Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வேரும் விழுதும்

கலைகள் | கலைஞர்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

வேரும் விழுதும் பகுதியில் கலைகள், கலைஞர்கள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் கலைகள், கலைஞர்கள் பற்றிய அவசியமான கட்டுரைகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
இசை சம்பந்தமான பதிவுகள் "இலக்கியமும் இசையும்" என்ற புதிய பகுதியிலேயே இணைக்கப்படல்வேண்டும்.

  1. ‘ஜானி’ படப்பிடிப்பில் ரஜினியுடன் மகேந்திரன். “இன்றைய நமது சினிமா, காட்சிகளையும், ஒலியையும் உயிரோட்டமாகக் கொண்ட ஒரு மீடியா என்பதே சரியாகப் புரிந்துகொள்ளப்படாமல் இருக்கிறது என்று கருதுகிறேன். வசனமே இல்லாமல்கூட ஒரு படத்தை ரசனைக்கு உரியதாகப் படைக்க முடியும். ஆனால், அத்தகைய முயற்சியில் ஈடுபடும் ஒரு கலைஞனுக்குக் கற்பனைத் திறன் அதிகமாகத் தேவைப்படுகிறது” - மகேந்திரன். தமிழ் சினிமாவில் சாதனை படைத்த படைப்பாளிகளில் மகேந்திரன் குறிப்பிடத் தகுந்தவர். தமிழ் சினிமாவில் யதார்த்தமான படங்கள் எப்போதாவது ஒருமுறை வருவதுண்டு. அவற்றில் 1970-கள் வரை குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை: ஏழை படும் பாடு (1950), அவன் அமரன் (1958), பாதை தெரியுது பார் (1960), கலைக்கோவில் (1964), உன்னைப் போல் ஒருவன…

    • 0 replies
    • 846 views
  2. என்னவளே அடி என்னவளே' பாடலுக்கு புல்லாங்குழல் வாசித்த கலைஞர் காதலியின் வருகைக்காக காதலன் காத்திருக்கின்றான். நேரம் போனதே தவிர அவள் வரவில்லை. வேதனையிலும் விரக்தியிலும் பாடுகிறான். அவ்வேளையில் தனது மதம் குடும்பம் சுற்றார் எல்லாவற்றையும் விட தனது காதல்தான் முக்கியம் என முடிவெடுத்த காதலி ஒருவாறாக காதலன் குறிப்பிட்ட இடத்துக்கு ஓடிவருகிறாள். அதுவரை ஹீரோ பாடுவதையே காட்டிவந்த கெமரா அப்போதுதான் முதன் முதலாக ஓடிவரும் காதலியைக் காட்டுகிறது. அதற்கு பின்னணியாக ஒற்றைப் புல்லாங்குழல் 1;34 நிமிடத்தில் இருந்து 2:00 நிமிடம் வரை ஓங்கி ஒலிக்கிறது. அந்த ஒலியில் காதலின் தவிப்பு, காதலனின் வேதனை எல்லாவற்ரையும் மொழிதெரியாதவரால் கூட சொல்லமுடியும் அதைத் தந்தவர் நவீன் குமார். பாடல்: உயிரே.. வந்து…

    • 0 replies
    • 2k views
  3. ஐஸ்வர்யா அசுர வாத்தியமான நாகஸ்வரத்துக்கு இணையான லய வாத்தியம் தவில். எந்த ஒலிபெருக்கியின் துணையும் இல்லாமல் இடியைப் போல் ஒலிக்கக் கூடிய வாத்தியம். ஆண்கள் மட்டுமே கையாளத் தகுந்த இந்த வாத்தியத்தை அரிதாகக் கையில் எடுத்து, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புஷ்பராணி திருச்செல்வம் புகழ்பெற்ற பெண் தவில் கலைஞராக மிளிர்ந்திருக்கிறார். இவருக்கு அடுத்துத் தவில் வாசிப்பில் சுடர்விட்டுக் கொண்டிருப்பவர், பெங்களூரில் வசிக்கும் ஐஸ்வர்யா நந்தகோபாலா. தந்தை ராஜகோபாலிடம்தான் ஐஸ்வர்யா தவில் கற்றுக்கொண்டிருக்கிறார். ஏறக்குறைய 250 பேருக்குத் தவில் வாசிக்கக் கற்றுக் கொடுத்த ராஜகோபால், தன் மகள் ஐஸ்வர்யாவுக்கு முதலில் தவில் வாசிக்கக் கற்றுக் கொடுக்கவில்லை. தவிலையே தொடக்கூடாது என்று கண்டிப்பாகச் சொல்லியிர…

    • 0 replies
    • 1k views
  4. உண்மையை சொன்னால் என்ன நான் நம்பவில்லை இப்படி ஒரு காட்சி(கன்றாவி)நடக்கும் என்று இப்பொழுது உங்களுக்கு நடன பள்ளியின் மாணவிகள் இதோ வருகிறார்கள் என்று அறிவித்தார்கள். நானும் ஏதோ சிரிசுகள் வரும் என்று பார்த்து கொண்டு இருக்கையில் வந்ததோ 35- 45 வயசு கிழசுகள்(நான் 18 வயசு வாலிபன் தானே) ஏதோ கிப்கொப் டான்சாம் அத்துடன் பொலிவூட்டும் கலந்து மகிழ்விக்க வந்தவையலாம் என்று விளக்கமும் கொடுத்தார்கள். மனிசியிட்ட கேட்டன் என்ன கிழசுகள் எல்லாம் மேடையில் நிற்குது என்ன நடந்தது என்று கேட்டேன்,அது ஒன்றுமில்லையப்பா அவையள் உடம்பை சிலிம்மாக வைத்திருக கிப்கொப்பும்,பொலிவூட்டும் பழகீனம் உங்களுக்கு எல்லாத்துக்கும் ஒரு நொட்டை என்று திட்டினா. எதையாவது பழகட்…

    • 0 replies
    • 1.6k views
  5. அன்றாடம் நம்மைச் சுற்றி நிகழும் சம்பவங்கள் நம்மைப் பாதிக்கின்றன.நாம் பார்க்கும் ,கேட்கும் , படிக்கும் விசயங்களிலிருந்து கிடைக்கும் அறிவு நம்மைச் சிந்திக்கவும் தூண்டுகின்றன.இந்த ” தூண்டுதல் ” அல்லது “உந்துதல்” அல்லது இந்த நிகழ்வுகள் ஏற்ப்படுத்தும் ” பாதிப்பு ” நம்மைச் செயலாற்றவும் வைக்கின்றன.நாம் அனுபவிக்கும் பல விசயங்களில் சில நம்மை அறியாமலேயே நமது மனங்களில் பதிந்தும் விடுகின்றன.இவை பொதுவாக எல்லா மனிதர்களிளிடமும் வெவ்வேறுவிதமாக நிகழ்கின்றன. இந்த தூண்டுதல் அல்லது உந்துதல் என்பதே எல்லாக் கலைகளுக்கும் அடிப்படையானதாகவும் உள்ளது.ஒரு சம்பவத்தால் தூண்டப்படும் , உந்தப்படும் அல்லது பாதிப்புக்குலாகும் கலைஞன் தன்னுடைய ஆற்றலுக்குத் தக்கவாறு தனது உணர்வுகளை வெளிப்படுத்துகிறான்.கவிஞன்…

  6. தமிழ்த்திரைப்பட இசையுலகில் இசையமைப்பாளர் யாரென அறியப்படாத காலத்தில் பாடல்களை அமைத்தவர் இசை அறிஞர் பாபநாசம் சிவன்.கர்னாடக கீர்த்தனைகள் அப்படியே ஒலித்த காலத்தில் அந்த முறையிலேயே தனது பாடலகளையும் அமைத்துக் கொடுத்தவர்சிவன். பின்னர் இசையமைப்பாளர்களுடன் இணைந்த போதும் பாடல்களுக்கான் சுரங்களை எழுதிக் கொடுத்துவிடுவார். பாடலுக்கு வாத்தியம் சேர்ப்பது இசையமைப்பாளர்களின் வேலையாக இருந்தது.தமிழ் செவ்வியல் இசைப் [ கர்னாடக இசைப்] பாடலான ” எப்ப வருவாரோ ..” என்ற பாடல் மெட்டில் ” சர்ப்ப கோண போதன் …” என்ற பாடலை தியாகராஜபாகவதர் பாடினார்.பாபநாசம் சிவனின் inspiration தமிழ் செவ்வியல் இசையே . செவ்வியல் இசை மரபு கொண்ட தமிழ் சூழலில் ஹிந்தி திரைப்பட இசை போன்ற மெல்லிசை உருவாவது இலகுவான காரியமாக இருக…

  7. ‘சாகித்ய அகாடமி விருது… வ.உ.சி தான் காரணம்’ : ஆ.இரா.வேங்கடாசலபதி மகிழ்ச்சி! christopherDec 19, 2024 09:12AM வ.உ.சி குறித்து எழுதிய நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி தெரிவித்துள்ளார். இந்திய அரசால் அங்கீகரிப்பட்ட 24 மொழிகளில், சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்வு செய்யப்படும் நூலினை எழுதிய நூலாசிரியருக்கு ஒவ்வொரு ஆண்டும் சாகித்ய அகாடமி விருதுடன் ரூபாய் 1 லட்சம் பரிசாக வழங்கப்படுகிறது. தற்பொழுது 21 மொழிகளுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, எட்டு கவிதைத் தொகுப்புகள், மூன்று நாவல்கள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், மூன்று கட்டுரைகள், மூன்று இலக்கிய விமர்சன நூல்கள் மற்றும் ஒரு நாடகம் ஆகி…

  8. வாசிப்பும், யோசிப்பும் 107 : ஜெயபாலனின் 'கள்ளிப்பலகையும், கண்ணீர்த்துளிகளும் (மேலும் சில முகநூல் குறிப்புகள்).' Wednesday, 12 August 2015 04:14 - வ.ந.கிரிதரன் - எழுத்தாளர் வ.ஐ.ச. ஜெயபாலனை மீண்டும் முகநூலில் சந்தித்தபொழுது எழுந்த நினைவலைகளின் பதிவிது. கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனென்று பலராலும் அறியப்படுபவர்; அண்மைக்காலமாக இந்திய மத்திய அரசின் விருதுபெற்ற நடிகராகவும் 'ஆடுகளம்' ஜெயபாலன் என்றும் அறியப்படுகின்றார். கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனென்று அறியப்பட்டாலும் , இலக்கியத்தின் பல்துறைகளிலும் தன் ஆளுமையைப்பதித்தவர், பதித்து வருபவர் இவர் என்பதால் எழுத்தாளர் வ.ஐ.ச.ஜெயபாலன் என்று இவரை அழைப்பதே பொருத்தமானதென்று படுகிறது. இன்று சிறிது முரட்டுத்தனம் மிக்கவராகவும், சிறந்த கவிஞர்களிலொ…

  9. வரும் யூலை மாதம் 13-14 திகதிகளில் ரொறன்ரோவில் தமிழியல் மாநாடு நடைபெறவிருக்கிறது. மேற்குநாடுகளில் அதிக தமிழர்கள் வாழும் நகரமான ரொறன்ரோவில் கனடாவின் இரு பெரும் பல்கலைக்கழகங்களின் ஆதரவுடன் தமிழியல் மாநாடு நடைபெறுவது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகத் தெரியலாம். ஆனால் தமிழ் மொழிக்கோ, தமிழ் மொழி மாணவர்களுக்கோ இந்த தமிழியல் மாநாட்டால் குறிப்பிடத்தக்க பயன் ஏதும் இருக்குமா என்றால், இல்லை என்றே தோன்றுகிறது. தமிழியல் துறையின் அல்லது தமிழியல் மாநாடுகளின் முதன்மை நோக்கமாக தமிழ் மொழியைப் பேணுதலும், வளர்ப்பதும், கற்பித்தலுமே இருக்க முடியும். தமிழ்ச் சூழலின் இன்றைய தேவைகளையும், சிக்கல்களையும் கருத்தில் எடுப்பதும் தமிழியல் துறையை நடைமுறைக்குப் பயன்படும் துறையாக திசைவதில் முக்கியம் பெறுக…

  10. போர் எதிர்ப்புப் போராளி ஓவியர் மருது உலகில் தோன்றிய முதல் கலை ஓவியக் கலை என்பது ஆய்வறிஞர்களின் முடிவு. அதற்குச் சான்றாகப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வரையப்பட்ட பாறை ஓவியங்களை அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். காலம், ஓவியக் கலையை வெவ்வேறு சிகரங்களுக்கு உயர்த்தி விட்டிருக்கிறது. கலை நுட்பங்கள், வடிவங்கள், புதிய பரிசோதனைகள் என்ற நீண்ட பயணம் அக்கலையை ஈர்க்கத்தக்கதாக உருமாற்றி உள்ளது. மாற்றங்களை உள்வாங்கி அவற்றைத் தன் மயமாக்கிக் கொண்டவர்களே காலத்தை வென்ற கலைஞர்களாகத் திகழ்கின்றனர். மரபான ஓவியத்தோடு மட்டும் தேங்கி நின்று விட்டவரல்ல ஓவியர் மருது அவர்கள். கோட்டோவியம், உள்ளடக்கத்தை மையமாகக் கொண்ட நுண்கலை (Abstract Art) கணினி வரைகலை (Computer Graphics) எனப் …

  11. லதா தீதி (அக்கா) என்று பலராலும் செல்லமாக அழைக்கப்படும் லதா மங்கேஷ்கர், உலகிலேயே மிக அதிக எண்ணிக்கையில் பாடல்களைப் பாடியிருக்கிறார். அதற்காக கின்னஸ் புத்தகத்திலும் இடம்பிடித்திருக்கிறார். லதா மங்கேஷ்கர் என்னும் இந்த இசைக்குயில், 1942-ல் தன் கானத்தை இசைக்கத் தொடங்கியது. கிட்டத்தட்ட எழுபது வருடங்களுக்கும் மேலாகத் தெவிட்டாத தன் தேன் குரலால் ரசிகர்களைத் தன் இசையின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெருமையும் லதா மங்கேஷ்கருக்கு உண்டு. எப்போதும் நிற்காத நதியாக, உட்காராத காற்றாகப் பாடலையே தன் சுவாசமாகக் கொண்டு இயங்கிவருகிறார். சுமார் 980க்கும் அதிகமான இந்திப் படங்களில் பாடி மாபெரும் சாதனை நிகழ்த்தியுள்ளார். இந்த வயதிலும் இன்னிசை வழங்கிவருகிறார். இவர், ஆஷா போஸ்லே, ஹ்ருதயநாத் மங்கேஷ…

    • 0 replies
    • 1k views
  12. தூத்துக்குடியைச் சேர்ந்தவரும் 32 ஆண்டுகளாக அமெரிக்காவில் உள்ள ஹவாயில் வசித்து வரும் வைதேகி ஹெர்பர்ட் என்பவர் தமிழுக்கு ஆற்றியுள்ள அரிய சாதனையை தமிழ் சமுதாயம் வியந்து பாராட்டவில்லை. ஆனால் கனடாவின் ரொறன்ரோ பல்கலைக்கழகமும், தமிழ் இலக்கியத் தோட்டமும் அவருக்கு விருது வழங்கி கௌரவித்துள்ளன. அவர் இதுவரை பதினெட்டு சங்க இலக்கியங்களில் பன்னிரண்டை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். மற்ற ஆறு இலக்கியத் தொகுப்புகளும் விரைவில் மொழிமாற்றம் செய்யப்படும் என்றும் வைதேகி சார்லஸ் ஹெர்பர்ட் தெரிவித்துள்ளார். இவர் அமெரிக்காவில் மருத்துவத் துறையில் மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஆங்கிலப் பள்ளியில் படித்த போதும் இவருக்கு தமிழ் மேல் தணியாத ஆர்வம் இருந்தது என்று அவர் கூறுகிறார். கலிபோர்னியா…

    • 0 replies
    • 899 views
  13. நவீன் குமார் இந்தியாவின் மிக பிரபலமான புல்லாங்குழல் வாசிப்பாளர். அன்று தொடக்கம் இன்றுவரை ஏ.ஆர்.ரஹ்மானின் முக்கிய புல்லாங்குழல் வாசிப்பாளரும் இவரே. இவர் ஹிந்தி படங்கள் முதல் தமிழ் படங்கள் வரைக்கும் புல்லாங்குழல் வாசித்துள்ளார். இவர் தனது புதிய படத்திற்காக உருவாக்கியுள்ள இசையை இங்கு கேளுங்கள். இங்கு நவீன்குமாரின் அருகில் reshma, nilaya ஆகிய இரு நடன கலைஞர்கள் நடனமாடுகிறார்கள். http://youtu.be/k5moGoxazKM இவருடைய website. http://www.flutenaveen.com/home.html

  14. -அ.கலைச்செல்வன், சிட்னி, அவுஸ்திரேலியா அன்புள்ள ரஜினிகாந்திற்காக ராஜா அமைத்த " முத்துமணிச் சுடரே … வா.". `இந்தப்பாட்டின் தாள வாத்தியமான Triple Congo வினை வாசித்தவர் யாரென்று எவருக்காவது தெரியுமா ? அதை வாசித்தவர்தான் இசைஞானியின் முதல் ரசிகன்.அவரின் பெயர்.... அவர் ஒரு கிராமத்தவர். நுண்ணிய இசையறிவு , இயற்கை அவருக்கு வழங்கியிருந்த கொடை. அவருடன் இரண்டு சகோதரிகளும் மூன்று சகோதரர்களும் கூடப்பிறதிருந்தார்கள். அவருக்கு நேரே மூத்த சகோதரருக்கு தனது தம்பியிடம் இயற்கையாகவே குடிகொண்டிருக்கும் இசைத்திறமையைப் பற்றி நன்கு தெரிந்திருந்தது. இவ்வளவு திறமை தனது தம்பிக்கு இருந்தும் அந்தத் திறமை தன்னால் புரிந்து கொள்ளப் பட்டது போல உலகால் புரிந்துகொள்ளப் படுவதற்கான வாய்ப்பு கிடைக்கவ…

    • 0 replies
    • 648 views
  15. ஈழ மண்ணில் பிறந்து, ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்து, பெரும்பான்மை வருடங்களைத் தமிழ்நாட்டில் தமது அயராத இலக்கியப் பணியில் கழித்த எஸ்.பொ என்னும் எஸ்.பொன்னுத்துரை நவம்பர் 26-ம் தேதி காலமானபோது ‘இறுதியில் இந்தச் சாலையில்தான்/ வந்தாக வேண்டும் நான்/ என நன்றாகத் தெரியும்/ ஆனால்/ இன்றுதான் அந்த நாள் என்று/ எனக்குத் தெரியாது நேற்று' என்ற ஜென் கவிதைதான் நினைவுக்கு வந்தது. எழுத்துப் பணி ஒரு போர் ஈழத்தின் ‘இலக்கியப் பொன்னு' என்று செல்லமாக அழைக்கப்படும் எஸ்.பொ.வின் மரணம் முதுமையின் நிசர்சனம் சுமந்தாலும், இழப்பின் துயர் அதனோடு மல்லுக்கு நிற்கிறது. தன்னை மூன்றாம் உலகப் படைப்பாளியாக அறிவித்துக் கொண்ட எஸ்.பொ., ஈழத்தின் இலக்கியத்தை முன்னெடுத்துச் சென்றதன் மூலம் தமிழ் இலக்கியத்தின் …

  16. A.R. ரஹ்மான், எஸ்.பி.பி போன்ற பல இசை பிரபலங்களிடம் பாராட்டு பெற்ற ஈழத்து Octapad கலைஞன் பானு

    • 0 replies
    • 586 views
  17. (கோப்புப் படம்) “செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே…” என்று துவங்கும் மகாகவி பாரதியார் கவிதையின் இனிமையையும் தனித்துவத்தையும் ரசித்து பாராட்டாதவர்களும் இல்லை; வியக்காதவர்களும் இல்லை. பாரதியாருக்குப்பின் எத்தனையோ உலகம் போற்றும் தமிழ் கவிஞர்களும் கவிதைகளும் படைக்கப்பட்ட போதிலும், இன்றும் அவரது கவிதைகளும், அதில் அவர் கையாண்ட அழகியலும் ஈடுசெய்ய முடியாததாகவே இருக்கிறது. ஆனால், அவர் ஒரு கவிதைப் போட்டியில் கலந்துக்கொண்டு, இந்த கவிதையைச் சமர்ப்பித்தபோது, அவருக்கு மூன்றாம் இடம்தான் கிடைத்தது என்றால் நம்ப முடிகிறதா? ஆம்! 1900-க்களில் நடந்த ஒரு கவிதைப் போட்டியில்தான் இப்படியான ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. “இந்த கவிதைக்கு ரூ.100 பரிசாக வழங்கப்பட்ட…

    • 0 replies
    • 782 views
  18. குச்சுப்புடி நாட்டியத்தாரகை ரங்கா விவேகானந்தன் ஆடற்கலையென்றவுடன எங்களில் பலர் பரதநாட்டியத்தை மட்டும் நினைவுக்கு கொண்டு வருகிறோம். அதனோடு எங்களுக்கு பரிச்சியம் அதிகம் அதனால்தான். குச்சுப்புடி, கதகளி, மோகினியாட்டம் என்றெல்லாம் நிகழ்த்தப்படும் ஆடல்வகைகளை பயிலவும், அரங்கேற்றவும், ரசிக்கவும் எங்களுக்கு பொதுவாக சந்தர்ப்பம் கிடைப்பதி;லை. ஆனால் யாழ்மாவட்டத்தில் வல்வை மண்ணில் பிறந்த ஒரு நாட்டியக்கலைஞர், பரதத்தோடு இம்மூன்று ஆடல்வகைகளையும் இந்தியாவில் சிறந்தகுருமாரிடம் கற்றுத்தேர்ந்து, இலங்கை திரும்பியபின் நிகழ்த்திய நிகழ்ச்சிகள் சிலவற்றைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. முக்கியமாக தெய்வீக அழகும் பக்திபாவமும் பொருந்திய அவரது குச்சுப்புடி நடனநிகழ்வு என்னை மிகவ…

  19. தவில் மேதை யாழ்ப்பாணம் தெட்சணாமூர்த்தி ஆவணப் படம் மற்றும் நூல் வெளியீடு சிட்னியில் வெகு சிறப்பாக நடந்தேறியது. ஒரு நீண்ட வார இறுதியின் விடுமுறை நாளின் காலை முழுதும் நிகழ்வரங்கம் மக்கள் கூட்டத்தால் நிறைந்திருந்தது இந்த முயற்சியால் கிடைத்த பெரும் நிறைவு. நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினர்களாக சிட்னியில் மங்கல நாதஸ்வர, மேள இசை பரப்பும் திரு.மாசிலாமணி.சத்தியமூர்த்தி, திரு.ராகவன் சண்முகநாதன், திரு.கனகசபாபவதி வைத்தீஸ்வரன், திரு.சுப்ரமணியம் முருகதாஸ் ஆகியோரோடு, ஈழத்தில் இருந்து வருகை தந்த தெட்சணாமூர்த்தியின் மகன் திரு.உதயசங்கர், திரு.நாகேந்திரம் பஞ்சாபகேசன், திரு.ரஜீந்திரன் பிச்சையப்பா, திரு.பிரசன்னா நடராஜசுந்தரம். இந்த நிகழ்வில் காணொளி இறுவட்டு, நூல் விற்பனையில் திரட்டி…

    • 0 replies
    • 532 views
  20. கிளிநொச்சி கலைஞர்களின் மண்குளித்து நாடகம் 13 தேசிய விருதுகளை அள்ளியுள்ளது! கிளிநொச்சி கலைஞர்களின் ‘மண்குளித்து’ நாடகம் 2020ம் ஆண்டின் சிறந்த நெடுநாடகமாக முதல் இடத்தைப் பெற்றதுடன், 8 பிரிவுகளில் 13 தேசிய விருதுகளை வென்றுள்ளது. இலங்கை கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் அரச நாடக குழு இணைந்து 2020ம் ஆண்டின் 48வது அரச நாடக விழாவை கடந்த பெப்ரவரி மாதம் நடத்தியிருந்தது. கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய மாணவர்களால் அரங்கேற்றப்பட்ட ‘மண்குளித்து’ என்ற நாடகம் கடந்த 26.02.2020 அன்று எல்பிஸ்டன் திரையரங்கில் போட்டிக்காக அரங்கேறியது. குறித்த போட்டி நிகழ்வு மூன்று சுற்றுக்களாக இடம்பெற்றது. குறித்த நாடக போட்டிக்காக இவ்வருடம் 32 குறுநாடக பிரதிகளு…

  21. -இராமானுஜம் நிர்ஷன்- காதலைப் பற்றிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் அளவுக்கு காதல் தோல்வியைப் பற்றிய பாடல்களும் அதிகமான வரவேற்பை பெறுகின்றன. காதலியை நாசுக்காக கிண்டல் செய்வதும் காதல் தோல்வியின் விளைவுகளை ரசிக்கும்படியாகச் சொல்வதும் பாடல்களை மெருகேற்றச் செய்வதை பல சந்தர்ப்பங்களில் நாம் பார்த்து வருகிறோம். காதல் தோல்வி, வலிகளை வார்த்தைகளுக்குள் அடக்கி அதற்குப் பொருத்தமான இசையும் காட்சியமைப்புகளும் சிறப்பாக அமையும் பட்சத்தில் நிச்சயமாக அப்பாடல் வெற்றியடையும் என்பது திண்ணம். அந்த வகையில் காதல் தோல்வியை மையமாகக் கொண்டு நம்நாட்டுக் கலைஞர்களால் அண்மையில் வெளியிடப்பட்டு வெற்றிநடை போடும் பாடல் பற்றிய குறிப்பை இவ்வார நம்மவர் களம் பகுதியினூடாக தருகிறோம். வி.பிரஜீவ் இன…

    • 0 replies
    • 872 views
  22. கவிஞர் சு.வில்வரெத்தினம் காலத்துயரும் காலத்தின் சாட்சியும். யதீந்திரா கவிஞர் சு.வில்வரெத்தினம் மறைந்து இரு ஆண்டுகள் ஆகின்றன. இந்த இரண்டு வருடங்களில் ஈழ அரசியலில் பல மாற்றங்களும் அதனால் ஏற்பட்ட திடீர் நெருக்கடிகளும், ஒருவகையான சோகமும் பெருமளவிற்கு இலக்கியம் சார்ந்த உரையாடல்களை குறைத்திருக்கிறது. யுத்தம் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் ஏகபோக உரிமையை தன்வசப்படுத்தியிருக்கும் எந்தவொரு இடத்திலும் நேரக் கூடிய ஒன்றுதான் இது. இராணுவ வெற்றிகளே எமக்கான நற்செய்தியாக இருக்கும் சூழல். எவர் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இதுதான் சமகாலத்தின் உண்மை. உண்மைகளை நிமிர்ந்து எதிர்கொண்டு அதன் சாட்சியாக இருக்கவேண்டிய பொறுப்பு சமகாலத்தின் படைப்பாளிகளுக்கு உண்டு. அப்படியொ…

  23. (படம்: ஏ.பி) ஏழு சுயசரிதைகள், மூன்று கட்டுரைத் தொகுப்புகள், பல கவிதைத் தொகுப்புகள் என கடந்த 50 ஆண்டு காலமாக தனது எழுத்துகள் மூலமாக உலகம் முழுவதும் அறியப்பட்டவர் மாயா ஏஞ்சலோ. மண்ணை விட்டுச் சென்ற அந்த மாய மனுஷி மனிதத்துக்காக விட்டுச் சென்றவை அனைத்தும் உன்னதப் படைப்புகள். இவ்வேளையில் அவரை நினைவுகூரும் வகையில், அவர் உதிர்த்தவற்றில் நம்மைச் செதுக்கக் கூடிய 10 பொன்மொழிகளின் தொகுப்பு இங்கே: 1. "மக்கள் நீங்கள் என்ன கூறினீர்கள் என்பதை மறந்துவிடுவர்; நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதையும் மறந்துவிடுவர்; ஆனால், அவர்களுக்கு நீங்கள் எத்தகைய உணர்வை அளித்தீர்கள் என்பதை என்றும் மறக்கமாட்டார்கள். வாழ்வில் நான் இதைத்தான் கற்றுக்கொண்டேன்." 2. "வெற்றி என்பது உங்களை நீங்கள் விரும்புவது;…

    • 0 replies
    • 861 views
  24. பவளவிழா காணும் பத்மநாப ஐயா: ஓர் அனுபவப் பகிர்வு! ரஞ்சித் ஈழத்து படைப்புலகில் மிகவும் ஆளுமை மிக்க மனிதரான பத்மநாப ஐயா அவர்கள் கடந்த 24ஆம் திகதி தனது 75ஆவது அகவையை நிறைவு செய்துள்ளார். ஈழத்து இலக்கிய உலகில் இலக்கியம், கலை மற்றும் படைப்புலகம் சார்ந்த பத்மநாப ஐயாவின் அளப்பரிய பங்களிப்பை அறியாதவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள். ஈழத்து தமிழ் இலக்கியத்தின் செழுமைக்கும், வளர்ச்சிக்கும் அயராது தொடர்ந்து தன்னை அர்ப்பணமாக்கியவர் அவர். அந்த வகையில், ஈழத்து தமிழ் இலக்கிய பரப்பில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாத ஒரு நபராக அவர் இருக்கின்றார். ஆயினும், அவரின் இந்த முகத்துக்கும் அப்பால் அவருடனான அறிமுகம் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்வது அவரின்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.