ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142977 topics in this forum
-
சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து அறிவிப்புகளை இதுவரையில் சமர்ப்பிக்காத அரச அதிகாரிகள் அவற்றை சமர்ப்பிக்கவில்லை எனில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இதனைக் குறிப்பிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழு 30.06.2025 முதல் 31.08.2025 வரை தாமதமாக சமர்ப்பிக்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளின் அறிவிப்புகளுக்கு சட்ட விதிகளுக்கு அமைவாக அபராதம் விதிக்கப்படும் என்றும், அதற்கமைய, இதுவரை சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பற்றிய அறிவிப்புகளை சமர்ப்பிக்காத அதிகாரிகள் யாராவது இருந்தால், அவர்கள் அந்த அறிவிப்புகளை விரைவில் தங்கள் நிறுவனத் தலைவர்களிடம் ச…
-
- 0 replies
- 93 views
- 1 follower
-
-
03 Aug, 2025 | 03:39 PM ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களினால் நீர் இறைக்கும் இயந்திரம் பயனாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. பயனாளர்கள் நீண்ட நாள் கோரிக்கையின் அவசர அவசியத்தினை கவனத்தில் எடுத்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களால் நீர் இறைக்கும் இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களான பா.ஸ்ரீதரன், க.கஜகரன், மற்றும் ஆர்.சுகீர்த்தனா ஆகியோரின் கூட்டு முயற்சியினால் இந்த செயற்றிட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/221685 அங்க தடையாம், இங்க உறுப்பினர்களே குழாய்க்கிணற்றில் போட்டு இறைக்க மோட்டர் வழங்குகினமாம்!…
-
- 0 replies
- 79 views
- 1 follower
-
-
‘கன்சைட்’ சித்திரவதை சிறைக் கூண்டுகளில் வெளிநாட்டவர்கள் உட்பட 60 பேர் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை அம்பலம் ; முன்னாள் கடற்படை தளபதி உலுகேதென்னவின் வாக்கு மூலத்தால் விரிவடையும் விசாரணைகள் Published By: Digital Desk 3 03 Aug, 2025 | 11:03 AM (எம்.எப்.எம்.பஸீர்) திருகோணமலை கடற்படை முகாமுக்குள் இருக்கும் ‘கன்சைட்’ எனும் சட்ட விரோத நிலத்தடி சித்திரவதை முகாம் சட்ட விரோத சிறைக் கூண்டு என்று முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன சி.ஐ.டி. விசாரணையில் ஏற்றுக்கொண்டுள்ளார். இந்நிலையில், அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் படியும் மேலும் பல சாட்சிகளின் பிரகாரமும் குறித்த சட்ட விரோத சிறையில் இரு வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 60 பேர் வரையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தததாக சி.ஐ.டி. யின…
-
- 0 replies
- 120 views
- 1 follower
-
-
நல்லூரானை தரிசித்தார் பிரதமர் ! யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இன்றைய தினம் (03) நல்லூர் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டார். யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் (02) விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் , யாழில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் இன்றைய தினம் காலை நல்லூர் ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார். நல்லூர் ஆலய மகோற்சவ திருவிழாவின் 6ஆம் திருவிழா இன்றைய தினம் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1441570
-
- 1 reply
- 208 views
-
-
03 Aug, 2025 | 09:37 AM செம்மணி மனித புதைகுழிகள் அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட, ஆடைகள் உள்ளிட்ட பிற சான்று பொருட்களை பொதுமக்கள் அடையாளம் காணும் வகையில் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (05) 1.30 மணி முதல் 05 மணி வரை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு சான்று பொருட்களை காண்பிப்பது தொடர்பில் நீதிமன்றினால் வழங்கப்பட்ட கட்டளை தொடர்பான ஒழுங்குவிதிகள் பின்வருமாறு: மேற்படி, நடவடிக்கையானது ஒரு நீதிமன்ற நீதிமன்ற நடவடிக்கைக்குரிய நடவடிக்கையாக காணப்படுவதால், கண்ணியம். அந்நடவடிக்கையில் பங்கேற்கும் நபர்களால் பேணப்பட வேண்டும். காணாமல் போன நபர்கள் தொடர்பில் முறைப்பாடுகள் செய்த உறவினருக்கே முன்னுரிமை வழங்கப்படும். அவர்கள் தம்முடை…
-
- 0 replies
- 125 views
- 1 follower
-
-
03 Aug, 2025 | 09:14 AM (லியோ நிரோஷ தர்ஷன்) ஜெனிவா மனித உரிமைகள் மீளாய்வுக் கூட்டத் தொடரில் பிரித்தானியா, கனடா, வடக்கு மாசிடோனியா, மலாவி மற்றும் மொண்டெனேகுரோ உள்ளிட்ட நாடுகளின் அனுசரனையுடன் இலங்கை குறித்து தீர்மானம் கொண்டு வரப்பட உள்ள நிலையில், இந்த விடயம் குறித்து பன்னாட்டு இராஜதந்திரிகளை சந்தித்து கலந்துரையாட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மேலும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான விசேட பிரதிநிதிகள் குழு ஜெனிவாவுக்கு செல்லவும், தீர்மானத்தை முன்வைக்க உள்ள நாடுகளுடன் நேரடியாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மனித உரிமைகளை பாதுகாப்பதிலும் கடந்தகால விடயங்களில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதிலும் முழு அளவிலான ஈடுப்பாடுடன் அரசாங்கம் செய…
-
- 0 replies
- 137 views
- 1 follower
-
-
செம்மணி மனிதப் புதைகுழி சான்றுகள்: உறவுகள் அடையாளம் காண அவை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்படும் Published By: VISHNU 01 AUG, 2025 | 08:24 PM செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்களை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அடையாளம் காண உதவும் வகையில் அவற்றை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்ற புலனாய்வு பிரிவின் மனித கொலை விசாரணை பிரிவின், நிலைய பொறுப்பதிகாரி யாழ்.நீதவான் நீதிமன்றில் செய்த விண்ணப்பபத்தின் பிரகாரம் சான்று பொருட்களை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மதியம் 01.30 மணி முதல் மாலை 05 மணி வரையில் அரியாலை சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் மக்களின் பார்வைக்காக சான்று பொருட்கள்…
-
- 2 replies
- 173 views
- 1 follower
-
-
02 Aug, 2025 | 05:06 PM கல்விச் சீர்திருத்தம் தொடர்பான தேசிய திட்டத்தின் எட்டாவது அமர்வு வடக்கு மாகாணத்தில் இன்று சனிக்கிழமை (2) வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பிலான தெளிவூட்டல் கலந்துரையாடல், பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது. இலங்கை கல்விச் சீர்திருத்த ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் சந்திரசேகரன், கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுபோவ, வடக்கின் பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், வடக்கின் ஆளுநர் வேதநாயகன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிரங்கசன், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், கல்விப்புலம் சார் அதிகாரிகள்,…
-
- 0 replies
- 138 views
- 1 follower
-
-
புதிய கல்வி சீர்திருத்தம் – பிரதமர் ஹரிணியின் சீர்திருத்தம் அல்ல adminAugust 2, 2025 புதிய கல்வி சீர்திருத்தம் கல்வி அமைச்சின் அல்லது ஜனாதிபதி அனுரவின் அல்லது பிரதமர் ஹரிணியின் சீர்திருத்தம் அல்ல, மாறாக அனைவரின் புரிதல், யோசனைகள் மற்றும் பரிந்துரைகளுடன் நேர்மறையான மாற்றங்களைச் செய்வதன் மூலம் குழந்தைகளுக்கு கூட்டாக நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு பொறுப்பு என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். புதிய கல்வி சீர்திருத்தம் குறித்து வடக்கு மாகாண கல்வி அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்துவதற்காக இன்றைய தினம் சனிக்கிழமை வடக்கு மாகாண செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு கூறினார். மே…
-
- 0 replies
- 120 views
-
-
300 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்! கடந்த ஜனவரி மாதத்திலிருந்து பல்வேறு குற்றங்களுக்காக சுமார் 300 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டில் சுமார் 200 பொலிஸார் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தாலும், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். பல்வேறு குற்றங்களைச் செய்ததாக நிரூபிக்கப்பட்ட பின்னர், சில உத்தியோகத்தர்கள் அரசு சேவையில் 25 ஆண்டுகள் பணியாற்றிய போதிலும், இந்த நடவடிக்கையினால் அவர்களின் மாதாந்திர ஓய்வூதியக் கொடுப்பனவுகளை இழந்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். தவறு செய்தவர்கள் எந்தப் பதவியில் இருந்தாலும், அவர்களைத் தண்டிக…
-
-
- 9 replies
- 504 views
-
-
இந்திய மீனவர்களின் படகுகளால் இடரை எதிர்நோக்கியுள்ள மயிலிட்டி மீனவர்கள்! தீர்வினை பெற்றுத்தர ஸ்ரீதரன் நடவடிக்கை! யாழ்ப்பாணம் மயிலிட்டி துறைமுகம் பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நேற்றைய தினம் (01) சென்றிருந்தார். அத்துமீறி இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 140க்கும் அதிகமான படகுகள் மயிலிட்டி கடற்பரப்பினுள் கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் உள்ளூர் மீனவர்களின் படகுகளை நிறுத்தி வைப்பதற்கும் , தொழிலுக்கு மீனவர்கள் செல்வதற்கும் இடர்களை சந்தித்து வருகின்றனர். இது தொடர்பில் அப்பகுதி மீனவர்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் முறையிட்டனர். பாராளுமன்ற உறுப்பினர் …
-
- 0 replies
- 95 views
-
-
01 AUG, 2025 | 04:32 PM மன்னார் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்காக சென்று மீண்டும் தனியார் பஸ்ஸில் வீடு திரும்பிய நபர் ஒருவரை மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி காட்டாஸ்பத்திரி பகுதியில் வைத்து கூரிய ஆயுதங்களுடன் கடத்திச் சென்ற சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த கடத்தல் சம்பவம் நேற்று வியாழக்கிழமை (31) மாலை இடம்பெற்றுள்ளதுடன், சம்பவம் தொடர்பான காணொளியும் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் நேற்றைய தினம் மன்னார் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணை ஒன்றிற்காக முன்னிலையாகியதோடு, வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் மன்னாரில் இருந்து தலைமன்னார் நோக்கி தனியார் பேருந்தில் பய…
-
- 1 reply
- 198 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 01 AUG, 2025 | 03:50 PM வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இன்று வெள்ளிக்கிழமை கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, இன்றைய தினம் இரவு 11.00 மணி வரை அமுலில் உள்ள வானிலை முன்னறிவிப்பின்படி, மேற்படி மாகாணங்களிலும் மாவட்டத்திலும் பல இடங்களில் கடும் மின்னல் தாக்கம் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்: இடியுடன் கூடிய …
-
- 0 replies
- 90 views
- 1 follower
-
-
01 AUG, 2025 | 12:48 PM (எம்.நியூட்டன்) செம்மணி புதைகுழியிலிருந்தாவது தமிழினத்திற்கு இடம்பெற்ற கொடுமைகளுக்கு முடிவு கிடைக்க சர்வதேச நீதி விசாரணை நடைபெறவேண்டும் இலங்கையில் வாழுகின்ற ஈரநெஞ்சுடைய மனிதநேய அமைப்புக்களும், சமய பண்பு மிக்க பெரியோர்களும் இந்த விடையத்தில் நேர்மையாக குரல் கொடுத்து சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்கவேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றம் உப தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் வேண்டுகோள் விடுத்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி மனித எலும்புக்கூடு தோண்டி எடுக்கப்படும் சோகமான சூழ்நிலையில் திகைத்துப்போய் இருக்கின்ற சமூகம் எத்தனை பேரை இழந்து, எத்தனை பேர் காணாமல் போய் கவலையுடன் இருக்கும் போது செம்மணி மனித புதைகுழி சம்பவம் அதிர்ச்சியையும் …
-
- 0 replies
- 86 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 01 AUG, 2025 | 11:35 AM இலங்கையின் அரச வைத்தியத்துறையில் செயற்கை கருத்தரிப்பு முறையில் (IVF) வெற்றிகரமாக முதலாவது குழந்தை வியாழக்கிழமை (31) ராகமவில் உள்ள வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் பிறந்துள்ளது. இந்த குழந்தை சிசேரியன் மூலம் பிறந்துள்ளது. இது களனி பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத் துறையின் IVF நிலையத்தின் ஒரு வருட கால முயற்சியின் விளைவாக இடம்பெற்றுள்ளது. பிரசவத்தின் பின்னர் 31 வயதுடைய தாயும் குழந்தையும் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்த IVF செயற்கை கருத்தரிப்பு முறை முதன் முதலில் பல்கலைக்கழகத்தின் கருத்தரித்தல் மையத்தில் மேற்கொள்ளப்பட்டது. அரசாங்கம் நடத்தும் IVF திட்டத்…
-
- 0 replies
- 123 views
- 1 follower
-
-
20% அமெரிக்க வரி குறைப்பை பாராட்டும் ஹர்ஷ டி சில்வா! இலங்கை ஏற்றுமதிகள் மீதான அமெரிக்காவின் 20% வரி குறைப்பினை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா வரவேற்றுள்ளார். இது தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர், இலங்கைப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த வரி விகிதத்தை 20% ஆகக் குறைப்பது ஒரு வெற்றியாகும். மேலும் நமது ஏற்றுமதியின் பிராந்திய போட்டித்தன்மையை மேலும் பராமரிக்க இது உதவும். இதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இதற்காக (திரைக்கு முன்னும் பின்னும்) கடுமையாக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ஒரு சிறிய நாடாக நாம் எதிர்கொள்ளும் சவால்களைப் புரிந்துகொண்டு அந்த நிவாரணத்தை வழங்கிய அமெரிக்காவிற்கும் நன்ற…
-
- 1 reply
- 186 views
- 1 follower
-
-
புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது July 21, 2025 10:17 pm விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பின்னர் ராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்ட ரமேஷ் என்பவர் சற்று முன்னர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கிரிபத்கொடை புதிய வீதியில் வைத்து பேலியாகொடை பொலிசார் சந்தேகத்தின் பேரில் அவரைக் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து டி- 56 ரக துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. குற்றச் செயல் ஒன்றை மேற்கொள்ளும் நோக்குடன் குறித்த நபர் துப்பாக்கியொன்றைத் தம் வசம் வைத்திருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர் சிவப்பு நிறக் கார் ஒன்றில் வந்தவர்கள் அவரிடம் துப்பாக்கியைக் கையளித்து தங்களிடம் இருந்து தகவல் வரும் வரை ஹோட்டல் அறையில் ரமேஷ…
-
-
- 48 replies
- 2.7k views
- 3 followers
-
-
முன்னாள் ஜனாதிபதிகள் உரிமைகள் சட்டத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு! முன்னாள் ஜனாதிபதிகள் உரிமைகள் சட்டத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட விசேட சலுகைகளை இரத்து செய்யப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட விசேட சலுகைகளை இரத்து செய்யும் வகையில், ஜனாதிபதியின் உரிமைகள் சட்டத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலத்திற்கு அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது. முன்னதாக, ஜூன் மாதத்தில், 1986 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க ஜனாதிபதி உரிமைச் சட்டம் மற்றும் 1977 ஆம் ஆண்டின் 1 ஆம் எண் நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டம் இரண்டையும் இரத்து செய்வதற்கான சட்டத…
-
- 0 replies
- 137 views
-
-
மஹவ – அநுராதபுரம் ரயில் வீதி சமிக்ஞை கட்டமைப்பு மேம்பாட்டுக்கு இந்தியாவின் முதல் தவணை! மஹவ – அநுராதபுரம் ரயில் பதையில் மேம்பட்ட சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு கட்டமைப்பு நிறுவுவதற்கான முதல் தவணையை இந்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்தத் தவணைத் தொகை சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும் (770 மில்லியன் ரூபா). இந்த திட்டம் கடந்த ஏப்ரல் மாதம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு இந்திய அரசாங்கம் 14.89 மில்லியன் அமெரிக்க டொலர் கடனாக வழங்க முன்மொழிந்திருந்தாலும், 2024 டிசம்பரில் இலங்கை ஜனாதிபதியின் இந்தியாவிற்கு அரச முறைப் பயணத்தின்போது இது மானியமாக மாற்றப்பட்டது. இது இந்திய பொதுத்துற…
-
- 0 replies
- 102 views
-
-
சந்தேக நபர் தப்பியோட்டம்; பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்! பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் இரத்தினபுரி பொலிஸ் தலைமையகத்தின் இரண்டு அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, ஒரு சார்ஜென்ட் மற்றும் ஒரு கான்ஸ்டபிளை பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சருமான எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார். பல குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு சந்தேக நபர் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். பொலிஸ் நிலையத்தில் இருந்த சந்தேக நபர், நேற்று (30) கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறி…
-
- 1 reply
- 147 views
-
-
31 JUL, 2025 | 01:00 PM ஏற்றுமதியை அதிகரிக்காமல் வருமானத்தை உயர்த்த முடியாது ஏற்றுமதியை அதிகரிக்கவேண்டுமானால், வடக்கு மாகாணத்தின் மிகச்சிறந்த வளமாக உள்ள விவசாயம் மற்றும் கடற்றொழிலின் உற்பத்திப் பொருட்களை பெறுமதிசேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றும் தொழிற்சாலைகள் உருவாக்கப்படவேண்டும். தொழிற்சாலைகள் உருவாக்கப்படுவதன் ஊடாக எமது வேலைவாய்ப்பு பிரச்சினையையும் தீர்க்கக் கூடியதாக இருக்கும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இலங்கை தேசிய ஏற்றுமதியாளர் சங்கம், றொட்டரி – யாழ்ப்பாணத்துடன் இணைந்து வட மாகாணத்தில் ஏற்றுமதிக்குத் தயாரான உற்பத்தியாளர்களை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் அரியாலை விருந்தினர் விடுதியில் புதன்கிழமை (30) காலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் …
-
- 1 reply
- 143 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 2 31 JUL, 2025 | 04:13 PM விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் இருக்கலாம் என சந்தேகித்து மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணியானது எவ்வித தடயங்களும் காணப்படாத நிலையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவு ஏ-35 பிரதான வீதியின் அருகே தனியார் காணி ஒன்றில் விடுதலைப் புலிகளின் ஆயுதம் இருப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக பொலிஸார் வியாழக்கிழமை (31) கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமீல் முன்னிலையில் அகழ்வுப்பணி முன்னெடுக்கப்பட்டது. பொலிஸார், இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் முன்னிலையில் அகழ்வுப்பணி மேற்கொள்ளப்பட்ட போது எந்தவித த…
-
- 0 replies
- 134 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 2 31 JUL, 2025 | 04:19 PM ஜேவிபியினருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது போன்று தமிழ் அரசியல் கைதிகளையும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு நீதி அமைச்சரிடம் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரத்தை தான் காதுகளால் கேட்கவில்லை, இதயத்தால் கேட்பதாகவும் தெரிவித்த நீதி அமைச்சர் சட்ட கட்டமைப்பிற்குள் இருந்து இந்த பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில், நீதி அமைச்சருடனான சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிடும் போதே குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன் இதனை தெரிவித்தார். இது குறித்து அவர்…
-
- 0 replies
- 85 views
- 1 follower
-
-
கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் அமைக்க முயற்சி ? adminJuly 31, 2025 யாழ்ப்பாணம் கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் அமைப்பதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டால் அதற்கு எதிராக நீதிமன்ற நாட தயாராக இருப்பதாக வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் திராகராஜா பிரகாஸ் தெரிவித்துள்ளார். யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, நேற்றைய தினம் புதன்கிழமை (30.07.25) தவிசாளர் திராகராஜா பிரகாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் தொடர்பில் உறுப்பினர்கள் பிரஸ்தாபித்திருந்தனர். அதன் பின்னர் தவிசாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், யாழ்.வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட கந்தரோடை பகுதியில் அமைந்திருக்கும் த…
-
- 1 reply
- 209 views
- 1 follower
-
-
இலஞ்சம் கோரல் சம்பவங்களில் 34 நபர்கள் கைது! இந்த ஆண்டின் (2025) முதல் ஆறு மாதங்களில் இலஞ்சம் கோரிய சம்பவங்கள் தொடர்பாக மொத்தம் 34 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் 2025 ஜனவரி 01 முதல் ஜூன் 30 வரை 3,022 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) தெரிவித்துள்ளது. அந்தக் காலகட்டத்தில், 54 சோதனைகள் நடத்தப்பட்டன. இதன் விளைவாக 34 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களில் இலங்கை காவல்துறையைச் சேர்ந்த பத்து அதிகாரிகளும், நீதி அமைச்சின் ஐந்து அதிகாரிகளும் சுகாதார அமைச்சின் இரண்டு அதிகாரிகளும் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) இரண்டு அதிகாரிகள் அடங்குவதாகுவர். இதற்கு மேலதிகமாக ஆறு பொ…
-
- 0 replies
- 176 views
-