Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கசூரினா கடற்கரையில் தீ! adminJuly 21, 2025 யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல சுற்றுலா தளங்களில் ஒன்றான கசூரினா கடற்கரையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு (20.07.21) பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் அறிந்து கடற்கரைக்கு விரைந்த பிரதேச சபையினர் , கடற்படையினர் ஆகியோர் நீண்ட போராட்டத்தின் பின் தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர். குறித்த தீ விபத்தில் கடற்கரையில் காணப்பட்ட சவுக்கு மரங்கள், பனை மரங்கள் என்பன தீயில் கருகி நாசமாகியுள்ளது தீ விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில், காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://globaltamilnews.net/2025/218136/

  2. யாழ்ப்பாண யுவதி விமான நிலையத்தில் கைது! Vhg ஜூலை 20, 2025 கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 26 வயது யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அதிகாரிகளின் கூற்றுப்படி, சந்தேகநபர் போலி கடவுச்சீட்டு, போலி விமான அனுமதி அட்டை (boarding pass) மற்றும் போலி குடிவரவு முத்திரைகளுடன் பிடிபட்டுள்ளார். யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்ட இந்த யுவதி, குடிவரவு அதிகாரிகளை ஏமாற்றி, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி டுபாய் வழியாக இத்தாலி செல்ல திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. போலித் தகவல்களை வழங்கியமை, உத்தியோ…

    • 3 replies
    • 297 views
  3. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் நிர்வாகத் தெரிவும் கலந்துரையாடலும் செய்திகள் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் நிர்வாகத் தெரிவும் கலந்துரையாடலும் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. வலிந்து காணப்பட்ட உறவுகள் தமது உறவுகளை தேடும் போராட்டத்தினை தொடர்ந்து முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டு எட்டு மாவட்டங்களை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தமது சங்கங்களின் தலைவர் செயலாளர் உள்ளிட்டோரை இன்றைய தினம் தெரிவு செய்தனர். இதன் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் வடக்கு கிழக்கின் தலைவி யோகராஜா கனகரஞ்சினியும், செயலாளராக சி. ஜெனிற்றாவும் தெரிவு செய்யப்பட்டனர். காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் யாழ்ப்பாண மாவட்ட தலைவராக சி. இளங்கோதை, மட்டக்களப்பு மாவட்டம் வ.அமலநாயக…

  4. 20 JUL, 2025 | 05:10 PM கடந்த மாதம் 30ம் திகதி ஆரையம்பதி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த மூன்று வயது சிறுவனின் இழப்புக்கு நீதி கோரும் குறித்த சிறுவனின் தாயாரின் ஊடக சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை (20) மாலை மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்றது. இதன் போது குறித்த தாயார் தன்னுடைய விபத்தில் உயிரிழந்த மகனுக்கு சரியானதொரு விசாரணை முன்னெடுக்கப்பட்டு இந்த விபத்துக்கான நீதி கிடைக்க வேண்டும் எனவும் தனக்கு இந்த இழப்புக்கான பண இழப்பீடுகள் வேண்டாம் எனவும் சரியான நீதி கிடைக்க வேண்டும் எனவும் இதன் போது வலியுறுத்தினார். பொலிஸார் இந்த விபத்திற்கு சரியான விசாரணை முன்னெடுக்கவில்லை எனவும் இந்த விபத்தை ஏற்படுத்திய நபரும் குறித்த வாகனமும் இன்று வெளியில் இருப்பதாகவும் பொலிஸார் தங்களது வாக்குமூ…

  5. மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அர்ஜுன மகேந்திரனுக்கு உயர் பதவி மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், தற்போது சிங்கப்பூரில் உள்ள “விஸ்டம் ஓக்” என்ற முன்னணி முதலீட்டு நிறுவனத்தில் மூத்த பதவியில் உள்ளார் என்று இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் இந்த நிறுவனத்தில் முதலீட்டு நிபுணராகப் பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது. நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் முதலீடுகளைக் கட்டுப்படுத்துதல், நிதி வளங்களை நிர்வகித்தல், பங்குச் சந்தை மற்றும் பத்திர முதலீடுகள் தொடர்பான ஆலோசனை சேவைகளை வழங்குதல் ஆகியவை அவரது முக்கிய பொறுப்புகளில் அடங்கும் என்பதை சமூக ஊடக அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன. 2016இல் …

  6. உள்நாட்டு போரின் இறுதிப்பகுதியில் இடம்பெற்ற விடயங்களை மாத்திரம் விசாரணை செய்யும் சர்வதேச சமூகத்தின் நோக்கத்தை செம்மணி கேள்விக்குட்படுத்தும் ;இனப்படுகொலை விசாரணை இடம்பெறுவதற்கான சூழலை ஏற்படுத்தும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் Published By: RAJEEBAN 20 JUL, 2025 | 03:19 PM செம்மணியை பிரித்து போர்க்காலத்தில் இடம்பெற்ற விடயங்களை பிரித்துவைப்பது பாதிக்கப்பட்ட மக்களிற்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ள தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செம்மணி ஜெனீவாவில் இருக்கின்ற சர்வதேச சமூகம் அதனை கொச்சைப்படுத்தி முடக்குகின்ற கடைசிகட்டத்தை மாத்திரம் விசாரிக்க சொல்கின்ற அந்த முயற்சியை கேள்விக்குட்படுத்தி, அது விரும்பியளவிற்க…

  7. பிள்ளையான் தொடர்பான முக்கிய விடயங்கள் விரைவில் நீதிமன்றுக்கு! – அமைச்சர் ஆனந்த விஜேபால General20 July 2025 பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தன் தொடர்பான சில விடயங்கள் விரைவில் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் ஆனந்த விஜேபால ஏப்ரல் 21 தாக்குதல்கள் குறித்து பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துறை சந்திரகாந்தன் முன்கூட்டியே அறிந்திருந்தார் என்ற விடயத்தை நான் அண்மையில் நாடாளுமன்ற உரையில் குறிப்பிட்டிருந்தேன். அதற்கமைய, நீதிமன்றத்துக்கு கண்டறியப்பட்ட விடயங்களை முன்வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நீதிமன்றில் அவற்றை முன்…

  8. அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளாக இருப்பது கட்டாயம்! பிரதமர் அறிவிப்பு அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளாக இருக்க வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பில், தென் மாகாண கல்வி அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்துவதற்கான நிகழ்வில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார். அத்துடன் ஆசிரியராக நியமிக்கப்படுபவர்கள் கட்டாயமாக ஆசிரியர் பயிற்சி பெற வேண்டும் எனவும், அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளாக இருப்பது கட்டாயமாகும் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார். மேலும் முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்களுக்கு ஏற்ப, கல்வி நிர்வாகத்தில் தேவையான மாற்றங்களைச் செயற்படுத்த ஒரு கல்வி பேரவையை நிறுவுவதற்குத் தாம் முன்மொழிந்துள்ளதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரி…

  9. யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்! யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை (21) ஆரம்பிக்கப்படவுள்ளது. முன்னதாக, விடயம் தொடர்பில் சட்ட மருத்துவ அதிகாரி மற்றும் தொல்லியல் துறை பேராசிரியர் ஆகியோரின் சமர்ப்பணங்களை ஆராய்ந்த யாழ் நீதவான் நீதிமன்றம், அகழ்விற்கான இந்த அனுமதியை வழங்கியுள்ளது. இந் நிலையில், நாளை(21) முதல் 15 நாட்களுக்கு செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதேவேளை, மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின், முதலாவது அமர்வு அகழ்வுப் பணிகளின் போது 65 என்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் இதில் சிறுவர்கள் மற்றும் பெண்களின் என்பு…

  10. 20 JUL, 2025 | 11:24 AM குப்பைகளை கண்ட கண்ட இடங்களில் கொட்டுபவர்களுக்கு எதிராக தண்டப்பணம் அறவிடுவதற்கும், அதே போன்று குப்பைகளை பொது இடங்களில் கொட்டுபவர்களை சரியான ஆதாரத்துடன் எங்களிடம் தெரிவிப்பவர்களுக்கு சன்மானம் வழங்குவதற்கும் நாங்கள் தீர்மானித்திருக்கின்றோம். எனவே பிரதேச மக்கள் எங்களுடன் ஒத்துழைப்பு வழங்கி செயல்பட வேண்டும் என்று காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் எஸ். பாஸ்கரன் தெரிவித்தார். காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் திண்மக்கழிவகற்றல் பணியை மிகச் சிறப்பாக செய்வதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். இதன் அடிப்படையில் சனிக்கிழமை (19) காரைதீவு - 03 லெனின் வீதி பிரதேசத்தில் சட்டவிரோதமாக கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றும் பணியில் காரைதீவு பிரதே…

  11. பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்கு பிரத்தியேக பாதையூடாக சென்று வழிபட அனுமதி! ஆடிப்பிறப்பன்று படைத்தரப்பு அறிவிப்பு பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கு தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பிரத்தியேக பாதை ஒன்றின் ஊடாகச் சென்று வழிபாடுகளை மேற்கொள்ள இராணுவத்தினர் ஆடிப்பிறப்பான நேற்று வியாழக்கிழமை முதல் அனுமதி வழங்கியுள்ளனர். பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கு கட்டுப்பாடுகள் இன்றி மக்கள் வழிபடுவதற்கான அனுமதியை 35 வருடங்களின் பின்னர், ஜூன் மாதம் 27ஆம் திகதி இராணுவத்தினர் வழங்கியிருந்தனர். ஆனால் ஜூன் மாதம் 28 ஆம் திகதி பாதுகாப்புக் காரணங்கள் எனக் கூறி ஆலயத்திற்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலே நேற்று முதல் ஆலயத்…

    • 2 replies
    • 166 views
  12. Published By: DIGITAL DESK 3 20 JUL, 2025 | 11:01 AM தெற்கு சூடானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இலங்கையின் முயற்சி, அரசியல் தடைகள், விநியோகத் தடங்கல்கள் மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என தெற்கு சூடானுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் கனநாதன் தெரிவித்துள்ளார். எனவே, இந்த முயற்சியை இலங்கை அதிகாரிகள் கைவிட வேண்டும் என்றும் அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். தடைகள், நம்பகத்தன்மையற்ற விநியோகச் சங்கிலிகள் மற்றும் சுத்திகரிப்பு இணக்கமின்மை ஆகியவற்றைக் காரணம் காட்டி, அத்தகைய நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யுமாறு இலங்கை எரிசக்தி அதிகாரிகளை தூதர் கனநாதன் வலியுறுத்தினார். "எரிசக்தி பாதுகாப்பிற்கு பல்வகைப்படுத்தல் அவசியம் என்றாலும், இந்த கட்டத்தில் தெற்கு…

  13. 12 JUL, 2025 | 01:04 PM தென்னிந்திய பிரபல பாடகர் ஶ்ரீநிவாஸ் பங்குபெறும் இசை நிகழ்ச்சி யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் சனிக்கிழமை (19) மாலை ஆறு மணிக்கு நடைபெறவுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களின் போக்குவரத்து வசதிகளுக்காக பேருந்து ஒன்றை கொள்வனவு செய்வதற்கான நிதியை திரட்டும் முகமாக குறித்த இசைநிகழ்ச்சி யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மகேந்திரன் சங்கீதன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி இ.சுரேந்திரகுமாரன் ஆகியோர் இதனை தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில், யாழ்…

  14. 19 JUL, 2025 | 03:00 PM இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 225 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மாரசிங்க தெரிவித்துள்ளார். அதிகளவான யானைகள் ரயிலில் மோதியும், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியும் மற்றும் மின்சார வேலிகளில் சிக்கியும் உயிரிழக்கின்றன. இதேவேளை, கல்லெல்ல பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (18) அதிகாலை கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த ரயிலில் மோதி யானை ஒன்று உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/220389

  15. 19 JUL, 2025 | 08:12 PM ஒரு பாடசாலை வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கையை 25-30 ஆகக் குறைப்பது ஒரு இலக்காகும் என்றும், ஒரு வகுப்பறையில் 50-60 மாணவர்களுடன் தரமான கல்வியை வழங்க முடியாது என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்சார் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். புதிய கல்வி மறுசீரமைப்பு குறித்து தென் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு அறிவூட்டும் நோக்குடன் காலி, தக்ஷினபாய கேட்போர் கூடத்தில் ஜூலை 19ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பிரதமர் இதனைத் தெரிவித்தார். புதிய கல்வி மறுசீரமைப்புகள் குறித்து மாகாண அதிகாரிகளுக்கு அறிவூட்டும் நான்காவது நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மேலும் கூறியதாவது, "கல்வி மறுசீரமைப்புக்காக நீங்கள் பெற்றுத்தரும் ஆதரவுக்கு நான் …

  16. பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரி கையெழுத்து வேட்டை General19 July 2025 பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு கோரி நாட்டின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்படும் கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. சம உரிமை இயக்கம் என்ற அமைப்பினால் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு அருகில் இன்று முற்பகல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இன்னுமொரு அடக்குமுறை வேண்டாம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இப்போதாவது நீதியை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. முன்னதாக கிளிநொச்சி, மன்னார் மற்றும் மட்டக்களப்பு உள்ளிட்ட ப…

  17. இலங்கையில் பாடசாலை மாணவிகளிடையே அதிகரிக்கும் கர்ப்பம் சமீப காலமாக பாடசாலை மாணவிகளிடையே கர்ப்பம் தரிப்பது அதிகரித்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். இதற்கு தீர்வாக, கல்வி அமைச்சுடன் இணைந்து, இளம் பருவப் பெண்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு பாலியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு குறித்த சிறந்த புரிதலை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். 18 வயதுக்குட்பட்ட மாணவிகளின் கர்ப்பங்கள், அவர்களைப் பாதிக்கப்பட்டவர்களாக மாற்றுவதுடன், பல்வேறு சிக்கல்களை உருவாக்குகின்றன. இதனால், பெற்றோரின் கவனிப்பு இல்லாமல், எதிர்காலத்தில் சமூகத்தில் கைவிடப்பட்ட அல்லது அனாதையாக்கப்பட்ட குழந்தைகளின் பிறப்பு …

  18. தனியார் பிரத்தியேக வகுப்புக்கள் தொடர்பில் சர்வமத பேரவையின் கோரிக்கை! வெள்ளிக்கிழமைகளில் பாடசாலை வேளைக்குப் பின்னரும் ஞாயிற்றுக் கிழமைகளில் மதியத்துக்கு முன்னரும் தனியார் பிரத்தியேக வகுப்புகளை முழுமையாக நிறுத்தி, மாணவர்கள் சமய விழுமியங்களைப் புரிந்து வழிபடவும் வாழவும் உரிய சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தருமாறு யாழ் மாவட்ட சர்வமத பேரவையின் செயலாளர் அருட்பணி இ. ராஜ்குமார், வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகனுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். அக் கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது விரக்தி, தற்கொலை, போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாதல், வன்முறை வாள் வெட்டு என்பன அதிகரித்துவரும் சமகால சூழ்நிலையில் ஆரோக்கியமான ஒரு சமூகத்தை உருவாக்க சமய விழுமியங்கள் மற்றும் ஒழுக்கம் மிக்க வா…

  19. யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட சபாநாயகர் Published By: VISHNU 19 JUL, 2025 | 12:54 AM யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட சபாநாயகர் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் வழிபாட்டில் ஈடுபட்டார். யாழ்ப்பாணத்திற்கு வெள்ளிக்கிழமை (19) விஜயம் செய்த சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன யாழ் . பொதுசன நூலகம் மற்றும் கோட்டை பகுதிகளை பார்வையிட்டார். அதனை தொடர்ந்து நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். அதன் போது யாழ் . மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீபவானந்தராசாவும் உடனிருந்தார். https://www.virakesari.lk/article/220357

  20. யாழ் – வடமராச்சியில் வெடிக்காத நிலையில் இருந்த வெடிகுண்டு ஒன்று மீட்பு! யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் முருகன் கோயில் அருகாமையில் நேற்றைய தினம் (18) பிற்பகல் 5 மணியளவில் வெடிக்காத நிலையில் வெடிகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது . குறித்த பகுதியில் வீட்டுவேலைக்காக வேலையாட்கள் அத்திவாரம் வெட்டிக் கொண்டிருந்த நிலையில் அப்பகுதியில் வெடிக்காத நிலையில் ஒரு வகை வெடி குண்டினை கண்டுபிடித்துள்ளனர். இதை அடுத்து மருதங்கேணி பொலிசார்க்கு வெடிகுண்டு குறித்து தகவலளிக்கப்பட்டது. இதன் பின் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மருதங்கேணி பொலிசார் குறித்த வெடிகுண்டை மீட்டு சென்றுள்ளனர். மேலும் குறித்த வெடிகுண்டு தொடர்பில் மருதங்கேணி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavann…

  21. 18 JUL, 2025 | 04:04 PM மரபிழந்த பாரம்பரிய பண்பாட்டை வெளிப்படுத்தி வவுனியா பிரதேச செயலக பண்பாட்டு விழாவை முன்னிட்டு ஊர்திப் பவனி சிறப்பாக இடம்பெற்றது. வவுனியா பிரதேச செயலகம் மற்றும் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையில் வவுனியா பிரதேச கலாசார பேரவையும், பிரதேச கலாசார அதிகார சபையும் இணைந்து நடத்திய பண்பாட்டு ஊர்திப் பவனி பிரதேச செயலாளர் இ.பிரதாபன் தலைமையில் பிரதேச செயலக முன்றில் வெள்ளிக்கிழமை (18) ஆரம்பமாகியது. வவுனியா பிரதேச செயலக முன்றில் இருந்து ஆரம்பமாகிய ஊர்திப் பவனி தமிழர் பாரம்பரியம், கலாசாரம், வரலாறு, தொல்லியல், கலைகள் என்பவற்றை பறைசாற்றி கிராம மக்களின் பங்களிப்புடன் வவுனியா, கண்டி வீதியை அடைந்து பசார் வீதி, மணிக்கூட்டு கோபுர சந்தி, புகையிரத நிலைய வீதி, …

  22. விடுதலைப் புலிகள் சிங்களவர்களை படுகொலை செய்தது மனிதப் படுகொலை இல்லையா? அதற்கு யார் நீதியை பெற்றுக்கொடுப்பது? - அசேப எதிரிசிங்க 18 JUL, 2025 | 07:30 PM (இராஜதுரை ஹஷான்) விடுதலை புலிகள் சிங்களவர்களை படுகொலை செய்தது. இது மனித படுகொலை இல்லையா, இதற்கு யார் நீதியை பெற்றுக்கொடுப்பது. பழைய செம்மணி புதைகுழி தற்போது தோண்டப்படுகிறது. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தவர்கள் மனித படுகொலையாளிகளாகவும், பயங்கரவாதிகள் வீரர்களாகவும் சித்தரிக்கும் நிலை தற்போது காணப்படுகிறது. ஐ.நா சபை நடுநிலையாக வகையில் செயற்பட வேண்டும் என்று நாட்டுக்கான தேசிய அமைப்பின் செயலாளர் அசேப எதிரிசிங்க தெரிவித்தார். கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தின் முன்பாக வியாழக்கிழமை (17) எதிர்ப்பு போராட்டத்தில்…

  23. 18 JUL, 2025 | 03:31 PM (எம்.நியூட்டன்) சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்குடன் வேலணை - சாட்டி கடற்கரையோரத்தில் காணப்படும் சாதாளை தாவரங்களை அகற்றி, கடற்கரையை தூய்மையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வேலணை பிரதேச சபையின் தவிசாளர் அசோக்குமார் தெரிவித்தார். அத்துடன் இந்த நடவடிக்கையின்போது அகற்றப்படும் சாதாளைகள், தாவரங்களுக்கான சிறந்த பசளையாக பயன்படுத்தக்கூடியதாக இருப்பதால் இந்த சாதாளையை மிகக் குறைந்த விலைக்கு பொதுமக்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆடி அமாவாசை தினத்திற்கு முன்னராக இந்த செயற்பாட்டை பிரதேச சபை மேற்கொள்ளவுள்ளதால் கடற்சாதாளைகளைப் பெற விரும்புவோர் வேலணை பிரதேச சபையின் தலைமை அலுவலகத்துடன் தொடர்புகொண்டு உரிய கட்டணங்களைச் செலுத்தி தேவ…

  24. இலங்கை போக்குவரத்து சபையில் 750 வெற்றிடங்களுக்கான விண்ணப்பம் கோரல்! இலங்கை போக்குவரத்து சபை (SLTB) ஒப்பந்த அடிப்படையில் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக நாடு முழுவதும் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை கோரியுள்ளது. நாடு முழுவதும் உள்ள 107 டிப்போக்களில் 25,000க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் இயங்கும் பொதுப் போக்குவரத்து சேவையை வலுப்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கமாகும். இது தொடர்பான ஒரு பத்திரிகை விளம்பரம் இன்று (18)வெளியிடப்பட்டது. அதன்படி, சாரதி பணிக்கு 450 காலியிடங்கள் (ஆண்களுக்கு 425 மற்றும் பெண்களுக்கு 25) மற்றும் நடத்துனர் பணிக்கு 300 வெற்றிடங்கள் (ஆண்களுக்கு 275 மற்றும் பெண்களுக்கு 25) உள்ளன. விண்ணப்பங்களுக்கான இறுதி திகதி 2025 ஜூலை 31 ஆ…

  25. Published By: VISHNU 18 JUL, 2025 | 09:25 PM இசைத்துறைக்கு தென்னிந்தியாவில் உள்ளது போன்ற வாய்ப்புக்கள் வசதிகள் இங்கே குறைவு. ஆனாலும் இங்குள்ள பிள்ளைகள் இசைத்துறையில் மிளிர இசை தொடர்பான வகுப்புக்கள், பயற்சிகளுக்கு என்னால் முடிந்த ஆதரவை நிச்சயமாக வழங்குவேன் என தென்னிந்திய பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் சனிக்கிழமை (19) நடைபெறவுள்ள இசை நிகழ்வில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள ஸ்ரீனிவாஸ், வெள்ளிக்கிழமை (18) மருத்துவ பீடத்தில் தனது மகள் சரண்ஜாவுடன் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்திற்கு வந்தது பெரும் சந்தோசம். உலகில் எந்த நாட்டுக்கு போனாலும் அங்கே ஈழ தமிழர்கள் எனக்கு தர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.