Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கோதுமை மாவின்... விலையும், அதிகரிப்பு ! கோதுமை மாவின் விலையை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் கிலோ ஒன்றுக்கு 40 ரூபாயினால் அதிகரிக்க பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளது. இருப்பினும் செரண்டிப் நிறுவனம் விலை உயர்வு குறித்து இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1277301

  2. 2 மில்லியன் டொலர்களை வழங்கியே... புதிய இராஜாங்க அமைச்சர்கள், நியமிப்பு – புதிய தகவலை வெளியிட்ட எதிர்க்கட்சி 2 மில்லியன் டொலர்களை வழங்கியே புதிய இராஜாங்க அமைச்சர்களை அரசாங்கம் நியமித்துள்ளது என எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவிக்கும்போதே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். வீடுகளுக்கு சென்று நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைபேசும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக விமல் வீரவன்சவும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்நிலையிலேயே தமக்கு குறித்த தகவல் கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார சபையில் தெரிவித்தார். https://…

    • 2 replies
    • 354 views
  3. சஹ்ரான் பயன்படுத்திய... வாகனத்தை, பயன்படுத்தவில்லை – நாடாளுமன்றில் சரத் வீரசேகர சஹ்ரான் ஹாசீம் பயன்படுத்திய வாகனத்தை தான் பயன்படுத்தவில்லை என முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு குண்டுதாக்குதலை நடத்திய பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசீம் Toyota Land Cruiser V8 என்ற வாகனத்தை பயன்படுத்தியிருந்தார். குறித்த வாகனத்தை சரத் வீரசேகரவும் பயன்படுத்தியாதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றது. நீதிமன்ற கட்டுப்பாட்டில் இருக்கும் குறித்த வாகனத்தை அமைச்சர் ஒருவர் பயன்படுத்தலாமா என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அண்மையில் கேள்வியெழுப்பி இருந்தார். இந்நிலையில் இன்று இடமபெற்ற நாடாளுமன்ற அமர்வி…

  4. இலங்கையில் உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? திடீரென இயற்கை உரத்தை கட்டாயமாக்கியது காரணமா? முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ், இலங்கையிலிருந்து 12 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையில் ரசாயன உரத்திற்கு தடை விதித்ததன் மூலம் தாம் தவறிழைத்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனால், இந்தத் தடை இலங்கையின் உணவுப் பாதுகாப்பிற்கே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. பொருளாதார நெருக்கடி தொடர்பாக கடந்த ஏப்ரல் 12ஆம் தேதியன்று கருத்துத் தெரிவித்த இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, "மே மாதத்துடன் இந்திய கடன் திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெறு…

  5. 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும்... எதிர்க்கட்சியில்! நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்த 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க்கட்சியில் அமர்ந்துள்ளனர். சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்களும் பொதுஜன பெரமுனவில் இருந்து சுயாதீனமாக இருக்க தீர்மானித்தவர்களுக்கும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1277286

  6. நாட்டின், தற்போதைய நிலைமை குறித்து... பிரதமர் நாடாளுமன்றத்தில் விசேட உரை! நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றி வருகின்றார் 20வது திருத்தத்தை நீக்கி 19வது திருத்தத்தை மீண்டும் கொண்டு வருவதே பிரச்சினைகளுக்கு குறுகிய கால தீர்வாக இருக்கும் என அவர் கூறுகிறார். நாட்டு மக்கள் தற்போது பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதை ஒப்புக்கொள்வதாக தெரிவித்த அவர், அரசாங்கம் வேண்டுமென்றே தமது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாது என்றும் கூறினார். தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும் என்றும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார். மேலும் பாரபட்சமின்றி நாட்டைக் கட்டியெழுப்ப வாருங்கள் என எ…

  7. மக்கள் போராட்டத்துக்கு ஆதரவாக...பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்களும் பேரணி! கொழும்பு – காலி முகத்திடலில் அரசுக்கு எதிராக நடாத்தப்படும் பொதுமக்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அனைத்துப் பல்கலைக் கழகங்களினதும் ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் அடையாளப் பேரணி ஒன்றை நடாத்தவுள்ளது. பொது மக்களின் வாழ்வுரிமைக்காக காலி முகத்திடலில் நடாத்தப்படும் போராட்டத்துக்கான தமது தார்மீக ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 01 மணியளவில் கொழும்பு பல்கலைக்கழக முன்றலில் இருந்து காலி முகத்திடல் நோக்கி இந்த அடையாளப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பல்கலைக் கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளம் அறிவித்துள்ளது. கொழும்பு மற்றும்…

  8. மக்களுக்கு... நிவாரணங்களை வழங்கவே, புதிய அமைச்சரவை – கனக ஹேரத் புதிய அமைச்சரவையின் நோக்கம் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதும் மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதுமாகும் என புதிய நெடுஞ்சாலைகள் அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை, கொஸ்வத்தையில் அமைந்துள்ள மக நெகும மஹமெதுர வளாகத்தில் அமைந்துள்ள அமைச்சின் காரியாலயத்தில் நேற்று (திங்கட்கிழமை) கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் அமைச்சின் ஊழியர்களிடம் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவித்ததாவது, “எமது வரலாற்றில் முதல் முறையாக, நாட்டில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நேரத்தில், ஒரு அரசாங்கமாக நாங்கள் பல பெரிய சவால்களை எதிர்கொள்கிறோம். அரசாங்கத்தின் முதன்மையான க…

  9. கொரோனா தடுப்பூசியின்... நான்காவது டோஸை, செலுத்துவதற்கு திட்டம். இலங்கை மக்களுக்கு எதிர்வரும் காலத்தில் கொரோனா தடுப்பூசியின் நான்காவது டோஸை செலுத்துவதற்கு திட்டமிடப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சராக நேற்று பொறுப்பேற்ற சன்ன ஜயசுமன இதனை அறிவித்துள்ளார். இதேவேளை, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, வளாகம் ஒன்றுக்கு செல்லும் போது உடல் வெப்பநிலையை பரிசோதித்தல் மற்றும் தனிநபர் விபரங்களைத் திரட்டுதல் என்பன கட்டாயம் இல்லை எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1277267

  10. 19 ஐ போன்று, 21 ஐ கொண்டு வர... அரசாங்கம் திட்டம் !! அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை இரத்து செய்வதற்கும் 19 ஆவது திருத்தத்தை 21 ஆவது திருத்தமாக மீண்டும் கொண்டுவருவதற்கும் அரசாங்கம் இணங்கியுள்ளது என மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நீதி, நிர்வாகம், நிறைவேற்றுத்துறையை உள்ளடக்கிய அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை அமைச்சரவையில் முன்வைக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ள நிலையில் அவர் இதனை கூறியுள்ளார். சபாநாயகர் தலைமையில் நேற்று இடம்பெற்ற விசேட சந்திப்பில் பொதுநிர்வாக அமைச்சர் தினேஸ் குணவர்தன, கட்சித் தலைவர்களுக்கு இது குறித்து அறிவித்தார் என மனோ கணேசன் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மிகவும் பொறுப்பான அரசாங்கத்தை பொதுமக…

  11. நாடாளுமன்றம் இன்று கூடுகிறது – அரசாங்கத்திற்கு எதிரான, நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிப்பு? நாடாளுமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.00 மணிக்கு கூடவுள்ளது. இன்று முதல் எதிர்வரும் 22ஆம் திகதி வரை நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இன்று காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை வாய்மொழி விடைகளுக்கான கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், சபை ஒத்திவைப்பு நேரத்தில் கேள்விகள் மற்றும் பிரேரணைக்கு மாலை 4.30 மணி முதல் 4.50 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி மாலை 4.50 மணி முதல் 5.30 மணி வரை அரசு மற்றும் எதிர்கட்சி தர…

  12. பாகிஸ்தானில்... கொலை செய்யப்பட்ட, இலங்கையர் – 6 சந்தேகநபர்களுக்கு மரண தண்டனை! பாகிஸ்தானின் சியல்கோட் நகரில் இலங்கைப் பிரஜையான பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 06 சந்தேகநபர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு பாகிஸ்தான் நீதிமன்றத்தினால் நேற்று தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி, 06 சந்தேகநபர்களுக்கு மரண தண்டனையும் 07 சந்தேகநபர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாகிஸ்தானின் சியல்கோட் நகரில் கடந்த டிசம்பர் மாதம் 3ஆம் திகதி பிரியந்த குமார எரித்து படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1277225

  13. எரிபொருள்... விலை அதிகரிப்புக்கு, எதிர்ப்பு – நாட்டின் பல இடங்களில் போராட்டம்! எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு எதிராக இலங்கையின் பல பகுதிகளில் இன்று (செவ்வாய்கிழமை) காலை முதல் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, ரம்புக்கனை, ஹிங்குராங்கொட, பத்தேகம, திகனஎ கம்பளை, இரத்தினபுரி, தெல்தெனிய ஆகிய இடங்களில் தற்போது போராட்டங்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, ரம்புக்கனை ரயில் பாதையை மக்கள் மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால், அந்த வீதியூடான ரயில் சேவைகள் தாமதமடைந்துள்ளன. மேலும் இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவாக ரம்புக்கனை நகரில் உள்ள பல கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்ட…

  14. உணவு நெருக்கடியில் இருந்து... இலங்கையை மீட்க, ஐந்து நாடுகளுடன்... ரணில் பேச்சு! இலங்கையில் தற்போது நிலவும் உணவு நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பாக ஐந்து சக்திவாய்ந்த வெளிநாடுகளுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்படி, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் முன்னாள் பிரதமர் கலந்துரையாடியுள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்காலத்தில் இலங்கை கடுமையான உணவு நெருக்கடியை சந்திக்கும் என முன்னாள் பிரதமரிடம் தெரிவித்த குறித்த நாடுகள், இலங்கைக்கு எவ்வாறு உதவுவது என்பது குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளன. சர்வதேச …

  15. மேலும்... 3 இராஜாங்க அமைச்சர்கள், பதவியேற்பு! நாட்டில் மேலும் 3 இராஜாங்க அமைச்சர்கள் புதிதாக பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர். இதன்படி, டயனா கமகே போக்குவரத்து இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேநேரம், சீதா அரம்பேபொல கல்வி மற்றும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சராகவும் விஜித பேருகொட துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை இராஜாங்க அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக 21 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1277197

  16. 40,000 மெட்ரிக் தொன், டீசல் கப்பல் இலங்கைக்கு…. ! போதியளவு பெட்ரோல் கையிருப்பில்..! 40,000 மெட்ரிக் தொன் டீசல் அடங்கிய கப்பல் ஒன்று எதிர்வரும் இரண்டு நாட்களில் நாட்டை வந்தடையும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்தியக் கடனுதவியின் கீழ் குறித்த எரிபொருள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளது என பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை நாட்டில் போதுமான அளவு பெட்ரோல் கையிருப்பு இருப்பதாகவும் சுமித் விஜேசிங்க கூறியுள்ளார். எரிபொருளுக்கான புதிய விலை 92 ஒக்டேன் பெட்ரோல் – புதிய விலை: ரூ. 338/- (+84) 95 ஒக்டேன் (யூரோ 4) பெட்ரோல் – புதிய விலை: ரூ. 373/- (+90) டீசல் – புதிய விலை: ரூ. 289…

  17. எரிபொருள் விலையேற்றம்: தனியார் பேருந்து சேவைகள் ஸ்தம்பிதம் – மக்கள் அவதி! எரிபொருள் விலையேற்றம் காரணமாக நாட்டின் பல்வேறு இடங்களில் தனியார் பேருந்து சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. இதனால் பல பிரதேசங்களில் தனியார் பேருந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், பல பேருந்துகள் சேவையில் இருந்து விலகியுள்ளதாக பேருந்து தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று காலை பாடசாலை மற்றும் அலுவலகங்களுக்கும் இதர தேவைகளுக்கும் செல்லும் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலையினை நேற்று முன்தினம் அதிகரித்திருந்த நிலையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலையினை நேற்று அதிகரித்துள்ளமை குறிப்பிட…

  18. எரிபொருள் விலை அதிகரிப்பு: முச்சக்கர வண்டி கட்டணமும் அதிகரிப்பு எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப முச்சக்கர வண்டி வாடகை கட்டணத்தை அதிகரிக்க முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர். அதன்படி முதல் கிலோமீட்டருக்கான கட்டணம் 80 ரூபாயாகவும் மேலதிகமாக செல்லும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 70 ரூபாயும் அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, வரிசையில் நின்று எரிபொருளைப் பெறுவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு விலை அதிகரித்துள்ளது. அதிகரித்து வரும் செலவீனங்களுடன் ஒப்பிடுகையில் பொதுமக்களுக்கு நியாயமான முறையிலேயே முச்சக்கர வண்டி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். https://athavannews.com/…

  19. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும், எரிபொருள் விலையை... உயர்த்தியது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது. இதற்கமைய, ஒக்டென் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 338 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒக்டென் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 373 ரூபாயாகவும் லங்கா ஒட்டோ டீசலின் புதிய விலை 289 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 329 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1277217

  20. 11ஆவது நாளாகவும், தொடரும்... மக்கள் எழுச்சிப் போராட்டம்! காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுள்ள மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) 11ஆவது நாளாகவும் தொடர்கிறது. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கொழும்பு காலி முகத்திடலுக்கு வருகை தந்து பொதுமக்கள் இந்த போராட்டத்திற்கு தமது ஆதரவை வழங்கி வருகின்றனர். அத்தோடு, குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு பல்கலைக்கழக மாணவர்கள், சட்டத்தரணிகள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் தொடர்ச்சியாக ஆதரவு வழங்கி வருகின்றனர். ஜனாதிபதியை பதவியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. https://athavannews.com/2022/1277207

  21. போராட்டங்களை நடத்தும், இளைஞர்கள் குறித்து... ஜனாதிபதி கருத்து! நாட்டில் போராட்டங்களை நடத்தும் இளைஞர்களில் பெரும்பாலானோர் நாட்டை உண்மையாக நேசிப்பவர்கள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குறித்த இளைஞர்கள் நாட்டுக்காக முன்வந்துள்ளமை சுபமான குறியீடு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்துகொண்டதன் பின்னர் ஆற்றிய உரையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து மேலும் தெரிவித்த அவர், “நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்க உள்ள இளைஞர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்யவும் போராட்டங்களை நடத்தவும் இன்று முழு சுதந்திரம் பெற்றுள்ளனர். அவர்கள் தமது போராட்டங்களை …

  22. உடல் வெப்பநிலையை பரிசோதித்தல்... கட்டாயமில்லை – அரசாங்கம் வளாகம் ஒன்றுக்கு செல்லும் போது உடல் வெப்பநிலையை பரிசோதித்தல் மற்றும் தனிநபர் விபரங்களைத் திரட்டுதல் என்பனவும் கட்டாயம் இல்லை என சுகாதார பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். நேற்று முதல் அமுலாகும் வகையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன அறிவித்திருந்தார். எனினும் பொதுப் போக்குவரத்து மற்றும் உள்ளக நிகழ்வுகளில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையிலேயே, உடல் வெப்பநிலையை பரிசோதித்தல் மற்றும் தனிநபர் விபரங்களைத் திரட்டுதல் என்பனவும் கட்டாயம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/202…

  23. மின்வெட்டு, அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த அறிவிப்பு! நாட்டில் இன்றும் நாளையும் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. இதன்படி, A முதல் A வரையான வலயங்களில் இன்றும் நாளையும் முற்பகல் 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியில் 2 மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அத்துடன் மாலை 5 மணிமுதல் இரவு 9 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் ஒரு மணிநேரமும் 20 நிமிடமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1277229

  24. மூடிஸ் நிறுவனம் இலங்கையின் கடன் மதிப்பீட்டை "Ca2" இலிருந்து "Ca" ஆகக் குறைத்துள்ளது. கடன் கொடுப்பனவுகளை இடைநிறுத்துவதற்கான இலங்கை அரசாங்கத்தின் முடிவைத் தொடர்ந்து மூடிஸ் நிறுவனம் இலங்கையின் இறையாண்மை மதிப்பீட்டை குறைத்துள்ளது. தன்னுடைய கடன்களை உரிய காலத்தில் செலுத்த முடியாது என இலங்கை அண்மையில் அறிவித்திருந்தது. இவ்வாறு கடன் தவணை தவறுவது, 'ஒரு நாடு திவாலான நிலைமை' என பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். பொருளாதார வீழ்ச்சியால் இலங்கை கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. விலைவாசி உயர்ந்திருக்கிறது. அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்திருக்கின்றன. நாணயத்தின் மதிப்பு கடுமையாகச் சரிந்திருக்கிறது. இறக்குமதிகள் முடங்கியிருக்கின்றன. இறக்குமதியை நம்பியிருக்க…

  25. தவறை உணர்கிறேன் – பணத்தை திருடவில்லை – நாடாளுமன்றத்தை, அரசியல் அமைப்பை மதிப்பேன்! April 18, 2022 இலங்கையின் வரலாற்றில் மிகவும் கடினமான அதே போன்று, சவாலான பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக, சமூக ரீதியாக நாடு தீர்மானமிக்கதொரு தருணத்தை எதிர்கொண்டுள்ள சந்தர்ப்பத்திலேயே இன்று நான் உங்களிடம் உரையாற்றுகிறேன் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் இன்று ஆற்றிய விசேட உரையிலேயே இவ்விடயத்தைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவித்ததாவது, இன்று சிரேஷ்ட நிலை பாராமல் புதிய அமைச்சர்களை நியமித்துள்ளேன். அமைச்சர் பதவி என்பது ஒரு வரப்பிரசாதம் அல்ல. அது ஒரு பாரிய …

    • 11 replies
    • 697 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.