கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
ஒரு நிமிடக் கதை: பார்வைகள் வீட்டுக்குள் ஏறி வந்த கணவன் முகுந்தனின் முகத்தைப் பார்த்ததுமே ஜோசியர் என்ன சொல்லியிருப்பார் என்று கல்யாணிக்குப் புரிந்தது. அவரே சொல்லட்டும் என்று பேசாமல் இருந்தாள். ‘‘கல்யாணி! நம்ம காவ்யா ஜாதகமும் பையனோட ஜாதகமும் நல்லா பொருந்தியிருக்காம். ஒரு மாசத்துக்குள்ளே கல்யாணம் நடத்திடலாம்னு ஜோசியர் சொன்னார். ஆனால், எனக்கென்னவோ இன்னும் ரெண்டு மாசம் கழிச்சு செய்யலாம்னு தோணுது. நம்ம ரோஷினிக்குச் செய்ததைவிட அம்பது சவரன் நகை அதிகம் போட்டு, ரெண்டு லட்சம் ரொக்கம் கொடுத்து, பெரிய கல்யாண மண்டபம் எடுத்து காவ்யாவை நல்லமாதிரி கல்யாணம் செஞ்சு கொடுக்கணும்னு தீர்மானிச்சிருக்கேன். அதுக்கு பணம் ஏற…
-
- 4 replies
- 957 views
-
-
யாக்கை சிறுகதை: பாஸ்கர் சக்தி ஓவியங்கள்: ஸ்யாம் குமார் ரொம்ப உற்சாகமான ஆள். எப்போதும் எதற்காவது சிரித்துக்கொண்டே இருக்கிறவன். அவன் சிரிக்க வேண்டுமெனில், பெரிய நகைச்சுவைகள் தேவை இல்லை. 'ஆபீஸ் வாசல்ல பாத்தியா குமார்... ஒருத்தன் ரௌடி மாதிரி நிக்கிறான். முதுகுல ஏதோ பொருளைச் சொருகிவெச்சிருக்கான்’ என்றால்கூட சிரித்தபடியே, 'ஆமாமா... நானும் பாத்தேன். யாரைப் போட வந்திருக்கான்னு தெரியலியே’ என்பான். அந்த அளவுக்கு கேனத்தனமான ஹ்யூமர்சென்ஸ். அன்றும் உற்சாகமாகத்தான் இருந்தான். ஒரு வாரப் பத்திரிகையில் உதவி ஆசிரியர். சக உதவி ஆசிரியர்களில் பலருக்கு இருக்கும் டென்ஷனை, இவன் முகத்தில் பார்க்கவே முடியாது. அன்று இன்னும் ரொம்ப உற்சாகமாக இருந்தான். காரணம், காலையில் ஆபீஸ…
-
- 1 reply
- 2.2k views
-
-
10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: செந்தில் டெக்னாலஜி... டெக்னாலஜி! `கண்டேன் சீதையை...’ என்ற ஹனுமனிடம், `வாட்ஸ்அப்ல பிக்சர் அனுப்பறதுக்கு என்ன?' என அலுத்துக்கொண்டார் ராமர்! - பர்வீன் யூனுஸ் ஆட்டம்... அதிரடி! தனக்காக அமைக்கப்படும் கடுமையான ஃபீல்டிங்கைப் பார்த்து மனதுக்குள் சிரித்துக்கொண்டான், அடுத்த பாலில் ரன்அவுட் ஆக பெட்டிங் புக்கிகளிடம் அட்வான்ஸ் வாங்கியிருந்த அந்த அதிரடி பேட்ஸ்மேன்! - தினேஷ் சரவணன் திருடன் ``சார்... சார்... அடிக்காதீங்க. செத்துடப்போறான்’’ என பொதுமக்களிடம் இருந்து காப்பாற்றி, கூட்டிப்போய் திருடனிடம் மாமூல் வாங்கினார் போலீஸ்! - பெ.பாண்டியன் ஏட்டு சுரக்காய் ``ஏம்பா... நம்ம மாட்டுக்கொட்ட…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஒரு நிமிடக் கதை: வேண்டாம் இந்தப் பாதை அந்தத் தெருவில் பாதி தூரம் வந்த பிறகு, “நாம வேற தெரு வழியா போகலாம்” என்று சொன்ன கணேசன் மீது எனக்குச் சற்று கோபம் வந்தது. கடந்த ஒரு வாரமாக கணேசன் இப்படித்தான் நடந்து கொள்கிறான்! நேராக போகும் வழியை விட்டுவிட்டு சுற்றுப் பாதையில் அழைத்துப் போனான். அரை கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் இடத்துக்கு என்னையும் ரெண்டு கிலோ மீட்டர் நடக்க வைத்தான். “ஏன் கணேசா! நானும் ஒரு வாரமா பார்த்துட்டிருக்கேன். நேரா போகிற இடத்துக்கு சுத்து வழியாவே போறே. உனக்கு என்னதான் பிரச்சினை?” அவனிடம் கேட்டேன். “எல்லாம் கடன் பிரச்சினைதான்!” என் றான் கணேசன். “யார்…
-
- 1 reply
- 853 views
-
-
சூரியகாந்திப் பூவை ஏந்திய சிறுமிகள்! - சிறுகதை எஸ்.ராமகிருஷ்ணன் - ஓவியங்கள்: ஸ்யாம் ``உலகத்துல இருக்கிற பூவுலேயே எதும்மா பெருசு?'' என, அடுப்படிக்குள் நுழைந்த ரம்யா கேட்டாள். முகத்தில் வெக்கை வீசக் கடுகைத் தாளித்துக் கொண்டிருந்த பார்வதி, எரிச்சலான குரலில் சொன்னாள்... ``தாமரை.'' ``இல்லம்மா. `சூரியகாந்திப் பூ'னு கிருஷ்ணவேணி சொல்றா'' என்றாள் ரம்யா. ``அதுக்கு என்னடி இப்போ?'' எனச் சலிப்புடன் கேட்டாள் பார்வதி. ``ஏன்மா, சூரியன் பின்னாடியே சூரியகாந்திப் பூ போய்க்கிட்டே இருக்கு?'' ``அது சூரியனோட பொண்டாட்டி. அதான் பின்னாடியே போய்க்கிட்டு இருக்கு, போதுமா?'' என்றபடியே அடுப்பைத் தணித்தாள். அம்மாவின் சிடுசிடுத்த பதிலில் வருத்தம் அடைந்தவள்போல ர…
-
- 1 reply
- 3.9k views
-
-
10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: ஸ்யாம் ரேட்டிங் அம்மா சொன்ன வீட்டு வேலையைச் செய்து முடித்துவிட்டு, `ரேட்டிங்' கேட்டது குழந்தை. - எஸ்.ராமன் ரகசியம் `இதை யார்கிட்டயும் சொல்லிடாதே. ரகசியமா வெச்சுக்கோ' என்று வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பினாள் லதா. - கே.சதீஷ் பணம் ``ரெண்டு நாளா ஒரே காய்ச்சல், சளி, இருமல்...'' என்ற முதியவரிடம், ``கார்டா... கேஷா?'' என்றாள் நர்ஸ். - சி.சாமிநாதன் தயவு ``தயவுசெஞ்சு இன்னிக்காவது வாக்கிங் போயேன்'' - ஆளுயரக் கண்ணாடியைப் பார்த்துச் சொன்னான் அவன். - டி.ஏ.சி.பிரகாஷ் ஹீரோயின் கிராமத்துக் கதைக்கு, மும்பையில் அழகான ஹீரோயின் தேடினார் டைரக்டர். - பெ.பாண்டியன் எச்சரிக்கை ``அந்த ஆன்ட்டியோட மிய…
-
- 0 replies
- 675 views
-
-
இரண்டொழிய வேறில்லை “அப்பா! அத்தான் கிட்டே இருந்து கடுதாசி வந்திருக்கு.”- செம்பவளவல்லி படபடப்புடன் அந்தக் கடிதத்தைப் பிரித்தாள். இருளப்பன் மகள் அருகில் நெருக்கமாக நின்றபடி, “முதல்ல படி, பாப்பம். செந்தில் என்ன எழுதி இருக்கு?” உள்ளம் மகிழ்ச்சியால் துள்ள, கடிதத்தைப் பலமுறை மனதிற்குள் படித்துப் பார்த்தாள் செம்பவளம். “அன்பு பவளம்! இப்போது எனது ஐ.ஏ.எஸ் பயிற்சி முடிந்து எங்களை வேலைக்கு அனுப்பத் தீர்மாணிக்கும் சமயம், நமது ஊர் எல்லைக்காளியை மனப்பூர்வமாக வேண்டிக்கொள். விரைவில் பெரிய கலெக்டராக, நம்ம ஊரிலேயே உன் அருமை அத்தான் வருவேன்! பிறகு கேட்க வேணுமா? நமது சபதம் நிறைவேறும். ஆசை அத்தான்’ செந…
-
- 0 replies
- 920 views
-
-
ஜல்லிக்கட்டு... (1)... எழுத்தாளர் லதா சரவணன் வழங்கும் பொங்கல் சிறப்பு மினி தொடர் கதை.. ஜல்லிக்கட்டு. 10 மணிக்கே ரோடு வெறிச்சோடிப் போயிருந்தது, ராக்காயியின் இட்லிக் கடையில் மட்டும் கொஞ்சம் கூட்டம் சொச்சமிருந்தது. தூங்காநகரம் என்று பெயர் பெற்ற மதுரையின் தெருக்களில் வண்டிகள் தங்கள் டயர்களை செலுத்தி ஒவ்வொரு வீட்டு வாயிலில் போட்ட கோலத்திற்குள் பாகப்பிரிவினையை ஏற்படுத்தியிருந்தது. பிள்ளைகள் ரோட்டில் ரெயில் வண்டி விட்டு விளையாடிக் கொண்டு இருந்தார்கள். தெருமுனையில் இளைஞர் சங்கத்தில் தனுஷ் கொலைவெறிப்பாடலை ரேடியோவில் பாடிக்கொண்டு இருந்தார். ஒழுங்கா சாப்பிடறியா ? இல்லை பூச்சாண்டிகிட்டே பிடிச்சிக்கொடுத்திடவா என்று குழந்தையிடம் போரா…
-
- 4 replies
- 1.9k views
-
-
முயல் சுருக்கு கண்கள் - சிறுகதை அகரமுதல்வன் - ஓவியங்கள்: செந்தில் மிகப்பரந்த மாலையில் நடந்துவரும் கிழவருக்கு, மெலிந்த அந்தியின் ஒளி மேற்கில் இருந்து கூசியது. ஒரு சாயலில் கண்களை மூடித் திறந்தார். கோடுபோல நடந்துபோகும் தனது நிழலை ஊடறுத்துப் பறக்கும் மணிப்புறாவைப் பார்க்க அவருக்குத் தோன்றவில்லை. மணிப்புறாவின் அலகில் கிழவர் தொங்கி நின்றதைப்போல அந்தரத்தின் அழகு நிழல் காட்டியது. பாலையின் குரலாகத் தொய்வற்று முன்னேறும் அவரின் பின்னே, நடந்துபோகும் அமலனின் வலதுபக்கத் தோளில் தொங்கிக் கொண்டிருக்கிறது உடும்பு. மூச்சிரைக்க நடக்கும் அவன் காலடிக்கு இடையில் காடு பெருகுகிறது. கிழவர், காலைக் கழுவி, குதிக்காலைத் திருப்பிப் பார்த்து வீட்டுக்குள் சென்றார். உடும்பை வ…
-
- 0 replies
- 2.9k views
-
-
ஒரு நிமிடக் கதை - படிப்பு “இந்தாங்க நம்ம மோகனுக்கு புராக்ரஸ் ரிப்போர்ட் கொடுத்திருக்காங்க. கையெழுத்துப் போட்டு கொடுங்க!” மனைவி ரேணுகா நீட்டிய ரிப்போர்ட் கார்டை வாங்கிப் பார்த்த கோபாலுக்கு கோபம் தலைக்கேறியது. “எந்தப் பாடத்துலயும் 60 மார்க் தாண்டல! தன்னோட மகன் ஆனந்த் 90 மார்க் வாங்கியிருக்கிறதா பக்கத்து வீட்டு கணேசன் பெருமையா சொல்லிட்டுப் போறார். உன் பிள்ளை மோகன் படிக்கிற லட்சணத்தைப் பார்த்தியா? எங்கே அவன்? உட்கார்ந்து படிக் கிறதை விட்டுட்டு விளையாட போய்ட்டானா? எல்லாம் நீ கொடுக்கிற செல்லம்தான்…” கோபத்தில் கத்தினார் கோபால். “நல்லா படிக்கலைன்னா அவன் என் பிள்ளையா? உங்க பிள்ளையும்தானே! அது சரி…
-
- 0 replies
- 2.1k views
-
-
சிறுகதை - விடிவெள்ளி ப்ரியதர்ஷினி கணேசன், ஓவியம்: கார்த்திகேயன் மேடி “யேட்டியேஏஏய்…. பாத்து சூதானமா கொத்து… நாத்துல பட்டா நஞ்சு போய்டும்” - வேகமாக ஓடிவந்த தையமுத்து மூச்சிரைக்கக் கத்தினாள். “யக்கோவ்… நீ வெசனப்படாத… நானு பார்த்துக்குறேன். நீ இப்டி இரைக்க இரைக்க ஓடியாந்தினா பேச்சி அய்த்தான் எங்களைத்தான் வையும். புள்ளையை மடில வச்சுக்கிட்டு நீ அடங்க மாட்றியே” - அதட்டினாள் வள்ளிக்கண்ணு. “அடிப் போடி கூறுகெட்டவளே… பச்சையும் புள்ளையும் எனக்கு ஒண்ணுதான்… நீ ஒழுங்கா பாத்துக் கொத்து” - களைக்கொத்தியைக் கையில் எடுத்துக்கொண்டு கதிர்க் கூட்டத்துக்குள் நுழைந்தாள் தையமுத்து. வாகாகக் கொத்தியைப் பிடித்துக் களையெடுக்கும் தையமுத்துவை அபூர்வமாகப் பார்ப்பதுபோல …
-
- 0 replies
- 3.3k views
-
-
வெந்துருதி தி(த்)றைஸ் – ( சிறுகதை ) – கோமகன். முடிவு. ஹொப்பித்தால் ஃவிஷா(L’hôpital Bichat): அந்த ஆஸ்பத்திரியின் அவசரப்பிரிவு பலரின் அழுகுரலில் திணறியது. மதுமிதா செய்வதறியாது அழுதவாறே நின்றிருந்தாள். இந்த அல்லோல கல்லோலத்திற்குள்ளும் ஆஸ்பத்திரியின் அந்தப்பிணவறையில் அமைதியின் ஆட்சி அள்ளித்தெளிந்திருந்தது. அந்த நீண்ட அறையின் மாபிள் பதித்த தரையின் மேல் பலவகை அடுக்குகளில் லாச்சிகள் இருந்தன. லாச்சிகளின் முனையில் இருந்து மைனஸ் 20பாகை உறை குளிரின் வெண்புகை கசிந்து கொண்டிருந்தது. சிறிது மணித்துளிகளுக்கு முன்பு ஆயிஷா, சுலைமான், டோலி, ரத்தினசிங்கம் என்ற ரட்ணா என்று நால்வராக இருந்த நாங்கள் இப்பொழுது ‘அவைகளாக’ இலக்கங்களுடன் லாச்சிகளில் உறைந்து போயிருந்தோம். இந்த இலக…
-
- 0 replies
- 984 views
-
-
10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: ஸ்யாம் குறி ``பேருந்து எப்போ வரும்?'' எனக் கேட்டார், கிராமத்தில் குறி சொல்லும் பூசாரி. - அபிசேக் மியாவ் முன்னேற்றம் ஸ்கூட்டர் ஓட்டத் திணறும் அப்பா, கார் ஓட்டப் பழகினார் செல்போன் கேமில். - கோ.பகவான் சத்துணவு வீட்டில் இருந்து மதிய உணவு கொண்டுவந்திருந்தார் சத்துணவு ஆயா. - சி.சாமிநாதன் ஒற்றுமை ``வழிகாட்ட ஒரு தலைவனே இல்லாம, எப்படி உங்களுக்குள்ள போராட்டம் நடத்துற ஒற்றுமை வந்தது?'' என ஆச்சர்யமானார் சுதந்திரப் போராட்டத் தியாகி. - பெ.பாண்டியன் ஏமாற்றம் ``ஏ.டி.எம்-ல ஒரு பேய் சார்'' என இயக்குநர் சொன்னதும், ``ஏமாந்துபோயிருக்குமே!'' என்றார் புரொடியூஸர்.…
-
- 0 replies
- 1.9k views
-
-
நிலமதி - சிறுகதை சிறுகதை: அகரமுதல்வன், ஓவியங்கள்: ஸ்யாம் நெடுநேரம் அவளோடு இருந்த நாளாக நேற்று இருந்தது. பருவத்தின் வசந்த நடை காற்றில் இருந்து கழன்று, எம் இருவரிலும் விழித்துக்கொண்டதாகக் கதைத்துக் கொண்டிருந்தோம். தான்தோன்றியாகவே மழைத்தூறலில் நனைவதைப்போல அவளது கண்கள் அசைந்தன. அவளின் ஜீவ ஆற்றல்மிக்க விரல்களை அளந்து கொண்டிருந்தேன். அந்தக் கணங்கள், என்னை இப்போதும் திகைக்கச் செய்கின்றன. அலங்கோலமான வாழ்வில் அசையும் ஆகாயத்தில் எழுந்து பறக்கும் சாம்பல் நிறப் புறாக்களைப்போல் அல்லவா இருந்திருக்கிறோம். கடைசிச் சந்திப்பின் இறுதியில், நிலமதி தந்த பொதிக்குள் பலகாரங்களும் இரண்டு ஷேர்ட்களும் இருந்தன. இருவரின் பிரிவுக் களைப்பு, அந்தப் பொதியில் அரூபமாகக் கனத்துக…
-
- 0 replies
- 2.6k views
-
-
10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: செந்தில் ஸீட்! தன் மகன், அரசுக் கல்லூரியில் இலவச ஸீட் வாங்குவதற்காக, தனியார் பள்ளியில் அதிகப் பணம் கொடுத்து சேர்த்தார் ரமேஷ்! - கண்ணன் பணம் பள்ளிக் கட்டணம் கட்டாததால், மாணவியை வகுப்பறை வாசலில் நிற்கவைத்தாள்... இரண்டு மாதமாக சம்பளம் வாங்காத டீச்சர்! - கட்டுமாவடி கவி கண்மணி தமிழன்டா! சென்னையைவிட்டு அமெரிக்கா சென்ற நண்பன் சந்தோஷமாகச் சொன்னான்... “அங்கே நிறைய தமிழ் ஆளுங்க இருக்காங்கடா!” - சுந்தரம் ராமசாமி திருட்டு! ``பென்சில் திருடினதுக்கு மிஸ் அடிச்சிட்டாங்க’’ எனக் கேவிக்கேவி அழுத மகளிடம், `‘திருடுறது தப்பு... `பென்சில் வேணும்’னு அப்பாகிட்ட கேட்டிருந்தா ஆபீஸில் இருந்து கொ…
-
- 0 replies
- 1.9k views
-
-
விசிறி வீடு: காலத்தின் வாசனை தஞ்சாவூர்க் கவிராயர் நாட்டு மருந்துகளும் பூஜை சாமான்களும் விற்கும் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பனை ஓலை விசிறி என் கவனத்தை ஈர்த்தது. நான் அப்படியே ஐம்பது வருடங்கள் பின்னால் போய்விட்டேன். ஆசையாக அதைத் தொட்டேன். என் உடம்பு சிலிர்த்தது. பத்திரமாக அதை வீட்டுக்கு வாங்கி வந்தேன். ஓரத்தில் முக்கோணம் முக்கோணமாகப் பூ பின்னிய விசிறி. பச்சை ஓலை வாசனை இன்னும் விசிறியில் ஒட்டிக்கொண்டிருந்தது. விசிறும்போது ஆஹா.. முகத்தில் மோதும் அந்த பச்சை வாசனை! எங்கள் வீட்டு உறுப்பினர்கள் ஒருவர் கூட எடுத்து விசிறிப் பார்க்கவில்லை. அதற்குத் தேவையும் இல்லை அல்லவா? வீட்டில் எங்கு பார்த்தாலும் மி…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஒரு நிமிடக் கதை - எடை ரயிலுக்காகக் காத்திருந்தார் மாதவன். எடை பார்க்கும் மெஷின் கண்ணில்படவே, ஏறி நின்று ஒரு ரூபாய் காசைப் போட்டார். ஒரு மாற்றமும் இல்லை. மெஷின் அமைதியாக இருந்தது. ‘சே..’ என்று அலுத்தபடி பக்கத்தில் இருந்த கடைக்குச் சென்று தண்ணீர் பாட்டில் வாங்கினார். “மெஷின் கொஞ்சநாளா ரிப்பேரா இருக்கு சார்.. யாரும் கவனிக்க மாட்டேங் கறாங்க. போடுற காசெல்லாம் வேஸ்ட் ஆயிடுது” என்றார் கடைக்காரர். அதே சமயம் ஏதோ சத்தம் கேட்டுத் திரும்பினார் மாதவன். ஒரு கிராமத்து தம்பதி மெஷின் பக்கம் வந்தார்கள். பக்கத்தில் சென்று அவர்களை எச்சரிப்பதற்குள் அவர்களுடைய சின்ன மகள் மெஷினில் ஏறி காசு போட்டாள். சிறிது நேரம…
-
- 1 reply
- 1.3k views
-
-
புரிந்தது ரோஸி அப்படிச் செய்வாளென்று யாரும் நினைக்கவில்லை. உண்மை எதிரே வந்து மோதிய போது ஒவ்வொருவர் மனத்திலும் ஆத்திரம் பொங்கியது. நன்றி கெட்ட பெண்! வளர்த்து ஆளாக்கியவர்கள் முகத்தில் கரியைப் பூசி விட்டுப் போய் விட்டாளே! அந்த வீட்டில் எடுபிடி வேலை செய்யும் பெண்ணாகவா ரோஸியை நடத்தினார்கள்? கிறிஸ்துமஸ், ஈஸ்டர்- எந்தப் பண்டிகை வந்தாலும் ரோஸிக்கு புது டிரெஸ் வாங்காமல் இருக்க மாட்டார்களே! அவளை ஸ்கூலில் சேர்த்து அவள் நன்றாகப் படித்து முன்னேறுவதற்கு எல்லா வசதியும் செய்யவில்லையா? சுமை புத்தகங்களும், நோட்டுப் புத்தகங்களும் வாங்கிக் கொடுத்து பஸ் பாஸுக்குப் பணம் கொடுத்து அவளுடைய படிப்பில் எப்படியெல்லாம் அ…
-
- 1 reply
- 2k views
-
-
ரங்கராட்டினம் - சிறுகதை நர்சிம், ஓவியங்கள்: செந்தில் அந்தத் தளம் பரபரப்பில் பற்றி எரியத் தொடங்கியிருந்தது. படப்பிடிப்புத் தளம் என்ற பெயர் எல்லாம் வெளியே உள்ளவர்களுக்குத்தான். இங்குள்ள எங்களுக்கு அது ‘ஸ்பாட்.’ அதுவும் என்னைப் போன்ற புதியவனுக்குத் திகுதிகுவென உடலில் நெருப்பு எரிவது போன்ற பிரமையை ஏற்படுத்திவிடும். ஒரே நேரத்தில் பலர், பல வேலைகளைச் செய்துகொண்டிருக்கும்போது எழும் இயற்கையான சத்தம்தான். ஆனால், எல்லாமே செயற்கைக்காக. எந்த நொடியிலும் இயக்குநர் வந்துவிடுவார். அவர் வருவதற்கு முன்னர் செட்டில் எல்லாம் பேசியது பேசியபடி இருக்க வேண்டும் என்பதைத் தாரகமாக வரித்துக்கொண்டு, ஒரு போர்ப்படைத் தளபதிபோல் சத்தம் கொடுக்கும் விக்டரைப் பார்த்துக்கொண்டிருப…
-
- 1 reply
- 2.5k views
-
-
ஒரு நிமிடக் கதை: படிப்பு வழக்கம் போல் அந்த இட்லி கடையில் நல்ல கூட்டம். காரணம், ருசி, சுகாதாரம் மட்டுமல்ல.. அங்கு வேலை செய்யும் அந்த இளவயசுப் பையனும்தான். கில்லி மாதிரி சுழன்று, சாப்பிட வருபவர்களையும், பார்சல் வாங்கிப் போகிறவர்களை யும், மின்னல் வேகத்தில் கவனித்து இன்முகத்துடன் அனுப்பி வைப்பான். இட்லி வாங்க வந்த பெரியவர் ஒருவர், பையனைப் பற்றி கடை முதலாளியிடம் விசாரிக்கத் தொடங்கினார். “என்ன சம்பளம் குடுப்பீங்க.. இந்த பையனுக்கு..?” “எனக்கு கிடைக்கிற சொற்ப லாபத்துல என்னத்த குடுத்துடப் போறேன். சாயந்திரம் 7 மணியிலிருந்து 10 மணி வரை வேலை. போகும் போது இங்கேயே சாப்பிடச் சொல்லிட்டு,கையில் 5…
-
- 1 reply
- 1.5k views
-
-
நேற்று முதல்… நேரிலும், தொலைபேசியிலும், ஈமெயிலிலும், இன்பாக்ஸிலும் 100க்கும் மேற்பட்ட வாசகவாசகிகள் தொடர்பு கொண்டு, எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள், ஏழைக் குழந்தைகளுக்கு உதவும் சிமிர்னா தொண்டு நிறுவனம் வெளியிட உள்ள “மனிதம்” நூலுக்காக பகிர்ந்து கொண்ட, இந்த உன்னத நிகழ்வினை, எளிதில் படிப்பதற்கு வசதியாக தட்டச்சு செய்து வெளியிடச் சொல்லி கோரிக்கைகள் வைத்ததைத் தொடர்ந்து இதோ இங்கே அனைவரின் விருப்பப்படியே பதிவாகிறது : எது மனிதம்? அழுகிற விழிகளைத் துடைக்க விரல்களை நீட்டுவதா? பசிக்கிற குழந்தைக்கு பன் வாங்கித் தருவதா? துக்க வீட்டில் பிணம் தூக்கி பூ வீசுவதா? கோடையில் வாசலில் தண்ணீர் பந்தல் வைப்பதா? கிழவி பாதை கடக்க கரம் பிடித்து போக்குவரத்தை நிறுத…
-
- 0 replies
- 1.4k views
-
-
டெலிபோன் கால் - எஸ்.கே. மூர்த்தி பாழாய்ப் போன டெலிஃபோன் அடிக்கொரு தரம் கைகடிகாரத்தைப் போர்ட்டிகோவில் நின்று கொண்டிருந்த சியாமளாவின் இனிய கற்பனைகளை அதன் காரசாரமான ஒலி கலைத்தது. அவளது அழகு முகத்தில் ரவுஜ் மெருகையும் கலைத்துக் கொண்டு எள்ளும் கொள்ளும் வெடித்தன. வேண்டா வெறுப்போடு விரைந்து சென்று ரிஸீவரை எடுத்தாள். ‘ஹலோ’ ‘டியர் சியாமள்! வில் யூ ப்ளீஸ் எக்ஸ்க்யூஸ் மீ?’ போலியான பரிவு ததும்பும் அந்த வார்த்தைகளைக் கேட்டதும் அவளுக்குச் சப்பென்றாகிவிட்டது. ஒரேடியாய்த் துள்ளிக் கொண்டிருந்த மனம் சோர்ந்து போய்விட்டது. ‘டோண்ட் பீட் எபெளட் த புஷ்! சினிமாவுக்கு வர முடியாதபடி ஒரு கேஸ் …
-
- 0 replies
- 751 views
-
-
அம்மாவின் காதல் சிறுகதை: விநாயகமுருகன் நான் உட்கார்ந்திருந்த இடத்துக்கு எதிரே இருந்த சுவரில் மாட்டியிருந்த நாள்காட்டி, ஜன்னலுக்கு வெளியே இருந்து வீசிய கடல்காற்று மோத படபடத்துக் கொண்டிருந்தது. நாள்காட்டியில் இருந்த கன்னிமேரி, கையில் இருக்கும் தனது குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டிருந்தார். பிரபஞ்சத்தின் முழு கருணையும் மேரியின் கண்களில் தெரிந்தது. நான் கையில் இருந்த அலைபேசியைப் பார்த்தேன். `இன்று காலை அம்மா இறந்துவிட்டார். உங்களை தொடர்புகொள்ள முடியவில்லை. உடனே நீங்கள் கிளம்பி வரவும்’ என இருந்தது. நேற்று முன்தினத்தில் இருந்து எத்தனை முறை இந்த வாட்ஸ்அப் தகவலைப் படித்திருப்பேன் எனத் தெரியவில்லை. அவளுக்கு நான் செய்திருக்கவேண்டிய நியாயமான இறுதிக் கட…
-
- 1 reply
- 4.6k views
-
-
ஒரு நிமிடக் கதை உளவியல் உளவியல் உற்சாகமாய் வீட்டுக்குள் நுழைந்த குருமூர்த்தி குழந்தைகள் கையில் பழங்களைக் கொடுத்தபடி மனைவி வித்யாவை அழைத்தான். “வித்யா! 75 ஆயிரம் ரூபாய் சம்பளத்துல புதிய வேலை கிடைச்சிருக்கு. இனியும் இந்த பாவப்பட்ட ஜனங்க வசிக்கிற இடத்துல இருக்க வேண்டாம்னு தோணுது. கொஞ்சம் வசதியானவங்க இருக்கிற இடத்துக்கு மாறிடலாம்னு தீர்மானிச்சுட்டேன்” – உற்சாகமாய்ச் சொன்னான் குருமூர்த்தி. “10 வருஷமா இங்கதானே இருக்கோம். இப்போ எதுக்கு இடம் மாறணும்?” –வித்யா புருவத்தைச் சுருக்கியபடி கேட்டாள். “அடுத்த வாரமே கார் வாங்கப்போறேன். குழந்தைகளை நல்ல பள்ளிக்கூடத்துக்கு மாத்தணும். அதுக்கெல்லாம் …
-
- 0 replies
- 2.5k views
-
-
சந்தியா - சிறுகதை அவள் அறிமுக எழுத்தாளர் - புவனா ஸ்ரீதர் விமானம் ஒரு மணி நேரம் தாமதம். அதுவரை மொபைல்தான் துணை. ஃபேஸ்புக்கில் சந்தியா புகைப்படத்துக்கு லைக் போட்ட படி, ‘எப்படி இருக்க வேண்டியவ... அடையாளம் தெரியாத அளவு மாறிட்டா...’ என நினைத்துக் கொண்டேன்.. சந்தியாவைப் பார்க்கத்தான் கனடாவில் இருந்து இந்தியாவுக்கு நானும் என் எட்டு வயது மகளும் பயணப்படுகிறோம். அப்படியே சந்தியாவின் நினைவில் மூழ்கினேன்... இன்ஜினீயரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு. சந்தியாவுக்கு பெஸ்ட் அவுட்கோயிங் ஸ்டூடன்ட் அவார்ட் கிடைத்தது. கேம்பஸ் இன்டர்வியூவில் இருவரும் ஒரே கம்பெனிக்குத் தேர்வானோம். சந்தியா, வசதியான குடும்பத்தில் ஒரே பெண். என் குடும்பத்தில் நான் வேலைக்குப் போகவேண்…
-
- 2 replies
- 2.4k views
-