Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. Started by கிருபன்,

    இரை மாதவன் ஸ்ரீரங்கம் மனிதனின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பென்று என்னைக்கேட்டால் தயங்காமல் கூறுவேன் துப்பாக்கிதான் என்று. ஏனெனில் அது எவரையும் நம்காலில் விழச்செய்யும் சக்திவாய்ந்தது. அச்சத்ததின் விளிம்பில் ரத்தம்சுண்டி முகம்வெளுத்து முன்னால் உயிருக்காக மன்றாடும் ஒரு இரையினைப் பார்க்கும் பரவசம் அலாதியானது. இப்போது இவன் அப்படித்தான் கிடக்கிறான். ஆனால் இவனைப் பார்த்தால் அந்த பரவசம் தோன்றவில்லை எனக்கு. சவரம் செய்யப்படாத தாடிமீசைகள் கடந்தும் அவன் கண்களில் நங்கூரமிட்டிருக்கும் அச்சத்தை உணரமுடிகிறது என்னால். இவனுடன் பிடிபட்ட நான்குபேர்கள் தனது கண்ணுக்கு முன்பாகவே ரத்தம் சிதற இறந்துபோனதை இவன் இறுதிமூச்சுவரை மறந்துவிட முடியாது. மலங்க மலங்க விழித்தபடி குத்துக்காலிட்டு அமர்ந்திருக்…

  2. பிரபஞ்ச நூல் - ஷோபாசக்தி இந்தக் கதையைத் தனது இரகசியக் குரலைக் கலையவிடாது, தகரத்தில் மெல்லிய ஆணி முனையால் கிறுக்குவது போன்ற கூசிய தொனியில் ஏற்ற இறக்கங்களின்றி சித்திரைலிங்கம் என்முன்னே சொல்லத் தொடங்கினான். நடுநடுவே கதையை நிறுத்தி அதே இரகசியக் குரலில் என்னிடம் சந்தேகங்களும் கேட்டான். நான் 2012-ல் சித்திரைலிங்கத்தை சென்னை புத்தகச் சந்தையில் கடைசியாகப் பார்த்தது. மனைவி பிள்ளைகளுடன் ‘க்ரியா புத்தகக் கடை’க்குள் நின்றுகொண்டிருந்தான். கையில் ‘கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’ வைத்திருந்தான். என்னைக் கண்டதும் முதல் வார்த்தையாக “மச்சான் நீ இந்த அகராதியில் ஏதோ பிழை இருக்கிறது என்று எழுதியிருந்தாய். அதுதான் வாங்கிச் சரி பார்க்கப் போகிறேன்” என்றான். அன்றிரவே அவுஸ்ரேலியா திரும…

  3. கி.ரா. கதைகள் கி.ரா. கதைகள் ஒரு தலை அவளைப் பார்த்தான் அவன். …

  4. கதையாசிரியர்: பாரதிமணியன் ஆபிஸ்க்கு கிளம்ப நேரம் ஆகிவிட்டதே என்று அடிக்கடி செல்போனில் டைம் பார்த்துக்கொண்டே, அவசர அவசரமாக காலை டிபனைச் சாப்பிட்டான் அமுதன். சாப்பிட்டதும் பக்கத்தில் டைனிங் டேபிள் மேல் இருந்த டம்ளர் தண்ணீரை எடுத்து ‘மடக் மடக்’ கென்று குடித்துவிட்டு, எழுந்து வாஷ்பேசினில் கையை கழுவினான். அவனுடைய ஆபீஸ் பேக்கை எடுத்துத் தோளில் மாட்டிக்கொண்டு ஆபீஸ்க்கு கிளம்ப… மனைவி சங்கீதா அவனிடம் லஞ்ச் பாக்ஸைக் கொண்டு வந்து கொடுத்தாள். அந்த நேரம் பார்த்து, அவனுக்கு வந்த செல்போன் அழைப்பை, அவன் காதில் இருந்த ப்ளூடூத் இணைப்பில் தொடர்பு ஏற்படுத்திப் பேச ஆரம்பித்தான். சங்கீதா கொடுத்த டிபனை வாங்கி பேக்கில் வைத்துக்கொண்டு, அவளைப் பார்த்து ‘சரி, கிளம்புகிறேன்’ என்பதுபோல தலையை மட்டும்…

  5. மாதுமை - கோமகன் ராகவனின் சொந்த மண் கோண்டாவிலாக இருந்தது. அவன் அவனது மச்சாள் மகேஸ்வரியை கலியாணம் செய்து மாதுமை என்ற பெண் குழந்தைக்கும் அப்பாவாக இருந்தான் .நாட்டு நடப்புகள் அவனை சிப்பிலி ஆட்டின. ரெண்டு பக்கத்து சீருடைகளுக்கும் இடையில் அவனது உயிர் மங்காத்தா விளையாடியது .கோண்டாவில் இந்து கலவன் பாடசாலையில் அதிபராக பேராய் புகழாய் ராஜகுமாரன் போல் இருந்த ராகவன், ஒருநாள் பல தேசங்கள் கடந்து நொந்த குமாரானாய் ஓர் இலையுதிர் காலமொன்றில் பாரிஸுக்கு என்றியானான். அவனுடன் படித்த குணாவின் அறையில் எட்டுடன் ஒன்பதானான். முப்பது மீற்ரர் பரப்பளவை கொண்ட ரகுவின் அறையில் ராகவனுக்கு நிலத்திலேயே படுக்க இடம் கிடைத்தது. அந்த அறை ஒன்றும் பெரிய மாளிகை இல்லை. அந்த அறைக்குள்ளேயே குசினி இருந்தது. ஒரு…

  6. காவ்யாவின் சிவப்பு நிற ஷூக்கள் தண்டு மாரியம்மன் கோயில். ஆடி வெள்ளிக் கிழமை. பெண்கள் கூட்டம் எழுபது சதவீதமும், ஆண்கள் கூட்டம் முப்பது சதவீதமும் கோயில் முழுக்க பரவியிருந்தார்கள். கோபுர உச்சியில் இருந்த ஒலிப்பெருக்கி கந்தர் சஷ்டியைப் பாடிக் கொண்டிருக்க நான் உள்ளே நுழைந்தேன். என்னுடைய தேய்ந்து போன ஹவாய் செருப்புகளை ‘பாதணி காப்பகம்’ என்று போர்டு எழுதி தொங்க விட்டிருந்த செருப்பு ஸ்டாலில் விட்டு விட்டு தகர டோக்கனை வாங்கிக் கொண்டு உள்ளே போகத் திரும்பினேன். அப்போது தான் அது என் கண்ணில் பட்டது. குழந்தைகள் அணியும் புத்தம் புதிய சிவப்பு வண்ண ஷூக்கள். செருப்பு ஸ்டாலின் மர ஸ்டாண்டில் வைக்கப்பட்ட…

  7. மரியாதை இருப்பதிலே நல்ல சட்டையாகப் பார்த்து இஸ்திரி போட்டுக்கொண்டிருந்தேன். ‘‘என்னம்மா… கல்யாணத்துக்குக் கிளம்பலயா…?’’ வெளியே அப்பாவின் குரல் கேட்டது. வாசலில் பாத்திரம் துலக்கிக்கொண்டிருந்த சாந்தியிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. கட்டாயம் ‘இல்லை’ என்று தலையாட்டி இருப்பாள், என்று யோசிக்கும்போதே அப்பாவின் குரல் சத்தமாக ஒலித்தது. ‘‘ஏன்டா… கூட்டிட்டு போல?’’ ‘‘நா மட்டும்தான் போறேன்...” ‘‘ஏன்? அது எங்க போவுது வருது. இந்த கிராமத்திலே பிறந்து இங்கேயே வாக்கப்பட்டு கிடக்கு. அதுக்கும் ஆசை இருக்காதா? புள்ளைகளுக்கும் பராக்கா இருக்கும்...’’ ‘‘வேணாம்ப்பா. வெயில் ஜாஸ்தியா இருக்கு. ஞாயிற்றுக்கிழமை வேற… பஸ்ஸெல்லாம் கூட்டமா இருக்கும்...’’ பேசிக்கொண்டே சட்டையை மாட்டிக்கொண்டேன். பாத்தி…

  8. அண்மைக்காலச் சிறுகதைகள் இமையம் மொழி என்ற தொடர்புச் சாதனம் உருவானபோதே கதை சொல்வது என்ற செயலும் உருவாகியிருக்க வேண்டும். மனிதனால் எவ்வாறு பேசாமல் இருக்க முடியாதோ அவ்வாறே கதை சொல்லாமலும் இருக்க முடியாது. கதை சொல்லும் முறை கற்பனையை உருவாக்கிற்றா, கற்பனை என்பது கதையை உருவாக்கிற்றா, கற்பனை என்பது கதையை உருவாக்கிற்றா என்றால் இரண்டும் ஒரே சமயத்தில் உருவாகியிருக்க வேண்டும். மனித சமூகம் பல்வேறு நிலைகளைக் கடந்து படிப்படியாகப் பல வளர்ச்சிகளைப் பெற்று இன்றும் பெரும் நம்பிக்கையுடன் பூமியில் காலூன்றி நிற்பதற்குக் கற்பனையும் கதை சொல்லும் முறையும் பெரும் பங்காற்றி இருக்கின்றன. கதையில்லை என்றால் கற்பனை இல்லை. கற்பனை இல்லை என்றால் வாழ்க்கை இல்லை. வாழ்க்கைக்கு உயிர்ச்சத்தாக இருப்பது கற்…

  9. Started by Athavan CH,

    யுத்தம்- லூய்கி பிரண்ட்லோ (luigi pirandello) தமிழில் நிருத்தன் ரோமிலிருந்து இரவு நேர பெரு ரயிலில் புறப்பட்டவர்கள் இந்த பழைய ஃபாப்ரியனோ புகைவண்டி நிலையத்தில் வந்து இறங்கி, சல்மோனாவுக்கு அந்த பழங்கால இணைப்பு ரயில் பெட்டியில் விடியல்வரை – பயணத்தை தொடர காத்திருக்க வேண்டி இருந்தது. அந்த விடியலில், புகை அப்பி நெடி அடிக்கும் ஒரு இரண்டாம் வகுப்பு பெட்டியில் – ஏற்கனவே ஐந்துபேர் தங்கள் இரவை கழித்து இருந்த அந்த கம்பார்ட்மெண்டில் துக்கம் அனுஷ்டித்தபடிவந்த அந்த பருமனான பெண்மணி நிமிர்த்தி திணிக்கப்பட்டு ஒரு துணிமூட்டையைப்போல வந்து விழுந்தாள். அவளைத் தொடர்ந்து குட்டியான மெலிந்திருந்த வெறைத்து செத்த முகமும், பேயறைந்தவர்களுக்கான சுவாசமும்.. பளிச்சென மின்னும் விழிகளோடும் அவள…

    • 0 replies
    • 2.4k views
  10. அகாலத்தில் வந்து யாரோ வெளிநடைக் கதவைத் தட்டும் ஓசை கேட்டது. தோட்டத்து வீட்டின் ஆசாரத்துத் திண்ணையில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த நான் திடுக்கிட்டுக் கண்விழித்தேன். தோக்குருவிகள் ஊடுருவி முகட்டுவளையோரம் சடசடத்தபடி குறுக்கும் நெடுக்குமாகப் பறந்துகொண்டிருந்தன. மேல்விட்டத்தில் ஊர்ந்த பல்லி கணிக் கணிரென சகுனித்தது. அதற்குள் கதவு மீண்டும் தட்டப்பட்டது. நான் உள்ளுக்குள் பயந்துபோனேன். அவசரமாக எழுந்து காவி வேட்டியை இறுக்கிக் கட்டினேன். நடையை நோக்கிச் சென்றேன். ஒற்றை மாடவிளக்கு ஒளியில், சுவரில் அசைந்த என் நிழல் கூடவே வந்தது. தாழ் விலக்கிப் பார்த்தபோது வாசற்படியில் கலவரத் துடன் அப்புச்சி நின்றிருந்தார். கையில் தீப்பந்தம். ‘‘பெருமாள் போயரைப் பூச்சி தொட்டிருச்சு...’’ …

  11. முதல் மனைவி - சுஜாதா சுஜாதா கல்லூரியில் இருந்து திரும்பி வருவதற்குள் மழை பலமாகி, கடைசி பர்லாங்கில் ராஜலட்சுமி நனைந்துவிட்டாள். போதாக்குறைக்கு பஸ் ஒன்று உற்சாகமாக சகதியையும் சேற்று நீரையும் அவள் மேல் வாரி இறைத்துவிட, வீட்டு வாசலை அடையும்போது கோபம் மூக்கு நுனியில் துவங்கியிருந்தது. பால்காரன் வரவில்லை. மேனகா சாவியை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டாள். பூட்டின வீட்டுக்குள் டெலிபோன் பிடிவாதமாக ஒலித்துக்கொண்டு இருந்தது. கோபம் இப்போது அவள் பார்வையை மறைத்தது. கைகளை இறுக்க அழுத்திக்கொண்டதால், ரத்தம் செத்து மணிக்கட்டு வெளுப்பாகி இருந்தது. ராஜலட்சுமி, கோபத்தைக் குறை. கோபத்தைக் குறைத்தால்தான் பிளட் பிரஷர் விலகும். பால் வராவிட்டால் என்ன? மேனகா …

  12. அம்மா - சிறுகதை வழக்கறிஞர் சுமதி, ஓவியங்கள்: ம.செ., எனக்குக் கல்யாணம். மாப்பிள்ளை பிடித்திருக்கிறது. அப்பா எனக்காக ரொம்பப் பிரயத்தனப்பட்டு இந்த மாப்பிள்ளையைத் தேடிக் கண்டுபிடித்தார். நல்ல படிப்பு - பெரிய வேலை, பெரிய படிப்பு - நல்ல வேலை என்ற வழக்கமான தேடல் தளங்களுக்குப் போகாமல், நான், என் ரசனை, என் எதிர்பார்ப்பு; அதுபோலவே மாப்பிள்ளை, அவர் ஆசைகள், கற்பனைகள் எல்லாவற்றையும் அலசித் தேடிப்பார்த்து எங்கள் இருவரையும் அறிமுகப்படுத்தினார். நாங்கள் தீவிரமாக நம்பும் விஷயங்கள், எந்தக் காரணத்தைக்கொண்டும் விட்டுக்கொடுக்க முடியாத எங்கள் விருப்பங்கள் மற்றும் எங்கள் லட்சியங்களை ஒளிவு மறைவு இல்லாமல் பேசச் சொன்னார். நாங்கள் இருவரும் தேவைகளுக்கும் சந்தர்…

  13. அமெரிக்காவிலிருந்து வந்த மகன் ஐ.எஸ்.சிங்கர் I.S.Singar) ஆங்கிலம் வழியாக தழிழில்: சு. மகேந்திரன் ஐ.எஸ்.சிங்கர், ஜிடிஸ் மொழியில் எழுதும் அமெரிக்க எழுத்தாளர். “ஒரு எழுத்தாளர் தனது சொந்த மொழியில் எழுத வேண்டும் அல்லது எழுதவே தேவையில்லை” என்று சொன்னவர். போலந்தில் யூத அடிப்படைவாதக் குடும்பமொன்றில் 1904 ஆம் ஆண்டு பிறந்தார் சிங்கர். இளமையில் யூத மதப் பாடசாலையொன்றில் கல்வி கற்றார். ஆனால், பின்னர் கடவுளின் சக்தியைவிட, ஐதிகங்களும், ஏன்? என மறு கேள்விகள் கேட்க முடியாத வாதங்களுமே மதங்களை ஆள்கின்றன எனக் கண்டு கொண்டவர். மதச் சார்பற்ற எழுத்தாளரானார். 1926 இல் முதலாவது கதைத்தொகுதியும், விமர்சனக் கட்டுரைகளும் வெளியாகின. 1935 இல் அமெரிக்காவுக்குச் சென்றார். 1945 இல் ஆங்கிலத்தில் …

    • 0 replies
    • 867 views
  14. நிழல்கள் - ஆதவன் பிரிய வேண்டிய வேளை வந்துவிட்டது; பிரிய வேண்டிய இடம் வந்து விட்டது. அவளுடைய ஹாஸ்டல் கேட் உயரமான இரும்புக் கிராதிகளாலான கேட். அந்தக் கேட்டருகே நிற்கும்போது அவர்கள் இருவருமே எவ்வளவு சிறியவர்களாகவும் முக்கியத்துவம் இல்லாதவர் களாகவும் தோற்றமளித்தார்கள்! ஹாஸ்டல் கட்டிடத்தின் வெளிப்புறச் சுவரில் பொருத்தப் பட்டிருந்த விளக்கின் மங்கலான வெளிச்சம், கேட்டின் நிழலை வெளிப்புறச் சாலை மேல் நீளமாகப் படரவிட்டிருந்தது. எதிரெதிராக நின்றிருந்த அவர்கள் இருவருடைய நிழல்களும், அந்தக் கேட்டின் நிழலின் மேலேயே, ஒன்றின் மீது ஒன்றாகச் சாலையின் மீது படிந்திருந்தன. ''நம் நிழல்கள் ஒன்றையொன்று தழுவிக் கொண்டிருக்கின்றன'' என்றான் அவன். அவள் அவன் பார்வையின் திசையைக் கவனித்தா…

  15. ஜான்சிராணியை பின்தொடரும் காதல் காந்திமதி காற்றில் சிக்கிய பலூன் போல் வெடவெடத்தாள். உள்ளங்கைகள் பிசுபிசுத்திருந்தன. பிடி கிடைக்காமல் அந்தரத்தில் தொங்கிய கால்களின் கனம் அவளைக் கீழ் நோக்கி இழுப்பது போலிருந்தது. ‘‘காந்தி பயமா இருந்தா கண்ண மூடிக்கோ. ரொம்ப பயமா இருந்தா வாயத் தொறந்து கத்திருடி. எல்லாரும் அப்படித்தான் சத்தம் போடுவாவோ!” என்றாள் அருகில் அமர்ந்திருந்த ராதா. காந்திமதி கண்களை மூடிப் பார்த்தாள். தலை மட்டும் தனியாகச் சுழன்றது. உடனேயே கண்களை அகலத் திறந்து வைத்துக் கொண்டாள். ராட்சத ராட்டினத்தின் ஒவ்வொரு இருக்கையும் மெதுவாக நிரப்பப்பட்டுக் கொண்டிருந்தது. காந்திமதி அமர்ந்திருந்த இருக்கை உச்சிக்குச் சென்றது. அங்கிருந்து மொத்த பொருட்காட்சியும் சிறிதெனப்பட்டது. க…

  16. வீடற்றவன்... - வ.ந.கிரிதரன் - சனிக்கிழமை இரவு. நேரம் நள்ளிரவைத் தாண்டி விட்டிருந்தது. ரொரோண்டோ மாநகரின் உள்நகர்ப் பகுதியின் பொழுது போக்குப் பிரதேசமான ரிச்மண்ட் டங்கன் பிரதேசம் இன்னும் பரபரப்பாகக் காணப்பட்டுக் கொண்டிருந்தது. மூலைக்கு மூலை கிளப்புகள். ஆட்டமும் பாட்டமுமாக யுவன்கள் யுவதிகளால் நிறைந்திருந்தது. 'ஹாட் டாக்' நடைபாதை வியாபாரிகள் பம்பரமாகச் சுழன்று தமது வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். டாக்ஸிச் சாரதிகள் பிரயாணிகளை ஏற்றுவதும், காத்திருப்பதுமாகவிருந்தார்கள். சிலர் நேரத்துடனேயே வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். இன்னும் பலர் புதிதாக டாக்சிகளில் கார்களில் வந்து வந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள். தெரு மூலைகளில் இத்தனைக் களேபரத்திற்குமிடையில் …

  17. --------------------------------------------------------------------- தண்ணீர் தேசம் கவிஞர் வைரமுத்து --------------------------------------------------------------------- 1 கடல்... உலகின் முதல் அதிசயம். சத்தமிடும் ரகசியம். காலவெள்ளம் தேங்கிநிற்கும் நீலப் பள்ளம். வாசிக்கக் கிடைக்காத வரலாறுகளைத் தின்றுசெரித்து நின்றுசிரிக்கும் நிஜம். கடல்... ஒருவகையில் நம்பிக்கை. ஒருவகையில் எச்சரிக்கை. கடல்குடித்துக் கொண்டிருந்த கலைவண்ணன் மடியில்கிடந்த தமிழ்ரோஜாவை மறந்துபோனான். அவள் அழகின் நவீனம். சிறகுகளைந்து சுடிதார்கொண்ட சொப்பனதேவதை. ரத்தஓட்டம் பாயும் தங்கம் அவள் தேகம். பொறுக்கி எடுத்த உலக அழகுகளை நெருக்கித் தொடுத்த நேர்த்தியான சித்திரம். குமரி வயதுகொண்ட கு…

  18. இப்படியும் மனிதர்கள் ................ வழக்கம் போல புலம் பெயர்ந்த ஒரு பெண்ணின் கதை இது . அழகான கிராமிய மனம் கொண்ட ஒரு சிறு ஊர் ,அதில் இன்பமாக வாழ்ந்த ஒரு குடும்பத்தில் மூன்று ஆண்களிடையே ஒரு பெண் பருவ வயது அடைந்ததும் திரு மணம் எனும் பொன் விலங்கு பூட்டி வாழ்க்கை எனும் காலடி வைத்த போது ,கொண்டவனின் கோலம் ,கண்டு உறவுகள் மனங்கள் கலங்கின . ...வருடங்களும் ஓட ,இரு ஆண் பிள்ளை களின் தந்தை ஆனான் . அரபூ நாட்டில் வேலை பார்த்தவன் ,பல தில்லு முல்லுகளால் ,இடை நிறுத்த பட்டு சொந்த ஊர் வந்தான் ... குடிஉம்... குடித்தனமுமாக ..வாழும் காலத்தில் ,வேலை இன்றி இருந்தான் ..அவளது l சக உறவுகள் புலத்தில் இருந்து உதவி செய்து ..போக்கு வரத்து செய்யும் வாகனம் எடுத்து …

  19. சாபத் நாளில் மட்டும் நடேசன் ( ஆஸ்திரேலியா ) அவுஸ்திரேலியாவுக்கு குடி பெயர்ந்து வந்த பின்னர் உணவு விடுதி, தொழிற்சாலை மற்றும் பல்கலைக்கழகம் முதலான சில இடங்களில் பலரோடு பணியாற்றியிருக்கின்றேன். இந்தப் பணிகள் மிருகவைத்தியராக என்னை நான் இந்த நாட்டில் நிலை நிறுத்திக் கொள்வதற்காக இடைக்காலத்தில் மேற்கொண்டவை. இரண்டு பிள்ளைகள் கொண்ட குடும்பத்தை கவனித்தவாறு எனது துறையில் படிப்பது என்பது, கடலில் தனியாக படகைச் செலுத்தியபடி வலைவீசி மீன்பிடிப்பது போன்றது. இலங்கையில் ஐந்து பேருக்கு மேலதிகாரியாகவும் கார், மோட்டார் சைக்கிள் என வைத்திருந்து விட்டு சமையலறையில்; வேலை செய்வது இலகுவானதாக இருக்கவில்லை. சப்பாத்தி வட்டமாக போடத் தெரியவில்லை என்று ஒரு பஞ்சாபி முதலாளியிடம் ஏச்சு …

  20. வாழ்வெனும் பெருங்கனவு! - சிறுகதை லைலா எக்ஸ், ஓவியங்கள்: ஸ்யாம் 1 அந்த அமைதியான மாலைப் பொழுதில் கழிவறைக்குள் தென்னை விளக்குமாற்றால் சரசரவெனக் கூட்டிக் கழுவும் சத்தம், பள்ளியின் வராந்தா முழுவதும் ஒலித்தது. அரை மணி நேரத்துக்கும் மேலாகக் கேட்ட சத்தம், முழுவதுமாக நின்றுபோன சற்றுநேரத்தில் வெறும் பக்கெட்டை ஒரு கையிலும், பொருள்கள் நிறைந்திருந்த பக்கெட்டை மற்றொரு கையிலும் எடுத்துக்கொண்டு, பள்ளியின் கழிவறையிலிருந்து வெளியே வந்தாள் வித்யா. அந்த பக்கெட்களிலிருந்து ஒரு சொட்டு நீர்கூட, அவள் நடந்துவந்த வராந்தாவில் சிந்தவில்லை. இத்தனைக்கும் அவள் கைகளிலிருந்த அழுத்தமான பிளாஸ்ட்டிக் பக்கெட்டின் விளிம்பு பிளந்துகொண்டிருந்தது. அதில் சிறிய விரிசல் ஒன்றும் இருந்தது. அதன் …

  21. ஏ-9 வீதியில் இராணுவ வாகனங்களில் செல்லும் இந்தியப் படைகள், கிராமம் எங்கும் நடமாடிக் கொண்டிருப்பதும் அதிகாலை விடியும்போது கைது செய்யப்பட்டவர்கள் வரிசையில் அழைத்துச் செல்லபடுவதும் துப்பாக்கியுடன் வீட்டுக்கு களவாக வந்துபோகும் ஒன்றுவிட்ட அண்ணாவும் ரெலிகப்படர் வந்து தாக்கிக்கொண்டிருந்த கிளிநொச்சி நகரமும் மிகச்சிறிய வயது ஞாபகங்களாக இருக்கின்றன. போருக்குள் வறுமையும் அப்பவால் கைவிடப்பட்டு தனிமையில் இருந்து உறவுகளால் ஒதுக்கி விடப்பட்ட அம்மாவின் துயரமும் மிகவும் நேசத்திற்குரிய தங்கச்சியை வளர்க்கும் நெருக்கடியும் விளையாட்டுத் தனத்துடன் இருந்து கடைசியில் கனவிற்காக இழந்த அண்ணாவும் கிளிநொச்சியும் அகதியாய் அலைந்த பிரதேசங்களும் என்று வாழ்வு கழிந்து கொண்டிருக்கிறது. கனவின் எழுச்சி மிக…

  22. சவுக்கம் - உமா வரதராஜன் பிரான்சிஸ் என்னை அழைத்து வருமாறு ஒரு போலீஸ்காரனை அனுப்பியிருந்தார் . ”தையல் மெஷினில் ஏதாவது கோளாறா ?” என்று அவனைக் கேட்டேன் . ”அப்படி எதுவும் சொல்லவில்லை ” என வந்தவன் சொன்னான் .அவனுடைய சலனமற்ற முகத்தில் எதையும் என்னால் படித்தறிய முடியவில்லை .ஒரு வேளை மரணம் தன் கண்முன்னால் நின்று வெறிக்கூத்தாடிச் சென்ற திகைப்பிலிருந்து இப்போது வரை மீளாமல் அவன் பேதலித்துப் போயிருக்கலாம் .ஏதோ ஒரு தூணின் பின்னால் அல்லது மண்மூடைகளுக்குப் பின்னால் அல்லது பொலிஸ் நிலைய வளவினுள் நின்ற முறுக்கேறிய பெரிய மரங்களில் ஒன்றின் பின்னால் அல்லது கழிப்பறைக்குள் மறைந்து நின்று தன்னைத் தற்காத்துக் கொள்ள கண்டமேனிக்கு சுட்டுத் தள்ளியிருக்கலாம் . எல்லா ஓசைகளும் ,புழுதியும் அடங்கி…

  23. ஒரு நிமிடக் கதை- ஏக்கம் உணவு இடைவேளைக்கான மணி ரீங்காரமிட்டது. மழலையர் பள்ளிக்குள் ஸ்வேதா சாப்பாடு கூடையுடன் நுழையும்போதே வாட்ச்மேன் தடுத்தார். “ம்மா, இன்னைக்கு கரஸ்பாண்டன்ட் வந்திருக்காங்க. நீங்க உங்க குழந்தைக்கு சாப்பாடு ஊட்டி விடறதை பார்த்தாங்கன்னா பிரச்சினை ஆயிடும். ப்ளீஸ், சாப்பாட்டை எங்கிட்ட கொடுத்துட்டு போயிடுங்க!” என்று கெஞ்சினார். “என்னப்பா சொல்ற. என் மகளை இங்க சேர்த்ததில் இருந்து நான்தான் அவளுக்கு சாப்பாடு ஊட்டி விட்டுட்டுப் போறேன். அதுவுமில்லாம, ஹெச்.எம். என் கூட படிச்ச தோழி. யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க” என்று அவரை அலட்சியப்படுத்திவிட்டு உள்ளே சென்ற ஸ்வேதா தனக்காக காத்திருந்த மகளுக்கு சாப்பாடு ஊட்ட ஆ…

  24. பிரபஞ்ச கானம் – மௌனி அவன் அவ்வூர் வந்து, மூன்று வருஷம் ஆகிறது. வந்த சமயம், மேல் காற்று நாளே ஆயினும், அன்றைய தினம் உலகத்தின் வேண்டா விருந்தினன் போன்று காற்று அலுப்புறச் சலித்து ரகசியப் புக்கிடமாக, மரக்கிளைகளில் போய் ஓடுங்கியது போன்று அமர்ந்திருந்தது. அடிக்கடி அவன், தன் வாழ்க்கைப் புத்தகத்தைப் பிரித்து வெறித்துத் திகைத்து திண்ணையில் நிற்பதுண்டு. பின் புரட்டுதலில் கவலைக் கண்ணீர் படிந்து, மாசுபட்ட ஏடுகள், அவன் மனக்கண்முன் தோன்றும். முன்னே எழுதப்படாத ஏடுகளில், தன் மனப்போக்குக் கொண்டு எழுதுவதால், பளீரெனத் தோன்றுபவை சில, மங்கி மறைதல் கொள்ளுபவை சில. இரண்டுமற்று சில நேரத்தில், எதையோ நினைத்து உருகுவான். சிற்சில சமயம், இயற்கையின் விநோதமான அழகுத் தோற்றங்கள் மனதிற்குச் செல்…

  25. காலப்பயணம் காதலை வாழ வைக்குமா? - சயின்ஸ் ஃபிக்‌ஷன் சிறுகதை #LetsLove இப்போது மட்டும் வாழ்வோம்! ஒரு படைப்பு தன்னைத்தானே படைத்துக் கொள்ளுமா? ஒரு கதை தன்னைத்தானே எழுதிக் கொள்ளுமா? ஒரு நிகழ்வு தன்னைத்தானே நிகழ்த்திக் கொள்ளுமா? பிரபஞ்ச இருள் சூழ, முப்பத்து முக்கோடி கோள்கள் சுழல, காலம் மட்டும் தன்னைத்தானே கடத்திக்கொண்டிருக்கிறது! காலந்தானே கடவுள்? அந்த அறையின் ஜன்னல் அரைகுறையாக மூடப்பட்டிருந்தது. வெளியே மண்டி கிடக்கும் இருள், அந்த ஜன்னல் வழியே வெளிச்சத்தைப் போலவே அந்த அறைக்குள் பரவியதா, இல்லை அந்த இருள் அந்த அறைக்குள் முன்னரே இருந்ததா என்பதெல்லாம் அறிவியலாளர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.