ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142865 topics in this forum
-
நாட்டில் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சார தட்டுப்பாடுகளை தவிர நாட்டில் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என சபாநாயகர் தெரிவித்தார். இன்று (06) காலை பாராளுமன்றம் ஆரம்பமாகி விசேட உரையொன்றை ஆற்றிய போதே சபாநாயகர் இதனைத் தெரிவித்தார். கடந்த சில நாட்களாக பாராளுமன்ற உறுப்பினர்கள் பல அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு மற்றும் சிறப்புரிமைகளை பாதுகாப்பவர் என்ற வகையில் இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினருக்கு பணிப…
-
- 0 replies
- 107 views
-
-
இலங்கையின் பொருளாதாரம் குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கியின் அறிவிப்பு 2022 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2.4% ஆக குறையும் என ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) கணித்துள்ளது. கொவிட்-19, கடன்கள் மற்றும் குறைந்த வெளிநாட்டு கையிருப்பு போன்ற காரணங்களால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி குறிப்பிட்டுள்ளது. அதேபோல், 2023 ஆம் ஆண்டில் 2.5% ஆக சிறிதளவு பொருளாதார வளர்ச்சி மேம்படும் என அந்த வங்கி குறிப்பிட்டுள்ளது. இலங்கையின் பொருளாதாரம் குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கியின் அறிவிப்பு (adaderana.lk)
-
- 0 replies
- 142 views
-
-
நாட்டின் டொலர் பிரச்சினைக்கு எம்மிடம் தீர்வு உள்ளது! நாட்டின் தற்போதைய நிலைமை குறித்த பாராளுமன்ற விவாதம் இன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. நேற்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து இன்று மற்றும் நாளை பாராளுமன்றில் விவாதம் ஒன்றை மேற்கொண்டு தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 10.17 AM..... நாட்டின் டொலர் பிரச்சினையை தீர்ப்பதற்காக எம்மிடம் தீர்வு உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பெண்டோரா ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இந்நாட்டு டொலர் கொள்ளையினை அந்தந்த நாடுகளில் இருந்து இந்நாட்டுக்கு கொண்டு வருவதன் மூலம் டொலர் பிரச்சினைக்க…
-
- 0 replies
- 167 views
-
-
சபையில்... மூன்று முக்கியமான, கேள்விகளை தொடுத்தார் சஜித் நாடாளுமன்ற அமர்வு இன்று (புதன்கிழமை) ஆரம்பமாகியபோது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மூன்று முக்கிய கேள்விகளை எழுப்பினர். எதற்காக அவசரநிலை விதிக்கப்பட்டது? ஏன் ஊரடங்கு உத்தரவு? சமூக ஊடகங்கள் ஏன் முடக்கப்பட்டன? என்பதற்கான காரணத்தை கூறுமாறு சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பினார். நாட்டில் ஒரு சர்வாதிகாரத்தை கொண்டுவருவதற்கான ஒரு கொடூரமான முயற்சி இது என்றும் நீங்கள் தன்னிச்சையாக நடந்து கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார். இதேவேளை டொலர் நெருக்கடியை தீர்க்கவும் நாட்டை மீட்டெடுக்கவும் பண்டோரா ஆவணங்களில் பெயரிடப்பட்டவர்களின் பின்னல் சென்று பணத்தை பெற்றுக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார். …
-
- 0 replies
- 155 views
-
-
இராணுவ மோட்டார் சைக்கிள் பிரிவு - பொலிஸாருக்கிடையில் முறுகல் - விசாரணை செய்யுமாறு இராணுவத் தளபதி கோரிக்கை பொருளாதார நெருக்கடியையடுத்து அரசுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் மக்கள் எழுச்சிப் போராட்டம் தீவிரமடைந்து வருகின்றது. இந்நிலையில், நேற்றையதினம் பாராளுமன்ற நுழைவாயிலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. குறித்த ஆர்ப்பாட்டத்தின்போது இலக்கத் தகடுகள் இல்லாத மோட்டார் சைக்கிள்களில் இராணுவ உடையணிந்து முகமூடிகளுடன் ஆயுதமேந்திய சிலர் வருகை தந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இவ்வாறு வந்தவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியதுடன் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதுதொடர்பான காணொளிகள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன. இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்ப…
-
- 3 replies
- 320 views
-
-
பிரதி சாபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின்... இராஜினாமா கடித்தை, ஏற்க மறுத்தார் ஜனாதிபதி! பிரதி சாபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் இராஜினாமா கடித்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை தொடர்ந்தும் பேணுமாறும் ஜனாதிபதி இவரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானத்திருந்தது. இதனைத் தொடர்ந்து பிரதி சாபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தனது பதவியினை இராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1275294
-
- 1 reply
- 223 views
-
-
"பண்டோரா" ஆவணங்களில்.... சிக்கிய, நிருபமா ராஜபக்ச.... டுபாய்க்கு பறந்தார் ! முன்னாள் பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக்ஷ டுபாய் நோக்கி சென்றதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர் நேற்று இரவு 10.25 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எமிரேட்ஸ் விமானத்தில் நாட்டை விட்டு வெளியேறினார். பண்டோரா வெளியிட்ட உலகளாவிய ரீதியில் மறைக்கப்பட்ட சொத்துக்கள் அடங்கிய ஆவணங்களில் நிருபமா ராஜபக்ஷவின் பெயரும் உள்ளடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1275295
-
- 1 reply
- 246 views
-
-
எந்தவொரு அமைச்சுப் பதவியையும்.... ஏற்கப் போவதில்லை – ஜனாதிபதிக்கு அறிவித்தது மைத்திரி தரப்பு! எந்தவொரு அமைச்சுப் பதவியையும் ஏற்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் நேற்று(செவ்வாய்கிழமை) முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றிந்தது. இதன்போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இதுகுறித்து அறிவிக்கப்பட்டதாக கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1275305
-
- 1 reply
- 214 views
-
-
பதவியை இராஜினாமா... செய்த அன்றே, டுபாய்க்கு பறந்த நாமல்? விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியை கடந்த ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி இராஜினாமா செய்த நாமல் ராஜபக்ஷ, அன்றிரவே டுபாய் சென்றுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் (மனைவி, மகன் மற்றும் மாமியார்) ஏப்ரல் 2ஆம் திகதி மாலைத்தீவுக்குச் சென்றதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியை பதவி விலகக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்குப் பதிலளிக்கும் வகையில் பல அமைச்சரவை அமைச்சர்கள் பதவியை இராஜினாமா செய்தனர். அதற்கமைய விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவும் தனது பதவியை இராஜினாமா செய்ததாக கடந்த 3ஆம் திகதி அறிவித்தார். இலங்கை மக்களுக…
-
- 8 replies
- 609 views
-
-
இடைக்கால நிர்வாகத்தை... உருவாக்கும் போதுதான், எமக்கு நிரந்தர தீர்வை நோக்கி நகரலாம் – எம்.கே.சிவாஜிலிங்கம் வடக்கு கிழக்கில் இடைக்கால நிர்வாகத்தை உருவாக்கும் போதுதான் எமக்கு நிரந்தர தீர்வை நோக்கி நகர்வதற்கு உதவியாக இருக்கும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய மூன்று அணிகளும் இவற்றை சாதகமாக பரிசீலிக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வல்வட்டிதுறையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதியின் கோரிக்கையின்படி காபந்து அரசாங்கத்தை பிரதான …
-
- 2 replies
- 247 views
-
-
இலங்கை நெருக்கடி: 'கோட்டாபய ராஜபக்ஷ எங்களை ஒன்றுசேர்த்திருக்கிறார்' - போராட்டக் களத்தில் ஒலிக்கும் குரல் 3 மணி நேரங்களுக்கு முன்னர் 'எங்களுடைய இன்னல்களை சிங்கள மக்கள் தற்போதுதான் புரிந்துகொண்டிருக்கிறார்கள். அனைத்துத் தரப்பினரையும் கோட்டாபய ஒன்று சேர்த்திருக்கிறார். அவருக்கு நன்றி' என கொழும்பில் வசிக்கும் தமிழர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுப் பெற்று வருகின்றது. கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் 24 மணிநேர போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருவதை காண முடிகின்றது. பெரும்பால…
-
- 1 reply
- 298 views
- 1 follower
-
-
ஜனாதிபதி... பதவி விலக வேண்டிய, அவசியம் இல்லை – நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதி பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிறுவ வேண்டிய அவசியம் இருப்பதால், அது நிறைவேறினால், ஜனாதிபதி பதவி விலக வேண்டிய அவசியமில்லை என குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் பெறும் கட்சிக்கு அரசாங்கம் வழங்கப்படும் என ஜனாதிபதி தெளிவாக கூறியுள்ளதால், மக்கள் வீதியில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்திற்குள் 113 ஆசனங்களைப் பெறுவதன் மூலம் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பலத்தைப் பெற முடியு…
-
- 9 replies
- 644 views
-
-
ஜனாதிபதியுடனான சந்திப்பையடுத்து... ஜீவன் தொண்டமானும், இராஜினாமா? இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானும் தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றது. இதன்போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி சாதகமான பதில்களை வழங்கி இருந்தாலும் அவற்றை நடைமுறைப்படுத்துவது குறித்த சந்தேகம் உள்ளதாக ஜீவன் தொண்டமான் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கட்சியாக ஒரு தீர்மானம் எடுத்து தான் பதவி விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அதற்கான கடிதம் ஏற்கனவே பிரதமருக்கு அனுப்பப்பட்டு, ஜனாதிபதிக்கும் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜீவன் தொ…
-
- 1 reply
- 231 views
-
-
ஜனாதிபதியை... பதவி விலகுமாறு, நாடாளுமன்றத்தால்... கூற முடியாது – சபாநாயகர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு நாடாளுமன்றத்தினால் கோரிக்கை விடுக்க முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி பதவி விலகுவது, புதிய ஜனாதிபதியை நாடாளுமன்றத்தின் ஊடாக நியமித்தல் அல்லது இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது குறித்த யோசனை முன்வைக்கப்பட்டது. எவ்வாறாயினும், அதற்கான அரசியலமைப்பு ஏற்பாடுகள் எதுவும் இல்லை என சபாநாயகர் கட்சித் தலைவர்களுக்கு அறிவித்துள்ளார். இதேவேளை, நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என்பதால், நாடாளுமன்ற பெரும்பான்மையுடன் தீர்மானத்தை…
-
- 1 reply
- 198 views
- 1 follower
-
-
பொருளாதார பிரச்சினைக்கு மத்தியில்... வடக்கில் காணி சுவீகரிப்பு, நடவடிக்கை! காணி உரிமையாளர்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் இன்று புதன்கிழமை எழுவை தீவு பகுதியில் 4 பரப்பு காணி கடற்படையினரின் தேவைக்காக அளவீடு செய்யப்பட இருக்கிறது. இலங்கை மக்கள் பொருளாதாரத்தில் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்ற நிலையில், வடகிழக்கில் காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு காணி உரிமையாளர் எதிர்ப்பை வெளியிட்டுள்ள நிலையில் அவர்களுடன் இணைந்து போராட பொது அமைப்புகள், அரசியல் பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1275311
-
- 0 replies
- 148 views
-
-
நிதி அமைச்சராக... இன்று பதவியேற்கின்றார், பொருளாதாரத் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்ற பந்துல ! முன்னாள் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (புதன்கிழமை) நிதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என அறியமுடிகின்றது. இவரது நியமனம் உறுதி செய்யப்பட்டால் ஒரு வாரத்திற்குள் இலங்கையில் பதவியேற்கும் 3 ஆவது நிதி அமைச்சர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. பந்துல குணவர்தன பெய்ஜிங் வெளிநாட்டுக் கற்கைகள் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றவர் ஆவார். பொருளாதாரத்தை கையாளும் விதம் குறித்து முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, பந்துல குணவர்தனவுடன் முரண்பட்டதாக பொதுஜன பெரமுனவின் மூத்த வட்டாரம் தெரிவித்துள்ளது. https://a…
-
- 0 replies
- 162 views
-
-
அவசரகாலச் சட்டத்தினை நீக்கினார் ஜனாதிபதி! by யே.பெனிற்லஸ் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட பிரகடனத்தை இரத்து செய்யும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார். இன்று(செவ்வாய்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது https://athavannews.com/2022/1275286
-
- 9 replies
- 542 views
-
-
அரசதரப்பு உறுப்பினர்கள்... கோட்டாவை, பலிகடா ஆக்க முயற்சிக்கின்றனர் – பொன்சேகா அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பலிகடா ஆக்க முயற்சிக்கின்றனர் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். ஜனாதிபதி மீது பழியை சுமத்திவிட்டு நாடாளுமன்றில் அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டுவந்த அவர்களுக்கும் சமமான பொறுப்பு உள்ளது என சரத் பொன்சேகா தெரிவித்தார். https://athavannews.com/2022/1275201
-
- 2 replies
- 218 views
-
-
பெரும் பான்மையை... தக்கவைக்க, பஷில் கடும் பிரயத்தனம் – கொழும்பில் தொடர் பேச்சுகள் முன்னெடுப்பு? நாடாளுமன்றத்தில் சாதாரணப் பெரும்பான்மையை வைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பஷில் ராஜபக்ச ஆகியோர் தொடர் பேச்சுக்களில் ஈடுபட்டுவருகின்றனர். அந்தவகையில் சுயாதீனமாக இயங்குவார்கள் என இன்று(செவ்வாய்கிழமை) அறிவிக்கப்பட்ட 43 பேரில் மூவர், தாம் இன்னும் அவ்வாறானதொரு முடிவை எடுக்கவில்லை என அறிவித்துள்ளனர். அருந்திக்க பெர்ணாண்டோ (அனுர பிரியதர்சன யாப்பா அணி), ரொஷான் ரணசிங்க (அனுர பிரியதர்சன யாப்பா அணி), கயான் (விமல் அணி) ஆகிய மூவரே இவ்வா…
-
- 0 replies
- 249 views
-
-
பாடசாலைகளின்... கல்வி நடவடிக்கை, மேலும் ஒரு மணி நேரம் நீடிப்பு !! எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கை மேலும் ஒரு மணி நேரம் நீடிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள முதலாம் தவணையிலிருந்து டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி வரை கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் விடுமுறைகள் உள்ளிட்ட பாடசாலை அட்டவணைகள் அதிபர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா கூறினார். https://athavannews.com/2022/1275299
-
- 0 replies
- 150 views
-
-
இலங்கையில் கோட்டாபய ராஜபக்ஷவை அதிபர் பதவியில் இருந்து நீக்க முடியுமா? 9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் தற்போது அரசியல் நெருக்கடியும் தீவிரமடைந்திருக்கிறது. அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவையில் அவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பதவி விலகிவிட்டனர். இப்படியொரு ஆளுங் கூட்டணியில் இருந்து 40-க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் விலகி சுயேச்சையாகச் செயல்படப் போவதாக நாடாளுமன்றத்தில் அறிவித்திருக்கிறார்கள். இப்போது கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இருக்…
-
- 0 replies
- 238 views
- 1 follower
-
-
இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இழந்தது ஆளும் கூட்டணி Getty ImagesCopyright: Getty Images இலங்கையில் ஏற்பட்டுள்ள பெரும் பொருளாதார நெருக்கடியால், ஆளும் கூட்டணியில் இருந்து கட்சிகள் தொடர்ந்து விலகி வருகின்றன. இதனால், பெரும்பான்மையை ராஜபக்ஷ அரசு இழந்துள்ளது. இலங்கை மக்கள் பாரியளவிலான போராட்டங்களை ஆரம்பித்து, நாடு தழுவிய ரீதியில் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வரும் சூழ்நிலையில், இலங்கை நாடாளுமன்றம் கூடியுள்ளது. நாடாளுமன்றம் கூடிய வேளையில், அமைச்சர்கள் இல்லாமை குறித்து எதிர்கட்சிகள் தமது எதிர்ப்பை வெளியிட்டன. நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைக்கு பதில் வழங்க சபையில் எவரும் கிடையாது என தேசிய…
-
- 2 replies
- 379 views
- 1 follower
-
-
அமைச்சர்களின் வீடுகள் மீது தாக்குதல் – அதிகாரத்தை, பயன்படுத்துமாறு... ஜனாதிபதியிடம் ரொஷான் ரணசிங்க கோரிக்கை! நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அதிகாரத்தை பயன்படுத்துமாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அமைச்சர்களின் வீடுகள் மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் ஜாதிக ஜன பலவேகய, முன்னிலை சோசலிசக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிகளின் பலருக்கு தொடர்பு இருப்பதாக அவர் தெரிவித்தார். தற்போதைய அரசாங்கம் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மக்கள் தங்கள் கோபத்தை காட்ட வீதிக்கு வந்ததாக கூறிய அவர், ஆனால் பல கட்சி உறுப்பினர்கள் போராட்டங்கள் மூலம் தங்களுக்கு…
-
- 1 reply
- 170 views
-
-
நாட்டின்... தற்போதைய நிலைமை குறித்து, இரண்டு நாட்கள் விவாதம் ! நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து நாளையும் (புதன்கிழமை) நாளை மறுதினமும் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளது. கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க அறிவித்துள்ளார். https://athavannews.com/2022/1275269
-
- 0 replies
- 267 views
-
-
ஒஸ்லோ, பாக்தாத் மற்றும் சிட்னி... தூதரகங்கள் மூடப்பட்டன! வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகத்தை மூட வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது. அதன்படி ஒஸ்லோ, நோர்வே மற்றும் பாக்தாத், ஈராக் ஆகிய இடங்களில் உள்ள தூதரகங்கள் மற்றும் சிட்னியில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் மூடப்படவுள்ளது. ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் குறித்த தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1275271
-
- 0 replies
- 207 views
-