நிகழ்தல் அறிதல்
நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்
நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.
633 topics in this forum
-
அனைத்துலக திருக்குறள் மாநாடு இம்முறை அவுஸ்ரேலியாவில்! அனைத்துலக திருக்குறள் மாநாடு இம்முறை அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ளது. தமிழ் வளர்ச்சி மன்றத்தின் ஏற்பாட்டில் சிட்னி பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் 31ஆம் திகதி இந்த மாநாடு நடைபெறவுள்ளது. ‘அமைதிக்கும் நல்லிணக்கத்திற்குமான இலக்கியங்கள், திருக்குறள் அனைத்துல இலக்கியம்’ என்ற தொனிப்பொருளில் இம்முறை அனைத்துலக திருக்குறள் மாநாடு நடைபெறவுள்ளது. திருக்குறள் பொதுமறையாக யுனஸ்கோவினால் அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அழுத்தமாக முன்வைக்கும் பொருட்டு முன்னெடுக்கப்பட்டு வரும், நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த மாநாடு கடந்த வருடம் இங்கிலாந்திலுள்ள லிபர்பூலின் ஐந்து இடங்கள…
-
- 0 replies
- 607 views
-
-
யேர்மனிலிருந்து வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்படவுள்ள தமிழ் இளைஞர்களைக் காப்பாற்ற போராடுவோம் – போராட்ட ஒழுங்கமைப்பாளர்கள் 101 Views யேர்மனியிலிருந்து தமிழ் இளைஞர்கள் வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்பட இருப்பதைத் தடுக்கும் வகையில் IMRV – பிறேமன் மனித உரிமைகள் அமைப்பு, Voice – உலகத்தமிழர் உரிமைக்குரல் அமைப்பு ஆகியோர் மனித உரிமை ஆர்வலர்களின் அனுசரணையுடன் Pforzheim நகரில் போராட்டமொன்றை ஒழுங்கு செய்துள்ளனர். போராட்டம் நாளை திங்கட்கிழமையிலிருந்து புதன்கிழமை வரை, பகல் இரவு தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடைபெறும். பகுதிநேர ஒத்துழைப்பாக அனைத்துத்தமிழ் மக்களும் பங்குகொள்ள வேண்டுகிறோம். இது ஓர் முக்கியமான முன்னெடுப்பு. சட்ட அளவிலும் பாராளு…
-
- 0 replies
- 376 views
-
-
கருணா வின்சென்ட் :- ஈழத்து ஓவிய மரபின் தொடர்ச்சி. – எஸ் எம் வரதராஜன் -நியூசீலாந்து கனடாவில் தை 14 ,15 இல் இடம்பெறும் அவரது கண்காட்சியை முன்னிட்டு வெளிவரும் கட்டுரை இது. கலைகளில் அவள் ஓவியம் என்பது பிரபலமான திரைப்படப் பாடல் வரி. ஓவியக் கலைக்கு கவிஞர் கண்ணதாசன் கொடுத்த சிறப்பு அது. மனிதக் கண்கள் பார்க்கத் தொடங்கும்போதே ஓவியமும் இணைந்து விடுகிறது. அவள்தான் எனக்கு முதல் ஓவியம் என்பதுதான் கவிஞரின் கற்பனையாக இருக்கலாம். பொதுவாகவே கலைகளுக்கு இதுதானென்று ஒரு வரலாற்றைத் தீர்மானிக்க முடியாது. மனித சமூகத்தின் ஆரம்பகால வளர்ச்சியோடு அவை ஒவ்வொரு கட்டடத்தில் ஒவ்வொரு ரூபத்தில் இணைந்திருக்கின்றன. கூத்து, இசை, நாடகம் …
-
- 0 replies
- 2k views
-
-
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின்... “ குமார வாசல்” கோபுர, கலாசாபிசேகம்! வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வட திசையில் குபேர வாயில் கோபுரத்திற்கு உட்புறமாக புதிதாக நிர்மானிக்கப்பட்ட “குபேர திக்கு, குமார வாசல்” கோபுர கலாசாபிசேகம் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. ஆலயத்தின் வருடாந்திர மகோற்சவ திருவிழாக்கள் நடைபெற்று வரும் நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கார்த்திகை உற்சவமாகும். காலை, இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து ஆறுமுக பெருமான் பக்தர்கள் மத்தியில் எழுந்தருளி அருட்காட்சி அளித்தார். தொடர்ந்து கோபுர கலாசாபிசேகம் இடம்பெற்றது. அதன்போது பல நூற்றுக் கணக்காணோர் கலந்து கொண்டு ஆறுமுக பெருமானை தரிசி…
-
- 0 replies
- 285 views
-
-
மூத்த ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு November 18, 2018 யாழ்.ஊடக அமையத்தின் 6ஆம் ஆண்டு நிறைவு விழாவும், மூத்த ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இன்று ஞாயிற்றுக் கிழமை மாலை 6 மணிக்கு யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி மண்டபத்தில் நடைபெற்றது. யாழ்.ஊடக அமையத்தின் தலைவர் ஆ.சபேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் யாழில் நெருக்கடியாக சூழலில் அர்ப்பணிப்புடன் கடமையாற்றிய மூத்த ஊடகவியலாளர்களான ம.வ.கானமயில்நாதன், சண்முகராஜா யோகரட்ணம் (ராதேயன்), சின்னத்துரை தில்லைநாதன், ஆ.நா.சு.திருச்செல்வம், கந்தசாமி அரசரட்ணம், விநாயகம்பிள்ளை அற்புதானந்தன், மு.வாமதேவன், இளையதம்பி சற்குருநாதன்;, நா.யோகேந்திரநாதன் ஆகியோருக்கும் மற்றும் அமரர்களான அமரர்.சிதம்பரநாதன் திருச்செ…
-
- 0 replies
- 627 views
-
-
“தங்கம்மா என்றால் தொண்டு தங்கம்மா என்றாற் பண்பு தங்கம்மா என்றாற் சக்தி தங்கம்மா என்றாற் பக்தி தங்கம்மா என்றாற் சைவம் என்றெல்லாந் தரணி காணும் தங்கம்மா தமிழர் பெற்ற தனிப்பெருஞ் செல்வி வாழி.” என்ற கவிஞர் வி.கந்தவனம் ஐயாவின் பாடல் வரிகளை இவ்விடத்தில் நினைவு கூர்கின்றேன். ஆம் அன்னை தங்கம்மா அப்பாக்குட்டியின் நூற்றாண்டு விழா ஞாபகார்த்தமாக இக்கட்டுரையை எழுத விளைகின்றேன். அன்னை சைவசமயத்துக்கும் தமிழ்மொழிக்கும், சமுதாயத்துக்கும் அளப்பரிய பணிகளை ஆற்றி சைவத்தமிழ் மக்களின் மனங்களில் இன்றும் நீங்காத இடத்தைப் பெற்று மிளிர்கின்றார் என்றால் மிகையில்லை. அன்பு நெறியை அடிப்படையாகக் கொண்டு அவர் வாழ்ந்த வாழ்வு தமிழுக்காகவும் சைவசமயத்துக்காகவும் அம…
-
- 0 replies
- 190 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 1.3k views
-
-
-
- 0 replies
- 1.1k views
-