ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142409 topics in this forum
-
மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் - தமிழர் தேசமெங்கும் உணர்வெழுச்சி நிகழ்வுகள் ஈழத் தமிழர்களின் உரிமைக்காகப் போராடி உயிர்நீத்த வீரமறவர்களை நினைவேந்தும் மாவீரர் வாரம் இன்று(21.11.2025) ஆரம்பமாகின்றது. இந்த மாவீரர் வாரத்தின் இறுதி நாளான நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாளாக அனுஷ்டிக்கப்படுகின்றது. புலம்பெயர் நாடுகளிலும்.. 1982 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளியான லெப். சங்கர் முதல் வித்தாக வீரமரணமடைந்தார். அந்த நாளையே மாவீரர் நாளாக 1989 ஆம் ஆண்டு தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. …
-
- 20 replies
- 599 views
- 1 follower
-
-
Published By: Digital Desk 3 30 Nov, 2025 | 12:38 PM மாவிலாறு நீர்தேக்கத்தின் அணை உடைந்ததால் அந்த பகுதியை அண்டிய பகுதிகளில் உள்ள மக்கள் கவனமாக செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக மக்கள் அப்பகுதியிலிருந்து வெளியேறவேண்டுமென அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/232018 மாவிலாறு வெள்ளம்: விமானப்படை ஹெலிகொப்டர்கள் மூலம் 121 பேர் மீட்பு Nov 30, 2025 - 01:38 PM மாவிலாறு பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியிருந்த 121 பேர், இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான உலங்கு வானூர்திகள் மூலம் மீட்கப்பட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இலங்கை விமானப்படை ஊடகப் பேச்சாளர் இந்தத் தகவலைத் தெரிவித்…
-
-
- 6 replies
- 377 views
- 1 follower
-
-
நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகள் கிடைக்கவில்லையென முறைப்பாடு 01 Dec, 2025 | 10:48 AM மன்னார் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மற்றும் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கான சமைத்த உணவுகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட போதும் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய வகையில் சமைத்த உணவுகள் வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மற்றும் வெள்ளப் பகுதியில் இருந்து வெளி வர முடியாத மக்களுக்கு கடற் படையினரின் உதவியுடன் சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் ஆலோசனைக்கு அமைய மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம்,பிரதேச செ…
-
- 0 replies
- 88 views
- 1 follower
-
-
மரக்கறிகளின் விலைகள் கிடுகிடுவென உயர்வு Dec 1, 2025 - 10:12 AM தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைக்கும் மரக்கறிகளின் மொத்த விலைகள் சடுதியாக உயர்ந்துள்ளன. இதன்படி, ஒரு கிலோகிராம் கரட் ரூபாய் 700 முதல் ரூபாய் 1000 வரை விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன், போஞ்சு, லீக்ஸ் போன்ற மரக்கறிகளும் 500 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை அதிகரித்துள்ளன. கடந்த வாரங்களில் 30 ரூபாவிற்கு விற்பனையான ஒரு கிலோ கிராம் வட்டகாயின் விலையும் 100 முதல் 130 வரை தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் விற்பனை செய்யப்படுகிறது. மழை மற்றும் மண்சரிவு காரணமாக பெரும்பாலான மரக்கறித் தோட்டப் பயிர்கள் அழிவடைந்தமையே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்கள் த…
-
- 0 replies
- 99 views
- 1 follower
-
-
இயல்பு வாழ்க்கையை மீள ஏற்படுத்த சிறந்த ஒருங்கிணைப்பு அவசியம் Nov 30, 2025 - 08:35 PM அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கும் நிவாரணம் வழங்குவதற்கும் முன்னுரிமை அளிக்கும் அதே வேளையில், இயல்பு வாழ்க்கையை மீண்டும் ஏற்படுவதற்கு அவசியமான அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மீளமைப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், இதற்காக நன்கு ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை தேவை என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார். அனர்த்தத்திற்குப் பின்னர் இயல்பு வாழ்க்கையை மீண்டும் நிலைநாட்டுவது மற்றும் அத்தியாவசிய உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் சம்பந்தப்பட்ட துறைசார் அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களுடன் இன்று (30) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கல…
-
- 0 replies
- 119 views
- 1 follower
-
-
மோசமான வானிலை காரணமாக பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று மின்சார சபை தெரிவித்துள்ளது. வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை (CEB) மேலும் கூறுகையில், மோசமான வானிலை காரணமாக நாடு முழுவதும் நாற்பத்தைந்தாயிரம் மின் தடைகள் பதிவாகியுள்ளன. 1987 SMS சேவைகள் நேற்று 27 ஆம் திகதி மாலைக்குள், இந்த மின் தடைகளில் சுமார் இருபதாயிரம் மின் தடைகள் மீட்டெடுக்கப்பட்டதாக சபை சுட்டிக்காட்டுகின்றது. இலங்கை மின்சார சபை ஊழியர்கள் மின் தடைகளை மீட்டெடுக்க விரைவாக செயல்பட்டு வருவதாகவும்,நிலவும் மோசமான வானிலை காரணமாக மின் தடைகள் குறித்து அழைப்பு மையத்திற்கு வரும் அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது…
-
- 1 reply
- 111 views
- 1 follower
-
-
Published By: Vishnu 30 Nov, 2025 | 08:36 PM பாகிஸ்தானின் நூர் கான் விமானப்படைத்தளத்தில் இருந்து சுமார் 100 தொன் நிவாரணப் பொருட்கள், பயிற்றப்பட்ட தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர், மேலும் முழுமையான வசதிகளுடன் கூடிய நடமாடும் வைத்திய உதவிக்கட்டமைப்பு உள்ளிட்ட அவசர உதவிகளை ஏற்றிய C-130 இலக்க விமானம் இன்று கொழும்புக்குப் புறப்படவுள்ளதாக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது. இலங்கை எதிர்கொண்டுள்ள அவசர சூழ்நிலைக்கு பதிலளிக்கும் வகையில் இந்த மனிதாபிமான உதவி உடனடி நடவடிக்கையாக அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. விமானத்தில் அடங்கும் உதவிப் பொருட்களில் அவசர மருத்துவ உபகரணங்கள், தங்குமிட வசதிக்கான பொருட்கள், உணவுப் பொருட்கள், குடிநீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் உள்ளிட்டவை இ…
-
- 0 replies
- 141 views
- 1 follower
-
-
படக்குறிப்பு,மண்சரிவில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சபப்டுகிறது. கட்டுரை தகவல் ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ''பெரிய சத்தமொன்று வந்தது. நான் கதவை திறந்தேன். கதவை திறந்தவுடன் பூகம்பம் போல தோன்றியது. ஒரு வீடு அப்படியே உள்ளே புதையுண்டது. அந்த வீடு உள்ள போனதை நான் கண்ணால கண்டேன்" என இலங்கை கண்டியில் நிகழ்ந்த மண்சரிவிலிருந்து இறுதி நொடியில் உயிர் தப்பிய ரஷிம் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். அலவத்துகொடை - ரம்புக்கேஹெல்ல பகுதியில் நேற்று முன்தினம் இரவு பாரியதொரு மண்சரிவு சம்பவம் ஏற்பட்டது. இதில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பிபிசி தமிழ் சம…
-
- 0 replies
- 167 views
- 1 follower
-
-
கிளிநொச்சி - சுண்டிக்குளம் பகுதியில் அனர்த்த இடத்தில் இருந்த கடற்படை வீரர்கள் ஐந்து பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கழிமுக அகலப்படுத்தும் நடவடிக்கை இலங்கை கடற்படை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. சுண்டிக்குளத்தில் உள்ள கழிமுகத்தை அகலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஐந்து கடற்படை வீரர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், காணாமல் போன வீரர்களை மீட்க ஏற்கனவே விரிவான தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. https://tamilwin.com/article/navy-personnel-missing-disaster-site-chundikulam-1764506135
-
- 0 replies
- 214 views
- 1 follower
-
-
30 Nov, 2025 | 04:02 PM சீரற்ற காலநிலை காரணமாக, தற்போது பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிலைமைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட, எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளின் முன்னேற்றத்தினை ஆராயும் முகமாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் ஞாயிற்றுக்கிழமை (30) இணையவழி ஊடாக பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர், சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய உதவிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் எனவும், அதற்காக பிரதேச செயலாளர்கள் வழங்கிவரும் ஒத்துழைப்பிற்கு தமது நன்றியினைத் தெரிவித்ததுடன், மேன்மேலும் துரிதமான ஒத்துழைப்பினை வழங்குமாறும் கேட்டுக் கொண்டதுடன், மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக…
-
- 0 replies
- 83 views
- 1 follower
-
-
முல்லைத்தீவு நகரின் வீதியின் குறுக்கே வீழ்ந்த புளியமரம் : போக்குவரத்து பாதிப்பு 27 Nov, 2025 | 10:41 AM (இணையத்தள செய்திப் பிரிவு ) முல்லைத்தீவு நகரில், இன்று வியாழக்கிழமை (27) காலை புளியமரம் ஒன்று சரிந்து விழுந்துள்ளதாகவும் அனை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் முலைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. இதனால் வீதிப்போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மின் கம்பங்களின் இணைப்புக்கள் மிகவும் தாழ்நிலையில் காணப்படுவதனால் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு வாகனங்களை குறித்த பகுதியில் செலுத்திச் செல்ல வேண்டாமென மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/231582
-
-
- 26 replies
- 835 views
- 1 follower
-
-
வலிகாமம் கிழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உணவுகள் உதவிகள் தேவை - தவிசாளர் நிரோஸ்! 30 Nov, 2025 | 10:37 AM வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை எல்லைக்குள் அதிக வெள்ளப்பாதிப்புக்கள் இடம்பெற்றுள்ள நிலையில் எமது பகுதிக்கு உடனடி உணவு உதவிகள் தேவையாகவுள்ளன என உதவிகளை நல்கக் கூடியவர்களின் கவனத்தினை ஈர்க்கும் முகமாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் கோரிக்கை விடுத்துள்ளார். எமது பிரதேசம் பொதுவாக வசதிக்குறைவான மக்களைக்கொண்ட பகுதியாகும். குறிப்பாக ஒவ்வொரு கிராமங்களின் ஐம்பது சதவீதமான பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் முகாம்களுக்குச் செல்வொருக்கே உடனடி உதவி என்ற சுற்று நிருபத்தினை வெளியிட்டிருந்தது. அதன் வாயிலாக வீடுடுகளுக்குள் கடும் வெ…
-
- 0 replies
- 67 views
- 1 follower
-
-
Published By: Digital Desk 3 28 Nov, 2025 | 10:57 PM நாட்டை பெருமளவில் பாதித்துவரும் மோசமான வானிலை காரணமாக, உயர்தரப் பரீட்சை (A/L) உள்ளிட்ட அனைத்து தேசிய பரீட்சைகளும் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்று இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே அறிவித்துள்ளார். அடுத்த சில நாட்களுக்குள் உயர்தரப் பரீட்சை நடைபெறாது என்றும், டிசம்பர் 05ஆம் திகதி வரை நடைமுறையில் இருந்த பரீட்சை அட்டவணை இனி செல்லுபடியாகது என்றும் அவர் குறிப்பிட்டார். நாடு முழுவதும் உள்ள பல பாடசாலைகள், பரீட்சை நிலையங்கள் மற்றும் பிரதான வீதிகள் வெள்ளம், மண்சரிவு மற்றும் தடைகள் காரணமாக இயலாமை நிலையை சந்தித்து வருகின்றன. மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பரீட்சை பணியாளர்கள் எதிர்நோக்கும் சிரமங்களை…
-
- 1 reply
- 120 views
- 1 follower
-
-
யாழில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கள விஜயம் 30 Nov, 2025 | 02:03 PM யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகள் கடும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. பல குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில், கடற்றொழில் மற்றும் நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று நிலைமையை நேரடியாகக் கண்காணித்தார். அமைச்சர் முதலில் தங்குமிடங்களில் இடம்பெயர்ந்த குடும்பங்களை சந்தித்து, அவர்களின் உடனடி தேவைகள், சுகாதார நிலை, குழந்தைகள், முதியவர்கள் போன்றோரின் பாதுகாப்பு குறித்தும் கேட்டறிந்தார். அங்கு தங…
-
- 0 replies
- 99 views
-
-
மன்னாரில் பெரும் இழப்பு - வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆயிரக்கணக்கான கால்நடைகள் 30 November 2025 சீரற்ற வானிலைக்கு மத்தியில், யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு புன்னையடி பகுதியில் கால்நடைகள் இறந்து கிடப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தில் நிலவும் காற்றுடன் கூடிய மழையுடனான வானிலையால், ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. நானாட்டான், மடு, மற்றும் மாந்தை மேற்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். https://hirunews.lk/tm/433451/huge-loss-in-mannar-thousands-of-cattl…
-
- 0 replies
- 98 views
-
-
அத்தியாவசிய சேவைகள் அலுவலகத்தை நிறுவ ஜனாதிபதி அறிவுறுத்தல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீளமைக்கத் தேவையான பணிகளுக்காக, அத்தியாவசிய சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில், 'அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகம்' ஒன்றை பிரதமர் அலுவலகத்தை மையமாகக் கொண்டதாக நிறுவுதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு, வீடமைப்பு, மற்றும் நீர் வழங்கல் அமைச்சு மற்றும் அவற்றின் கீழ் இயங்கும் நிறுவனங்களான இலங்கை புகையிரத திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், தேச…
-
- 0 replies
- 76 views
-
-
இலங்கையை விட்டு முழுவதுமாக விலகிச் சென்ற ‘டித்வா’ “டித்வா” புயலானது நேற்று (29) இரவு 11.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து வடக்கே சுமார் 130 கி.மீ தொலைவில் (அகலாங்கு 10.7°N மற்றும் நெட்டாங்கு 80.6°E இற்கு அருகில்) மையங்கொண்டிருந்தது. இந்தத் தொகுதியானது வடக்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணித்தியாலங்களில் இந்தியாவின் தமிழ்நாட்டு கடற்கரைக்குச் சமாந்தரமாக நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, நிலவும் மழையுடனான வானிலை இன்று (30) முதல் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதற்கமைய, வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும…
-
- 0 replies
- 95 views
-
-
வெள்ளத்தில் சிக்கிய விலங்குகளுக்கு மருத்துவ உதவி Nov 30, 2025 - 12:58 PM வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அல்லது சிக்குண்டுள்ள செல்லப்பிராணிகள், பண்ணை விலங்குகள் அல்லது வீதி விலங்குகளுக்கு அவசர கால்நடை மருத்துவ உதவிகளை வழங்க இலங்கை கால்நடைவைத்தியர்கள் சங்கம் தயாராக உள்ளது. இத்தகைய உதவிகள் தேவைப்படின், பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்புகொள்ளுமாறு சங்கத்தின் தலைவர் சுகத் பிரேமசந்திர கேட்டுக்கொண்டுள்ளார். தொடர்புகொள்ள வேண்டிய இலக்கங்கள்: தொலைப்பேசி இலக்கம்: 071 6000 666 வைத்தியர் மாலக லசந்த: 071 414 5242 வைத்தியர் நிலூஷா: 070 610 3808 https://adaderanatamil.lk/news/cmilefssf0274o29ntcgdpfzt
-
- 0 replies
- 84 views
- 1 follower
-
-
Courtesy: Rajugaran மன்னார் - மாந்தை, கூராய் கிராமத்தில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள 40 பேரை மீட்க முடியாதுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த கிராமத்தில் உள்ள 6 வீடுகள் மட்டுமே வெளியில் தெரியும் நிலையில் உள்ளதாகவும் அங்கு சிக்கியுள்ள 40 பேரில் 27 பேரின் நிலை மிக மோசமாக உள்ளதாகவும் கூறப்படுகின்றது. குறித்த கிராமத்தில் சுமார் 50 குடும்பங்கள் இருந்த நிலையில் அனர்த்த நிலையை கருத்திற் கொண்டு அங்குள்ள மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். வெளியேற்றப்பட்ட மக்கள், கள்ளியடி பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். திரும்பி வந்த இராணுவத்தினர் இருப்பினும், வெளியேற அறிவுறுத்திய போது 40 பேர் அதனை மறுத்து கிராமத்திலேயே தங்கியதாகவும் அவர்களே தற்போது அனர்த்தத்தில் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்…
-
- 3 replies
- 255 views
- 1 follower
-
-
ஜப்பான் இலங்கைக்கு அவசர உதவி Nov 30, 2025 - 09:48 AM சீரற்ற வானிலை காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்திற்குப் பதிலளிக்கும் வகையில், ஜப்பான் இலங்கைக்கு அவசர உதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது. ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலையம் ஊடாக, மதிப்பீட்டுக் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்ப ஜப்பானிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இக்குழுவில் மருத்துவ அதிகாரிகளும் உள்ளடங்குவர். அவர்கள் நாட்டின் மருத்துவத் தேவைகளைக் கண்காணிப்பதுடன், ஜப்பானிய அனர்த்த நிவாரணக் குழுவொன்றை அனுப்புவதற்கான சாத்தியக்கூறுகளை ஒருங்கிணைப்பார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு JICA நிறுவனத்தின் ஊடாக கூடாரங்கள் மற்றும் போர்வைகள் உள்ளிட்ட அவசர நிவாரணப் பொருட்களையும் வழ…
-
- 0 replies
- 82 views
- 1 follower
-
-
Published By: Digital Desk 1 30 Nov, 2025 | 07:32 AM கொட்டுகோட பகுதியில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக கொட்டுகோட 220/132/33kV மின் இணைப்புக்கான துணை மின்நிலையம் தற்காலிகமாக செயல்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக பெய்துவரும் பலத்த மழையால் சுற்றியுள்ள வெள்ள நீர் வேகமாக உயர்ந்து, துணை மின்நிலைய வளாகம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. நேற்று (29) சனிக்கிழமை மாலை நிலவரப்படி, நீர் மட்டம் கட்டுப்பாட்டுப் பலகை அளவை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய நிலைமை மோசமாக உள்ளதால், இலங்கை மின்சார சபையின் கொட்டுகோட மின் இணைப்புபின் துணை மின்நிலையத்தை பாதுகாப்பாக துண்டித்து அணைத்துள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு…
-
- 0 replies
- 63 views
- 1 follower
-
-
கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் (இக்கட்டுரையில் உள்ள விவரங்கள் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.) ''தாய் ஒருவர் அவருடைய 8 மாத குழந்தையை அரவணைத்தபடியே இறந்திருந்தார்.'' என்கிறார் வி.கே.முத்துகிருஸ்ணன். இலங்கையின் கண்டி - சரசவிகம பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் 23 தமிழர்கள் உயிரிழந்துள்ளதாகவும் இவர்களில் நான்கு சிறார்களும் அடங்குவதாகவும் அங்குள்ள மக்கள் பிபிசி தமிழுக்கு தெரிவித்தனர். இந்த மண்சரிவு சம்பவம் நேற்று முன்தினம் (27) இரவு ஏற்பட்டது. சரசவிகம - ஹதபிம பகுதியில் சுமார் 200க்கும் அதிகமான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் 6 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் வாழ்ந்து வந்துள்ளனர். நேற்று முன…
-
- 2 replies
- 290 views
- 1 follower
-
-
29 Nov, 2025 | 04:33 PM "திட்வா" சூறாவளி மற்றும் களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்ததால் கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று சனிக்கிழமை (29) மாலை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். போமிரியா கனிஷ்ட வித்தியாலயத்தில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டிருந்த மக்களையும் பிரதமர் சந்தித்தார். இடம்பெயர்ந்த மக்கள் எதிர்கொள்ளும் குறைபாடுகளை ஆய்வு செய்த பிரதமர், உணவு, சுகாதார உபகரணங்கள் உட்பட அத்தியாவசியத் தேவைகளை விரைவாக வழங்குவதற்கான அரசாங்கத்தின் திட்டங்களை மேற்பார்வையிட்டார். தற்போது ஏற்பட்டுள்ள தேசிய அனர்த்தத்தைப் புரிந்துகொண்டு, இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் மற்றும் அவர்களைப் பாதுகாப்பதில் அயராது உழைக்கும் அனைவருக்…
-
- 0 replies
- 126 views
- 1 follower
-
-
இலங்கையிலுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கிய அறிவித்தல்! 29 Nov, 2025 | 01:40 PM சீரற்ற வானிலை காரணமாக, இலங்கையிலுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு வெளிவிவகார அமைச்சு முக்கிய அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிவித்தலின்படி, இலங்கையிலுள்ள சுற்றுலாப் பயணிகள் அனைவரையும் பாதுகாப்பாக இருக்குமாறும், உதவிகளுக்கு 1912 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ளுமாறும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/231918
-
- 0 replies
- 95 views
- 1 follower
-
-
இலங்கைக்கு உடனடி நிவாராணமாக 2 மில்லியன் டொலர்களை ஒதுக்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 'டிட்வா' சூறாவளியின் கடுமையான பாதிப்புகளிலிருந்து நாடு தொடர்ந்து மீண்டு வருவதால், இலங்கையின் அவசர நிவாரண முயற்சிகளை ஆதரிக்கவே இந்த உதவி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். தீவு முழுவதும் உள்ள சமூகங்கள் கனமழை மற்றும் பரவலான வெள்ளத்தால் "கடினமான நாட்களை" எதிர்கொள்கின்றனர். இந்த நெருக்கடியின் போது இலங்கையுடன் ஒற்றிணைந்து அமெரிக்கா நிற்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதற்கான உறுதிப்பாட்டை வொஷிங்டன் உறுதிப்படுத்தியுள்ளதாக தூதுவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிதி அவசர நிவாரண நடவடிக்கைகளுக்கும்,இலங்கையை மீள கட்டியெழுப்புவதில் இரு நாடுகளுக்கும் இடையி…
-
- 1 reply
- 91 views
- 1 follower
-