Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரசாங்கத்திற்கு எதிராக... தொடரும், போராட்டங்கள் – மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை! போராட்டங்களின்போது அநாகரீகமாக நடந்துகொள்ளும் மற்றும் வன்முறையில் ஈடுபடும் நபர்களை கைது செய்யவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். அரசாங்கத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில், தீ வைப்பு, சட்டவிரோதமாக பிரவேசித்தல் மற்றும் தவறான நடத்தை போன்ற சம்பவங்கள் பதிவாகி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறான சம்பவங்களுக்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காணொளி ஆதாரங்களின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு மக்களுக்கு உரிமை இருந்தாலும் அவ…

  2. “படையினர்கள் எப்போதும்.... அரசியலமைப்பிற்கு உட்பட்டே, செயற் படுவார்கள்” ஆயுதப்படையினர்கள் எப்போதும் அரசியலமைப்பிற்கு உட்பட்டு செயற்படுவார்கள் என பாதுகாப்பு படைகளின் பிரதானியும் இராணுவ தளபதியான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இலங்கையில் உள்ள வெளிநாட்டு உயர்ஸ்தானிகராலயங்கள் மற்றும் தூதரகங்களின் பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் இணைப்பாளர்களை, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இராணுவத் தளபதி நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, ஜெனரல் சில்வா, நாட்டின் தற்போதைய நிலவரங்கள் குறித்து வெளிநாட்டு தூதரக அதிகாரிகளுக்கு விளக்கமளித்ததாக கூறப்படுகிறது. மேலும் நாட்டின் பாதுகாப்பிற்காக ஆயுதப்படை எப்போதும் செயற்படுவதாக இராணுவத் தளபதி…

  3. அவசரகால சட்டத்தை...- நீடிக்கும் பிரேரணைக்கு, ஆதரவளிக்கப்போவதில்லை – ஆளும்கட்சி உறுப்பினர் அதிரடி அவசரகால சட்டத்தை நீடிக்கும் பிரேரணைக்கு ஆதரவளிக்கப்போவதில்லை என ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். அவசரகால சட்டத்தை நீடித்துக்கொள்வதற்காக நாடாளுமன்றத்தில் பிரேரணை கொண்டுவரும் நிலையில் அதற்கு ஆதரவளிப்பது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணைக்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனுர பிரியதர்ஷன யாப்பா, சந்திம வீரக்கொடி ஆகியோரும் ஆதரவாக வாக்களிக்கப் போவதில்லை என்றும் குறிப்பிட்டார். இவர்கள் அல்லாமல் அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளில் இருக்கும் அதிகம…

  4. அரசாங்கத்திற்கு... ஐக்கிய நாடுகள் சபை, கடும் அழுத்தம்! அரசியல் அமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள உரிமைகளை அனுபவிகஃபாவும் வன்முறைகளைத் தோற்றுவிப்பதற்கும் இடையிலான வேறுபாட்டை அரசாங்கம் விளங்கிக்கொள்ள வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது. அவசரகாலச்சட்டம் மற்றும் ஊரடங்குச் சட்டம் என்பன பிறப்பிக்கப்பட்டமை மற்றும் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டமை குறித்து கருத்து தெரிவிக்கும்போதே ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் இதனை தெரிவித்தார். ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமை, தமது கருத்துக்கள் மற்றும் நிலைப்பாடுகளை வெளிக்காட்டுவதற்கான உரிமை என்பன மக்களின் அடிப்படை உரிமை என சுட்டிக்காட்டிய அவர், இலங்கையில் கருத்துச்…

  5. நாடாளுமன்றம் மற்றும் வளாகத்தைச் சுற்றி... பலத்த பாதுகாப்பு! நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ள நிலையில், நாடாளுமன்றம் மற்றும் அதன் வளாகத்தில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த பகுதிக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். நாடாளுமன்ற பாதுகாப்பு தொடர்பாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போதே, நாட்டின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்படுகின்ற ஆர்ப்பாட்டங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அமர்வுகள் இன்று முற்பகல் 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், வாய்மூல விடைக்கான வினாக்களுக்கான நேரம்…

  6. இரவாகியும் இடம்பெறும் அரச எதிர்ப்பு போராட்டங்கள் ! நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலையை அடுத்து மக்களின் அரச எதிர்ப்பு போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. ஜனாதிபதி உள்ளிட்ட ஏனைய அரசியல்வாதிகளை பதவியில் இருந்து விலகுமாறு கோரி மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது கொழும்பு காலிமுகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகம், சுதந்திர சதுக்கம் போன்ற பகுதிகளில் பெருந்திரளான மக்கள் ஒன்று திரண்டு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதைவிட கண்டி, மட்டக்குளி, கொட்டாஞ்சேனை போன்ற பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதேவேளை, பிலியந்தலை பகுதியில் அமைந்துள்ள காமினி லொக்குகேயின் வீட்டுக்கு முன் மக்கள் ஆர்ப்பாட்…

  7. பிள்ளையானின்... கட்சி அலுலகத்தினை, முற்றுகையிட்ட... இரா.சாணக்கியன் உள்ளிட்ட தரப்பினர் – பொலிஸார் குவிக்கப்பட்டனர்! மட்டக்களப்பிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமை காரியாலயம் ஆர்ப்பாட்டக்காரர்களினால் முற்றுகையிடப்பட்டதனால் அப்பகுதியில் பதற்றமான நிலையேற்பட்டது. அத்தியாவசிய பொருட்களுக்கான விலை அதிகரிப்பு மற்றும் பொருளாதார நெருக்கடிகளை கண்டித்தும்அரசாங்கத்தினை பதவி விலகுமாறு கோரியும் நாடளாவிய ரீதியில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் இன்று(திங்கட்கிழமை) மாலை மட்டக்கள்பபு கல்லடி பாலத்திலிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. …

  8. ஜனாதிபதி செயலகத்தினை... முற்றுகையிட்டுள்ள, போராட்டக்காரர்கள் – பாதுகாப்பினை பலப்படுத்த படையினர் குவிக்கப்பட்டனர்! ஜனாதிபதி செயலகத்தினை முற்றுகையிட்டு தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை பதவி விலகுமாறு கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன்காரணமாக குறித்த பகுதியில் அதிகளவான படையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1274977

  9. ஜனாதிபதிக்கு... மிகவும் நெருக்கமான சிலர், நாட்டினை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு மிகவும் நெருக்கமான சிலர் நாட்டினை விட்டு வெளியேறிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக ஜனாதிபதிக்கு மிகவும் நெருக்கமானர் என கூறப்படும் அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியும் அவரது குடும்பத்தினரும் நாட்டினை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகின்றது. விமானத்தில் பயணிப்பதற்காக அவர்கள் செல்லும் புகைப்படம் ஒன்றும் வைரலாகி வருகின்றது. அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வலுவடைந்து வரும் நிலையிலேயே இந்த தகவல்களும் வெளியாகியுள்ளன. இதேவேளை, நாமல் ராஜபக்ஷவின் மனைவி உள்ளிட்ட சிலர் நேற்ற…

  10. இன்று முதல், மின்வெட்டு – வெளியானது திடீர் அறிவிப்பு! நாளாந்த மின் துண்டிப்பினை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய பிற்பகல் 2.30 மணியிலிருந்து 6.30 மணிவரை ஒரு மணிநேர மின் துண்டிப்பும், மாலை 6.30 முதல் இரவு 10.30 மணிவரை 45 நிமிடமும் இன்று முதல் அமுலாகும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நேர அளவு நாளாந்த நிலைமையின் அடிப்படையிலேயே இந்த தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1267700

  11. இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக... நந்தலால் வீரசிங்க, நியமனம் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக கலாநிதி பி.நந்தலால் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது IMF உடன் ஒரு துணை ஆளுநராக இருக்கும் வீரசிங்க, ஏப்ரல் 7 ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்கவுள்ளார். இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக பதவி வகித்த அஜித் நிவார்ட் கப்ரால் நேற்று பதவியை இராஜினாமா செய்ததையடுத்து, அவருக்குப் பதிலாக நந்தலால் வீரசிங்க நியமிக்கப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1275017

  12. பிரதமர் வீட்டுக்கு முன்பாக... கைதான 12 பேரும், பிணையில் விடுவிப்பு ! தங்காலை, கார்ல்டன் இல்லத்திற்கு முன்பாக இடம்பெற்ற போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டிருந்த 12 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். நேற்று பிற்பகல் அதிகளவான போராட்டக்காரர்கள் தங்காலை நகரில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கார்ல்டன் இல்லத்தை நோக்கி பேரணியாக செல்ல முயற்சித்தனர். இதன்போது பொலிஸார் கண்ணீர் புகைத் தாக்குதல்களை மேற்கொண்டபோதும் சிலர் கார்ல்டன் இல்லத்திற்குள் நுழைய முயற்சித்தனர். இதன்போது பொலிஸார் 12 பேரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். https://athavannews.com/2022/1275024

  13. அமெரிக்காவிலுள்ள, கோட்டாவின் மகனின்... வீட்டுக்கு, முன்பாகவும் ஆர்ப்பாட்டம்! அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸிலுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மகனின் வீட்டிற்கு வெளியேயும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள இலங்கையர்கள் சிலரே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது அவரது தந்தையை வீட்டிற்கு அழைக்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது. https://athavannews.com/2022/1274851

  14. 6.9 மில்லியன் மக்களின் ஆதரவு... இன்னும் இருப்பதால், ஜனாதிபதி பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை – ஜோன்ஸ்டன் இலங்கையில் உள்ள 6.9 மில்லியன் மக்களின் ஆதரவு இன்னும் இருப்பதால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தனது இராஜினாமாவை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்த அமைச்சர், மக்கள் ஆணையை ஜனாதிபதி இன்னும் வைத்திருப்பதாக தான் நம்புவதாக தெரிவித்தார். ஜனாதிபதிக்கு இன்னும் மக்களின் ஆதரவு உள்ளது என்பதை நிரூபிக்க தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். தற்போது முன்னெடுக்கப்படும் பொதுப் போராட்டங்கள் சிறு போராட்டங…

  15. அரசாங்கத்திற்கு எதிராக... அதிகரிக்கும், போராட்டங்கள் – நாமலின் மனைவி உள்ளிட்ட... சிலர் நாட்டை விட்டு, வெளியேறியுள்ளதாக தகவல்? நாட்டில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் மனைவி லிமினி ராஜபக்ஷ, அவரது பெற்றோர், நாட்டை விட்டு இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை வெளியேறியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக, மக்களிடத்தில் எதிர்ப்புக்கள் அதிகரித்து கொண்டே செல்கின்றன. இந்நிலையிலேயே அவர்கள் நாட்டை விட்டு வெளியியேறியுள்ளதாக குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. நாமல் ராஜபக்ஷவின் மனைவி, லிமினி ராஜபக்ஷவும் அவரது பெற்றோரும் வெளிநாட்டில், தெரியாத இடத்திற்குச் சென்றுள்…

  16. புதிய அமைச்சர்கள், நியமனம் – நிதியமைச்சராக அலி சப்ரி..! அமைச்சர்கள் அனைவரும் தமது இராஜினாமா கடிதங்களை பிரதமரிடம் கையளித்துள்ள நிலையில், இன்று (திங்கட்கிழமை) புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி பசில் ராஜபக்ஷவுக்கு பதிலாக புதிய நிதி அமைச்சராக அலி சப்ரி பதவியேற்றுள்ளார். அத்தோடு, கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்தன சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். மேலும் வெளிவிவகார அமைச்சராக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸும் நெடுஞ்சாலைகள் அமைச்சராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். குறித்த நால்வரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். கடுமையான அரசியல் ஸ்திரமின்மைக்கு மத்தியில் …

    • 8 replies
    • 483 views
  17. இலங்கையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? - அண்மைய தகவல்கள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, வியாழக்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி சாலைகளில் பலகைகளை எரிக்கும் போராட்டக்குழுவினர் இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமாகி அரசு அரசியல் நெருக்கடியாக மாறியிருக்கிறது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை தவிர அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகியிருக்கின்றனர். எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து தேசிய அரசு ஒன்றை அமைக்கும் முயற்சியை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ தொடங்கியிருக்கிறார். ஆனால் எதிர்க்கட்சியினர் யாரும் ஆதரவளிக்கவில்லை. இலங்கையில் என்னெவெல்லாம் …

  18. அவன் கார்ட் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் உரிமையாளரும், குடும்பமும் நாட்டை விட்டுத் தப்பியோட்டம் மிதக்கும் ஆயுதக் கப்பல் ஒன்றினை நடத்திவந்தவரும், தனியான ராணுவத்தைக் கூலிக்கு அமர்த்தி பாதுகாப்பு நிறுவனம் ஒன்றை நடத்திவந்தவருமான நிசங்க சேனாதிபதியும் அவரது குடும்பமும் இன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக மாலைதீவுகளுக்கு தப்பியோடியிருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. கோத்தாபாயவின் நெருங்கிய சகாவான நிசங்க, முன்னர் ராணுவத்தில் பணிபுரிந்தவர் என்றும், இறுதியுத்தத்தில் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பெருமளவு ஆயுதங்ககளை இவரூடாகவே கோத்தாபய விற்று வந்ததாகவும் அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது. கோத்தாவின் ஜனாதிபதி தேர்தலுக்கான செயற்பாடுகளில் அதிகம்…

  19. 113 எம்.பிக்களுடன் வந்தால்... அரசாங்கத்தினை, கையளிக்க தயார் – அதிரடி அறிவிப்பினை வெளியிட்டார் ஜனாதிபதி! 113 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பெரும்பான்மையை நிரூபிப்பவர்களுக்கு அரசாங்கத்தை கையளிக்க தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஆளுங்கட்சி உறுப்பினர்களின் சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1274929

  20. புதிய அமைச்சரவை... புதிய போத்தலில், உள்ள பழைய மது – கம்மன்பில புதிய அமைச்சரவை புதிய போத்தலில் உள்ள பழைய மது என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். எனவே, அடுத்த தலைவர்களை மக்களே தீர்மானிக்க வேண்டும் எனவும் இதை வேறு யாரும் முடிவு செய்யக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய அமைச்சரவை என்பது புதிய போத்தலில் உள்ள பழைய மது என்றும் அத்தியாவசிய சேவைகளை மீளப் பெறுவதற்கும் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கும் அனைத்துக் கட்சிகளின் இடைக்கால அரசாங்கமே தமது கோரிக்கையாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1274837

  21. ஜனாதிபதியை... சந்தித்த, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்.. ஜீவன் தொண்டமான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் மற்றும் இ.தொ. கா. தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் இன்று (திங்கட்கிழமை ) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர். நேற்றைய தினம் அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்களும் பதவிகளை இராஜினாமா செய்துள்ள நிலையில், இ.தொ. காவின் திடீர் சந்திப்பானது கொழும்பு அரசியலில் தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது. மலையக மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில் இ.தொ.கா ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியமை குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனமை குறிப்பிடதக்கது . இதேவேளை அ…

    • 1 reply
    • 230 views
  22. ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்தது கூட்டமைப்பு! இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு கைகோர்க்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த அழைப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிராகரித்துள்ளது. தற்போதைய தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு கைகோர்க்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த அழைப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிராகரித்துள்ளது. இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நாடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார் https://www.virakesari.lk/article/125263

  23. மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் அரசாங்கத்துக்கு எதிராக பல்கலைக்கழகத்தில் இருந்து செங்கலடி சந்திவரையில் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் இன்று (04) திகதி ஈடுபட்டனர். கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியம் இந்த அரசாங்கத்துக்கு எதிரான பேராட்டத்துக்கு அழைப்பு விடுத்ததையடுத்து இன்று திங்கட்கிழமை பல்கலைக்கழக வளாகத்தில் நூற்றுக்கு மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்தனர். இதனையடுத்து ஒன்றிணைந்த மாணவர்கள் கோட்டா வீட்டுக்கு போ, மின்சாத் தடை எரிபொருள், சமையல் எரிவாயு, பால்மா தட்டுப்பாடு மற்றும் பொருட்களின் விலை அதிகரிப்பு போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தி ஜனாதிபதி உ…

  24. மஹிந்த ராஜபக்ஷவின், இல்லத்திற்கு முன்பாக... தொடரும் போராட்டம்! தங்காலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டிற்கு அருகில் உள்ள முதல் தடை அரண்களை (barricades) உடைத்து போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ………………………………………………………………………………………………………………………………………………….. தங்காலையில் உள்ள பிரதமரின் இல்லத்திற்கு முன்பாக போராட்டம்! பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட இல்லமான தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்கு முன்பாக தற்போது போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அரசாங்கம் மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு எதிராக நாட்டின் பெரு…

  25. அரசுக்கு... எதிராக, நாடளாவிய ரீதியில்... தொடர் போராட்டங்கள் நாடளாவிய ரீதியில் மக்களால் நடத்தப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான போராட்டங்கள் பதிவாகி வருகின்றன. அரசுக்கு எதிராகவும் தற்போதைய நெருக்கடிகளுக்கு எதிராகவும் இந்தப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய போராட்டங்களில் பல்வேறு தொழில்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் சிவில் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு 07 பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் குழுவொன்று இன்று காலை கொழும்பு நெலும் பொகுண திரையரங்கிற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல ஹோமாகம நகரிலும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் சுதந்திரக் கலைஞர்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.