Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 2025 ஜூன் மாதத்தில் புலம்பெயர் தொழிலாளர் பணவனுப்பல் 600 மில்லியன் டொலரை கடந்துள்ளது! இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இலங்கைக்கு 635.7 மில்லியன் அமெரிக்க டொலர் புலம்பெயர் தொழிலாளர் பணவனுப்பல் பெறப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட புதிய புள்ளிவிவரங்களின்படி, இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 22% அதிகரிப்பாகும். இதேவேளை, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில் பணவனுப்பல் மொத்த மதிப்பு 3.7 பில்லியன் அமெரிக்க டொலராக உள்ளதுடன், இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 18.9% அதிகரிப்பு என இலங்கை மத்திய வங்கி தெரிவிக்கிறது. 2024 ஆம் ஆண்டிற்கான மொத்த புலம்பெயர் தொழிலாளர் பணவனுப்பல் 6.57 பில்லிய…

  2. 13 JUL, 2025 | 02:41 PM இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட படையினர் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக தமிழர் தரப்பை குற்றவாளியாக காண்பிக்கும் முயற்சி இடம்பெறுகின்றது என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் எஸ். சிறிதரன் தெரிவித்தார். கொட்டகலையில் சனிக்கிழமை (13) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் உட்பட சில விடயங்களை தமிழ் தரப்புகள்தான் செய்தன என்பதுபோல் வெளியில் ஒரு மாயை காட்டப்படுகின்றது. இதற்கு பின்னால் இருந்து ஆட்சி அமைத்த கோட்டாபய ராஜபக்ச மற்றும் மஹிந்த குடும்பம் மீது இதுவரையில் எந்த பாய்ச்சல்களையும் இந்த அரசாங்கம் செய்யவில்…

  3. இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதராக எரிக் மேயர்! இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதராக எரிக் மேயரை (Eric Meyer) நியமிப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பரிந்துரை செய்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இதன்படி, ஜூலி சுங்கின் வெற்றிடத்திற்கு இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர் நியமிக்கப்படவுள்ளார். கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் சிரேஷ்ட பணியக அதிகாரியாக செயல்படுகிறார். அத்துடன் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, கஸகஸ்தான், கிர்கிஸ்தான், மாலைதீவு, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் அமெரிக்க அரசி…

  4. இறுதி யுத்தத்தில் மீறப்பட்ட மனிதாபிமானச் சட்டம் - நீதிமன்றத்தை நாடவுள்ள சிங்கள சட்டத்தரணி! இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது, சர்வதேச மனிதாபிமானச் சட்டம் கடுமையாக மீறப்பட்டுள்ளதாக, காவல்துறை தலைமையகத்துக்கு அளிக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில், நீதிமன்றத்தை நாடவுள்ளதாக முறைப்பாட்டாளரான சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே தெரிவித்துள்ளார். தமது முறைப்பாடு குறித்து, காவல்துறையினர் இதுவரையில் உரிய பதில் வழங்காமையினால், மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாடி, நீதிப்பேராணை மனுவொன்றைத் தாக்கல் செய்யவுள்ளதாக முறைப்பாட்டாளர் தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். அதற்கமைய, எதிர்வரும் வாரத்தை மாத்திரம் காவல்துறையினருக்கான கால அவகாசமாக வழங்கவுள்ளதாகவும், அதற்குள் பதில் கிடைக்காவிடின் ந…

    • 1 reply
    • 122 views
  5. தமிழ்த்தேசிய கட்சிகளின் ஒற்றுமை செயல் வடிவம் பெறவேண்டும் - சிறிதரன் 13 JUL, 2025 | 11:19 AM (நா.தனுஜா) தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் ஒற்றுமை என்பது வெறுமனே பேச்சளவில் மாத்திரமன்றி, செயல் வடிவத்தில் இருக்கவேண்டும் என்றும், அதனை பரஸ்பரம் நிதானமாகவும், இதயசுத்தியுடனும் முன்னெடுக்கவேண்டும் என்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தினார். உள்ளுராட்சிமன்றத்தேர்தல்களின் பின்னர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உள்ளூராட்சிமன்றங்களில் இணைந்து ஆட்சியமைப்பது குறித்து ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணி மற்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சி உள்ளிட்ட ஏனைய தமிழ்த்தேசிய தரப்புக்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திர…

  6. 12 JUL, 2025 | 05:40 PM நெடுந்தீவைச் சேர்ந்த தனியார் ஒருவருக்கு சொந்தமான சுற்றுப்பயணிகளை ஏற்றும் சிறிரக படகில் நெடுந்தீவுக்கு சென்று திரும்பும் போது படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக படகு மூழ்கியுள்ளதுடன் சுற்றுலாப் பயணிகள் 12 பேரும் 02 பணியாளர்களும் என 14 பேர் உயிராபத்து இன்றி மீட்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் தெரியவருகையில், தென்னிலங்கையைச் சேர்ந்த 12 சுற்றுலாப் பயணிகளுடன் நெடுந்தீவுக்கு சென்று குறிகாட்டுவான் திரும்பும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இடைக்கடலில் குறித்த சுற்றுலா படகில் இருந்து வெள்ளைக்கொடி காட்டுவதனை அவ்வழியே சென்ற நெடுந்தீவு தனியார் படகான சபரிஷ் படகு பணியாளர்கள் அவதானித்த விரைந்து செயற்பட்டு சேசமடைந்த படகில் இருந்து சகல சுற்றுலாப் பயணிகளையும் பத்த…

  7. வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நயினாதீவு உள்ளூர் வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிடம் பொதுமக்களிடம் கையளிப்பு! நயினாதீவு உள்ளூர் வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிடம் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது. நயினாதீவு மாவட்ட வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று (12) காலை சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்றது. புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிடத்தில் , ஒரு மருந்தகம், ஒரு தடுப்பூசி அறை, ஒரு பல் சிகிச்சை பிரிவு, ஒரு தாதியர்களுக்கான அறை, E.C. ஆகியவை உள்ளடங்குகின்றன. மேலும், ஒரு தீவிர சிகிச்சை பிரிவு, ஒரு அறுவை சிகிச்சை பிரிவு, ஒரு முதன்மை பராமரிப்பு பிரிவு மற்றும் சுகாதார வசதிகளையும் கொ…

  8. Published By: DIGITAL DESK 3 13 JUL, 2025 | 10:50 AM காலியிலிருந்து மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான பகுதிகளுக்கு பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கையில், கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோ மீற்றர் வேகத்தில் மேற்குத் திசையில் இருந்து தென்மேற்குத் திசையை நோக்கி காற்று வீசும். காலி தொடக்கம் மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 55 முதல் 65 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் வீசும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்த…

  9. இனவழிப்பின் பங்காளியான ஜே.வி.பி யிடம் செம்மணிக்கான நீதியை எதிர்பார்ப்பது எப்படி? - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி 13 JUL, 2025 | 09:13 AM (நா.தனுஜா) செம்மணி மனிதப்புதைகுழி பேரவலம் உள்ளடங்கலாக தமிழர்களுக்கு எதிரான யுத்தத்துக்கும், இனவழிப்புக்கும் அப்போது ஆட்சியிலிருந்த அரசாங்கங்களுக்கு மக்கள் விடுதலை முன்னணி ஆதரவு வழங்கியதாகவும், அப்போதைய இனவழிப்பின் பங்காளியாகத் திகழ்ந்த தற்போதைய அரசாங்கத்திடம் நீதியை எதிர்பார்க்கமுடியாது எனவும் சுட்டிக்காட்டிய தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சர்வதேச விசாரணையின் ஊடாக மாத்திரமே செம்மணி விவகாரத்தில் உண்மையையும் நீதியையும் நிலைநாட்டமுடியும் எனத் தெரிவித்தார். செம…

  10. முன்னாள் அமைச்சர் ராஜித தலைமறைவு ; கைத்தொலைபேசியும் செயலிழப்பு 13 JUL, 2025 | 09:19 AM (எம்.வை.எம்.சியாம்) கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வதற்கு தனியார் நிறுவனமொன்றுக்கு குத்தகை வழங்கி அரசாங்கத்துக்கு இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகமான நட்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்கு பிடியாணை உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தது. இதற்கு பதிலளித்த கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனவல முன்னாள் அமைச்சர் இந்த வழக்கில் சந்தேகநபராயின் அவரை கைது செய்வதற்கு எவ்வித சட்ட தடைகளும் இல்லையென அறிவித்தார். கிரிந்த மீ…

  11. எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 07 இந்திய மீனவர்கள் கைது! எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 07 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை விசைப்படகின் மூலமாக மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். இதன்போது காங்கேசன்துறை வடமேற்கு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகையும் அதிலிருந்த ஏழு மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கைதான மீனவர்கள் படகுடன் கங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் ஏழு பேரும் படகுடன் மயிலட்டி மீன்பிடி துறைமுகத்தில் வைத்து யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட…

  12. “விடுதலை பெருவிருட்சம் வேரூன்றி தளைத்திட ஒருகுவளை நீர் உவந்து உறவுகளை விடுவிப்போம்” adminJuly 12, 2025 தமிழ் அரசியல் கைதியான விக்னேஸ்வரநாதன் பார்த்தீபனின் விடுதலையை வலியுறுத்தி, ” விடுதலை பெருவிருட்சம் வேரூன்றி தளைத்திட ஒருகுவளை நீர் உவந்து உறவுகளை விடுவிப்போம் ” எனும் தொனி பொருளில் யாழில் போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கைதியான விக்னேஸ்வரநாதன் பார்த்தீபன், 17 வயதில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடிக் கொண்டிருக்கின்றார். பிள்ளையின் நீண்ட பிரிவுத்துயர் தாங்காது, தாய் தந்தை இருவரும் உயிர்நீத்த நிலையில், பெற்றவர்களது இறுதிச் சடங்குகளுக்கு ஒரு ஆயுள் தண்டனை கைதியாக கைவிலங்குடன் கொண்டுவரப்பட்டு ச…

  13. பிரதமர் தலைமையில் புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பான தெளிவூட்டல்! புதிய கல்வி சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதற்காக ஆசிரியர், அதிபர் இடமாற்றங்கள் சரியான முறையில் நடைபெற வேண்டும் என்றும், மாகாண மற்றும் மத்திய அரசுக்கிடையில் சரியான ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ள புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பாக மாகாண, வலய மற்றும் கோட்ட மட்ட கல்வி மற்றும் நிர்வாக அதிகாரிகளை தெளிவுபடுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட தெளிவூட்டல் கலந்துரையாடல் தொடரின் முதல் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்று நேற்று …

  14. வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் யாழ்.பொதுநூலக முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் ! ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் கடந்த வரவு – செலவுத் திட்டத்தில் யாழ்ப்பாணம் பொதுநூலகத்துக்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அந்தத் திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது. திட்டமுன்னேற்ற மீளாய்வை இரு வாரங்களுக்கு ஒரு முறை மேற்கொள்ளுமாறும், இவற்றுக்குப் பொறுப்பாக பதவிநிலை அலுவலர் ஒருவரை நியமிக்குமாறும் யாழ். மாநகர சபை ஆணையாளருக்கு, ஆளுநர் பணிப்புரை விடுத்தார். இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன், அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலர் ஆர்.குருபரன், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர…

  15. தொப்பி அணிந்து தாடி வளர்த்தால் பயங்கரவாதி, மொட்டை அடித்து தாடியை எடுத்தால் அகிம்சைவாதியா! Jul 12, 2025 - 20:21 தொப்பி அணிந்து தாடிவளர்த்தால் பயங்கரவாதி, மொட்டை அடித்து தாடியை எடுத்தால் அவர்கள் அகிம்சைவாதி இதுவே இந்த நாட்டின் நிலைமையாக காணப்படுகின்றது என சமவுரிமை இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினர் தென்தே ஞானானந்த தேரர் தெரிவித்தார். பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு கோரியும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குமாறு வலியுறுத்தியும் மட்டக்களப்பில் இன்று கையெழுத்து மற்றும் துண்டுப் பிரசுரப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சமவுரிமை இயக்கம் மற்றும் ஈரோஸ் ஜனநாயக முன்னணி ஆகியன இணைந்து மட்டக்களப்பில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு பிரதான பஸ் நிலைய…

  16. நாட்டைப் பிரிக்கும் இந்தியாவின் முயற்சி இன்றும் மாற்றமின்றி தொடர்வதாக பேராசிரியர் இந்துராகரே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார். இந்திய அரசாங்கம் இதற்காக பல்வேறு உத்திகளைத் கையாள்வதாக தேரர் குறிப்பிட்டுள்ளார். கொக்காவில் தாக்குதலின் 35வது நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதே பேராசிரியர் இந்துராகரே தம்மரதன தேரர் இவ்வாறு கூறியுள்ளார். "நாட்டைப் பிரிக்க வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாடு ஒரு தசம புள்ளிக் கூட மாறவில்லை. இந்தியா இப்போது இலங்கைக்கு 300 பில்லியன் ரூபாய் கடன் நிவாரணம் வழங்கப் போகிறது. இலங்கை இந்தியாவிற்கு செலுத்த வேண்டிய 1.7 பில்லியன் டொலர்களை மீள அறவிடாமல் நமது பெரிய சகோதரர் கடன் நிவாரணம் வழங்கப் போகிறார்.... புலம்பெயர் மக்களைப் பயன்படுத்தியேனு…

  17. வவுனியா 1 மணி நேரம் முன் வவுனியாவில் பொலிஸின் கோரம் - குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு! வவுனியா, கூமாங்குளம் பகுதியில் நேற்று இரவு போக்குவரத்துப் பொலிஸாரின் வெறியாட்டத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார். இதனால் கொதிப்படைந்த அந்தப் பகுதி மக்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டமையால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று இரவு 10 மணியளவில் வவுனியா, கூமாங்குளம் மதுபான விற்பனை நிலையம் அமைந்துள்ள வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பொலிஸார் வந்தனர். இதன்போது அந்த வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த நபர் ஒருவரை அவர்கள் துரத்திச் சென்றதுடன் மோட்டார் சைக்கிள் சில்லுக்குள் தடியொன…

  18. 12 JUL, 2025 | 09:51 AM பாகிஸ்தான் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சையத் அசிம் முனீர் திங்கட்கிழமை (21) இலங்கை மற்றும் இந்தோனேசியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக பாகிஸ்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கை விஜயத்திற்குப் பின் பீல்ட் மார்ஷல் சையத் அசிம் முனீர் இந்தோனேசியாவிற்கும் விஜயம் செய்யவுள்ளார். இரு நாடுகளின் வருகைகளின் போதும், இருதரப்பு நலன் சார்ந்த விடயங்கள் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/219780

  19. மன்னார் - நானாட்டான் பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்து Published By: VISHNU 11 JUL, 2025 | 11:44 PM மன்னார்-நானாட்டான் பிரதான வீதி, நறுவிலிக்குளம் பகுதியில் வியாழக்கிழமை (10) மாலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த சிறுவனின் உடலை குறித்த விபத்தில் படுகாயம் அடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் குறித்த சிறுவனின் தந்தை இறுதியாக பார்க்கும் புகைப்படம் வெளியாகி பலரையும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. குறித்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், மன்னார்-நானாட்டான் பிரதான வீதி, நறுவிலிக்குளம் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் தந்தை, தாய், மகன் மற்றும் மகள் ஆகிய நான்கு பேரும் வியாழக்கிழமை (10) மாலை நானாட்டான் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த…

  20. யாழில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு! written by admin July 12, 2025 பிள்ளைகளுக்கு உணவு வாங்கி சென்றவர் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். சாலை காப்பாளரான , நயினாதீவை சேர்ந்த பாலேஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளார். திருநெல்வேலி, பலாலி வீதியில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகத்தில் உணவருந்திய பின்னர் பிள்ளைகளுக்கும் உணவு வாங்கிக்கொண்டு பலாலி வீதியில் துவிச்சக்கர வண்டியில் ஏற முற்பட்டவேளை , வீதியில் மிக வேகமாக வந்த ஹயஸ் ரக வாகனம் மோதியுள்ளது. அதில் படுகாயமடைந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் கோப்பாய் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அதே…

  21. மின்சார சபையின் அலட்சியத்தால் அபாயத்தில் A9வீதி! ஆனையிறவு உப்பளத்தின் முன்பாகவுள்ள இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின்கம்பம் சரிந்து விழும் நிலையில் உள்ளதால் அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் காணப்படுவதாக A9 வீதியில் பயணிப்போர் தெரிவிக்கின்றனர். பாரியளவு மின் இணைப்பினை கொண்ட குறித்த மின்கம்பமானது கடந்த காலத்தில் ஏற்பட்ட காற்றின் தாக்கத்தினால் கிட்டத்தட்ட 80 வீதம் முறிந்த வண்ணம் காணப்படுகிறது. அத்துடன் குறித்த மின் கம்பமானது இருபுறமும் உள்ள மின்கம்பத்தின் இணைப்பின் பலத்திலே கீழே விழாமல் உள்ளது எனவும், ஆனால் காற்றின் தாக்கம் அதிக அளவு காணப்பட்டால் மின்கம்பம் கீழே விழும் அபாயம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாரியளவு மின் விபத்துக்கள் மற்றும் ஆனையி…

      • Haha
    • 1 reply
    • 144 views
  22. அல்தாப் அஹமட் யாழ்ப்­பாணம், செம்­மணி மனிதப் புதை­கு­ழியைத் தோண்டத் தோண்ட அதிர்ச்­சி­யூட்டும் அத்­தாட்­சி­களே வந்­த­வண்­ண­முள்­ளன. கடந்த சில நாட்­க­ளாக சிறு­வர்­களின் எலும்புக் கூடு­களும் அவர்கள் பயன்­ப­டுத்­திய பொருட்­களின் எச்­சங்­களும் மீட்­கப்­பட்­டமை இந்த மனிதப் புதை­கு­ழி­களின் பின்னால் மறைந்­தி­ருக்கும் ஈவி­ரக்­க­மற்ற அரக்­கர்­களைக் கண்­ட­றிந்து தண்­டிக்க வேண்­டி­யதன் அவ­சி­யத்தை வலி­யு­றுத்­து­வ­தா­க­வுள்­ளன. கடந்த வாரம் இங்கு மேற்­கொள்­ளப்­பட்ட அகழ்­வா­ராய்ச்­சியின் போது, ஒரு குழந்­தையின் மனித எச்­சங்­களும், அத்­துடன் ஆங்­கில எழுத்­துக்­க­ளுடன் கூடிய நீல நிறப் பை, ஒரு சிறிய பொம்மை, விளை­யாட்டுப் பொருட்கள் மற்றும் ஒரு சப்­பாத்து போன்ற பொருட்­களும் மீட்­கப்­பட்­டுள்…

      • Thanks
      • Like
      • Haha
    • 4 replies
    • 342 views
  23. 06 Jul, 2025 | 05:26 PM (நமது நிருபர்) கொழும்பு - காங்கேசன்துறை சொகுசு ரயில் சேவை இன்று(07) முதல் நாளாந்தம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து தினமும் காலை 5.45க்கு பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதுடன் காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 02 மணிக்கு மீண்டும் கொழும்பு நோக்கி பயணிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார். இந்த சொகுசு ரயில் சேவை இதற்கு முன்னர் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டது. எனினும் தற்போது இந்த புதிய சொகுசு ரயில் சேவை ஆரம்பமானதன் பின்னர் யாழ்தேவி ரயிலானது கொழும்பு கோட்டையிலிருந்து தினமும் காலை 06.40க்கு புறப்படும் என ரயில்வே திணைக்களத்தின் பொது மு…

  24. இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவன மோசடியில் நல்லாட்சி அரசாங்கத்துக்கு தொடர்பாம்! இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (SLIIT) தொடர்பான முறைகேடுகள் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை (CID) மற்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணையத்திடம் முறைப்பாடு அளிக்குமாறு அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய நாடாளுமன்றக் குழு (COPE) அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் , SLIIT இல் பதிவாகியுள்ள நிதி மோசடிக்கு நல்லாட்சி அரசாங்கமும் அதன் முழு அமைச்சரவையும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினார். மகாபொல புலமைப்பரிசில் நிதியிலிருந்து SLIIT ஐ நீக்கி, அதை ஒரு வரையறுக்கப்பட்ட நிறுவனமாக மாற்றியதன் காரணமாக, நல்லாட்சி அரச…

  25. 11 JUL, 2025 | 07:07 PM மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு கிராமத்தின் பன்னாட்டு மாநாடு வெள்ளிக்கிழமை (11) காலை 8.30 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் ஆரம்பமானது. குறித்த மாநாடு விடத்தல் தீவு கிராமத்தைச் சேர்ந்த துறைசார் வல்லுனர்கள். கல்விமான்கள் மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக பணியாற்றும் நபர்கள் ஒன்று சேரும் ஒரு அரிய சந்திப்பாக குறித்த நிகழ்வு வெள்ளிக்கிழமை (11) காலை ஆரம்பமானது. குறித்த நிகழ்வு 2 வது நாளாக சனிக்கிழமையும் (12) இடம்பெற உள்ளது. மேலும் இம் மாநாடு பொருளாதாரம் ,கல்வி, சுற்றுச்சூழல், சமயம், கலாச்சாரம், பண்பாடு மற்றும் விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளில் நடைபெறும் நிகழ்வுகளை ஆய்வு செய்து ஆவணப் படுத்துவதோடு இவ்விடயங்களில் பரஸ்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.