Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. பித்தளை நாகம் - சிறுகதை இவனுக்கு, இப்போது பஞ்சாலையின் இதயமான `கார்டிங்’ பிரிவின் இயந்திரப் பராமரிப்புத் துறையில் பணி. துறையில் மொத்தம் இரண்டு குழுக்கள். இயந்திரத்தை அக்கு அக்காகக் கழட்டி மாட்டுபவரை பொருத்துநர் எனலாமா? அல்லது... கழட்டி? பெருசுகள்கூட ``ஆ...மா இவுரு பெரிய கழட்டி, போடா மூடிட்டு!’’ என்பார்கள். இந்தப் பிரிவின் `கழட்டி’ வின்சென்ட். கழட்டிக்கு ஓர் `எடுபிடி’ ஜெயக்குமார். எடுபிடிக்கு ஓர் `அல்லக்கை’ குமரவேல். ஆக, மூவர் உள்ளிட்ட `பழுதுபார்க்கும் குழு’. இரண்டாவது குழு `சுத்தக்குழு’. இந்தக் குழுவினர் ஓடிக்கொண்டிருக்கும் இயந்திரங்களை முறைவைத்து வாரம் ஒருமுறை நிறுத்தவேண்டும். பிறகு அவற்றின் உடைகளைக் களைந்து, `கம்ப்ரசர்’கொண்டு காற்…

  2. Started by நவீனன்,

    மகவு பொண்ணோட அம்மாவும் பையனோட அம்மாவும் சேர்ந்து நடத்துற திருமணம்ன்னாலும் எந்தக் குறையும் யாரும் காண முடியாத அளவுக்கு மூணுநாள் சடங்குகள் எல்லாத்தையும் சிறப்பா செய்து ஊரு, உறவெல்லாம் மெச்சும்படியா நடத்தி வெச்ச கல்யாணம் சங்கரன், பார்வதி கல்யாணம். வந்தவங்களெல்லாம் வாயார வாழ்த்தினர். தெய்வ சங்கல்பம் என்றே புகழ்ந்தனர். அந்த பரமசிவனும் பார்வதியும் கண்ணுக்கு காட்சி தருவதுபோல தம்பதிகள் இருந்ததா நெகிழ்ந்து புகழ்ந்தனர். பொருத்தமின்னா அப்படி ஒரு பொருத்தம். உறவினர்களிலும், நண்பர்களிலுமாக ஒருவர், "டேய் சங்கரா நல்லா ஷேமமா, அந்நியோன்யமா இருக்கணும்டா. சீக்கிரமா புதுவரவு இருக்கட்டும்டா'' லேசான வெட்கத்துடன் சங்கரனும…

  3. தோணி! … ( சிறுகதை ) … வ.அ.இராசரத்தினம். June 21, 2018 சிறப்புச் சிறுகதைகள் (3) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – வ.அ.இராசரத்தினம் எழுதிய ‘தோணி’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தொடரும் காலங்களில் ஏனைய சிறுகதைகள் வெளிவரும். கரு நீலமாகப் பரந்து கிடக்கும் வங்காள விரிகுடாவைப் பார்த்தவாறு எங்கள் கிராமம் இருக்கிறது. கிராமம் என்றா சொன்னேன்? பூமி சாத்திர, சமூக சாத்திர நியதிப்படி கிராமம் என்றால் எப்படியிருக்குமென்று எனக்குத் தெரியாது. சோழகக் காற்றுச் சர சரத்துக் கொண்டிருக்கும் தென்னை மரங்களடியிலே அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏறக்குறைய முப்பது ஓலைக் குடிசைகள் இருக்கின்றன. ஓரு குடிசையிலிருந்து மற்றக் குடிசைக்குப் ப…

  4. லதா ரகுநாதன் பரத்திற்கும் அனந்திற்கும் மிகவும் சிரமமாகத்தான் இருந்தது. " இந்த அப்பா காது டமாரமாகத்தான் போயிடுத்து" ஆம் என்று அனந்த் அவசரமாகத் தலையசைத்தான். "நேற்று இந்த மாதச் செலவு சற்றே அதிகம் ஆகும். அதனால் அதிகமாக பணம் தேவைப்படும் என்பதைச் சொல்ல முயன்று என் தொண்டைத்தண்ணி வத்திப்போனதுதான் மிச்சம்" அனந்த், தன் பக்கக் கதையைச்சொன்னான். "ஆமாண்டா.. ஹியரிங் ஏய்டெல்லாம் ஒரு பிரயோசனமும் இல்லை" பரத் அதோடு நிறுத்தாமல் செவிடு, கிழம், பணப்பிசாசு, சனியன் போன்ற அழகிய தமிழ் வார்த்தைகளுடன் அப்பாவின் பல கதைகளை அவிழ்த்துவிட்டான். ராமலிங்கம் காது கேட்காதவர்களுக்கான பிரத்தியேக அசட்டுப் புன…

  5. வெள்ளிப்பாதசரம்!… ( சிறுகதை )…. – இலங்கையர்கோன் (த. சிவஞானசுந்தரம்) அகரன்June 17, 2018 சிறப்புச் சிறுகதைகள் (2) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – இலங்கையர்கோன் எழுதிய ‘வெள்ளிப்பாதசரம்’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தன் வீட்டுக்கு ஒரு அடுக்குப் பெட்டியும் தனக்கு ஒரு தையற் பெட்டியும் வாங்கவேண்டும் என்று நினைத்து வந்தவளுடைய உள்ளம் விம்மும்படி கோவில் வீதியெல்லாம் பெட்டிகளும் கடகங்களும் மலைமலையாய்க் குவிந்திருந்தன. குஞ்சுப்பெட்டி, அடுக்குப்பெட்டி, தையற்பெட்டி, மூடற்பெட்டி, பின்னற்பெட்டி… ஊ! எத்தனை வகை! அருகில் மாட்டை அவிழ்த்து அதன் வாயில் பொங்கிய நுரையை வழித்து அதன் மினுமினுக்கும் கரிய முதுகில் தேய்ப்பதில் க…

  6. எலியம் - உமா வரதராஜன் கொஞ்சம் பழைய வீடுதான். ஆனால் அது ஓர் அழகான வீடு. பக்கத்துக் கொன்வென்றில் இருந்து வாத்தியம்மா சொல்லிக் கொடுக்கும் வாசகங்களை அப்படியே ஒப்புவிக்கும் பாலர்களின் ஒருமித்த குரல்கள் அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கும். வைத்தியசாலை வெகு கிட்டத்தில் இருந்தது. சந்தை கூட அவ்வளவு தூரத்தில் இல்லை. இவன் வீட்டுக்கு நேர் எதிரே புகைப்படப் பிடிப்பு நிலையம் ஒன்று இருக்கிறது. தேவையானால் இவன் தன் வீட்டிலிருந்தே ஒப்பனைசெய்து கொண்டுபோய்ப் படம் எடுத்துக் கொள்ளலாம். அவர்களுடைய பௌடரையும், ஒல்லாந்தர் காலத்து அழுக்கு நிரம்பிய சீப்பையும் பாவிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. அதற்குப் பக்கத்திலுள்ள பேக்கரியில் பாண் போடுவார்கள்; 'கேக்'கும் போடுவார்கள். ஆனால் இரண்டுக்கும் இடையில…

  7. நிலவிலே பேசுவோம்!… என்.கே.ரகுநாதன். சிறப்புச் சிறுகதைகள் (1) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – என்.கே.ரகுநாதன் எழுதிய ‘நிலவிலே பேசுவோம்’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தொடரும் காலங்களில் ஏனைய சிறுகதைகள் வெளிவரும். மாலையிலே மது ஒழிப்புக் கூட்டம் நடைபெற்றது! ஆயிரக்கணக்கான மக்கள்திரண்டிருந்த அந்த மாபெருங் கூட்டத்திலே ஆண் சிங்கம்போலத் தோன்றி,மதுவினால் ஏற்படும் தீமைகளையும், அது ஒழிக்கப்பட வேண்டியஅவசியத்தையும், அதற்கான வழி வகைகளையும் அள்ளி விளாசி, இடையிடையேகாந்தியத்தைப் பூசி, அழகு தமிழிலே அனல் பறக்கப் பேசிவிட்டுச் சற்று முன்புதான்வந்திருந்தார் ஸ்ரீமான் சிவப்பிரகாசம் அவர்கள். அப்பொழுது மணி எட்டு இருக்க…

  8. பறவைகளைத் தின்ன விரும்பிய சிலந்தியின் கதை. - வ.ஐ.ச.ஜெயபாலன் இலங்கை யாராலும் வெற்றிகொள்ளமுடியாத ஒரு கொழுத்த சிலந்தி என்கிறேன். சாப்பாட்டுக்கு இன்னும் எத்தனை நாடகளுக்கு பூச்சிகளையே வேட்டையாடுவது என அந்தக் கொழுத்த சிலந்தி சிந்தனை செய்தது. . இனி கழுகு, நாரை, மயில் போன்ற பெரிய பெரிய பறவைகளையே உண்ணவேண்டுமென அந்தக் கொழுத்த சிலந்தி முடிவு செய்தது. . பெரிய பறவைகளைப் பிடித்து சாப்பிடும் ஆசையில் அந்தச் சிலந்தி தனது கரையோரங்களில் வலைகள் பின்னி வைச்சிருக்கு. தனது இராசதந்திரம் புரியாமல் முட்டாள் நாரைகள் ஏற்கனவே அம்பாந்தோட்டையிலும் கொழும்பு போட் சிற்றியிலும் தான் பின்னிவைத்த வலையில் வந்துமாட்டிக்கொண்டுவிட்டதென அந்தச் சிலந்தி குதூகலிக்கிறது.. இலங்கை சிலந்தி வடகிழக்கில் விரித்த …

  9. Started by நவீனன்,

    கங்கம்மா "பெத்த புள்ளையத் தொலைச்சிட்டு... பேதையா நிக்கிறேனே.... ஒத்தப் புள்ளைய காணாம.... ஒறக்கமத்துப் போனேனே....'' காலங்காத்தால பிலாக்கணத்தை ஆரம்பிச்ச கங்கம்மாளப் பாத்த தங்கவேலுவுக்கும் வவுத்தெரிச்சலாதானிருக்கு. புள்ளைய நெனைச்சி கங்கம்மா அறுத்துப் போட்டக் கதுரா தொவண்டு போய்ட்டா. "இந்தா புள்ள, ஒரு வாயாவது குடி கொவளையில கஞ்சிய வைச்சிக்கிட்டு கெஞ்சறாரு தங்கவேலு.'' மூச்ச வுடலையே அவ. பின்னயென்ன கோவம்னா கோவம் அப்பிடியொரு கோவம் புருசங்காரருமேல. "சேத்து வைச்சிருக்க சொத்தே நாலு தலமொறைக்குத் தாங்கும். அந்நிய தேசத்துல எம்புள்ள போய் செரமப்படணும்னு தலையெளுத்தா என்ன?'' சீலத்தலப்பு நனைஞ்சது. "இந்த…

    • 1 reply
    • 1.2k views
  10. உறைந்த‌ ந‌தி -இளங்கோஅவ‌ன் 999 ப‌க்க‌ங்க‌ளில் எழுத‌த் திட்ட‌மிட்ட த‌ன‌து ‌நாவ‌லை பின்ப‌க்க‌ங்க‌ளிலிருந்து எழுத‌ விரும்பினான். க‌ன‌விலும், காத‌லியைக் கொஞ்சும்போதும் நாவ‌லைப் ப‌ற்றி சிந்த‌னைக‌ள் ஓடுவ‌தால் 999 ப‌க்க‌ங்க‌ளில் நாவ‌லை எழுதுவ‌து அவ‌னுக்கு அவ்வ‌ள‌வு க‌டின‌மான‌தாய் இருக்கவில்லை. மேலும் எல்லாப் புக‌ழ் மிகுந்த‌ புனைக‌தையாள‌ர்க‌ளும் சொல்வ‌துபோல‌ இந்த‌ நாவ‌லை அவ‌ன‌ல்ல‌, வேறு எதுவோ தான் எழுத‌வைத்துக் கொண்டிருக்கின்ற‌து என்ப‌தையும் அவன் நம்பத் தொடங்கியிருந்தான்.பின்ப‌க்க‌ங்களிலிருந்து எழுத‌த்தொட‌ங்குகின்றேன் என்ற‌வுட‌ன் த‌ன‌து வாச‌க‌ர்க‌ள் வேறு வித‌மான‌ வாசிப்பைச் செய்ய‌க்கூடுமென்ப‌தால், 'பின்புற‌ங்க‌ளில் அழ‌கிய‌ல்-ஒரு த‌த்துவார்த்த‌மான‌ஆய்வு' என்று ‌தான் எழுதி, த‌ன‌…

    • 1 reply
    • 920 views
  11. விற்பனைக்கு அல்ல... டவுன் பஸ் அந்த நகைக்கடைக்கு ஐம்பது அடி முன்பே பயணிகளை இறக்கி விட்டது. லக்ஷ்மி தனது கையில் சுருட்டி வைத்துக் கொண்டிருந்த மஞ்சள் பையைக் கைகளில் இறுக்கி வைத்தபடி கீழே இறங்கினாள். அது தீபாவளி சீசன் என்பதால் கூட்ட நெரிசலில் ஜேப்படி நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். அவள் கையில் சுருட்டி வைத்திருக்கும் மஞ்சள் பை அவளுடைய முழு வாழ்வின் கனவு. அதனை அத்தனை எளிதில் பறிகொடுக்க அவள் தயாராக இல்லை. அந்த நகைக் கடையை இதே வீதியில் கடந்து செல்லும்போது பலமுறை கவனித்திருக்கிறாள். அவள் சமையல் வேலைக்குச் செல்லும் இரண்டு மூன்று வீடுகளில் அந்த வீட்டு மனிதர்கள் அந்தக் கடையின் மகாத்மியத்தைப் பற்றிக் கூறும்போது செவி …

    • 1 reply
    • 1.1k views
  12. கம்போடியா பரிசு - சிறுகதை தமிழ்மகன் - ஓவியங்கள்: ஸ்யாம் தோளில் பாந்தமாக அழுத்திய அந்த விரல்கள் சரவணனு டையவை என நினைத்தேன். மிக மிருதுவாக அழுத்திய படி இருந்தன அந்த விரல்கள். எதிரில் அமர்ந்திருந்த ரமேஷ் சிரிக்கவேதான் சந்தேகம் வந்தது. கண்களைத் தாழ்த்தி, அழுத்திய அந்த விரல்களைக் கவனித்தேன். இரண்டு கைகளின் விரல்களிலும் செக்கச் சிவப்பாய் நகப்பூச்சு. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன். இன்னும் சிவப்பாய் உதட்டுச் சாயம் பூசிய கறுப்பு ஸ்கர்ட் போட்ட ஒரு பெண் நின்றிருந்தாள். மேலும் திடுக்கிட்டு எழுந்து நின்றேன். அந்தப் பெண் சிரித்தாள். ``உட்கார்’’ என்றாள் ஆங்கிலத்தில். ராகம்போல இழுத்துப் பேசும் அவளின் உச்சரிப்பு பாணியும், கெஞ்சலான அல்லது கொஞ்சல…

  13. நிம்மதியான சிகரெட் - பா.திருச்செந்தாழை ஓவியங்கள் : ரமணன் இன்று வரும் வழியில் பாதிரி செல்லையாவைப் பார்த்தேன். காய்கறி வாங்கிக்கொண்டு சைக்கிளில் வந்தவர், என்னைப் பார்த்ததும் நிதானித்தார். “பச்சை படியும்விதம் ஷேவ் செய்யப்பட்டு, மீசையற்ற மொழுமொழு கன்னங்கள் கொண்ட ஆண்களைப் பார்த்தால் gay போலவே தோன்றுகிறது” என்றவுடன், திடுக்கிட்டு கன்னத்தைத் தடவியபடி சிரித்தார். எனது வெள்ளைப் பக்கங்கள், அவரது கறுப்புப் பக்கங்கள் மீது இருவரும் பரஸ்பர மரியாதைகொண்டிருந்தோம். உரையாடலைக் காய்கறிகளின் நச்சுத்தன்மையிலிருந்து தொடங்கியவர் பிறகு, சர்ச்சில் சிறு வேலைகள் செய்யும் லாரன்ஸும், விக்டரும் குடித்துவிட்டு சர்ச்சுக்கு வருவது குறித்தும், தேர்தல் காலங்களில் தேவாலயத்தை அம…

  14. ஒருநிமிடக் கதை: இலவசங்களுக்கும் விலை உண்டு பொம்மி கேட்டைப் பிடித்துக்கொண்டு நின்றாள். உடையில் மிகக் குறைவாக மூன்று நான்கு சிறிய மற்றும் சற்றே பெரிய கிழிசல்கள் மிக நேர்த்தியாகப் 'பின்' போட்டு மூடப்பட்டிருந்தது . எண்ணெய் சீப்பைக் காணாத முடி, சிக்குப்பிடித்து உருட்டையாக மேலே தூக்கி கட்டப்பட்டிருந்தது. ஆனாலும் இந்தக் கோலத்தில் கூட அழகான உருண்டைக் கண்கள் பளிச்சிட்டு ஏதோ ஒரு வசீகரத்தைச் சொன்னது. "பாப்பா....யாரு ரத்தினத்தோடு பொண்ணா? வா, கிட்ட வந்து குந்து....தாத்தா புல் புடிங்கித்தாரேன்...ஓரமா எடுத்துப் போடு...வா...." முண்டாசு கட்டிய தோட்டக்காரக் கிழவன் வேலைக்கு ஆள் தேடினான். …

    • 1 reply
    • 1k views
  15. Started by நவீனன்,

    நிரஞ்சனி நிரஞ்சன், நிரஞ்சனி. நல்ல பெயர் பொருத்தம் என்றுதான் வீட்டில் அனைவரும் சொன்னார்கள். ஆனால் வாழ்க்கை அப்படி ஒன்றும் பொருத்தமாக போய்விடவில்லை என்றே நிரஞ்சன் எண்ணினான். திருமணமாகி இன்றோடு சரியாக இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டன. சம்பிரதாயமாக திருமணநாளைக் கொண்டாடிவிட்டு தான் பணியாற்றிய படத்தின் இசை வெளியீட்டிற்கு கிளம்பினான். அவன் காரில் ஏறப்போகும் போது, நிரஞ்சனி வாசலிலேயே நின்றுக் கொண்டிருப்பதைக் கவனித்தவன், ""என்ன?'' என்றான். "" வரும் போது ஏதாவது வாங்கிட்டு வா...'' நிரஞ்சனி சொன்னாள். ""ஏதாவதுனா...?'' ""ஒண்ணுமில்ல'' என்றவாறே உள்ளே ஓடிவிட்டாள். சிறிது நேரம் அவள் செல்வதை…

    • 1 reply
    • 1k views
  16. காட்சிப் பிழை மறுபடியும் மாடி ஜன்னல் வழி எட்டிப்பார்த்தபோது அந்த இளைஞன் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தான். அவனை முன்னே பின்னே இதற்குமுன் சபாபதி பார்த்ததில்லை. தூங்கி எழுந்த கையோடு ஜன்னல் திண்டிலிருந்த செடிக்கு தண்ணீர் விடுகையில் தற்செயலாக அவனைப் பார்க்க நேர்ந்தபோது பெரிதாக எதுவும் தோன்றவில்லை. அந்த வேப்ப மர நிழலில் இரு சக்கர வாகனங்கள் இருப்பதோ.. அவற்றின் மீது சாய்ந்தவாறே இளைஞர்கள் நிற்பதோ புதிய காட்சி இல்லை. ஆனால் இன்னமும் அங்கேயே நிற்கும் இவன்? காலை உணவை மென்றவாறே மறுபடி ஜன்னலோரம் வந்தபோதும்.. அவனைக் காண முடிந்ததில்... மனசுள் ஏதோ பொறி தட்ட, குழப்பத்தோடே சாய்வு நாற்காலி பக்கம் திரும்பினார். …

  17. சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் பிறக்கும்பொழுது பூமியில் தன் இடத்தை அறிந்துகொள்ள முடியாத மனிதன் இறக்கும்பொழுதும் செல்லும் இடத்தைக் கணிக்க முடியாதவனாக இருக்கிறான். ""கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்'' என்பதற்கு ஏற்றார்போல சொர்க்கம், நரகம் என்பது எல்லாம் கண்டு வந்து சொன்னவர் என்று எவரும் இலர் என்பதே உண்மை. இப்படிப்பட்ட ஆரம்பமும், முடிவும் அறிய முடியாத உலக வாழ்க்கையில் அடுத்த கணம் என்ன நடக்கும் என்பதைச் சொல்ல முடியாத நிலையில் மனிதர்கள் எதிர்கொள்ளும், வேதனைகளும், சோதனைகளும் ஓய்வில்லாத அலைகளுக்கு ஒப்பாக இருக்கிறது. இன்பம் என்பது எட்டிப்பார்த்துவிட்டு போகும் வானவில்லாக இர…

  18. வாரணாசி - சிறுகதை நரன் - ஓவியங்கள்: ரமணன் பெரும்பாலும் ஒரே மாதிரியான சிறிய ரெட்டைத் திண்ணைகளும், திண்ணையின் மேலிருந்து சரியும் தாழ்வார ஓட்டு முகப்பை இரண்டு மரத்தூண்களும் தாங்கிக்கொண்டிருக்கும் படியான வளைவான செருகு ஓடு வேயப்பட்ட வீடுகள் இருக்கும் பழைமையான தெருவுக்குள் அந்த வாகனம் நுழைந்தது. எல்லா வீட்டின் முற்றங்களிலும் விடுபடாமல் நெளிவு நெளிவான வெள்ளை நிறக் கோலங்கள் இருந்தன. பாலாமணி கையைக் காட்டி, கோலமிடப்படாத இடதுபக்க வீட்டின் முற்றத்தில் வாகனத்தை நிறுத்தச் சொன்னான். வெளியே வயதான நான்கைந்து ஆண்கள் நின்றுகொண்டிருந்தார்கள். இறங்கி, வண்டியின் முகப்பைத் தெருவிலிருந்து வெளியேறும் பாதை நோக்கித் திருப்பி நிறுத்துமாறு ஓட்டுநரிடம் சொன்னான். பாலாமணியி…

    • 1 reply
    • 3.2k views
  19. Started by நவீனன்,

    சூபி காலைப் பொழுதின் வருகையை அந்த சங்கின் ஊதல் அறிவித்தது. வழக்கத்துக்கு மாறாக ஒரு மணிநேரம் முன்பாகவே சங்கு ஊதியது. இங்கே இப்படித்தான். ஒருநாள் சீக்கிரம் ஊதும். சில நாட்கள் தாமதமாக ஊதும். ஊதியதும் புறப்பட வேண்டும். சூபி (SOOBI) வேண்டா வெறுப்பாக எழுந்தான். தூங்க முடியாது. தூங்கக் கூடாது. களத்திற்குச் செல்ல வேண்டும். இரவு 11 வரை உழைக்க வேண்டும். வெளியே எட்டிப் பார்த்தான். DARK CITY மெல்ல மெல்ல விழித்துக் கொண்டிருந்தது. ஆங்காங்கே பல்புகள் எரிந்தும் அணைந்தவாறும் இருந்தன. ஊழியர்கள் களத்துக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். எதற்கு இந்த அர்த்தமற்ற ஓட்டம்? யாருக்காக? எதற்காக? சில காலமாக இந்தக் கேள்வி களை சூபி கேட்கத் தொடங்கியிருந்தான். பொதுவாக இப்படிப்பட்ட க…

  20. வாப்பான்ர கொக்கான் கல்லுகள் - யதார்த்தன் ஓவியங்கள் : ரமணன் வாப்பா தன்னுடைய ஆறாவது மகளின், அதாவது என்னுடைய வீட்டை அபீர் தெருவின் கடைக்கோடியில் கட்டி முடித்தார். அப்போது வாப்பாவுக்கு இன்னும் ஒரேயொரு வீடு மிச்சமிருந்தது. தங்கை பஷீராவின் வீட்டைக் கட்டி அவளுக்கொரு துணை தேடிக் கொடுத்துவிட்டால் வாப்பா சந்தோஷமாக ஹச்சுக்குப் புறப்பட்டுப் போய்விடுவார். அந்தப் புனிதமான யாத்திரையைக் காட்டிலும். கடமையைக் காட்டிலும் தன்னுடைய மகள்களுக்கு நல்ல ஒரு வரனும் ஒரு வீடும் அமைத்து கொடுப்பதைத்தான் வாப்பா தன்னுடைய வாழ்வின் அர்த்தமென்று கருதியிருந்தார். நான் இவரை மணமுடித்த பிறகு, வாப்பாவைப் பார்க்க அபீர் தெருமுனையிலிருந்த எங்களுடைய வீட்டுக்கு மூன்று மாதங்கள் கழித்து போயிருந்தப…

  21. ஆட்டம் - சிறுகதை நர்சிம் - ஓவியங்கள்: செந்தில் உள்ளங்கைகளைத் தேய்த்து கண்களுக்குக் காட்டி எழும்போதே தயாளனின் முகம் கண் முன் வந்தது. இதோ அதோ என நான் இழுத்தடித்துவிட்டாலும் இன்று எப்படியும் சொல்லித்தான் ஆகவேண்டும் தயாளனிடம். பல் துலக்கிக்கொண்டே செடிகளைப் பார்த்தேன். இப்போது, இந்தப் புதுக்கிறுக்குப் பிடித்திருக்கிறது எனக்கு. ஏதோ ஒரு ஸ்பேம் கால் அது. எப்போதும் எடுப்பதில்லை என்றாலும், அன்று எடுத்ததன் விளைவு அந்த அழைப்புக்குரல் என்னைப் பேசவைத்து, என் கண் முன்னே மொட்டைமாடித் தோட்டத்தை விரியவைத்து, என் பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்யும் வரை ஓயவில்லை. ஒரு நல்ஞாயிறு காலையில் வேன் வந்து நின்றது வீட்டுவாசலில். தரையைச் சுத்தம் செய்துவிட்டு, பச்சை நிறத்தில்…

  22. ஒரு நிமிடக் கதை: வெட்டாட்டம் காலை எட்டு மணிக்கே சாலை முழுவதும் நிரம்பி வழிந்த அதீத வாகன நெரிசலில் ஸ்கூட்டரை ஒடித்துத்திருப்பி, திருப்பி ஒடித்து ஆனந்தியின் வீட்டு வாசலை அடைந்து, பீப்பிட்டபோது சலனமின்றி நின்றது வாசல். ஸ்டாண்டில் இட்டு உள்ளே சென்றாள். "வாருங்கள். ஆனந்தி புடவை மாற்றுகிறாள்" என்று கைகளில் பேப்பரைத் திணித்துவிட்டு டைனிங் டேபிளுக்குச்சென்றான் ஆனந்தியின் கணவன். ஒரு ஒற்றைக்கல் சுவர் தடுப்பிற்குப் பின் இருந்த சாப்பாட்டு டேபிளில் ஆனந்தியின் கணவன் மற்றும் குழந்தை அமர்ந்திருக்க ஊரிலிருந்து வந்திருந்த ஆனந்தியின் மாமியார் சாப்பாடு போட்டுக்கொ…

  23. அப்பாவின் சுதந்திரம் மாடியிலிருந்து ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டேயிருந்தான் இவன். மூன்றாவது மாடியிலிருந்து தரைதளத்திற்கு அப்பா இறங்கி வந்து விட்டாரா என்பது வரை பார்ப்பது வழக்கம். படிகளில் தடுமாறி விடக்கூடாதே என்ற பயம். ""நானே போய்க்கிறேன்...எனக்கென்ன பயம்'' - சொல்லிக்கொண்டே இறங்கி விட்டார். எதற்கும் ஆள் துணை நிற்பதோ, முட்டுக் கொடுப்பதோ அப்பாவுக்குப் பிடிக்காது. தனித்து இயங்குவதில் ஓர் அதீத தைரியம். அதோடு யாரையும் சிரமப்படுத்தக் கூடாது என்கிற நல்லெண்ணம். அந்தக் காலனியில் வீடு பார்த்துக் குடியிருக்க வேண்டும் என்பது இவனது வெகுநாள் ஆசை. போகும் போதும் வரும்போதும் அந்தக் குடியிருப்புவாசிகள் …

  24. ஒரு நிமிடக் கதை: யார் மனசிலே என்ன...? ராமன் சற்றே பெரியதாகிப்போன குரலில் பேசத்தொடங்கினார். "இந்த வரன் சரியாவரும்போல தான் இருக்கு...அதான் கொஞ்சம் கவலையாக இருக்கு" ஒன்றும் புரியாமல் மீனாட்சி விழித்தாள். "கவலையா....இது என்ன புதுக்கதை. இருந்து இருந்து உங்க ஒரே பொண்ணு கல்யாணத்துக்கு படிஞ்சு பையனை பிடிச்சிருக்கு சொன்னாலும் மறுபடியும் முருங்கமரம் ஏறாமல் இருக்கணுமேன்னு நான் கவலைப்பட...நீங்க மாத்தி இல்ல கவலைப்படறீங்க....?" பக்கத்துரூமில் இது வரை கேட்ட சத்தம் நின்று போனதோடு ஒரு அமானுஷ்ய நிசப்தம் குடி கொண்டது. …

  25. ஆண்களைப் பார்த்தால் நம்ப மாட்டாள் போன ஆகஸ்ட்டில் அம்மா இறந்து விட்டாள். திடுமென்று இறந்துவிட்டாள். இப்போது அம்மா இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். அம்மா கண்டிப்பானவள். அவள் பார்வையே ஒரு தினுசாக இருக்கும். எதாவது சொல்லிக்கொண்டே இருப்பாள். டிரஸ் சரியாகப் போட்டுக் கொள்ளவில்லை என்றால் திட்டுவாள். "ஏன் எல்லாம் தெரியும்படி டிரஸ் செய்துக்கிறே?'' என்பாள். நான் வயதுக்கு வருவதற்கு முன்னாலேயிருந்து அம்மாவின் நச்சரிப்பு தொடர்ந்துகொண்டே இருக்கும். இப்போது எனக்குக் கல்யாணம் ஆகி என் பெண் பத்மஜா பெரியவளாகப் போகிறாள். எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கிறாள். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.