ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142866 topics in this forum
-
ஜனாதிபதியின் வீட்டிற்கு அருகில்... முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது, கைதானவர்களுக்கு ஆதரவாக... களமிறங்கியுள்ள 300 சட்டத்தரணிகள்! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டின் முன்பாக இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் சார்பாக அதிகளவான சட்டத்தரணிகள் மிரிஹான பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளனர். சுமார் 300 இற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் இவ்வாறு ஆஜராகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு சட்டத்தரணிகள் தமது சேவைகளை இலவசமாக வழங்க தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. https://athavannews.com/2022/1274334
-
- 0 replies
- 86 views
-
-
சர்வதேச நாணய நிதியத்தின்... இலங்கை தொடர்பான, அறிக்கை மீது 8ஆம் திகதி விவாதம் சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ள இலங்கை தொடர்பான அறிக்கை மீதான விவாதம் எதிர்வரும் 8ஆம் திகதி நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது. சபை முதல்வர் அமைச்சர் தினேஸ் குணவர்தன இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பான அறிக்கையினை அண்மையில் முன்வைத்திருந்தது. இது, குறித்த நாடாளுமன்ற விவாதத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் கோரியிருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1274342
-
- 0 replies
- 141 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து, நாங்கள் வெளியேற மாட்டோம் – டெலோ தமிழ் தேசிய கூட்டமைப்பில் நாங்கள் தொடர்ந்து இருப்போம். தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்தில் எங்களுடைய பங்கு இருக்கின்றது என தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமன செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”தமிழ் தேசிய கூட்டமைப்பு சம்பந்தமாக பேசுவதற்கு சுமந்திரனுக்கு அருகதை இல்லை என்பதை நான் இந்த நேரத்தில் கூறிக்கொள்கின்றேன். ஏனெனில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆரம்பித்து 10 வருடங்களுக்கு பின்பு தான் சுமந்…
-
- 0 replies
- 155 views
-
-
ராஜபக்சாக்கள் நாட்டிலிருந்து தப்பியோட முயல்கின்றனரா? theweek Lakshmi Subramanian ராஜபக்சாக்கள் நாட்டிலிருந்து தப்பியோடமுயல்கின்றனர் என கொழும்பில் தகவல்கள் பரவுவதாக இந்தியாவின் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது அதுமேலும் தெரிவித்துள்ளதாவது. இலங்கையில் பொருளாதார நிலை மிக மோசமடைந்துள்ளது,இதற்கு மத்தியில் ராஜபக்சாக்கள் இலங்கையிலிருந்து தப்பியோட முயல்கின்றனர் என்ற தகவல்கள் கொழும்பில் காட்டுதீ போல பரவுகின்றன. கட்டுநாயக்காவிலும் இரத்மலானையிலும் ராஜபக்சாக்களை ஏற்றிக்கொண்டுபயணிப்பதற்காக இரண்டு விமானங்கள் தயார் நிலையில் உள்ளன என்ற தகவல்களும்…
-
- 6 replies
- 661 views
-
-
ஐக்கிய மக்கள் சக்தியினரின்... யாழ் போராட்டத்தில், குழப்பம்! ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பேரணி ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த பேரணி யாழ் மாவட்ட செயலகத்தில் இருந்து யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைந்த இறுதி நேரத்தில் அங்கு அரசாங்கத்துக்கு ஆதரவாக ஒரு ஒரு குழு செயற்படவே அங்கு முறுகல் நிலை உருவானது. முறுகல் நிலை ஏற்பட்டதுடன் கைகலப்பும் உருவானது. பதற்றத்தை தணிப்பதற்காக பொலிஸார் குவிக்கப்பட்டு அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன் கைகலப்பில் சிலர் காயமடைந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய மக்…
-
- 16 replies
- 853 views
-
-
நுகேகொடை – மிரிஹான ஆர்ப்பாட்டத்தின் போது... கைதான 21 பேருக்கு பிணை நுகேகொடை – மிரிஹான பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைதானவர்கள் 21 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளர். இவர்கள் தலா 100,000 ரூபாய் சரீர பிணையில் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர். கங்கொடவில நீதவான் முன்னிலையில் அவர்களை ஆஜர்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கைதான மேலும் 6 பேருக்கு 4ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கைது செய்யப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோரை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கங்கொடவில நீதவான் உத்தரவிட்டுள்ளார். …
-
- 0 replies
- 100 views
-
-
40 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிலான... டீசல் தாங்கிய கப்பல், நாட்டினை வந்தடைந்தது! இந்திய கடன் வசதியின் கீழ், 40 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிலான டீசல் தாங்கிய கப்பலொன்று இன்று(வெள்ளிக்கிழமை) நாட்டை வந்தடைந்துள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த கப்பலில் இருந்து இன்று மாலை எரிபொருள் தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1274396
-
- 0 replies
- 133 views
-
-
பண்டிகை காலத்தில்... லாஃப்ஸ் சமையல் எரிவாயுவை, நுகர்வோருக்கு வழங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவிப்பு! 5 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் லாஃப்ஸ் சமையல் எரிவாயு கப்பல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. லாஃப்ஸ் நிறுவனத்தின் தலைவர் டபிள்யு கே.எம் வேகப்பிட்டிய இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு முன்னர் இதற்கான நாணயக் கடிதத்தினை விடுவிக்குமாறு விநியோகஸ்தர்கள் தெரிவித்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதனை தொடர்ந்து, நாணயக் கடிதத்தைப் பெற்றுக்கொள்வதற்காக, அரச உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டதாகவும் அவ் தெரிவித்துள்ளார். எனினும், எரிவாயுவை இறக்குவதற்கான கட்டணத்திற்காக அரச வங்கியொன்றினால் 4.9 மில்லியன் அமெரிக…
-
- 0 replies
- 172 views
-
-
மிரிஹான ஆர்ப்பாட்டம் – 150 இற்கும் மேற்பட்டவர்களிடம் வாக்குமூலம்! நுகேகொடை, மிரிஹான பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் இதுவரை 150 இற்கும் மேற்பட்டவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு திணைகளத்தினால் இவ்வாறு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நுகேகொடை, மிரிஹான பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக விசாரணை நடவடிக்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1274418
-
- 0 replies
- 111 views
-
-
அமைச்சர்களின்... வீடுகளுக்கு, இராணுவ பாதுகாப்பு? அமைச்சர்களின் வீடுகளுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி மற்றும் முக்கிய அமைச்சர் ஆகியோரின் வீடுகளுக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான வீட்டின் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று இரவு (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்தது. அத்துடன், வர்த்தக அமைச்சர் பந்துல வீட்டையும் சுற்றிவளைத்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளதாக தெரிவக்கப்படுகிறது. இவ்வாறு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் நிலையில் அமைச்ச…
-
- 1 reply
- 328 views
-
-
புலிகளுடன் இணைந்து கூட்டமைப்பை நாமே உருவாக்கினோம்; கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தகுதி சுமந்திரனுக்கு உள்ளதா? ரெலோ விடுதலைப் புலிகளின் ஆசீர்வாதத்துடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை உருவாக்கியவ்கள் நாமே. விடுதலைப் புலிகளை வன்முறையாளர்கள் போல காட்டிக் கொள்ளும் சுமந்திரன், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் அங்கம் வகிக்கும் தகுதியுள்ளதா என கேள்வியெழுப்பியுள்ளார் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன். தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையை சீர்குலைக்கிறார் என எம்.ஏ.சுமந்திரன் மீது நீண்டகாலமாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபயவை சந்திப்பதில்லையென ரெலோ எடுத்த முடிவை சும…
-
- 7 replies
- 597 views
-
-
ஜனாதிபதி.. தனது வீட்டில் இருக்கும்போதே, பேருந்திற்கு தீ வைக்கப்பட்டது – திலும் அமுனுகம நுகேகொட ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பயன்படுத்தலாம் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நுகேகொட ஆர்ப்பாட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து பொலிஸார் நீர்த்தாரை மற்றும் தடியடிப் பிரயோகம் நடத்தி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தை கட்டுப…
-
- 2 replies
- 523 views
-
-
“எனது மனைவியிடம் கேளுங்கள்” தற்போது இடம்பெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல பதிலளித்து கொண்டிருக்கின்றார். கேள்வியெழுப்பிய ஊடகவியலாளர், “ சமையல் எரிவாயு வரிசை பிரச்சினை நாட்டில் எப்படி இருக்கிறது” எனக் கேட்டார். அதற்கு பதிலளித்த அமைச்சர் கெஹலிய, “எரிவாயு வரிசையின் நிலைமை பற்றி எனக்குத் தெரியாது, காஸ் தொடர்பில், எனது மனைவியிடமே கேட்கவேண்டும்” என்றார். Tamilmirror Online || “எனது மனைவியிடம் கேளுங்கள்”
-
- 2 replies
- 399 views
-
-
நேற்றய போராட்டத்தின் பின்னணியில் கடும்போக்குவாதிகள் செயற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு நேற்றிரவு வியாழக்கிழமை இடம்பெற்ற போராட்டம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் நுகோகொடை, ஜூபிலிகனுவ பிரதேசத்தில் இடம்பெற்ற போராட்டத்தில் திட்டமிட்ட கடும்போக்குவாதிகள் வன்முறைகளைத் தூண்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இரும்புக் ஆயுதங்கள் மற்றும் பொல்லுகளுடன் ஆயுதம் ஏந்திய குழுவினர், ஆர்ப்பாட்டக்காரர்களைத் தூண்டிவிட்டு, மிரிஹான பங்கிரிவத்தையில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்தை நோக்கி பேரணியாகச் சென்று கலவரத்தை ஏற்படுத்தியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கலவரக்காரர்கள் திட்டமிட்ட வகையில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி…
-
- 6 replies
- 358 views
-
-
ரூபாயின் பெறுமதி... மேலும் வீழ்ச்சி: டொலரின் பெறுமதி 282 ரூபாயாக அதிகரிப்பு இலங்கை மத்திய வங்கியினால் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின்படி ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 272 ரூபாயாகவும் விற்பனை விலை 282 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. மேலும் ஸ்டெர்லிங் பவுண்டின் கொள்முதல் விலை 359 ரூபாயாகவும் விற்பனை விலை 372 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. அவுஸ்ரேலிய டொலரின் விற்பனை விலை 210 ரூபாயாகவும் கனேடிய டொலரின் விற்பனை விலை 225 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. https://athavannews.com/2022/1272909
-
- 21 replies
- 1.3k views
- 1 follower
-
-
மிரிஹானவில் கைதானோருக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்த வேண்டாம் : இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மிரிஹான சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்த வேண்டாம் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் மிரிஹான சம்பவம் தொடர்பான நிலைமையை ஆராய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சிறப்புக்குழுவொன்றும் மிரிஹான பொலிஸ் நிலையத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது. நேற்று (31) இரவு நுகேகொடை மிரிஹான பெங்கிரிவத்தையிலுள்ள ஜனாதிபதி இல்லத்தை முற்றுகையிட்டு மக்கள் பெரும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். இந்நிலையில், இதனை கட்டுப்படுத்த பொலிஸ், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவம் குவிக்கப்பட்டது. பொலிஸா…
-
- 10 replies
- 522 views
- 1 follower
-
-
ஒழுங்கமைக்கப்படாத போராட்டங்களில் கலந்து கொள்ளும் போது எச்சரிக்கையுடன் இருங்கள் - ஜே.வி.பி. (எம்.மனோசித்ரா) நெருக்கடிகளுக்கு தீர்வுகளைக் கோரி போராட்டங்களில் ஈடுபடுவதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு. ஆனால் பொறுப்பு கூறுவதற்கு எவரும் அற்ற ஒழுங்கமைக்கப்படாத போராட்டங்களில் கலந்து கொள்ளும் போது விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் செயற்படுமாறு மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) அறிவித்துள்ளது. இது தொடர்பில் ஜே.வி.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டில் பாரதூரமான நெருக்கடி நிலைமையே நிலவுகிறது என்பது அனைவரும் அறிந்த விடயமாகும். ஒவ்வொரு கணமும் சமூகத்திலுள்ள அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறானதொரு தருணத்…
-
- 0 replies
- 163 views
-
-
இலங்கையின் பணவீக்கம்... கடந்த மார்ச் மாதம், 18.8 சதவீதமாக அதிகரிப்பு! இலங்கையின் பணவீக்கம் கடந்த மார்ச் மாதம் 18.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. மத்திய வங்கியின் தரவுகளின்படி, கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் 164.9 ஆகவும் அதிகரித்துள்ளது. அத்துடன், மார்ச் மாதத்தில் உணவுப் பணவீக்கம் முந்தைய ஆண்டைக் காட்டிலும் 31 சதவீதமாகவும் உயர்வடைந்துள்ளது. https://athavannews.com/2022/1274210
-
- 0 replies
- 255 views
-
-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்.. விசேட மத்திய குழுக் கூட்டம் இன்று! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளது. கட்சியின் தலைமையகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. நாட்டில் தற்போது நிலவும் நிலைமை மற்றும் மக்கள் எதிர்நோக்கும் அழுத்தங்களுக்கு மத்தியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேற்கொள்ளும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது. https://athavannews.com/2022/1274216
-
- 0 replies
- 166 views
-
-
பல்வேறு துறைகளுக்கு... மேலும் மூன்று நாடுகள், ஒத்துழைப்பு! வலுசக்தி, சுற்றுலா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிநுட்பம் உள்ளிட்ட பல துறைகளை மேம்படுத்துவதற்கு பிரித்தானியா, தென்கொரியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக நேற்று(வியாழக்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. பிரித்தானிய பாராளுமன்றத்தின் பிரபுக்கள் சபையின் உறுப்பினர் லோர்ட் மைகல் நெஸ்பி (Michael Naseby), ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை சந்தித்த போது, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்திக்கு அரசாங்கத்தின் ஆர்வத்தை பாராட்டினார். சூரிய சக்தி மற்றும் பிற புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலங்களை மின் உற்பத்தியில் இணைப்பதற்கு பி…
-
- 0 replies
- 191 views
-
-
சீமெந்தின் விலை... அதிகரிக்கப் பட்டது! சீமெந்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்ளூரில் உற்பத்திசெய்யப்படும் மற்றும் இறக்குமதியாகும் 50 கிலோகிராம் சீமெந்து பொதியொன்றின் விலை 500 ரூபாவினால் அதிகாிக்கப்பட்டுள்ளதாக விற்பனை முகவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கமைய 50 கிலோகிராம் சீமெந்தின் விலை 2 ஆயிரத்து 350 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1274232
-
- 0 replies
- 267 views
-
-
தமிழர்களுக்கான சுயாட்சி முறையிலான தீர்வு கிடைக்க... பிரித்தானியா உதவ வேண்டும் – சிறீதரன் தமிழர்களுக்கான சுயாட்சி முறையிலான தீர்வு கிடைக்க பிரித்தானியா உதவ வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் பிரிட்டிஷ் தூதரகத்தின் அரசியல், சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான முதன்மைச் செயலாளர் ஹென்றி டொனாற்றியிடம்(Henry Donati) கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் பிரிட்டிஷ் தூதரகத்தின் அரசியல், சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான முதன்மைச் செயலாளர் ஹென்றி டொனாற்றிக்கும் (Henry Donati) இடையிலா…
-
- 0 replies
- 170 views
-
-
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இல்லம் அமைந்துள்ள மிரிஹானயில் தற்போது பாரிய எதிர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது. ஜனாதிபதியின் இல்லத்துக்கு செல்லும் பாதையை மறித்தே போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் மிரிஹானவில் அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதோடு, பதற்ற நிலை உருவாகியுள்ளது. ஜனாதிபதியின் இல்லத்தின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை ஜனாதிபதி இல்லம் நோக்கி செல்லும் போராட்டக்காரர்களை பொலிஸார் தடுத்து வருகின்றனர். நாட்டு மக்கள் தற்போது முகங்கொடுத்து வரும் எரிபொருள், காஸ், மின்சாரம் உள்ளிட்டப் பிரச்சினைகளுக்கு எதிராகவே இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. Tamilmirror Online || ஜனாதிபதியின் இல்லத்துக்…
-
- 6 replies
- 536 views
-
-
ஞாயிறன்று நடைபெறும் அரசவிரோதப்போராட்டத்தில் பங்கேற்குமாறு மனோ மலையக மக்களுக்கு அழைப்பு (நா.தனுஜா) அரசாங்கத்திற்கு எதிராக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தலவாக்கலை நகரில் தமது கட்சியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தில் தலவாக்கலை உட்பட மலையக மக்கள் அனைவரும் கலந்துகொள்ளவேண்டும் என்று தமிழ் முற்போக்குக்கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் அழைப்புவிடுத்துள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (31) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: தமிழ் முற்போக்குக்கூட்டணி என்ற ரீதியில் நாம் எதிர…
-
- 0 replies
- 203 views
-
-
பல இடங்களில் காலையில் பதற்றம் நாட்டின் பல இடங்களிலும் பல்வேறானா போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனால், சில இடங்களில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. 1) பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து தச்சர்கள் ஆர்ப்பாட்டம். செய்கின்றனர். மொரட்டுவை நகர சபையை சுற்றிவளைத்துள்ளனர். இதனால் அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. மொரட்டுவ குருசா சந்தியிலிருந்து காலி வீதிக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. 2) புத்தளம்- சிலாபம் வீதியை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதனால், அவ்வீதியின் ஊடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. 3) குடும்பநல சுகாதார ஊழியர்கள், மருதானை டீன்ஸ் வீதியை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால்…
-
- 0 replies
- 232 views
-