கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
கனா கண்டேனடி..! - சிறுகதை ஜி.ஆர்.சுரேந்தர்நாத், ஓவியங்கள்: ஹாசிப்கான் அது, வித்தியாசமான ஒரு விடியற்காலை கனவு. கனவிலும் விடியற்காலைதான். மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோயில் தெப்பக் குளத்துப் படிக்கட்டில் நான் அமர்ந்திருக்கிறேன். எனக்கு அருகில் 'பாட்டுப் பாடவா..?’ ஜெமினி கணேசன் உட்கார்ந்து, பொரி உருண்டையை உடைத்து, தெப்பக்குளத்து மீன்களுக்குப் போட்டுக்கொண்டிருக்கிறார். மீன்கள், கூட்டம் கூட்டமாக வந்து பொரிகளைத் தின்னும் காட்சி அற்புதமாக இருந்தது. 'உன் பேர் என்ன?' என்றபடி ஜெமினி பொரி உருண்டை ஒன்றை என்னிடம் நீட்டுகிறார். நான், ''ஸ்ரீராம்' என்றபடி வேகமாகப் பொரி உருண்டையை வாங்கி வாயில் வைத்துக் கடிக்கிறேன். ''நீ திங்கிறதுக்கு இல்லை. மீனுக்குப் போட…
-
- 0 replies
- 1.5k views
-
-
பெட்டை "லொள் லொள் லொள்'' அலுவலகம் கிளம்பும் அவசரத்தில் கண்ணாடி பார்த்து, கண்ணுக்கு மையிட்டிருந்த மாதவியின் காதுகளைக் கிழித்தது வாசலருகே திடீரென எழும்பிய தெருநாய்களின் கூட்டுக் குரைப்பரவம். சினமும் பயமும் அட்ரினலினாய்க் குருதியில் பரவி, கதவைத் திறந்து அவள் வெளியே வர, சக்திவேல் கற்களை எறிந்து விரட்டிக்கொண்டிருந்தான். வாசலிலிருந்த மயில்களைக் குதறியிருந்தன நாய்கள். அதாவது கோல மயில்கள். மார்கழிக்குப் போட்ட கோலம். 11 புள்ளி, 4 வரிசை, 5 வரை நேர்ப்புள்ளி என்ற இலக்கணத்தில் போட்டது. அதன் மீது தூவப்பட்ட பச்சை, நீலம், வாடாமல்லி வண்ணப் பொடிகள். வை கறையில் முக்கால் மணி நேரம் குத்த வைத்தமர்ந்து, நைட்…
-
- 1 reply
- 1.4k views
-
-
மீசைக்காரர் - சிறுகதை சிறுகதை: ம.காமுத்துரை, ஓவியங்கள்: ஸ்யாம் மீசைக்காரரின் பிரேதத்தை முதன்முதலில் நான்தான் பார்க்க நேர்ந்தது. அவ்வளவு பெரிய உருவம், மரத்தி லிருந்து உதிரவிருக்கும் பழுத்த இலைபோலக் காற்றில் முன்னும் பின்னுமாய் ஆடிக்கொண்டிருந்தது. வாசலின் விட்டத்தில் தொங்கியதால் கூடுதல் அதிர்ச்சி. அப்படியே காம்பவுண்டு இரும்புக்கதவில் மோதிக்கொண்டேன். பலரும் சொல்வதுபோல, கண்கள் பிதுங்கி, நாக்கு வெளியே தள்ளி. . . போன்ற கோரமெல்லாம் இல்லை. ஏதோ கண்ணா மூச்சி விளையாட்டு காட்டுவதுபோல இமைகளை மூடித்தான் தொங்கிக் கொண்டிருந்தார். அவரது இடுப்பு வேட்டி பாதம் வரை இறக்கிவிடப்பட்டிருந்தது. அதன் நுனி, அறுபட்ட பல்லியின் வாலாய், வீசும் காற்றின் வேகத்திற்கே…
-
- 1 reply
- 2.2k views
-
-
கைபேசிக்குள் நுழைந்த கடல் திமிங்கலம் அப்படியொரு ராட்சச ஜந்துவை இதுவரை அவன் பார்த்ததில்லை. அதன் பிளந்த வாயில் இருந்து கூரிய பற்கள் நீட்டிக் கொண்டு இருந்தன. சற்றுமுன் அதன் வாய்க்குள் விழுந்த இரையைக் கடித்து விழுங்கியதற்கான ரத்த வாடை அவனைச் சுற்றி பரவிக் கொண்டிருந்தது. ஆனாலும் பசி தாளாமல் இவனை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது, அந்த ஜந்து. "நிச்சயமாக இந்த ஜந்துவுக்கு இரையாகிவிடுவோம்' என்றதொரு பயம் இவனை முழுமையாகப் பிடித்திருந்தது. ஆச்சரியம் என்னவென்றால் அந்த ஜந்துவிடமிருந்து தப்பிக்கும் லாவகம் அவனுக்குத் தெரிந்தே இருந்தது. அதை அவன் விரும்பவில்லை. அதே சமயம் மாட்டிக்கொள்ளவும் விருப்பமில்லை. இன்னத…
-
- 0 replies
- 1.1k views
-
-
நிழலுக்குப் பின் வரும் வெயில் லிங்கி கடந்த நான்கு மணி நேரமாகக் காத்துக் கொண்டிருந்தாள். காலை எட்டு மணிக்கு இந்திராம்மாவின் வீட்டுக்கு வந்தாள். இந்த இரண்டு வாரத்தில் இது மாதிரி காத்துக் கொண்டிருப்பது மூன்றாவது தடவை. தினமும் காலை ஏழரை மணியிலிருந்து பதினொன்று வரை மூன்றுவீடு பார்ப்பாள். இரண்டு வீட்டில் பாத்திரம் தேய்த்து வீடு பெருக்கி விட்டால் போதும். மூன்றாவது வீட்டில் அதிகப்படியாக துணிகளை மெஷினில் போட்டு எடுத்து உலர்த்தும் வேலை. அதன் பின் பதினொன்று பதினொன்றே காலுக்கு வக்கீல் வீட்டுக்குப் போய் சமைத்துத் தர வேண்டும். வக்கீல் வீட்டு சாப்பாட்டுக் கடை முடிந்ததும் அவளும் அங்கேயே சாப்பிட்டு விடுவாள். ஆனால் இந்திர…
-
- 0 replies
- 723 views
-
-
அழியாக் கோலம் “பார்த்தவுடனே டெலீட் பண்ணிடணும். ”“பண்ணிடறேன்டி. ப்ராமிஸ்! ”மௌனம்.அந்த டிஎம்மின் (Direct Message) மௌனம் உடைவதற்குள் அவர்களின் பயோவை பார்த்து வரலாம்.அவள் அப்ஸரா. நிஜப் பெயர் அதுவல்ல; எம்.ப்ரியதர்ஷினி. அவள் தலைமுறையில் எல்லா வகுப்புகளிலும், எல்லா அலுவலகங்களிலும், எல்லா வீடுகளிலும் அப்பெயரில் ஒரு பெண் இருப்பாள் என்பதால் ட்விட்டரில் கணக்கு துவக்கியபோது அப்ஸரா என்று பெயர் வைத்துக்கொண்டாள். தவிர, அவள் அப்படித்தான் கருதிக்கொள்கிறாள். உதடுகள் கோணல் என்பதைத் தவிர்த்துப்பார்த்தால் அது ஓரளவு உண்மையும்தான். ஏதோ ஓர் ஊரில் ஏதோ ஒரு கல்லூரியில் கணிப்பொறியியல் இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் அவளுக்கு இன்னும் உருப்படியாய் ஜாவாவில் பேலிண்ட்ரோம்…
-
- 2 replies
- 758 views
-
-
பிரிவு இந்திரன் ஓய்வு பெறுகிறார். பிரிவு உபசார விழாவிற்கு வந்த கம்பெனி சேர்மன், ‘‘உங்களுக்கு என்ன வேணும்? தயங்காம கேளுங்க!’’ என்றார். முப்பது ஆண்டுகள் கடும் உழைப்பை கம்பெனிக்காக அர்ப்பணித்தவர் இந்திரன். சின்ன அளவில் துவங்கிய அந்த நிறுவனம் பத்து கிளைகள் பரப்பி வளர பெரிதும் உதவியவர். கம்பெனியைச் சுற்றி வளர்ந்த மரங்கள், தோட்டம், புல்வெளி... எல்லாமே இவர் உருவாக்கியவை. அவர் கேட்டால் எதையும் கொடுக்க அந்த நிறுவனம் ரெடி. வேலையில்லாத மகன், இளம் வயதிலேயே கணவனை இழந்து தனிக்கட்டையாய் நிற்கும் தங்கை, தொழில் துவங்க நிதி உதவி எதிர்பார்க்கும் தம்பி என அனைவருமே ‘தனக்குத்தான் ஆதாயம் பெற்றுத் தருவார்’ என எதிர்பார்த்தனர். ‘‘உங்களுக்கு வரவேண்டிய எல…
-
- 0 replies
- 1.3k views
-
-
கெட்ட குமாரன் - சிறுகதை எஸ்.கே.பி.கருணா, ஓவியங்கள்: ஷ்யாம் எங்கள் பள்ளிக்குள் நுழைய மொத்தம் 37 வழிகள் இருந்தன! அதில் ஹெட்மாஸ்டருக்குத் தெரிந்த அதிகாரபூர்வ வழிகள் மூன்றுதான். கனகராஜ், சாலமன் போன்ற பள்ளியின் பியூன்களுக்குத் தெரிந்தது எட்டு வழிகள். மீதம் உள்ள 26 வழிகளும் எங்களைப் போன்ற மாணவர்கள் மட்டுமே அறிந்தது. ஒவ்வொரு திருட்டு வழியும் கண்டுபிடிக்கப் படும்போதெல்லாம், இன்னொரு ரகசிய வழி திறக்கப்பட்டுக்கொண்டே இருக்கும். எங்கள் நகரின் மையத்தில் பிரமாண்டமாக நிலைகொண்டிருக்கும் எனது பள்ளிக்கும் அதன் மாணவர்களுக்குமான அந்தரங்க சிநேகிதம் அது. தினமும் காலை மிகச் சரியாக 8.50-க்குப் பள்ளியின் பிரதான நுழைவாயில் இழுத்து மூடப்படும்போது, பள்ளிக்கு வெளியில் கு…
-
- 1 reply
- 3.1k views
-
-
ஷரோனின் மோதிரம் - சிறுகதை நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... சுப்ரபாரதிமணியன், ஓவியங்கள்: அரஸ் கூரியரில் மோதிரம் வந்தது. அருணகிரிக்கு கத்த வேண்டும் போல் இருந்தது. 'கண்டேன் சீதையை!’ என்று அனுமன் கத்தியது, சம்பந்தமே இல்லாமல் ஞாபகம் வந்தது. 'அடப்பாவி... கிளம்பிட்டியா?!'' என்றுதான் கத்தினான். உடனே அவளைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. கைபேசியை முடுக்கினான். மஞ்சள் சுடிதாரில் அவள் சிரித்துக்கொண்டிருந்தாள். அவள் தேவி... 30 வயதில் அவள் முகத்தில் இல்லாத அழகை எல்லாம் அவன் கண்டிருக்கிறான். தினமும் 100 குறுஞ்செய்திகள் அனுப்பிய காலமும் உண்டு. 'பிரியலாம்’ என்றுகூட ஒரு குறுஞ்செய்தியில் சொல்லித்தான் பிரிந்தார்கள். அனுப்பியவள் தேவி. …
-
- 0 replies
- 2.3k views
-
-
ஃபர்ஸ்ட் ரேங்க்- சிறுகதை சிறுகதை: மாதவன் ஓவியங்கள்: செந்தில் விடியற்காலை ஐந்து மணி இருக்கும். அப்பாவின் போன்தான் அழைத்தது. எடுத்தார். ``யாரு?’’ ``எப்போ?’’ ``சரி இந்தா வரேன்.’’ போன் சத்தத்தினால் விழித்த என்னையும் அம்மாவையும் பார்த்து, “பார்வதி அம்மா போயிடுச்சாம்” என்று பெருமூச்சு விட்டார். ``ஐயோ! எப்போ?’’ பதறினாள் அம்மா. ``காலைல மூணு மணிக்காம். வேட்டியை எடு, கிளம்பணும்.’’ வீட்டைப் பூட்டிக்கொண்டு வெளியே வரும்போது தெருவில் பெரிதாக ஒன்றும் வெளிச்சம் இல்லை. மார்கழி மாதக் குளிர்காற்று காதுக்குள் உய்ய் என்றது. அம்மா அழுதுகொண்டே நடந்து வந்தாள். ஞானம் ஐயர் வீட்டில் மக்கள் வரத்தொடங்கியிருந்தனர். பார்வதி அம்மாளின் எல்லாமுமாக இருந்த…
-
- 1 reply
- 1.5k views
-
-
அம்மாவும் அப்பாவும் காதலிக்காத கதை லக்ஷ்மி சரவணகுமார், ஓவியங்கள்: ஸ்யாம் இத்தனை காலங்களில், அப்பாவின் மீது ராமுக்கு மிஞ்சி இருந்தது, வெறுப்பு... வெறுப்பு... வெறுப்பு மட்டும்தான். ராமுக்கு அவர் மீது இருந்த அதே வெறுப்பு, அவருக்கும் அவன் மீதும், அவன் அம்மாவின் மீதும் இருந்தது. அம்மா, ஒரு பூஞ்சை; சிறு வயதிலிருந்தே உழைக்கப் பழகியவள். கண்களைச் சுற்றி எப்போதும் கருவளையங்களும், இந்த ஜென்மத்தில் துடைத்தெடுக்க முடியாத தனிமை உணர்ச்சியும் அவள் முகத்தில் நிறைந்திருக்கும். தனிமை அடர்ந்த முகம், சக மனிதனுக்கு எப்போதும் அந்நியமான ஒன்றுதான். அப்பா, அவளுடன் நடந்த திருமணத்தை ஒரு துர்சகுனமாகவோ அல்லது விபத்தாகவோதான் நினைத்திருக்கக் கூடும். ஆனாலும், அம்மா அவரை நேசித்தாள். …
-
- 1 reply
- 1.6k views
-
-
ஒரு நிமிடக் கதைகள் பிரார்த்தனை! பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகிற நாள்... மதியம் 12 மணியிலிருந்தே ‘நெட்’டில் ரிசல்ட் பார்த்துக்கொள்ளலாம் என…
-
- 0 replies
- 894 views
-
-
நிலம் (பாரதிபாலன்) நிலம் பாரதிபாலன் மா சானமுத்துவுக்கு நிற்க முடியவில்லை. வெயில் வெள்ளையாக எரிந்துகொண்டு இருந்தது. ஊமை வெயில். உடம்பெல்லாம் ஊறியது. உடல் இடுக்குகளில் எல்லாம் ஈரம் மிதந்தது. கால் கடுக்கும்போது, காலை மாற்றிப்போட்டு நிற்பான். அடிக்கொரு தரம் உடலைச் சற்று இப்பாலும் அப்பாலும் நீட்டி, வளைத்துச் சோம்பல் முறிப்பான். காலை நீட்டி உதற வேண்டும் போல் இருக்கும். வெகு நேரம் இந்த வரிசையில் நின்றிருப்பதால், சற்று விலகி எங்காவது போய் உட்…
-
- 0 replies
- 946 views
-
-
ஒரு நிமிடக் கதைகள் ஒரு நல்ல செய்தி... ஆருயிர் நண்பன் குமார் இறந்த பத்தாம் நாள்... இரவில் தன் பெயர் சொல்லி யாரோ அழைப்பது கேட்டுத் திடுக்கிட்டுக் கண் விழித்தான் தினகர். …
-
- 0 replies
- 1.1k views
-
-
ஓனர் - சிறுகதை சிறுகதை: கு.ஜெயச்சந்திர ஹாஷ்மி, ஓவியங்கள்: ஸ்யாம் ‘`விகடனுக்கு ஒரு கதை அனுப்பணும்’’ ‘`சூப்பர்டா… எப்பக்குள்ள அனுப்பச் சொல்லிக் கேட்ருக்காங்க?’’ இன்றுவரை அவன் அந்தக் கேள்வியை சீரியசாகக் கேட்டானா இல்லை கிண்டலுக்காகக் கேட்டானா என்று தெரியவில்லை. செய்யும் வேலையில் அவ்வப்போது சிற்சில சாதனைகள் செய்துவந்தாலும், அதற்கான பாராட்டுகள், அங்கீகாரங்கள், கைத்தட்டல்கள் கிடைக்கப்பெற்றாலும், இந்த ஆசை மட்டும் தீரவே இல்லை. ஆனந்த விகடனுக்கு ஒரு கதை அனுப்பணும். இதில் ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும். கதை விகடனில் பிரசுரமாக வேண்டும் என்பதைப் பற்றி அதிகம் சிந்தித்ததில்லை. முதலில் விகடனுக்கு அனுப்ப ஒரு கதை எழுத வேண்டும். இதுதான் மனதில…
-
- 1 reply
- 2.4k views
-
-
வலிமை (கலைமகளில் வெளியான முத்திரைச் சிறுகதை) நேரம் கிடைக்கும் போது படியுங்கள். வீடு முழுக்க அம்மாவின் வாசனை நிறைந்திருந்தது. காற்று, தண்ணீர், தோட்டத்து மண், அடுப்பில் எரியும் நெருப்பு, முற்றத்து ஆகாசம் எல்லாவற்றிலும் அவளது மணமும், ஓசையும், வெம்மையும், குளுமையும் நிறைந்திருந்தது. அம்மாதான் அமிர்தாவின் வாழ்க்கை. அவள் மட்டும் இல்லை என்றால் இந்நேரம் வேறு எப்படியோ இருந்திருக்கும். அம்மாவின் திடமும், மன உறுதியும், எண்ணங்களும், துணிச்சலும் காலத்தைக் கடந்தவை. வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை சந்தித்தவள். தனக்கென்று சீரிய சிந்தனைகள் கொண்டவள். தன் நியாயமான தீர்மானங்களிலிருந்து அவள் ஒரு போதும் பின் வாங்கியதில்லை. அம்மா தன் வாசத்தை வீட்டில் நிரப்பி விட்டு ஊருக்குச் சென்றிரு…
-
- 2 replies
- 862 views
-
-
அது ஒரு நட்சத்திர ஹோட்டல் அறை. அங்குள்ள ஒரே டபிள் பெட்டில் படுத்திருக்கிறேன். குளிர்சாதன இயந்திரம் குளிர்ந்த காற்றை அள்ளித் தாராளமாக வீசிக்கொண்டிருக்கிறது. நான் விழித்தபடி யாரையோ எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். யாரோ பெண்ணொருத்திக்கான காத்திருப்பாக இருக்கலாம். நிச்சயமாகத் தெரியவில்லை. மனதில் அங்கலாய்ப்பு இருந்தது. அதிக நேரம் காத்திருக்கவில்லை. எதிர்பார்த்ததுபோல கதவைத் திறந்தபடி அழகான ஐரோப்பிய பெண் ஒருத்தி உள்ளே வருகிறாள். அவளது உடலில் இருந்து வந்த வாசனை அறையெங்கும் நிறைக்கிறது. காற்றில் மெதுவாக அசையும் தீபமென அசைந்து உள்ளே வந்தவள் தனது சொந்த படுக்கையறைபோல் உடைகளை ஒவ்வொன்றாக களைந்து பக்கத்தில் உள்ள கதிரையில் போடுகிறாள். இப்பொழுது அவளது தலையலங்காரத்தை கலைத்த…
-
- 1 reply
- 661 views
-
-
பாண்டிபஜார் பீடா 'ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணுங்க... முதல் போணியாகட்டும்' என்று பீடாக்கடை கோபாலகிருஷ்ணா சொன்னான்.''ஏன்... என்னுதே முதல் போணியா இருக்கட்டுமே?'' என கடைக் கண்ணாடி அலமாரி மீது ஒரு ரூபாயை எடுத்துவைத்தார் வெங்கையா.இரண்டு ஸ்பெஷல் பீடாக்களை ஒரு காகிதத் துண்டில் பொட்டலம் கட்டி வெங்கையாவிடம் கொடுத்தான் கோபாலகிருஷ்ணா. கடை கல்லாப்பெட்டியில் சில்லறை இல்லை. அவன் சட்டைப் பையில் இருந்து அரை ரூபாய் நாணயத்தை எடுத்து, வெங்கையாவிடம் கொடுக்க வந்தான்.'உன்கிட்டேயே இருக்கட்டும். நாளைக்குப் போணி' எனச் சொல்லிவிட்டு, பாண்டிபஜார் பக்கம் வந்தார் வெங்கையா.அப்போதுதான் ஒவ்வொரு கடையாகத் திறந்துகொண்டிருந்தார்கள். கீதா கபேயும் அதன் பக்கத்தில் இருந்த வெற்றிலை பாக்குக் கடையிலும் மட்டும், …
-
- 1 reply
- 599 views
-
-
கீதையடி நீயெனக்கு… (குறுநாவல்) மீண்டும் விலாசத்தை சரிபார்த்துக் கொண்டான் சந்திரன். சரிகைக் குஞ்சமெல்லாம் வைத்து அந்த அழைப்பிதழ் வெகு ஆடம்பரமாகவே அமைக்கப் பட்டிருந்தது. அவுஸ்திரேலிய தபால்காரருக்கு அழைப்பிதழ் விசித்திரமாகத் தெரியக்கூடும். அது தவறாமல் அந்த விலாசத்துக்கு போய்ச் சேரவேண்டும் என்பதற்காகவே, தெருவோரமுள்ள தபால்பெட்டி ஒன்றிலே போடாது, வடபழனி தபால் நிலயத்துக்கு அவன் வந்திருக்கிறான். அவுஸ்திரேலிய தொடர் மாடிக் குடியிருப்புகளின் முன்னால் வீதி ஓரமாக, தபால் பெட்டிகள் புறாக் கூண்டுகள் போன்று அமைந்திருக்கும். வீதியில் வலம் வரும் விடலைகள் அதன் மினுமினுப்பில் கவர்ந்து அழைப்பிதழை உருவி எடுக்கலாம். இதனால் பாதுகாப்பாக அதனை வேறொரு தடித்த தபாலுறையில் வைத்திருந்தான். த…
-
- 2 replies
- 1.2k views
-
-
முள் - சிறுகதை சபீதா, ஓவியங்கள்: ஸ்யாம் அருந்ததிக்கு, அத்தனை நேரம் இருந்த குதூகலம் கொஞ்சம் கொஞ்சமாக வடிய ஆரம்பித்தது. அம்மா சொன்னதைக் கேட்காமல் இந்த இரவில் தனியாகப் பயணிக்க நினைத்தது தவறோ? வீட்டில் தங்கிவிட்டு நாளை பகலில் கிளம்பியிருக்க வேண்டுமோ? ''சொன்னாக் கேளுடி, நாளைக்குப் போகலாம். காலம் ரொம்பக் கெட்டுக்கெடக்கு. உன் வீட்டுக்காரர்கிட்ட வேணும்னா நான் பேசறேன்.'' ''ம்மா... நான் என்ன சின்னக் குழந்தையா? சின்ன வயசுலதான் 'அங்க போகாத, இங்க போகாத, இருட்டுறதுக்குள்ள வீடு வந்து சேரு’னு அதிகாரம் பண்ணிட்டே இருப்ப... இப்பவுமா? எனக்கும் கல்யாணம் ஆயிடுச்சு.'' ''ம்ம்ம்... உனக்குக் கல்யாணமே ஆனாலும், நீ பேரன் பேத்தியே எடுத்தாலும் எங்களுக்கு நீ குழந்தைத…
-
- 0 replies
- 2k views
-
-
எல்லாம் எனக்கே! ""செல்வி, இங்கே வாம்மா.'' செல்வியின் அம்மா மலர்விழி, அழைப்பது கேட்டது செல்விக்கு. செல்வி இப்போதுதான் வணிகத்தில் முதுகலைப் படித்துவிட்டு வேலைக்காக முயன்று கொண்டிருக்கிறாள். ஒரே பெண் என்பதால் ஏகப்பட்ட செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்டவள். தனக்குப் பிடித்த பொருள்களைப் பிறர் தொடுவதைக் கூட விரும்பாத சுயநலம் மேலோங்கும் எண்ணம் கொண்டவள். அவளுடைய எண்ணத்தில் வன்மம் ஏதும் இல்லை என்றாலும், கிடைப்பதில் அரிதானவையோ அல்லது அழகானவையோ தனக்கே கிடைக்க வேண்டும் என்ற விருப்பம் அவளுக்கு சிறுவயது முதல் இருந்துவருகிறது. ஒரே பெண் என்பதால் அவள் கேட்டதெல்லாம் நடந்துவருகிறது. ""செல்வி'' மீண்டும்…
-
- 0 replies
- 734 views
-
-
எத்தியோப்பிய எலியும் நானும் எனது எத்தியோப்பிய வதிவிடத்தில் நீண்ட காலம் எலிகளும் இல்லை அவற்றின் தொல்லையும் இல்லை. சமீபத்தில் அவனோ அவளோ தெரியாது இந்துவோ கிறிஸ்தவமோ தெரியாது எலி ஒன்று வந்து சேர்ந்தது. நிச்சயமாய் நாலுகால் எலிதான். பைட் பைப்பர் என்னும் குழலூதிக் கலைஞன் போல் எலிகளை இசையால் வசியம் பண்ணும் இசையாற்றல் எனக்கில்லை. ஜெர்மனியின் கீழச் சக்சோனியில் 13 ம் நூற்றாண்டில் தோன்றிய கிராமியக் கதையின் கதாபாத்திரமே பைட் பைப்பர். எலியை விவசாயிகளின் நண்பன் என்பார்கள். அதனாற்தான் என்னவோ பின்னே வந்த ஆரியக் கடவுள் பிள்ளையாரின் வாகனமாயும் வலம் வருகிறது. “யானை” முகக் கடவுளுக்கு எலி வாகனம் என்று சில வட இந்தியர்கள் எத்தியோப்பியர்களுக்கு “அறிவியல்” விளக்கம் கொடுக்கும் போது …
-
- 6 replies
- 749 views
-
-
மூங்கைப் பெருந்தவம் - வரவணை செந்தில் ஓவியங்கள் : வேல் அது, பூனைக்கண்ணு பாறையின் கீழ் வந்து முடிந்த 15 அடி புதுதார்ரோடு. அதன் இறுதியில், ‘சாலை ஒப்பந்த விபரம்’ என்ற தலைப்பில் `புதுச்சின்னாம்பட்டி முதல் மயானம் வரை - 990 மீட்டர் சாலைப்பணி’ என்று குறிக்கப்பட்ட அறிவிப்புப் பலகை நடப்பட்டிருந்து. கடல் மட்டத்திலிருந்து 105 மீட்டர் உயரத்தில் இருந்தது பூனைக்கண்ணு பாறை. அதன்மீது ஏறிப் பார்த்தால் நேர் மேற்கே ராக்காச்சி கரடு தெரியும். அந்தக் கரடை ராக்காச்சியின் தலைமாடாகக்கொண்டால், பூனைக்கண்ணு பாறைதான் கால்மாடு. கால்பரப்பிக்கிடக்கும் அவளின் தனங்களாக வடக்கே ‘பூதல் நத்தம்’ கிராமமும் தெற்கே’ பீமராவ் அருந்ததியர் காலனி’யும் போதுமான இடைவெளியுடன் சற்று சமமான உயரத்தில் இருந…
-
- 2 replies
- 2.7k views
-
-
மூகம்மா காடு - ஜெயராணி ஓவியங்கள் : செந்தில் பசுமையை வெளுத்துப் பார்க்கும் வெயில் காலம். ஸ்ரீசைலம் என்ற அந்தச் சிறிய நகரம், சற்று அதிகமாகவே வெயிலூட்டப்பட்டிருப்பதாகத் தோன்றியது. ``மலை மேலயும் இவ்ளோ வெயில் தெரியுமா?!’’ உடலை நனைத்த பிசுபிசுப்பும் பயணக் களைப்பும் அலுப்புடன் இந்தக் கேள்வியைக் கேட்கத் தூண்டின. ``ஏறக்குறைய நடுக்காட்டுக்குப் போகப் போறோம். போய்ச் சேரவும் ராத்திரியாகிடும். அந்நேரத்துக்கு பூமி குளிர்ந்திருக்கும்’’ என்றார் சோலையன். நடுக்காட்டில் குடியிருக்கும் பழங்குடி மக்களைச் சந்திக்க, இரவு நேரத்தில் போக நேரிடும் என நினைக்கவில்லை. ஆனால், பயணத்தில் ஏற்பட்ட இடர்ப்பாடுகளால் இப்படி ஆகிவிட்டது. ``ராத்திரியில போறதுல ஒண்ணும் சிக்கல் இல…
-
- 1 reply
- 1k views
-
-
சோதனை மாலதி தன் வீட்டிலுள்ள பூஜை அறைக்குள் உட்கார்ந்திருந்தாள். கண்களை மூடியபடி இறைவனிடம் பிரார்த்தனைகளைக் கூறத் தொடங்கினாள். பொதுவான வழிபாடு முடிந்ததும் ஒவ்வொருவர் சார்பிலுமான வேண்டுதலைத் துவங்கினாள். ‘‘அம்மாவுக்கு மூட்டு வலி தொடங்கி இருக்கு. அது அதிகமாகாமல் சரியாயிடணும். இதற்கு உன் அருள் வேண்டும்...’’ கூடத்தில் அம்மா வாய்விட்டு எதையோ அரற்றிக் கொண்டிருந்தாள். ‘‘இப்ப பார்த்து இந்த மாலதிக்கு நொய்டாவுக்கு மாற்றலாகியிருக்கே. அது எங்கேயோ தில்லியைத் தாண்டி இருக்காமே. பதவி உயர்வு இப்ப ரொம்ப அவசியமா? சோதனைகளைத்தான் வேண்டிய மட்டும் அனுபவிச்சாச்சே...’’ கூடத்தில் அம்மா இப்படி தனக்குத்தானே அடிக்கடி உரத்துப் பேசிக் கொண்டிருப்பதும் அதனால் பூஜை அறையில் மாலதிய…
-
- 0 replies
- 834 views
-