: மாபெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் – ஹரின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையும் அரசாங்கத்தையும் பதவியில் இருந்து அகற்றுவதற்கான வீதிப் போராட்டத்தை நாளை முதல் ஆரம்பிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. அந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, இலங்கை இதுவரை கண்டிராத மிகப்பெரிய எதிர்ப்பு பேரணி கண்டியில் இருந்து ஆரம்பமாகும் என தெரிவித்தார். தலதா மாளிகையை வழிபட்ட பின்னர் போராட்டத்தை ஆரம்பித்து மே 1 ஆம் திகதி கொழும்பை சென்றடைவோம் என அவர் தெரிவித்தார். ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் அதிகாரத்தில் இருந்து விரட்டியடிக்கும் முயற்சி…
-
- 0 replies
- 175 views
-
-
நம்பிக்கையில்லா பிரேரணைக்கு... ஆதரவளிக்க, 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் – கம்மன்பில ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாக முன்னாள் அமைச்சரும் பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அரசாங்கம் பதவி விலகாவிட்டால் இந்த வாரத்தில் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து இன்று (திங்கட்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை நகர்த்த திட்டமிட்டபோது, அவர்களுக்கு குறைந்தபட்சம் 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதர…
-
- 1 reply
- 156 views
-
-
ரம்புக்கனை... துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த, CIDஇன் அறிக்கை.. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிப்பு! ரம்புக்கனை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணை அறிக்கை இன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார். இதேவேளை, போராட்டங்களின்போது தனிநபர்களின் உரிமைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பாக பொலிஸாருக்கு புதிய பரிந்துரைகளை வழங்க மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அதற்கமைய, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவொன்று பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட …
-
- 0 replies
- 149 views
-
-
பல பொருட்களுக்கு... தட்டுப்பாடு: அச்சம் காரணமாக, பல்பொருள் அங்காடிகளில் குவிந்த மக்கள் !! பல பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவிய வதந்தியால் அச்சமடைந்த மக்கள் தற்போது கொழும்பில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் குவிந்துள்ளனர். சவற்காரத்தின் விலை அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே கடைகளில் பழைய இருப்புக்களை வாங்க மக்கள் குவிந்தனர். https://athavannews.com/2022/1278433
-
- 1 reply
- 160 views
-
-
சவற்காரத்தின் விலை... சடுதியாக, அதிகரிப்பு! சவற்காரத்தின் விலையை 100%க்கும் மேல் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சவற்கார இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, இலங்கையில் 70 ரூபாய் பெறுமதியான சவற்காரத்தின் விலை 115 ஆகவும், 75 ரூபாயாக இருந்த சவற்காரத்தின் விலை 145 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சிறுவர்களுக்கான சவற்காரத்தின் விலை 74 இல் இருந்து 175 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சவற்கார இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2022/1278413
-
- 27 replies
- 1.6k views
- 1 follower
-
-
சர்வதேசத்தின் பங்களிப்போடு... தமிழ் மக்களின் பிரச்சினை, தீர்க்கப்பட வேண்டும் – வேலன் சுவாமி சர்வதேசத்தின் பங்களிப்போடு தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும், அதற்கு வாக்கெடுப்பொன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்க் கட்சிகளின் இன்றைய சந்திப்பில் முன்வைக்கப்பட்டுள்ளதாக வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தமிழ்க் கட்சிகளின் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், ”தமிழ் கட்சிகளிடையே இன்று இரண்டாவது சந்திப்பு நிறைவடைந்திருக்கிறது. நாடு எதிர்நோக்கியுள்ள அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தமிழ் கட்சிகள் என்…
-
- 5 replies
- 482 views
-
-
இடைக்கால அரசாங்கத்தை... ஆறு மாதங்களிற்கு, ஏற்படுத்துவதற்கான யோசனை – முன்னாள் ஜனாதிபதி முன்வைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பிரதமர் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தை ஆறு மாதங்களிற்கு ஏற்படுத்துவதற்கான யோசனையை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க முன்வைத்துள்ளார். நாட்டில் தற்போது காணப்படும் அரசியல் முட்டுக்கட்டை நிலையை முடிவிற்கு கொண்டுவருவதற்காக அவர் இந்த யோசனையை முன்வைத்துள்ளார். தனது யோசனைகளை கடிதமொன்றில் தெரியப்படுத்தியுள்ள முன்னாள் பிரதமர், “நான் பல கலந்துரையாடல்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட பின்னர் ஆழ்ந்த யோசனைக்கு பின்னர், காலிமுகத்திடலில் உள்ள இளைஞர்கள் பெரியவர்களின் கோரிக்கைகளை-மூத்த அரசியல்…
-
- 0 replies
- 82 views
-
-
கிழக்கில்... 10,000 ஆதரவற்ற குடும்பங்களுக்கு, உணவுப் பொருட்களை வழங்க... சீனா தீர்மானம் ! கிழக்கில் 10,000 ஆதரவற்ற குடும்பங்களுக்கு 1 மில்லியன் யுவான் பெறுமதியான உணவுப் பொருட்களை வழங்குவதற்கு சீனாவின் யுனான் மாகாண அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்த போது தூதுவர் Qi Zhenhong இதனை தெரிவித்துள்ளார். மேலும் குறித்த சந்திப்பின்போது கிழக்கு மாகாணத்தில் பல்வேறு துறைகளில் சீன முதலீட்டை எதிர்பார்ப்பதாக ஆளுநர் அழைப்பும் விடுத்துள்ளார். முன்னதாக வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள தமிழர்களுக்கு அத்தியாவசிய மற்றும் மருந்து பொருட்களை அனுப்ப மத்திய அரசிடம் தமிழக அரசாங்கம் கோரிக்கை விடுத்தி…
-
- 0 replies
- 92 views
-
-
இலங்கையில்... அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம், 1989இல் ஜேர்மன் ஒன்றிணைந்ததை நினைவு படுத்துகிறது – ஜேர்மன் தூதுவர் இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் அமைதியான போராட்டங்களால் தான் ஈர்க்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஹோல்கர் சீபர்ட் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து அவர் தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். குறித்த பதிவில் ‘இலங்கையின் மதிப்புமிக்க மக்கள் தங்கள் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை எவ்வளவு அமைதியான முறையில் பயன்படுத்துகிறார்கள் என்பதில் நான் ஈர்க்கப்பட்டேன். 1989இல் ஜேர்மன் ஒன்றிணைந்ததை அது நினைவுபடுத்துகிறது. சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர…
-
- 0 replies
- 168 views
-
-
மஹிந்தவிற்கு.... ஆதரவான பிரேரணையில், 67 நாடாளுமன்ற உறுப்பினர்களே கையொப்பமிட்டுள்ளனர்? பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவாக கையெழுத்தினை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திலுள்ள சில முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளது. எனினும் இதுவரையில் 67 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே அரசாங்கத்திற்கு ஆதரவான பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. https://athavannews.com/2022/1278364
-
- 0 replies
- 127 views
-
-
அரசியலமைப்பு சீர்திருத்தக் குழுவின்... அறிக்கை, ஜனாதிபதியிடம் !! அரசியலமைப்பில் திருத்தங்களை கொண்டுவருவது தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை தமக்கு கிடைத்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் இன்று திங்கட்கிழமை உறுதி செய்துள்ளார். இந்நிலையில் அடுத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் நோக்கில், அறிக்கையின் உள்ளடக்கங்கள் அரசாங்கத்தால் பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1278373
-
- 0 replies
- 99 views
-
-
பாப்பரசர் பிரான்சிஸ் – ஈஸ்டர் தாக்குதலில், உயிரிழந்தவர்களின்... குடும்பத்தினருக்கு இடையில் சந்திப்பு 2019ஆம் ஆண்டு நாட்டை உலுக்கிய ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், பாப்பரசர் பிரான்சிஸை இன்று (திங்கட்கிழமை) சந்திக்கின்றனர். கொழும்பு போராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையுடன் அவர்கள் இன்று பாப்பரஸரை வத்திக்கானில் சந்திக்கவுள்ளனர். இத்தாலியில் வாழும் இலங்கையர்களின் பங்குபற்றுதலுடன் புனித பேதுரு பேராலயத்தில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் விசேட புனித ஆராதனை நடைபெறவுள்ளது. அதனைத்தொடர்ந்து, இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினருடன் கொழும்பு பேராயர் …
-
- 0 replies
- 83 views
-
-
இலங்கையில் வாழ்ந்தால்... பட்டினியால், இறந்து விடுவோம் – தமிழகம் சென்றுள்ள மக்கள் தெரிவிப்பு! யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை மற்றும் காக்கைதீவு பிரதேசங்களை சேர்ந்த 5 குடும்பங்களை சேர்ந்த 09 மாத குழந்தை உள்ளிட்ட 15 பேர் இன்றைய தினம் (திங்கட்கிழமை ) தனுஷ்கோடியை அண்மித்த கோதண்டராமர் கோவில் கடற்கரை பகுதியை சென்றடைந்துள்ளனர். அது தொடர்பில் தகவல் அறிந்த ராமேஸ்வரம் கடலோர பாதுகாப்பு பொலிஸார் இவர்களை மீட்டு மண்டபம் கடலோர பாதுகாப்பு பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளின் போது , தாம் நெடுந்தீவு கடற்கரையில் இருந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) படகில் ஏறியதாகவும் , இன்று அதிகாலை 3 மணியளவில் அப்பகுதியில் இறக்கி விடப்பட்டதாகவும் தெரிவித்…
-
- 0 replies
- 89 views
-
-
அரசாங்கத்திற்கு எதிராக.... வாக்களிக்க, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முடிவு! தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக கட்சியின் செயலாளர் ஜீவன் தொண்டமான் அறிவித்துள்ளார். விரிவான கலந்துரையாடலின் பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். மேலும் குறித்த முடிவு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி மற்றும் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். https://athavannews.com/2022/1278351
-
- 0 replies
- 91 views
-
-
அரசாங்கத்திற்கு எதிரான பிரேரணை – 113க்கும் மேற்பட்ட கையெழுத்துக்களை, பெற்றுள்ளதாக எதிர்க் கட்சி அறிவிப்பு! அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தமது கட்சி 113க்கும் மேற்பட்ட கையெழுத்துக்களை பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, அரசாங்கத்திலிருந்து வெளியேறியவர்கள் தமக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளதால், பிரேரணைக்கு தேவையான எண்ணிக்கை தங்களிடம் உள்ளதாக தெரிவித்தார். இடைக்கால அரசாங்கத்தில் இருந்து விலகி இருப்பதே தங்களின் முந்தைய நிலைப்பாடாக இருந்தது என்றும் ஆனால் தாங்கள் இடைக்கால அரசாங்கத்தில் பதவிகளை ஏற்காவிட்டால், நம்பிக்கையில்லா பிரேரண…
-
- 0 replies
- 92 views
-
-
அட்டைகள்... எவ்வாறு மனிதனிலிருந்து, இரத்தத்தினை உறுஞ்சுமோ... அதுபோன்று நாட்டு மக்களின் இரத்தத்தினை அரசாங்கம் உறிஞ்சுகின்றது – சாணக்கியன்! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இந்த நாட்டில் அட்டைகள் எவ்வாறு மனிதனிலிருந்து இரத்தத்தினை உறுஞ்சுமோ அதுபோன்று நாட்டு மக்களை உறிஞ்சும் செயற்பாட்டினை முன்னெடுத்துள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார். மட்டக்களப்பு பாலமீன்மடு, லைட்ஹவுஸ் இளைஞர் கழகத்தின் 26வது நிறைவினை முன்னிட்டு “முகத்தூர் முழக்கம்”மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியை பாலமீன்மடு லைட்ஹவுஸ் விளையாட்டு மைதானத்தில் நடாத்தியது. 30 இளைஞர் கழகங்கள் பங்குகொண்ட இந்த சுற்றுப்போட்டியி…
-
- 0 replies
- 114 views
-
-
இடைக்கால அரசாங்கத்தை... அமைக்க தயார் – ஜனாதிபதி இடைக்கால அரசாங்கத்தை அமைக்க தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எழுத்துமூலம் மகாநாயக்க தேரர்களுக்கு உறுதியளித்துள்ளார். இதேவேளை பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். இருப்பினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என தெரிவித்து நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டங்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1278341
-
- 0 replies
- 159 views
-
-
அமெரிக்க தூதுவர்... நல்லூர் கந்தசுவாமி, ஆலயத்தில் வழிபாடு! யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள அமெரிக்க தூதர் ஜூலி நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடு மேற்கொண்டார். இன்று (திங்கட்கிழமை) காலை குறித்த வாழிபாட்டில் ஈடுபட்டுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த அமெரிக்க தூதுவர் நேற்று முதல் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடி வருகின்றார். https://athavannews.com/2022/1278419
-
- 0 replies
- 208 views
-
-
இலங்கை நெருக்கடி: போராட்டக் களவத்தில் மருத்துவ உதவி செய்யும் தமிழ் இளைஞர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், போராட்டப்பகுதியில் மருத்துவ சேவை செய்து, கவனம் ஈர்க்கிறார் ஒரு தமிழ் இளைஞர். இலங்கையில் பொருட்களுக்கான தட்டுப்பாடு, விலையேற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வீதிகளில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த காலங்களில் சிறிது சிறிதாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டங்கள் தற்போது தொடர் போராட்டமாக மாற்றம் பெற்றுள்ளது. தலைநகர் கொழும்பு காலி முகத்திடல் பகு…
-
- 0 replies
- 197 views
- 1 follower
-
-
இடைக்கால அரசாங்கத்தை அமைக்க எழுத்து மூலம் ஜனாதிபதி உறுதி - அஸ்கிரிய பீடம் (எம்.மனோசித்ரா) நாட்டில் நிலவும் நெருக்கடிகளைக் கருத்திற் கொண்டு இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். மகா சங்கத்தினரிடம் எழுத்து மூலம் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளதாக அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக மெதகம ஸ்ரீ தம்மானந்த தேரர் தெரிவித்ததார். நாட்டில் நிலவுகின்ற நெருக்கடி நிலைமைகள் தொடர்பில் துரிதமாக அவதானம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நான்கு மகா சங்கத்தினரால் அண்மையில் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. அத்தோடு தற்போது செயற்படுத்தப்பட வேண்டிய வேலைத்திட்டங்களும் முன்வைக்கப்பட்டிருந்தது. எவ்வாறிருப்பி…
-
- 0 replies
- 161 views
-
-
யாழ்.வந்த அமெரிக்க தூதுவர் பல்வேறு தரப்பினருடனும் சந்திப்பு : April 25, 2022 யாழ்ப்பாணத்துக்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பயணம் செய்த இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் சிவில் சமூக தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார். நேற்று மாலை பலாலி சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்துக்கு சென்ற அமெரிக்க தூதர், கொக்குவிலில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியுள்ள நிலையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமி, அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டனர். சந்திப்பு தொடர்பாக கருத்து தெர…
-
- 5 replies
- 316 views
- 1 follower
-
-
அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியில்... இன்று கூடுகிறது, புதிய அமைச்சரவை! நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியில் புதிய அமைச்சரவை இன்று முதல் முறையாக கூடவுள்ளது. அதன்படி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெறவுள்ளது. கடுமையான அரசியல் ஸ்திரமின்மைக்கு மத்தியில் முழு அமைச்சரவையும் இராஜினாமா செய்திருந்த நிலையில், கடந்த 18ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையிலேயே புதிய அமைச்சர்களுடனான அமைச்சரவை முதல் முறையாக இன்று கூடவுள்ளது. இதேநேரம், அரசியலமைப்பின் 20ஆம் திருத்தச் சட்டத்தை நீக்கி, 19ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அமைச்ச…
-
- 0 replies
- 285 views
-
-
தடைகளை மீறி... காலிமுகத்திடலை வந்தடைந்த, பல்கலை மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி – 17ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம்! கொழும்பு – காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் எழுச்சி போராட்டம் இன்று (திங்கட்கிழமை) 17ஆவது நாளாகவும் தொடர்கிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. காலி முகத்திடல் ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டது முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோருக்கு பல தரப்பினராலும் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஏதேனும் சட்ட ரீதியிலான சிக்கல்கள் ஏற்பட்டாலோ அல்லது ஆர்ப்பாட்டத்திற்கு இடையூறு விளைவிக்கப்பட்டாலோ…
-
- 0 replies
- 176 views
-
-
கேலிக்கூத்தான... வீதித் தடைகள் மூலம், போராட்டங்களை... தடுக்க முடியாது: நிரந்தர வீதித் தடைகளை அகற்றவும் – சஜித் நிரந்தர வீதித் தடைகளை அகற்றுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். அரசாங்கம், தற்போது அதிகாரத்தை பாதுகாத்துக்கொள்வதற்காக மக்களுக்கு எதிராக அழுத்தங்களையும் ஒடுக்குமுறைகளையும் அச்சுறுத்தல்களையும் விடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார். இந்த விடயம் குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், கொழும்பு கோட்டை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வீதிகளை மறித்து நிரந்தர வீதித் தடைகளை இட்டுள்ளமை அதன் ஒரு செயற்பாடு என சுட்டிக்காட்டியுள்ளார். லோட்டஸ் வீதி முற்றாக மூடப்பட்டுள்ளமையினால் வாகனங்கள் கொ…
-
- 0 replies
- 137 views
-
-
எதிர்வரும் மூன்று நாட்களுக்கு... மின்வெட்டு அமுல்படுத்தப்படும், நேரம் குறித்த அறிவிப்பு நாட்டில் இன்று (திங்கட்கிழமை) முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, குறித்த மூன்று நாட்களிலும் A முதல் L மற்றும் P முதல் W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் முற்பகல் 9.30 முதல் மாலை 5.30 வரையான காலப்பகுதியில் சுழற்சி முறையில் 2 மணிநேரம் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, குறித்த வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையான காலப்பகுதியினுள் சுழற்சி முறையில் ஒரு மணித்…
-
- 0 replies
- 382 views
-