ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142712 topics in this forum
-
01 JUL, 2025 | 09:51 AM இளைஞர்களை வலுவூட்டுதல், பெண் தொழில்முனைவோர், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவு (SME) ஆகியவற்றுக்கு ஆதரவாக செயல்பட நியாயமான முதலீட்டு மூலோபாயங்களின் முக்கியத்துவத்தை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய வலியுறுத்தினார். இந்திய தொழில்துறை சம்மேளனத்தின் (CII) தலைமை நிர்வாக அதிகாரிகள் (CEO) தூதுக்குழுவிற்கும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிற்கும் இடையேயான விசேட சந்திப்பு ஜூன் 30ஆம் திகதி இலங்கை பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. இதன்போது, குறிப்பாக பொருளாதாரத்தை இயல்புநிலைக்கு கொண்டு வருவதற்கும் அதன் வளர்ச்சிக்காகவும் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் தொடர்ச்சியான ஒத்துழைப்பு குறித்து பிரதமர் தனது பாராட்டினைத் தெரிவித்தார். ஜனாதிபதி அனுர குமார திச…
-
- 0 replies
- 67 views
- 1 follower
-
-
Published By: VISHNU 01 JUL, 2025 | 04:28 AM "சர்வதேச சட்டத்தின் பிரகாரம் சட்டப்பூர்வமாகவே கச்சத்தீவு இலங்கைக்கு கையளிக்கப்பட்டது. எனவே, அதனை ஒருபோதும் மீள கையகப்படுத்த முடியாது" - என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, "எமது வடக்கு கடற்பரப்புக்குள் இந்திய ரோலர் படகுகள் சட்டவிரோதமாக நுழைகின்றன. இதனால் கடல்வளம் நாசமாக்கப்பட்டுள்ளது. வடக்கிலுள்ள சனத்தொகையில் 30 சதவீதமானோர் கடற்றொழிலையே நம்பி உள்ளனர். எனவே, இது அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் செயலாகும். தமிழ் நாட்டில் தேர்தலொன்று நெருங்கும்வேளை கச்சத்தீவு விவகாரம்…
-
- 0 replies
- 93 views
- 1 follower
-
-
01 JUL, 2025 | 12:58 PM யாழ்ப்பாணத்தில் வீதி மின்விளக்கினை பழுது பார்த்துக்கொண்டிருந்த ஊழியர் ஒருவர் மின்சார தாக்குதலுக்கு இலக்கான நிலையில் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கொக்குவில் சந்தையை அண்மித்த பகுதியில் செவ்வாய்க்கிழமை (01) காலை, வீதி மின்விளக்குகளை பழுது பார்த்துக்கொண்டிருந்த வேளை மின்சாரம் தாக்கியுள்ளது. மின்சார தாக்குதலுக்கு உள்ளான ஊழியரை சக ஊழியர்கள் மீட்டு, யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். https://www.virakesari.lk/article/218926
-
- 0 replies
- 119 views
- 1 follower
-
-
சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் செலவிடும் டொலர்கள் குறித்து கண்காணிக்க திட்டம்! நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் எவ்வளவு டொலர்களை செலவிடுகிறார்கள் என்பதைக் கண்காணிக்க ஒரு முறையான வழிமுறை உருவாக்கப்பட வேண்டும் என சர்வஜன அதிகாரத்தின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்தார். இன்று (30) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய திலித் ஜயவீர, சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்தாலும், அவர்கள் நாட்டில் செலவிடும் டொலர்களைக் கண்காணிக்க எந்த முறைமையும் இல்லை என்று குறிப்பிட்டார். குறைந்தளவில் செலவிடும் சுற்றுலாப் பயணிகளின் வருகை ஊடாக இலங்கை மக்கள் மீது பெரும் சுமை சுமத்தப்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர இதன்போது சுட்டிக்காட்டினார். அதன்படி, இதற்…
-
- 1 reply
- 193 views
- 1 follower
-
-
சீட் பெல்ட் அணிவது கட்டாயம் – அமைச்சர் பிமல்! எதிர்வரும் செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து அதிவேக நெடுஞ்சாலைகளில் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளிலும் பயணிகளுக்கு சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (01) காலை கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தின் ஆய்வுப் பயணத்தில் பங்கேற்றபோது இந்த விடயத்தைக் கூறினார். வீதி விபத்துகளில் அதிக எண்ணிக்கையிலான உயிர்கள் இழக்கப்படுவதாகவும், அந்த சூழ்நிலையைத் தவிர்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதிவேக நெடுஞ்சாலைகளில் இயக்கப்படும் இலகுரக வாகனங்களின் பின் இருக்கைகளில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிவதும் கட்…
-
-
- 9 replies
- 443 views
- 1 follower
-
-
செம்மணி மனித புதைகுழி: போலியான படங்கள் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும்! “செம்மணி மனித புதைகுழி தொடர்பாக சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும் போலியான புகைப்படங்கள் பரப்புவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்”என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பாக முன்னிலையாகியுள்ள சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்துள்ளார். அத்துடன் ”செம்மணி புதைகுழிகளில் மீட்கப்படும் எலும்பு கூடுகளை Ai தொழிநுட்பம் ஊடாக மாற்றி அமைப்போருக்கும் , அதனை சமூக ஊடகங்களில் பகிர்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா எச்சரித்துள்ளார். செம்மணி மனித புதைகுழி அகழ்வாராய்ச்சி தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேல…
-
-
- 3 replies
- 257 views
- 1 follower
-
-
Published By: VISHNU 30 JUN, 2025 | 09:44 PM அதிகாரம் மற்றும் செல்வத்தின் முன்பாக அனைத்து நல்ல விடயங்களையும் அழித்து, பாதகமான மதிப்புகளைச் சேர்த்த ஒரு சமூகத்தில் மனிதாபிமான உயிரூட்டத்தை மீண்டும் கொண்டு வருவதன் மூலம் ஒழுக்கமான சிறந்த சமூகமாகக் கட்டியெழுப்ப வேண்டும். அவ்வாறு செய்வதற்கு இந்த நாட்டின் மகா சங்கத்தினர் பெரும் பங்களிப்பைச் செய்ய முடியும். கல்னேவா மகாவலி மைதானத்தில் திங்கட்கிழமை (30) பிற்பகல் நடைபெற்ற இலங்கை ராமான்ய மகா பீடத்தின் 74 ஆவது உபசம்பதா மஹோத்சவத்தின் தொடக்க விழாவில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். உடல் ரீதியாக எட்ட வேண்டிய வெற்றிகள் போன்றே ஆன்மீக ரீதியாகவும் அடைய வேண்டிய பல சாதனைகள் உள்ளன என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நீண…
-
- 3 replies
- 238 views
- 1 follower
-
-
Published By: VISHNU 30 JUN, 2025 | 07:22 PM 'இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் அத்துமீறக்கூடாது, அவ்வாறு அத்துமீறினால் நிச்சயம் கைது செய்யப்படுவீர்கள், படகுகள் பறிமுதல் செய்யப்படும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியவை வருமாறு, 124 இற்கு மேற்பட்ட இந்திய மீனவர்களின் இழுவைப்படகுகள் மயிலிட்டியில் தடுத்துவைக்கப்பட்டுள்ளன. இவை தொடர்பில் இன்னும் ஓரிரு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும். 'இந்திய மீனவர்கள் மூன்று மாதங்களுக்கு பிறகு மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. எமது கடற்…
-
-
- 1 reply
- 199 views
- 1 follower
-
-
இலங்கை வரும் போலிவூட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்? எதிர்வரும் ஆகஸ்ட் 02 ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக திறக்கப்படவுள்ள “சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ்” இலங்கையின் பிரமாண்ட திட்டத்தின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள உலகப் புகழ்பெற்ற போலிவூட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் காத்திருக்கும் நிலையில், ஷாருக்கான் இந்த நிகழ்விற்கு தலைமை தாங்குவார் என்று சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது. இது தெற்காசியாவின் முதல் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட சொகுசு ரிசார்ட்டைத் தொடங்குவதைக் குறிக்கிறது. ஜான் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் (JKH) மற்றும் மெல்கோ ரிசார்ட்ஸ் மற்றும் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்களுடன் இ…
-
-
- 3 replies
- 339 views
-
-
30 JUN, 2025 | 12:49 PM கிராமிய பாதைகளுக்கான அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மயிலிட்டி வடக்கில் வீதி புனரமைப்பு செய்வதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (29) நாவலடி ஒழுங்கையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிபவானந்தராஜா, க,இளங்குமரன், வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தன், வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் யாழ். மாவட்ட செயலர், வலிகாமம் வடக்கு பிரதேச செயலர், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். அதேவேளை, இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்படாமல் உள்ள காணிகள், ஆலயங்கள், பாடசாலை காணி தொடர்பிலும் அமைச்சரிடம் அப்பகுத…
-
- 0 replies
- 86 views
- 1 follower
-
-
30 JUN, 2025 | 11:51 AM யாழ். செம்மணி மனிதப் புதைகுழியை சரியான முறையில் ஆய்வு செய்தாலே பல விடயங்கள் அம்பலமாகும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். சமகால நிலைமைகள் தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாவது: இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் மனிதப் புதைகுழிகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. உண்மை கண்டறியப்பட வேண்டுமானால், இந்த மனிதப் புதைகுழிகளை சரியான முறையில் ஆய்வு செய்தாலே பல விடயங்கள் அம்பலமாகும். அதனால்தான் ‘அணையா விளக்கு' போராட்டம் அறிவிக்கப்பட, உடனேயே அதற்கு ஆதரவு தெரிவித்து எமது கட்சியினரும…
-
-
- 5 replies
- 314 views
- 2 followers
-
-
30 JUN, 2025 | 09:52 AM குறி சொல்லும் கோவில் ஒன்றுக்கு பிணி தீர்க்க சென்ற குடும்பஸ்தர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (29) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், அராலி மேற்கு, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குடும்பஸ்தர் உடல் சுகயீனமற்று காணப்பட்ட நிலையில் அராலி மத்தியில் உள்ள குறி சொல்லும் கோவிலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அங்கிருந்த சாமியார் அவரது பிணியை போக்குவதாக கூறி இளநீர் ஒன்றினை வழங்கியுள்ளார். அந்த இளநீரை குடித்த சிறிது நேரத்தில் குறித்த குடும்பஸ்தர் மயக்கி விழுந்துள்ளார். அதன் பின்னர் அவசர நோயாளர் காவு வண்டி வரவழைக்கப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. இதே…
-
- 1 reply
- 311 views
- 1 follower
-
-
30 JUN, 2025 | 11:22 AM தேசியமக்கள்சக்தி அரசாங்கம் தான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ளதை மறைப்பதற்காக அந்த விடயத்திலிருந்து கவனத்தை திசைதிருப்புவதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றச்சாட்டுகளை உருவாக்கிவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் தனது குடும்பத்தவர்கள் கைதுசெய்யப்படுவதை தடுப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி பௌத்தபீடாதிபதிகளின் உதவியை நாடியுள்ளார் என வெளியான தகவல்களை நிராகரித்துள்ளார். இந்த தகவலை முற்றிலும் பொய்யானது என மறுத்துள்ள நாமல் ராஜபக்ச கௌரவத்திற்குரிய மதத்தலைவர்களை அரசியலிற்குள் இழுக்கும் அவமானகரமான முயற்சி இது என தெரிவித்துள்ளார். தனது பதவிக்காலத்தின் முதலாவது ஆண்டில் , தான் வ…
-
-
- 2 replies
- 206 views
- 1 follower
-
-
வெலிஓயா, பெரும்பான்மை இனத்தவர்களுக்கு இறங்குதுறை வழங்கமுடியாது – ரவிகரன் நா.உ. வலியுறுத்தல் June 30, 2025 வெலிஓயா பகுதியில் அத்துமீறி குடியேறியு ள்ள பெரும்பான்மை இனத்தவர் களுக்கு முல்லைத்தீவு கடற்கரைப் பகுதிகளில் கடற்றொழில் மேற்கொள்ள இறங்குதுறை வழங்கமுடி யாதென நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள் ளார். அதேவேளை கடந்த 1984ஆம் ஆண்டு காலப்பகுதியில் அபகரித்த தமிழ் மக்களின் காணி களை, மீளவும் தமிழ் மக்களி டம் ஒப்படைத்துவிட்டு பெரும்பா ன்மை இனத் தவர்கள் அங்கிருந்து வெளியேறவேண்டுமெனவும் எச் சரித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் 25.06.2025 அன்று இடம் பெற்ற முல்லைத்தீவு மாவட்ட கடற் றொழில் அபிரிவிருத்திக்குழுக் கூட்டத்திலேயே இவ்வாறு தெரி வித்துள்ளார்.குறித்த க…
-
- 0 replies
- 99 views
-
-
ஆசியாவின் இஸ்ரேலாக இலங்கையில் வடக்கு-கிழக்கு மாகாணம் மாற்றமடையும் ; பௌத்த மதம் பாதுகாக்கப்படமாட்டாது - மெதகொட அபேதிஸ்ஸ தேரர் Published By: VISHNU 30 JUN, 2025 | 01:49 AM (இராஜதுரை ஹஷான்) இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்கும் பல செயற்பாடுகள் இரகசியமான முறையில் முன்னெடுக்கப்படுவதை அறிய முடிகிறது. இவ்வாறு இடம்பெற்றால் ஆசியாவின் இஸ்ரேலாக இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் மாற்றமடையும் அதன் பின்னர் இலங்கைக்குள் எல்லையை பாதுகாக்க வேண்டிய போராட்டம் தலைதூக்கும் என தேசிய பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான அமைப்பின் தலைவர் மெதகொட அபேதிஸ்ஸ தேரர் தெரிவித்தார். சுற்றுலாத்துறை அபிவிருத்தி செய்வதற்காக இலங்கையில் 21 ராமர் கோயில்களை நிர்மாணிப்பதாக இந்தியா குறிப்பிடுக…
-
- 2 replies
- 176 views
-
-
அடாத்தாக காணிகளை பறித்தே கீரிமலை ஜனாதிபதி மாளிகை! ஒப்புக்கொள்கின்றார் அமைச்சர் கீரிமலையிலுள்ள ஜனாதிபதி மாளிகை பொதுமக்களின் இடங்களைக் கைப்பற்றிச் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளது என்று வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- அந்த இடத்துக்கு 8 பேர் உரிமை கோரியுள்ளனர். அதனால் அந்த மாளிகையை முதலீட்டாளர்களுக்கு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினையை முழுமையாகத் தீர்த்த பின்னரே மாளிகையை முதலீட்டாளர்களுக்கு வழங்கமுடியும். காணி உரிமையாளர்களுக்கு நட்டஈடு வழங்கிப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவதா? அல்லது வேறு வழிகளில் தீர்ப்பதா? என்பது தொடர்பாக ஆலோசித்து வருகின்றோம். பிரச்சினையை…
-
- 0 replies
- 101 views
-
-
செம்மணியில் இதுவரையில் 33 என்புத் தொகுதிகள்! புத்தகப்பை, ஆடை, வளையலுடன் சிறுகுழந்தையின் என்பு நேற்று அடையாளம் செம்மணி - சித்துப்பாத்தி இந்துமயானத்தில் இனங்காணப்பட்ட மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், நேற்றும் மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. என்புத் தொகுதி ஒன்றுக்கு அருகில் ஆடை, சிறிய வளையல்கள், ஆங்கில எழுத்துகள் பொறிக்கப்பட்ட துணியிலான புத்தகப்பை ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளன. அகழ்வுப் பணிகளில் தற்போது வரை 33 மனித என்புத் தொகுதிகள் இனங்காணப்பட்டுள்ளன. செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் இனங்காணபட்ட மனிதப் புதைகுழியில் நேற்று இரண்டாம் கட்ட அகழ்வு நடவடிக்கைகளின் நான்காம் நாள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. ஆடை,…
-
- 0 replies
- 88 views
-
-
பிள்ளையானை விடுதலை செய்ய கோரி கிழக்கில் கையெழுத்து போராட்டம்! பயங்கரவாத தடை சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி மட்டக்களப்பு வாழைச்சேனையில் கையெழுத்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் ரவிந்திரநாத்தின் கடத்தல் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் குற்றபுலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சரின் விசாரணையை துரிதப்படுத்துமாறும் அவரை விடுதலைசெய்யுமாறு வலியுறுத்தியும் பேத்தாழை பிரதான வீதியில நேற்று (28) கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஐனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசெல்லும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள…
-
-
- 1 reply
- 210 views
- 1 follower
-
-
Published By: VISHNU 29 JUN, 2025 | 06:19 PM (இராஜதுரை ஹஷான்) தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கலாநிதி ஹர்ஷன சூரியபெரும நிதியமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமை தவறானதொரு எடுத்துக்காட்டு.அரச நிர்வாக சேவையிலும், இலங்கை மத்திய வங்கியிலும் இந்த பதவிக்கு தகுதியற்றவர்கள் எவரும் இல்லையா, மஹிந்த மற்றும் கோட்டாவை போன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் நிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கு அரசியல் நியமனங்களை வழங்கியுள்ளார் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, கலாநிதி ஹர்ஷன…
-
- 0 replies
- 94 views
- 1 follower
-
-
நாட்டில், போதைக்கு அடிமையானவர்களின் மறுவாழ்வுக்காக மூன்று புதிய மையங்களை நிறுவ ஆபத்தான மருந்துகளுக்கான தேசிய கட்டுப்பாட்டு சபை முடிவு செய்துள்ளது. புதிய மையங்கள் இதன்படி, மாத்தறை, குருநாகல் மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் புதிய மையங்கள் அமைக்கப்படும் என்று சபையின் பணிப்பாளர் சுஜித் கொத்தலாவல தெரிவித்தார். நாட்டில் 'ஐஸ்' போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். நாடு முழுவதும் கணக்கெடுப்பு இந்த நிலையில் போதைகளுக்கு அடிமையானவர்களை அடையாளம் காண நாடு முழுவதும் கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்படும். அதேநேரம் இளைஞர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகாமல், தடுக்க விழிப்புணர்வு திட்டங்களும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.…
-
- 0 replies
- 81 views
- 1 follower
-
-
Northern Uni இன் துணைவேந்தராக, இலங்கையின் புகழ்பூத்த உயிர் வேதியல் துறை பேராசிரியரும், கல்வியலாளருமாகிய வசந்தி அரசரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார். வசந்தி அரசரத்தினம், Northern Uni இன் துணைவேந்தராக நாளையதினம்(30.06.2025)முதல் பணியேற்கவுள்ளார். Northern Uni சமூகம் மற்றும் அதன் தலைவர், துணைவேந்தராக வசந்தி அரசரத்தினம் நியமிக்கப்பட்டமை குறித்து தமது மகிழ்ச்சியை அறிக்கை ஒன்றின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளனர். சிறந்த கல்வியாளர் அந்த அறிக்கையில், ''இலங்கையின் உயர் கல்வித்துறையில் ஒரு சிறந்த கல்வியாளரும் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவருமான பேராசிரியர் வசந்தி அரசரத்தினம் அவர்கள் கல்விசார் சிறப்பு, அளப்பரிய நிர்வாகத்திறமை மற்றும் கல்வி மேம்பாட்டிற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகிய தகைமை…
-
-
- 3 replies
- 362 views
- 1 follower
-
-
Published By: VISHNU 29 JUN, 2025 | 08:25 PM உலக வங்கியால் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகளின் தொடர் நடவடிக்கைக்காக இணைப்புக்குழுவொன்று 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடலில் முன்மொழியப்பட்டுள்ளது. உலக வங்கியின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி தலைமையிலான குழுவினருக்கும், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, சுனில் ஹந்துன்நெத்தி, இ.சந்திரசேகரன், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.சிறீபவானந்தராஜா, ஜெ.ரஜீவன், க.திலகநாதன், ம.ஜெகதீஸ்வரன், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கின் 5 மாவட்டங்களினதும் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினருக்கும் இடையிலான கலந்து…
-
- 1 reply
- 199 views
- 1 follower
-
-
Published By: VISHNU 29 JUN, 2025 | 08:38 PM யாழில் 5 மாதங்களாக ஊசி மூலமாக போதைப்பொருளை உடலில் செலுத்தி வந்த குடும்பஸ்தர் ஒருவர் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியைச் சேர்ந்த சக்திவேல் நிதுசன் (வயது 28) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் 5 மாதங்களாக ஊசி மூலமாக போதைவஸ்தை உடலினுள் செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 27ஆம் திகதி இவருக்கு உடல் சுகயீனம் ஏற்பட்டதால் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நேற்றையதினம் (28) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் உயிரிழந்துள்ள…
-
- 0 replies
- 129 views
- 1 follower
-
-
உள்ளகப்பொறிமுறையில் முன்னேற்றம் இல்லை என்ற உண்மை உயர்ஸ்தானிகர் வோல்கரின் அறிக்கையில் உள்வாங்கப்படவேண்டும் - தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தல் 28 JUN, 2025 | 06:52 PM (நா.தனுஜா) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் பொறுப்புக்கூறல் நிலைவரம் குறித்து உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் வெளியிடவிருக்கும் அறிக்கை மிகக் காத்திரமானதாக அமையவேண்டும் என வலியுறுத்தியுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், அவ்வறிக்கையில் உள்ளகப்பொறிமுறைகள் ஊடாக எவ்வித முன்னேற்றமும் அடையப்படவில்லை என்ற விடயமும், ஆகையினால் அதில் சர்வதேசத்தின் பங்கேற்பு அவசியம் என்ற வலியுறுத்தலும் உள்வாங்கப்படவேண்டும் என்றும் தெர…
-
-
- 1 reply
- 129 views
- 1 follower
-
-
22பில்லியன் ரூபாய் பெறுமதியுடைய போதைப்பொருட்கள் பறிமுதல்! கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நெடுநாள் மீன்பிடி படகுகள் மூலம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 1,758 கிலோ கிராம் ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தால் 4 சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு இந்த போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் 25 சந்தேக நபர்களையும் பணியகம் கைது செய்துள்ளது. 2025 ஆம் ஆண்டு இதுவரையிலான காலப்பகுதி வரையில் கடல் வழியாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட போதைப்பொருளின் அளவு மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப் பிரிவு இதனைக் குறி…
-
-
- 3 replies
- 151 views
- 1 follower
-