Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. ஒரு மிஸ்டர் இரண்டு மிஸ் அது ஒரு பிரபல அமெரிக்கக் கம்பெனி. அந்தக் கம்பெனியின் அக்கவுண்ட்ஸ் பிரிவில் வேலை பார்த்து வந்தான் ரகு. அந்தக் கம்பெனியின் அதே அக்கவுண்ட் பிரிவில்தான் அவனுடைய அப்பாவும் வேலை பார்த்து ரிடையர் ஆனார். அவர் காலத்திலேயே இந்த எஃகு மேசை நாற்காலிகள், ஃபைலிங்க் காபினெட்டுகள் ஆகியவை வந்துவிட்டன. கால்குலேட்டிங் மெஷின்கள் வந்துவிட்டன. இன்டர்காம் வந்து விட்டது. சென்ட்ரல் ஏர் கன்டிஷினிங் கூட. ஆனால் ஒன்று அவர் காலத்தில் கிடையாது. புடவையுடுத்திய பெண்கள். அப்போதெல்லாம் ஆங்கிலோ இந்தியப் பெண்கள் தான் ஆபிஸ் வேலைகளுக்கு வருவது வழக்கமாக இருந்தது. அப்படி இரண்டு மூன்று பேர் அந்தக் கம்பெனியிலும் இருந்த…

  2. எனக்கு புரியவில்லை.... ஈழத் தமிழர்களை காப்பாற்றுவோம் என்கிறார்கள்; ஆனால் ஈழத்து தமிழ் மக்கள் மீதும் எமது குழந்தைகள் மீதும் தூவப்படும் மரண குண்டுகளில் அவர்கள் பெயர்களைப் பொறித்து அனுப்பியிருக்கிறார்கள். பிணங்களை காப்பாற்றி ஈழத்தில் எதை சாதிக்கப் போகிறார்கள்?{ பிணந்தின்னிக் கழுகுகளின் இரையே பிணங்கள் தான் என்பதை மறந்துவிட்டு என்ன இது முட்டாள் தனமான கேள்வி?} மரமேறி விழுந்தவனை மாடேறி மிதிச்சுதாம். அப்பிடி இருக்கு இந்திய அரசின் ஒப்பனை வசனங்கள். ஒரு பக்கம் அம்மா வயதான ஐயாவுக்கு கடிதம் எழுதுகிறாராம் தீர்வு காணவும் போரை நிறுத்தவும் வலியுறுத்துவோம் என்று... இன்னொரு பக்கம் நச்சு வாயுவையும், எரி குண்டுகளையும் எதிர்க்கு பரிசளிப்பாராம். பார்த்துக் கொண்டிருக்கும் வெளி உலகில்…

  3. தன் நகரம் தன் நகரம் இரா.முருகன் ‘‘இ ன்னிக்கு மதியம், கட்டையான மீசை வெச்சுக்கிட்டு ஒருத்தன் வந்தான்..!’’ சாரா வீட்டில் நுழைந்தபோது, அம்மா சொன்னாள். அவள் நாற்காலியில் உட்கார்ந்திருந்தாள். படுக்கையை அசுத்தம் செய்திருந்தாள். இருட்டில் சூழ்ந்து நின்ற ஈரமும், சிறுநீருமாக வாடை மூக்கைக் குத்தியது. நாள் முழுக்கத் துர்வாடைக்கு நடுவே …

  4. கவிஞர் கி.பி.அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசுக்கான, புலம்பெயர் சிறுகதைப் போட்டிSEP 11, 2015 | 8:59by புதினப்பணிமனைin அறிவித்தல் காக்கைச் சிறகினிலே மாத இதழ் முன்னெடுக்கும் கவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு – ‘புலம்பெயர் சிறுகதைப் போட்டி 2016′ – வள்ளுவராண்டு 2047 காக்கைச் சிறகினிலே இதழ் தொடக்க நெறியாளராகப் பணியாற்றி மறைந்த இலக்கியவாதி ‘கி பி அரவிந்தன்’ கனவின் மீதியில் எழும் புதிய தடமாக அமைகிறது இந்தப் போட்டி. பாரதி கண்ட “சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் !” என்ற கனவை நனவாக்கும் முயற்சிகளில் ஒன்று. உலகெங்கும் வியாபித்தவர்களாகி தொடரும் வாழ்வில் அடுத்தடுத்த தலைமுறையினர் எண்ணங்களைக் கொண்ட எழுத்துகளையும் படைப்புகள…

  5. அன்று: மச்சி நூறு ரூபாய்க்கு வாங்கின ஸ்டாக்கின் இப்போதைய மதிப்பு தெரியுமா? ங்... ஒன்று ஆயிரம் ரூபாய்... வாவ்... எப்படிடா உட்கார்ந்த இடத்தில் இருந்தே இப்படி சம்பாதித்தே? இன்று: மச்சி என்ன சோகமா இருக்கெ? ம்... ஆயிரம் ரூபாய்க்கு வாங்கின ஸ்டாகின் விலை இப்போ என்ன தெறியுமா? என்னடா.... வெறும் ஒரு ரூபாய்! எல்லாம் இந்த "லேமேன் பிரதர்ஸ்" உடைந்ததால் வந்த வினை. ங்... ஓக்கே, எப்படி நூறு ரூபாய்க்கு வாங்கின ஸ்டாக் ஆயிரம் ரூபாவாகி, ஒரே இரவில் ஒரு ரூபாய்க்கு வந்தது? யார் அவ்வளவு கோடான கோடி ரூபாய்களால் லாபம் அடைந்தது? உங்களுக்கும் இதுபோன்ற கேள்விகள் எழுந்திருந்தால், தெளிவுபெற இந்த "குரங்கு வியபாரி" கதையைப் படிக்கவும். * * * ஒரு …

  6. மீன் - சிறுகதை பவா செல்லதுரை - ஓவியங்கள்: ஸ்யாம் பவுல் வாத்தியாரை, `வாத்தியார்' என அவரே சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள். அப்படி ஓர் ஒல்லிக்குச்சி உடம்பும், முழங்காலுக்குமேல் தூக்கிக் கட்டிய கட்டம் போட்ட லுங்கியும், கைவைத்த வெள்ளை பனியனுமாகத்தான் எப்போதும் திரிவார். இவர் ஸ்கூலுக்கு எப்போது போவார், அப்போதாவது உடைமாற்றிக்கொள்வாரா... என்பது எல்லாம் மாயவித்தைகள்போல மறைந்துவிடும். முனிசிபல் பாய்ஸ் ஹைஸ்கூலில், பத்தாவதுக்கு மாறியபோதுதான் பவுல் வாத்தியாரின் நீளமான அந்தத் தூண்டிலில் நானும் மாட்டிக்கொண்டேன். என் வீட்டில் இருந்து நடை தூரத்தில்தான் எல்லுக்குட்டை இருந்தது. அதை சிலர் `குளம்' என்றும் தப்பாகச் சொல்லக் கேட்டிருக்கிறேன். எப்போதும் பாசி படர…

  7. ஒரு நிமிடக் கதை பிறந்தநாள் இன்று என் ஒரே மகன் கந்தர்வுக்கு பிறந்த நாள். நாங்கள் ஆனந்தமாக கொண்டாடி மகிழ என் கணவர் இப்போது உடன் இல்லை. வேலை நிமித்தமாய் மும்பை சென்றுள்ளார். “சித்ரா, என்னால கந்து பிறந்தநாளுக்கு வர முடியாது. அதுக்காக அப்படியே விட்டுடாதே... அவனுக்கு பிடிச்ச மாதிரி ரெண்டு, மூணு ட்ரெஸ் எடுத்துக் கொடுத்து காலையில மணக்குள விநாயகர் கோயிலுக்கு அழைச்சுட்டுப் போ. அப்படியே அன்னை ஆசிரமத்துல இருக்கிற என் அம்மாகிட்டேயும் அவனை அழைச்சுப் போய் அவங்க கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்க வை.” “சரிங்க...” “ நான் ஆன்லைன்ல சற்குரு ஹோட்டல்ல நூறு பேருக்கு டின்னர் ஆர்டர் பண்ணியிருக்கேன். வீட்…

  8. கண்ணாடிக் குருவி நாலு சுசியாப்பம், ஒரு சுருள்போளி வாங்கி வந்திருந்தான் நாகராசு. அதை தேவியிடம் கொடுத்து அக்காளிடம் கொடுக்கச் சொல்லியிருந்தான். பேருந்தை விட்டு இறங்கி வீட்டுக்கு நடந்து வந்ததில் கலைந்திருந்த தலைமுடி, அரும்பிய வியர்வை, இன்னபிற ஒப்பனைகளை தன் இருகைகளாலும் சரிசெய்து கொண்ட தேவி, நாகராசுவிடமிருந்து வாங்கிய பலகாரப் பொட்டலத்தை, ஸ்டைலாக விரல் நுனியில் கோர்த்துக் கொண்டாள் ""மதனீ...'' வீட்டுக்குள் காலடி எடுத்துவைக்கும் முன்பாக குயில்போல ஒரு குரல் விடுத்தாள்,தேவி. பின்னால் நாகராசு நின்றான். சட்டென உள்ளே நுழைய முடியா வண்ணம் நிலைப்படிவரைக்கும் வீட்டுக்குள் ஒருகும்பல் குடியிருந்தது. உள்ளே கலைஞர…

  9. மதுரை, மூதூர் மாநகரத்தின் கதை - 1 | புராணமும் பண்பாடும் நிறைந்த பொற்றாமரைக் குளம்! பர்வத வர்த்தினி மதுரை, மூதூர் மாநகரத்தின் கதை தமிழுக்கும் பொற்றாமரைக் குளத்துக்கும் பெரும் தொடர்பு உண்டு. சங்கப் பலகை ஒன்று இந்தக் குளத்திலிருந்ததாகவும் தகுதியுடைய நூல்களை சங்கப் பலகை ஏற்கும் என்றும் புராணம் சொல்கிறது. உண்மையில் அப்படி ஒரு பலகை இருந்ததா என்பதைப் பகுத்தறிவு ஏற்க மறுக்கலாம். ஆனால்... மதுரை நிலவியலின் முதன்மை அடையாளமாய் மனக்கண்ணில் தோன்றுவது மீனாட்சி அம்மன் திருக்கோயில்தான். புராண காலங்களில் திரு ஆலவாய் என்றும் வரலாற்றுக் காலங்களில் நான்மாடக்கூடல், கடம்பவனம், கூடல்மாநகரம் என்றும் அழைக்கப்பட்ட இந்த மதுரை மாநகரின் நிர…

  10. டேஸ்ட் இதுவரை நன்றாக வியாபாரம் நடந்துகொண்டு இருந்த ஸ்வீட் ஸ்டால், திடீரென சரிவு நிலைக்கு வந்தது எப்படி எனக் குழம்பினார் ஆறுமுகம்.பல வருடங்களாக அங்கே மாஸ்டராக இருப்பவர் மாசிலாமணிதான். ஒரே ஆள். அவரது கைப்பக்குவம்தான் கடையின் வியாபார வளர்ச்சிக்கு மூல காரணமாக இருந்தது. இப்பொழுதும் அவர்தான் மாஸ்டர். ஆனால் முன்பு இருந்த ஓட்டம், இப்போது இல்லை. இதை மகன் சந்துருவிடம் சொல்லி வருத்தப்பட்டபோது, ‘‘நீங்க வீட்ல இருங்கப்பா, நான் பார்த்துக்கிறேன்!’’ என்றான்.அதே மாஸ்டர்தான். ஒரே மாதம்தான். பழைய வியாபாரத்தைவிட அதிகமாகவே கொண்டு வந்துவிட்டான் சந்துரு. ஆறுமுகம் தன் மகனிடம் காரணத்தை கேட்டார். ‘‘அப்பா, நான் மாஸ்டர்கிட்ட பேசினேன். அவருக்கு இப்ப சுகர் …

  11. அது... இது... எது? வங்கியில், குணசுந்தரியை தற்செயலாக பார்த்தார், பரந்தாமன். அவளது அப்பா காலத்திலிருந்தே குடும்ப நண்பர் என்பதால்,''என்னம்மா இந்த பக்கம்...'' என்று உரிமையுடன் விசாரித்தார். சொல்லலாமா, வேண்டாமா என்ற தயக்கத்தோடு, அருகில் நின்றிருந்த கணவனை பார்த்தாள், குணசுந்தரி. ''ஒண்ணுமில்ல... பொண்ணுக்கு வரன் அமைஞ்சிருக்கு; மூணு மாசத்துல கல்யாணம். பட்ஜெட் அதிகமாகும்ன்னு தோணுது; அதான் வீட்டை அடமானமா வெச்சு, கடன் வாங்க வந்திருக்கோம். குணசுந்தரி பேர்ல வீடு இருக்கு,'' என்றார், அவளது கணவர், குமார். ''வீட்ட வெச்சா...'' கவலையும…

  12. http://1.bp.blogspot.com/_XsbRJpGRhp0/TFR50OkOdtI/AAAAAAAAAXc/Irhmr0Fwxio/s320/life.jpg ஊருக்குப் போயிருந்த போது ஏதேட்சையாக சந்தித்த மனிதரெருவரைப்பற்றிய கதையிது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர், ஆனால் அவர் தமிழில் மட்டக்களப்பு வாசம் பலமாய் வீசியது. ஆண்டுகள் பலவாகிவிட்டதாம் புலத்தினுள்ளேயே புலம் பெயர்ந்து. அமைதியன முகமும், அதுக்கேற்ற புன்னகையையும் கொண்டிருந்தார். முகத்தில் வயதுக்கு மீறிய முதிர்ச்சுி தெரிந்தது. வயது 20 களின் முடிவில் அல்லது 30 களின் ஆரம்பத்தில் இருக்கும். நான் தங்கியிருந்த ஒரு விடுதியில் முகாமையாளராக தொழில் புரிவதாய்ச் சொன்னார். ஓரு நாள் மாலை 10 மணியளவில் ஏதேட்சையாக சந்திக்கக் கிடைத்தது இவரை. பழகி சில நிமிடங்களுக்குள்ளாகவே மிகவும் …

  13. கடுங்குளிரில் வந்த வயது முதிர்ந்த ஒருவருக்கு புத்தமடத்தில் தங்க இடம் கொடுக்கப்பட்டது. அன்று இரவு கடுங்குளிர். கிழவரால் குளிரைத் தாங்க முடியவில்லை. மரத்தால் செய்யப்பட ஒரு புத்தர் சிலையை எடுத்து அதை எரித்து குளிர் காய ஆரம்பித்தார். மரம் எரியும் சப்தம் கேட்ட புத்தமடத்தின் குரு ஓடிவந்து புத்தர் சிலை எரிவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கிழவரிடம், “நீங்கள் என்ன செய்கிறீர்கள்? உங்களுக்குப் பைத்தியமா? தெய்வத்தையே எரித்து விட்டீர்களே” என்று கோபத்தில் கதறினார். உடனே கிழவர் ஒரு குச்சியைக் கொண்டு சாம்பலைக் கிளறினார். அவர் என்ன செய்கிறார் என்று குரு கேட்டபோது, அக்கிழவர் சொன்னார், ''நான் எலும்புகளைத் தேடுகிறேன். நான் எரித்தது புத்தரை என்றால் எலும்புகள் இருக்க வேண…

    • 0 replies
    • 735 views
  14. Started by கிருபன்,

    நுனி எம்.டி.முத்துக்குமாரசாமி “பிரதமர் உரையாட விரும்புகிறார். தயாராகுங்கள். ஆடைகள் அணிந்திருத்தல் அவசியம்” கலியின் அடுக்குப் படுக்கையின் மேல் இருந்த தொடர்புஒலிபெருக்கியில் கன்ணனின் குரல் தொடர்ந்து ஒலித்தது. தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு முழித்த கலி தன் படுக்கையில் இருந்து மிதந்து இறங்கினாள். ஆஹ், ஒரு வழியாய் பூமியோடு தொடர்பு கிடைத்துவிட்டது! “ரோஜர். வருகிறேன். கல்கி எங்கே?” “வெளியே நடந்து கொண்டிருக்கிறாள். செய்தி அனுப்பிவிட்டேன். நீ வரும்போது வந்துவிடுவாள். வரும்போது வாயில் 7இல் அவள் திரும்பி வர உதவி தேவையா என்று பார்த்துவிட்டு வா” “சரி” கலிக்கு புவி ஈர்ப்பு விசை இல்லாமல் நிர்வாணமாய் தன் மார்புகள் குலுங்குவது பழக்கமாகியிருந்தது. ஆடையணிந்…

  15. ஒரு நிமிடக் கதை: புதிய தலைமுறை ஊரே அந்த வீட்டின் முன் கூடி யிருந்தது. பூங்கோதைக் கும்கூட அவள் கணவன் மேல் சந்தேகம் இருக்கவே செய்தது. கோபமாய் அமர்ந்திருந்த சின்னராசுவை நெருங்கிய அவள், “இப்போ ஊரே கூடிவந்து நிக்குது. இவங்களுக்கு என்ன பதில் சொல்லப் போற?” என்றாள். அதற்கு சின்னராசு, “இங்க பாரு…. நான் முன்ன மாதிரி எல்லாம் இல்ல. திருடிப் பொழைக்கிறதை விட்டுட்டேன். கட்டுன பொண்டாட்டி, நீயே என்னை நம்பலை... அவங்களால என்ன பண்ணமுடியுமோ அதை பண்ணிக்கச் சொல்லு” என்றான் முடிவாக. அவன் பேசியதைக் கேட்ட ஊராரும் போலீஸில் புகார் கொடுப்பதாய் சொன்னார்கள். அடுத்த இரண்டு மணி நேரத்தில் காவல்துறை ஜீப் புழுதியைக் கிளப்பிவி…

  16. செல்லம்மாளுக்கு அப்பொழுதுதான் மூச்சு ஒடுங்கியது நாடியும் அடங்கியது. செல்லம்மாள் பெயரற்ற வெற்றுடம்பு ஆனாள். அதாவது பதியின் முன்னிலையிலே, உற்றார் உறவினருக்கு ஐந்நூறு அறுநூறு மைல் தூரத்திலே, பட்டணத்துத் தனிமையிலே மாண்டு போனாள். நெற்றியில் வியர்வை ஆறாகப் பொழிந்து கொண்டிருந்த பிரமநாயகம் பிள்ளை, கையிலிருந்த தவிட்டு முடிப்பைச் சற்று எட்ட வைத்துவிட்டு, செல்லம்மாளாக இருந்த அந்த உடம்பைப் பார்த்துக் கொண்டிருந்தார். சற்று அரைக்கண் போட்ட படி திறந்திருந்த இமைகளை மூடினார். அங்கொன்றும் இங்கொன்றுமாக வசமிழந்து கிடந்த கைகளை எடுத்து நெஞ்சின் மேல் மடித்து வைத்தார். இடது கால் சற்று ஒரு புறமாக மடிந்து கோணியிருந்தது. அதை நிமிர்த்தி, இரண்டு கால்களையும் சேர்த்து வைத்துக் கிடத்தினார். வாய…

  17. கை கொடுக்கும் கை நாயுடு காம்பவுன்டைக் கடக்கையில் தற்செயலாய்ப் பார்வை போனது. மனுஷன் இருந்தால் பிடித்துக் கொள்வார். நிச்சயம் தப்பிக்க முடியாது. "ஏய்... நாகு. அம்பி வந்திருக்கு பாரு...'' என்று உள் நோக்கிக் குரல் கொடுப்பார். கையில் டீயோடு ஓடிவரும் அந்தம்மா. அந்த அளவிலான மதிப்பிற்கு, தான் என்ன பண்ணினோம் என்று தோன்றி இவனைக் கூச வைக்கும். இதைத் தவிர்ப்பதற்காகவே அந்த வழியைத் தவிர்ப்பான். ரெண்டு மூணு மாதங்கள்தான் இருக்கும் இப்படி ஆரம்பித்து. உட்காரும்போதெல்லாம் டீ கொடுத்து உபசரித்து. அது தனக்காக இல்லையோஅம்மாவுக்காக, அப்பாவுக்காக, சாமி அண்ணாவுக்காக என்…

  18. வெண்டி மாப்பிள்ளை சிறுகதை:எஸ்.செந்தில்குமார்ஓவியங்கள்: செந்தில் வெண்டி பூச்சிமருந்தைக் குடித்து சாகக் கிடக்கிற விஷயம், பட்டறை வீதிக்குத் தெரிவதற்கு முன்பாக, செல்லையா ஆசாரிக்குத் தகவல் போய்ச் சேர்ந்திருந்தது. இத்தனைக்கும் வெண்டியை நேற்று இரவு ஞானம் சலூனில் பார்த்திருந்தார் செல்லையா. வெண்டியைப் பார்த்ததும், செல்லையாவுக்கு வெட்கம் வந்தது. நமுட்டுச் சிரிப்பு சிரித்துக்கொண்டார். வெண்டி மாப்பிள்ளை, தன் பெயருக்கு ஏற்றதுபோல கிராப்பு வெட்டி, சவரம்செய்து, கிருதாவை மேல் தூக்கிவைத்து...பார்ப்பதற்கு லட்சணமாக இருந்தான். வெண்டி, சலூன் கடையை விட்டுக் கீழே இறங்கிப்போனது இன்னும் அவர் கண்களில் இருந்தது. வெண்டி கடையைவிட்டுப் போனதும் 'செல்லம் அப்பச்சி... நீங்க உங்க…

  19. Started by நவீனன்,

    வராத பதில்! வராத பதில்! வாஸந்தி வா க்கியத்தை முடிப்பதற்கு முன் அப்பாவின் உயிர் போய்விட்டது. ‘ஓ’ என்கிற அட்சரத்துக்குக் குவிந்தாற் போல் உதடுகள் வட்டமாக நிற்க, கண்கள் அவரது சுபாவமான உத்வேகத்துடன் விரிந்திருக்க, நாடக ஒத்திகையில் இயக்குநர் ‘யீக்ஷீமீமீக்ஷ்மீ!’ என்ற அதட்டலுக்குப் பணிந்து உறைந்தது போல முகம் உறைந்தது. முதலில், அது ஏதோ வேடிக்கை போல் இருந்தது அவளுக்கு. அது ஒ…

  20. மாயக்கிளிகள் ஜீ. முருகன் தனது இனத்துடன் வனங்களில் திரிந்து கொண்டிருந்தவளிடம் பிரேமைகொண்டு பட்டமகிஷியாக்கிக் கொண்டான் அரசன். மலைநாட்டுக்காரி ராணியாகி விட்டாள். அவள் இங்கே வரும்போது சீதனமாகப் பாடல்களைக் கொண்டு வந்திருந்தாள்; ஏராளமான பாடல்கள். அவள் பாடத்தொடங்கிய கணத்திலேயே நறுமணம் கமழ்ந்தது. துரிதமாக வளர்ந்து பூத்தன செடிகளெல்லாம். அவள் வருகைக்குப் பின்னர் அந்தப்புரத்திற்கு விதவிதமான பறவைகள் வரத்துவங்கின. புதுப்புது வண்ணங்களில் பட்டாம்பூச்சிகள் காணக்கிடைத்தன. வேட்டைக்குப் போனவன் இப்படி மணக் கோலத்துடன் திரும்பி வருவானென்று யாரும் எதிர்பார்க்கவில்லை. சூன்யக்காரி என்று குமைந்தார் கிழட்டு மந்திரி. ஒரு மலைநாட்டுக்காரி கீர்த்திமிக்க இந்நாட்டின் மகாராணியாவதை அவருட…

  21. எவளுக்கும் தாயாக..... எஸ். அகஸ்தியர் - சிறுகதை அமரர் எஸ். அகஸ்தியர்[ பிரபல முற்போக்கு எழுத்தாளர் அமரர் எஸ். அகஸ்தியரின் 19 ஆவது ஆண்டு நினைவையொட்டி - 08.12.2014 - அவரது ‘எவளுக்கும் தாயாக’ என்ற நூலிலிருந்து இச்சிறுகதை பிரசுரமாகிறது. - பதிவுகள்-] நக நுனி சாடை, பிறை நிலா, ஒரு வெண் கீறு பாவி, மேக வெளி நாடி மின்வரி போட, செக்கல் கருகி இருள் அடர்ந்து கவிகிறது. பூமி முற்றாக மயான கோலம். அதிர் வேட்டுக்கள் வானமடங்க வெடித்து, நிலமதிரச் சிதறி, அவன் மனக்கண்ணுள் மின்னித் தெரிகின்றன. கைம்பெண் போல் தன்னை அவள் காட்டிக் கொள்வதில்லை. புருஷன் சம்பளம் பென்சனாக வருகிறது. ஒரே ஆண்பிள்ளை. இரண்டு இளங் குமர்கள். பிள்ளைகள் மூவரும் சதா படிப்பில் மூழ்கியபடி. பிள்ளைகளுக்கான படிப்புச் செலவுக்கே…

  22. எங்கள் தெருமுழுக்கத் தோரணம் கட்டியிருந்தார்கள். மாவிலை மணத்துக்கொண்டிருந்தது. அண்ணனும் நானும் ஒலிநாடாவின் இசையை அதிகப்படுத்திக்கொண்டிருந்தோம். ஒலி பெருத்து, தெப்பங்குளம் தாண்டி மீனாட்சி அம்மன் கோவில் வரை கேட்டிருக்கும் போலிருக்கிறது. எங்கள் தெரு முழுக்க கூட்டம் நிரம்பி வழிந்திருந்தது. நான் புதிதாய்ப் போட்டிருந்த பச்சை கலர் கோடு போட்ட வெள்ளைச் சட்டையும், கால்களை மூழ்கிக்கொண்டிருந்த நீல பேண்ட்டுமாய் வாசலில் நின்ற கூட்டத்தை கர்வத்துடன் பார்த்தேன். அம்மாவின் பட்டுப்புடவையைப் போன்று அக்காவும் கத்தரிப்பூ நிறத்தில் பட்டுப்புடவை உடுத்தியிருந்தாள். இன்று அவள் கூந்தல் நீளமாகி சிவப்பு கலர் குஞ்சத்துடன் தொங்கிக் கொண்டிருந்தது. தலையில் நிறைய பூ வைத்திருந்தாள். தெருவி…

    • 0 replies
    • 5.1k views
  23. ‘பங்க்’ குமார்: கல்லூரி மாணவர்..ரவுடி ஆன கதை ! | பங்க் குமார் இப்பெயரை கேட்டாலே ஒரு காலத்தில் அலறிய மக்கள். கல்லூரி படிக்கும்போது உமர் என்பவருடன் சேர்ந்து சிறு தப்புகள் செய்து கொண்டுயிருந்த குமார், அவருடைய கொலைக்கு பிறகு முழுநேர ரவுடியாக மாறினான். கொலை, பாலியல் வல்லுறவு, கட்டப்பஞ்சாயத்து என்று கால் பாதிக்காத இடமே இல்லை. இதை பார்த்த காவல்துறை அவனுக்கு தேதி குறித்தது. இருமுறை தப்பிய அவன் இறுதியில் அவன் உயிர் உருவப்பட்டது. அவன் பெங்களுருவில் கைது செய்யப்பட்டன இல்லை சென்னையில் சுட்டு கொல்லப்பட்டன ?

  24. ஒரு விபத்து போலதான் அது நடந்தது. செல்வநாயகம் மாஸ்ரர் வீட்டில் தங்க வேண்டிய நான் ஒரு சிறு அசொகரியம் காரணமாக இப்படி ஜோர்ஜ் மாஸ்ரர் வீட்டில் தங்க நேரிட்டது. எனக்கு அவரை முன்பின் தெரியாது. அந்த இரண்டு இரவுகளும் ஒரு பகலும் எனது வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவையாக மாறும். எனது பதினாலு வயது வாழ்க்கையில் நான் கண்டிராத கேட்டிராத சில விஷயங்கள் எனக்குப் புலப்படுத்தப்படும். இன்னும் சில அதிர்ச்சிகளுக்கும் தயாராக நேரிடும். ஜோர்ஜ் மாஸ்ரர் பூர்விகத்தில் கேரளாவில் இருந்து வந்தவர். அவர் கழுத்தினால் மட்டுமே கழற்றக்கூடிய மூன்று பொத்தான் வைத்த முழங்கை முட்டும் சட்டையை அணிந்திருந்தார். அவருடைய முகம் பள்ளி ஆசிரியருக்கு ஏற்றதாக இல்லை. வாய்க்கோடு மேலே வளைந்து எப்போதும் …

  25. தாய்மையே வெல்லும்! "அவன் வந்துவிடுவானோ எனும் அச்சத்துடன் தேவகியும் கோமதியும் ரயில்நிலைய இருக்கையில் நிலை கொள்ளாமல் அமர்ந்திருந்தார்கள். "நான் பொறந்தப்பவே கழுத்தை நெறிச்சோ வாயில நெல்லைப் போட்டோ என் கதைய முடிச்சிருந்தா இப்ப இந்தக் கஷ்டம் வந்திருக்காதில்லம்மா'' என்ற தேவகி வானத்தை நோக்கினாள். வானம் இருண்டு கிடந்தது. இடி முழக்கங்களும் மின்னல் வீச்சுக்களும் பூமியை துவம்சம் செய்யப்போவது போல் தொடர் தாக்குதல் நடத்தத்தொடங்கி இருந்தன.. மெல்ல மெல்ல மழையும் இறங்கிற்று, பயணிகள் ஆங்காங்கே ஒதுங்கி, ஒண்டிக் கொண்டு நின்றார்கள். "ரயில் எப்ப வரும்?'' "வருமோ வராதோ.. வந்தாதான் தெரியும்'' இத்தகைய …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.