Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. ஆள் மாற்றிடும் 'அட்டகத்தி' வியூகம்! நானும் புருஷோத்தும் பெரம்பூரை அடுத்த அகரம் அமிர்தம்மாள் காலனியில் அறை எடுத்து தங்கியிருந்தோம். புருஷோத் அருகில் உள்ள ஒரு ஹார்டுவேர் கம்பெனியிலும், நான் ஒரு பத்திரிகையிலும் வேலை செய்ய நாட்கள் நகர்ந்தன. வாழ்க்கையில் எந்த சுவாரஸ்யமுமே இல்லை என்று அடிக்கடி புருஷோத் சொல்லிக்கொண்டே இருப்பான். அந்த மாதிரி நீண்...ட பிரசங்கம் நடத்திய ஒரு மாலைப்பொழுதில் வந்த ஃபோன் கால் புருஷோத்தை புரட்டிப்போடும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ''ஹலோ... கார்த்தி இருக்காரா?'' என்றது எதிர்முனையில் ஒரு பெண்ணின் குரல். ''நான் அவர் தம்பி பேசுறேன். அண்ணன் ரெடியாகிறார். நீங்க?'' ''…

  2. மான்டேஜ் மனசு 2 - இன்றும் நெஞ்சில் அழியாத கோலங்கள்! நாங்கள் மொத்தம் ஆறு பேர். கல்லூரி முடித்த தருணம் அது. தீபாவளியை முன்னிட்டு திரைப்படம் பார்க்கலாம் என்று திட்டம். கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் அஜித் நடித்த 'வரலாறு' வெளியாகியிருந்தது. கே.எஸ்.ரவிகுமார் பிறந்து வளர்ந்ததெல்லாம் எங்கள் ஊருக்குப் பக்கத்தில் உள்ள வங்கனூர் கிராமத்தில்தான். பத்து வயது வரைக்கும் அங்கேதான் பாட்டி வீட்டில் ரவிகுமார் வளர்ந்ததாக சொல்வார்கள். அதனாலேயே ரவிகுமார் நம்ம ஏரியா ஆள் என்ற பாசம் எங்கள் பக்கத்து கிராமங்கள் முழுக்க ஒட்டிக்கிடந்தது. அஜித் நடித்த படம் என்றால் இன்னும் சொல்லவா வேண்டும்? நான், மணி, உதயன், புருஷோத், …

  3. மான்டேஜ் மனசு 1 - அலைபாய்ந்தவன் உணர்ந்த காதல்! | நிஜம் - நிழல் - புனைவு அடங்கிய புதிய ஆன்லைன் தொடர் | ஆறு வருடங்கள் கழித்து அவளிடமிருந்து இப்படி போன் கால் வருமென்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ''ஹலோ'' குரல் கேட்ட சில நொடிகளிலேயே அவள்தான் என்பதை உணர முடிந்தது. ஆனால், நம்ப முடியாதவனாய் சிறிது நேர மவுனத்துக்குப் பின் ஹலோ என்றேன். பரஸ்பரம் நல விசாரிப்புகளுக்குப் பிறகு, எதையோ சொல்ல வந்தவள் தயங்கித் தயங்கி நின்றாள். அந்த ஒரு நிமிடத்துக்குள் நான் அவளை... முதன்முதலாகப் பார்த்த 22 வயசுப் பையனாகவே மாறியிருந்தேன். நெருடல் உடைத்து சரளமாகப் பேசினேன். ''மணி கிட்டே பேசினேன்'' என்றாள். …

  4. இனிமேல் என்பது இதில் இருந்து... - சிறுகதை நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... வண்ணதாசன், ஓவியங்கள்: ஸ்யாம் மழை விட்டுவிட்டதா என்று ஆவு கையை நீட்டிப் பார்த்தபடியே தெருவாசல் நடைப்பக்கம் கழற்றிப்போட்டிருந்த செருப்புகளுக்குள் காலை நுழைத்துக்கொண்டிருந்தாள். வெளிச்சம் இல்லை. கரன்ட் போயிருந்தது. நனைந்த செருப்பில் இருந்து தோல் வாடை அடிப்பதாக, எப்போதோ நுகர்ந்த வாசனை அவள் முகத்துக்குள் வந்தது. புளியங்கொட்டை அளவுகூட இராது... ஒன்றை அடுத்து இன்னொன்றாக குட்டிக்குட்டித் தவளைகள் தெருவில் இருந்து வாசல் பக்கம் குதித்து நகர்ந்து வந்தன. கோமு இதுவரை அசையாமல், தந்தி போஸ்ட் பக்கம் கெட்டுக்கிடையாகத் தேங்கியிருக்கும் தண்ணீரில் மழைப்புள்ளி விழுவதையே பார்த்துக் க…

  5. ஒரு நிமிடக் கதை: எள்ளாமை! வங்கியில் என் உதவியாளர் நாகுவின் யோசனைப்படி, அப்பிரமுகரை நேரில் சந் தித்து காசோலையைப் பெற்றுவரலாம் என்று காரில் புறப்பட்டோம். நாகு சமீபத்தில்தான் மாற்றலாகி வந்தார். சற்று நேரத்தில் நாகு என்னிடம், “நீங்கள் காரிலேயே இருங்கள். நான் அவர் எங்கிருக் கிறார் என்று விசாரித்து வரு கிறேன்” என்று சொல்லிச் சென்றார். கார் வணிக வளாகத்தின் எதிர் புறம் நின்றது. வளாகத்தின் முன்புறம் பூக்கடை. அது மகாலிங்கத்தினுடையது.. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு நான் மேலாளராக பணி யேற்ற போது, மகாலிங்கம் அவரது பூக்கடைக்காக ஒரு சிறிய தொகையை கடனாகக் கேட்டார். வாராக் கடன் அதிகமுள்ள அக் கிளையில் மேலும் அதை அதி கரிக்க வேண்டாமென்று மறுத…

  6. தடயம் - சிறுகதை தமயந்தி, ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு கதவைத் திறக்கும் ஓசை கேட்டதும், வசந்தியின் உயிருக்குள் சிறிய அதிர்வு ஏற்பட்டது. ரயில் வருவதற்கு முன்னர் தண்டவாளம் லேசாக அதிர்வதுபோல, கண்களை ஒருமுறை இறுக மூடித் திறந்தாள். தேவசகாயம், கதவைத் திறந்து நின்றுகொண்டிருந்தான். அதே சுருள் முடிதான். ஆனால், லேசாக நரைத்திருந்தது. `மனதின் அதிர்வுகள் கண்களில் நீராக மொழிபெயர்க்கப்படுமா என்ன? அவன், தன்னையே உலுப்பிக்கொள்கிறான். ``உள்ளே வா தேவா... உட்காரு.'' அவன் கதவைக் கொண்டியிட்டு நேராக நடந்து அவள் அருகே வந்து, கைகளைப் பிடித்துக்கொள்கிறான். வசந்தியின் கண்களில் நீர் வழிந்தபடி இருக்கிறது. கண்களை இறுக மூடிக்கொள்கிறாள் வசந…

  7. Started by நவீனன்,

    நாவல் மரம் சிறுகதை: அகரமுதல்வன், ஓவியங்கள்: ம.செ., `அவளை இன்று பார்க்க வேண்டும்' என நினைத்தபடியேதான் நித்திரையில் இருந்தே கண்விழித்தேன். பிரிவுக் காலங்களின் பொழுதுகள் எல்லாம் எனக்குள் குடிகொண்டுவிட்டதைப் போன்று சலனமுற்றுக்கொண்டே இருக்கிறேன். இரவும் பகலும் தணல் என எரிந்தன. நானும் என் சிந்தையும் சாம்பலாகியும், அவளின் கண்களும், மூக்கின் மச்சமும், பூவரசம் இலையின் நரம்புச் சிரிப்பும், எரியாத விருட்சத்தின் வேராக இன்னும் இன்னும் எனக்குள் இறங்கி வளர்கின்றன. அவளின் நினைவுகள், வளரும் நிலம் என மாறிய என் பொழுதுகளில் யுத்தம் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. எறிகணைகள் விழுந்து வெடித்த வீதிகளில் ஊரே இடம்பெயர்ந்துகொண்டிருந்த ஒரு மதிய நேரத்தில், கோயில் கிணற்றில் தண்ணீர…

  8. செக்கு மாடு (குறுநாவல் ) வ.ஐ.ச.ஜெயபாலன் தனக்கு தொல்லை தருகிற பேய் ஒளித்திருக்கிற இடத்தை இன்னமும் குமரனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அன்றைக்குப் பொழுது சாய்வதற்கு முன்னமே அந்தக் கொடிய பேயைக் கண்டுபிடித்து நொருக்கிப் போடுவதாக அவன் சங்கற்பம் செய்திருந்தான். நோர்வே போன்ற துருவத்து நாடுகளில் கோடை நாட்களில் பொழுது சாய்வதில்லை என்பது வேறு விடயம். அந்தப் பேயை யார் ஏவி விட்டிருப்பார்கள் என்பது பிடிபடவில்லை. அவனைச் சந்திப்பதற்க்காக சென்னைக்கு வந்து இரண்டு வருடங்களுக்கு மேலாக தவமிருக்கும் அவன் தாய் கனகம்மாவுக்கும் காதலியும் தூரத்து உறவுக்காரியுமான கமலிக்கும் கூட இது பற்றிக் கடிதம் எழுதியிருந்தான். பதறிப் போன அவர்கள் மறுகடிதத்துக் குள்ளேயே மந்திரித்த ந…

    • 3 replies
    • 2.2k views
  9. Started by நவீனன்,

    பகை நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்புசிறுகதை: நர்சிம், ஓவியங்கள்: ஸ்யாம் மயானம் ஸ்தம்பித்தது. எல்லோருடைய பார்வையும் செல்வத்தின் மீது குவிந்திருந்தது. குமாரசாமி அய்யா, செல்வத்தைப் பார்த்துக் கத்தியதால்தான் இந்த அமைதி. மயானத்தில் ஒரு நொடி மயான அமைதி. `எங்கே... செல்வம் பதிலுக்கு ஏதாவது சொல்லி, மீண்டும் பெரிய சண்டை மூண்டுவிடப்போகிறதோ' என்ற அச்ச முடிச்சு, ஒவ்வொருவரின் பார்வையிலும் விழுந்திருந்தது. மீண்டும் கத்தினார் குமாரசாமி. “ஏன்டா, இங்கன என்ன கொமரியா கொள்ளையில போயிட்டா? `போறேன் போறேன்'னு இழுத்துக்கிட்டுக்கெடந்த கெழவி, கல்யாணச்சாவாப் போயிருக்கா. ஒம் பொண்டாட்டி நெற மாசமா இருக்காளாம்ல... அப்ப நீ காட்டுப் பக்கம் வரலாமா, ஆகுமா, என்னா இதுக்கு…

  10. திருவனந்தபுரம் வண்டி வந்தால் தெரிந்திருக்கும் கோவை ரயில் நிலையத்திற்கு வெகு சீக்கிரமாகவே வந்து விட்டேன். சென்னை செல்லும் என் ரயில் வர இன்னும் ஒரு மணி நேரத்துக்கும் மேல் இருந்தது. வழக்கம் போல வேடிக்கை பார்க்க வசதியாக ஒரு இடத்தைப் பிடித்து உட்கார்ந்து கொண்டேன். முதலாம் நடைமேடையில் வேறேதோ ஒரு ரயில் புறப்படத் தயாராய் நின்று கொண்டிருந்ததால், அந்த ரயிலுக்கான அவசரம் நடைமேடை முழுவதும் நிரம்பி வழிந்தது. ஒரு மணல் கடிகாரத்தைப் போலவே நடைமேடைகள் இயங்குகின்றன. ஒவ்வொரு ரயிலும் வந்து சேர்வதற்கான அறிவிப்பு ஒலிக்கவும், ஒரு அமானுஷ்யமான கை கடிகாரத்தை நிமிர்த்தி வைத்து விடுகிறது. மேல் குப்பியில் இருக்கும் மணல் சீராகக் கீழே இறங்கி நிரம்பும் காலத்தில் வருகைகளும், புறப்பாடுக…

  11. தாய்வாசம் - சிறுகதை யுவகிருஷ்ணா, ஓவியங்கள்: ம.செ., மூணு வயசுக் குழந்தைகிட்டே உங்களுக்கு ஏன் இவ்வளவு வன்மம் மன்னி?'' - பாரதி, ஆச்சரியத்துடன் கேட்டாள். ''ஆமாண்டியம்மா... ஷைலு எனக்குச் சக்களத்தி. அவ மேலே எனக்குப் பொறாமை. போடி... வேலையப் பார்த்துக்கிட்டு. உனக்கு ரெஸ்ட் கொடுக்காம எப்போ பார்த்தாலும் 'பாரதிம்மா... பாரதிம்மா...’னு ஓடிவந்து மடியிலே படுத்துக்கிட்டுத் தொல்லை கொடுக்குறாளேனு உன் மேல கரிசனப்பட்டா... வன்மமாம், வன்மம்!'' - அலுத்துக்கொண்டே சொன்னாள் புஷ்பவல்லி. டி.வி. சீரியல்களில் வரும் பெண்கள் மாதிரி புஷ்பவல்லி அப்படியொன்றும் கொடுமைக்காரி கிடையாது. அவளுடைய நாத்தனார் பாரதி, 10 ஆண்டுகள் கழித்து கர்ப்பமாக இருக்கிறாள். அதனால் 'எப்போதும் பெட் ரெஸ…

  12. நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி சிறுகதை: ஜி.ஆர்.சுரேந்தர்நாத், ஓவியங்கள்: ஸ்யாம் `ஒரு சிறந்த இசையைக் கேட்கும்போது, நீங்கள் அனைத்தையும் மறக்கிறீர்கள் அல்லது அனைத்தையும் நினைக்கிறீர்கள்!' - யாரோ ஒருவன். அந்த வெள்ளைக் காகிதத்தைப் பிரித்துப் படித்தான் ரவீந்தர். அதில், `தயவுசெய்து ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி…’ என்ற பாடலைப் பாடவும்' என ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. கையெழுத்தைப் பார்த்தவுடனேயே தெரிந்துவிட்டது. அதே நபர்தான். ரவீந்தர் சுற்றிலும் தேடினான். சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருக்கும், ஒரு ரிசார்ட் பார் அது. வழக்கமான ஈ.சி.ஆர் பார்களைப்போல் இளைஞர்கள் கும்மாளமிடும் பார் அல்ல. பணம் சம்பாதித்துச் சம்பாதித்துக் களைத்துப்போன, `வீட்டுக்குக் கி…

  13. சூரியனுடன் தொற்றிக்கொள்ளுதல் - சிறுகதை ஜெயமோகன், ஓவியங்கள்: ரமேஷ் ஆச்சார்யாநட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு `அது சாத்தியமா?' என்ற சந்தேகம்தான் எனக்கு முதலில் எழுந்தது. பையில் இருந்து செல்பேசியை எடுத்து கணக்கிடத் துடித்த விரல்களை, கஷ்டப்பட்டுத் தான் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டி யிருந்தது. கணக்குகள் போடப்படும்போது எல்லா கதைகளும் தப்புக்கணக்காகி நின்றிருக்கும் துயரத்தை, நானும் பலமுறை அனுபவித்தவன்தான். விசித்திரமாகவோ, விபரீதமாகவோ நமக்கு ஏதாவது நிகழும்போதுகூட, பத்து நிமிடங்களுக்கு மேல் மகிழ்ச்சி அடைய முடியாதபடி அவை அனைத்தும் பலமுறை பொதுத் தகவல் குவியத்தில் எழுதப்பட்டு பல்லாயிரம் முறை பகிரப்பட்டிருப்பதைக் காணும் ஏமாற்றம் நிறைந்த சூழலில் வாழ…

  14. Started by Athavan CH,

    இன்று நமீபியா கிளம்புகிறேன்.ஆப்ரிக்காமீது எனக்குள்ள மோகம் அ.முத்துலிங்கத்தால் உருவானது. அவரது எழுத்துக்களில்வரும் ஆப்ரிக்கா ஒரு மெல்லிய வேடிக்கை கலந்த ஓர் உலகம். ஆப்ரிக்காவுக்கு இவ்வளவு சீக்கிரமாக ஒரு பயணம் சாத்தியமாகுமென நான் நினைக்கவில்லை. நானும் இயக்குநர் மாதவன்குட்டியும் செல்கிறோம். சென்று வந்தபின் அந்த அனுபவத்தைக்கொண்டு மலையாளத்தில் ஒரு படத்துக்கான கதையை எழுதவேண்டும். குஞ்சாக்கோ கோபன் நடிக்க மாதவன்குட்டி இயக்குகிறார். கதாசிரியர்கள் நட்சத்திரங்களாக உணரவேண்டுமென்றால் தெலுங்கில் எழுதவேண்டும் என்பார்கள். மலையாளத்தில் குட்டி நட்சத்திரமாக உணரலாம். மதியம் பன்னிரண்டு மணிக்கு திருவனந்தபுரம் விமானநிலையத்தில் இருந்து கிளம்பி மும்பை.அங்கிருந்து ஜொகன்னஸ்பர்க். அங்கிருந்…

    • 14 replies
    • 2.7k views
  15. ஒரு நிமிடக் கதை: நம்பிக்கை! ஒன்றாம் வகுப்பு படிக்கும் என் மகனையும், ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகளையும் அழைத்துக்கொண்டு உள்ளூர் பள்ளிக்குச் சென்றபோதுதான் அதைப் பார்த்தேன். மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் தன் மகளைப் பள்ளி வேனில் ஏற்றிவிட காத்துக்கொண்டிருந்தார் தேவி டீச்சர். இவர் என் பிள்ளைகள் படிக்கும் அரசுப் பள்ளியின் ஆசிரியை. அவரைப் பார்த்ததும் எனக்கு எரிச்சல் வந்தது. பிள்ளைகளைப் பள்ளிக்குள் அனுப்பிவிட்டு, தேவி டீச்சரின் வருகைக்காக பள்ளிக்கூட வாசலில் காத்திருந்தேன். சரியான நேரத்துக்கு அவர் வந்துவிட்டார். கொப்பளித்து வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு, சிரித்தபடியே கேட்டேன், ‘‘உங்க மீது எனக்கு நம்பிக்கை இருக…

  16. சம்ரிஷ்தாவின் நாய்க்குட்டி சிறுகதை: காலபைரவன், ஓவியங்கள்: செந்தில்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு ``தொடர்ந்தாப்ல ஸ்கூல வெச்சு ஏன்தான் உயிர வாங்குறாங்களோ'' என்று அலுத்துக்கொண்டாள் சம்ரிஷ்தா. படுக்கை அறையில் இருந்து அவளை எழுப்பி, கூடத்துக்கு அழைத்துவருவது பெரும்பாடாக இருந்தது அப்பாவுக்கு. ``பின்ன எப்படி ஸ்கூல் வைக்கிறதாம்?'' என்று அவளிடம் கேட்டார். ``திங்கள்-செவ்வாய் ஸ்கூல், புதன் லீவு; வியாழன்-வெள்ளி ஸ்கூல், சனிக்கிழமை லீவு'' என்று கூறினாள். குரலில் அவ்வளவு சந்தோஷம். ``அப்ப, ஞாயித்துக்கிழமை ஸ்கூல் வைக்கலாமா?'' என்று கேட்டார். ``லூஸாப்பா நீ? ஞாயித்துக்கிழமை வார விடுமுறைனுகூடவா தெரியாது உனக்கு?'' - அதைக் கேட்டு அனைவரும் சிரி…

  17. குறிஞ்சி மலர்கள் பாடசாலை என்பது ஒரு பிள்ளையை சமுதாயத்திற்கு எப்படி நற் பிறஜையாக கொடுக்க வேண்டும் என்பது இப்போதுள்ள மக்கள் யாவரும் அறிந்ததே அப்படிபட்ட பாடசாலையில் ஆசிரியராக பணி புரிபவர்தான் நான் சந்திரன் மாஸ்டர் இது வரையில் பல பாடசாலைகள் மாறிவிட்டேன் எதிலும் நிரந்தரமில்லை அது என் தொழிலுக்கு கிடைக்கும் உயர்வு என்பதைவிட எனக்கு கிடைக்கும் அரச பரிசுதான் அது அதிபர் ஊடாக முறைப்பாடு வலயத்திற்கு சென்று வலயம் என்னை இடம்மாற்றி விடுகிறது என்பதையும் விட தூக்கியெறிந்து விடுகிறது .சக ஆசிரியர்கள் அதிபருக்கு விஸ்வாசமான ஆசிரியர்களுடன் முரண்படும் போது அதாவது அவர்கள் பாடவேளைக்கு போகவில்லை என்றால் அதை நான் கேட்கும் போது பிரச்சினையாகிவிடும் எனக்கு நேர்மையாக வேலை செய்யவேண்டும் எடுக்கும்…

  18. கடலில் இருந்து வீசிய உப்புக்காற்று உடலுக்கு இதமாகவும் மனசுக்கு சுகமாகவும் இருந்தது. கடற்காற்றை அளைந்தபடி வண்டி பாலத்தின்மீது சென்றது. ஆயத்தடியில் நிறுத்தும்படி குரல் கொடுத்தேன். என்னுடைய பத்தொன்பது வயது மகனும் கூடவே இறங்கிக் கொண்டான். மகளும் மனைவியும் வண்டியிலே வீடு நோக்கிய பயணத்தை தொடர்ந்தார்கள். கைதடியையும் கோப்பாயையும் இணைக்கும் பாலத்தின் கைதடி அந்தலைக்குப் பெயர் ‘ஆயம்’. கடலின் கைதடிக் கரையோரமாக கோடைகாலத்தில் பெருமளவு உப்பு விளைந்திருக்கும். இந்த உப்பினை அறுவடைசெய்தோரிடம் அந்தக் காலத்தில் வரி அறவிடப்பட்டதாம். அந்தக்காலம் என்பது ஆங்கிலேயர் ஆண்டகாலம். உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் தீர்வை ‘ஆயத்தீர்வை’ என அழைக்கப்பட்டதாகவும், அது வ…

  19. ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி - சிறுகதை பொள்ளாச்சி அபி, ஓவியங்கள்: ஸ்யாம் ''ஏய் சரசு... மின்னல் வெட்டுது பாரு. மழை வரும்போல இருக்கு. கொடியில காயப்போட்ட துணியெல்லாம் எடு!'' - சிவகாமி இரைந்தாள். அதிர்ந்து நிமிர்ந்த சரசு அத்தை, கதை கேட்பதற்காக அவளது மடியில் சாய்ந்திருந்த எங்களை, ''தள்ளுங்க... தள்ளுங்க... கொஞ்சம் இருங்க வர்றேன்...'' என்றபடி அவசரமாகக் கைகளால் விலக்கிவிட்டு எழுந்து ஓடினாள். சரசு அத்தைக்கு ஏறக்குறைய 35 வயது இருக்கும். வீட்டின் அனைத்து வேலைகளையும் இழுத்துப்போட்டுச் செய்துகொண்டிருப்பதால், உருவிவிட்டாற்போல கிண்ணென இருந்தாள். படக்கென உட்கார்வதும், நிமிர்வதும்... அப்படியே அம்மாவுக்கு நேர் எதிர். என்ன... நிறத்தில் அம்மாவைவிட கொஞ்சம் கம்மி. அவ…

  20. ‘என்னப்பா எலிப் புழுக்கையோடை அரிசி வாங்கிக் கொண்டு வந்திருக்கிறியள். இதை என்னெண்டு தவத்திறது…?’ என்று புறுபுறுத்தாள் எனது மனைவி. அவளுக்கு, வேலையால் வந்த களை! அத்துடன், சமையலை கெதியாய் முடித்தால்தான், மகளின் படிப்பைக் கவனிக்கலாம். அரிசி பருப்பு போன்ற உணவுப் பண்டங்கள் யாவும், இங்கு கலப்படமின்றி மிகவும் சுத்தமாகக் கடைகளில் கிடைக்கும். கலப்படம் இருந்தால் ‘பாவனையாளர் திணைக்களத்தில்’ புகார் செய்யலாம். கடைக்காரங்களுக்கு பாரிய அபராதம் விதிக்கப்படும். எனவே வியாபாரிகள் இதில் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பார்கள். சுத்தமான அரிசியை இரண்டு தரம் சாட்டுக்கு தண்ணீரில் கழுவியபின் ‘றைஸ் குக்கருக்குள்’ போடும் என் மனைவிக்கு இந்த எலிப்புழுக்கை பெரும் சவாலாக அமைந்தது. ‘சுளகு இருந்தால் தாருங…

  21. வெள்ளிக்கிழமை இரவுகள் அ.முத்துலிங்கம் ஏதோ காட்டு மிருகம் துரத்தியதுபோல உள்ளே பாய்ந்தாள் ஆகவி. பத்து வயதுதான் இருக்கும். அவளுடன் வந்த காற்றும் உள்ளே நுழைந்தது. புத்தகப் பையை கீழே எறிந்தாள். எதையோ தேடுவதுபோல இரண்டு பக்கமும் பார்த்தாள். பத்து மைல் தூரம் ஓடிவந்ததுபோல அவளுக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. தாயார் சமையல் அறையில் இருந்து மெள்ள எட்டிப் பார்த்தார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இப்படி நடப்பதுதான். பள்ளியிலிருந்து வரும்போதே சண்டை பிடிக்க ஏதாவது காரணத்துடன் வருவாள். அகிலா தனியாக கனடாவுக்கு அகதியாக வந்தபோது நாலு மாதம் கர்ப்பம். ஐந்து மாதம் கழித்து ஆகவி பிறந்தாள். தாயாரின் ஒரே செல்லம். அவர் மடியில் தலைவைத்து படுக்க அகிலா முடியை கோதிவிட்டார். ‘கோதாதே. என்…

  22. ஆசை முகம் மறந்து போகுமோ - சிறுகதை ஜி.ஆர்.சுரேந்தர்நாத், ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு மரங்கொத்திப் பறவைகள் மரங்களில் ‘டொக்... டொக்...' எனக் கொத்தும் சத்தம், அந்தக் காட்டின் அடர்த்தியான மௌனத்தைக் கலைத்துக்கொண்டிருந்தது. எங்கோ காட்டாறு ஓடும் சத்தம், பின்னணி இசைபோல் இடைவிடாமல் ஒலித்துக்கொண்டிருந்தது. காற்றில் பெயர் தெரியாத ஏதேதோ பூக்களின் வாசம். அந்தப் பெரிய குமிழ் தேக்கு மரத்துக்கு மேலே, வெள்ளிச்சரம் போல் மழை சடசடவெனப் பெய்துகொண்டிருக்க, அவளும் அவனும் மரத்தில் சாய்ந்தபடி நின்றுகொண்டிருந்தனர். அவள் தனது முகத்தில் வழிந்த மழைநீரை, தனது மெல்லிய விரல்களால் வழித்தபடி, மேல் கண்களை உயர்த்தி அவனைப் பார்த்தாள். அப்போது மரத்…

  23. சிலை சிலையாம் காரணமாம் - 1: கடல் தாண்டி விரியும் கடத்தல் வலை சுபாஷ் கபூரின் நியூயார்க் ஆர்ட் கேலரி சிலைகள் 2011 அக்டோபர் 30... பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது ஜெர்மனியின் ஃபிராங்க்ஃபர்ட் பன் னாட்டு விமான நிலையம். இன்னும் சற்று நேரத்தில் அங்கிருந்து நியூ யார்க் புறப்படுவதற்காக, முதலா வது ஓடுதளத்தில் தன்னை ஆயத் தப்படுத்திக் கொண்டிருக்கிறது யுனை டெட் ஏர்லைன்ஸ் விமானம். அதில் பயணிக்கக் காத்திருக்கும் பயணி களுக்கு இமிக்ரேஷன் சடங்குகளை முடிப்பதற்காக அவசரகதியில் இயங் கிக் கொண்டிருக்கிறார்கள் விமான நிலைய அதிகாரிகள். ஆண்டுக்கணக்கில் கூண்டுக்குள் சிக்க வைக்கப் போகும் ஆபத்து தன்னை நெருங்கிக் கொண்டிருப்பது தெரியா மல், 60 வயது மதிக்க…

  24. கறங்கு - சிறுகதை நாஞ்சில் நாடன், ஓவியங்கள்: செந்தில்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு சுடலைமாடனுக்கு நெஞ்செரிச்சலும் வயிற்றுப் பொருமலுமாகி புங்குபுங்கென்று கோபமும் வந்தது. ஒரு புல்லும் தன்னைப் பொருட்படுத்துவதில்லை என்ற ஆங்காரம் வேறு. முன்னொரு காலம் பட்டப்பகலில், நட்டநடு வெயில் கொளுத்தும்போது, அந்த வழி நடக்கும் ஆடவர், அவர் திசைப்பக்கம் திரும்புவதில்லை அச்சத்தால். பெண்டிர் பற்றி பேசல் வேண்டுமோ? சுடலையின் பின்பக்கம், ஆற்றங்கரையோரம் நிற்கும் இரண்டு நெட்டைத் தெங்குகளில் இருந்து தேங்காய் நெற்றுக்கள் முற்றி, அடந்து கீழே தொப்பென ஒலி எழுப்பி வீழ்ந்தாலும், எவரும் சென்று பொறுக்குவதில்லை. சுடுகாட்டுப் பேய்களும் தென்னை நெற்றுக்கள் எனச் சுருண்டுக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.