Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புதிய அமைச்சரவை... புதிய போத்தலில், உள்ள பழைய மது – கம்மன்பில புதிய அமைச்சரவை புதிய போத்தலில் உள்ள பழைய மது என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். எனவே, அடுத்த தலைவர்களை மக்களே தீர்மானிக்க வேண்டும் எனவும் இதை வேறு யாரும் முடிவு செய்யக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய அமைச்சரவை என்பது புதிய போத்தலில் உள்ள பழைய மது என்றும் அத்தியாவசிய சேவைகளை மீளப் பெறுவதற்கும் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கும் அனைத்துக் கட்சிகளின் இடைக்கால அரசாங்கமே தமது கோரிக்கையாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1274837

  2. ஜனாதிபதியை... சந்தித்த, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்.. ஜீவன் தொண்டமான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் மற்றும் இ.தொ. கா. தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் இன்று (திங்கட்கிழமை ) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர். நேற்றைய தினம் அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்களும் பதவிகளை இராஜினாமா செய்துள்ள நிலையில், இ.தொ. காவின் திடீர் சந்திப்பானது கொழும்பு அரசியலில் தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது. மலையக மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில் இ.தொ.கா ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியமை குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனமை குறிப்பிடதக்கது . இதேவேளை அ…

    • 1 reply
    • 231 views
  3. ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்தது கூட்டமைப்பு! இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு கைகோர்க்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த அழைப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிராகரித்துள்ளது. தற்போதைய தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு கைகோர்க்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த அழைப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிராகரித்துள்ளது. இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நாடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார் https://www.virakesari.lk/article/125263

  4. மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் அரசாங்கத்துக்கு எதிராக பல்கலைக்கழகத்தில் இருந்து செங்கலடி சந்திவரையில் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் இன்று (04) திகதி ஈடுபட்டனர். கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியம் இந்த அரசாங்கத்துக்கு எதிரான பேராட்டத்துக்கு அழைப்பு விடுத்ததையடுத்து இன்று திங்கட்கிழமை பல்கலைக்கழக வளாகத்தில் நூற்றுக்கு மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்தனர். இதனையடுத்து ஒன்றிணைந்த மாணவர்கள் கோட்டா வீட்டுக்கு போ, மின்சாத் தடை எரிபொருள், சமையல் எரிவாயு, பால்மா தட்டுப்பாடு மற்றும் பொருட்களின் விலை அதிகரிப்பு போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தி ஜனாதிபதி உ…

  5. மஹிந்த ராஜபக்ஷவின், இல்லத்திற்கு முன்பாக... தொடரும் போராட்டம்! தங்காலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டிற்கு அருகில் உள்ள முதல் தடை அரண்களை (barricades) உடைத்து போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ………………………………………………………………………………………………………………………………………………….. தங்காலையில் உள்ள பிரதமரின் இல்லத்திற்கு முன்பாக போராட்டம்! பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட இல்லமான தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்கு முன்பாக தற்போது போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அரசாங்கம் மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு எதிராக நாட்டின் பெரு…

  6. அரசுக்கு... எதிராக, நாடளாவிய ரீதியில்... தொடர் போராட்டங்கள் நாடளாவிய ரீதியில் மக்களால் நடத்தப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான போராட்டங்கள் பதிவாகி வருகின்றன. அரசுக்கு எதிராகவும் தற்போதைய நெருக்கடிகளுக்கு எதிராகவும் இந்தப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய போராட்டங்களில் பல்வேறு தொழில்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் சிவில் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு 07 பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் குழுவொன்று இன்று காலை கொழும்பு நெலும் பொகுண திரையரங்கிற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல ஹோமாகம நகரிலும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் சுதந்திரக் கலைஞர்க…

  7. யாழ். பல்கலைக்கழக மாணவர்களின்... போராட்டம் பலாலி வீதி வீதியிலிருந்து, யாழ்ப்பாணம் நோக்கி நகர்கின்றது! யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை நீக்குமாறு கோரியே பல்கலைகழகம் முன்பாக இன்றைய தினம்(திங்கட்கிழமை) காலை குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்தநிலையில் குறித்த போராட்டம் தற்போது பலாலி வீதி வீதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி நகர்வதாக ஆதவனின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார் https://athavannews.com/2022/1274766

  8. சமல் ராஜபக்ஷவின்... வீட்டினையும், சுற்றி வளைத்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள்! திஸ்ஸமஹாராமவிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷவின் வீட்டினையும் இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டக்காரர்கள் சுற்றிவளைத்துள்ளனர். திஸ்ஸமஹாராம – தெபரவெவ சந்தியிலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாக சமல் ராஜபக்ஷவின் வீட்டை நோக்கி சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் சமல் ராஜபக்ஷவின் வீட்டிற்கு செல்லும் வீதி அடைக்கப்பட்டு யாரும் உள்ளே செல்ல முடியாதவாறு பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2022/1274899

  9. ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கையை... நிராகரித்தது, எதிர்க்கட்சி! தற்போதைய தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு கைகோர்க்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த அழைப்பை எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்துள்ளது. கட்சி தலைமையகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துடன் கட்சி ஒருபோதும் உடன்படிக்கையை ஏற்படுத்தவோ அல்லது நிர்வாகத்தை அமைக்கவோ போவதில்லை என தெரிவித்தார். கோட்டா வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோள், என்றும் அந்த போ…

  10. அரசாங்கத்திற்கான... உற்சாகமூட்டல்களே, போராட்டங்கள் – வைராக்கியத்துடன் எதிர் கொள்வோம் என்கிறார் டக்ளஸ் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்களை மனவைராக்கியத்துடன் எதிர்கொள்வதற்கான உற்சாகமூட்டல்களாகவே எதிர்தரப்பினரால் தூண்டி விடப்பட்டுள்ள போராட்டங்கள் அமைந்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மேலும் எதிர்வரும் சில வாரங்களுக்குள் நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் சகஜ நிலைக்கு திரும்பும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நாட்டின் தற்போதைய நிலை தொடர்பாக இன்று(சனிக்கிழமை) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினைகளுக்கு பல்வேறு காரணங்கள் இரு…

    • 18 replies
    • 945 views
  11. போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர், பொலிஸாரின் தாக்குதலில்... உயிரிழப்பு என்ற செய்தி உண்மைக்கு புறம்பானது! மிரிஹானவில் அண்மையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து கருத்து வெளியிட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாயிருந்தன. இதற்கு பொறுப்பு கூறும் முகமாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த போராட்டத்தின் போது பொலிஸாரால் தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர், பொலிஸாரின் தாக்குதலில் ஏற்பட்ட காயங்களினால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. எவ்வாறாயினும் கைது செய்யப்பட்டு களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆர்ப்பாட்ட…

  12. பதவியை.. இராஜினாமா செய்தார், மத்திய வங்கியின் ஆளுநர். மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் இன்று (திங்கட்கிழமை) தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ளார். அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா செய்துள்ள சூழலில், இன்று தான் ஆளுநர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைத்துள்ளார். https://athavannews.com/2022/1274789

  13. நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி – ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு! நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய தேசிய நெருக்கடிகளுக்குத் தீர்வுக்காணும் முகமாக, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். இந்த விடயம் குறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று (திங்கட்கிழமை) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனைத்து அரசியல் கட்சிகளையும் அமைச்சர் பதவிகளை ஏற்றுக்கொண்டு தேசிய நெருக்கடியைத் தீர்ப்பதற்கு உதவுமாறு அழைப்பு விடுத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் காரணமாகவே தற்போதைய தேசிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி ச…

  14. ஜனாதிபதியுடன் சந்திப்பு – விசேட அறிவிப்பை வெளியிடவுள்ளார் பிரதமர்? பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (திங்கட்கிழமை) விசேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் தமது இராஜினாமா கடிதத்தை நேற்றிரவு பிரதமரிடம் ஒப்படைத்திருந்தனர். இதனையடுத்து, அமைச்சரவை இராஜினாமாக்கள் தொடர்பாக உத்தியோகபூர்வமாக ஜனாதிபதிக்கு பிரதமரும் இடையில் இன்று முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இந்த நிலையில், குறித்த சந்திப்பைத் தொடர்ந்து, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2022/1274760

  15. இடைக்கால அரசாங்கத்திற்கு... உடன்பட, சஜித் மறுப்பு! இடைக்கால அரசாங்கத்திற்கு உடன்பட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மறுத்துள்ளார். அனைத்து அமைச்சர்களும் தங்கள் இராஜினாமா கடிதங்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் நேற்று கையளித்ததை அடுத்து அவர் ருவிட்டரில் இந்த விடயம் குறித்து பதிவிட்டுள்ளார். இடைக்கால அரசு என்பது உட்கட்சி அரசியலைத் தவிர வேறில்லை என தெரிவித்துள்ள அவர், புதிய இலங்கையானது வலுவான மாற்றங்களுடனேயே அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும் என்றும் வெறும் தலைமை மாற்றங்களுடன் மட்டுமல்ல என்றும் அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1274740

  16. இலங்கை புதிய அமைச்சரவையில் சேர அனைத்து கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இலங்கையில் நீடித்து வரும் மோசமான நெருக்கடியை சமாளிக்கத் தவறியதாகக் கூறி கொழும்பில் வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட முக்கிய எதிர்கட்சி தலைவரான சஜித் பிரேமதாஸா உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தி கட்சித் தலைவர்கள் இலங்கை தற்போது எதிர்கொண்டு வரும் மோசமான நெருக்கடி நிலைக்கு தீர்வு காணும் விதமாக உத்தேசிக்கப்பட்டுள்ள அனைத்து கட்சி அமைச்சரவையில் சேரும்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பான தகவலை அவரது ஊடக அலுவலகம் வெளியிட்டுள்ளது. …

  17. அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகினர் – நாளை, பதவியேற்கின்றது... புதிய அமைச்சரவை? அமைச்சர்கள் அனைவரும் தங்களது அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், உத்தியோகபூர்வ பதவி விலகல் கடிதங்கள் நாளை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், நாளைய தினம் புதிய அமைச்சரவை பதவியேற்கக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்களின் போராட்டம் வலுவடைந்துள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்து பதவியில் நீடிப்…

  18. யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் போராட்டம் April 4, 2022 யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை நீக்குமாறு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பல்கலை கழகம் முன்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை காலை குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர். https://globaltamilnews.net/2022/175010

  19. ஜனாதிபதியிடம் கையளிக்கப்படாததால்... அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்கள், சட்டபூர்வமானவை அல்ல – சாலிய பீரிஸ் அமைச்சர்கள் தங்கள் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடமே கையளிக்கவேண்டும் என சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார் மேலும் அவ்வாறு இல்லாவிட்டால் அந்த இராஜினாமா கடிதங்கள் சட்டபூர்வமானவை அல்ல என குறிப்பிட்ட அவர், அமைச்சர்கள் தங்கள் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளிக்கும்போதே அவர்கள் அமைச்சர் பதவியிலிருந்து விலகிவிட்டனர் என கருதப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர்கள் தங்கள் இராஜினாமா கடிதங்களை பிரதமரிடம் கையளித்துள்ளனர் என ஊடகங்கள் தெரிவித்துள்ளதாகவும் எனினும் இந்த இராஜினாமா கடிதங்கள் சட்டபூர்வமானவையல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டிய…

  20. அரசாங்கத்தில், மீண்டும் இணையுமாறு... விமல், கம்மன்பில, வாசுதேவ ஆகியோருக்கு ஜனாதிபதி அழைப்பு! நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில மற்றும் திரான் அலஸ் ஆகியோரை மீண்டும் அரசாங்கத்தில் இணைந்துகொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, ஜனாதிபதி நேற்று முன்தினம் தம்மைச் சந்தித்தபோது இந்த அழைப்பினை விடுத்ததாக தெரிவித்துள்ளார். தங்களை மீண்டும் அரசாங்கத்தில் இணையுமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டதாகவும் ஆனால், அனைத்துக் கட்சிகளுடனும் கலந்தாலோசித்து இடைக்கால நிர்வாகமொன்றை உருவாக்காத பட்சத்தில் தாங்கள் அவ்வாறு செய்ய மு…

  21. அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்களை... ஏற்பாரா, ஜனாதிபதி? – இறுதி முடிவு இன்று! அமைச்சரவை அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (திங்கட்கிழமை ) ஏற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் தமது இராஜினாமா கடிதத்தை நேற்றிரவு பிரதமரிடம் ஒப்படைத்துள்ளதாக தினேஸ் குணவர்தன உறுதிபடுத்தியிருந்தார். மேலும் அமைச்சரவை இராஜினாமாக்கள் தொடர்பாக உத்தியோகபூர்வமாக ஜனாதிபதிக்கு, பிரதமரும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2022/1274671

  22. அரசாங்கத்தில் இருந்து... வெளியேறுமா, சுதந்திரக் கட்சி? – தீர்மானம் இன்று! ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதா? இல்லையா? என்பது குறித்து இன்று (திங்கட்கிழமை) தீர்மானிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசசேட கூட்டமொன்று நேற்றிரவு கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், அவரது இல்லத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை மற்றும், அரசாங்கத்திலிருந்து வெளியேறுவது குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவ…

  23. நாட்டின், வங்கித் துறையும்... ஆபத்தில் உள்ளது – ரணில் எச்சரிக்கை! நாட்டில் தற்போதைய பொருளாதார நெருக்கடி குழப்பமடைந்து அரசியல் நெருக்கடியாக மாறியுள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும் நாட்டின் வங்கித் துறையும் ஆபத்தில் இருப்பதாக அவர் எச்சரித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த அவர், அரசாங்கத்தின் அதிகாரத்துவ ஆயுதங்கள் வெவ்வேறு திசைகளில் செல்வதால் பொருளாதார நெருக்கடி குழப்பமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மத்திய வங்கி போன்ற நிறுவனங்கள் ஒரு திசையில் செல்கின்றன என்றும் ஏனைய நிறுவனங்கள் மற்றொரு திசையில் செல்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்தியாவிடம் இருந்து பெறும் கடன் சில வாரங்களுக்கு மட்ட…

  24. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்... சில உறுப்பினர்கள், சுயாதீனமாக செயற்பட முடிவு மக்களின் ஆணையை பொருட்படுத்தாமல் அதிகாரத்தில் இருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்தால் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சில உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் உட்பட 50 இற்கும் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர். அரசாங்கத்தின் 113 பெரும்பான்மையை இல்லாமல் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1274702

  25. பிரதமர் மஹிந்த, தொடர்ந்தும்... பதவியில் நீடிப்பார் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்து பதவியில் நீடிப்பார் எனவும் ஏனைய அமைச்சரவை அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்கள் பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, அரசியலமைப்பின் 49 ஆவது பிரிவிற்கு அமைய, பிரதமர் பதவி விலகவில்லை என்றால் உத்தியோகபூர்வமாக அமைச்சரவை கலைக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2022/1274649

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.