Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 10 Sep, 2025 | 06:50 PM (எம்.ஆர்,எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) மட்டக்களப்பு குருக்கல் மடம் சம்பவத்தில் மரணித்தவர்களின் சடலங்களை மீள தோண்டி எடுத்து, அந்த சடலங்களை இஸ்லாமிய மத முறைப்படி நல்லடக்கம் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) நிலையியற் கட்டளை 27 2இன் கீழ் கேள்வி எழுப்பி உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பி்ட்டார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 1990 ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் திகதி களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் குருக்கள் மடம் கிராமத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் சிலர் மக்கா யாத்திரைக்கு பின்னர் கொழும்பு மட்டக்களப்பு பிரதான வீதியில் தங்களின் வீடுகளுக…

  2. 10 Sep, 2025 | 09:54 AM இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்தபடி, இலங்கை மின்சார சபை (CEB) 2025 இறுதி காலாண்டுக்காக மின்சார கட்டணத்தில் 6.8% உயர்வு பரிந்துரைத்துள்ளது. அதன்படி, முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்து பொதுமக்களின் கருத்தைப் பெற இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. பொதுமக்கள் தங்கள் கருத்துகளையும் பரிந்துரைகளையும் எழுத்துப்பூர்வமாக ஆணையத்திடம் சமர்ப்பிக்கலாம் என இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுதெரிவித்துள்ளது. வாய்மொழி கருத்துக்களைப் பெற, இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கிய ஒன்பது பொது ஆலோசனைகளை நடத்தும். வாய்மொழி சமர்ப்பிப்புகளுக்கான இந்தப் பொது ஆலோசனை அமர்வுகள் செப்டம்பர் 18, 20…

  3. 09 Sep, 2025 | 04:03 PM (எம்.மனோசித்ரா) நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும். அரசியலமைப்பு திருத்தத்தில் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட்ட பின்னர் இதற்குரிய வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும். முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமைகளை நீக்குவதற்கான சட்டமூலம் மஹிந்த ராஜபக்ஷவை இலக்காகக் கொண்டு முன்வைக்கப்பட்டதல்ல. அது ஓய்வு பெற்ற அனைத்து ஜனாதிபதிகளுக்குப் பொதுவானதாகும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (09) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை தொ…

  4. வடக்கு மாகாணத்தை நாட்டின் ஏனைய மாகாணங்களிலிருந்து வித்தியாசப்படுத்தி நோக்க வேண்டும். - ஆளுநர் நா.வேதநாயகன் புதன், 10 செப்டம்பர் 2025 05:52 AM வடக்கு மாகாணத்திலுள்ள ஒவ்வொரு பிள்ளைகளினதும் அடிப்படை உரிமைகளையும் அவர்களது தேவைகளையும் வசதிகளையும் உறுதிப்படுத்தவேண்டியது எங்கள் அனைவரினதும் பொறுப்பாகும். அதேநேரம் அவர்களுக்கான உதவிகளைச் செய்வதற்கு பலர் தன்னார்வமாக தயாராக உள்ளபோதும் அது ஒருங்கிணைந்த ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பின் ஊடாக கிடைக்கப்பெறுவதற்குரிய ஏற்பாடுகளை நாம் துரிதமாகச் செய்யவேண்டியிருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். இந்தியத் துணைத்தூதரகமும், போலோ ஆய்வகமும் இணைந்து 'போசாக்கு ஊட்டச்சத்து ஆரோக்கியம் மற்றும் ஆரம்பகால கற்றல் குறித்த உலகளாவ…

  5. நாட்டை உலுக்கிய எல்ல விபத்து - ஒருவர் கைது! எல்ல - வெல்லவாய வீதியில் நேற்றிரவு (04) இடம்பெற்ற பாரிய பேருந்து விபத்து தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த பேருந்து எல்ல திசையிலிருந்து வெல்லவாய திசை நோக்கி பயணித்த போது எதிரே வந்த ஜீப் வண்டியில் மோதி பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த நிலையில் விபத்து தொடர்பாக குறித்த ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று இரவு 9.00 மணியளவில் இடம்பெற்ற இந்த பேருந்து விபத்தில் 15 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 18 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சுற்றுலா சென்று திரும்பிக்கொண்டிருந்த தங்காலை நகரசபை பணியாளர்கள் குழுவை ஏற்ற…

  6. UNHRC-யில் இலங்கைக்கு 43 நாடுகள் ஒற்றுமையை வெளிப்படுத்தின ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 60வது அமர்வில் நடைபெற்ற ஊடாடும் உரையாடல் நிகழ்வில் பேசிய சுமார் 43 நாடுகள் இலங்கையுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தியதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எத்தியோப்பியா, கோட் டி ஐவோயர், பிலிப்பைன்ஸ், ஜப்பான், லாவோஸ், தாய்லாந்து, , கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு, எரித்திரியா, ஈரான், நேபாளம், இந்தியா, ஜிம்பாப்வே, வியட்நாம், சீனா, அஜர்பைஜான், இந்தோனேசியா, துருக்கி, பெலாரஸ், எகிப்து, வெனிசுலா, மாலத்தீவுகள், கியூபா, தெற்கு சூடான், சூடான், ரஷ…

  7. சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவினர் கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியாலயம் மற்றும் கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு 10 Sep, 2025 | 11:16 AM 1990 காலப்பகுதிகளில் மட்டக்களப்பு சந்துருக்கொண்டான் பிரதேசம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள மக்களை சிறுவர்கள் பெண்கள் பாரபட்சமின்றி விசாரணை என்ற பெயரில் அழைத்து சித்திரவதைக்குட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், குறித்த பிரதேசத்தில் அக்காலத்தில் அமைக்கப்பட்டிருந்த இராணுவமுகாம் அமைந்த பகுதி அகழ்வு செய்யப்பட்டு இச்சம்பவம் தொடர்பான உறுதிப்படுத்தலை மேற்கொண்டு உரியவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் எனவும் கோரி சத்துருக்கொண்டான் படுகொலை ந…

  8. வேலணையில் வாள்வெட்டு ; 10 நாள்களின் பின் பிரதான சந்தேக நபர் கைது! 10 Sep, 2025 | 11:03 AM அண்மையில் வேலணை பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தேடப்பட்டு வந்த நிலையில், பிரதான சந்தேக நபரை 10 நாள்களின் பின்னர் செவ்வாய்க்கிழமை (09) கைது செய்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். கடந்த மாதம் 31 ஆம் திகதியன்று வேலணை அராலி சந்திக்கு அண்மையில் காரில் சென்ற ஒருவரை பட்டா ரக வாகனத்தில் சென்ற குழு ஒன்று வழிமறித்து வாளால் வெட்டி கடுங்காயங்களுக்கு உள்ளாக்கிவிட்டுச் தப்பிச் சென்றிருந்தது. கடும் காயமுற்ற நபர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குறித்த வாள் வெட்டுடன் தொடருடைய குழுவை பொலிஸார் தேடி தீவிர விசாரணை நடவடிக்க…

  9. வாக்குறுதிகளை நிறைவேற்றும் முதல்படி கூட இன்னும் எடுக்கப்படவில்லை செய்திகள் வெளிநாட்டு அமைச்சர் விஜித ஹேரத் கடந்த 08 ஆம் திகதி ஜெனீவாவில் நடைபெற்ற ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது அமர்வில் வெளியிட்ட அறிக்கைக்கு இலங்கை தமிழரசு கட்சி சார்பில் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் தெரிவித்ததாவது, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான பல முக்கிய கரிசனைகளுக்கு அரசாங்கம் இன்னும் பதிலளிக்கவில்லை என்பதில் எமது ஆழ்ந்த ஏமாற்றத்தை இங்கு பதிவு செய்கிறோம். இந்த அரசாங்கம் பதவியேற்றபோது பல வாக்குறுதிகளை வழங்கியது. எனினும், ஜனாதிபதி தேர்தல் முடிவுற்று ஒரு முழு ஆண்டு ஆன பின்னும், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் முதல்படி கூட இன்னும் எடுக்கப்படவில்லை. அமைச்சர் …

  10. முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் (ரத்து) தொடர்பில் உயர் நீதிமன்றின் தீர்மானம்! முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை ரத்து செய்வதற்கான சட்டமூலத்தின் எந்தவொரு சரத்தும் அரசியலமைப்பின் எந்தவொரு விதிகளுக்கும் முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. இன்றைய சபை அமர்வின் ஆரம்பத்தில் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன உயர் நீதிமன்றத்தின் விளக்கத்தை அறிவித்தார். இதன்படி குறித்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்றும் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் இன்று அறிவித்தார். https://athavannews.com/2025/1446489

  11. இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் தொழிற்சாலை; விசாரணைகள் தீவிரம்! நுவரெலியாவில் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) போதைப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். ‘கெஹெல்பத்தர பத்மே’ எனப்படும் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த நபர் இந்தத் தொழிற்சாலையில்04 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை முதலீடு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், குறித்த தொழிற்சாலையை இயக்குவதற்காக நுவரெலியாவில் ஒரு வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக 2000 கிலோவுக்கும் அதிகமான இரசாயனங்கள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாகவும் அவர் கூறினார். மேலும், இந்த பாதாள உலக நபர்கள் போலி கடவுச்சீட்டுகளை பெறுவதற்காக அரசியல் …

  12. நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்! நேபாளத்தில் எதிர்கொள்ளப்படும் அரசியல் கலரவ சூழ்நிலையின் பின்னணியில் அங்கு வாழும் இலங்கையர்களுக்கு வெளிவிவகார அமைச்சு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. நேபாளத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு நேபாளத்தில் வசிக்கும் இலங்கையர்கள் தங்கள் தங்குமிடங்களை விட்டு வெளியேற வேண்டாம் என்று வெளிவிவகார அமைச்சின் அறிக்கை வலியுறுத்தியுள்ளது. அத்துடன் நேபாளத்தில் உள்ள இலங்கையர்கள் அந்நாட்டில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகளை 10977- 9851048653 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் மற்றும் உலர் உணவுப் பொருட்களை எப்போதும் தங்களிடம் வைத்திருக்கவும் அறிவுறுத்தப…

  13. பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கி தனிநபர் பாதுகாப்பை உறுதிசெய்க! உறுப்பு நாடுகள் ஐ.நா.வில் வலியுறுத்து இலங்கையில் தனிநபர்களை இலக்குவைப்பதற்குப் பயன்படுத்தப்படும் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் என்று பிரிட்டன், நியூஸிலாந்து, சுவிட்ஸர்லாந்து, அவுஸ்திரேலியா உள்ளிட்ட உறுப்பு நாடுகள் வலியுறுத்தியுள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் நேற்றுமுன்தினம் ஆரம்பமானது. இதில் இலங்கை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. தொடர்ந்து அறிக்கைமீதான விவாதம் நடைபெற்றது. இதன்போது, தேசிய நல்லிணக்கத்தையும், பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை உறுதிப்படுத்துவதற்கான உள்ளகக் கட்டமைப்புகளின் இயலுமையையும் கட்டியெழுப்புவதில் இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கும் …

  14. சர்ச்சையை கிளப்பிய கடற்றொழில் அமைச்சரின் கடல் அட்டைப் பண்ணை கருத்து! கடல் அட்டை பண்ணை தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ள கருத்து, அவர் தொடர்பிலான சர்ச்சைக்குரிய கேள்விகளை எழுப்புவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் கடல் அட்டைப் பண்ணையாளர்களுடனான கலந்துரையாடலின் அவர் தெரிவித்த கருத்தே இவ்வாறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அதாவது, கடல் அட்டைப் பண்ணை எல்லோருக்கும் வழங்குவோம் பயப்பட வேண்டாம் எனவும் நீங்கள் ஒன்றரை ஏக்கர் பண்ணை வைத்திருந்தால் அரை ஏக்கருக்கு அரசாங்கத்திற்கு பணம் கட்டினால் போதும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சி காலங்களில் கடல் அட்டை பண்ணைகளுக்கு எதிராக சந்திரசேகரன் கருத்து தெரிவித்து வந…

  15. கடந்த ஆண்டில் 350 பொலிஸ் அதிகாரிகள் இடைநீக்கம்! கடந்த ஆண்டில் சுமார் 350 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பொலிஸ் துறையை அரசியலற்றதாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட அதிகாரிகள் குழு ஒன்று இவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார். களுத்துறை பொலிஸ் பயிற்சி கல்லூரியில் நடைபெற்ற பயிற்சி பொலிஸ் அதிகாரிகள் குழுவிற்கான பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். இதவேளை இந்த நிகழ்வில் பேசிய பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பொலிஸ் சேவைக்குள் நீதியான அதிகாரிகள் குழுவை உருவாக்குவதே தனது முதன்மையான நோக்கம் என்று கூறினார்.…

  16. written by admin August 10, 2025 மண்டபம் அடுத்து வேதாளை கடற்கரையில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் ஒரு டன் எடை கொண்ட சுக்கு (காய்ந்த இஞ்சி) சரக்கு வாகனத்துடன் மரைன் காவற்துறையினர் நேற்று சனிக்கிழமை (09.08.25) இரவு பறிமுதல் செய்து மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த வேதாளை கடற்கரையில் மண்டபம் மரைன் காவற்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது இலங்கைக்கு கடத்துவதற்காக வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 35 மூட்டைகளில் சுமார் ஒரு டன் எடை கொண்ட சுக்கு (காய்ந்த இஞ்சி) பறிமுதல் செய்து மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட சுக்கின் மதிப்பு பல லட்சம்…

  17. பாதாள உலக குழுவுடன் தொடர்பு- வெளியாகவுள்ள முன்னாள் அமைச்சர்களின் பெயர்கள்! ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலக குற்றக் கும்பல்களுடன் தொடர்புகளை வைத்திருந்த முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற உயர் மட்ட நபர்களின் பட்டியலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, இது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவும் விரைவில் அவையில் அறிக்கையொன்றை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1446497

  18. 09 Sep, 2025 | 05:24 PM (எம்.ஆர்.எம் வசீம், இராஜதுரை ஹஷான்) கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கென தனியாக நடத்த வேண்டிய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை கல்முனை பிரதேச செயலகத்துடன் இணைத்து நடத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது அவ்வாறு ஒன்றாக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்தப்படுவதை தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமாகவே கருதப்படும் என்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கோடீஸ்வரன் எதிர்ப்பை வெளிப்படுத்தினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்ற இலங்கைக்கும், ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் இடையிலான பல்துறை ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, கல்முனை வடக்கு …

  19. 09 Sep, 2025 | 01:01 PM (எம்.நியூட்டன்) வடக்கு மாகாணத்திலுள்ள ஒவ்வொரு பிள்ளைகளினதும் அடிப்படை உரிமைகளையும் அவர்களது தேவைகளையும் வசதிகளையும் உறுதிப்படுத்தவேண்டியது எங்கள் அனைவரினதும் பொறுப்பாகும். அதேநேரம் அவர்களுக்கான உதவிகளைச் செய்வதற்கு பலர் தன்னார்வமாக தயாராக உள்ளபோதும் அது ஒருங்கிணைந்த ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பின் ஊடாக கிடைக்கப்பெறுவதற்குரிய ஏற்பாடுகளை நாம் துரிதமாகச் செய்யவேண்டியிருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இந்தியத் துணைத்தூதரகமும், போலோ ஆய்வகமும் இணைந்து 'போசாக்கு ஊட்டச்சத்து ஆரோக்கியம் மற்றும் ஆரம்பகால கற்றல் குறித்த உலகளாவிய கருத்தரங்கு – ஒரு குழந்தையின் எதிர்காலத்துக்கான இணைப்பு' என்னும் தலைப்பில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கல…

  20. 09 Sep, 2025 | 04:50 PM மட்டக்களப்பு தலைமையாக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு நகரில் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற முறையில் உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்த பிரபல ஹோட்டல் ஒன்றை இரு தினங்களுக்கு மூடி சீல் வைத்து மூடுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சுதர்சனி உத்தரவிட்டுள்ளார் மட்டக்களப்பு நகரிலுள்ள குறித்த உணவு விற்பனை நிலையத்தின் மீது பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ் முரளீஸ்வரனின் பணிப்புரையின் பேரில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் இ டாக்டர் இ.உதயகுமாரின் வழிகாட்டலில் கோட்டைமுனை பொது சுகாதார பரிசோதகர் ரி. மிதுன்ராஜ் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர்கள் குற…

  21. 9 Sep, 2025 | 05:25 PM ஐஸ் போதைப்பொருள் தயாரிப்புக்கான மூலப்பொருள் அடங்கிய இரு கொள்கலன்கள் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டமைக்கு மேல் மாகாண வடக்கு குற்றபிரிவு பணிப்பாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ரொஹான் ஒலுகலவே காரணம் என சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ள தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் பேசுபொருளாக மாறியுள்ள இவ்விடயம் தொடர்பில் நேற்று திங்கட்கிழமை (08) பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டிருந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களும் பாதாள உலக குழுவை சேர்ந்த மனுதின பத்மசிரி பெரேரா என்னும் கேல்பத்தர பத்மே மற்றும் கமென்டோ சலிந்த உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்கள் இந்தோனேச…

  22. 09 Sep, 2025 | 10:54 AM கொழும்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் உட்பட 9 பேரை செப்டெம்பர் 22 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை (08) உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் மனைவி உட்பட 8 பேர் இணைந்து அநுராதபுரம், சிராவஸ்திபுர, திம்பிரிகடவல பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்து புதையல் தோண்டிய சம்பவத்துக்கு உதவி செய்த குற்றச்சாட்டில் கொழும்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் மனைவி உட்பட 8 பேர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் கொழும்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகார…

  23. இன்று முதல் கடுமையாகும் போக்குவரத்து சட்டம் செய்திகள் போக்குவரத்து சட்டம் இன்று (08) முதல் கடுமையாக அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. இதற்காக வாகனங்களை சோதனை செய்ய நாடு முழுவதும் பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என போக்குவரத்து பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன சுட்டிக்காட்டியுள்ளார். போக்குவரத்திற்கு தகுதியற்ற வாகனங்கள் மற்றும் வண்ணங்கள் மாற்றப்பட்ட வாகனங்கள் குறித்தும் இதன்போது சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், வெவ்வேறு வண்ணங்களில் கூடுதல் விளக்குகளுடன் இயங்கும் வாகனங்கள், வாகனங்களின் முன், பின் மற்றும் இரு பகுதிகளின் சித்திர வடிவமைப்புகள் மற்றும் விளம்பரங்கள் பிரசுரித்தல் மற்றும் சட்டவிரோத மேலதிக உதிரி பாகங்கள் தொடர்பிலும் …

  24. இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து பிரித்தானியா அறிக்கை வெளியிட்டது! adminSeptember 9, 2025 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து ஐக்கிய இராச்சியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையை மனித உரிமைகளுக்கான பிரித்தானிய உயர் ஆணையர் எலினோர் சாண்டர்ஸ் முன்வைத்துள்ளார். இலங்கைக்கு ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் பயணம் செய்தமைக்கும், ஆணையர் வெளியிட்ட அறிக்கைக்கும் எலினோர் சாண்டர்ஸ் தனது அறிக்கையின் மூலம் நன்றி தெரிவித்துள்ளார். இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழிகள் குறித்த விசாரணை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், சர்வதேச தரத்தின்படி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பிரித்தானியா…

  25. இந்த ஆண்டு வீதி விபத்துக்களினால் 1,870 பேர் உயிரிழப்பு! இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் செப்டம்பர் 4 வரை நடந்த 1,757 வீதி விபத்துகளில் நாடு முழுவதும் மொத்தம் 1,870 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போக்குவரத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்திக ஹபுகொட இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார். வீதி விபத்துகளால் தினமும் சுமார் ஏழு முதல் எட்டு பேர் உயிரிழப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே, வாகன சாரதிகள், பாதசாரிகள் மற்றும் பயணிகள் உட்பட அனைத்து வீதிப் பயனர்களும் போக்குவரத்து சட்டங்களை அவசியம் பின்பற்ற வேண்டும். விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்க சுய ஒழுக்கத்துடன், அவதானத்துடனும் செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். https://athavannews.com/2025/1446451

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.