Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கப்ரால்... நாட்டை விட்டு வெளியேறுவதற்கு, நீதிமன்றம் தடை ! இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி வரை நாட்டை விட்டு வெளியேறுவதற்கு அவருக்கு தடை விதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. https://athavannews.com/2022/1275646

  2. தமிழர் விரோத யுத்தமே... நாட்டின், இன்றைய பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் – சுரேஷ் இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு நாட்டை ஆட்சி செய்தவர்களின் தவறான சிந்தனையும், ஆக்கபூர்வ திட்டங்கள் இன்றி தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டதுமே காரணமாகும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிறேமச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் இன்றைய நிலை குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: இலங்கை இன்று மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருப்பதானது வெறுமனே கடந்த இரண்டு வருடங்களாக நிலவி வரும் கொவிட்-19 மற்றும் ரஷ்ய-யுக்ரேன் சண்டையினால் மாத்திரமல்ல. ஜே.ஆர். ஜெயவர்த்தன காலம…

    • 4 replies
    • 358 views
  3. அபிவிருத்தி அரசியலால்... எவ்வித பயனும் இல்லை, கொள்கை அரசியலை செயற்படுத்தி... நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டும் – ஜீவன் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி விளையாடும் கலாசாரத்தை முதலில் நிறுத்த வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் கேட்டுக்கொண்டார். மற்றவர்கள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கு பதிலாக நாட்டின் தற்போதைய பிரச்சினை குறித்து பேசி தீர்வு காண வேண்டும் என கேட்டுக்கொண்டார். அபிவிருத்தி அரசியலால் எவ்வித பயனும் இல்லை கொள்கை அரசியலை செயற்படுத்தி நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டும் என்றும் தெரிவித்தார். இதேவேளை #GoHomeGota என போராட்டம் நடத்தும் மக்கள் ராஜபக்ஷர்களையும் அரசாங்கத்தையும் மட்டும் வெளியேறுமாறு கோரவில…

  4. பிரதமர் உட்பட... அனைவரும், பதவி விலக வேண்டும் – விமல் வீரவன்ச அழைப்பு பிரதமர் உட்பட அனைவரும் பதவி விலகி புதிய இடைக்கால அரசாங்கத்திற்கு செல்லுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றிய அவர், சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடிய புதிய நிர்வாகம், குறைந்தபட்சம் 4 பில்லியன் டொலர்களையாவது கண்டுபிடிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பை வலுப்படுத்தி சர்வதேச தரத்தை உயர்த்தியதன் பின்னர், சர்வதேச சந்தைக்கு மீண்டும் டொலர் கடன்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1275624

  5. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த... இருவரை, அமைச்சரவையில் இணைக்க கூடாது – எதிர்க்கட்சி முன்மொழிவு அமைச்சரவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் இருக்க கூடாது என்ற முன்மொழிவை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன முன்வைத்துள்ளார். வங்கிகள் மற்றும் நிறுவனங்களில் கூட கணவனும் மனைவியும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்ய முடியாத நிலை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்நிலையில் அமைச்சரவையில் மட்டும் ஏன் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் அனுமதிக்கப்படுகின்றார்கள் என எரான் விக்ரமரத்ன கேள்வியெழுப்பினார். இன்று இடம்பெறும் விவாதத்தில் கருத்து தெரிவித்த அவர், நாட்டில் நம்பிக்கை இல்லை, ஸ்திரத்தன்மை இல்லை என்றால் சர்வதேச நாணய நிதியம் பேச…

  6. ஒரு வருடத்திற்கு... சம்பளம் பெறமாட்டேன் – ஹரீன் பெர்னாண்டோ கடிதம் ஒரு வருடத்திற்கு சம்பளம் பெறமாட்டேன் என தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ கடிதம் எழுதியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ, தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு சில தியாகங்களை மக்களுக்குக் காட்ட வேண்டிய கடமை உள்ளது என தெரிவித்திருந்தார். அதன்படி, ஒரு வருடத்திற்கு சம்பளம் பெறமாட்டேன் என்றும் நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் உணவு உட்கொள்ள மாட்டேன் என்றும் அவர் தெரிவித்திருந்தமை க…

  7. நாடளாவிய ரீதியில்... போராட்டம் இடம்பெறும் நிலையில், வடக்கில் காணி அபகரிப்பு – சபையின் கவனத்திற்கு கொண்டுவந்தார் ஸ்ரீதரன் வடக்கில் அனலைதீவிலும் முல்லைத்தீவிலும் நில அளவையில் ஈடுபட்டு நில அபகரிப்பு செய்யும் இராணுவத்தினரின் நடவடிக்கை தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சபையின் கவனத்திற்கு கொண்டுவந்தது. நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்த இன்று இடம்பெறும் விவாதத்தின்போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் இதனை சுட்டிக்காட்டினார். நாடு முழுவதும் மக்களும் இளைஞர்களும் அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் எதிராக போராடிக் கொண்டிருக்கும் இந்த நெருக்கடியான தருணத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதாக அவர் குற்றம் சாட்டினார். http…

  8. ஆர்ப்பாட்டங்களில்.. சிறுவர்கள் பங்கேற்பதை தடுக்குமாறு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை வலியுறுத்து. போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் சிறுவர்கள் பங்கேற்பதை தடுக்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களை வலியுறுத்தியுள்ளது. சமீபகாலமாக நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் சிறுவர்கள் கலந்துகொண்டதை அவதானித்த பின்னரே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 1991 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் உடன்படிக்கையில் இலங்கை கையெழுத்திட்டுள்ளதால், குழந்தைகளின் அதிகபட்ச பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதோடு, விபத்துக்கள் அல்லது உடல் அல்லது உளவியல் பாதிப்புகளைத் தடுப்பதற்கும் அது உறுதிபூண்ட…

  9. ஜனாதிபதியை... உடனடியாக பதவி விலகக் கோரி, கறுப்பு உடை அணிந்து... பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்! ஜனாதிபதியை உடனடியாக பதவி விலகக் கோரி கண்டியில் கறுப்பு உடை அணிந்த ஏராளமான பாடசாலை மாணவர்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று (வியாழக்கிழமை) காலை தலதா வீதியில் திரண்ட மாணவர்கள், ‘எங்களின் கனவுகளை எமக்கு கொடுங்கள்’ உள்ளிட்ட வாசகம் எழுதப்பட்ட சுவரொட்டிகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு குழந்தைகளை அனுப்ப வேண்டாம் என பெற்றோர்களுக்கு பொலிஸார் அறிவித்திருந்த நிலையில், ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 1989ஆம் ஆண்டு சில பாடசாலைகளில் அரச எதிர்ப்புப் போராட்டங்களுக்கு மாணவர்கள் தூ…

  10. நிறைவேற்று அதிகாரம் கொண்ட... ஜனாதிபதி முறைமையை, நீக்க பிரேரணை – எதிர்க்கட்சி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான பிரேரணை விரைவில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்த இன்று இடம்பெறும் விவாதத்தின்போதே எதிர்க்கட்சி பிரதம கொறடா நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இதனை தெரிவித்தார். https://athavannews.com/2022/1275578

  11. மத்திய வங்கியின் ஆளுநராக... நந்தலால் வீரசிங்க – அலி சப்ரி தகவல் மத்திய வங்கியின் ஆளுநராக நந்தலால் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார் என முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அவர் இன்று வியாழக்கிழமை நாடு திரும்பியதும் அவர் கடமைகளை பொறுப்பேற்பார் என்றும் அலி சப்ரி தெரிவித்தார். நந்தலால் வீரசிங்க முன்னர் 2011 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுநராக பணியாற்றியுள்ளார். அதிகரித்துவரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் உதவியை எதிர்பார்த்திருக்கும் சூழலில் இந்த நியமனம் இடம்பெறவுள்ளது. https://athavannews.com/2022/1275573

  12. மக்கள் கடுமையாக... பாதிக்கப் பட்டுள்ளனர், மக்களின் ஏமாற்றம் நியாயமானது – அலி சப்ரி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளமையை தாம் புரிந்துகொண்டுள்ளதாக முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான் அலி சப்ரி தெரிவித்துள்ளார். மேலும் மக்களின் ஏமாற்றம் நியாயமானது என்பதையம் புரிந்துகொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் தற்போது எதிர்கொண்டுள்ள இன்னல்களுக்கு தனிப்பட்டமுறையில் தான் மன்னிப்பு கோருவதாகவும் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அத்தோடு இந்த சூழ்நிலையில் இருந்து எப்படி சிறந்த முறையில் நாட்டை மீட்டெடுப்பது குறித்து சிந்திக்க வேண்டும் என்றும் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1275565 Tags: Ali Sabry

  13. ஜனாதிபதி பதவி விலகமாட்டார் – மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும்: ஜோன்ஸ்டன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகமாட்டாரெனவும் அரசியலமைப்பிற்கு புறம்பாக செயற்பட மாட்டார் எனவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ மீண்டும் சபையில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (வியாழக்கிழமை) இடம்பெற்ற அமர்வின்போது, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு, பால்மா தட்டுப்பாடு, எண்ணை தட்டுப்பாடு என்பன விரைவில் தீர்க்கப்படும். இந்த பிரச்சினைகளை விரைவில் தீர்க்க முடியுமென நாங்கள் நம்புகிறோம். இலங்க…

  14. ஜனாதிபதி... வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்றே... மக்கள் விரும்புகின்றனர் – அனுரகுமார ஜனாதிபதி வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்றே இந்நாட்டு மக்கள் விரும்புகின்றனர் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி ஆசனத்தில் இருந்துகொண்டு கோட்டாபய ராஜபக்ஷ வழங்கும் எந்தவொரு தீர்வையும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் ஜனாதிபதி பதவி விலகினால் மாத்திரமே தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண தமது கட்சி ஆதரவளிக்கும் என்றும் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்த இன்றும் இடம்பெறும் விவாதத்தின் போதே மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இதனை தெ…

  15. நாடாளுமன்றம் வந்த, சிறிது நேரத்திலேயே... சபையை விட்டு வெளியேறினார், ஜனாதிபதி கோட்டா! நாடாளுமன்ற விவாதங்களை அவதானிப்பதற்காக நாடாளுமன்றம் வருகைதந்திருந்த ஜனாதிபதி சிறிது நேரம் கழித்து சபையை விட்டு வெளியேறினார். நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்த நேற்றும் இன்றும் விவாதங்கள் இடம்பெறும் நிலையில் அதனை பார்வையிடுவதற்காக நாடாளுமன்றத்திற்கு இன்று வருகை தந்திருந்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடாளுமன்ற அமர்வுகளை பார்வையிடுவதற்காக சபைக்கு இன்று (வியாழக்கிழமை) வருகை தந்தார். தற்போதைய நெருக்கடி நிலை தொடர்பான இரண்டாம் நாள் நாடாளுமன்ற விவாதம் தற்போது இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் நாடளுமன்றத்திற்கு வந்த ஜனாதிபதியை அரசாங்கத்தரப்பு நாடாளுமன்ற உறு…

  16. உத்தியோகபூர்வ வாகனங்களை... மீள ஒப்படைக்காத, முன்னாள் அமைச்சர்கள்… பிள்ளையானும் ஒப்படைக்கவில்லை !! அண்மையில் பதவி விலகிய அமைச்சர்கள் தமது உத்தியோகபூர்வ வாகனங்களை மீள ஒப்படைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. நாடு முழுவதும் ஏற்பட்ட போராட்டங்கள் மற்றும் நெருக்கடிகளையடுத்து, கடந்த 3 ஆம் திகதி அமைச்சரவை பதவி விலகியது. பின்னர், சில அமைச்சுப் பதவிகள் மீண்டும் ஏற்படுத்தப்பட்டிருந்த நிலையில் வெற்றிடமாக இருந்த நிதியமைச்சர் பதவிக்கு முன்னாள் நீதியமைச்சர் அலி சப்ரி நியமிக்கப்பட்டார். எனினும், அலி சப்ரி 24 மணித்தியாலங்களுக்குள் அப்பதவியிலிருந்து விலகியதையடுத்து, புதிய நிதியமைச்சராக பந்துல குணவர்தன பதவியேற்பார் என தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் பதவி…

  17. 76,000 மெட்ரிக் தொன் எரிபொருட்கள் இலங்கை வந்தடைந்தன! இலங்கைக்கு 76,000 மெட்ரிக் தொன் எரிபொருட்கள் இந்தியாவினால் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, 36,000 மெட்ரிக் தொன்பெற்றோல் மற்றும் 40,000 மெட்ரிக் தொன் டீசல் நேற்றும்,நேற்று முன்தினமும் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்திய கடன் வசதியின் கீழ் இதுவரையில், 270,000 மெட்ரிக் தொன் எரிபொருட்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2022/1275485

  18. அரச, தோட்ட மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்கள்... பணிப் புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்! நாடளாவிய ரீதியில் நாளை (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு அரச, அரை அரச, தோட்ட மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த அனைத்து தொழிற்சங்கங்களும் தீர்மானித்துள்ளன. நாளை தினத்தை தேசிய எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தி போராட்டம் நடத்தப்படும் என அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளரான சந்தன சூரிய ஆராச்சி தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் போராட்டங்கள் நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கம் தன்னிச்சையாக செயற்பட்டால்இ அதற்கு எதிராக கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும்…

  19. நாட்டின்.. தற்போதைய நெருக்கடி நிலை குறித்த, இரண்டாம் நாள் விவாதம் ஆரம்பம் ! நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலை குறித்த இரண்டாம் நாள் விவாதம் இன்றும் இலங்கை நாடாளுமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது. நேற்று இடம்பெற்ற விவாதத்தின்போது கடுமையான வாய்த்தர்க்கம் மற்றும் போராட்டம் காரணமாக இரு முறை சபை அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1275517

    • 1 reply
    • 138 views
  20. அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் எதிரான சீற்றம் தீவிரமடைவதால் நிதியமைச்சர் பதவியை ஏற்க தயங்கும் அரச நாடாளுமன்ற உறுப்பினர்கள்- இலங்கையின் பொருளாதார குழப்பநிலை ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக அதிகரித்து வரும் மக்கள் சீற்றம் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியமைச்சர் பதவியை ஏற்க தயங்குவதால் நிதியமைச்சர் பதவி தொடர்ந்து காலியாக உள்ளது. நிதியமைச்சராக பதவியேற்ற அலி சப்ரி தனது பதவியை 24 மணிநேரத்திற்குள் இராஜினாமா செய்ததை தொடர்ந்தே இந்த நிலை நீடிக்கின்றது. ஜனாதிபதி தேசிய பட்டியல் மூலம் சுயாதீன நிபுணர் ஒருவரை நிதியமைச்சராக நியமிப்பதற்கு உதவும் விதத்திலேயே அலிசப்ரி நிதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் அதன்பி…

  21. தமிழ்த் தேசமும், சிங்கள தேசமும் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்ட்டி (கூட்டாட்சி) முறைமை – இதுவே இன்றைய நெருக்கடியிலிருந்து நிரந்தரமாக மீண்டெழ ஒரே வழி – கஜேந்திரகுமார் இன்று சிறிலங்கா அரசு எதிர் கொண்டுள்ள நெருக்கடி குறித்து விவாதிப்பதற்காக இங்கு கூடியிருக்கின்றோம். இன்றிருக்கிற நெருக்கடியானது, ஆட்சி செய்யும் அரசாங்கத்தின் (Government) மீதுள்ள நெருக்கடிபோன்று தோன்றினாலும், உண்மையில் சிறிலங்கா அரசே (State) நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. ஏனெனில், எதிர்வரும் நாட்களில் இந்த அரசாங்கம் எதிர்கொள்ளும் நிர்ப்பந்தங்களால், பதவியிலிருந்து விலகுவதாக முடிவெடுத்தாலும் கூட, புதிதாக ஆட்சிக்கு வருபவர்கள், அவர்கள் எந்தக் கட்சியினராக இருந்தாலும், துண்டம் துண்டமாக சிதைந்து போயிருக்கும் இந்த ச…

    • 2 replies
    • 292 views
  22. உலக நாடுகள் சில இலங்கைக்கான பயண எ்சரிக்கையை விடுத்துள்ளன! April 7, 2022 பிரித்தானியா, அவுஸ்ரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகள் இலங்கை செல்லும் தமது பயணிகளுக்கு பயண ஆலோசனையை விடுத்துள்ளன. இலங்கையில் முன்னெடுக்கப்படும் தொடர் போராட்டங்களை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு மற்றும் சில மருந்துகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இலங்கைக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்கா தனது பிரஜைகளை வலியுறுத்தியுள்ளது. தற்போதைய நிலைமையினால் பொது போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை மின் தடை ஏற்படும் என்பதனால் பயணிகள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என…

  23. அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டமைக்கு... ஐக்கிய நாடுகள் சபை வரவேற்பு இலங்கையில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளது. இந்த விடயம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் – ஹம்டி, “ஐ.நா. சட்டத்தின் ஆட்சி மற்றும் அமைதியான ஒன்றுகூடல் உரிமைக்கு ஆதரவாக நிற்கிறது மற்றும் இலங்கையில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதை வரவேற்கிறது. பொருளாதார மீட்சிக்குத் தேவையான அவசர நடவடிக்கைகளில் நாடு கவனம் செலுத்த அனுமதிக்கும் நெருக்கடிக்கு ஒரு அமைதியான தீர்வை நோக்கி செயற்பட கட்சிகளை நாங்கள் ஊக்குவிக்கிறோம்” என்றும் ஹம்டி ஒரு அறிக்கையில் கூறினார். அவசரகாலச் சட்டத்தை இரத்துச் செய…

    • 2 replies
    • 217 views
  24. சிறிலங்காவின் அதிகரித்த இராணுவச் செலவீனங்களே பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணி ! தமிழர் தாயகத்தில் இருந்து இராணுவம் அகற்றப்பட வேண்டும் !! – வி.உருத்திரகுமாரன் Digital News Team 2022-04-06 இன்று இலங்கைத்தீவு எதிர் கொள்ளும் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு சிங்கள அரசின் தமிழ்மக்களுக்கு எதிரான இனவழிப்புப்போரும், பெருந்தொகை பணம் இராணுவச் செலவுகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தமையும் கூட முக்கிய காரணிகளாக அமைகின்றன என்பதைச் சுட்டிக்காட்டுவதுடன், தமிழர் தாயகப் பகுதிகளில் இருந்து சிறிலங்கா இராணுவம் முற்றாக அகற்றப்பட வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் உருத்ரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார். இலங்கைத்தீவின் இன்றைய பொருளாதார நெருக்கடி குறித்…

  25. நிபுணர்கள் குழுவை நியமித்தார் ஜனாதிபதி பலதரப்பு விவகாரங்கள் மற்றும் கடன் நிலைபேற்றுத்தன்மை தொடர்பான ஜனாதிபதி ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களாக புகழ்பெற்ற நிதி மற்றும் பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழுவொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார். 01- இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும், பொதுநலவாய செயலகத்தின் பொருளாதார விவகாரப் பிரிவின் முன்னாள் பணிப்பாளருமான கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி. 02- ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திப் பயிற்சி தொடர்பான பேராசிரியர் மற்றும் உலக வங்கியின் முன்னாள் தலைமைப் பொருளாதார நிபுணர், பேராசிரியர் சாந்தா தேவராஜன். 03- நிறுவனத் திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் மற்றும் IMF இன் ஆபிரிக்க திணைக்கள…

    • 13 replies
    • 829 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.