நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
சூப்பரான செட்டிநாடு காடை பிரியாணி காடையில் வறுவல், குழம்பு, தொக்கு செய்து இருப்பீங்க. இன்று காடையை வைத்து செட்டிநாடு ஸ்டைலில் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : காடை - 4 சீரகச் சம்பா அரிசி - 750 கிராம் வெங்காயம் - 150 கிராம் தக்காளி - 100 கிராம் பச்சை மிளகாய் - 5 புதினா இலை - 50 கிராம் கொத்தமல்லித்தழை - 50 கிராம் மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் -…
-
- 0 replies
- 1k views
-
-
வழக்கமாக புட்டு அவிக்கும் போது மனைவி புட்டை இறக்க முதல் ஏதாவது ஒரு ஒரு கீரை வகையை அதன் மேல் போட்டுவிட்டுத்தான் இறக்குவார் .அதில் வெந்தயகீரையும் அடங்கும் . நேற்று குத்தரிசி சோறு சமைக்கும் போது அதற்குள்ளும் போட்டு பார்ப்பம் என்று நினைத்துவிட்டு பிறகு வேண்டாம் என்று தனியாக ஒரு வறையாக ஆக்கிவிட்டோம் . ஒருபிடி வெந்தயகீரை பாதிவெங்காயம் இரண்டு செத்த மிளகாய் ஒரு தக்காளிபழம் . நல்லெண்ணையில் வெங்காயம்,செத்தமிளகாய்,பெருஞ்சீரகம் ,கடுகு போன்றவற்றை போட்டு வதிக்கி விட்டு வதங்கிவர மிக சிறு துண்டுகளாக வெட்டிய தக்காளியை அதற்குள் போடவும் .அதுவும் சற்று வதங்கிவர வெந்தயகீரையை போட்டு பிரட்டிவிட்டு உடனே இறக்கவும் .ஒரு செக்கனில் வெந்தயகீரை வதங்கிவிடும் . வறைமாதிரி இருக்காது ஒரு தக்காளி …
-
- 0 replies
- 773 views
-
-
தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 250 கிராம் எண்ணெய் - 4 தேக்கரண்டி கடுகு, உளுத்தம்பருப்பு - சிறிதளவு தேங்காய் - 2 சில் தக்காளி - 100 கிராம் வெங்காயம் - 6 பச்சை மிளகாய் - 2 பூண்டு - 10 புளி - தேவைக்கேற்ப உப்பு - தேவைக்கேற்ப செய்முறை: கால் கிலோ கத்தரிக்காயை நீளமாக வெட்டி வைக்கவும். குக்கரில் 4 கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, போட்டு சிவந்ததும் வெட்டிய வெங்காயம், கீறிய மிளகாய், உரித்த பூண்டு, கறிவேப்பிலை, தக்காளி போட்டு வதக்கவும். கத்தரிக்காயை கழுவிப் போட்டு அரைத்த மசால், உப்பு, மஞ்சள் போட்டு சிறிது நேரம் தண்ணீரில் வேகவைத்து தேக்காய் சில்லை அரைத்து பால் எடுத்து ஊற்றி குக்கரை மூ…
-
- 0 replies
- 805 views
-
-
ஆட்டு மூளை ஃப்ரை தேவையானவை: ஆட்டு மூளை - ஒன்று கடலை மாவு (அ) மைதா மாவு - 2 டேபிள்ஸ்பூன் சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன் சீரகத்தூள் - அரை டீஸ்பூன் சோம்புத்தூள் - அரை டீஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன் (அல்லது) வினிகர் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு கறிவேப்பிலை - சிறிதளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: ஆட்டு மூளையை நன்கு கழுவி சிறு துண்டங்களாக்கிக் கொள்ளவும். கடலை மாவு, சோள மாவு, இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், மஞ்சள்தூள், எலுமிச்சைச் சாறு, கரம் மசாலாத்தூள், உப்பு அனைத்த…
-
- 0 replies
- 706 views
-
-
சூடான சுவையான சில்லி கார்லிக் சிக்கன் விங்ஸ்! #WeekendRecipe வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான 'சில்லி கார்லிக் சிக்கன் விங்ஸ்' அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி. தேவையானவை: சிக்கன் விங்ஸ் - 8 பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய் விழுது - ஒன்றரை டீஸ்பூன் (விதை நீக்கிய வரமிளகாயை சுடுநீரில் 5 நிமிடம் ஊற வைத்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்) சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன் வினிகர் - …
-
- 0 replies
- 445 views
-
-
பொடேட்டோ ஆம்லெட்! இப்படி காலை உணவை பற்றி கவலைப்படாமல் எஸ்கேப்பாகும் மக்களின் நலனுக்காக எளிமையான பொடேட்டோ ஆம்லெட்டை பிரேக் பாஸ்ட்டுக்கு செய்து பாருங்கள். நேரமாகிறது என்று சொல்பவர் கூட, நிதானமாக சாப்பிட்டு செல்வார்கள். தேவையானவை உருளைக்கிழங்கு – 1 முட்டை – 3 கொத்தமல்லி – சிறிது மஞ்சள் தூள் – சிறிது பச்சை மிளகாய் – தேவைகேற்ப உப்பு/ எண்ணெய் – தேவைகேற்ப செய்முறை முட்டையை நன்றாக அடித்துக்கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் நன்றாக அடித்த முட்டை, நறுக்கிய கொத்தமல்லி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கலக்குங்கள். உருளைக்கிழங்கை சிரிது நேரம் தண்ணீரில் சிறிது உப்புடன் ஊறவைத்து பிறகு அதை துருவி நீரில் வேக வைத்தப்பிறகு, அதை முட்டை…
-
- 0 replies
- 631 views
-
-
-
இந்திய உணவுகளில் பருப்புக்கள் மிகவும் இன்றியமையாதது. அதுமட்டுமின்றி, பருப்புக்களில் உடலுக்கு வேண்டிய பல சத்துக்களானது நிறைந்துள்ளது. பொதுவாக பருப்புக்களில், துவரம் பருப்பு கொண்டு தான் சாம்பார் செய்வோம். ஆனால் எப்போதும் அந்த பருப்பைக் கொண்டே சமைத்து சாப்பிட்டால், போர் அடித்துவிடும். எனவே அவ்வப்போது, வேறு சில பருப்புக்களையும் சமைத்து சாப்பிட வேண்டும். அந்த வகையில், இப்போது மைசூர் பருப்பைக் கொண்டு எளிமையான முறையில், விருப்பமான சில காய்கறிகளை சேர்த்து எப்படி சுவையான சாம்பார் செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: மைசூர் பருப்பு - 1 கப் வெங்காயம் - 1 (நறுக்கியது) காலிஃப்ளவர் - 1 (சிறியது மற்றும் நறுக்கியது) உருளைக்கிழங்கு - 2 (நறுக்கியது) முருங்கைக் காய் …
-
- 0 replies
- 744 views
-
-
கொங்கு நாட்டு கோழி குழம்பு நம் தமிழ்நாட்டிலேயே பலவாறு கோழி குழம்பை சமைப்பார்கள். அதில் செட்டிநாடு ஸ்டைல் போன்று கொங்கு நாட்டு ஸ்டைலும் ஒன்று. இந்த கொங்கு நாட்டு கோழி குழம்பானது நன்கு காரசாரமாக சாதம், இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். தேவையான பொருட்கள்: சிக்கன் - 1/2 கிலோ வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) தக்காளி - 2 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது கொத்தமல்லி - சிறிது உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் வதக்கி அரைப்பதற்கு... சின்ன வெங்காயம் - 5-6 மிளகாய் - 6-7 மிளகு - 1 டீஸ்பூன் சோம்பு - 1/2 டீஸ்பூன் கசகசா - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் துருவிய தேங்காய் - 1 டேபிள் …
-
- 0 replies
- 679 views
-
-
தமிழகத்தின் பாரம்பரிய உணவான இட்லி, சாம்பார் தான் அதிக சத்துக்கள் நிறைந்த காலை உணவு என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற பெரு நகரங்களில் சாப்பிடப்படும் காலை உணவுடன் ஒப்பிடுகையில் சென்னையின் இட்லி, சாம்பார் தான் அதிக சத்துக்கள் நிறைந்தது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய காலைநேர உணவு பழக்கம் குறித்து மும்பை, டில்லி, கோல்கட்டா, சென்னை ஆகிய 4 பெருநகரங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. 8 முதல் 40 வயது வரையிலான சுமார் 3600 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டு, அவர்களின் உடலில் நிறைந்துள்ள சத்துக்களின் அளவு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கார்போஹைட்ரோட், ஆற்றல், புரோட்டீன், கொழுப்புக்கள், கால்சியம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.சமீப காலமா…
-
- 0 replies
- 479 views
-
-
குளிர்காலத்தில் எப்போதும் நன்கு காரசாரமாக சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அப்படி காரசாரமாக சாப்பிட அசைவ உணவுகளைத் தான் பெரும்பாலானோர் விரும்புவார்கள். உங்களுக்கு சிக்கன் பிடிக்குமெனில், பச்சை மிளகாய் கொண்டு செய்யப்படும் ரெசிபியை செய்து சாப்பிட்டுப் பாருங்கள். இது முற்றிலும் பச்சை மிளகாய் கொண்டு செய்வதால், இதன் சுவை வித்தியாசமாக இருக்கும். சரி, இப்போது பச்சை மிளகாய் கொண்டு செய்யப்படும் க்ரீன் சில்லி சிக்கன் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: சிக்கன் - 1 கிலோ பச்சை மிளகாய் - 1 கப் (சிறியது) வெங்காயம் - 2 (நறுக்கியது) பூண்டு - 10 பற்கள் இஞ்சி - 1 துண்டு கொத்தமல்லி - 1/2 கப் (நறுக்கியது) உப்பு - தேவையான அளவு மஞ்சள் தூள் - 1…
-
- 0 replies
- 532 views
-
-
தேவையான பொருட்கள் : கூந்தள் மீன் - ஒரு கிலோ வெங்காயம் - 4 பச்சை மிளகாய் - 8 ( பொடியாக நறுக்கியது ) இஞ்சி, பூண்டு விழுது - 3 தேக்கரண்டி தக்காளி - 2 கறிவேப்பிலை - 2 கொத்து பொடித்த சோம்பு - அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி கரம்மசாலா தூள் 1 மேஜைக்கரண்டி கொத்தமல்லி தூள் 1 மேஜைக்கரண்டி மிளகாய் தூள் - 4 மேஜைக்கரண்டி உப்பு - தேவையான அளவு செய்முறை: 1.முதலில் கூந்தள் மீனில் உப்பு கலந்து வைக்கவும். அப்பொழுதுதான் தோல் எளிதாக உரிந்து வரும். பிறகு தோலை லேசாக இழுத்தால் அப்படியே உரிந்து வரும். 2.மேலுள்ள பகுதியை தோல் நீக்கி அப்படியே எடுக்கலாம். உள்ளில் இருந்து வரும் பகுதியி…
-
- 0 replies
- 587 views
-
-
-
- 0 replies
- 652 views
-
-
யூடியூபில் தன் சமையலால் கலக்கும் நிஷா மதுலிகா! ஆசியாவில் அதிகம் பார்க்கப்படும் ஐந்து வீடியோக்களில் ஒன்று, நிஷா மதுலிகாவின் சமையல் குறிப்பு பற்றிய வீடியோ. பல மில்லியன் பார்வையாளர்கள் இதுவரை இவரது சமையல் வீடியோக்களைப் பார்த்திருக்கிறார்கள். பல லட்சக்கணக்கானவர்கள் சந்தா செலுத்தி இவர் தரும் சமையல் குறிப்புகளை பார்த்துவருகிறார்கள். நிஷாவின் சிறப்பு... பூண்டு மற்றும் வெங்காயம் சேர்க்காத சைவ உணவு ரெசிப்பிக்களை மட்டுமே பதிவிடுவது! டெல்லிக்கு அருகில் உள்ள நொய்டாவில் வசிக்கிறார் நிஷா. ‘’என் கணவரின் தொழிலில் அவருக்கு உதவியாக இருந்தேன். அதிலிருந்து ஓய்வு பெற்ற பின், 2007-ம் ஆண்டில் ஒரு பிளாக் ஆரம்பித்து, நான் சிறப்பாகச் செய்வதாக நினைத்த சில சமையல்களின் செய்…
-
- 0 replies
- 795 views
-
-
அவல் போண்டா செய்ய தெரிந்து கொள்வோம்... தேவையான பொருட்கள் : தட்டை அவல் - ஒரு கப் உருளைக்கிழங்கு - ஒன்று வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 3 கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு கரம்மசாலா தூள் - அரை ஸ்பூன் தயிர் - 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் - 200 கிராம் உப்பு, சீரகம், பெருங்காயத்தூள் - தேவையான அளவு செய்முறை: * உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும். அவலை 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்த பின் தண்ணீர் இல்லாமல் பிழிந்து வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொ…
-
- 0 replies
- 684 views
-
-
கடுகு-வெந்தயம்-பூண்டு குழம்பு என்னென்ன தேவை? கடுகு - 2 டீஸ்பூன், பூண்டு - 20 பல், வெந்தயம் - 2 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - கால் டீஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு, வெங்காயம் - 2, தக்காளி - 1, மிளகாய் தூள் - தேவைக்கேற்ப, மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, கறி வேப்பிலை - சிறிது, எண்ணெய் - சிறிது. எப்படிச் செய்வது? ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் வெந்தயம் இரண்டையும் எண்ணெய் இல்லாமல் வெறும் கடாயில் வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். மறுபடி கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, மீதி கடுகு, வெந்தயம், உளுத்தம் பருப்பு தாளிக்கவும். பூண்டு சேர்த்து வதக்கவும். நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து…
-
- 0 replies
- 1k views
-
-
அருமையான சைடிஷ் காடை பெப்பர் மசாலா சப்பாத்தி, நாண், புலாவ், சாத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த காடை பெப்பர் மசாலா. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : காடை - 4 பெரிய வெங்காயம் - 2 தயிர் - அரை கப் கொத்தமல்லி - 2 கொத்து புதினா - ஒரு கொத்து மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் மிளகுத் தூள் - 2 டீஸ்பூன் கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன் மிளகாய் தூள் - 2டீஸ்பூன் மல்லித் தூள் - 1 டீஸ்பூன் எ…
-
- 0 replies
- 739 views
-
-
-
-
- 0 replies
- 454 views
-
-
ஜீரண சக்தியை அதிகரிக்கும் ஜிஞ்சர் சிக்கன்! #WeekEndRecipe வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து ரோகினி சிக்கன் சுவைக்க, அசத்தலான ஜிஞ்சர் சிக்கன் அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைப் பேராசிரியர் கெளசிக். தேவையானவை: சிக்கன் - அரை கிலோ பெரிய வெங்காயம் - 100 கிராம் இஞ்சி - 50 கிராம் தக்காளி - 100 கிராம் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் மல்லித்தூள்(தனியாத்தூள்) - 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன் புளித்த தயிர் - 5…
-
- 0 replies
- 500 views
-
-
வெந்தயக்கீரை பிரியாணி தேவையானவை: பாசுமதி அரிசி - 2 கப், வெந்தயக்கீரை - 2 கட்டு, பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 4, தேங்காய்ப்பால் - ஒரு கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப. அரைக்க: இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 4 பல், சீரகம் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, தனியா - ஒரு டீஸ்பூன், கரம் மசாலா - அரை டீஸ்பூன். தாளிக்க: பட்டை - ஒரு துண்டு, நெய் - 4 டேபிள்ஸ்பூன். செய்முறை: அரிசியைக் கழுவி அரை மணி நேரம் ஊற வைத்தபின், வேகவைத்து முக்கால் பதமாக வெந்ததும் எடுத்து வைக்கவும். வெந்தயக்கீரையின் இலைகளை மட்டும் நன்கு ஆய்ந்து சுத்தம் செய்து வைக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும். நெ…
-
- 0 replies
- 601 views
-
-
Roasted Chicken And Rainbow Veggies FULL RECIPE: http://bzfd.it/2bPSdT9
-
- 0 replies
- 971 views
-
-
-
லக்னோ தெருவோர உணவகங்களில் சாப்பாட்டு அசுரன்
-
- 0 replies
- 587 views
-
-
சுவையான பாவ் பாஜி!! பாவ் பாஜி வட இந்தியாவில் மிகவும் பிரபலமானது. இது உடலுக்கு மிகவும் சிறந்தது, ஏனெனில் இதற்கு செய்யப்படும் மசாலாவில் நமக்கு வேண்டிய எந்த காய்கறிகளையும் வைத்து செய்யலாம். மேலும் காய்கறிகள் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு இந்த மாதிரி செய்து கொடுத்து, அவர்களை சாப்பிட வைக்கலாம். அந்த பாவ் பாஜியை எப்படி செய்வதென்று பார்க்கலாமா!!! தேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு - 3 கேரட் - ஒரு கப் பீன்ஸ் - ஒரு கப் பச்சைபட்டாணி - 1/2 கப் காலிஃப்ளவர் - ஒரு கப் வெங்காயம் - ஒன்று தக்காளி - இரண்டு இஞ்சிபூண்டு விழுது - 1 1/2 ஸ்பூன் மிளகாய்தூள் - ஒரு ஸ்பூன் தனியாத்தூள் - ஒரு ஸ்பூன் மஞ்சள்தூள் - அரை ஸ்பூன் சீரகத்தூள் - அரை ஸ்பூன் கரம்மசா…
-
- 0 replies
- 730 views
-