Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 2026 ஆம் ஆண்டிற்குள் அனைத்து சிரேஷ்ட பாடசாலைகளுக்கும் இணைய வசதி! இலங்கையின் அனைத்து சிரேஷ்ட மற்றும் இடைநிலைப் பாடசாலைகளுக்கும் 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் இணைய வசதி வழங்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (09) பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார். இதன்போது இணைய வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப உபகரணங்களை பாடசாலைகளுக்கு வழங்கும் வேலைத்திட்டம் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் ‘1000 பாடசாலைகளுக்கு தகவல் தொழில்நுட்ப உபகரணங்களை வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது எனவும், இதுவரை 1500 பாடசாலைகளுக்கு 1900 ஸ்மார்ட் போர்டுகள் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது’ எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும், தூய்மை இலங்கை திட்டத்தின் கீழ்இ இலங…

  2. Published By: VISHNU 09 JUL, 2025 | 01:53 AM வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர் திருவிழா நாளைய தினம் புதன்கிழமை காலை நடைபெறவுள்ளது. அதிகாலை 4 மணியளவில் பூஜைகள் ஆரம்பமாகி , வசந்தமண்டப பூஜை காலை 07 மணிக்கு இடம்பெற்று, அதனை தொடர்ந்து நாகபூசணி அம்மன் உள்வீதியுலா வந்து , காலை 08.30 மணிக்கு தேரில் ஆரோகணித்து, பக்தர்களுக்கு அருட்காட்சியளிப்பர். அதனை தொடர்ந்து காலை 09 மணிக்கு தேரில் வெளிவீதியுலா வந்து காலை 10.30 மணிக்கு தேர் இருப்பிடத்தை அடையும். மாலை 04 மணிக்கு அம்மனுக்கு பச்சை சாத்துதல் இடம்பெறும். நாளை மறுதினம் வியாழக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு பூஜைகள் ஆரம்பமாகி , காலை 07 மணிக்கு வசந்தமண்டப பூஜை ஆரம்பமாகி , 7.30 மணிக்கு தீர்த்தோற்…

  3. Published By: VISHNU 09 JUL, 2025 | 01:43 AM யாழ்ப்பாணம் - நீர்வேலி பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நீர்வேலி - அச்செழு சூரசிட்டி பகுதியை சேர்ந்த 28 வயது என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபருக்கும் அவரது மனைவிக்குமிடையே கடந்த 2ஆம் திகதி முரண்பாடு ஏற்பட்ட நிலையில் மனைவியை தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த மனைவி கோப்பாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று 4ஆம் திகதி வீடு திரும்பிய நிலையில் தாயார் வீட்டிற்கு சென்று அங்கிருந்துள்ளார். இதனால் மன விரக்தியடைந்த கணவன் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். அவரது சடலம் மீதான மர…

  4. 09 JUL, 2025 | 09:51 AM யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரது சடலம் புதன்கிழமை (09) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இராசாவின் தோட்டம், முலவை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபர் ஒருவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபரின் சடலம் முலவை சந்திப் பகுதியில் கட்டடத்தில் அமர்ந்திருந்தவாறு பின் பக்கமாக விழுந்து உயிரிழந்துள்ளார். இது இயற்கை மரணமா அல்லது செயற்கை மரணமா என இதுவரை தெரியவரவில்லை. சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/219537

  5. வாகன விலைகள் மீண்டும் உயரலாம் – வாகன இறக்குமதியாளர்கள் எச்சரிக்கை! வாகன இறக்குமதிக்காக ஒதுக்கப்பட்ட மீதமுள்ள 200 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் ஏதேனும் நிபந்தனைகளை விதித்தால், உள்ளூர் வாகனச் சந்தை கடுமையான விலை உயர்வைச் சந்திக்க நேரிடும் என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் (VIASL) தலைவர் பிரசாத் மானகே எச்சரித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் மேலும் உரையாற்றிய அவர், மத்திய வங்கியின் அண்மைய அறிக்கைகளின்படி, நிதி நிறுவனங்கள் ஏற்கனவே வாகன இறக்குமதிக்காக கிட்டத்தட்ட 800 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள கடன் கடிதங்களை (LCs) திறந்துள்ளது. இறக்குமதியை மீண்டும் தொடங்குவதற்கு ஆரம்பத்தில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கீடு செய்யப்பட்டி…

  6. 08 JUL, 2025 | 03:19 PM சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள் தொடர்பில் முறைப்பாடு அளிப்பதற்கு பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் 109 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்து. சிறுவர்களை யாசகம் மற்றும் கடினமான தொழில்களில் ஈடுபடுத்துதல், துன்புறுத்துதல், துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் பொலிஸாருக்கு உடனடியாக தகவல் வழங்குமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்து. சிறுவர்களை பாதுகாப்பது சமூகத்தின் பாரிய பொறுப்பாகும். எனவே, சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. https://www.vi…

  7. Published By: DIGITAL DESK 2 08 JUL, 2025 | 02:57 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் வீரராஜ், குகன் முருகானந்தன், உட்பட யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகள் தற்போது மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்ற அமர்வின் போது வாய்மூல விடைக்கான கேள்வி நேர வேளையில், தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.…

  8. Published By: VISHNU 08 JUL, 2025 | 09:30 PM செம்மணி விடயம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய அச்சுறுத்தல், குறித்த மயானத்தின் நிர்வாகசபை உறுப்பினரான திரு.கிருபாகரன் தெரிவித்துள்ளார். 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை செம்மணி பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மர்ம வாகனம் செம்மணியை நோட்டமிடுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. அந்த செய்திகள் முற்றும் முழுதாக உண்மை. அந்த மர்ம வாகனமானது எனது வீட்டு அருகாமையிலும் வந்திருந்தது. வழக்காளியான என்னை அச்சுறுத்துவதே இதன் நோக்கமாகும். வழக்கு தொடர்பாக 1995 - 2000 வரையான காலப்பகுதியில் இங்கே கடுமையான செய்தி தணிக்கைகள் இருந்த நிலையில் நீதிமன்ற செயற்பாடுகளும்…

  9. 08 JUL, 2025 | 12:08 PM செம்மணி மனித புதைகுழியில் சிறுவர்களின் எலும்புக்கூடுகள் காணப்படுவது மிகப்பெரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. ஏனென்றால் சிறுவர்களை எந்த விதத்திலும் குற்றவாளிகளாகவோ அல்லது குற்றச்செயலில் ஈடுபட்டவர்களாகவோ கருத முடியாது. எனவே இது நிச்சயமாக ஒரு குற்றம் நடந்த இடமாகவே இந்த மனித புதைகுழி காணப்படுகின்றது என சட்டத்தரணி கேஎஸ் ரத்னவேல் தெரிவித்துள்ளார் நேற்றைய நாள் அகழ்வின் முடிவில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இன்றைய தினம் 12வது நாளாகவும் அகழ்வு நடைபெற்றது, நிபுணர் ராஜ்சோமதேவாவும் அவரது குழுவினரும் மற்றும் யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் தொல்லியல் துறையை சேர்ந்த மாணவர்களும் இங்கு வந்து அகழ்வாராச்சியில் ஈடுபட்டிருக்கின்றார்கள். அத்துடன் புத…

  10. 08 JUL, 2025 | 11:11 AM நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறைப்பாடு அளிப்பதற்கு பொதுமக்கள், பொலிஸ் ஊடகப் பிரிவுடன் தொடர்பு கொள்ள பல எளிமையான வழிமுறைகள் காணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் ஊடகப் பிரிவுடன் தொடர்பு கொள்ள எளிமையான வழிமுறைகள்; பொலிஸ் ஊடகப் பேச்சாளர் - 071 8591882 பொலிஸ் ஊடகப் பிரிவின் பொறுப்பதிகாரி - 071 8592067 பொலிஸ் ஊடகப் பேச்சாளர் காரியாலயம் - 071 8592714 பொலிஸ் ஊடகப் பிரிவின் பணிப்பாளர் - 071 8591883 Hunting இலகுவான தொலைபேசி இலக்கம் - 011 2887973 வாட்ஸ்அப் இலக்கம் - 071 8592802 பொலிஸ் ஊடகப் பிரிவின் இணையவழி முகவரி - http://www.police.lk/ பொலிஸ் முகநூல் பக்கம் - (https://www.facebook.com/srilankapoliceofficial…

  11. Published By: DIGITAL DESK 3 08 JUL, 2025 | 01:03 PM மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் மற்றும் வாகனப் புகை பரீட்சித்தல் நம்பிக்கை நிதியம் ஆகியன இணைந்து வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதா? அல்லது சேர்க்கப்படவில்லையா என்பதைச் அறிந்து கொள்ள ஒன்லைன் போர்ட்டல் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த போட்டல் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும் வாகனப் புகை பரிசோதனை விதிமுறைகளை அமல்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட ஒரு சேவையாகும். அதன்படி, வாகன உரிமையாளர்கள் உத்தியோகபூர்வ Vet.lk இணையத்தளம் மூலம் தங்கள் வாகன நிலை பற்றி அறிந்து கொள்ள கொள்ளலாம். இந்த போட்டலில் வாகன இலக்கத்தை உள்ளீடு செய்து தங்கள் வாகனங்களின் கருப்புப் பட்டியலில் உள்ளதா என அறி…

  12. Published By: VISHNU 08 JUL, 2025 | 01:41 AM (நா.தனுஜா) ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர்மாதக் கூட்டத்தொடர் அரசாங்கத்துக்கு சாதகமானதாக அமையும் என்ற அமைச்சர் விஜித்த ஹேரத்தின் கருத்தை உண்மையாக்கும் வகையில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் செயற்படுவாராயின், அது ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் மீது பாதிக்கப்பட்ட தரப்பினர் கொண்டிருக்கும் நம்பிக்கையை முற்றுமுழுதாக சீர்குலைக்கும் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எச்சரித்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் கடந்த வாரம் சிங்கள செய்திச்சேவை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், நாட்டின் உள்ளக விவகாரங்களில் சர்வதேச தலையீடுகள் அவசியமற்றவை எனவ…

  13. Published By: VISHNU 07 JUL, 2025 | 09:42 PM (நா.தனுஜா) உள்ளக விவகாரத்தில் சர்வதேச தலையீடு தேவையில்லை எனவும் கூறுவதன் ஊடாக அமைச்சர் விஜித்த ஹேரத், இது சிங்கள பௌத்த நாடு என்பதை மீளவலியுறுத்துவதுடன் தமிழர்களை மாற்றான் தாய் மனநிலையுடன் கையாள்வதாகச் சுட்டிக்காட்டிய இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன், இலங்கை அரசினால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் தொடர்பில் இலங்கை அரசே விசாரணைகள் முன்னெடுப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது எனத் தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் கடந்த வாரம் சிங்கள செய்திச்சேவை ஒன்றுக்கு அளித்திருக்கும் நேர்காணலில், நாட்டின் உள்ளக விவகாரங்களில் சர்வதேச தலையீடுகள் அவசியமற்றவை எனவும், அரசியலமைப்பு, சட்டம் மற்றும் நீத…

  14. 08 JUL, 2025 | 08:54 AM யாழ். இந்திய துணைத் தூதுவர் சாய் முரளிக்கும் காரைநகர் பிரதேச சபையினருக்குமிடையே நேற்று திங்கட்கிழமை (07) கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இதன்போது கடல்நீரை சுத்திகரித்து குடிநீராக்கி காரைநகருக்கு வழங்குதல், பொன்னாலை பாலத்திற்கு 3மைல் நீளத்திற்கு 80 லட்ச ரூபா செலவில் சோலர் லைட் பொருத்துதல், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களிற்கு 175 மில்லியன் செலவில் வீடமைப்பு திட்டங்கள் வழங்கல் போன்ற கோரிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த மூன்று கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறப்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/219447

  15. தாதியர்களின் கட்டாய ஓய்வு வயது குறித்து வௌியான சுற்றறிக்கை! தாதியர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆகக் குறைப்பதால் எதிர்காலத்தில் பல சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்று அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. ஓய்வூதிய வயதை குறைப்பதால் தற்போதுள்ள தாதியர் பற்றாக்குறை மேலும் மோசமடையும் என்று அதன் தலைவர் வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார். தாதியர் அதிகாரிகளின் கட்டாய ஓய்வு வயதை 63 ஆக நீட்டித்த மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சுகாதார அமைச்சு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதன்படி, குறித்த வழக்கு முடியும் வரை மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைக்க உயர் நீதிமன்றம் மார்ச் 6 ஆம் திகதி உத்தரவிட்டது. அந்த உத்தரவின்படி, 6…

  16. IMF ஆலோசனையுடன் சொத்து வரியை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டம்! 2027 ஆம் ஆண்டின் முதல் பாதியில் நாடு தழுவிய சொத்து வரி முறையை அறிமுகப்படுத்த இலங்கை தயாராகி வருவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்டுள்ள அண்மைய பணியாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் பரந்த வருவாய் திரட்டல் உத்தியின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த முயற்சி, வரி சமத்துவத்தை அதிகரிக்கும் மற்றும் பொதுத்துறை நிதியுதவியை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சொத்து வரிவிதிப்புக்கு ஆதரவளிக்க தேவையான தரவு உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான விரிவான வரைபடத்தை IMF அறிக்கை கோடிட்டுக் காட்டுகிறது. இந்த முயற்சியின் மையமானது சொத்து மதிப்பீடுகளின் விரிவான மற்றும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தரவுத்தளத்தை உருவ…

  17. இலத்திரனியல் அடையாள அட்டை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு! இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை திட்டத்தின் கீழ் பிரதேச செயலகங்களின் கணினி மற்றும் உபகரண அமைப்புக்கான மின் விநியோக அலகுகளை கொள்முதல் செய்வது தொடர்பான ஊடக அறிக்கைகள் தொடர்பில் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது. அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருக்கும் வணிகங்களுக்கு இக் கொள்முதல்களின் கீழ் தேவையற்ற நன்மைகள் வழங்கப்படும் என்ற ஊடகச் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளது. இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை திட்டத்தின் கீழ் மீதமுள்ள அனைத்து கொள்முதல்களும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இதுவரை செய்யப்பட்டுள்ளபடி அதிக வெளிப்படைத்தன்மை, சரியான தர…

  18. Published By: VISHNU 07 JUL, 2025 | 07:46 PM (நா.தனுஜா) பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் தீர்வு ஆகிய விடயங்களில் பொதுவேலைத்திட்டமொன்றின் கீழ் ஒன்றிணைந்து செயலாற்றுவது குறித்து இலங்கைத் தமிழரசுக்கட்சி உள்ளிட்ட தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளுடனும், தமிழ்த்தேசியப்பரப்பில் இயங்கிவரும் சிவில் சமூகப்பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடாத்தவிருப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களின் பின்னர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உள்ளுராட்சிமன்றங்களில் இணைந்து ஆட்சியமைப்பது குறித்து ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணி மற்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சி உள்ளி…

  19. Published By: VISHNU 07 JUL, 2025 | 06:35 PM (செ.சுபதர்ஷனி) நாட்டில் உள்ள விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளை ஆய்வு செய்து எதிர்காலத்தில் விபத்துகளின் அபாயத்தைக் குறைக்க குறுகிய கால, நடுத்தர மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பத்தாவது தேசிய விபத்து தடுப்பு வாரம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் பங்கேற்புடன் திங்கட்கிழமை (7) சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில், இந்நாட்டில் 7 பேரில் ஒருவர் ஒவ்வொரு வருடமும் சிகிச்சையளிக்க வேண்டிய விபத்துகளில் சிக்க நேரிடும்…

  20. 07 JUL, 2025 | 06:00 PM (துரைநாயகம் சஞ்சீவன்) சம்பூர் படுகொலையின் 35ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (7) மாலை சம்பூரில் அமைந்துள்ள நினைவுத்தூபி வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களால் உணர்வுபூர்வமான அனுஷ்டிக்கப்பட்டது. சம்பூரில் 1990ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட 57 பேர் உட்பட அதனை அண்மித்த காலப்பகுதியில் படுகொலை செய்யப்பட்டு உயிர் நீத்த நூற்றுக்கும் அதிகமான பொது மக்களுக்குமான அஞ்சலி நிகழ்வு இதன்போது நடைபெற்றது. அவ்வேளை, படுகொலை செய்யப்பட்டு உயிர் நீத்த உறவுகளுக்கு மலர் தூவி, விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பெண் உரிமை பாதுகாவலர்கள், சிவில் அமைப…

  21. வட்டுக்கோட்டை இந்து கல்லூரியில் வணிக சந்தை! வணிக தினம் மற்றும் வணிக வாரத்தை முன்னிட்டு இன்றையதினம் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இந்து கல்லூரியில் வணிக சந்தை ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வட்டுக்கோட்டை இந்து கல்லூரியின் வணிக பாட ஆசிரியர் சக்திவடிவேல் பிரதீபன் தலைமையில், வணிகப்பிரிவு மாணவர்களால் இந்த வணிக சந்தை திட்டமிடப்பட்டது. நாடாவெட்டி ஆரம்பமான வணிக சந்தையானது தொடர்ந்து மாணவர்கள் உள்ளூர் சார்ந்த உற்பத்திகள், குளிர்பானங்கள், கற்றல் உபகரணங்கள் உள்ளிட்ட பல பொருட்களை சந்தைப்படுத்தினர். மாணவர்கள் சந்தைப்படுத்திய உற்பத்தி பொருட்களை கல்லூரியின் பிரதி அதிபர் திருமதி. வதனி தில்லைச்செல்வன், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் பார்வையிட்டு அவற்றை கொள்வனவு செய்தனர். வணிகத்துறை சார்ந்து நல்ல ஒ…

  22. 06 Jul, 2025 | 05:55 PM (இராஜதுரை ஹஷான்) கோட்டபய ராஜபக்ஷவுக்கு மக்கள் வழங்கிய ஆணையை பஷில் ராஜபக்ஷ கொள்ளையடித்ததை போன்று அநுரகுமார திசாநாயக்கவுக்கு மக்கள் வழங்கியுள்ள ஆணையை ரில்வின் சில்வா, பிமல் ரத்நாயக்க ஆகியோர் கொள்ளையடித்துள்ளார்கள்.இதன் பெறுபேற்றை வெகுவிரைவில் அரசாங்கம் விளங்கிக் கொள்ளும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (06) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, வெளிநாட்டு கடன் சுமையினால் நாடு நிதியியல் ரீதியில் வங்குரோத்து நிலையடைந்தது.1987 ஆம் ஆண்டு நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியை காட்…

  23. 07 Jul, 2025 | 12:16 AM (இராஜதுரை ஹஷான்) இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு புலனாய்வு தகவல்களை வழங்குவதை தவிர்க்கின்றன. தனிமனித பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்துக்கு கற்பிக்க தயாராகவுள்ளோம் என்று முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (6) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, தேசிய பாதுகாப்பு தொடர்பில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களுக்கு வகுப்பறையில் அமர வைத்து கற்பிப்பதாக குறிப்பிட்ட அரசாங்கத்துக்கு தேசிய …

  24. 06 Jul, 2025 | 05:26 PM (நமது நிருபர்) கொழும்பு - காங்கேசன்துறை சொகுசு ரயில் சேவை இன்று(07) முதல் நாளாந்தம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து தினமும் காலை 5.45க்கு பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதுடன் காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 02 மணிக்கு மீண்டும் கொழும்பு நோக்கி பயணிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார். இந்த சொகுசு ரயில் சேவை இதற்கு முன்னர் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டது. எனினும் தற்போது இந்த புதிய சொகுசு ரயில் சேவை ஆரம்பமானதன் பின்னர் யாழ்தேவி ரயிலானது கொழும்பு கோட்டையிலிருந்து தினமும் காலை 06.40க்கு புறப்படும் என ரயில்வே திணைக்களத்தின் பொது மு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.