ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142631 topics in this forum
-
37ஆவது பொலிஸ் மா அதிபரைத் தெரிவு செய்வதற்காக இன்று கூடும் அரசியலமைப்பு பேரவை! நாட்டின் 37ஆவது பொலிஸ் மா அதிபரைத் தெரிவு செய்வதற்காக அரசியலமைப்பு பேரவை இன்று கூடவுள்ளது. இதன்படி, அரசியலமைப்பு பேரவை இன்று பிற்பகல் 1.30 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்தில் கூடவுள்ளது. பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து தேஷபந்து தென்னகோனை நீக்குவதற்காக, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக சபாநாயகர் அனுப்பியுள்ள கடிதத்திற்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியிருந்தார். அதன்படி, புதிய பொலிஸ் மா அதிபர் பதவிக்கான பெயரை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசியலமைப்பு பேரவைக்குப் பரிந்துரைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தற்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, புதிய பொலிஸ் மா …
-
- 2 replies
- 126 views
- 1 follower
-
-
நிசாந்த உலுகேதன்ன கடற்படை புலனாய்வு பிரிவிற்கு பொறுப்பாகயிருந்த காலத்தில் திருகோணமலை தளத்திற்குள் சுதந்திரமாக நடமாடிய வெள்ளை வான்கள் - சித்திரவதைகள் - சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் Published By: RAJEEBAN 06 AUG, 2025 | 05:36 PM இலங்கையின் நீதிமன்ற ஆவணங்களுடன் வெளிநாடுகளில் உயிர்பிழைத்து வாழும் தமிழர்களின் வாக்குமூலங்களையும் கன்சைட்டில் பணியாற்றிய சிங்கள படையினரினதும் கடற்படையினரும் ஆதாரங்களையும் கண்ணால் பார்த்தவர்களின் தகவல்களையும் அடிப்படையாக வைத்து இலங்கையில் சிஐடியினரால் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் கடற்படை தளபதி நிசாந்த உலுகேதன்ன இலங்கையில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லீம்களிற்கு எதிராக இழைக்கப்பட்ட பாரிய மனித உரிமை மீறல்களிற்கு காரணமாவர்களில் ஒருவர் என்…
-
- 2 replies
- 250 views
- 1 follower
-
-
06 AUG, 2025 | 05:38 PM தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலான உள்ளக முரண்பாடுகளை, ஒரே மேசையில், ஒன்றாய் அமர்ந்து பேச்சு நடத்தி, தீர்க்க முடியுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா கொண்டுவந்த ஓட்டமாவடி எல்லைப் பிரச்சினையை தீர்ப்பது தொடர்பான பிரேரணை தொடர்பில் உரையாற்றியபோதே ரிஷாட் பதியுதீன் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது: சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து தீர்வு காண முடியாது. எந்த அரசாங்கமானாலும் எமது சமூகங்களின் பிரச்சினைகளைத் தூண்டிவிட முயற்சிக்குமே தவிர, தீர்த்துவைக்க முயற்சிக்காது. கடந்தகால அனுபவங்களினூடாக நாங்கள்…
-
-
- 4 replies
- 256 views
- 1 follower
-
-
06 AUG, 2025 | 03:14 PM இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய வாவியான மட்டக்களப்பு வாவியிவில் வீதியில் உள்ள கழிவுகள் மற்றும் மண் என்பன வாவியினுள் உட்புகுவதை தடுத்து மண்ணரிப்பு ஏற்படாமல் வாவியை பாதுகாக்கும் நடவடிக்கைகளை வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊடாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இத்திட்டத்திற்கமைய மட்டக்களப்பு வாவியோரம் சுமார் ஒன்றரை மீட்டர் மற்றும் இரண்டு மீட்டர் வரையான அளவிலான உயரமான தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மட்டக்களப்பு லேடி மெனிங் டிரைவ் வாவியோரத்தில் இத்திட்டத்தின் முதற்கட்டம் நடைமுறைப்படுத்துகிறது. இதற்கென 58 மீட்டர் நீளமான தடுப்புச் சுவர் சுமார் 4 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வருவதாக வீதி அபிவிருத்தி அதி…
-
- 0 replies
- 171 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 06 AUG, 2025 | 02:14 PM மஸ்கெலியாவில் மண்மேடொன்று சரிந்து விழுந்ததில் புதையுண்ட ஐவர் காயங்களுடன் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மஸ்கெலியா சாமிமலை பிரதான வீதியில் பனியன் பாலத்திற்கு அருகில் உள்ள வீடு ஒன்றின் மீது இடிந்து விழுந்த மண் மேட்டின் கீழ் புதைந்திருந்த ஐந்து பேரை அப்பகுதி மக்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் நேற்று செவ்வாய்க்கிழமை (05) மஸ்கெலியா பகுதியில் பெய்த கடும் மழையினால் வீடொன்றின் மீது பாரிய மண் திட்டு சரிந்து வீழ்ந்துள்ளது. இன்று புதன்கிழமை (06) மதியம் 12:00 மணியளவில் அந்த மண் மேட்டை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஐவர் மீது மற்றொரு மண் மேடு சரிந்து விழுந்துள்ளது.…
-
- 0 replies
- 128 views
- 1 follower
-
-
மாற்றுத்திறனாளிகளின் கலைத் திறமைக்கு தேசிய மேடை! மாற்றுத்திறனாளி சிறுவர்களின் அழகியல் திறமைகளை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக சமூக சேவைகள் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘சித் ரூ – 2025’ கலை நிகழ்ச்சி கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. ‘ஒன்றாக – கைவிடாத’ எனும் அரசாங்கத்தின் தேசிய கொள்கையின் கீழ் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை பாதுகாத்து, சமூகமயப்படுத்தல், வலுப்படுத்தல் மற்றும் நாட்டின் பொருளாதார செயற்பாட்டில் அவர்களின் பங்கேற்பை உறுதிப்படுத்தும் முயற்சியாக இந்நிகழ்ச்சி நடை பெற்றது. ஆறு வருட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் இடம்பெற்ற இந்த நிகழ்வுக்காக சமூக சேவைகள் திணைக்களத்துக்கு இவ்வாண்டு வரவுசெலவுத் திட…
-
- 1 reply
- 145 views
- 1 follower
-
-
புலம்பெயர் தமிழர்கள் பழிவாங்கல் செயற்பாட்டினை ஜனாதிபதி மூலம் முன்னெடுக்கின்றனர் – விமல்வீரவன்ச. தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம், இலங்கையில் இருந்து இல்லாமல் செய்யப்பட்டுள்ள நிலையில் புலம்பெயர்தமிழர்கள், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மூலம் அவர்களின் திட்டங்களை தற்போது நிறைவேற்றி வருவதாக தேசிய சுதந்திரமுன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் விமல்வீரவங்ச இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து விமல் வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளதாவது ” தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு இந்த நாட்டில் இருந்து ஒழிக்கப்பட்டுள்ளனர். எனவே புலம்பெயர் தமிழர்கள் பழிவாக்கும் நோக்கில் தற்போது நாட்டில் பல திட்டங்களை முன்னெடுத்துள்ளனர். கடற்படை, இராணுவம் மற…
-
- 1 reply
- 168 views
-
-
இலங்கைக்கான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் இஸ்ரேலின் ஆர்கியா ஏர்லைன்ஸ்! எதிர்வரும் செப்டெம்பர் முதல் இஸ்ரேலின் ஆர்கியா ஏர்லைன்ஸ் இலங்கைக்கான விமான சேவையை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளது. இறுதியாக 2024 மே மாதம் ஆர்கியா ஏர்லைன்ஸ் இலங்கைக்கான சேவை தொடர்ந்தது. இந்த நிலையில் 2025 செப்டம்பர் 23, 25 அன்று சேவை மீண்டும் தொடங்கியவுடன், டெல் அவிவ் – கொழும்பு வழித்தடம் விமான நிறுவனத்தின் குல்லிவேர் ஏர்பஸ் A330-200 விமானத்தின் மூலமாக இணைக்கப்படும். மீதமுள்ள கோடை காலத்திற்கு விமான நிறுவனம் வாராந்திர விமானப் பயணத்தைத் திட்டமிட்டுள்ளது. https://athavannews.com/2025/1442083
-
-
- 7 replies
- 376 views
-
-
06 AUG, 2025 | 02:21 PM மன்னார் மாவட்டத்தில் பல்தேசிய நிறுவனங்களின் இல்மனைட் கனிய மணல் சுரண்டல்களினால் மக்களின் வாழ்விடங்கள் மற்றும் பூர்வீக நிலங்கள் அழிவடையும் அபாயம் காணப்படுகின்ற நிலையில் குறித்த நடவடிக்கைகளை கண்டித்து, மன்னார் மாவட்ட இளையோர் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த விழிப்புணர்வு போராட்டம் இன்று புதன்கிழமை (06) காலை 10.30 மணியளவில் மன்னார் பஜார் பகுதியில் இடம்பெற்றது. 'மன்னார் மாவட்டத்தின் இயற்கை வளங்களில் ஒன்றாக மணல் உள்ளது. இந்த மணல், இல்மனைட் கனிமத்தை கொண்டிருப்பதால் உலகளவில் பெரும் கேள்வி உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு மேலாக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பல்தேசிய நிறுவனம் ஒன்று இல்மனைட் மணல் அகழ முயற்சித்து வருகிறது. இதற்கான அனுமதிகள் இழுபறியில் இருந்த போதிலும் …
-
- 2 replies
- 225 views
- 2 followers
-
-
Published By: VISHNU 06 AUG, 2025 | 01:32 AM பௌதீக ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் சிதைந்துபோன அரச கட்டமைப்பு தொடர்பில் சுயவிமர்சனம் செய்து, நவீன அரச சேவையை உருவாக்க அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதிஒதுக்கீடு செய்யப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். அரச சேவையை நவீனத்துவ கலாச்சாரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும், அதைப் பாதுகாக்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் குறிப்பிட்டார். அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், அதன் பௌதீக வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் சிதைந்துபோன அரச சேவையை நவீனமயமாக்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். அலரி மாளிகையில் செவ்…
-
- 0 replies
- 118 views
- 1 follower
-
-
184 பேர் படுகொலை செய்யப்பட்ட சத்துருக்கொண்டானில் பாரிய மனிதப் புதைகுழி; இன்றும் பல சாட்சிகள் உள்ளன சத்துருக்கொண்டான் படுகொலை நடைபெற்ற இராணுவமுகாமில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவேண்டும் என சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு தலைவர் வைரமுத்து குழந்தைவடிவேல் கோரிக்கை விடுத்துள்ளார். மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்போது கருத்து தெரிவித்த அவர், மட்டக்களப்பு மாவட்டத்தில்.1990.09.09 அன்று சத்துருக்கொண்டான் பனிச்சையடி கொக்குவில் பிள்ளையாரடி ஆகிய கிராமங்களில் 184 பேர் படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றனர். இலங்கை ராணுவத்தினராலும், முஸ்லிம் ஊர்காவல் படையினராலும் இந்த படுகொலை செய்யப்பட்டது. இந்த படுகொ…
-
- 0 replies
- 141 views
-
-
இலங்கை முழுவதும் இந்தியாவின் கையில்; விமல் வீரவன்ஸ கொதிப்பு! இந்தியா இலங்கையை முழுவதுமாக ஆக்கிரமித்துவிட்டது என்றும் இலங்கையின் பல முக்கியமான துறைகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன என்றும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது- இந்தியா எமது நாட்டை முழுமையாக ஆக்கிரமித்துள்ளது. டிஜிற்றல் அடையாள அட்டைகளைத் தயாரிக்கும் பணி அந்த நாட்டுக்கு வழங்கப்படுவதன் மூலம் எமது நாட்டுப்பிரஜைகள் அனைவரினதும் தகவல்கள் இந்தியாவிடம் சென்றுவிடும். அதுமட்டுமல்ல, இந்த நாட்டுக்குயாரெல்லாம் சுற்றுலாவிகளாக வருகிறார்கள் என்று அறிவதற்கு இந்தியா முயற்சி செய்கிறது. இதை வெளிநாட்டுச் சுற்றுலாவாசிகள் விரும்பமாட்டார்கள். இந்தியாவின் தொழில்நுட்பத்தை …
-
-
- 6 replies
- 1.6k views
- 1 follower
-
-
செம்மணி உடைமைகளை அடையாளம் காணும் தீர்மானத்தை UN வரவேற்றுள்ளது! adminAugust 6, 2025 செம்மணி மற்றும் கொக்குத்தொடுவாய் கூட்டுப் புதைகுழி தளங்களில் இருந்து மீட்கப்பட்ட தனிப்பட்ட உடைமைகளை அடையாளம் காண்பதில் பொது மக்களின் உதவியை நாடும் தீர்மானம் இலங்கையில் உண்மை மற்றும் நீதி நல்லிணக்கத்தை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் நீண்டகாலமாக எதிர்ப்பாக்கப்பட்ட ஒரு நடவடிக்கை ஆகும் என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலகம் தெரிவித்துள்ளது. https://globaltamilnews.net/2025/218886/
-
- 0 replies
- 131 views
-
-
ஜனவரி முதல் 133,678 புதிய வாகனங்கள் பதிவு! ஜனவரி முதல் இலங்கையில் மொத்தம் 133,678 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் ஜெனரல் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி, புதிய பதிவுகளில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள்கள் ஆகும். 2025 ஆம் ஆண்டில் இதுவரை மொத்தம் 100,451 புதிய மோட்டார் சைக்கிள்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் குறிப்பிட்டார். ஜனவரி முதல் 20,535 கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மீதமுள்ள பதிவுகளில் இரட்டை பயன்பாட்டு வாகனங்கள், லொரிகள் மற்றும் முச்சக்கர வண்டிகள் அடங்கும். https://athavannews.com/2025/1442044
-
- 0 replies
- 161 views
-
-
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ கைது! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சஷீந்திர ராஜபக்ஷ இன்று (06) காலை கெழும்பு, நுகேகொடையில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2025/1442026
-
-
- 7 replies
- 347 views
- 1 follower
-
-
05 AUG, 2025 | 10:08 PM (எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்) அரசாங்க பாடசாலைகள் மூடப்பட மாட்டாது என்றும் 50 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் கல்வி, உயர்கல்வி பிரதியமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (05) வாய்மூல விடை க்கான கேள்வி நேரத்தில், ரவி கருணாநாயக்க எம்பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பாடசாலைகள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ளும் போது மக்கள் பிரதிநிதிகள், பிரதேச ஒருங்கிணைப்புக் குழு, பிரதேச செயலாளர், கிராம சேவை உத்தியோகத்தர்கள் என அனைவரும் ஒன்றிணைந்தே தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அவ…
-
- 0 replies
- 127 views
- 1 follower
-
-
Published By: VISHNU 05 AUG, 2025 | 09:56 PM செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்களை சுமார் 200 பேர் வரையில் பார்வையிட்டிருந்தனர் என தெரிவித்த சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா எவரும் எதனையும் அடையாளம் காட்டவில்லை என்றார். செம்மணி அகழ்வுப்பணிகள் இரண்டாம் கட்டத்தின் 31 ஆவது நாள் யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் மேற்பார்வையில் செவ்வாயக்கிழமை (5) முன்னெடுக்கப்பட்டது. அகழ்வு பணிக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், புதிதாக ஆறு மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு இலக்கமிடப்பட்டுள்ளது. நான்கு மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்ற கட்…
-
- 2 replies
- 201 views
- 1 follower
-
-
செம்மணி மனிதப் புதைகுழி: நீதி அமைச்சின் அரசியல் தலையீடும் அச்சுறுத்தலும் அதிகரித்து வருகிறது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் Published By: VISHNU 05 AUG, 2025 | 06:48 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் நீதி அமைச்சு கடுமையான முறையில் அரசியல் ரீதியாக தலையீடு செய்கின்றது. நீதி அமைச்சின் செயலாளர் அகழ்வில் ஈடுபடுவோருடன் நேரடித்தொடர்பில் இருக்கின்றார். தடயப்பொருட்கள் அடையாளப்படுத்தப்படும் இடத்தின் வாசலில் சி.ஐ.டி.யினர் அமர்ந்திருந்த மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்படுகின்றனர். இந்த அரசாங்கத்திற்கும் மற்றவர்களுக்குமிடையில் இனம் சார்ந்த விடயங்களில் ஒரு வித்தியாசமும் கிடையாது. இது தமிழனுக்கு நடக்கின்றது, அதனால் இது அரசியல் தலையீடு அல்ல. என்பத…
-
- 1 reply
- 170 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 2 05 AUG, 2025 | 04:59 PM போரால் உருக்குலைந்த எமது சமூகக் கட்டமைப்பின் காரணமாக முதியோர் நலக் காப்பங்கள் காலத்தின் தேவையாகவுள்ளன. உயிர் தந்த பெற்றோரை பராமரிப்பது பிள்ளைகளின் பொறுப்பாகவுள்ளபோதும் அது இன்றைய சூழலில் சாத்தியம் குறைந்த ஒன்றாக மாறிச் செல்கின்றது. இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். பூந்தோட்டம், கோவிற்கடவை, துன்னாலை மத்தியில் 'கரவை நலவாழ்வு காப்பகம்' வடக்கு மாகாண ஆளுநரால் இன்று செவ்வாய்க்கிழமை காலை (05) திறந்து வைக்கப்பட்டது. இதன் போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஆளுநர், புலம்பெயர் தமிழர்களில் பலர் இங்கு முதலிடுகின்றார்கள். அவர்களில் சிலர் முதலீடு செய்வதன் ஊடாக…
-
- 0 replies
- 87 views
- 1 follower
-
-
பதவியிலிருந்து நீக்கப்பட்டார் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ! பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அவரது பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 2002 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க அதிகாரிகளை நீக்குதல் (நடைமுறை) சட்டத்தின் பிரிவு 17 இன் கீழ், பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கான தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. இந்த நிலையில் விவாதத்தின் இறுதியில் பதவி நீக்கம் தொடர்பான வாக்கெடுப்பு இடம்பெற்றது. இதன்படி தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை 177 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு ஆதரவாக 177 வாக்குகளும் எதிராக எந்தவோரு வாக்குகள…
-
-
- 3 replies
- 247 views
-
-
மேல் நிலை அதிகாரிகளால் பழிவாங்கப்படும் மனைவியான கிராம அலுவலர்; நீதியை பெற்று தருமாறு கணவன் கோரிக்கை! Published By: Digital Desk 3 05 Aug, 2025 | 02:54 PM கிராம அலுவலராக கடமையாற்றி வரும் தனது மனைவி பழிவாங்கப்பட்டு கட்டாய பணியிடம் மாற்றப்பட்ட நிலையில் குறித்த பணியிட மாற்றமானது நீதி அற்ற நியாயமற்ற முறையில் வழங்கப்பட்டுள்ளதாக கிராம அலுவலரின் கணவரான செல்வரத்தினம் கிருஸ்ணரூபன் தெரிவித்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு வழங்கப்பட்ட வரட்சி நிவாரண தெரிவு பட்டியிலில் இடம்பெற்ற முறைகேடான தெரிவு எனும் அடிப்படையிலேயே குறித்த பணியிட மாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும், தனது மனைவியான கிராம அலுவலர் சுற்றுநிருப விதி முறைகளுக்கு அமைவாகவே குறித்த தெரிவு பட்டியலை வழங்கியுள்ளார் என்றும் ஆனால் ஒருசில அ…
-
- 1 reply
- 168 views
- 1 follower
-
-
Published By: Digital Desk 2 05 Aug, 2025 | 12:53 PM இலங்கையிலே நிலத்திற்கு கீழ் தான் உண்மைகள் பலவும் புதைக்கப்பட்டு இருக்கின்றன என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வு இடம்பெறுவதை திங்கட்கிழமை (04) நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி மனிதப் புதைகுழி ஆய்வு நடைபெறுகிற இடத்திலே ஸ்கேனர் கருவி இன்றைக்கு பாவிக்கப்பட்டிருக்கிறது. அதனை பாவிப்பதன் மூலமாக நிலத்திற்கு அடியிலே ஏதாவது அசாதாரணமான விடயங்கள் காணப்பட்டால் அல்லது அசைவுகள் இருந்தால் இந்த இயந்திரம் அதனை வெளிக்கொண்டு வரும் எனச் சொல்கிறார்கள். இந்த மன…
-
- 0 replies
- 96 views
- 1 follower
-
-
சோமரத்னவுக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டால், அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் – கஜேந்திரகுமார் எம்.பி தெரிவிப்பு. செம்மணி மனிதப் புதைகுழி வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட சோமரத்ன ராஜபக்ஷவின் உயிருக்கு சிறையில் ஆபத்து ஏற்படுமானால், அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என, அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் செயலாளர் நாயகம், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் ”தமிழ் மக்களின் மனங்களில் அழியா இடம் பிடித்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி வழக்கில் ஏற்கனவே குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட சோமரத்ன ராஜபக்ஷ சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். செம்மணி பகுதியில் சுமார் அறுநூறு உடல்கள் வரை புதைக்கப…
-
- 2 replies
- 221 views
- 1 follower
-
-
இலங்கையில் இஸ்ரேலியர்களுக்கு சிறப்பு பாதுகாப்பா? – அரசாங்கம் விளக்கம்! இலங்கையில் சுற்றுலாப் பயணிகளாக தற்போது இருக்கும் இஸ்ரேலிய பிரஜைகளுக்கு எந்த சிறப்புப் பாதுகாப்பும் வழங்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இன்று (05) நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், அறுகம்பை விரிகுடா பகுதியில் இஸ்ரேலியர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதாகவும், அவர்கள் சுற்றுலாப் பயணிகள் என்பதால் மாட்டுமே பொலிஸ் மற்றும் முப்படை வீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இஸ்ரேலிய பிரஜைகள் கூடும் இடங்கள் இருந்தால், அவர்கள் பொதுவான சுற்றுலாப் பயணிகளாகக் கருதப்படுவதால், அரசாங்கம் நிலையான பாதுகாப்பை வழங்கும் என்…
-
- 1 reply
- 153 views
-
-
3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை வீரர்கள் கைது! சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பெப்ரவரி 22 முதல் ஆகஸ்ட் 3 வரை மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில், சேவையிலிருந்து தப்பியோடிய 3,504 முப்படை வீரர்கள் கைது செய்யப்பட்டதாக அமைச்சு சுட்டிக்காட்டுகிறது. கைது செய்யப்பட்டவர்களில் 2,937 பேர் இராணுவ வீரர்கள். மேலும், 289 கடற்படை வீரர்களும், 278 விமானப்படை வீரர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. முப்படைகளில் இருந்து சட்டப்பூர்வமாக இராஜினாமா செய்யாத வீரர்கள் இராணுவத்தில் சரணடைவதற்காக கடந்த ஆண்டு பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டது. மேலும் …
-
- 1 reply
- 233 views
- 1 follower
-