Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ்ப்பாணம் - அச்சுவேலி மத்திய கல்லூரியில் (தேசிய பாடசாலை) உள்ள கணினி உபகரணங்கள் நேற்று மாலை இனந்தெரியாதோரால் திருடப்பட்டுள்ளன. பாடசாலையின் பரீட்சைகள் ஆரம்பித்துள்ள நிலையில் நேற்றிரவு ஏற்பட்ட மின் வெட்டினை வாய்ப்பாக பயன்படுத்தி பாடசாலையின் கதவு ஜன்னல் உடைக்கப்பட்டு கணினி உபகரணங்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. பாடசாலையின் கண்காணிப்பு கெமரா மின் துண்டிப்பினால் இயங்காதிருந்த வேளையில் குறித்த திருட்டுச் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த கொரோனா காலத்தின் போதும் பாடசாலையில் தங்கியிருந்து சிலர் அங்குள்ள பொருட்களை சூறையாடிச் சென்றனர். இருப்பினும் இது தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் நேற்று மாலை குறித்த திருட்டு…

  2. 'தனி சிகரெட் விற்பனை – எளிதாக பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கான தூண்டில்' என்ற ஆய்வறிக்கை வெளியீடானது, மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தினால் நேற்று முன்தினம் கொழும்பு 05 இல் அமைந்துள்ள ஜானகி உணவகத்தில் நடாத்தப்பட்டது. இந்த ஆய்வு பாதிக்கப்படக்கூடியவர்களிடையே தனி சிகரெட்டுகளின் போக்கு பற்றிய விரிவான தகவல்களை வழங்கப்பட்டது. இலங்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட கடைகள் மற்றும் புகைப்பவர்களினடம் தகவல் பெறப்பட்டு இவ்வாய்வு நடாத்தப்பட்டது. மேலும், தனி சிகரட்டுக்களின் விற்பனை அதிகரித்துள்ளது, இது சிகரட் நிறுவனம் கொவிட் பரவல் காலங்களிலும் தமது வியாபாரத்தை தக்க வைத்துக்கொள்வதற்கு எவ்வாறான தந்திரோபாயங்களை மேற்கொண்டுள்ளன எ…

  3. சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தின் பேச்சாளராக... பங்கேற்ற, முதல் இலங்கையர் என வரலாற்றில் இடம்பிடித்தார் இரா.சாணக்கியன்! சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தின் காலநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் பேச்சாளராக பங்கேற்ற முதல் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையினை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பெற்றுள்ளார் இந்தோனோஷியாவின் பாலியில் சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தின் 144ஆவது அமர்வு இடம்பெற்று வருகின்றது. இந்தநிலையில் குறித்த அமர்வில் காலநிலை மாற்றம் தொடர்பில் இன்று(வியாழக்கிழமை) மாநாடு ஒன்று நடைபெற்றிருந்தது. சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தில் 178 நாடுகள் உறுப்பு நாடுகள் உள்ள நிலையில், பிரித்தானியா, ஒஸ்ரியா, இந்தோனேசியா மற்றும் …

  4. இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 இந்திய மீனவர்கள் இரண்டு பகுதிகளில் கைது இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 இந்திய மீனவர்கள் இரண்டு பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டி துறைமுகம் அழைத்து வந்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி இரணைத்தீவு அருகே அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படை…

  5. பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள சர்வகட்சி மாநாட்டில் முன்வைத்த யோசனைகளை செயற்படுத்துவேன் - ஜனாதிபதி உறுதி (இராஜதுரை ஹஷான்) பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்கப்பட்ட யோசனைகளை ஜனாதிபதி செயலக பிரிவின் ஊடாகவும், அமைச்சுக்கள் ஊடாகவும் செயற்படுத்த முறையான செயலொழுங்கினை முன்னெடுப்பேன். சர்வகட்சி மாநாட்டை புறக்கணித்த அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்களின் யோசனைகளை எந்நேரத்திலும் என்னிடம் முன்வைக்கலாம். நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்கும் பொறுப்பு அனைத்து தரப்பினருக்கும் உண்டு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டார். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.நாட்…

    • 1 reply
    • 339 views
  6. தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் அரசாங்கத்திற்கு சிறந்த ஆலோசனைகளை முன்வைத்துள்ளமை வரவேற்கத்தக்கது - பஷில் (இராஜதுரை ஹஷான்) நாடு பாரிய நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ள நிலைமையில் தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகள் அரசாங்கத்திற்கு சிறந்த ஆலோசனைகளை முன்வைத்துள்ளமை வரவேற்கத்தக்கது. ஜனாதிபதி பெற்றுக்கொண்ட ஒரு வெற்றியாக இதனை குறிப்பிட வேண்டும். தமிழ் மக்களின் மனங்களை வெல்லமுடியாமலிருப்பது துரதிஸ்டமானது.சர்வகட்சி மாநாட்டில் தமிழ் பிரதிநிதிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை செயற்படுத்த கட்சி மட்டத்தில் அவதானம் செலுத்துவோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், நிதியமைச்சருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். ஜனாதிபதி தலைமையில் புதன்கிழமை (23) இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில…

  7. இலங்கை நெருக்கடி : ரணிலிடம் மன்னிப்புக் கேட்ட கோட்டாபய - என்ன நடந்தது? 23 மார்ச் 2022 பட மூலாதாரம்,PMD இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் சர்வகட்சி மாநாடொன்று இன்று முதல் தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மன்னிப்புக் கோரினார். ஜனாதிபதி மாளிகையில் இந்த மாநாடு புதன்கிழமை முற்பகல் முதல் பிற்பகல் வரை நடைபெற்றது. ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற இந்த சர்வகட்சி மாநாட்டை பல அரசியல் கட்சிகள் புறக்கணித்திருந்தன. குறிப்பாக …

  8. O/L பரீட்சையில் மாற்றமில்லை – திட்டமிட்டப்படி நடைபெறும் என அறிவிப்பு! கடந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரபத்திர சாதாரண தர பரீட்சைகள் திட்டமிட்டபடி மே மாதம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். 2022ஆம் கல்வி ஆண்டுக்கான பாடப் புத்தகங்களில் 38 மில்லியனுக்கும் அதிகமானவை அச்சிடப்பட்டு பிரதான களஞ்சியசாலைகளில்வைக்கப்பட்டுள்ளதுடன் பாடசாலைகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இவ்வாண்டுக்கான முதலாம் தவணை ஆரம்பமாகும்போது முழுமையாக பாடப் புத்தகங்கள் வழங்கும் பணிகள் நிறைவடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1273187

  9. அஸ்கிரி மற்றும் மல்வத்து பீட மகாநாயக்க தேரர்களை.... சந்திக்கின்றனர், 11 பங்காளிக்கட்சிகளின் பிரதிநிதிகள்! அரசாங்கத்தின் 11 பங்காளிக்கட்சிகளின் பிரதிநிதிகள் அஸ்கிரி மற்றும் மல்வத்து பீட மகாநாயக்க தேரர்களை சந்திக்கவுள்ளனர். தலதாமாளிகைக்கு சென்று மாகாநாயக்கர்களிடம் இன்று(வியாழக்கிழமை) அவர்கள் ஆசி பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவங்ச, உதய கம்மன்பில மற்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் இந்த சந்திப்பில் பங்கேற்கவுள்ளார். எவ்வாறாயினும், தமது கட்சியின் பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளப்போவதில்லை என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். …

  10. புகையிரத கட்டணங்களும்... அதிகரிப்பட்டன – கட்டண விபரம் உள்ளே! இலங்கையில் நேற்று (புதன்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து புகையிரத கட்டணங்களும் அதிகரிப்பட்டுள்ளன. இதற்கமைய கட்டண அதிகரிப்பு தொடர்பான விபரங்கள் பின்வருமாறு, A/C முதலாம் வகுப்பு ஆசன முற்பதிவு யாழ்- கொழும்பு. 2000.00 பொல்கஹவெலை 2000.00 யாழ்- குருணாகல் 1800.00 யாழ்- அனுராதபுரம். 1500.00 வவுனியா. 1500.00 யாழ்- கிளிநொச்சி 1300.00 இரண்டாம் வகுப்பு- ஆசன முற்பதிவு யாழ்- கொழும்பு. 1500.00 பொல்கஹவெலை 1500.00 யாழ்- குருணாகல் 1300.00 யாழ்- அனுராதபுரம். 1000.00 வவுனியா. 1000.00 யாழ்- கிளிநொச்சி 800.00 …

  11. இந்தியா, சீனாவை அடுத்து... அவுஸ்ரேலிய அரசாங்கத்திடம், 200 மில்லியன் டொலர் கடன் கோரியது அரசாங்கம் பருப்பு மற்றும் பால்மா இறக்குமதிக்காக அவுஸ்ரேலிய அரசாங்கத்திடம் 200 மில்லியன் டொலர் கடன் கோரப்பட்டுள்ளது என நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவினால் குறித்த கடன் தொகை கோரப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார். சீனாவிடம் கோரப்பட்டுள்ள 2.5 பில்லியன் டொலர் கடனில் 1.5 பில்லியன் டொலரை மருந்துகள் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் கைத்தொழிலுக்கான மூல்பொருட்கள் இறக்குமதிக்காக செலவிடப்படவுள்ளது. அத்துடன், ஒரு பில்லியன் டொலர் கடன் தொகையை, இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பை வலுப்படுத்த பயன்படுத்த எதிர்பார்ப்பதாக நிதி அமைச்…

  12. அரச பொதுப் போக்குவரத்து பஸ் வண்டியின் பின்னால் இந்த வாசகம் பொறிக்கப்பட்டு போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது. இலங்கைப் போக்குவரத்துச் சபையால் மத்துகம டிப்போவிலிருந்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இந்த பேருந்து சிங்கள மொழியில் இப்படி இனத்துவேசத்தை கக்கும் வாசகத்தை கக்கியபடி நாளாந்தம் பயணிக்கிறது. மத்துகம பகுதியானது சிங்களவர்களும் முஸ்லிம்களும் அதிகமாக வாழும் பிரதேசம். இந்த பஸ் வண்டியும் கூட களுத்துறை, அளுத்கம, மத்துகம பகுதியில் சேவையில் உள்ள பேருந்து. அது மட்டுமன்றி சிங்கள மக்கள் மத்தியில் ஏற்கெனவே முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறுப்பு அதிகமாக ஊட்டப்பட்ட பிரதேசம். 2014 ஆம் ஆண்டு ஞானசார தேரர் உள்ளிட்டோரால் ஏற்படுத்தப்பட்ட கலவரம் இந்தப் பகுதியில் தான் நிகழ்ந்தத…

    • 64 replies
    • 3.6k views
  13. புலம்பெயர் தமிழர்களுடன் கலந்துரையாடல்களை நடத்த ஆர்வமாக இருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, வடமாகாணத்தின் அபிவிருத்தியில் முதலீடு செய்யுமாறும் அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட் இன்று பிற்பகல்ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்தார். இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போது இன்று காலை இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்கப்பட்ட விடயங்கள், அதன் முன்னேற்றம் மற்றும் வெள்ளிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடைபெறவுள்ள கலந்துரையாடல் தொடர்பில் ஜனாதிபதி, விக்டோரியா நுலாந்திடம் விளக்மளித்தார். …

    • 3 replies
    • 414 views
  14. கொரோனாவால் அமெரிக்கா கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாலும் அமெரிக்கர்கள் பைடனை இராஜிநாமா செய்யுமாறு கூற மாட்டார்கள் -பந்துல -சி.எல்.சிசில்- 1930ஆம் ஆண்டுக்குப் பின்னர் உலகில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார மந்த நிலை இதுவாகும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். “உலகளாவிய பணவீக்கம் இன்று அதிகரித்து, எம்மைப் போன்ற சிறிய பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது” என்றார். கொரோனா தொற்றால் அமெரிக்கா கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தாலும், உயர்ந்த எண்ணம் க…

  15. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... வரலாற்றில், இடம்பெறுவார் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வரலாற்றில் இடம்பெறுவார் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஜனாதிபதி செய்த செயல்களால் மதன’ உங்கள் உயிர் காப்பாற்றப்பட்டது என்பதை மரியாதையுடன் நினைவுபடுத்துகிறேன். இந்த நாட்டு மக்களும், உங்களுக்கு வாக்களித்த மக்களும், எமக்கு வாக்களித்த மக்களும் காப்பாற்றப்பட்டனர். 200,000 பேர் இறப்பார்கள் என்றீர்கள். ஒக்ஸிஜன் இல்லை என்றீர்கள். நீங்கள் சொன்ன பொய்கள் உங்களுக்கு நினைவிருக்கிறது. எண்ணெய் கொண்…

    • 3 replies
    • 371 views
  16. ஆசியாவின் சொர்க்கமாக இலங்கை மாறும்: சர்வகட்சி மாநாட்டில் ஆலோசனை வழங்கினார் சித்தார்த்தன் !! தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வை வழங்கினால் நிச்சயமாக எமது நாட்டை ஆசியாவின் சொர்க்கமாக மாற்றலாம் என சர்வகட்சி மாநாட்டில் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். பல தசாப்தங்களாக நாட்டில் நிலவும் இன நெருக்கடியை, அடுத்தடுத்துவந்த அரசாங்கங்களின் கொள்கை, அணுகுமுறை மற்றும் தவறான நிர்வாகமே தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு உண்மையான காரணம் என்றும் சுட்டிக்காட்டினார். சுயாட்சி அதிகாரத்திற்கான தமிழ் மக்களின் அபிலாசைக் கோரிக்கைக்கு முன்னதாகவே எமது நாட்டின் அனைத்து சமூகங்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு சிறந்த அரசியல் தீர்வை அடைந்திருக்க முடியும். என்…

    • 6 replies
    • 569 views
  17. சர்வகட்சி கூட்டத்தில் பசில் ரணில் கடும் வாக்குவாதம் சர்வகட்சிகூட்டத்தில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. அரசாங்கம் நிதிவிடயத்தில் வெளிப்படைதன்மையுடன் செயற்படுவதை தன்னால் காணமுடியவில்லை என தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணயநிதியம் இலங்கை குறித்து சமர்பித்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் அரசாங்கம் சமர்ப்பிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் இறுதி அறிக்கை இன்னமும் எங்களிற்கு கிடைக்கவில்லை என தெரிவித்தார்,ஆனால் அதனை மறுத்த ரணில் இல்லை ஏற்கனவே அவர்கள் அ…

    • 4 replies
    • 562 views
  18. எதிர்ப்பு பேரணி காரணமாக... ஹைலெவல் வீதி முழுவதுமாக முடக்கம் !! தேசிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு பேரணி காரணமாக விஜேராம சந்தியில் இருந்து நுகேகொட நோக்கி செல்லும் ஹைலெவல் வீதி முழுவதுமாக தடைப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நுகேகொடையில் ஆர்ப்பாட்ட பேரணி தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக நுகேகொட தெல்கந்தவில் பகுதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2022/1273104

  19. அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 22 தமிழ்நாட்டு மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுதலை இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 22 தமிழ்நாட்டு மீனவர்களும் நிபந்தனைகளுடன் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - காரைநகரை அண்டிய கடற்பரப்பில் மீன்பிடித்து கொண்டிருந்த காரைக்கால் மற்றும் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 22 மீனவர்களையும் இரண்டு விசைப்படகுகளையும் கடற்படையினர் கடந்த மாதம் 24 ஆம் திகதி கைது செய்து யாழ்ப்பாணம் - மயிலட்டி மீன் பிடி துறைமுகத்திற்கு அழைத்துச்சென்றனர். அதனையடுத்து மீனவர்கள் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் சட்ட நடவடிக்கைக்காக கையளிக்கப்பட்டு ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட…

    • 0 replies
    • 159 views
  20. அரசின் சர்வகட்சி மாநாடு, பஸ் போன பிறகு கை காட்டும் வேலை அரசின் சர்வகட்சி மாநாடு, பஸ் போன பிறகு கை காட்டும் வேலை ஆகும் என கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலு குமார் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்த அவர், இன்றைய அரசாங்கம், ஆரம்பம் முதல் இன்று வரை ஒரு தீர்மானத்தை கூட உரிய நேரத்தில் எடுக்கவில்லை. இன்று நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து நிற்கின்றது. முழு நாடும் கருப்பு சந்தையாக மாறி இருக்கின்றது. மொத்த பொருளாதாரமும் மீள கட்டியெழுப்ப முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றது. இந்நிலைமை ஏற்படாமல் இருப்பதற்கு அரசாங்கத்திடம் பல மாதங்க…

    • 0 replies
    • 181 views
  21. தியாக தீபம் திலீபனின்... இறுதி வார்த்தைகளை, நாடாளுமன்றில் பகிர்ந்துகொண்டார் விஜித ஹேரத்! உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்த திலீபன் என்று அழைக்கப்படும் இராசையா பார்த்திபன் கூறிய வார்த்தைகளை தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நாடளுமன்றில் நேற்று தெரிவித்திருந்தார். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தமிழ் இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 1987 செப்டம்பர் 26 ஆம் திகதி முதல் 10 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தின் பின்னர் அவர் உயிரிழந்தார். பயங்கரவாதத் தடைச் சட்டம் வடக்கில் உள்ளவர்களை மட்டுமல்ல, தெற்கிலும் உள்ளவர்களையும் ஒடுக்கும் என்று திலீபன் அன்று கூறியது தற்போதும் நினைவிருக்கிறது என நாடாளுமன்ற உ…

    • 3 replies
    • 312 views
  22. பாதுகாப்பு கட்டமைப்பு என்ற போர்வையில் இலங்கையின் முழு வான் பரப்பையும் இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்காக நேற்றைய தினம் அமைச்சரவை பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பதுளையில் இன்று நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் ஹரின் பெர்னாண்டோ இதனை கூறியுள்ளார். 29 மில்லியன் டொலர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்காக அரசாங்கம் இலங்கையின் வான் பரப்பை இந்தியாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பதவிக்கு வந்த ஜனாதிபதி நாட்டின் பாதுகாப்பை மாத்திரமல்லாது கடற்படையையும் இந்தியாவுக்கு விற்பனை செய்துள்ளார். இலங்கை மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி…

    • 12 replies
    • 697 views
  23. பிரச்சினைகளைக் கையாள்வதற்கான உத்தியாக இராணுவமயமாக்கலைப் பயன்படுத்துகிறது அரசாங்கம் - அம்பிகா சற்குணநாதன் (நா.தனுஜா) நாட்டில் ஏற்படும் பிரச்சினைகளைக் கையாள்வதற்காக ஓர் உத்தியாக அரசாங்கம் இராணுவமயமாக்கலைப் பயன்படுத்தி வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன், அது மனித உரிமைகள் மீறப்படுவதற்கு வழிவகுத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின்கீழ் இயங்கும் எரிபொருள் நிரப்புநிலையங்களில் இராணுவத்தினர் கண்காணிப்புப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக இராணுவப்பேச்சாளர் நேற்று செவ்வாய்கிழமை அறிவித்திருந்த நிலையில், இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய…

  24. சிங்கள மக்களை மட்டுமே பாதுகாப்பதுதான் தேசியமா? - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) வெறுமனே சிங்கள மக்களை மட்டுமே பாதுகாப்பதுதான் தேசியமா? ஒரு தரப்பை மட்டுமே பாதுகாப்பது தேசியமா அல்லது சகல இன மக்களையும் பாதுகாப்பது தேசியமா? பெரும்பான்மையின் தேவைகளை பூர்த்தி செய்வது தேசியம் என அர்த்தப்படுத்த வேண்டாம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் தெரிவித்தார். பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நேற்று செவ்வாய்க்கிழமை 22 ஆம் திகதி இடம்பெற்ற வேளையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், பயங்கரவாத தடை சட்டத்தில் திருத்தங்களை மு…

  25. வீதியினை புனரமைத்து தருமாறு கோரி மக்கள் வீதி மறியல் போராட்டம் கிளிநொச்சி பூநகரி கிராஞ்சி வேரவில் வீதியை புனரமைத்து தருமாறு கோரி பொது மக்கள் நேற்று (22) நீதி மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். நேற்று காலை யாழ்ப்பாணம் மன்னார் ஏ32 வீதியினை பல்லவராயன்கட்டு பகுதியில் மறித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் கிராஞ்சி, வேரவில், வலைப்பாடு போன்ற கிராம மக்கள் மாவட்டத்தின் ஏனைய பகுதிகளுக்கான தொடர்புகளுக்கு பிரதான வீதியாக காணப்படுகின்ற 22 கிலோமீற்றர் நீளமான பல்லவராயன்கட்டு தொடக்கம் கிராஞ்சி வேரவில் வரை செல்கின்ற வீதி மிக மோசமாக நிலையில் காணப்படுகிறது. வீதி புனரமைக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டும் இதுவரை இழுபறி நிலையில் காணப்படுகிறது என்றும் எனவே பொது மக்களின் ச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.