விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7847 topics in this forum
-
தேசியமட்டத்தில் உதைபந்தாட்ட சம்பியனாகி வடமாகாணத் தெரிவு அணி ! 29) நேற்றுச் சனிக்கிழமை யாழ்.துரையப்பா மைதானத்தில் இடம்பெற்ற 48 ஆவது தேசிய விளையாட்டு நிகழ்வின் உதைபந்தாட்ட இறுதியாட்டத்தில் வடமாகாணத் தெரிவு அணி மற்றும் மத்தியமாகாணத் தெரிவு அணிகள் மோதின. ஆட்ட நேர முடிவில் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனிலையில் முடிவுற்றதால் நீண்டநேரச் சமனிலை தவிர்ப்பு உதை முடிவில் வடமாகாண அணி வெற்றிபெற்றுக் ஹற்றிக் சம்பியனுடன் வடமாகாணத் தெரிவு அணி தேசிய சம்பியனாகியது. இதேவேளை, நீண்ட இடைவெளியின் பின் 2019 ஆம் ஆண்டில் இடம்பெற்ற 46 ஆவது தேசிய விளையாட்டு நிகழ்வில் வடமாகாண அணி உதைபந்தாட்டத்தில் தேசிய சம்பியனாகியது. இந் நிலையில் கடந்த- 2023 ஆம் ஆண்டில…
-
- 0 replies
- 435 views
-
-
Published By: VISHNU 26 JUN, 2024 | 07:15 PM சீரற்ற காலநிலையால் பாதிக்கப்படும் சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி அணிகளைத் தீர்மானிப்பதற்கு டக்வேர்த் லூயிஸ் முறைமையை உருவாக்கியவர்களில் ஒருவரான ப்ராங்க் டக்வேர்த்தின் மறைவுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தனது ஆழ்ந்த அனுதாபத்தை வெளியிட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவையில் 2014வரை புள்ளியியல் ஆலோசகராக பணியாற்றிய டக்வேர்த் தனது 84ஆவது வயதில் கடந்த வெள்ளியன்று காலமானார். டக்வேர்த்தின் சேவையை பாராட்டிய கிரிக்கெட் செயற்பாடுகளுக்கான ஐசிசி பொது முகாமையாளர் வசிம் கான், அன்னாரது மறைவையொட்டி தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 205 views
- 1 follower
-
-
ஐரோப்பிய உதைபந்தாட்டக் கழகம் ஐரோப்பாவில் உள்ள 55 நாடுகளையும் வரிசைப்படுத்தி நான்கு லீக் குகளை உருவாக்கி ஒவ்வொரு லீக்கிலும் 4குழுக்களை உருவாக்கினர்லீக் Dயில் மட்டும் இரு குழுக்கள். லீக் ABCD என்பன அவை A யில் திறமை வாய்ந்த அணிகள் B அதற்கு அடுத்த திறமை வாய்ந்த அணிகள் பின்னர் C என Dயில் மிகவும் பலம் குறைந்த நாடுகளின் அணிகள் உள்வாங்கப்பட்டன இதை UEFA Nations League என அழைக்கின்றார்கள் இந்த லீக் விளையாட்டுக்களில் பலமாக விளையாடும் அணிகள் ஒரு லீக் ( B;C;D ) மேலேயும் பலம் குறைந்த அணிகள் ஒரு லீக்( ABC)கீழேயும் இறக்கி ஏற்றப்படுவார்கள். பின்னர் ஐரோப்பிய அணிகள் இந்த விளையாட்டுக்களின் அடிப்படையில் 1இலிருந்து…
-
- 0 replies
- 240 views
-
-
Published By: VISHNU 22 JUN, 2024 | 12:37 AM (நெவில் அன்தனி) இங்கிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் செய்யவுள்ள 19 வயதுக்குபட்பட்ட இலங்கை அணியின் உதவித் தலைவராக சண்முகநாதன் ஷாருஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி அணியின் தலைவரும் விக்கெட்காப்பாளருமாவார். தென் ஆபிரிக்காவில் இந்த வருட முற்பகுதியில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 5 போட்டிகளில் 118 ஓட்டங்களைப் பெற்றதுடன் 7 ஆட்டமிழப்புகளில் (5 பிடிகள், 2 ஸ்டம்ப்கள்) பங்களிப்பு செய்திருந்தார். இதேவேளை, 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் தலைவராக காலி, மஹிந்த கல்லூரி வீரர் தினுர களுபஹன நியமிக்கப்பட்டுள…
-
- 0 replies
- 439 views
- 1 follower
-
-
20 JUN, 2024 | 10:13 AM (நெவில் அன்தனி) இருவகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட்டுக்கான தலைமைப் பதவியிலிருந்து விலகிக்கொண்டுள்ள கேன் வில்லியம்சன், நியூஸிலாந்து வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தத்தையும் நிராகரித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நீடித்திருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டே தலைவர் பதவியைத் துறந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பப்புவா நியூ கினியுடனான சி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ணப் போட்டி முடிவடைந்த பின்னர் தனது பதவி விலகல் மற்றும் மத்திய ஒப்பந்தத்தை நிராகரித்தமை தொடர்பான அறிவிப்பை 33 வயதான கேன் வில்லியம்சன் விடுத்தார். இக் குழுவில் மேற்கிந்தியத் தீவுகள், ஆப்கானிஸ்தான் ஆகிய அ…
-
- 0 replies
- 181 views
- 1 follower
-
-
Published By: VISHNU 18 JUN, 2024 | 02:02 PM (நெவில் அன்தனி) ட்ரினிடாட், டரூபா ப்றயன் லாரா விளையாட்டரங்கில் சற்று நேரத்துக்கு முன்னர் நிறைவுக்கு வந்த சி குழுவுக்கான கடைசிக்கு முந்தைய ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் பப்புவா நியூ கினியை 7 விக்கெட்களால் நியூஸிலாந்து வெற்றி கொண்டது. ஏற்கனவே சுப்பர் 8 சுற்று தகுதியை இழந்திருந்த நியூஸிலாந்துக்கு இந்த வெற்றியில் கிடைத்த ஆறுதலுடன் நாடு திரும்பவுள்ளது. நியூஸிலாந்தின் இந்த வெற்றியில் பந்துவீச்சாளர்கள் பெரும் பங்காற்றி இருந்தனர். பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்த ஆடுகளத்தில் லொக்கி பேர்குசன் 4 ஓவர்கள் வீசி ஒரு ஓட்டமும் கொடுக்காம…
-
- 0 replies
- 351 views
- 1 follower
-
-
கடினமான தருணங்களில் ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட்டை வளர்த்த இந்தியாவும் பாகிஸ்தானும் - உத்வேகமளிக்கும் கதை பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் “சுதந்திரமாக விளையாடுகிறோம். நாங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை. மிகப்பெரிய கிரிக்கெட் வரலாறு எங்கள் தேசத்துக்கும் இல்லை. அதனால் ஒவ்வொரு தவறிலிருந்தும் நாங்கள் கற்று வருகிறோம். 2019 உலகக் கோப்பையில் பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசத்திடம் தோற்றோம். 2023 உலகக் கோப்பையில் பாகிஸ்தானை தோற்கடித்தோம். 4 ஆண்டுகளில் எங்களின் பலவீனத்தை அடையாளம் கண்டு அதை வலிமையாக மாற்றியுள்ளோம்” இது ஆப்கானிஸ…
-
- 0 replies
- 709 views
- 1 follower
-
-
T20 போட்டிக்கு மத்தியில் விசேட அறிப்பை வௌியிட்ட பிரபல வீரர்! இதுவே தனது இறுதி இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி என நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் டிரென்ட் போல்ட், அறிவித்துள்ளார். தற்போது 34 வயதாகும் போல்ட், உகாண்டாவுக்கு எதிரான போட்டியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை கூறியுள்ளார். "இது எனது கடைசி டி20 உலகக் கிண்ண போட்டி..." என்று போல்ட் கூறினார். இதன்படி, திங்கட்கிழமை பப்புவா நியூ கினியாவுக்கு எதிரான போட்டி அவரது கடைசி இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியாகும். இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைய நியூசிலாந்து அணி தவறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 292 views
- 1 follower
-
-
இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய யாப்புக்கான சட்டமூலம் ஜனாதிபதியிடம் கையளிப்பு. இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய யாப்புக்கான சட்டமூலம் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதியரசர் கே.டீ.சித்ரசிறி தலைமையிலான நிபுணத்துவக் குழுவினர் இந்த சட்ட மூலத்தைத் தயாரித்து, ஜனாதிபதியிடம் கையளித்தனர். இலங்கை கிரிக்கெட் சபை எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக அமைச்சரவை உபகுழு கடந்த வருடம் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் அதன் இறுதி அறிக்கையே இன்று கையளிக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவை உப குழுவில், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையில், மின்சக்தி, வலுசக்தி அமை…
-
- 0 replies
- 284 views
-
-
(ஆதவன்) வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைக்ளுக்கு இடையிலான 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான சதுரங்கப் போட்டியில் முதலாம் இடம்பெற்று மானிப்பாய் மகளிர் கல்லூரி அணி சம்பியன் பட்டத்தைத் தனதாக்கியுள்ளது. இரண்டாமிடத்தை மகாஜனக் கல்லூரியும், மூன்றாம் இடத்தை ஸ்கந்தவரோதயக் கல்லூரியும், நான்காம் இடத்தை இளவாலை கன்னியர்மடம் மகா வித்தியாலயமும் பெற்றுக் கொண்டன. (ச) மானிப்பாய் மகளிர் சதுரங்கத்தில் சாதனை (newuthayan.com)
-
- 0 replies
- 432 views
-
-
09 JUN, 2024 | 08:14 PM நான் தேசிய மட்டத்தில் ஒரு சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக திகழ வேண்டும் என்று அவா இருக்கின்ற போதும் எனது வீட்டின் பொருளாதார சிக்கலால் கைகூடுமோ என்ற அச்சம் இருக்கின்றது, இருந்தும் உதவிகள் கிடைக்குமாயின் வட மாகாணத்துக்கு ஒரு தமிழ் பெண்மணியாக புகழை ஈட்டிக் கொடுப்பேன் என்ற நம்பிக்கை இருக்கின்றது என தேசிய மட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டு இலங்கையின் வன்பந்து கிரிக்கெட் கழக மட்டத்தில் விளையாடி வரும் பேசாலை மன்.சென்.பற்றிமா ம.ம.வித்தியாலய மாணவி சயிந்தினி இவ்வாறு தெரிவித்தார். பேசாலை மன்னார் சென்.பற்றிமா ம.ம.வித்தியாலய மாணவி சயிந்தினி வன்பந்து துடுப்பாட்ட வீராங்கனையாக வட மாகாணத்தில் முதல் பெண்மணியாக தெரிவு செய்யப்பட்ட…
-
- 0 replies
- 221 views
- 1 follower
-
-
லசித் மலிங்கா இந்த தமிழ் சிறுவனுக்கு பயிற்ச்சி அளித்தால் நல்ல எதிர் காலம் இருக்கு இந்த தமிழ் சிறுவனுக்கு நல்லா யோக்கர் பந்து மிகவும் வேகமாக போடுகிறார்........................................................
-
- 1 reply
- 376 views
-
-
Published By: DIGITAL DESK 7 04 JUN, 2024 | 05:28 PM (நெவில் அன்தனி) ரியல் மெட்றிட் கழகத்தில் பிரான்ஸ் தேசிய வீரர் 25 வயதான கிலியான் எம்பாப்பே இணையவுள்ளார். ஐரோப்பா சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத்தில் 15ஆவது சம்பியன் படத்தை வென்ற சூட்டோடு ரியல் மெட்றிட் கழகம், உலகின் தலைசிறந்த முன்கள கால்பந்தாட்ட வீரரான கிலியான் எம்பாப்பேயுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. ரியல் மெட்றிட் கழகத்தில் எம்பாப்வே இணைவார் என நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை ரியல் மெட்றிட் கழக முகாமைத்துவம் அடுத்த வாரம் வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
-
- 1 reply
- 361 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,FIDE 28 செப்டெம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது 30 மே 2024 நார்வே நாட்டில் நடந்து வரும் செஸ் தொடரில் கலந்து கொண்டு விளையாடி வரும் இந்திய செஸ் வீரரான பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் 1 செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சனை நேற்று நடந்த போட்டியில் வீழ்த்தினார். இதற்கு முன்பாக கார்ல்சனை சில முறை பிரக்ஞானந்தா வீழ்த்தியிருந்தாலும், ’கிளாசிக்கல் கேம்’ என்று செஸ் விளையாட்டில் அழைக்கப்படும் முறையில் முதல் முறையாக கார்ல்சனுக்கு எதிராக பிரக்ஞானந்தா வெற்றி பெற்றுள்ளார். செஸ் விளையாட்டில் கிளாசிக்கல் கேம் என்பது மற்ற விளையாட்டு முறைகளை விட அதிக நேரம் எடுத்துக் கொண்டு விளையாடுவது. இதற்கு முன்பாக ரேபிட், பிளிட்ஸ் போன்ற சதுரங்க ஆட்ட முறையில் கார்…
-
-
- 3 replies
- 553 views
- 1 follower
-
-
Published By: VISHNU 27 MAY, 2024 | 07:58 PM (நெவில் அன்தனி) டெக்சாஸில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரை வெல்ல வேண்டும் என்ற வேட்iகை பங்களாதேஷைவிட அமெரிக்க அணிக்கு இருந்ததாக அணியின் தலைமைப் பயிற்றுநர் ஸ்டுவர்ட் லோ தெரிவித்துள்ளார். முதல் தடவையாக ஐசிசி முழு உறுப்பு நாடொன்றின் அணிக்கு எதிராக இருதரப்பு சர்வதேச ரி20 தொடரில் விளையாடிய ஐக்கிய அமெரிக்கா, முதல் இரண்டு போட்டிகளில் பங்களாதேஷை வெற்றிகொண்டு தொடரை கைப்பற்றியது. முதல் இரண்டு போட்டிகளில் ஐக்கிய அமெரிக்கா முறையே 5 விக்கெட்களாலும் 6 ஓட்டங்களாலும் வெற்றிபெற்றிருந்தது. எனினும் கடைசிப் போட்டியில் பங்களாதேஷ் அபாரமாக விளையாடி 10 விக்கெ…
-
- 0 replies
- 379 views
- 1 follower
-
-
சர்வதேச சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற இரத்தினபுரி இளைஞர்! இரத்தினபுரி, கஹாவத்த பகுதியைச் சேர்ந்த முத்துகுமார் கபில பிரசாத் குமார் எனும் 27 வயதுடைய இளைஞர், மலேசியாவில் இடம்பெற்ற சர்வதேச சிலம்பம் போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். 25 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதிவரை மலேசியாவில், சர்வதேச சிலம்பம் போட்டி இடம்பெற்றது. இப் போட்டியில் இந்தியா, சிங்கப்பூர், கட்டார், மலேசியா, டுபாய், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 600 இற்கும் மேற்பட்ட வீர வீராங்கனைகள் கலந்து கொண்டிருந்தனர். இப் போட்டியில், இலங்கை சார்பாக கலந்து கொண்டிருந்த முத்துகுமார் கபில பிரசாத் குமார் தங்கப்பதக்கத்தை வென்று நாட்டுக்கு பெறுமை சேர்த்துள்ளார். இ…
-
- 0 replies
- 338 views
-
-
ஐ.பி.எல் ஏலத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட இலங்கை அணி வீரர்கள் ஐ.பி.எல் ஏலத்திலிருந்து அனைத்து இலங்கை அணி வீரர்களும் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு இலங்கை அணிக்கு நேற்று ( 10) முதல் தடை விதிக்கப்படுவதாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையிலேயே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச கிரிக்கெட் சபை கூட்டம் சர்வதேச கிரிக்கெட் சபையின் கூட்டம் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரையில் அஹமதாபாத்தில் இடம்பெறவுள்ளது. இந்தநிலையில் சர்வதேச கிரிக்கெட் சபை இலங்கை கிரிக்கெட் டின் தலைவராக சம்மி சில்வாவையே, அங்கீகரித்துள்ளதாக ‘கிரிக் இன்ஃபோ’ செய்தி வெளியிட்…
-
-
- 257 replies
- 17.6k views
- 2 followers
-
-
27 MAY, 2024 | 03:59 PM லைக்கா ஞானம் அறக்கட்டளை இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்துடன் இணைந்து (FFSL) நாட்டின் காற்பந்துதுறையில் ஒரு புதிய மைல்கல்லை அடையும் முயற்சியாக 19 வயதிற்குட்பட்டவர்களுக்கான காற்பந்தாட்டப் போட்டித் தொடர் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இந்தப் போட்டிக்கான அங்குரார்ப்பண நிகழ்வு கொழும்பு, தாஜ் சமுத்ரா ஹோட்டலில் திங்கட்கிழமை (27 ) இடம்பெற்றது. நிகழ்வில் லைக்கா குழுமத்தின் ஸ்தாபகத் தலைவரும், லைக்கா ஞானம் அறக்கட்டளையின் இணை நிறுவுனருமான அல்லிராஜா சுபாஸ்கரன், லைக்கா ஹெல்த்தின் தலைவரும் லைக்கா ஞானம் அறக்கட்டளையின் இணை நிறுவுனருமான பிரேமா சுபாஸ்கரன், லைக்கா குழுமத்தின் பிரதித் தலைவர் பிரேம் சிவ…
-
- 2 replies
- 512 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 16 MAY, 2024 | 04:35 PM 18 வயது விமல் யோகநாதன் சமீபத்தில் பான்ஸ்லி கழகத்தில் விளையாடுவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்- இதன் மூலம் இங்கிலாந்து கால்பாந்தாட்ட அணிகளில் விளையாடும் முதலாவது தமிழ் தொழில்சார் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். தனது பயணம் குறித்து தமிழ் கார்டியனுடன் அவர் தனது எண்ணங்களை பகிர்ந்துகொண்டார். வேல்ஸின் சிறிய கிராமத்திலிருந்து விமல் யோகநாதன் படிப்படியாக ஒவ்வொரு கட்டமாக முன்னேறிச் சென்றுள்ளார். இது எனக்கும் எனது குடும்பத்திற்கும் மிகப்பெரிய நாள், கடந்த பத்துவருடங்களாக உழைத்த உழைப்பின் உச்சக்கட்டம் இது வரவிருக்கும் ஒரு நீண்டவாழ்க்கையின் ஆரம்பம்…
-
- 0 replies
- 668 views
- 1 follower
-
-
Published By: VISHNU 14 APR, 2024 | 10:18 PM (நெவில் அன்தனி) ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு தெரிவாளர்கள் பெயரிட்டுள்ள 32 வீரர்களைக் கொண்ட இலங்கை முன்னோடி குழாத்தில் யாழ். மத்திய கல்லூரியின் முன்னாள் தலைவர் விஜயகாந்த் வியாஸ்காந்த் பெயரிடப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் தெரிவாளர்கள் ஏற்கனவே அறிவித்தவாறு வனிந்து ஹசரங்க அணித் தலைவராகவும் சரித் அசலன்க உதவித் தலைவராகவும் பெயரிடப்பட்டுள்ளனர். அண்மைக்காலமாக சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் திறமையை வெளிப்படுத்திவரும் சகலதுறை ஆட்டக்காரர்கள் உட்…
-
- 3 replies
- 503 views
- 1 follower
-
-
13 MAY, 2024 | 05:22 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் அண்டர்சன் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள இலங்கை - இங்கிலாந்து டெஸ்ட் தொடருடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்விடயம் குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்றுநரான பிரண்டன் மெக்கல்லம் ஜேம்ஸ் அண்டர்சனுடன் கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டிருந்ததாக இங்கிலாந்தின் 'தி கார்டியன்' செய்தி வெளியிட்டுள்ளது. 2025-26ஆம் ஆண்டு ஆஷஸ் தொடருக்கு புதிய வேகப்பந்துவீச்சாளர்களை கண்டறியும் பணியில் இங்கிலாந்து அணி நிர்வாகம் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து ஜேம்ஸ் அண்டர்சனிடம் தனிப்பட்ட …
-
- 0 replies
- 378 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,VIJAYAKANTH VIYASKANTH படக்குறிப்பு,விஜயகாந்த் வியாஸ்காந்த் 10 மே 2024, 07:38 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஐ.சி.சி இருபதுக்கு இருபது உலகக் கோப்பை போட்டிகளுக்கான இலங்கை குழாம் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணியில் மேலதிக வீரர்களில் (மாற்று வீரர்கள் பட்டியல்) ஒருவராக தமிழர் ஒருவர் இடம்பிடித்துள்ளார். ஐ.பி.எல் போட்டிகளில் சன்ரைசஸ் ஐதராபாத் அணிக்காக நேற்றைய தினம் முதல் தடவையாக விளையாடிய விஜயகாந்த் வியாஸ்காந்த் இலங்கை குழாமில் இடம்பிடித்துள்ளார். யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட வீரர்கள் இலங்கை கிரிக்கெட் அணியை இதற்கு முன்னர் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்த போதிலும், யாழ்ப்பாணத்தில் பிறந்து…
-
- 0 replies
- 448 views
- 1 follower
-
-
05 MAY, 2024 | 05:27 AM (நெவில் அன்தனி) லங்கா ஸ்போர்ட்ஸ் குறூப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள லங்கா புட்போல் கப் (இலங்கை கால்பந்தாட்ட கிண்ணம்) நொக் அவுட் போட்டி மூலம் தேசிய மற்றும் முன்னாள் தேசிய வீரர்களின் கால்பந்தாட்ட ஆற்றல்களை இலங்கையில் சுமார் இரண்டரை வருடங்களின் பின்னர் உள்ளூர் கால்பந்தாட்டப் போட்டியில் காணக்கிடைத்தது. லங்கா ஸ்போர்ட்ஸ் குறூப்பின் ஸதாபகரும் எக்ஸ்போ லங்கா நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளருமான சய்வ் யூசுப்பின் தனி முயற்சியாலும் சொந்த அனுசரணையாலும் இலங்கையில் உள்ளூர் கால்பந்தாட்டம் மீண்டும் மலர்ந்துள்ளதை இங்கு சுட்டிக்காட்டவேண்டும். எட்டு அணிகள் பங்குபற்றும் இந்த நொக் அவுட் கால்பந்தாட்டத்தின் மு…
-
- 0 replies
- 549 views
- 1 follower
-
-
Published By: VISHNU 26 APR, 2024 | 08:26 PM (நெவில் அன்தனி) மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் பந்துவீச்சில் இந்தோனேசிய கிரிக்கெட் வீராங்கனை ரொஹ்மாலியா அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்து உலக சாதனை படைத்துள்ளார். 17 வயதான ரொஹ்மாலியா ஒரு ஓட்டமும் விட்டுக் கொடுக்காமல் 7 விக்கெட்களைக் கைப்பற்றி ஆண்களுக்கான மற்றும் பெண்களுக்கான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான உலக சாதனையை படைத்தார். பாலியில் நடைபெற்ற மொங்கோலியாவுக்கு எதிரான 5ஆவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ரொஹ்மாலி 3.2 ஓவர்கள் பந்துவீசி ஒரு ஓட்டத்தையும் விட்டுக்கொடுக்காமல் 7 விக்கெட்களை வீழ்த்தி உலக சாதனை நிலைநாட்டினார். …
-
- 0 replies
- 492 views
- 1 follower
-
-
Published By: VISHNU 22 APR, 2024 | 08:13 PM (நெவில் அன்தனி) ஐக்கிய இராச்சியத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற லண்டன் மரதன் ஓட்டப் போட்டியை 2 மணித்தியாலங்கள், 16 நிமிடங்கள், 16 செக்கன்களில் நிறைவு செய்த ஒலிம்பிக் சம்பியன் கென்ய வீராங்கனை பெரெஸ் ஜெப்ச்சேர்ச்சேர், பெண்கள் மட்டும் (London Marathon Women's only) உலக சாதனையை நிலைநாட்டினார். அப் போட்டியில் எதியோப்பியாவின் உலக சாதனையாளர் டிக்ஸ்ட் அசேஃபா முதல் தடவையாக லண்டன் மரதனில் வெற்றிபெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏழு வருடங்கள் நீடித்த பெண்கள் மட்டும் உலக சாதனையை பெரெஸ் செப்ச்சேர்ச்சேர் முறியடித்து பெரும் புகழ்பெற்றார். …
-
- 1 reply
- 479 views
- 1 follower
-